Pages

Tuesday, August 31, 2010

நடைப் பயிற்சி செல்லும் நாய்கள்..

நடைப் பயிற்சி ஒரு நல்லதொரு உடற்பயிற்சி..

சுகர் பேஷன்ட், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் நடைப் பயிற்சி செய்தால் நல்லது என்று மருத்துவர்கள் ஆலோசனை சொல்வார்கள்..அதன்படி பெரும்பாலோர் நடைப்பயிற்சி மேற்கொள்வது உண்டு.

சிலர் வீட்டிலயே மாடியில் நடைபயிற்சி செய்வார்கள். சிலர் தோட்டங்களில், சிலர் விளையாட்டு மைதானங்களில், சிலர் வீட்டுக்குளேயே ஜிம் போன்ற செட் அப் செய்து, ட்ரெட்மில் என்ற உபகரணத்தின் மூலம் நடைப் பயிற்சி செய்வார்கள். சிலர் ஜிம்முக்கும் செல்வார்கள்..

இதெல்லாம் ஒரு ஆச்சிரியமான விசயமல்ல

ஆனால் நான் சில நேரங்களில் நண்பர்களுடன் பீச் போன்ற இடங்களுக்கு வாக்கிங்கிர்காக காலை நேரங்களில் செல்வதுண்டு.

அப்போது பல நாய்கள் வாக்கிங் வருவதை பார்த்துதான் அச்ச்காரியம் அடைந்தேன்..

அவைகளுக்கு எந்த டாக்டர் ஆலோசனைக் கூறியிருப்பார்? ஒருவேளை மனிதர்களில் டாக்டர் இருப்பதுபோல நாய்களிலும் டாக்டர்கள் இருப்பார்களோ?

வாக்கிங் வரும் நாய்கள் தங்களுக்கு துணையாக மனிதர்களை கூட்டி வருகின்றன..

அவர்கள் அந்த நாய்களின் கழுத்தில் கட்டியிருக்கும் பெல்டை பிடித்துக்கொண்டே அதன் பின்னால் ஒரு அடிமைபோல வருகிறார்கள்..அந்த நாய்கள் ஒண்ணுக்கு போகும்போதும், மற்றும் அசிங்கம் செய்யும்போதும் உதவியாக இருக்கிறார்கள்..

நான் கவனித்தவரை நாய்களின் வேலையாட்களாக வருபவர்களின் தகுதிகளாவன:

அவர்கள் முழங்கால் வரைக்கும் வரும் பான்ட் அணிகிறார்கள்..

ஆங்கிலத்தில் தான் பேசுகிறார்கள்..

தன் எஜமானர்களாகிய நாய்களிடம் கூட ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள்..

தமிழில் பேசுவது ஏதோ ஒரு கேவலமான விசயம் என்பதுபோல நடந்துகொள்கிறார்கள்..

சாதாரண மனிதர்களை அவர்கள் சீண்டுவதில்லை..

ஏழைகள் ஏதாவது ஒரு விபத்திலோ, பிரச்சினையிலோ இருந்தால் அவர்கள் கண்டுகொள்வதில்லை..

எல்லாமே தமது எஜமான் நாய்களுக்காக அர்பணித்து விட்டவர்களைப் போல அவர்கள் நடந்து கொள்கிறார்கள்..

அந்த நாய்கள் எதிரில் உள்ளவர்களை பயமுருத்துவதுபோல் வந்தால் கூட அவர்கள் கண்டுகொள்வதில்லை..

அதற்காக அவர்கள் வருந்துவதும் இல்லை..

அவர்களுக்கு முக்கியம் அந்த நாய்கள்தான்..இல்லை இல்லை..அவர்களது எஜமான்கள்தான்..

பிச்சைக்காரர்களுக்கு ஒருவேளை உணவோ அல்லது வேறு உதவியோ செய்ய தயங்கும் இந்த வேலைக்காரர்கள், இந்த நாய்களை தமது பெட்ரூம் வரைக்கும் அனுமதிப்பார்கள்..ஏன் கூடவே உறங்கவும் செய்வார்கள்.

அந்த நாய்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உடல் நலம் சரி இல்லை என்றால் துடித்துபோய் விடுவார்கள்..


சமீபத்தில் ஒரு காணாமல் போன ஒரு நாய்க்காக ஒரு நாய் ச்சே ச்சே..ஒரு ஆள் போஸ்டர் அடித்து ஒட்டிய கூத்தும் நடந்தது ..அவனுக்கு அறிவு வேணாம் அந்த நாய்க்கு படிக்கத்தெரியுமா?

இருந்தாலும் அவன் அதை செய்தான், பேப்பரில் செய்தியும் வந்தது..அப்படி போஸ்டர் அடித்தவன் ஒரு நடிகன்..

 

இதைத்தான் இனம் இனத்தோடு சேரும் என்பார்களோ?

1 comments :

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?