Pages

Monday, November 29, 2010

இது ஆபாச பதிவல்ல..(ஆபாசமாக இருந்தால் மன்னிக்கவும்)

இது http://velecham.blogspot.com/  (வெளிச்சம்)  என்ற வலைப்பதிவில் வெளியாகியது..



இது ஆபாச பதிவல்ல..(ஆபாசமாக இருந்தால் மன்னிக்கவும்)

ஆனாலும் சில வார்த்தைகளை அப்படியே எழுத வேண்டியிருப்பதால் இந்த தலைப்பு..



நம்ம ஊருல கேபரே கிளப் இருக்கும்லனே..அது போல அமெரிக்காவுல “பப்” ன்னு சொல்றாயிங்க. சாப்பிடுற பப்ஸ் இல்லண்ணே..புரியுற மாதிரி சொல்லனும்னா பெங்களூரில எம்.ஜி ரோடுல அப்பன் காசைக் கரைக்கிறதுக்கு குடிச்சுட்டு கும்மாளம் போடுவாயிங்களண்ணே..அதுமாதிரி இங்க நிறைய இடத்துல இருக்குண்ணே..இந்த ஊருக்கு வந்தவயிங்க எல்லாம் ஒரு தடவையாவது இங்க வந்துட்டு போயிருவாயிங்க..



அதெல்லாம் பேச்சிலர் பசங்களுக்குதான்..நம்மளுக்குதான் கால் கட்டு போட்டுருக்காயிங்களே….அது பத்தி நம்மளெல்லாம் யோசிக்குறதேயில்லைண்ணே..பக்கத்து வீட்டுல “கணேஷ்” ன்னு ஒருத்தர் நம்மளை மாதிரி கல்யாணம் ஆனவருண்ணே..மனைவி ஊருக்குப் போயிருக்காங்க..நம்ம பசங்களுக்குத்தான் மனைவி ஊருக்குப் போனா சுதந்திர தினம் கொண்டாடுவாயிங்களே..நம்ம ஆளுக்கு பொறுக்க முடியலே..இதை எப்படியாவது கொண்டாடியே ஆகனும்னு முடிவு பண்ணிட்டார்….



“ராசா..என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா(ஜனகராஜ் ஸ்டைலில் வாசிக்கவும்)….எனக்கு 1 மாசம்தான் டைம்..அதுக்குள்ள எல்லாத்தையும் அனுபவிச்சருனும்டா..டே..பப்புக்கு போகலாமா?..”



“டே கணேசு..என் பொண்டாட்டி ஊருக்கு போகலடா..செருப்பைக் கழட்டி அடிப்பா..”



“ராசா..இதை விட்டா சான்ஸ் கிடைக்காதுடா..நாம் ஒன்னும் தப்பு பண்ண போகலையே..சும்மா வேடிக்கைப் பார்த்துட்டு வந்துடுவோம்..”



எல்லாத்துக்கிட்டயும் ஒரு மிருகம் இருக்கும்..அது சமயம் பார்த்துதான் எட்டிப் பார்க்கும்னு சொல்லுவாயிங்களண்ணே..அன்னைக்கு எனக்கு அந்த மிருகம் கும்மி போட்டு விளையாட்டுண்டு இருந்துச்சு போல..



“டே..எனக்கு சரியாத் தோணல..எதுக்கும் நம்ம கோவாலுக்குகிட்ட ஒரு வார்த்தை கேட்டுடுவோம்..”



கோவாலு பத்தி ஏற்கனவெ உங்களுக்கு சொல்லியுருக்கேண்ணே..தெரியாதவங்க என்னோட “உயிர் பயமும் சூப்பர் பிகர்களும்” பதிவைப் பாருங்க….நம்ம ஊருக்கார பயபுள்ள..ரெண்டு பேரும் நேரா அவங்கிட்ட போனோம்..நல்ல பையன்னே..



“வாங்கடா..என்ன இந்த பக்கம்..”



“கோவாபெங்�E்ம கணேசு பொண்டாட்டி ஊருக்கு போயிருக்காங்கல..அதனால..”



“டே..ராசா..சூப்பர்டா..எல்லாரும் சேர்ந்து பப்புக்கு போகலாமாடா..”



அடப்பாவி..கொடுமை, கொடுமைன்னு கோவிலுக்குப் போனா..உன்னைப் போயி நல்ல பையன்னு ஒரு பாராவுக்கு முன்னாடிதானடா அறிமுகம் கொடுத்தேன்..



எல்லார் மனசுலயும் மிருகங்கள் அட் எ டையத்துல எட்டிப்பார்க்க சனிக்கிழமை போவதாக முடிவானது..என் வீட்டுக்காரம்மாகிட்ட சனிக்கிழமை ஆபிஸ்ஸில் வேலை இருப்பதாய் சொல்வதாக முடிவானது..கோவாலு படு எதிர்பார்ப்பில் இருப்பான் போல , ரெண்டு நாளா அவுத்துவிட்ட கோழி மாதிரியே திரிஞ்சான்..இதுல



“மச்சான்..பேர்னஸ் கிரீம்மை நல்லா அப்பிக்குவோம்டா.., அப்பத்தான் நம்மளை மதிப்பாயிங்க” ன்றான்..ஒரு நயா பைசா கூட செலவழிக்கமாட்டான் பயபுள்ள, அன்னைக்கு என்னான்னு பார்த்தா புது டிரஸ், புது கேப், புது கூலிங்கிளாஸ்..அப்படியே நம்ம தமிழ்நாடு பாலகிருஷ்ணா மாதிரியே இருந்தான்னே..



நான் இதுவரைக்கும் என்னோட பொண்டாட்டிக்கிட்ட பொய் சொன்னதே இல்லண்ணே..முதல் முறையா சொல்லப் போனேன்..வார்த்தை குழறவே கைகாலெல்லாம் நடுங்குச்சுண்ணே..



“இந்த..இன்னைக்கு ஆபிஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு..கொஞ்சம் லேட் ஆகும் எனக்காக வெயிட் பண்ணாதே..நீ, தூங்கு..”



“என்னாச்சுங்க..ஏதாவது அவசர வேலையா..பரவாயில்லைங்க..நீங்க போயிட்டு வாங்க..நான் வேணா பிளாஸ்க்ல டீ போட்டுத் தரவா..”



எனக்கு அப்பவே பாதி உசிரை எடுத்த மாதிரி இருந்துச்சுண்ணே..



“ஐயோ..வேண்டாம் பரவாயில்லை..நீ தூங்கு..” அப்படின்னு சொல்லிட்டு திரும்பி பார்க்காம கிளம்பிட்டேன்னே..வெளியே வர்றேன்..நம்ம கோவாலும் கணேசும் ரெடியா இருந்தாயிங்க..



எல்லோரும் கிளம்பி போனோம்…



அமெரிக்காவுல ரெண்டு உலகம்னே..முதல் உலகம் காலை முதல் சாயங்காலம் வரை, ஆபிஸில்..உசிரைக் குடுத்து வேலை பார்ப்பாயிங்கண்ணே..அடுத்த உலகம் இரவு உலகம்..உசிரை எடுக்குற உலகம்..கிளப்பு, பப்னு உசிரை எடுக்குற வரைக்கும் ஆடுவாயிங்க, ஏதோ நாளைக்கு உலகமே அழியப் போறது மாதிரி..நாங்க போன ஒரு இடமும் அப்படித்தான் இருந்தது..இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் 20-20 மேட்ச் போல ஒளிவிளக்குகள்..கையில் ட்ரிங்க்ஸை தட்டில் எடுத்துக் கொண்டு பரிமாறும், அரைகுறை ஆடை அணிந்த பெண்கள், காது கிழிஞ்சு போகும் அளவுக்கு இரைச்சலான இசை..எங்கு பார்த்தாலும் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் செக்யூரிட்டிகள்..பாதி போதையுடன் செருகிய கண்களுடன் இளவட்டங்கள்..சோமாலியாவில் பஞ்சத்துக்கு உடுத்தும் ஆடைகளை ஸ்டைலாக அணிந்து உலா வரும் யுவதிகள்..



அந்த பப் மூன்று பகுதி பகுதிகளாக இருந்தது..ஒரு புறம் பெரிய மேடையில் அரைகுறை ஆடையுடன் “இப்ப என்னாங்குற” தோரனையில் கேட்வாக் வரும் பெண்கள்..இன்னொரு பகுதி..நீ யாரோட புருசனாயிருந்தா எனக்கென்ன என்று யார் வந்தாலும் குத்தாட்டம் போடும் பெண்கள்..இன்னொரு பகுதி, ஏதாவது காரணம் சொல்லி நம்ம ஊருக்காரங்க போகும் “பார்”..நீங்க அங்கு உக்கார்ந்திருந்தால் சில யுவதிகள் வந்து உங்களை விசாரிக்கும்..நீங்கள் அவர்களுக்கு ஒரு ட்ரிங்க்ஸ் வாங்கி கொடுத்தால் உங்களுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்கும்..



இதெல்லாம் அந்த பொண்ணுக்கு உங்களை பிடித்திருந்தால்தான்..இல்லையெனில் “போடா வெளக்கெண்ணை” சொல்லிட்டு கிளம்பிக்கிட்டே இருக்கும்..நான் கவனித்த வரையில் எங்கும் தவறு நடக்கவில்லை..கோவாலு மாதிரி ஆர்வக்கோளாறுல ஏதாவது பண்ணிணா, அவனை சுண்டுவிரலுல தூக்கி வெளியே போடுறதுக்கு இம்மாந்தண்டி செக்யூரிட்டி அண்ணயிங்க(ஒரு சேப்டிக்காகத்தான் மரியாதை..தப்பித் தவறி இந்த பதிவை அவிங்க படிச்சிட்டா..ஹி.ஹி)



கோவாலு அலறிட்டான்..இதெல்லாம் இங்கிலிபீசு படத்துலதான் பார்த்திருக்கோமா..கோவாலு காலை தரையில் ஊன்ற முடியலை..சொர்க்கத்துல மிதக்குற மாதிரி கத்த ஆரம்பிச்சான்..



“ராசா..இதுதாண்டா உலகம்..வாடா, நம்மளும் போய் டான்ஸ் போடுவோம்..”



“டே..கோவாலு..ஆளை விடுடா..நம்ம எல்லாம் ஆடுனா கரகாட்டம் ஆடுற மாதிரி இருக்கும்..”



“போடாங்க..நீயெல்லாம் ஏண்டா பொறந்த..” எங்கப்பாவுக்கு அப்புறம் இப்பத்தாண்ணே இப்படித் திட்டு வாங்குறேன்..



கோவாலு அங்க போய் கைய காலை டான்ஸ்ங்கிற பேர்ல ஆட்டிக்கிட்டு இருந்தான்., எனக்கு கண்ணைக் கட்டிக்கிட்டு வரவே அங்கு உள்ள சோபாவில் அமர்ந்தேன்..ஒரு தேவதை என்னை நோக்கி வரவே எனக்கு பயமா போச்சுண்ணே..



“ஹாய்…நான் கிளாரா..நீங்க இண்டியாவா..?



“நான் ராசா..”



“நான் இந்த கிளப்லதான் வேலை பார்க்குறேன்..ஏன் இங்க வந்து உக்கார்ந்து இருக்கீங்க..டான்ஸ் ஆடலையா..”



“இல்லீங்க..பரவாயில்லை..ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே..இவ்வளவு தைரியமா வெக்கமில்லமா கேட் வாக் வர்றீங்களே..உங்களுக்கு தப்பா தோணலையா..”



இதுக்கு பேர்தாண்ணே ஆணாதிக்கம்..நம்ம ஊருல தான் இதெல்லாம்..இங்கெல்லாம் பளார்ன்னு ஒரு அறைதான்..திருப்பிக் கேட்டா பாருங்க..



“இதுல என்ன வெட்கம்..சரி நான் பண்றது தப்புனே எடுத்துகிட்டாலும், அதையும் வெக்கமில்லாம நீங்க பார்க்க வர்றீங்களே..உங்களுக்கு தப்பா தோணலை..”



இப்படி நாலு பேர் பளார்ன்னு அறைஞ்சாத்தான்னே நம்மளுக்கெல்லாம் புத்தி வரும்..அப்படியே வளர்ந்துட்டோம் பாருங்க..ஆடி முடிச்ச கணேசும், கோவாலும் திரும்பி வந்தார்கள்..களைப்பு முகத்தில் தெரிந்தாலும், நான் கிளாராவிடம் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தவுடன் கருகும் வாசனையும் வந்தது..வந்தவுடனே ஆரம்பிச்சாயிங்க..



“ஹாய்..நான் கணேஷ்..”



கிளாராவுக்கு கணேசை பிடிக்கவில்லை போலும்..எழுந்து போக எத்தனித்தாள்..கணேசுக்கு வந்ததே கடுப்பு..



“போடி பிராஸ்டியூட்..”



கணேஷ் அப்படி பேசியிருக்ககூடாதுண்ணே..கிளாராவுக்கு சரியான கோவம்..நேரா அவனிடம் வந்தாள்..



“நான் அவுத்துப் போடுறதைப் பார்த்து என்னை பிராஸ்டியூட் என்று சொல்கிறாயே..வீட்டில் உன் பொண்டாட்டி இருக்க என்னைப் பார்க்கிறதுக்கு கிளம்பி வந்துருக்கிறாயே..நீ பிராஸ்டியூட் இல்லையா..”



செருப்பைக் கழட்டி அடிச்ச மாதிரு இருந்துச்சுண்ணே..அவனுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை..நியாயம் பேசும்போது, அநியாயம் மௌனமாகத்தானே இருக்க வேண்டும்..சக்கையாய் காரில் ஏறில் உக்கார்ந்தோம்..யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை..ஏதோ உடம்புதான் காரில் பயணிப்பது போலவும், மனசு நசுக்கப்பட்டு சாகடிக்கப்பட்ட போலவும் ஒரு பிரமை..நேரா வீட்டிற்கு வந்தேன்..



என் மனைவி படுத்திருந்தாள்..பாவம்னே..எனக்கு சமையல் செய்து போடுறதை தவிர அவளுக்கென்று ஒரு உலகமும் இல்லைண்ணே..அவளுடைய கண்களை கவனித்தேன்..நாளெல்லாம் வீட்டு வேலை செய்து களைத்து தூங்கியிருந்தன..”என் புருசன் இருக்கான் எனக்காக..என் வாழ்நாள் முழுக்க கூட இருப்பான்”..என்ற நம்பிக்கையில் நிம்மதியான தூக்கம்..இன்னும் நல்லா ஞாபகம் இருக்குண்ணே..மதுரையில கல்யாணம் பண்ணி அடுத்த நாள் அமெரிக்கா கிளம்புறோம்..பல வருடங்களாய் பார்த்து பார்த்து செய்த அப்பா அம்மாவை விட்டுட்டு ஒரு நிமிசத்துல என்னோட கிளம்பி என்னை நம்பி வந்தாண்ணே..என்னை கல்யாணத்துக்கு முன்னாடி யாருண்ணே அவளுக்கு தெரியாதுண்ணே..எனக்காகத்தானே ஒவ்வொரு நிமிசமும் வாழுறா..நான் அழுதா அவ அழுவாண்ணே..நான் சிரிச்சா அவ சிரிப்பாண்ணே..அவளுக்குன்னு ஒரு ஆசை கூட இல்லைண்ணே..இப்படிப் பட்ட தங்கத்தை விட்டு பொய் சொல்லிட்டு போனேனே..என்ன மனுசன்னே நான்..



“சாரிங்க..நீங்க வர்ற வரைக்கும் முழுச்சுருக்கனும்தான் நினைச்சேன்..அலுப்புல தூக்கம் வந்திருச்சு..டயர்டா இருக்கா..காபி போட்டு தரட்டா..”



சே..இதுக்கு மேல என்னால அங்க இருக்க முடியலண்ணே..எழுந்து குளியலறைக்கு வந்து கண்ணாடி முன்னால் என் முகத்தைப் பார்த்தேன்..முதல் முறையா என்மேல எனக்கே வெறுப்பு வந்துச்சுண்ணே..மனுசனா நீ..”…..தூ……”



கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்து துப்பினேன்..நான் துப்பிய எச்சில் கூட கண்ணாடியில் என் முகத்தில் நிற்க கோவப்பட்டு கீழே வழிந்தது.. பொண்டாட்டிக்கு துரோகம் நினைக்க கூடாதுண்ணே..போஜனம் மட்டுமில்ல, நரகத்தில் கூட இடம் கிடைக்காதுண்ணே...

நன்றி..- வெளிச்சம். 

Thursday, November 25, 2010

ஆ. ராசா - நீரா ராடியா உரையாடல்



நீரா: ஹலோ?



ராசா: ராசா பேசுகிறேன்.



நீரா: ஹாய்! இப்போதுதான் பர்கா தத்திடமிருந்து எனக்கு செய்தி வந்தது.



ராசா: ஆ?



நீரா: பர்கா தத்



ராசா: அவர் என்ன சொல்கிறார்?



நீரா: இந்த விஷயம் குறித்து.... அவர் பிரதமரின் அலுவலகத்தோடு இன்றிரவு தொடர்பு கொண்டிருந்ததாக.... அவர் சொல்கிறார். சோனியா காந்தி அங்கு சென்றதாக அவர்தான் என்னிடம் கூறினார். அவருக்கு (மன்மோகன் சிங்) உங்களிடம் பிரச்னை இல்லை; ஆனால் டி.ஆர். பாலு என்றால் பிரச்னை உள்ளது என்று அவர்தான் (பர்கா தத்) சொன்னார்.



ராசா: ... ஆனால் தலைவருடன் இதுபற்றி விவாதிக்க வேண்டும்.



நீரா: ஆம், ஆம்... அவர் தலைவருடன் விவாதிக்க வேண்டும். அவர்தான் சொல்ல வேண்டும்.



ராசா: காலையில் இதுபற்றி விவாதிக்கப்படும்... ஏன் காங்கிரஸ் அநாவசியமாக.... ( ஒலிப்பதிவில் தெளிவில்லை). கூட்டணியில் குழப்பம் வருகிறது.



நீரா: இல்லை, கேள்வி இப்போது அழகிரி பற்றியல்லவா?



ராசா: ஆ?



நீரா: அழகிரி போன்ற சீனியர் தலைவர் இருக்கும் போது மாறனுக்கு ஏன் அமைச்சர் பதவி என்று அவருடைய ஆதரவாளர்கள் கேட்கிறார்கள்.



ராசா: அது வேறு விஷயம். ஆனால் இந்த விஷயங்களை எல்லாம் ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும்.



நீரா: இதுதான் சரி. அவரை (பர்கா தத்) காங்கிரஸிடம்...



ராசா: நேரே தலைவரைத் தனியாகப் பார்த்து இந்த விஷயங்களை வெளிப்படுத்த வேண்டும்.



நீரா: தனியாகவா?



ராசா: தனியாக, யாராவது தகவலைக் கொண்டு செல்ல வேண்டும். பாலுவுடன் எங்களுக்குப் பிரச்னை இருக்கிறது என்று ஒரு ரகசியக் கடிதமாவது கொண்டு செல்ல வேண்டும்.



நீரா: காங்கிரஸிடமிருந்து அல்லவா?



ராசா: ஆம்.



நீரா: ஓ.கே. நான் அவரிடம் (பர்கா) சொல்கிறேன். அவர் இப்போது அகமது படேலிடம் பேசிக் கொண்டிருக்கிறார். நான் படேலிடம் பேசுகிறேன்.



ராசா: அவர் போனிலாவது தொடர்பு கொள்ளட்டும். சார், இதுதான் பிரச்னை. எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. ராசாவுடன் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எங்கள் பிரச்னை பாலுவுடன்தான் என்று சொல்லுங்கள்...



22.5.2009



மதியம் 2 மணி 29 நிமிடம்



41 விநாடிகள்



நீரா: ராசா, எப்படி இருக்கிறீர்கள்?



ராசா: அவர் என்ன சொல்கிறார் - கனி என்ன சொல்கிறார்?



நீரா: அவருக்கு எல்லாம் ஓ.கே. என்கிறார். அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்கிறார்.



ராசா: ம்ம்...



நீரா: .... ஆனால் ஒரே விஷயம் அழகிரியுடன் யாராவது போய் பேச வேண்டும்...



நீங்கள்தான் இதைச் செய்ய வேண்டும்.



ராசா: ம்ம்.



நீரா: எப்படி மாறன் போய் எல்லாரிடமும் பேசி வைத்திருக்கிறார் என்று....



ராசா: ஆ.... நான் ஏற்கெனவே பேசிவிட்டேன், ஏற்கெனவே பேசிவிட்டன்...



நீரா: தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களிடம் அவர் என்ன சொல்லி வைத்திருக்கிறார் என்று நீங்கள் சொன்னீர்களா?



ராசா: எனக்குத் தெரியும். அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது என்ற விஷயத்தை காங்கிரஸ் தலைவர்கள் மனதில் விதைத்தவர்கள் யார்... எனக்குத் தெரியும்...



நீரா: இல்லை... அதுமட்டுமல்ல, அதுமட்டுமல்ல... பெரியவருக்கு ரொம்ப வயதாகிவிட்டது. அவருக்கு முதுமையால் தளர்ச்சி ஏற்பட்டு விட்டது. அவர் அதிக நாள் நீடித்திருக்கப் போவதில்லை. அதனால் நாளை மாறனும், ஸ்டாலினும்தான் கட்சியை நடத்துவார்கள் என்றும், காங்கிரஸ் தன்னுடன் தொடர்பு வைத்துக் கொள்வதில் மகிழ்ச்சியடையும் என்றும்... இறுதியில் மாறன்தான் ஸ்டாலினை ஆட்டுவிப்பார் என்றும் சொல்லியிருக்கிறார்.



ராசா: ம்ம்.



நீரா: இப்படித்தான் அவர் பேசியிருக்கிறார்.



ராசா: ஓஹோ! ஓஹோ!



நீரா: அழகிரியைக் கிரிமினல் என்றும்...



ராசா: ம்ம்.



நீரா: அவர் ஐந்தாம் வகுப்பு கூடத் தாண்டாதவர் என்றும்...



ராசா: ஓ...



நீரா: இப்படியெல்லாம்தான் அவர் சொல்லியிருக்கிறார்.



24.5.2009



காலை 11 மணி



5 நிமிடம் 11 விநாடிகள்



நீரா: மாறன் தன்னைப்பற்றி என்னெல்லாம் சொல்லியிருக்கிறார் என்று தெரியுமா?



ராசா: அழகிரிக்கு இதெல்லாம் தெரிந்ததுதான்.



நீரா: தெரியும் அல்லவா?



ராசா: அழகிரிக்குத் தெரியும். ஆனால் அவர் தந்தையுடன் பேச முடியாது. சரியான நேரத்தில் பேசுவார். ஒரே விஷயம், மாறன் எனக்கு எதிரான பிரசாரத்தை கிளப்பிவிடுவார்.



நீரா:ம்ம்..



ராசா: அதை கவனித்துக் கொள்ள வேண்டும்.



நீரா: நீங்கள் வேறுவிதமாக சண்டை போட வேண்டும்.



ராசா: ம்ம்.. பிரதமர் மீண்டும் வருகிறார். அப்படி அது இதுவென்று அவர் பத்திரிகைகளிடம் சொல்லுவார்.. ஸ்பெக்ட்ரம்...



நீரா: நோ நோ.. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். கவலைப்படாதீர்கள். உங்களிடமிருந்து நிறைய பெற வேண்டியிருக்கிறது. காங்கிரஸ் கூட அந்த அறிக்கைவிட நேர்ந்தது, அல்லவா?



நான் சுனில் மிட்டலிடம் பேசினேன்... சண்டோலியா உங்களிடம் சொன்னாரா?



ராசா: எனக்குத் தெரியாதே.



நீரா: அவரை விஷயத்தை விட்டுவிடுங்கள் என்று சொன்னேன். யாருக்கும் பிரயோஜனமில்லை.



ராசா: ம்ம்.. ராசாவுடன் இன்னும் ஐந்து வருடங்கள் நீங்கள் வேலை பார்த்தாக வேண்டுமென்று அவரிடம் சொல்லி வையுங்கள்... அதனால் எதுவும்...



நீரா: அவரிடம் சொன்னேன். அவரிடம் சொன்னேன். ஆனால் நீங்களும் சுனிலிடமிருந்து (சுனில் மிட்டல்) கொஞ்சம் தள்ளியே இருக்க வேண்டும். நீங்கள் நடுநிலையோடு இருக்க வேண்டும்.



ராசா: ஆ, இருக்கலாம்





- நன்றி: அவுட்லுக்





கனிமொழி - நீரா ராடியா உரையாடல்



22.5.2009 காலை 10 மணி 45 நிமிடம் 06 விநாடிகள்





கனிமொழி: ஹலோ



நீரா: கனி, நேற்று உங்கள் அப்பாவிடம் அவர்கள் தெரிவித்தார்கள் அல்லவா...



கனி: ம்ம்



நீரா: கட்டுமானத் துறையை பாலுவுக்கோ, மாறனுக்கோ கொடுப்பதில்லையென்று...



கனி: ஆம், ஆனால் யாரும்... யார் சொன்னது?



நீரா: இல்லையில்லை.. அவரிடம் மிகத் தெளிவாக சொல்லப்பட்டது...



கனி: இல்லை. அவரிடம் சொல்லப்படவில்லை.



அதுதான் பிரச்னை. யார் வந்து சொன்னது?



நீரா: வந்தவர்களா இல்லையா, சொன்னார்களா.. யாராவது அவருடன் பேசியிருக்க வேண்டும். பிரதமர் பேசியிருக்க வேண்டும்.



கனி: பிரதமர் பேசவில்லை. நான்தான் பிரதமருடன் பேசிக்கொண்டிருந்தேன். பிரதமர் சில வார்த்தைகள் பேசினார், அவ்வளவுதான். இதோ பாருங்கள், பிரதமர் போனில் அப்பாவுடன் பேசி விளங்க வைப்பது... உங்களுக்கே தெரியும்... பிரதமர் மெல்லப் பேசுபவர். அப்பாவுக்கு சரியாகக் காது கேட்காது.



நீரா: ம்ம்..



...சரி.. சரி.. உங்கள் அம்மாவை 12.30க்கு சந்திப்பேன் என்று நம்புகிறேன்.



கனி: ஓகே, நான் இங்கேதான் இருப்பேன்.



நீரா: ஓகே.



கனி: தயவுசெய்து இதையெல்லாம் அம்மாவிடம் சொல்லிவிடாதீர்கள். எல்லாவற்றையும் குழப்பி எதையாவது கண்டபடி பேசுவார்.



22.5.2009



மதியம் 2 மணி 46 நிமிடம்



15 விநாடிகள்



கனி: ஓகே.. இல்லை.. தயா பதவியேற்புக்குப் போகிறாரா இல்லையா?



நீரா: இல்லை, காங்கிரசிடமிருந்து அப்படித்தான் கேள்விப்படுகிறேன். அவர் பெயரைக் கொடுத்திருக்கிறார். அவர் பதவியேற்புக்கு போகிறார்.



கனி: எனக்குத் தெரியாது. அவர் என்னுடன் திரும்பிவிடுவதாக இருந்தது. எனவே... அவர் போய் சொல்லப்போகிறார். தலைவர் சொன்னதற்கு மாறாக, எனக்கு (ஒலிப்பதிவில் தெளிவில்லை) (0.01:32.4)



நீரா: ஆம், ஆனால் உங்கள் அப்பாவிடம் சொல்ல வேண்டும் அல்லவா?



கனி: அதுதான், அவர் (மாறன்) திரும்பிவந்து அப்பாவிடம் எதாவது கதை விடுவார். அகமது படேல் கூப்பிட்டதாகச் சொல்வார். "நீங்கள்தான் தி.மு.க.வின் முகம். நீங்கள்தான் அதன் பிரதிநிதி. நீங்கள் அங்கு இல்லையானால் நன்றாக இருக்காது'.



நீரா: நான் ராசாவைத்தான் போவதற்கு அதிகாரம் அளித்திருக்கிறேன் என்று மாறனிடம் சொன்னால் என்ன? நான் ராசாவைத்தான் போகச் சொல்லியிருக்கிறேன். - உன்னை - (மாறன்) அல்ல என்று உங்கள் அப்பா சொன்னால் என்ன?




கனி: இல்லை, அப்பா சொல்லமாட்டார். ஒருகாலும் இல்லை (ஒலிப்பதிவு தெளிவில்லை) (0:2:09.5) அப்பாவைக் கூப்பிட்டு சொல்ல வேண்டும். ஆனால் என்னால் முடியாது.



நீரா: உங்களுக்கு அலுத்துவிட்டது என்று எனக்குத் தெரியும். ஆனால் இது வெறும் ஆரம்பம்தான், அல்லவா?



கனி: ஆம், ஆம்.



நீரா: இதுதான் அரசியல், மை டியர்.



22.5.2009



இரவு 8 மணி 04 நிமிடம்



19 விநாடிகள்



நீரா: யாரும் எதுவும் சொல்லவில்லை. பிரதமர் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.



கனி: பிரதமர் அல்ல. அவர்கள் அப்பாவை சந்திக்க வரும்போது...



நீரா: ஒப்புக் கொள்கிறேன். ஆனால் கனி, ராசா, பாலுவிடம் தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லையென பிரதமர் இப்போதுதான் அறிவித்திருக்கிறார். அவர்கள் என் மதிப்புக்குரிய சகாக்கள். பிரதமர் இப்போதுதான் அவ்வாறு அறிவித்திருக்கிறார்.



கனி: அவர் அறிக்கை விடலாம். ஆனால் அப்பாவைப் பார்த்து பேசுபவர்கள் மாற்றி பேசக்கூடாது. ஏனென்றால், மக்கள் வெளியே சொல்வதும் அதன் உள்ளர்த்தமும் வெவ்வேறானவை, அரசியலில் இதெல்லாம் நமக்குத் தெரியும். ஒருவர் உங்கள் நண்பர் என்று சொல்லிக்கொண்டு வரலாம், பேச்சுவார்த்தை நடத்தலாம். அவர் வேண்டாம் என்று சொல்லலாம். இதெல்லாம் வெளித்தோற்றத்துக்கு-பலதும் செய்கிறோம்.. அதனால் யார் வருவதானாலும் அவர்கள் இவரைப் பற்றி எதிராகப் பேசக்கூடாது. ஏனென்றால் வேறொரு இடத்திலிருந்து நான் கேள்விப்பட்டேன், அவர்கள்...



நீரா: ஓ.கே., ஆமாம், நான் ராசாவுடன் பேசினேன்.



23.5.2009



காலை 9 மணி 59 நிமிடம்



2 விநாடிகள்



நீரா: நான் இதைச் செய்துவிட்டேன். ஆம். அவர் ஒருவர் மட்டும்தான் என்று எல்லாருக்கும் இன்று காலை செய்தி அனுப்பிவிட்டேன். மொத்த அழகிரி விஷயத்தையும் விளக்கி விட்டேன். அவர் ஒரு மக்கள் தலைவர் என்று அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். என்ன இருந்தாலும், எந்தக் கட்சியிலும் மக்களிடம் செல்வாக்குள்ள ஒரு தலைவருக்குத்தான் முக்கியத்துவம் தரப்படும்.



கனி: அது சரி.



நீரா: ஆம், இவர் (மாறன்) மக்கள் தலைவர் இல்லை. அதனால் அவருக்கு முக்கியத்துவம் கிடையாது. ஆனால் அவர் முயற்சி செய்து வருகிறார்.



கனி: மற்ற தேர்தல்கள் வருகின்றன. (ஒலிப்பதிவு தெளிவில்லை) (0:04:06:6) அவருடைய ஆதரவாளர்களைப் பகைத்துக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை.



நீரா: ஆம், சரிதான்.



கனி: ஆனால் ஒரு விஷயம், நீங்கள் அவர்களிடம் (காங்கிரஸ்) சொல்லலாம். லாலு பிரசாதுக்கு செய்தது போல, அவருக்கு (அழகிரி) கீழ் ஒரு நல்ல துணை அமைச்சரை நியமிக்கலாம். அவர் பதில் சொல்வார் (ஒலிப்பதிவு தெளிவில்லை) யாருடன் பேச வேண்டும், அவர் பதில் சொல்வார்.



நீரா: ரொம்ப சரி. ஆம், பார்க்கப்போனால் அவருடன் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அழகிரியுடன் அவர்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. காங்கிரஸýக்கு ஒரு பிரச்னையும் இல்லை.



கனி: இல்லையில்லை, அதுதான் பிரச்னை. இந்த ஆளுக்கு (மாறன்) தகவல் தொடர்பு வேண்டுமென்பதால் வதந்திகளைப் பரப்புகிறார். ஆனால் அவருக்கு தகவல் தொடர்பு தருவதில் தி.மு.க.வுக்கு கூட விருப்பமில்லை.





- நன்றி: அவுட் லுக்.





வீர் சங்வி (பத்திரிகையாளர்) - நீரா ராடியா உரையாடல் 20.6.2009 மதியம் 12 மணி 09நிமிடம் 59 விநாடிகள்





நீரா: டிரெட்மில்லிலிருந்து இப்போதுதான் இறங்கினேன். முகேஷ் அம்பானியை இந்த விஷயத்தில் பேச வைக்க வேண்டுமென்று முயற்சி செய்கிறேன்.



வீர்: அது சரி.



நீரா: ஆனால் விஷயம் இதுதான். நாம் முயற்சித்தாக வேண்டும். அவர் பேசினால் அதை அவர்கள் விழிப்புடன் கண்காணிப்பார்கள்.



வீர்: ஆம்.



நீரா: ஆனால் இது ஒரு போர். கடைசியில் பார்க்கப் போனால் இது யாருடைய போர் என்பது உங்களுக்குத் தெரியும். இதைப் பத்திரிகைகளுக்குக் கொண்டு போகிறோமா என்பது மற்றொன்று.



வீர்: சரி.



நீரா: அம்பானியால் பேட்டி எதுவும் தர முடியாது. காரணம் அவரிடம் அமர்சிங் பற்றிக் கேட்பார்கள். பலதும் இருக்கிறது. முகேஷ் அம்பானிக்கு இருக்கும் சாதகமான விஷயம் என்னவென்றால் அவரால் பேச முடியும், எதைப்பற்றியும் அவர் கூச்சப்படும் நிலையில் இல்லை. அனில் அம்பானியிடம் பல ஒளிவு மறைவுகள், அவரால் தெளிவுபடுத்த முடியாத விஷயங்கள். அமர்சிங் எனது நெருங்கிய நண்பர் என்று அனில் சொன்னால் அவர் கதை தீர்ந்தது. "எனக்கு அமர்சிங்குடன் எந்த உறவும் கிடையாது' என்றால் அமர்சிங் அவரைத் தீர்த்துவிடுவார். அதாவது நான் என்ன சொல்கிறேன் என்றால் பல சங்கடமான விஷயங்கள் இருக்கின்றன. அதனால் அனில் அம்பானி மீடியாவைத் தவிர்க்கத் தீர்மானித்துவிட்டார். முகேஷுக்கு இந்தப் பிரச்னை இல்லை. முகேஷ் நேரடியாகப் பேசலாம், பல விஷயங்களைச் சொல்லலாம். நீங்கள் ஒத்திகை பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு ஸ்கிரிப்டை முன் கூட்டியே தயார் செய்து கொள்ளுங்கள். அந்த ஸ்கிரிப்டை அப்படியே பின்பற்றுங்கள். அனில் இது எதையும் செய்ய முடியாது,இல்லையா?



நீரா: ஆம். ஆனால் நாம் இப்படிப் பண்ணலாம் அல்லவா?



வீர்: ஆம்?



நீரா: அப்படியா?



வீர்: ஆனால் முகேஷ் இதில் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும். அதை அவர் உணர வேண்டும். முழுதும் எழுதிப் பார்த்துவிடவேண்டும்.



நீரா: அதைத்தான் சொல்கிறேன். அவர் அதைத்தான் என்னிடம் கேட்கிறார் என்று நினைக்கிறேன்.



வீர்: ஆம், எல்லாவற்றையும் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.



நீரா: இதோ பார் நீரா, எதையும் தீர்மானித்துக் கொள்ளாமல் தோன்றியபடி பேசமுடியாது என்கிறார்.



வீர்: இல்லை, எல்லாவற்றையும் எழுதிப் பார்த்துக் கொள்ள வேண்டும். நான் அவருடன் முன்கூட்டியே வந்து ஒத்திகை பார்த்துக் கொள்ள வேண்டும்.



நீரா: ஆம், ஆம்.



வீர்: கேமரா முன் போவதற்குமுன் ஒத்திகை பார்க்க வேண்டும்.



நீரா: ஆம், ஆம்..



வீர்: எந்தவிதமான செய்தி உங்களுக்கு வேண்டும்? காரணம் "கவுன்டர் பாயிண்ட்' பகுதியில் இது வருவதால் இது மிகவும் அதிகபட்ச வாசகர்களை அடையும். ஆனால் இது யார் பக்கமும் சாய்வதாகவும் தெரியக்கூடாது. ஆனால் சொல்ல வேண்டிய எல்லா விஷயங்களையும் சொல்ல இது ஒரு சிறந்த வாய்ப்பு.



நீரா: ஆனால் அடிப்படையில் விஷயம் என்னவென்றால் உயர் நீதிமன்றத்தைப் பொறுத்தவரை நடந்து முடிந்த விஷயம் நாட்டின் நலனுக்கு எதிரானது, வேதனைக்குரியது.



வீர்: சரி.



நீரா: இதுதான் அடிப்படை செய்தியாக இருக்க வேண்டும்.



வீர்: சரி, அந்த செய்தி போதும். ஒரு ஏழை நாட்டின் தேசிய வளங்கள் சில பணக்காரர் மட்டுமே பலன் அடைவதற்காக வரைமுறையில்லாமல் வாரிக் கொடுக்கப்படக்கூடாது.



நீரா: சரி.



வீர்: எனவே, இதை தேர்தல் முடிவுகளோடு இணைத்துவிடுகிறேன். கிராமப்புற வேலை வாய்ப்புதிட்டம் உள்ளது, எல்லாத் தரப்பினரையும் உள்படுத்தும் வளர்ச்சியில் சோனியா உறுதியாக இருக்கிறார். இது தின்று கொழுத்த சிலருக்கு பலனளிக்கும்படி இருக்கக்கூடாது. நெருங்கியவர்களுக்கு மட்டும் கிடைப்பதாக இருக்கக்கூடாது. வரைமுறை இல்லாமல் இருக்கக்கூடாது. மன்மோகன் சிங்கின் ஐந்து வருட ஆட்சி பற்றிய செய்தி இப்படித்தான் இருக்க வேண்டும். நாட்டுக்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தும் விதமாக அரிய வளங்களை ஊழல் செய்து வரைமுறையில்லாமல் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால் இந்த நாடு உங்களை மன்னிக்காது.



நீரா: ஆம், ஆனால், வீர், அவர் இயற்கை எரிவாயு எடுக்கும் அனுமதியை அரசு வழங்கியிருக்கிறது. அவர் அதில் ஆயிரம் கோடி டாலர் செலவு செய்திருக்கிறார்.



வீர்: சரி.



நீரா: அனில் அம்பானி ஒரு பைசா செலவு செய்யாமல் அதன் பலனை அனுபவிக்கிறார்.



வீர்: அவற்றை நான் குறிப்பிட்டுவிடுகிறேன்...



நீரா: சரி.



வீர்: இவற்றை நான் குறிப்பிடுகிறேன். இந்தச் சூழல் மிகவும் ஊழல் மிகுந்ததாக இருப்பதாலும், யார் வேண்டுமானாலும் இதை வளைக்கலாம் என்பதாலும், எந்த விதக் கட்டணமும் இல்லாமல் இயற்கை வளங்களை கையகப்படுத்துகிறார்கள்...



23.5.2009



இரவு 10மணி 26நிமிடம்



42விநாடிகள்



நீரா: இதெல்லாம் அவருடைய (பிரதமர்) உந்துதலில் நடப்பதாக உணர்ந்தார்...



வீர்: மாறன்.



நீரா: ஆம்... (ஒலிப்பதிவு தெளிவில்லை 0.00:42)



ஆனால் விஷயம் என்னவென்றால் அவர் இன்னும் மாறனை எடுத்துக் கொள்ள நிர்பந்திக்கப்படுவதாகத் தெரிகிறது. எனவே...



வீர்: எங்கிருந்து இந்த உந்துதல் வருகிறது. இந்த நிர்பந்தம்?



நீரா: ஸ்டாலின், அவர் சகோதரி செல்வியிடமிருந்து...



வீர்: சரி.



நீரா: மாறன், ஸ்டாலினுடைய அம்மா தயாளு அம்மாளுக்கு
600 கோடி கொடுத்ததாக நம்புகிறேன்.



வீர்:
600 கோடி சரியா?



நீரா:
600 கோடி என்றுதான் எனக்குச் சொன்னார்கள்.



வீர்: அந்தவித நிர்பந்தங்களோடு யாரும் வாதம் பண்ணமுடியாது?



நீரா: இல்லையா?





- நன்றி: "ஓபன்' வார இதழ்.





பர்கா தத் (என்.டி.டி.வி.செய்திக் குழும ஆசிரியர்) - நீரா ராடியா உரையாடல் 22.5.2009 காலை 10 மணி 47நிமிடம் 33விநாடிகள்





பர்கா: ஆ, நீரா?



நீரா: பர்கா , திமுகவில் யாருடன் பேசுகிறார்கள் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.



பர்கா: ஆ, மாறனாகத்தான் இருக்க வேண்டும்.



நீரா: மாறனுக்கோ, டி.ஆர்.பாலுவுக்கோ அடித்தள கட்டமைப்புத்துறை அளிக்கப்படக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.



பர்கா: காரணம், அவர்களே அதை வைத்துக் கொள்ள வேண்டும்.



நீரா: இல்லை; முன்பு வேண்டியிருந்தது. பிரதமர் அத் துறை வேண்டாம் என்று சொன்னார். அதனால் தொழிலாளர் நலம், உரம், ரசாயனம், தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் தரலாம் என்றார். தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் ராசாவுக்கு. என்ன ஆயிற்று, இந்த விஷயம் கருணாநிதிக்கு தெரிவிக்கப்பட்டதா?



22.5.2009



காலை 9 மணி 48 நிமிடம் 51விநாடிகள்



நீரா: பாலுவிடம் பிரச்னை இருந்து வேறு யாருடனும் பிரச்னை இல்லையென்றால்- அதுதான் காங்கிரசின் சிக்கல். அவர்கள் கருணாநிதியுடன் பேச வேண்டும். கருணாநிதியுடன் அவர்களுக்கு நல்ல நேரடித்தொடர்பு இருக்கிறது.



பர்கா: ஆம்.



நீரா: பாலு, மாறன் முன்னிலையில் அவர்கள் பேச முடியாது.



பர்கா: ஆம்.



நீரா: அவரிடம் நேரடியாகச் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் நிறைய காங்கிரஸ் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நேராகப் போய் அவரிடம் பேச வேண்டும்-அழகிரியின் ஆதரவாளர்கள் சொல்வது என்னவென்றால் மாறனுக்கு கேபினட் பதவி தந்துவிட்டு அழகிரிக்கு துணை அமைச்சர் தருவதுதான் அவர்களுடைய மிகப்பெரிய பிரச்னை.



பர்கா: அது சரி. ஆனால் கருணா, டி.ஆர்.பாலுவைக் கழற்றிவிடுவாரா?



நீரா: இங்கே பாருங்கள், அவரிடம் பாலுதான் ஒரே பிரச்னை என்று சொன்னால் அவர் கழற்றிவிடுவார்.



பர்கா: ஆனால் யாருக்கு எந்த இலாகா என்பதில்தானே இப்போது சிக்கல்?



நீரா: இல்லை. அதுபற்றி எதுவும் அவர்கள் சொல்லவில்லை. இலாகாக்கள் பற்றி இன்னும் விவாதம் நடக்கவில்லை.



பர்கா: சாலைப் போக்குவரத்து, மின்சாரம், தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, ரயில்வே, சுகாதாரம் ஆகிய இலாகாக்களை தி.மு.க.கேட்பதாக காங்கிரஸ் சொல்கிறது.



நீரா: முதலிலேயே இந்தப் பட்டியல் போய்விட்டது.



பர்கா: இப்போது காங்கிரஸ் அளிக்க முன்வந்துள்ளது. தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, ரசாயனம், உரம், தொழிலாளர் நலம். இப்போது இந்த அளவில் உள்ளது. தி.மு.க.ஒப்புக்கொள்ளுமா?



நீரா: தி.மு.க. ஏற்காமல் போகலாம். இதை ஏற்றுக்கொண்டால் மாறனைக் கைவிட



வேண்டியிருக்கும். காரணம் மாறன் நிலக்கரி, சுரங்கத்துறை கேட்கிறார்.



பர்கா: மாறனிடம் அவர்கள் சொல்லிவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.



நீரா: ஆம், அவர்கள் செய்ய வேண்டியது கனியுடன் பேசி அவருடைய தந்தையுடன் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்ய வேண்டும். காரணம், பிரதமருடன் நடந்த உரையாடல் கூட மிகக்குறுகிய நேரமே நடந்தது-இரண்டு நிமிடங்கள்-கனிமொழிதான் மொழிபெயர்த்தார்.



பர்கா: சரி.



... அவர்கள் ரேஸ்கோர்ஸ் சாலையை (பிரதமர் இல்லம் உள்ள தெரு) விட்டு வந்தவுடன் நான் ஏற்பாடு செய்கிறேன்.



நீரா: அவர் (கனிமொழி) என்ன சொல்கிறார் என்றால் குலாம் நபி ஆசாத் போன்ற மூத்த தலைவர் - அவருக்குப் பேச அதிகாரம் இருக்கும்...



பர்கா: சரி, பிரச்னை ஒன்றும் இல்லை. அது பிரச்னையே இல்லை. நான் ஆசாதிடம் பேசுகிறேன். ரேஸ்கோர்ஸ் சாலையை விட்டதும் நான் ஆசாதுடன் பேசுகிறேன்.



நீரா: ஆனால் ஒன்று மட்டும் உங்களிடம் சொல்கிறேன். கருணாநிதி ரொம்பக் குழம்பிப் போயிருக்கிறார்.



பர்கா: கனியும் கூட இருந்து கலந்துகொண்டால் என்ன?



நீரா: அப்பா அவரைத் திரும்ப வரச் சொல்லிவிட்டார் என்பதால் அவரால் கலந்துகொள்ள முடியாது. அவர் சொல்வதைத்தான் இவர் கேட்க வேண்டும். குலாமைக் கூப்பிடுங்கள்.





- நன்றி: "ஓபன்' வார இதழ்

Tuesday, November 23, 2010

விஷத்தை விற்பனை செய்யும் தமிழக அரசு!

தீமை என்று தெரிந்த பிறகும் அதைத் துணிந்து செய்யும் உயிரினம் மனிதனைத் தவிர வேறெதுவும் இருக்க முடியாது.


தமிழகத்தில் நீண்டகாலமாக எழுப்பப்படும் கோஷம் "மது விலக்கு'. இளைஞர்களின் இப்போதைய கொண்டாட்டங்களில் "மது விருந்து' தவிர்க்க முடியாத ஒன்றாகி வருகிறது.புத்தாண்டு மற்றும் பண்டிகை, திருவிழாக்களின்போது களைகட்டும் பார்ட்டிகளால் மது விற்பனையில் புதிய சாதனை படைக்கப்படுவதே இதற்குச் சான்று.முன்பெல்லாம், திரைப்படங்களில் கதாநாயகன் சோகமாக இருக்கும்போது மது அருந்துவதாகக் காட்சிகள் வரும். அதற்கே, ஊடகங்களில் கடும் கண்டனங்களைத் தெரிவித்த காலம் உண்டு.ஆனால், இப்போது, குடும்பத்தோடு பார்க்கும் டி.வி. சீரியல்களிலேயே மது அருந்துவதாக வரும் காட்சிகள் சர்வசாதாரணமாகி விட்டன.தீய சேர்க்கையால் வளர் இளம் பருவத்தினர் 13, 14 வயதிலேயே மது உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு ஆளாவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.விருந்தாளியாக வீட்டுக்குள் நுழையும் மது, நாளடைவில் மோசமான எஜமானனாகி, குடும்பத்தையே நாசமாக்கி விடுவதை பல வீடுகளில் காணமுடிகிறது.கிருமிகளைவிட வேகமாக, தமிழகத்தில் போதைக் கலாசாரம் பரவி வருகிறது.


இப்பொழுதெல்லாம் எந்த ஒரு நிகழ்வுக்கும் முடிவில் சாராயம் ஒரு முக்கியமான அங்கமாகி விட்டது...கல்யாணமா ..? பேச்சிலர் பார்ட்டி என்று குடியாய் குடிக்கிறார்கள்.! வெளிநாட்டு தயாரிப்புகளின் அறிமுக நிகழ்ச்சியா?  buffet  என்ற பெயரில் சாராயம் பரிமாறப்படுகிறது!. மரணம் நிகழ்ந்து விட்டதா? குடித்துவிட்டு பேயாட்டம் போடுகிறார்கள்..! விளயாட்டில் வெற்றியா? ஷாம்பெயின் வழங்கி  குடிக்க சொல்லுகிறான்.. ! சாதாரண நண்பர்கள் மீட்டிங் என்றாலே அது சாராயக் கடைக்கு செல்வதுதான் என்றாகிவிட்டது.! குடிக்காதவன், குடியை நிறுத்தியவனை நண்பர்கள் சேற்றுக் கொள்வது இல்லை.."டே அவன் வேலைக்கு ஆகமாட்டாண்டா..!" என்ற ஏளனம் வேறு..பீர் மட்டும் குடிப்பவன் கூட அவர்கள் மத்தியில் இளப்பம்தான்..  இப்படி எங்கும் சாராயம் எதிலும் சாராயம் என்று ஆகிவிட்டது தமிழர்கள் என்று ஒப்பாரி வைப்போரின் கலாசாரம்..இதில் கள்ளுக்கடைகளை திறக்க சொல்லி ஒரு குடிகாரக் கூட்டம் அரசியல் செய்து கொண்டிருக்கிறது

கிராமங்களில் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களுக்காக பெரிய கூட்டமாக மக்கள் நிற்பார்கள்..அதுபோன்று இப்போது அரசு நடத்தும் டாஸ் மாக் சாராயக்கடைகளில் இந்த குடிகாரர்களின் கூட்டத்தை காணமுடிகிறது..



அரசு பேருந்துகளில் ஐம்பது காசு ஏற்றிவிட்டால் தாம் தூம் என்று குதிக்கிற இந்த குடிகாரக் கூட்டம், தினமும் குறைந்தது 300 ரூபாய்க்காவது குடிக்காமல் வீட்டுக்கு  போகாது..


"எக்கேடோ கெட்டு ஒழியுங்கள்..!' என்ற மனோபாவத்தில், வருமானம் ஒன்றை மட்டுமே குறியாகக் கொண்டு, காணும் இடமெல்லாம் மதுக் கடைகளைத் திறந்துவிட்டு போதைப் பிரியர்களை அரசு குஷிப்படுத்தி வருகிறது. இரவானாலே, இவர்களின் தள்ளாட்டத்தால் பெண்களும், அப்பாவிகளும் வீதிக்கு வரவே அச்சப்படுகின்றனர்.



1983-84-ல் டாஸ்மாக் நிறுவனத்தின் ஆண்டு வருமானம்
139 கோடி. இப்போதைய நிலவரப்படி 16 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. இந்த வருட தீபாவளி பண்டிகையின் போது 150 கோடி என்ற இலக்கைத்தாண்டி 300 கோடிக்கு விற்கப் பட்டதாக சொல்வது மகிழ்ச்சி அளிப்பதைவிட பல குடும்பங்கள் அதனால் பாதிக்கப் பட்டுள்ளது என்பதே உண்மை. இந்த நிதி, அரசின் திட்டங்களுக்குத் திருப்பி விடப்பட்டாலும், இந்த அசுர வளர்ச்சியை தமிழனின் சாதனை என்பதா..? வேதனை என்பதா.?பட்டி தொட்டியெங்கும் சுமார் ஆறாயிரத்துக்கும் மேலான மதுக்கடைகள் திறக்கப்பட்டு ஏழை பாட்டாளிகள் குடித்தே அழிந்து கொண்டிருக்கின்றனர்.



குடிப்பழக்கம் ஒரு நோய்' என உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மனிதனை மெல்ல, மெல்லக் கொல்லும் ஆட்கொல்லி விஷம்தான் "மது' என்பது நிரூபணமாகி விட்டது.பெரிய குடிகாரன்னு தெரிஞ்சிருந்தா என் பெண்ணைக் கொடுத்தே இருக்க மாட்டேனே..!' என எத்தனையோ வீடுகளில் புலம்பல் சத்தங்கள் கேட்கின்றன.ஏழைகள்.. குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர்கள் ஈட்டும் வருமானத்தின் பெரும்பகுதி மதுக்கடைகளுக்கே செல்வதால், அபலைப் பெண்கள் குழந்தைகளுக்குச் சத்தான உணவைத் தரமுடியாமல் தவிக்கின்றனர்...!கணவன்மார்களின் போதைப் பழக்கத்தால் அவர்களது வளர்ச்சி முடங்கிப் போய், கடைசிவரை ஏழ்மைக் கோட்டைத் தாண்ட முடியாமலேயே போய்விடுகிறது. அந்த அளவுக்கு "மது' மனிதனின் பகுத்தறிவை இழக்கச் செய்து தரித்திரத்தில் ஆழ்த்திவிடுவதை, சரித்திரத்தில் இடம்பெறத் துடிக்கும் ஆட்சியாளர்கள் உணர வேண்டும்..!ஆயிரக்கணக்கான கடைகளைத் திறந்துவிட்டு "குடி குடியைக் கெடுக்கும்',"மது வீட்டுக்கும்,நாட்டுக்கும் கேடு' போன்ற சம்பிரதாயமான எச்சரிக்கை வாசகங்களை எழுதி வைத்தால் மது அருந்துவோர் ஒருபோதும் திருத்தப் போவதில்லை.குடித்துக் குடித்தே உடல்நலம் குன்றி, அவர்கள் மயானத்துக்குப் போகும்வரை, அரசின் வருமானத்துக்கும் குறைவிருக்கப் போவதில்லை.சமூகத்துக்கு பெருந்தீங்கை விளைவிக்கும் மதுக்கடைகளை மூடுக' என உரத்துக் கோஷம் எழுப்பிய ஓர் அரசியல் கட்சியும் எதிர்காலக் கூட்டணி தர்மத்தை கருத்தில் கொண்டு அமைதியாகி விட்டது.பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, பல்வேறு அமைப்புகளால் எத்தனையோ போராட்டங்கள் நடத்தப்பட்டும் ஆட்சியாளர்கள் தரப்பில் கனத்த மெüனமே நீடிக்கிறது.படிப்படியாக மது விலக்கு அமல்படுத்தப்படும்..!' என எப்போதோ வெளியிடப்பட்ட அறிவிப்பையடுத்து, மதுக்கடைகள் இரவு 10 மணிக்கே மூடப்பட்டன. ஆனால், மற்றொருபுறம் ஏராளமான பார்கள் திறந்துவிடப்பட்டு நள்ளிரவைத் தாண்டியும் மது கிடைப்பதாகக் கூறுகின்றனர்.மதுக்கடைகளை மூடிவிட்டால், அதன் சில ஆயிரம் ஊழியர்கள் எங்கே போவார்கள்..? என்ற ஆதங்கம் இருக்கட்டும்..!ஆனால், மதுக்கடைகளை மூடாவிட்டால் போதையில் சீரழியும் லட்சக்கணக்கான மனிதர்களால் நாதியின்றி வீதிக்கு வரப்போகும் தாய்மார்களும், குழந்தைகளும் எங்கே போவார்கள்..?இதை உணர்ந்தாவது, தமிழகத்தைப் போதை அரக்கனின் பிடியிலிருந்து விடுவிக்க வெகுசீக்கிரமே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு விஷம் விற்பனை செய்தால் மக்கள் வாங்கி குடிப்பார்களா? மனிதர்களின் தனி மனித ஒழுக்கம் , சேமிப்பு, கலாசாரம், பண்பாடு மறந்தது .கற்பை பற்றி நடிகர், நடிகைகளிடம் உபதேசம் வாங்கி நிதிபதிகள் தீர்ப்பு சொல்கின்றனர். வேலை பார்ப்பவர்கள் ஆண்களும் பெண்களும் பார்ட்டி என்று சொல்லி குடிக்கின்றனர். மது குடிப்பதை ஆள்வோர் தடுப்பார்கள் என்ற நம்பிக்கை தகர்ந்து கொண்டே வருகிறது. குடிப்பதை நிறுத்துவதும் கட்டு பாட்டுடன் ஒழுக்கமாக இருப்பதும் மக்களின் கையில்தான் உள்ளது என்பதை நினைவில் கொண்டால் எங்கும் மகிழ்ச்சியே..

நன்றி   http://velecham.blogspot.com/


Sunday, November 21, 2010

சினிமாவுக்கு மார்க்கு போட ஆனந்த விகடனுக்கு என்ன தகுதி? - ராஜேந்தர் ஆவேசம்


னந்த விகடன் ஆபாச விகடனாகி பல வருசங்கள் ஆகிவிட்டது..அதை இன்னும் ஒரு நடுநிலைமைப் பத்திரிகை என்று நம்புவோருக்காக இந்த பதிவு.


முழுக்க முழுக்க சினிமாப் பத்திரிக்கையாக மட்டுமில்லாமல் ஒரு கேடுகெட்ட ஆபாச புத்தகமாக வெளிவரும் ஆனத விகடன், சினிமாக்காரர்களை  வி ஐ பி என்று போட்டு தனது தரம் இதுதான் என்று காட்டி வருகிறது..




வியாபாரத்திற்க்காக மிகவும் கேவலமான பத்திரிக்கையாக வெளிவரும் ஆனந்த விகடன் திரைப்படக் கலைஞர் மற்றும் அரசியல்வாதியான  டி. ராஜேந்தர் ஒரு புதிய டி வி ஆரம்பிப்பத்று பற்றி ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறது..



அந்த கேவல விகடனை டி ராஜேந்தர் வறுத்தெடுப்பது இந்த டி. ராஜேந்தர் Vs. ஆனந்த விகடன்  என்ற இணைப்பில் பார்க்கலாம்..

அதை பார்க்க இங்கே  க்ளிக் செய்யவும்.



பூனைக்கு ராஜேந்தர் மணி கட்டி இருக்கிறார்..பார்ப்போம்..!

Monday, November 15, 2010

கதை, திரைக்கதை, வசனம் மற்றும் டைரக்ஷன் - கலைஞர் மு.கருணாநிதி

தினகரன் நாளிதழ் வெளியிட்ட ஒரு கருத்துக் கணிப்பால் கலைஞர் கருணாநிதி குடும்பத்திற்கும் - சன் டி வி (மருமகன்கள் டி வி?) குழுமத்திற்கும் ஏற்பட்ட குடுமிப்பிடி குடும்பச்சண்டையில் மத்திய மந்திரி பதவியை இழந்தார் தயாநிதி மாறன்..அதன் பிறகு அந்த -தொலை தொடர்பு துறைக்கு அமைச்சரானவர் ஆர். ராசா.


அதன் பிறகுதான் 1999 இல் இருந்து அதாவது பிரமோத் மகாஜன் பொறுப்பிலிருந்தபோது பின்பற்றப்பட்ட முறையே அலைவரிசை ஒதுக்கீடு முறையில் இப்போதும் பின்பற்றபடுவதாக தி.மு.க அறிவித்து வரும் - அந்த ஸ்பெக்ட்ராம் ஊழல் விஷயம் பரப்பானது..தினகரன் நாளிதழில் இதற்கென்றே ஒரு பக்கம் ஒதுக்கினார்கள்..


இதற்கு பிறகு கலைஞர் கருணாநிதி குடும்பத்திற்கும் - சன் குழுமத்திற்கும் இணக்கம் ஏற்பட்ட பின்பு கூட ஆர் ராசா அந்த பதவியிலேயே தொடர்ந்தார். அதன் பிறகு சன் குழுமம் அந்த செய்தியை அடக்கிவாசிக்க ஆரம்பித்தது..(வாசிக்கவே இல்லை)..


பின்பு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தபோது கூட ராசாவே அதே பொறுப்பில் தொடர்ந்தார். அப்போதே இது பற்றி கேள்வி எழுந்தது..ஏன் தயாநிதி மாறனை தொலை தொடர்புத்துறைக்கு அமைச்சராகவில்லை என்று..



இதில்தான் கலைஞரின் ராஜதந்திரம் (இதற்கு பெயர் "தந்திரம்தான்") வெளிப்பட்டது.

இதில் ராசாவை பலிகடாவாக்க நினைத்துதான் ராசாவே இந்த பதவியில் தொடரவைக்கப்பட்டார் என்று பேசப்பட்டது..இதோ இப்போது "அப்பன் குதிருக்குள் இல்லை என்று கலைஞரே ராசாவை பலிகொடுத்து - அறிக்கையும் வெளியிட்டு விட்டார்..



ராசா ராஜினாமாவை தொடர்பாக தி.மு.க., தலைமை கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், "" பார்லிமென்ட்டின் ஜனநாயக நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறவும், நாட்டு மக்களுக்கு தேவையான பிரச்னைகள் விவாதித்து முடிவெடுக்கப்பட வழிவகுத்திடும் வகையில், ராஜா அமைசசர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள வேண்டுமென்று தி.மு.க., முடிவெடுத்து அவருக்கு அறிவுறுத்தியுள்ளது,'' என, தெரிவிக்கப்பட்டது.


இதில் ராசா ஒரு கருவியாக பயன்படுத்தப் பட்டிருக்கிறார் என்று அப்பட்டமாக தெரிகிறது- பாவம்..!!!
 
 
ஒரு காமெடி பீசு : செல்வி ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட்டில் படுத்துக்கொண்டு ஒரு அறிக்கை விட்டார்...


"ராசாவை பதவியில் இருந்து நீக்கினால் - அதன் காரணமாக தி .மு. க தனது ஆதரவை மத்திய அரசுக்கு விலக்கிகொண்டால் அ.தி.மு.க ஆதரவளிக்கும்" என்ற காமெடியான அறிக்கையைகூட கருணாநிதி முறியடித்துவிட்டார் என்றே சொல்லவேண்டும்..

Friday, November 12, 2010

ஹோட்டல்களில் சாப்பிடுவோர் கவனிக்க..!!!


நோய் ஏற்படுவதைத் தடுக்க நான்கு விஷயங்களில் சுகாதாரம் மிக அவசியமான முதன்மை இடத்தில் இருக்கிறது. எந்தவொரு உணவுக்கூடமும்-நட்சத்திர ஓட்டல்கள் முதல் சாலையோர கையேந்தி பவன் வரை-உண்பவர் உடல்நலன் கெடும் எனத் தெரிந்தே உணவுப்பொருள்களை வழங்குவதில்லை. அவர்கள் தரும் உணவுப்பொருள் உடலுக்குக் கேடாக மாறிப்போவது நான்கு காரணங்களால்தான்.

1.அவை-உணவு வழங்குவோர்,
2. கையாள்பவர்,
3.சமையலரிடம் சுகாதாரமின்மை,
4.வழங்கப்படும் குடிநீர்காற்றில் மிதந்து உணவில் கலக்கும் தூசிபொட்டலம் கட்டப் பயன்படும் பொருள்கள்.
ஓட்டல்களில் உணவு வழங்குபவரின் அழுக்கு உடைஅவர் கைகளைத் துடைக்கும் (ஏற்கெனவே அழுக்கடைந்த) துணிகுடிநீர் ஊற்றப்படும் டம்ளர் அனைத்தும் கிருமிகளின் உறைவிடமாக இருக்கின்றன. பொட்டலம் கட்டப்பயன்படுத்தும் நாளிதழ்களின் அச்சு மையில் உள்ள காரீயம்உணவை விஷமாகச் செய்துவிடுகிறது. இந்தச் சிறிய விஷயங்களில் ஒழுங்குமுறையைசுகாதார விழிப்புணர்வை உணவுத் தொழில் புரிவோரிடம் ஏற்படுத்த முடிந்தால்மருத்துவமனைகளைத் தேடும் நோயாளிகள் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்துவிட முடியும்.

ஓட்டலில் உணவு வழங்குவோர்கையாள்வோர்சமையலர்களுக்கான உரிமம் வழங்கும் திட்டத்தைக் கடுமையாகவும்கட்டாயமாகவும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.  நிலையான ஓட்டல்களில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே இந்த உரிமம்பயிற்சி என்பது போதாது. ஏனென்றால்இன்றைய நாளில் தமிழகம் முழுவதும் கையேந்தி பவன்கள் ஆயிரக்கணக்கில் அதிகரித்துவிட்டன. முன்பெல்லாம் வெறும் கூலித் தொழிலாளிகள் மட்டுமே சாப்பிடுவார்கள் என்ற நிலைமை மாறி,  தற்போது நடுத்தர வருவாய்ப் பிரிவினர்கூட கையேந்தி பவன்களில் சாப்பிடுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. இங்கே சாப்பிடத் தயங்குவோர் பொட்டலம் கட்டிக்கொண்டு வீடுபோய்ச் சாப்பிடுவதும் அதிகரித்து வருகிறது.
  



இதற்குக் காரணம்,  ஒரு சாதாரண ஓட்டலில் விற்கப்படும் உணவுப் பொருள் விலைக்கும்,  கையேந்தி பவனில் கிடைக்கும் உணவுப் பொருள் விலைக்கும் மிகப்பெரிய இடைவெளி இருப்பதுதான். இதற்குத் தொழில்ரீதியாகவும்முதலீடு ரீதியாகவும் ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் யார் எங்கு சாப்பிட்டாலும் அவரது உடல்நலன் கெடாதபடி சுகாதார உணவாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். இதை நிறைவேற்றும் பொறுப்பும் கடமையும் அரசுக்கு இருக்கிறது.
கையேந்தி பவன்கள் இன்றைய காலத்தின் கட்டாயம். அவற்றுக்கு அதிகாரிகள் மூலம் நெருக்கடி கொடுப்பதைக் காட்டிலும்அவை முறையாகவும் சுகாதாரமாகவும் செயல்படும் வகையில் ஒழுங்குபடுத்துவதும்,  இதில் ஈடுபட்டு இருப்போருக்கு சுகாதாரம் குறித்த முறையான பயிற்சி அளிப்பதும்தான் அரசு இன்று செய்ய வேண்டியது.
ஓட்டல்களைக் கண்காணிக்க உணவு ஆய்வாளர் எல்லா உள்ளாட்சி அமைப்புகளிலும் இருக்கிறார் என்றாலும், இன்றைய நாளில் அவரது தீவிரக் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலில்முன்னெப்போதையும் விட மிக முக்கிய சமூகப் பொறுப்பு அவருக்கு இப்போது உள்ளது. இது வெறும் பதவி என்பதைக் காட்டிலும் மேலான சமூகக் கடமை என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட்டால்நோய்த்தொற்றுகள் பலவற்றைத் தொடக்க நிலையிலேயே கட்டுப்படுத்திவிட முடியும்.
  

கையேந்தி பவன்களுக்கான நல்ல குடிநீரை உள்ளாட்சி அமைப்புகளே கட்டணம் பெற்று லாரிகள் மூலமாக வழங்குதல்உணவுக் குப்பைகளை உடனுக்குடன் வாரிச்செல்லுதல் போன்றவை நகரச் சுகாதாரத்துக்கு மட்டுமன்றி,  கையேந்தி பவன் நடத்துவோர் மற்றும் அங்கே உணவு உண்போருக்கும் நன்மை தரும்.
உணவின் சுவை,  உணவின் வகைஅவை சமைக்கப் பயன்படும் உணவுப்பொருள்உண்ணும் சூழல்மின்விசிறி அல்லது குளிரூட்டு வசதிபொருளின் விலை இவை அனைத்தும் இடத்திற்கேற்ப மாறுபடலாம். ஆனால்எல்லா நிலைகளிலும் சுகாதாரமான உணவு என்பதில் மாறுபாடு இல்லாதபடி பார்த்துக் கொள்வது அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையாகும்.
-- 


நன்றி - http://velecham.blogspot.com/ 
.
வெளிச்சம்

Monday, November 8, 2010

ஒவ்வொரு பத்திரிக்கையாளனும் வெக்கப்பட வேண்டிய விசயம்



இந்த அதிர்ச்சியடைய வைக்கும் செய்தி தமிழ் மலர் மின் நாளிதழ் என்ற வலைத்தளத்தில் வெளிவந்துள்ளது..அவர்களின் அனுமதியுடன் இதை வெளியிடுகிறேன். 


லஞ்சம் வாங்கக்கூடாது, இயன்றவரை தனக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதை கட்டுப்படுத்திவிடவேண்டும் என்ற கொள்கை உடையவர் அந்த வட்டாட்சியர்.


தீபாவளிக்கு அந்த அதிகாரியை கோவை நிருபர் பட்டாளம் சந்தித்தது.

தனக்கு வாழ்த்து சொல்ல வந்ததாக எண்ணிய வட்டாச்சியருக்கு அதிர்ச்சி.


‘‘இதற்கு முன்பு இருந்த வட்டாச்சியர்கள் தீபாவளி தோறும் நிருபர்களுக்கு அன்பளிப்பாக போனஸ் தொகை தருவார்கள். அதுபோல நீங்களும் ஏற்பாடு செய்யுங்கள் என்றுள்ளனர்.’’

அது என்ன நிருபர் போனஸ் தொகை என்று அதிகாரிகளிடம் விசாரித்தபோது அதிர்ச்சியடைந்து விட்டார் தாசில்தார்.

நிருபர்களுக்கு குறைந்த பட்சம் ரூ.1000 கவரில் வைத்து கொடுக்கவேண்டும். 150 நிருபர்கள் உள்ளார்கள், நிருபர்களுக்காகவே பொதுமக்களிடம் ஆண்டுதோறும் தீபாவளி வசூல் (லஞ்சம்) வாங்குவோம். என்றுள்ளனர் ஊழியர்கள்.


அதிர்ச்சியடைந்த தாசில்தார் சில நிருபர்களை அழைத்து தனக்கு சம்பளம் 20 ஆயிரத்துக்கும் குறைவுதான். பணியில் வேலைக்கு சேர்ந்து 34 வருடங்கள் ஆகிறது. இதுவரை யாரிடமும் லஞ்சம் வாங்கியதில்லை. என்னால் தீபாவளிக்கு வாழ்த்துக்களை மட்டும் தான் சொல்ல முடியும். வேறு எதாவது கையெழுத்து போன்ற உதவிகள் இருந்தால் வாருங்கள் செய்து தருகிறேன் என்றுள்ளார்.

நீங்கள் ரொம்ப யோக்கியமான அதிகாரி என்பது எங்களுக்கு தெரியும். தாசில்தார் அலுவலகத்துக்குள் இருக்கும் கடைகளில் இருந்து உங்களுக்கு எவ்வளவு பங்கு வருகிறது என்பதும் எங்களுக்கு தெரியும். தீபாவளிக்கு பின்னர் பத்திரிக்கையில் செய்தியை பார்த்துக்கொள்ளுங்கள் என்று மிரட்டி சென்றுள்ளனர்.

இந்த மிரட்டல் குறித்து வேறு சில பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார். ஆட்சியர் அலுவலகத்தில் தனது உயர் அதிகாரிகளிடமும் கூறியுள்ளார்.

அவர்களிடம் இருந்து வந்த பதில் தான் அதை விட அதிர்ச்சி

பத்திரிக்கையாளர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம். கலெக்டர் அலுவலகத்தில் இருந்தே கவர் போகும்போது உங்களுக்கு கொடுக்க என்ன தயக்கம். உடனடியாக ஏற்பாடு செய்து பத்திரிக்கையாளர்களுக்கு கவரை கொடுங்கள் என்றுள்ளனர்.

34 ஆண்டுகளாக என் உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரையும் சமாளித்து, லஞ்சம் வாங்காமல் இருந்து விட்டேன். இந்த பத்திரிக்கையாளர்களை எப்படி சமாளிப்பது?

நீண்ட யோசனைக்கு பின்னர் முடிவெடுத்தார் தாசில்தார்.

தனது ஊழியர்களை அழைத்து வண்டியை எடுங்கள் இன்ஸ்பெக்சன் போகவேண்டும். அப்படியே மொய் கவரையும் ரெடி பண்ணுங்கள் என்றார்.

நிருபர்களுக்கு ரூ.500 கவரில் கொடுக்கப்பட்டது.

....................................

இது ஒரு அதிகாரியின் நிலையல்ல, தமிழகம் முழுவதும் உள்ள பல அதிகாரிகளுக்கும் இதே நிலை தான்.

ஒரு பத்திரிக்கையாளன் என்ற முறையில் மிகவும் வெட்கப்படுகிறேன்.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை.

லஞ்சத்தை நிச்சயம் ஒழிக்க முடியாது.

நன்றி

தமிழ் மலர் மின் நாளிதழ்


Saturday, November 6, 2010

ஒபாமா வருகை - வீணாகும் பொருளாதாரம் - பறிபோகும் சுயமரியாதை

அமெரிக்க அதிர்பர் ஒபாமா வருகையை ஒட்டி இந்தியா முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. (ஆமாம்...வரலாறு கண்ட பாதுகாப்பு யாருக்குதான் போடுவார்கள்?) அவருக்காக - மும்பை தாஜ் ஹோட்டல் முழுவதும் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது பாதுகாப்புக்காக அமெரிக்க விமானப்படை, கப்பல் படை எல்லாம் மும்பையை முற்றுகை இட்டுள்ளன. சொல்லப்போனால் மும்பை டெல்லி போன்ற நகரங்கள் ஒபாமா வருகைக்கு நான்கு நாளைக்கு முன்பேயும், அவர் இந்தியாவில் தங்கி இருக்கப்போகும் நான்கு நாட்களும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கப்போகிறது. அதாவது ஒரு நாட்டின் ஜனாதிபதி இந்தியாவிற்கு வருவதற்காக நமது நாட்டையே அவர்களுக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் ஒரு அவலத்தை செய்திருக்கிறார்கள்..இதற்குத்தானா இவ்வளவு பாடுபட்டு சுதந்திரம் வாங்கினார்கள்?


நமது பிரதமரும்தான் முக்கால்வாசி நாட்கள் ஒவ்வுறு நாடாக பயணம் செய்து கொண்டிருக்கிறார்..இப்படித்தான் ஒவ்வொரு நாட்டிலும் ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கின்றவா? அவரகளது நாட்டை நம் கட்டுப்பாட்டில் வைத்துகொள்கிறோமா?

ஏன் இந்த அடிமை புத்தி?

இன்னும் சொல்வதென்றால் நமது மத்திய அமைச்சர்கள் அமேரிக்கா சென்று, அங்குள்ள குடியுரிமை அதிகாரிகளால் ஆடைகளை களைந்து சோதனை செய்யப் பட்டிருக்கிறார்கள்..

இவ்வளவு கேவலப்பட்டும் ஏன் ஒபாவுக்கு இப்படி ஒரு மரியாதை?

அவர் அமெரிக்காவுக்குதானே அதிபர்? உலகத்துக்கு இல்லையே?
இந்தியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கேவலப்படுத்தும் அளவுக்கு ஒபாமாவுக்கு சிறப்பு கார் ஒன்று..எல்லாவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் நிறைந்ததாம். இங்குள்ள ஆபாசப் பத்திரிக்கைகள் அதைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதி புளங்காகிதம் அடைந்துகொள்கின்றன..த்தூ..வெட்கம்கெட்டவர்களே..!


இந்தியாவின் பாதுகாப்பில் நம்பிக்கை இல்லையென்றால் ஏனடா இங்கே வருகிறீர்கள்..



ஒரு நாளைக்கு ஒபாமாவிர்கான செலவு எவ்வளவு தெரியுமா?


சுமார் இந்திய பணம் 900 கோடி ரூபாய்..அப்படி என்றால் நான்கு நாட்களுக்கு? 3600 கோடி ரூபாய்களாகும்.


இதெல்லாம் யாருடைய பணம்? அல்லது எதற்காக இந்த செலவு?

இப்படி இவ்வளவு செலவு செய்து, சுயமரியாதையும் இழந்து நிற்கிறது இந்திய அரசு..



அப்புறம் :

நமது நாட்டில் நேற்றைய தினம் தீபாவளி..

எல்லா மக்களும் உறவினர்களுடன் - இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையான படங்களுடன் - டி விக்களை பார்த்த வண்ணம் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடி இருப்பீர்கள்..


வருடம் பூராவும் உழைத்ததற்காக முதலாளிகளிடம் உரிமையாக போனஸ் பெற்று, ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்கு பட்டாசு வாங்கி கொளுத்தி மகிழ்ந்திருப்பீர்கள்..

சாலையில் வருவோர் போவோர்பற்றி கவலைப் படாமல் வெடிகளை வெடித்து தீபாவளியை கொண்டாடி இருப்பீர்கள்...

ஒபாமாவுக்கான செலவு மட்டுமல்ல - ஒவ்வொரு வருடமும்


தீபாவளிக்கும்தான் இவ்வாறு காசு கரியாகிக் கொண்டிருக்கிறது..


 

Monday, November 1, 2010

பணக்காரனுக்கு வக்காலத்து வாங்கும் பதிவல்ல!!


எனது சென்ற (பெண்கள் படிக்ககூடாத (பெண்களை பற்றிய) ஒரு பதிவு! பதிவில் சென்னையில் சாலையோரத்தில் வசிப்போரை விமர்சித்ததில் - சற்று அதிகமான கண்டனங்களை பெற நேர்ந்தது.

எனவே இதில் எனது நிலைப்பாட்டை விளக்க விரும்புகிறேன்.

பெரும்பாலான பதிவர்கள், பணக்காரர்கள் என்றால் அவர்கள் மிகவும் கொடூரமானவர்கள் என்றும், ஏழைகள் என்றால் அவர்கள் மிகவும் நல்லவர்கள் என்றும் - அது தவறு என்று தெரிந்தும் - அவ்வாறு பதிவிடுவதே நடுநிலைமை என்ற விதத்திலேயே பதிவுகளையும், மற்றும் பின்னூட்டங்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.

பணக்காரன் அதிக லாபமீட்டினால் "அவன் ஏழைகளின் வயிற்றிலடித்து சம்பாதிக்கிறான்" என்றும், ஏழையாய் இருப்பவன் பொறுக்கித்தனம் செய்து திருடினாலோ, கொள்ளை யடித்தாலோ, வழிப்பறி செய்தாலோ, வயிற்றுப் பிழைப்புக் காகத்தான்  செய்கிறான் அவனுக்கொரு வேலை இருந்தால் இப்படியெல்லாம் செய்வானா? என்று வியாக்கினம் செய்வதுதான் - நடுநிலைவாதிகள் என்று கூறிக்கொள்வோரின் விதண்டாவாதமாக இருக்கிறது.

இது எம் ஜி ஆர் கால சினிமாக்களில் இருந்து தொன்று தொட்டு வரும் ஒருவித திணிப்புதான் என்று சொல்லவேண்டும்..
காரணம் சாலையோர மக்கள்தான் கள்ள வோட்டு போடவும் அடாவடித்தனம் செய்யவும் உபயோகப் படுத்தபடுகிறான்.


சமீபத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற ஒரு தமிழ் திரைப்படம் (அங்காடித் தெரு) இதைத்தான் பிரதிபலித்தது.


அதிகார வர்கத்தில் உள்ளவன் இரக்கமே அற்ற மிருகமாகவும், ஏழை என்பவன் எந்த பாவமும் அறியாத புண்ணிய ஆத்மா எனபது போலவும் சித்தரிக்கப்பட்ட அந்த படம்தான் பதிவர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது..
ஆனால் அதே படத்தில், இயக்குனர் அவரையும் அறியாமல்  ஒரு காட்சி வைத்திருந்தார்..

ஒரு பையனை அவன் தந்தை கண்டிப்பார்...ஒழுங்காக படிக்கவில்லை, பரீட்சையில் சரியான மார்க் வாங்கவில்லை என்று..
அதற்க்கு அந்த பையன இன்னொருவனை அடிப்பான்..எதற்கு என்று கேட்பதற்கு, " இந்த நாய் ஒழுங்கா எழுதி இருந்தால் (தந்தையைக் காட்டி) இந்த நாய் என்னை இப்படி அடித்திருக்குமா?" என்று தந்தை மீது அந்த ஏழை எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறான்  என்பதை காட்டுவான்..


தெருவில் வசிப்போர்தான் இந்த மாதிரி எந்த ஒரு மரியாதை அன்பு பாசம் எனபது இல்லாமல் பெற்றோரை மிகவும் கேவலப்படுத்துவார்கள்..

இதுபோன்ற காட்சிகளை வைத்து மக்களை வழிகெடுக்கும் சினிமாக்கள்தான் அதிகம்..
விவேக், வடிவேலு,கருணாஸ், கஞ்சா கருப்பு போன்ற காமெடி நடிகர்களும் இது போன்ற பெற்றோரை கேவலப்படுத்துவதில் முன்னோடிகளாக இருக்கின்றனர்..
இந்த கேவலமான சினிமாக்களுக்கு வெறி பிடித்த ரசிகர்களாக இருப்பவர்கள் சாலையோரவாசிகளே..

ரஜினிக்கும், அஜித்துக்கும், விஜய்க்கும் சாலைகளில் ரசிகர் மன்றம், தியேட்டர்களில்  ஆளுயர கட் அவுட்டுகளும் அவர்களுக்க் பாலாபிஷேகம், பீராபிஷேகம் பண்ணுவதும் இவர்கள்தான்..ஏழைகள் பாட்டாளிகள் என்போருக்கு, சாராயத்திற்கும், நடிகர்களுக்கு கட் அவுட், பீராபிஷேகம் பண்ணுவதற்கும்  ரஜினி பட டிக்கெட்டை ருபாய் ஆயிரத்திற்கு மேலும் வாங்குவதற்கு பணம் எங்கே இருந்து வருகிறது? 


ஒரு பணக்காரன் ஒரு தொழில் செய்கிறான்..அவன் மற்றவர்கள் வாழவேண்டும் என்பதற்காக மட்டும் ஒரு தொழிலை செய்வதில்லை..தானும் சம்பாதிக்கவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு முதலாளியின் நோக்கம்..
அவனிடம் முதலில் காலை கையைப்  பிடித்து வேலைவாங்குவது..பிறகு தனது நிலையை உறுதிப் படுத்திக்கொண்டு, சம்பள உயர்வு, வேலை நிறுத்தம் என்று யூனியன் சேர்த்துக்கொண்டு அந்த முதலாளியை - தனக்கு தனது கஷ்டத்திற்கு வேலைதந்து உதவிய முதலாளியை போண்டியாக்குவது..இதுதான் இந்த ஏழைகளின் நியாயம்..

ஏழையாய் இருப்பவன் நல்லவனாக இல்லையா என்று கேட்கலாம்..நான் ஏழைகளை சொல்லவில்லை..சாலையில் வசித்துக் கொண்டு, தினமும் குடித்துக்கொண்டு, சாலையிலேயே கழிந்து கொண்டு, மனைவி குழந்தைகளை மிருகங்களை விட கேவலமாக அடித்துக் கொண்டு, (அதற்க்கு அந்த மனைவியும், ஏன் குழந்தைகள் கூட சளைத்தவை அல்ல ) ரோட்டில் போகும் மற்றவர்களை பற்றி சிறிதும் கவலைப் படாமல் கூத்தடித்துக் கொண்டு, பான் பராக் துப்பி கொண்டு, இப்படி எல்லா அசிங்கங்களையும் செய்துகொண்டு இருக்கும் இவர்களை பற்றிதான் சொல்ல வருகிறேன்.

ஒவ்வொருத்தருக்கும் அந்தரங்கம் என்று ஒன்று உண்டு..அது எவ்வளவு அசிங்கமாக கேவலமானதாக இருந்தாலும், அது வெளியில் தெரியாதவரை அசிங்கமில்லை...

ஆனால் இந்த சாலையில் வசிப்போர்தான், மலம் கழிப்பது முதல் மற்றவர்களுடன் படுப்பதுவரை, கூச்சமின்றியும் வெட்கமின்றியும், சாலையில் செல்வோரைப் பற்றிய எந்த ஒரு கவலையும் இன்றி பகிங்கரமாக இந்த அசிங்கங்களை செய்கின்றனர்.
பெற்ற குழந்தைகளுக்கு அம்மா அப்பா என்று சொல்லிகொடுக்கிரானோ இல்லையோ "ங்கோத்த ..ங்கொம்மா " என்று கண்டிப்பாக சொல்லிகொடுத்து " அதுகளையும்" தங்களைப்போல் பொறுக்கியாக வளர்வதில் மகிழ்கிறான்..

இவர்கள் வீடுகளில்லாதோர் இல்லை..இவர்களுக்கென்று வீடுகள் இருக்கும்..அரசு இலவசமாகக் கொடுத்ததோ, அல்லது இவர்களது சொந்த வீடாகவோ இருக்கலாம்..அதை வாடகைக்கு விட்டு விட்டு, இங்கே சாலைகளில் குடித்துக்  கொண்டு பொறுக்கித்தனம் செய்து கொண்டிருப்பான். இது எனது கற்பனை அல்ல...அவர்களிடமே நான் கேட்டு அறிந்தது..


அப்படியே சாலையில் வசிப்போருக்கென்று கழிவறைகளும் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது...இதையெல்லாம் உபயோகப்படுத்தாமல், அவர்களும் சாலையோரங்களை அசிங்கப் படுத்தி, தமது குழந்தைகளையும் அதே போல பழக்கப்படுத்தி ..வருங்கால இந்தியாவை இன்னும் பின்னோக்கி செல்ல  வைக்கிறான்..



சாலையில் நீங்கள் நடந்து கொண்டிருப்பீர்கள்...அவன் நடுரோட்டில் கற்களை இருபுறமும் அடுக்கி வைத்துக் கொண்டு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பான்..நீங்கள் ஒரு மனிதனாகவே அவனுக்கு புலப்பட மாட்டீர்கள்..உங்கள் தலையில் பந்து பட்டு, மண்டை உடைந்தாலும் அது உங்களது  தவறுபோல உங்களையே பாய்ந்து பிராண்டுபவந்தான் சாலையில் வசிக்கும்  பொறுக்கிகள்..


வடசென்னை பகுதிகளில் இவர்களை "தரைப்படை" என்றே அடைமொழி வைத்து அழைக்கிறார்கள்..

சாலையில் நாம் நிம்மதியாக நடந்து செல்ல முடியாது..ரிக்ஷா ஓட்டுபவன் வேண்டுமென்றே இடிப்பது போல வந்து நிற்பான்.. அப்படியே இடித்துவிட்டு நமக்கு முன்னே நம்மையே அசிங்கமாக திட்டி ஏதோ நாம்தான் தவறு செய்தமாதிரி ஒரு சூழலை எற்படுத்திவிடுவான்.

ஒருவன் செல்போனில் பேசிக்கொண்டு சென்றால் இவனுக்கு எரியும்..ஏதோ இவன் காசில் நாம் செல்போன்  வாங்கி பேசுவதுபோல நம்ம எதிரி போல  பார்த்து.."தோ செல்போனே பேசிக்கினு போறான் பாரு" என்று நம்மையே நக்கலடிப்பான்..

மீன்பாடி வண்டி என்று ஒரு வண்டி..வடசென்னைப் பகுதிகளில் முக்கால் வாசி டிராபிக் குளறுபடிகளுக்கு இந்த வண்டிகளே காரணம்..இதை ரொம்பவும் திமிர்த்தனமாக ஓட்டுவது இந்த தரைப்படைகளே...அதுவும்  7- 8  வயதுகூட நிரம்பாத சிறுவர்களும் சிறுமிகளும்..

ஒருவன் ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு இடம் வாங்குவான்..அந்த பழைய இடத்தை இடித்துவிட்டு புது இடம் கட்டுவதற்கு இடித்து வைத்து இருப்பான்..அதற்குள் இவைகள் அதனை ஆக்கிரமித்துவிட்டு - காலி காலிசெய்வதற்கு  ஐம்பதாயிரம் ரூபாய் ஒருலட்ச ரூபாய் என்று அடாவடி செய்து பிடுங்கிக்கொண்டுதான் காலி செய்வார்கள்..இவர்களுக்கு பொறுக்கிகளும் உடந்தை..

தெருவோரங்களில் உள்ள கோவில்களுக்கு திருவிழா என்ற பெயரில் அடாவடியாக பணம் வசூலித்து குடித்து கும்மாளமிடுவது
அந்த திருவிழா என்ற பெயரில் ஒரு தெருவையே ஆக்ரமித்து ஸ்பீக்கரில் ஆபாசப் பாடல்களை அலறவிட்டு ஆபாச நடனமாடுவது..இதெல்லாம்தான் அவர்களது லைப் ஸ்டைல்.


அதுவும் தீபாவளி காலங்களில் நீங்கள் சாலையில் நடந்து செல்லும்போது, உங்களை ஒரு மனித ஜென்மமாகவே கருதாமல் உங்கள் காலுக்கடியிலேயே பட்டாசை வெடிக்கும்  மிருகங்கள்தான் அந்த பொறுக்கிகள்..இந்த அனுபவத்தை பெறாத சென்னை வாசி ஒருவராவது உண்டா?

நான் நேரிடையாக சந்திக்க நேர்ந்த அனுபவங்களில் மிகவும் கேவலமான ஒன்று..

எப்போதும்போல சாலையில் அவர்களின் கூச்சல்...சண்டை போன்று இருக்கும்..கிட்டே  சென்று "ஏய் யே..!" என்று கத்திக் கொண்டே இருப்பார்கள்..ஆனால் எல்லாம் வெத்துவேட்டு..மோதிக்கொள்ளமாட்டார்கள்..
ஆனால் இது ஒரு பெண் ஆவேசமாக..- அவர்களின் பாரம்பரிய கேவலமான தமிழ் சொற்களால் ஒருவனை அர்ச்சித்துக் கொண்டிருந்தாள்..
அவள் திட்டி கொண்டிருந்தது தனது சகோதரனை..
இரவில் படுக்கும்போது தனது சகோதரியிடமே  தவறாக  நடந்திருக்கிறான்.."அது"வும் இரவெல்லாம் சும்மா இருந்து ஒத்துழைத்துவிட்டு  காலையில் தன் தாயிடம் இது பற்றி கத்திக்கொண்டிருந்தாள்..
இதற்க்கு அந்த தாய் சொன்ன பதில்தான் மிகவும்கேவலம்..
"அய்யே...ஊராமூட்டனா உம்மேல படுத்தான்...கூடப் பொறந்தவந்தானே..சும்மா கெட..!"
இதற்க்கு சிரிப்பதா..அழுவதா? 


பக்கத்தில் யார் படுத்தாலும் அவனோ அவளோ அன்றிரவு அவன்தான் அல்லது அவள்தான் மனைவி அல்லது கணவன்..




அவன் உழைக்கிறான் என்று சொல்கிறார்கள்..உழைக்கிறான்தான் ..ஆனால் அவன் கேட்கும்  கூலி எவ்வளவு அடாவடி என்று உங்களில் யாருக்காவது தெரியாமல்  இருக்குமா? 
ஆட்டோவில் மீட்டருக்குமேல் காசு கேட்பவன்  பணக்காரன் அல்ல..
ரோட்டில் பிக் பாகெட் அடிப்பவன் பணக்காரன் அல்ல
த்தியைக் காட்டி வழிப்பறி செய்பவன் பணக்காரன் அல்ல..
வீடுகளில் கொள்ளை அடிப்பவன் பணக்காரன் அல்ல
சாராயக்கடைகளில்  கூட்டம் கூட்டமாய் சாராயம் வாங்கி ரோட்டிலேயே வைத்துக் குடித்துக்கொண்டு நிர்வாணமாய் சாலையில் படுத்து உருளுபவன்  பணக்காரன் அல்ல..
பெற்ற குழந்தையையே நாயை அடிப்பதுமாதிரி அடித்து தூக்கி எறிபவன் பணக்காரன் அல்ல
கட்டிய (கட்டியவளோ ஒட்டிக்கொண்டவளோ) மனைவியுடன் நடுரோட்டில் சரிக்கு சரி யை சண்டை வளர்த்து ஊரைக்கூட்டி அசிங்கம் செய்பவன் பணக்காரன் அல்ல..
கூலிக்கு காசு வாங்கிக் கொண்டு, தனக்கு சம்மந்தம் இல்லாதவனை கொல்லும் இரக்கமற்ற மிருகங்களான  கூலிப்படை பணக்காரன் அல்ல..
அப்படியே அவனவன் பணக்காரனாக இருந்தால் கூட அவன் இந்த மாதிரி ஈனத்தொழில் செய்துதான் பணக்காரனாக இருப்பான்..


சாலையில் வாசிப்பவனில் நல்லவன் இருப்பான்..ஆனால் யாரையும் இவன் ஏழை என்று அனுதாபப் படவோ, அவகளுக்காகவோ இரக்கபடவோ முடியாத வகையில்தான் அவர்களது அனைத்து நடவடிக்கைகளும் அமைந்திருப்பதை அனுபவத்தால் உணர்ந்தவன் நான்..


இந்த பதிவுக்கு நிறைய கண்டனங்கள் வரும்...வெறும் புத்தகங்களை படித்துவிட்டும், தமிழ் படங்களை பார்த்துவிட்டும், பணம் படைத்தவன் எல்லாம் கொடுமைக்காரர்கள் எனவும், சாலையில் வசிப்பவன் கஞ்சிக்கில்லாதவன் என்றும் அப்பாவி, நியாயமானவன் என்றும்  வியாக்கியானம் பேசுவோர் இதற்க்கு பதில் எழுதுவார்கள்.. தினமும் சாப்பிட என்று காசு வாங்கி சாராயக்கடைகளில் நிற்பவர்களையும் (ஆண் பெண் என்று பேதமில்லாமல்) எனக்கு தெரியும்..

எனது அனுபவத்தில் இன்னும் இவர்களைப் பற்றிய அசிங்கங்கள் ஏராளமாக உண்டு...பிளாக்கில் சொல்லக்கூடியதே இவ்வளவுதான்..நானும் " சாரு " போல தரம் தாழ்ந்து போக விரும்பவில்லை..
அவர்கள் நல்லது செய்கிறார்கள் என்று ஏதாவது ஒன்றை.. இந்த வியாக்கியானவாதிகள் சொல்லட்டும்  பார்க்கலாம்..
இது பணக்காரனுக்கு வக்காலத்து வாங்கும் பதிவல்ல...
சாலையில் வசித்துக்கொண்டு பொறுக்கித்தனம் செய்துகொண்டிருப்போரின்  குணநலன்களை சுட்டிக்காட்டும் பதிவுதான்..


பணக்காரர்களிலும் மேற்கண்ட குணமுள்ளவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்..

ஆனால், பொதுமக்களுக்கு இடைஞ்சலாக, அன்றாடம் பெரும் தொல்லையாக இருப்பவர்கள் சாலையோர பொறுக்கிகளே..

ஒரு ஆச்சாரியம்..:
நாம் நமது வீட்டில் குடியிருப்போம். நமது வீட்டுக்கு கீழே சாலையோரவாசிகள் குடி இருப்பார்கள்..நமக்கு ரேஷன் கார்டுக்கும், ஓட்டர் ஐடென்டிடி கார்டுக்கும் அல்லாடிக் கொண்டிருப்போம்..அதிகாரிகள் ஏகப்பட்ட என்கொயரிகள் கேட்பார்கள்..ஆனால் இந்த சாலைவாசிகளுக்கு மட்டும் நமது முகவரியில் ரேஷன் கார்ட் மற்றும் ஓட்டர் ஐடென்டிடி கார்ட் இருக்கும்..இது எப்படி என்று இதுவரையில் எனக்கு புலப்படவில்லை..