Pages

Friday, July 13, 2012

இந்தியர்களில் எத்தனை ஆண்கள் எத்தனை பெண்கள் ? -அரசின் சமீபத்திய தலைவலி ..



இரண்டு நண்பர்கள் பலவருஷங்களுக்கு அப்புறம் சந்தித்துக்கொண்டார்கள்...
பரஸ்பரம் (பரஸ்பரம் என்றால் என்ன?)  நலம் விசாரிப்புகளுக்கு அப்புறம்  "எத்தன பசங்கடா?

"ஒண்ணுதாண்டா.."
"என்ன வயசு?
"20 ,,தாண்டிடுச்சு,,,"
"ஹ்ம்ம் கூடிய சீக்கிரம் தாத்தாவாகப்போரே..." நண்பன் வெறுப்பேற்றுவதாக நினைத்து கிண்டல் செய்கிறான்..
"அப்படி நடந்தா ரொம்ப சந்தோஷப்படுவேனே...ஆனா ஒரு பெரிய சிக்கல்ல மாட்டி இருக்கேண்டா.."
"என்னடா சிக்கல்?
"எனக்கு பெண் குழந்தை ன்னா ரொம்ப பிடிக்கும்டா  ..ஆனா எனக்கு பிறந்தது ஆண் குழந்தைங்கன்னு சொல்லி இருக்காங்க..இல்லை எனக்கு பிறந்தது பெண் குழந்தைதாணு நிரூபிக்கிரதுக்காக..நான் கேஸ் போட்டு இருக்கேண்டா...!"

"என்னடா ஒளர்றே..?"
"அமாண்டா எனக்கு பொறந்தது பெண் குழந்தைன்னு நிரூபிக்க ரசாயன பரிசோதனைக்கு அனுப்பினேன்..நாலைஞ்சு வருஷம் கழிச்சு அது ஆண் குழந்தைன்னு ரிசல்ட் வந்துச்சு..விடுவேனா...கோர்ட்ல கேஸ் போட்டேன்...பத்து வருஷம் கழிச்சு அதுலேயும் ஆண் தான்னு சொன்னாங்க....விடுவேனா..இப்போ ஹை கோர்ட்டுல கேஸ் பைல் பண்ணி இருக்கேன்...."

இப்படி ரெண்டு பேர் பேசிக்கொண்டு இருந்தால் நாம என்ன நெனப்போம்? நிச்சயமா ரெண்டு கிறுக்கனுங்க பேசிக்கிட்டு இருந்க்கானுங்கன்னுதான் நெனப்போம்..

இப்படித்தான் இருக்கு இந்த "விளயாட்டு வீராங்கனை (?) பிங்கி என்பவரது வழக்கும்...

இவர் மேல இவர் ஆண் அப்படீன்னு ஒரு பெண் வழக்கு போட்டு அவரை கைது பண்ணாங்க...இருபத்து அஞ்சு நாள் கழிச்சு ஜாமீன்ல வெளிவந்த பிங்கி தன்னை போலீசார் ரொம்ப கொடுமை படுத்துனாங்கனு கண்ணீர் வடிக்கிறாங்க...
அதை விட கொடுமை என்னன்னு சொன்ன..இன்னும் அவர் ஆணா பெண்ணான்னு இன்னும் கன்பார்ம் பன்னால...ரசாயன பரிசோதனைக்கு அனுப்பி இருக்காங்களாம்...

ம்...அப்புறம் ஹை கோர்டுக்கு போவாங்க...ஒரு பத்து வருஷம் கேஸ் நடக்கும்..அதுக்கும் மேல சுப்ரீம் கோர்ட்டுக்கு போய் அங்கே ஒரு இருபது வர்சோம் கழிச்சு..அங்கேயும் சாதகமான தீர்ப்பு வரலையின்னா...ஜனாதிபதி கருணை மனுவுக்கு அப்ளை பண்ணி "அய்யா நான் பொம்பள புள்ளதான்னு சொல்லி கருணை காட்டுங்கைய்யான்னு" கெஞ்சுவாங்கலோ ?

இந்த பிங்கி பல விளையாட்டு போட்டியில கலந்துக்கிட்டு பல பரிசுகளை ஜெயுச்சு இருக்காங்க..அப்போவெல்லாம் போட்டியில கலந்துகிரதுக்கு முன்னாடி எந்த டெஸ்டும் பண்ண மாட்டாங்களா? ஆணா பொண்ணான்னு கூட கேக்க மாட்டாங்களா? என்னடா இது கேனத்தனமா இருக்கு? 

ஒரு நபரை ஆணா பொண்ணான்னு கண்டு பிடிக்கிறது அவ்வளவு கஷ்டமா ?

அப்படீன்னா நம்ம நாட்டுல உள்ள நூறு கோடிக்கும் மேல உள்ள மக்கள் தொகைல ஒவ்வொருத்தரையும் இனம் பிரிக்கிறதுக்கு ரசாயன பரிசோதனை பண்ணிக்கிட்டு இருந்தா என்ன ஆகும்...தலை சுத்துதுங்க ....

நான் ஆணா பொண்ணா.?..கண்டுபிடிக்கிறதுக்கு யாராச்சும் ஐடியா கொடுங்கப்பா..

1 comments :

ஜெய்லானி said...

//நான் ஆணா பொண்ணா.?..கண்டுபிடிக்கிறதுக்கு யாராச்சும் ஐடியா கொடுங்கப்பா.//

டெஸ்டில ரெண்டுமே இல்ல மூனாவதுன்னு ((பயப்யுள்ளங்க சொன்னாலும் சொல்லுவாய்ங்க ))சொல்லிட்டா இன்னும் கஷ்டம் விட்டுடுங்கோ ஹா..ஹா.. :-)))

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?