முன்குறிப்பு : இதை ஒரு சினிமா விமர்சனம் என்று நீங்கள் கருதினால் அதற்க்கு நான் பொறுப்பல்ல ....என்று தட்டி கழிக்க மாட்டேன்..நான்தான் பொறுப்பு..கீழே உள்ள படம் தான் காரணம்..ஹிஹி...

நெடுநாட்களாகிவிட்டது தமிழ் வாரந்திர பத்திரிக்கைகளை படித்து...அவைகளில் வெறும் ஆபாச செய்திகளே கொட்டிக்கிடக்கிறது என்பதைத்தவிர வேறு என்ன உள்ளது..
இருந்தாலும், சமீபத்தில் ஒரு நீண்ட - ஏறக்குறைய 36 மணி நேர இரயில் பயணம் என்பதாலும், செல்வது வடஇந்தியா என்பதாலும் ஒரு சில தமிழ் பத்திரிக்கைகளை வாங்கி வைத்துகொள்ளலாம் என்றுதான் குமுதம் மற்றும் ஆனந்த விகடன் என்ற பலான பத்திரிக்கைகளை வாங்கினேன்.
உலகமே தமிழ்தான் என்று பீற்றிகொள்ளும் இவர்களுக்கு - இந்தியாவில் அதுவும் சென்னையில் சென்ட்ரல் இரயில்வே ஸ்டேஷனுக்குள் புகுந்து விட்டாலே தமிழுக்கு இனி வேலையே இல்லை எனபது போல்தான்..எங்கும் ஹிந்தி, உருது, தெலுங்கு போன்ற மொழிகள்தான் ---
தமிழ், விடுதலைப்புலிகளுக்கும், முல்லைப்பெரியாருக்கும் தான் பயன்படுகிறது,,,அதுவும் அரசியல் வியாபாரிகளுக்குமட்டும்..,,- இந்திய தேசப்பற்று கிரிக்கெட்டில் மட்டும் வெளிப்படுவதுபோல...
இதில் என்ன முரண் என்றால்...தமிழ்நாட்டில் அரசியல் செய்து பிழைக்கும் விடுதலைப்புலிகளின் கைக்கூலிகள், முல்லைப்பெரியாறு விசயத்தில் கேரளா அரசு சுப்ரீம் கோர்ட் ஆணையை மீறிவிட்டது என்று கூக்குரலிடுகின்றன...
அதே கைக்கூலிகள், ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சுப்ரீம் கோர்ட்டால் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட மூன்றுபேருக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய ஓலமிடுகின்றன..
அது ஒரு பக்கம இருக்கட்டும்,
ஆனந்த விகடன் என்ற பலான பத்திரிகையில், திமுக இளைஞர் அணித்தலைவராக ஐம்பது வயதைக்கடந்த முக ஸ்டாலின் இருக்கலாமா என்று கேலி செய்துவிட்டு, ரஜினி என்ற அறுபத்த்டைந்து வயது கிழ நடிகருக்கு சிறு சிறு வயது நடிகைகளை கூட்டிக்கொடுக்க போட்டி போடுகின்றன.
குமுதம் அதைவிட ஒரு மஞ்சள் பத்திரிகை என்பதை அப்பட்டமாக நிரூபிக்கிறது...
சுகாசினி என்ற நாற்பது வயதை கடந்த ஒரு நடிகைக்கு, இளைஞர்களை ஜோடி சேர்க்க வேண்டுமாம்..
ஒரு மேடையில் இதை சொன்ன ஒரு நடிகை அதைவிட ஒரு கேவலமான ஒரு விசயத்தையும் போது மேடையில் சொல்லி இருக்கிறாள்...கணேஷ் வெங்கட் ராம் என்ற ஒரு நடிகருக்கு தனது தோழிகளை அறிமுகப்படுத்தி வைக்கிறேன் என்றிருக்கிறாள்..இதற்க்கு என்ன அர்த்தம்?
இதை குமுதம் வெளியிடுவதின் நோக்கம் என்ன?
முன்பு குஷ்பு என்ற நடிகை திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்ளலாம் என்ற ஆபாசக்கருத்தை வெளியிட்ட போது ஓலமிட்ட தமிழ் வீரர்கள் இப்போது என்னத்தை புடுங்கிக்கிகொண்டிருக்கிரார்கள்?
பத்திரிக்கையை ஒருவன் காசுகொடுத்து வாங்குவது இதுபோன்ற வெறும் குப்பைகளுக்காகவும், விபச்சாரத்தை பரப்பவும் அல்ல..
இவைகளையே செய்திகளாக வெளியிட்டு பத்திரிக்கை விபச்சாரம் செய்யும் பலான பத்திரிக்கைகளுக்கு, அரசையும், காவல் துறையையும், சட்டத்தையும் விமர்சனம் செய்யும் தகுதி சிறிதாவது இருக்கிறதா என்று நாம் சிந்திக்கவேண்டும்..