Pages

Sunday, April 22, 2012

குஜராத் இனப்படுகொலையில் மோடிக்கு சம்மந்தம் இல்லையா?

குஜராத் இனப்படுகொலையில் மோடிக்கு சம்மந்தம் இல்லையா? அடப்பாவிகளா ? நீங்களெல்லாம் மனிதர்கள்தானா?


குஜராத்தில் 2002 - ம் ஆண்டு நடைபெற்ற முஸ்லிம் இனப்படுகொலைகளில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீதான புகாருக்கு ஆதாரமில்லை என்ற ராகவன் குழு சமர்பித்த அறிக்கையை அஹ்மதாபாத் விசாரணை நீதிமன்ற  நீதிபதி எம்.எஸ். பட வெளியிட்டு இறுதி அறிக்கையை 30 நாட்களுக்குள் ஜரியா  ஜாப்ரிக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார்.



ஜரியா ஜாப்ரி, குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின்போது கொல்லப்பட்ட காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இஹ்சான் ஜாப்ரியின் மனைவி எனபது குறிப்பிடத்தக்கது. ராகவன் சொல்லிவிட்டதாலேயே பயங்கரவாதி மோடி பரிசுத்தமாகி விடமாட்டார். விசாரணையும் முற்றுபெற்றுவிட்டதாக சொல்லிவிடமுடியாது.இதற்க்கு மேலும் சட்டபயணம் இருக்கிறது. கோத்ரா ரயில் நிலையத்தில் கரசேவகர்கள் இறந்தவுடன் முஸ்லிம்கள்தான் 59 கரசேவகர்களை தீவைத்து விட்டார்கள் என்ற குஜராத் அரசு வதந்தி பரப்பியதா இல்லையா? குஜராத் அரசு, காவல்துறை, சங்பரிவார் ஆகிய மூவரும் கூட்டு சேர்ந்துகொண்டு இந்த வதந்தியை பரப்பினார்கள் எனில் மோடிக்கு முஸ்லிம் இனப்படுகொலையில் எப்படி சம்மந்தமில்லாமல்  இருக்கும்?

குஜராத்தில் முஸ்லிம்கள் கொத்து கொத்தாக கொலை செய்யப்படும்போது, "இந்துக்களின் கோபத்தை வெளிப்படுத்த அனுமதியுங்கள்..அவர்களை தடுக்காதீர்கள்" என்று மோடி காவல்துறைக்கு உத்தரவிட்டாரா இல்லையா? அப்படி உத்தரவிட்ட பிறகு மோடிக்கு சம்மந்தமில்லை என்று எப்படி சொல்லமுடியும்? மோடியின் இந்த உத்தரவுக்கு பிறகுதானே சங்கபரிவாரின் கொலைவெறியாட்டத்தை காவல்துறை வேடிக்கை பார்த்தது. ஒளிந்து கொண்டிருந்த முஸ்லிம்களையும் காட்டி கொடுத்ததது..

குஜராத்தில் நடந்தது மதக்கலவரமல்ல..அது மதக்கலவரமாக இருந்திருந்தால் இருபக்கமும் சேதம் ஏற்ப்பட்டிருக்கும்..அல்லது ஒருபக்கம் அதிக சேதமும், இன்னொருபக்கம் குறைந்த சேதமும் ஏற்பட்டிருக்கும்.  அவ்வாறு இல்லாமல் முஸ்லிம்கள் மட்டுமே கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்டார்கள். முஸ்லிமல்லாதவர ஒருவர்கூட கொள்ளப்படவில்லை..மோடியின் ஆசியோ, மாநில அரசின் உதவியோ இல்லாமல் இவ்வாறு நடந்திருக்க முடியுமா?

காவல்துறையின் வயர்லெஸ் அறைகளில் சங் பரிவார தலைவர்கள் அமர்ந்துகொண்டு காவல்துறைக்கு கட்டளைகள் பிரப்பித்தார்களா இல்லையா? அப்படி கட்டளைகள் பிரப்பித்ததால்தானே அந்த தடயங்கள் அனைத்தையும் குஜராத் அரசு அழித்தது. அந்த தடயங்களை முழுவதையும் குஜராத் அரசு  அழித்தது ஒன்று போதாதா மோடிக்கு இதில் இருக்கும் தொடர்பு பற்றி தெரிவிக்க? முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலைகள் அகோரமாய் நடந்து கொண்டிருக்கும்போது "ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு" என்று மோடி சொன்னாரா இல்லையா? இது படுகொலைக்கும் மோடிக்கும் சம்மந்தம் உண்டு என்று தெரிவிக்கவில்லையா?

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையை மோடி திட்டமிட்டு தூண்டி, அப்பாவிகளை அளிக்கிறார், பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறார் என்பதால்தானே "ராஜ தர்மத்தை பின்பற்றுங்கள்" என்று மோடிக்கு வாஜ்பேய் அறிவுரை சொன்னார். அவர் அதை கேட்காமல் போனதால் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது என்றார் வாஜ்பேய். வாஜ்பேயின் இந்த அறிவுரையும், கவலையும் மோடிக்கு முஸ்லிம் இனப்படுகொலையின் சம்மந்தம் உள்ளது எனக் காட்டவில்லையா?

முன்னாள் உளவுத்துறை எஸ்.பி சஞ்சீவ் பட்டுக்கும், மோடிக்கும் வயல் வரப்பு சொத்து சண்டையா? இல்லையே! முஸ்லிம் இனப்படுகொலையின்போது காவல்துறையினரை கை கட்டி வேடிக்கை பார்க்கசொன்னார் மோடி. கொலைகாரர்களுக்கு பாதுகாப்பா  இருக்க பணித்தார். அது இந்த மனசாட்சியுள்ள உயர் காவல்துறை அதிகாரிக்கு பிடிக்கவில்லை..அதனால்தானே மோடி, சஞ்சீவ் பட் சண்டை ஏற்பட்டது..இதற்க்கு பிறகும் மோடிக்கும், படுகொலைகளுக்கும் சம்மந்தமில்லை என்று சொல்லமுடியுமா?

இஹ்சான் ஜாப்ரி உள்ளிட்ட 69 முஸ்லிம்கள் கொல்லப்பட்டது போல் ஆனந்த் மாவட்டம், ஓடே கிராமத்திற்கு அருகில் உள்ள பார்வாழி பகோப் என்ற இடத்தில் 23 முஸ்லிம்கள் சங்க்பரிவாரால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த கொலைகாரர்களை மோடி அரசு காப்பாற்ற முயன்றது. அதனால் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகி "மோடியின் போலீசார் கொலைக்க் குற்றவாளிகளுக்கு சாதகமாக நடந்து அவர்களை காப்பாற்ற முயல்கின்றனர். அதனால் உச்ச நீதிமன்றம் தனியாக சிறப்பு புலனைவுகுழுவை நியமித்து 23 கொலைகள்  குறித்து விசாரிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அதனை உச்ச நீதிமன்றம் என்றுக்கொண்டு சிறப்பு புலனாய்வுக் குழு நியமித்து சம்மந்தப்பட்ட கொலைக்குற்றவாளிகள் 18 ஆயுள் தண்டனையும், மீதி 5  பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையையும் தற்போது நீதிமன்றம் விதித்துள்ளது.

மோடி அரசுதான் முஸ்லிம் இனப்படுகொலையை தூண்டி விட்டது. கொலைகாரர்களையும் காக்க முயன்றது என்பதற்கு இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பு போதாதா?

முஸ்லிம்களுக்கும் அமெரிக்காவுக்கும் பிடிக்காது. அப்படிப்பட்ட அமெரிக்காவே குஜராத் முஸ்லிமி இனப்படுகொலையில் மோடிக்கு இருக்கும் சம்பந்தத்தை பார்த்துவிட்டு மோடிக்கு விசா தர மறுத்ததா இல்லையா? அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு அருகில் உள்ள ஹார்லி நகர சபையில் முஸ்லிம் உறுப்பினர்களே கிடையாது. அந்த நகர சபை, மோடிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதற்கு காரணம் முஸ்லிம் இனப்படுகொலையில் மோடிக்கு உள்ள சம்மந்தத்தினால்தான்?

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் மோடிக்கு இருக்கும் தொடர்பு உலகபிரசித்தம். இதை ராகவன் குழுவினால் உளமூடி போட்டு மறைக்கவே முடியாது. ஒரு செல்போன் துப்பை வைத்துக்கொண்டு காவல்துறை குற்றவாளியை கண்டுபிடித்துவிடும். ஆனால் மோடிக்கு எதிராக அவரது வாக்குமூலம், காவல்துறை உயர் அதிகாரி சஞ்சீவ் பட்டின் சாட்சியம், வாஜ்பேயின் குமுறல், அமெரிக்காவின் எதிர்ப்பு, நீதிமன்றத்தின் தீர்ப்பு, தெகல்கா இணையதளத்தின் வீடியோ ஆதாரம் என அடுக்கடுக்கான ஆதராங்கள் இருந்து மோடியை ராகவன் குழு காப்பாற்றி இருப்பது "தான் ஆடவிட்டாலும், தன தசை ஆடும்" என்ற பழமொழியை நினைவுபடுத்துகிறது.

மறுபடியும் சொல்கிறோம், குஜராத்தில் நடந்தது மதக்கலவரம் அல்ல. மாறாக முழுக்க முழுக்க் குஜராத் அரசால் நடத்தப்பட்ட முஸ்லிம் இன அழிப்பு. இதற்கும் மோடிக்கும் சம்மந்தம் இல்லை என்று சொல்வதும் 2000  அப்பாவி முஸ்லிம்கள் தங்களுக்குத்தானே தீவைத்து எரித்ஹ்டுக்கொண்டார்கள் என்று சொல்வதற்கும் இடையில் எந்த வித்த்டியாசமும் இல்லை.

இயற்க்கை நீதி மாய்ந்து, மனு நீதி வெல்லும்போது இந்த வாதம் செல்லுபடியாகும். அதை இந்திய நாடு அனுமதிக்கபோகிறதா? என்பதே எல்லாரின் முன் உள்ள கேள்வியாகும்.

நன்றி : டி.ஜே. - உணர்வு வார இதழ்.

Friday, April 20, 2012

தொடரும் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளின் தேச துரோக சதி..

தினமும் தினசரியில் கள்ளகாதல்கள் கொலைகள் பற்றிய செய்திகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன..கள்ளகாதலுக்காகவும், இன்னும் வேறு சில காரணங்களுக்காகவும், கொலையாளிகள் எவ்வளவுதான் திட்டமிட்டு கொலைசெய்து அதை மறைக்க திட்டமிட்டாலும் கடைசியில் மாட்டிக்கொள்கிறார்கள்..

நானும் தினமும் செய்திகளை படிக்கும்போதெல்லாம் இத என்னணம் தோன்றும்..என்னடா இப்படி அடிக்கடி நிறைய கொலைகாரர்களும், திருடர்களும் மாட்டிக்கொண்டாலும், இன்னும் தொடர்ந்து எப்படி இவர்கள் இவ்வளவு தைரியமாக கொலைகளை செய்கிறார்கள் என்று..

இதற்க்கு காரணம் இங்குள்ள சட்டங்கள்தான்..ஒவ்வொரு குற்ற செயல்கள் செய்யும்போதும் அந்த குற்றவாளி தண்டிக்கப்படுவதற்கு பதிலாக இன்னும் பிரபலப்படுதப்படுகிறான்..ஜெயிலில் அவனுக்கு சகல வசதிகளும்  கிடைக்கின்றன..

எப்படியாவது ஜாமீன் கிடைத்து அவன் வெளியே வரும்போது இன்னும் பெரிய ரவுடியாக கொலைகாரனாக ஆகவேண்டும் என்ற லட்சியம்தான் அவனிடம் வளர்கிறதே தவிர அவன் திருந்தியாக வேண்டும், அல்லது அவனுக்கு கிடைக்கும் தண்டனையைப் பார்த்து குற்றம் செய்ய நினைப்பவனும் பயப்பட வேண்டும் என்கிற அளவுக்கு இந்த நாட்டில் குற்றவாளிகளுக்கான தண்டனைகள் இல்லை..

அதனாலேயே நல்ல செய்திகள் வரவேண்டிய பத்திரிக்கைகள் ஆபாச செய்திகளையும், கொலை கொள்ளை செய்திகளை மட்டுமே தந்து கொண்டிருக்கின்றன..
 தண்டனைகளில் கடுமைகள் இருந்தால்தான் குற்றங்கள் குறையும் என்பதை மனித உரிமை பேசுவோர் உணர்ந்ததாக தெரியவில்லை..
ஒருவனை கொலைசெய்ய விட்டு விட்டு - தண்டிக்கப்படும்போது அவனுக்காக வக்காலத்து வாங்கி, இதற்க்கு இந்த சமூகமும், சட்டமும், பொதுமக்களும்தான் காரணம் . இவர்களைத்தான் தண்டிக்க வேண்டும்..குற்றவாளி அப்பாவி என்ற ரீதியில் கிறுக்குத்தனம் பேசி குற்றவாளிகளை வளர்த்து வருகின்றனர்..


மகாத்மா காந்தியை ஆர் எஸ் எஸ் பயங்கரவாதி - நாதுராம் கோட்சே என்பவன், இஸ்மாயில் என்ற முஸ்லிம் பெயரை பச்சை குத்திக்கொண்டு கொலை செய்து பழியை முஸ்லிம்கள் மீது போட திட்டமிட்டான்..

அவன் திட்டம் ஓரளவு வெற்றி பெற்றாலும், அந்த நேரத்தில் அவன் உயிரோடு பிடிபட்டு, இதற்க்கு காரணம் ஆர் எஸ் எஸ் என்ற  பயங்கவாத இயக்கம்தான் என்று தெரியவந்த போது அந்த பயங்கரவாத இயக்கம் தடைசெய்யப்பட்டது..

ஆனால் இந்நாட்டின் சட்டங்களில் உள்ள குளறுபடிகளின் காரணமாக அந்த இயக்கம் மூன்று முறைகள் தடை செய்யப்பட்ட் போதும் மீண்டும் மீண்டும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது..

மாலேகான் குண்டு வெடிப்பு, அஜ்மீர் குண்டு வெடிப்பு, ராஜஸ்தான் குண்டு வெடிப்பு, ஹைதராபாத் குண்டு வெடிப்பு, தென்காசி ஆர் எஸ் எஸ் அலுவலக குண்டுவெடிப்பு என்று ஆர் எஸ் எஸ் பயங்கரவாத இயக்கம் தொடர்ந்து குண்டு வைத்து முஸ்லிம் இயக்கங்கள் மீது பழியை போட முயற்ச்சித்தாலும், - அவர்களின் சதி பெரும்பாலும் அம்பலப்பட்டு விடுகிறது..ஆனாலும் அவர்கள் திருந்துவதாக இல்லை..இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஊருவிளைவித்துக்கொண்டே இருகின்றனர்.

இதற்க்கு காரணம் நமது அரசியலமைப்பும், ஆள்வோரின் காவிச்சிந்தனையும்தான்.

குண்டுவெடிப்பின்போதும், கலவரத்தின்போதும், முஸ்லிம் இயக்கங்களின் மீது முட்டாள்தனமாக பழி போட்டு அலறும் ஊடகங்கள் உண்மை நிலை தெரியும்போது ஊமையாய் இருக்கும் காரணம் அவர்களின் இரத்தங்களிலும் காவி சிந்தனைகளே ஓடுகின்றன எனபது காரணமாக இருக்கலாம்..


இந்த செய்தியை பாருங்களேன்..

அண்மையில் ஹைதராபாத் நகரில் ஹிந்து முஸ்லிம் மக்கள் இடையே பெரும் கலவரம் மூண்டதாகச்  வெளியாகின.
அதற்குக் காரணமாக கோவிலில் யாரோ மாட்டிறைச்சியை வீசியதால் முஸ்லிம்கள் தாம் அவ்வாறு வீசியிருக்க வேண்டும் என்று கருதி ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் கலவரம் ஏற்பட்டது. இக்கலவரத்தால் பலரும் படுகாயமடைந்தனர். பல சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்நிலையில் கலவரத்துக்குக் காரணமான மாட்டிறைச்சியை, பகதூர் புரா கோவிலில் வீசி முஸ்லிம்கள் மீது பழியைத் திருப்பிவிட்ட G.சிவகுமார் (எ) ராகேஷ், வயது 19,என்னும் இந்துத்துவா பிடிபட்டுள்ளார். ஆர் எஸ் எஸ் தொண்டரான சிவகுமார் என்கிற ராகேஷ்,ஹைதராபாத் "பகதூர்புரா" கோவிலில் மாட்டுக்கறியை வீசியதோடல்லாமல், "யாரோ கோவிலில் மாட்டுகறியை போட்டுள்ளனர்" என மக்களிடம் விஷமம் பரப்பி கலவரத்தை ஏற்படுத்தியதும் தெரிய வந்துள்ளது.விஷமி சிவகுமார் மீது இபிகோ 153/A மற்றும் 295 ஆகிய சட்டப்பிரிவுகளின்படி, (Crime No 83/2012) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Saturday, April 14, 2012

சித்திரை குழப்பமும் தமிழ் புத்தாண்டு காமெடியும்...




கருணாநிதி தமிழ் புத்தாண்டை தை மாதத்திற்கு மாற்றினாலும் மாற்றினார், இது ஜெயலலிதாவிற்கு பொறுக்குமா? 

அவர் சித்திரை மாதத்தில்தான் தமிழ்புத்தாண்டு கொண்டாடவேண்டும் என்று பிடிவாதமாக - சித்திரை மாதம் மண்டையைப் பிளக்கும் வெயிலில் தமிழ்ப் புத்தாண்டை தொடங்கிவிட்டார்....

அது சரி..கல் தோன்றி மண் தோன்றா காலத்தே...ஏன் இந்த உலகமே தோன்றும் முன்பு பிறந்த மூத்த குடி மக்களாகிய - தமிழன் தமது தமிழ் வருடங்களுக்கு இன்னும் தமிழ் பெயர் வைக்கத் தெரியாமல் - வடமொழியை அண்டிப்பிழைத்து பெயர் வைத்துக்கொண்டிருக்கும் அவலத்தை நினைத்தால் ஒரே காமெடியாக உள்ளது

1- பிரபவ     (1987-1988) ,2- விபவ (1988-1989),3- சுக்கில (1989-1990),4- பிரமோதூத (1990-1991),,5- பிரஜோத்பத்தி (1991-1992),6- ஆங்கீரஸ (1992-1993), 7- ஸ்ரீமுக (1993-1994),8- பவ (1994-1995),9- யுவ (1995-1996),10- தாது (1996-1997),11- ஈஸ்வர (1997-1998),12- வெகுதான்ய (1998-1999),             13- பிரமாதி (1999-2000),14- விக்கிரம (2000-2001),15- விஷு (2001-2002),16- சித்ரபானு (2002-2003),17- சுபானு (2003-2003),18- தாரண (2004-2005),
19- பார்த்திப (2005-2006),20- விய (2006-2007),21- ஸ்ர்வசித்து (2007-2008),22- ஸ்ர்வாரி (2008-2009),23- விரோதி (2009-2010),24- விக்ருதி (2010-2011),
25- கர (2011-2012),26- நந்தன (2012-2013),27- விஜய (2013-2014),28- ஜய (2014-2015),,29- மன்மத (2015-2016),30- துன்முகி (2016-2017),
31- ஹேவிளம்பி (1957-1958, 2017-2018),,32- விளம்பி (2018-2019),33- விகாரி (2019-2020),34- சார்வரி (2020-2021),35- பிலவ (2021-2022),
36- சுபகிருது (2022-2023),,37- ஸோபகிருது (2023-2024),38- குரோதி (2024-2025),39- விஸ்வவசு (2025-2026),40- பராபவ (2026-2027),
41- பிலவங்க (2027-2028),,42- கீலக (2028-2029),43- சௌமிய (2029-2030),44- ஸாதரண (2030-2031),45- விரோதிகிருது (2031-2032),
46- பரிதாபி (2032-2033),47- பிரமாதீஸ (2033-2034),48- ஆனந்த (2034-2035),49- ராக்ஷஸ (2035-2036),50- நள (2036-2037),51- பிங்கள (2037-2038),
52- களயுக்தி (2038-2039),53- சித்தார்த்தி (2039-2040) ,54- ரூத்ரி (2040-2041),55- துன்மதி (2041-2042),56- துந்துபி (2042-2043),57- ருத்ரகாரி (2043-2044),
58- ரக்தாக்ஷி (2044-2045),59- குரோதன (2045-2046),60- அக்ஷய (2046-2047),

தமிழ் கூறும் நல்லுலுகை (?) சேர்ந்த பேரறிஞர்கள் யாராவது இருந்தால் மேற்கூறிய பெயர்களில் தமிழ் பெயரை கண்டு பிடியுங்களேன் பிளீஸ்..

அதுபோக, ஆங்கிலப்புத்தாண்டு அன்று கவர்ச்சி நடிகைகளின் தலைமையில் சாராயம் குடித்துக் கொண்டு புத்தாண்டை தொடங்கும் மாவீரன் தமிழன் அதுபோன்ற எந்த கேலிக்கூத்தையும் அரங்கேற்றவில்லை...

கோயில்கள், சர்ச்சுகளை சுற்றி மூன்று தெருக்களை அடைக்கும் - பக்தர்கள் கூட்டம் இல்லை..ஏனென்றால் ஆங்கிலப் புத்தாண்டு தானே உலகத்தின் நாள்...:)

இதுபோன்ற காமெடிகள் ஒருபுறம் இருக்க - தமிழ் மக்களின் உயிர் மூச்சான - கேபிள் டிவிக்கள் ஜெயா டிவி - அதை தமிழ் புத்தாண்டாகவும், கலைஞர் டிவி அம்பேத்த்கார் பிறந்த நாளாகவும், சன் டிவி தனது பத்தொன்பதாம் ஆண்டு துவக்க நாளாகவும் கொண்டாடிய லட்சணம் என்ன தெரியுமா? சினிமா படங்கள்தான்..வேறென்ன?

கல் தோன்றா முன்தோன்றிய தமிழன் தமிழ் வருடப்பிறப்பை கொண்டாடும் லட்சணத்தை பார்க்கும்போது, அதைப் பற்றி சிறிதும் கண்டுகொள்ளாமல் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை அறிக்கைகளாக விடும் அரசியல் வியாதிகளையும் பார்க்கும்போதும், இவர்கள் தமிழ்பற்று வியாபரிகளில்லாமல் வேறு யார் என்று தோன்றவில்லையா?