Pages

Tuesday, April 30, 2013

விஸ்வரூபம் - இன்னொரு மன்மத அம்பு...



இந்தபடத்திற்கு படம் வெளியான சூட்டோடு விமர்சனம் செய்திருக்கலாம்தான்..ஆனால் படம் வெளிவரும் முன்பே அதிகபட்ச எதிர்ப்புகளால், ஏகப்பட்ட விளம்பரம் அடைந்த விஸ்வரூபம், அச்சமயம் கமல் என்ற நடிகன் மீது ஏற்பட்ட அனுதாபத்தால், அனைத்து குறைகளும் நிறையாக பார்க்கப்பட்டு, அது ஒரு திரைப்படமாக - பார்க்கப்படாமல் கமலின்  பொருளாதாரப் பிரச்சினையாக பிரதானப்படுத்தப்பட்டு, வெளிவந்த விமர்சனங்கள்  அப்படத்திருக்கு சாதகமாக அமைந்துவிட்டது...

அப்படியும் சிலர் - இது அமெரிக்க அரசியலை தமிழகத்திருக்கு கொண்டு வந்து கமல் வியாபாரம் செய்கிறார் என்று விமர்சித்திருந்தாலும் - அந்த நேரங்களில் ஏற்பட்ட களேபரங்களில் இவை பின்னுக்கு தள்ளப்பட்டு - ஒரு வெற்றிப்படமாகியது....

முதலில் டிடிஹெச் பிரச்சினையால் தாமதப்பட்டாலும், பிறகு முஸ்லிம் அமைப்புகளின் கடுமையான எதிர்ப்புகளினால் கமல் இந்த நாட்டை விட்டே ஓடிப்போகிறேன் என்று அழுத நாடகமும் , அவரது ரசிக சிகாமணிகள், படத்திற்கான டிக்கெட் பணத்தை அவருக்கே நேரடியாக அனுப்பிவைத்த கூத்தும் பிரமாதமாக நடந்து பத்திரிக்கைகளுக்கு வியாபாரம் செய்துகொள்ள வசதி செய்தன..

அந்த சமயங்களில் எவ்வளவோ பிரச்சினைகள் இருந்தாலும் விஸ்வரூப பிரச்சினை மட்டுமே அனைத்து தமிழ் ஆபாச பத்திரிக்கைகளிலும் முன்னுரிமை பெற்றதற்கு காரணம் டாஸ்மாக் தமிழனின் மூளை மழுங்கிய சினிமா அடிமைக்களுக்கு வேறு எல்லாவற்றையும் விட, சினிமாதான் வாழ்க்கை என்று அர்த்தம் என்பதை விட வேறென்ன?
ஒரு சமூகம் தாம் தவறாக சித்தரிக்கப்படுவதை எதிர்த்து களம்  இறங்கி போராடியதால், விஸ்வரூபம் அடைந்த லாபம் , தமிழகம் - டாஸ்மாக் மற்றும் சினிமாவினால்தான் வாழ்கிறதா என்ற அச்சத்தையே ஏற்படுத்தியது...
இதற்காக தமிழக முதலமைச்சர், எதிர்கட்சிகள் சினிமாவை முழுமூச்சாக எதிர்பதாக காட்டிக்கொளும் அரசியல் வியாபாரிகள்,  சினிமாகூத்தாடிகள்  என்று ஒட்டு மொத்த - சமூகக்காவலர்களும் (?) இந்த படத்திற்கு ஆதரவாத குரல் எழுப்பியதால், 
டாஸ்மாக் தமிழனின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து , இந்த சினிமாவை பார்க்காவிடில், ஜென்ம சாபல்யம் கிடைக்காது என்ற ரீதியில் தியேட்டர்களிலேயே தவம் கிடந்தான்...

ஆகா.. சுமாராக ஓடி இருக்கவேண்டிய இந்த படம், இன்று முக்கி முனகி நூறாவது நாளை தொட்டுக்கொண்டிருப்பதர்க்கு முழுக்காரணம் , அந்த சினிமாவின் கதை அமைப்போ மற்ற அம்சங்களோ என்று சொல்லவேண்டியதில்லை...அதற்க்கு வெளியே நடந்த, உரிமைப்போர்களும், அதை எதிர்த்து ஊடகங்கள் நடத்திய வியாபார போட்டியும்தான் காரணம்...

அமெரிக்காவை காக்கஇந்தியி  இந்திய அதிகாரி செல்கிறானாம்...இங்கு குண்டு வெடிப்பு நடந்தவுடன் ஏற்கனவே அமெரிக்க  எச்சரித்தது என்று வெட்கமின்றி உளரும்  இந்தியாவிலிருந்து அமெரிக்காவை காக்க இந்தியன் செல்வதாக  காட்டி இருப்பது கேலிக்கூத்து...

 அதைவிட ஒரு "கருத்து பயங்கரவாதம் " ஒரு வசனமாக வருகிறது. அதுவும்   அமெரிக்காவின் பரம வைரி  முல்லா  சொல்கிறார் " அமெரிக்க ராணுவம் குழந்தைகளையும்  கொல்ல  மாட்டார்கள்"  என்று... இந்த "கருத்து பயங்கரவாத" திணிப்பை எந்த ஆபாச ஊடகமும் கண்டு கொள்ளவில்லை என்பதிலிருந்து தெரிகிறது  " கலாசார பயங்கரவாதிகள்"  யார் என்று...

கதை என்று பார்த்தல் கமலும் முந்தைய படுதோல்வி  படமான "மன்மதன் அம்பு" படத்தின் மறு பிரதிதான் இது...

அதில் தன வருங்கால மனைவியை - கலட்டி விட காரணம் தேடி - துப்பறிய சொல்லும் கணவன்..இப்படத்தில் கணவனை  கழட்டிவிட்டு  தனது கள்ளக்காதலை தொடர நினைக்கும் மனைவி...

அதைத்தொடர்ந்து உண்டாகும்  குழப்பங்களை, இஸ்லாமிய சாயம் பூசி, அமெரிக்க தனது அடிமைத்தனத்தை காட்டும் இயக்குனர் கமலின் சாதாரண படம், விஸ்வரூபம்  காரணம் படத்திற்ற்கு அப்பாற்பட்டு ஏற்பட்ட அனுதாபமே தவிர, இவர்களின் திறமையால் அல்ல...

இப்படத்தின் வெற்றிக்கு உரிமை கொண்டாட கமலுக்கோ அதை சார்ந்தவர்களுக்கோ எந்ததகுதியும் இல்லை என்பதுதான் நிஜம்..

விஸ்வரூபம் - இன்னொரு மன்மத அம்பு...


Saturday, April 13, 2013

இவர்கள்தான் தமிழர்கள்....இதுதான் தமிழ்நாடு....!!!



கடந்த பலவாரங்களாக நடந்து வந்த ஒரு தேச துரோகம்  சற்று ஓய்ந்திருக்கிறது ..ஊடகங்களில் அந்த செய்திகளை காணவில்லை ..
அதுதான் தமிழ்பற்று வியாபாரம் !!!

எவன் தீக்குளிப்பான் ...அவனை பயங்கரவாத விடுதலைப்புலிஆதரவாளனாக காட்டி அதன் மூலம் விடுதலைப்புலிகளிடம் பணம் பெறலாம் என்று காத்திருக்கும் வைகோ நெடுமாறன் போன்ற விடுதலைப்புலி கைக்கூலிகளின் சத்தத்தை காணோம் 

ஸ்ரீலங்காவிலிருந்து எவனாவது புத்த மதத்தை  வரட்டும்...அவன் வரும் பேருந்தை அடித்து நொறுக்கி அவர்களையும் ..தாக்கி .இலங்கையில் உள்ள தமிழனுக்கு இன்னும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் மற்றொரு இந்திய தேச துரோக கூட்டம் சீமானின் நாம் தமிழர்களின் பயங்கரவாதமும் அடங்கிவிட்டது 

ராஜினாமா நாடக கலைஞரின் தமிழ்பற்று வியாபாரமும் அவரது குடும்ப பிரச்சினைகளும் ஊடகங்களினால் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டது 

காலேஜ் கட் அடிப்பு வீரர்களின் சத்தத்தையும் காணோம் 

தமிழ்பற்று வியாபாரிகளின் ஒலத்திர்க்கு  நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று காட்டுவதற்காக ஒருநாள் மட்டும்  உண்ணாவிரத நாடகம் ஆடும் கூத்தாடிகளும் தத்தமது படப்பிடிப்புகளுக்கு கிளம்பி விட்டனர் .

டாஸ்மாக்கில் வீழ்ந்து தன்மானம் பேசும் டாஸ்மாக் தமிழனும் இணையதள தமிழ்பற்று வீரர்களும் ஒவ்வொரு கூத்தாடிகளையும் கெஞ்சி இலங்கை தமிழனுக்கு ஆதரவு தாராத நீயெல்லாம் ஒரு கலைஞனா என்று பேஸ் புக்கிலும் டுவிட்டரிலும் எழுதி தமது தமிழ்பற்று வீரத்தை பறைசற்றிவிட்டு அமைதியாகிவிட்டனர் ..

இந்த தேச துரோக நிகழ்வுகள் தற்காலிமாக அடங்கிவிட்டதன் காரணம் ./என்ன


தமிழ்பற்று வியாபாரிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறி ராஜபக்ஷே தண்டிக்கபட்டு விட்டானா ?

இல்லை ராஜிவ்காந்தி கொலைக்குற்றவாளிகள் தூக்குத்தண்டனையில் இருந்து தப்பி 
விட்டனரா ?
இல்லை விடுதலைப்புலிகளிடம் இருந்து வரும் பிச்சை காசு நின்றுவிட்டதா ? 

என்றால் இல்லை......


இந்த தேச துரோக நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதின் காரணம் என்ன தெர்யுமா ?

இங்கேதான் டாஸ்மாக் தமிழன் தலை நிமிர்ந்து நிற்கிறான்.
அவனது தன்மானம் வெளிப்படுகிறது ...

நடிகை அஞ்சலி தலைமறைவாகி விட்ட பிறகு விடுதலைப்புலி எக்கேடு கெட்டால்  என்ன? 

அஞ்சலி காணாமல் போனபிறகு தமிழாவது ? தமிழ்பற்று வியாபாரமாவது ?


Monday, April 1, 2013

ஏப்ரல் - 1

இன்றைய நாளிதழ் செய்திகள்..!

1. குஜராத் பயங்கரவாதி மோடி பார தீயஜனதா கட்சியின் மேலிட குழு உறுப்பினராக நியமனம்.

2. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் சினிமா "நடிகர்கள்" செவ்வாய்க்கிழமை  உண்ணாவிரதம்.

3. கூடங்குளத்தில் அடுத்தகட்ட போராட்டம்  - கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் - அமெரிக்க ஆதரவாளர்கள்  அறிவிப்பு. 

4. மதவாதத்திர்க்கும் இனவாதத்திர்க்கும் இலங்கையில் இடமில்லை - ராஜ பக்ஷே 

5. காங்கிரசுக்கு எதிராக  அன்னா  ஹசாரே அமிர்தசரஸ் நகரில் பாதயாத்திரை தொடங்கினார்..

6. ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி: நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் மூடும் பணி தீவிரம் - சந்துல வெச்சு சாப்பிடுங்கடா டாஸ்மாக் வீரர்களா 

7. தமிழக, கேரள மீனவர்களை பாகுபடுத்தி பார்ப்பது நியாயம் தானா? மத்திய அரசுக்கு தமிழ்பற்று வியாபாரி கருணாநிதி கண்டனம்

8. -ஈழத்தமிழர்களுக்கு  - (விடுதலைப்புலிகளுக்கு ) ஆதரவாக மாணவர்கள் காலேஜ் கட் அடிப்பு  போராட்டம் நடத்தியதால் மூடப்பட்ட கல்லூரிகள் எப்போது திறக்கும் என்று கேட்டதற்கு இன்னும் தேதி முடிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்...


இன்று முட்டாள்கள் தினம் என்று ஞாபகம் வருவது தவிர்க்க முடியவில்லை..