Pages

Tuesday, December 31, 2013

மூடர் கூடம் - முட்டாள்களின் தேசம்



சன் லைப் தொலைக்காட்சியில் பழைய படங்களை பார்ப்பது அலாதியான சுகம்தான்....
அப்படித்தான் எம்ஜியார் நடித்த  "நீரும் நெருப்பும்"  என்ற படமும், சிவாஜி கணேசன் நடித்த "திரிசூலம்" என்ற படமும் பார்க்க நேர்ந்தது....

அந்தகாலத்தில் சீரியசாய் பார்க்கப்பட்ட படங்கள் இன்று  விழுந்து விழுந்து சிரிக்கும்  விதாமாக இருப்பதுதான் வேடிக்கை...
நீரும் நெருப்பும் படத்தில் - இரட்டையர்களாக பிறந்த இரண்டு எம்ஜியாரில் அண்ணனனுக்கு அடித்தால் தம்பிக்கு வலிக்குமாம்...
அதிலும் அசோகனின் நடிப்பு உச்சக்கட்ட காமெடி....."இங்கே வாடா " என்று சொல்வதற்கு கூட 70 mm  அளவுக்கு வாயை இளிப்பது மகா கொடுமை...

ஆனால் எம்ஜியார் படங்களில் ஒரு குறிப்பிட்ட பார்முலாவை கடைபிடித்தே வந்து இருக்கிறார்...எக்காரணத்தை கொண்டும் தனது கைகளால் வில்லனை  - அவன் எப்படிப்பட்ட நரேந்திர மோடி (பயங்கரவாதி)யாக  இருந்தாலும்கூட தன்  கைகளால் கொலை செய்ய மாட்டார் ....ஒன்று அவனாக விபத்தில் சிக்கிக்கொள்ளவேண்டும்...அல்லது போலிஸ் கைது செய்து சட்டத்தின்படி தண்டிக்க படவேண்டும்...

அப்படித்தான் அவரது பெரும்பாலான திரைப்படங்களில் - இறுதிக்கட்ட காட்சியில், ஏராளமான டிரம்கள் அடைக்கப்பட்ட கிடங்குகளில் - சர்கஸ் போல குட்டிகாரணம் அடித்து போலிஸ் வந்தவுடன் அவைகள் கையில் ஒப்படைக்கும் வண்ணமாகதான் இருக்கும்...

வில்லன் என்பவன் எல்லாவிதமான அநியாயங்களும் செய்பவனாகவும், கதாநாயகன் என்பவன் தன்னை கடிக்கும் எறும்புக்கும் துரோகம் செய்யாதவனாகவும் - படங்களில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கான்பவனாகவுமே உருவாக்கம் செய்யப்பட்டார்கள்....(இந்த பார்முலா மட்டும் இன்றுவரை கடை பிடிக்கப்படுகிறது ) அதாவது கதா நாயகிகோ, அல்லது வேறு எவருகோ  பிரச்சினை எனில், படம் பார்த்துக்கொண்டிருக்கும் நாம் கூட கதாநாயகன் வரமாட்டான என்று நினைக்க வைக்கப்பட்டுள்ளோம்....இது தமிழனின் அனிச்சை செயலாகவே மாறிவிட்டது...அதன் தொடர்ச்சிதான் திராவிட இயக்கங்களின் வளர்ச்சி, அண்ணா , கருணாநிதி  எம்ஜி ஆர், ஜெயலலிதா போண்டோரால் முதல்வராக ஆக முடிந்தது... இன்னும் சினிமா கூத்தாடிகள்தான் நாளைய முதல்வராக வரவேணும் என்று டாஸ்மாக் அடிமைகளின் லட்சியமாகவும் ஆனது.....

உலகத்திலேயே நல்லவன் மற்றும் மாவீரன் கதாநாயகன் மட்டும்தான்   என்ற பிம்பம்  சிறிதளவு சிதைக்கப்பட்டது சிவாஜி கணேசனின் படங்களில்.
கோழையாகவும், முட்டாளாகவும் , குடிகாரனகாவும், திருடனாகவும் கதாநாயகன் இருக்கலாம் என்று சிவாஜி கணேசன் படங்களில் காட்சிபடுத்தப்பட்டன..அதை சிவாஜி படங்களில் மட்டும் ஏற்றுக்கொண்ட - மறத் (துப்போன)தமிழன்  - அப்படி எம்ஜியார் நடித்ததாலோ நிராகரிக்க தயங்கவில்லை...

போறபோக்கில் திரிசூலத்தை மறந்து விட்டேன்.....

சிவாஜிகணேசன் மூன்று வேடங்களில் நடித்து பெரிய வெற்றி பெற்ற படம் "திரிசூலம்"- 1980 களில்  மிக பரபரப்பாக பேசப்பட்ட படமும்கூட...

அதிலும் நாங்களெல்லாம் சிறு பிள்ளைகளாக  இருக்கும்போது, - சிறிய குதிரை வண்டிகளில் திரிசூலம் படத்திற்கான விளம்பரம் மிக பரப்பாக இருக்கும்.  "சிவாஜி - K.R. விஜயா "- தொலைப்பேசி காட்சிகளை பார்க்க தவறாதீர்கள் என்று விளம்பரம் செய்வார்கள்....

உணர்ச்சி பிழம்பாக சித்தரிக்கப்பட்ட அந்த காட்சியை சமீபத்தில் பார்க்கும்போது வந்த சிரிப்பை அடக்கவே முடியவில்லை....
"சுமதீ " என்று நடிகர்திலகம் சொன்னவுடன், டெலிபோன் ரிசீவரை தூக்கி போட்டு விட்டு அதைபிடிக்க முடியாமல் "K.R. விஜயா" துடிப்பது  நம்பர் ஒன்  நகைச்சுவை....

மீதி உள்ள இரண்டு சிவாஜிகள் அண்ணன் தம்பிகள்..அதில் ஒரு சிவாஜி குரும்புக்காரராம்...குறும்பு என்றால் முகத்தை அஷ்டகோணலாக அடிக்கடி மாற்றிகொள்ளவேண்டுமாம்...சகிக்க முடியவில்லை...
தனது தொப்பையை தூக்க முடியாமல் - காதல் காட்சிகளில் நடிப்பதை அந்தக்கால தமிழன் எப்படித்தான் சகித்துகொண்டானோ தெரியவில்லை....(அப்போது இப்போது உள்ளமாதிரி டாஸ்மாக் கடைகளும் அவ்வளவாக இல்லை...கள்ளுக்கடைகள்தான்  )

அதிலும் அந்த இறுதிக்காட்சி ..இதுபோன்ற வயிறுகுலுங்க வைக்கும் நகைச்சுவை காட்சி வேறு எந்த படத்திலும் வந்திருக்குமா எனபது சந்தேகமே...

இரண்டு சிவாஜிகளின் தாய் தந்தை, மற்றும் ஒரு சிவாஜியின் காதலி ஆகியோரை வில்லன்கள் கடத்திக்கொண்டு வைத்துக்கொண்டு, .மிரட்டுவார்கள்...அவர்களை காப்பாற்ற செல்லும் இரண்டு சிவாஜிகளும், "இரண்டு கைகள் நான்கானால் - இருவருக்கேதான் எதிர்காலம்" என்று பயங்கர ஜால்லியாக பாட்டுப்படிக்கொண்டு செல்வார்கள்.. தாய் தந்தையை காப்பாற்ற செல்லும் லட்சணம்...

படத்தின் காட்சிகள் டெல்லி மற்றும் காஷ்மீர் என்று சொல்லப்பட்டாலும், வில்லன், கதாநாயகன்,  கதாநாயகி,போலிஸ் என்று அனைவரும் தமிழில்தான் பேசிக்கொண்டு இருகிறார்கள்... ஒருவேளை  - ராஜ ராஜ சோழன் கிமு 25000 த்திலேயே காஷ்மீரை ஆண்டு கொண்டு தமிழை ஆட்சி மொழியாக்கி வைத்திருந்தானோ என்னவோ..யார் கேட்பது ..உட்டு  அடிக்க வேண்டியதுதானே....

இப்படி சிவாஜி எம்ஜியார் சகாப்த காலங்களிலேயே தொடர்ந்து  கமல் , ரஜினி என்ற கூத்தாடிகளின் காலங்களில் காதலில் காமத்தை அதிகம் வெளிப்படுத்துவதால் கமலஹாசன் காதல் மன்னன் என்னவும், சாராயத்தையும் , சிகரெட்டையும் பிரபலப்படுத்தி தமிழ்நாட்டு குடிகார இளைஞர்களை மேலும் பொறுக்கிகளாக மாற்றியதால் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் எனவும், தமிழக குடிகாரர்களாலும், ஆபாச பத்திர்க்கை நாய்களாலும் கொண்டாடப்பட்டனர்...

கமல், ரஜினி வரிசையை தொடர்ந்து, வில்லனாகவும், குடிகாரர்களாகவும் அறியப்பட்ட  விஜயகாந்த்,சத்யராஜ் போன்றோர்கள் மக்களுக்கு நல்லது செய்யும் உத்தமர்களாக - அதாவது குடிகாரனாக இருந்தாலும், திருடனாக இருந்தாலும், கொலைகாரனாக இருந்தாலும்,  - கதாநாயகன் என்றால் அவன் செய்யும் அனைத்தும் மக்கள் நலனுக்காகவே என்று முட்டாள் தமிழன் மூளை சலவை செய்யப்பட்டான்....

அந்த ஊடக பயங்கரவாதத்தின் தொடர்ச்சிதான், இன்று டாஸ்மாக்கில்  மூழ்கி,அரிவாளை தூக்கிக்கொண்டு வீரவசனம் பேசும் பொறுக்கிகள்தான் படத்தை தாங்கும் கதாநாயகனாகவும், அவனை உருகி உருகி காதலிக்கும் கதாநாயகி பேரழகியாகவும், இருக்கிறார்கள்....

2013 ஆம் வருஷத்தின் டாப் 10 மனிதர்கள் என்றதலைப்பில் - நீதிபதி சந்துரு அவர்களை குறிப்பிடும் அதே ஆபாச விகடன்,  "சிவகார்த்திகேநயன் என்ற கூத்தாடியையும் அதே லிஸ்டில் கொண்டு வந்து தனது ஆபாச அரிப்பை தீர்த்து கொண்டிருக்கிறான்...

NDTV  எனும் மிகக்கேவலமான டிவி சேனல் - சிறந்த மனிதர் என்று குடிகார கூத்தாடிகள்  ரஜினி, ஷாருக்கான் போன்றவர்களுக்கு இந்தியாவின் ஜனாதிபதியை வைத்து விருது வழங்கி தனது விபச்சார புத்தியை வெளிச்சம் போட்டு காட்டுகிறான்.

ஒரு வருட இறுதி என்றாலே சினிமாதான் என்று தமிழனை மூளைச்சலவை செய்து அவனை மூடனாக்கி கொண்டிருக்கும் ஆபாசப்பத்திரிக்க்காகளும் இந்த முட்டாள் தேசத்தின் நான்காவது தூணாக ஆராதிக்கப்படும் அவலத்தை என்னவென்று சொல்லலாம்?

தாம் செய்வது தேச துரோகம் என்று கூட விளங்காமல், விடுதலைப்புலி பயங்கரவாதிகளுக்காக ஊளையிடும்  தன்மான(மிழந்த) தமிழன்,  சாலைகளில் சக தமிழனைப் பார்த்து முதலில் பேசும் வார்த்தையே "ங்கோ ...தா....தே .....யலே  " என்ற தமிழ் தேசிய வார்த்தைகள்தான் என்பதை  எத்தனை டாஸ்மாக் அடிமைகள் உணர்ந்திருக்கிறார்கள்?

இதோ தமிழ்பற்றை வளர்க்க, 2014 ஆங்கிலப்புத்தாண்டை வரவேற்க டாஸ்மாக் கடைகளை நோக்கி விரைந்து விட்டான் மரத்துப்போன தமிழன்.....

நாளைமுதல் குடிக்கமாட்டேன் என்று சபதமெடுக்க போகிறான்....
கோவில்களிலும் சர்ச்சுகளிலும் அதிகாலையிலேயே நின்று தனது பக்தியை வெளிப்படுத்திவிட்டு எப்போதடா மாலை வரும் டாஸ்மாக் கடைக்கு செல்லாமாமே என்ற எண்ணத்தில் புத்த்டாண்டை துவக்கும் அனைத்து டாஸ்மாக் தமிழனுக்கும் .....WISH YOU HAPPY NEW YEAR.. வாழ்க தமிழ்....


Tuesday, December 24, 2013

போதையில் கரையும் தமிழ் சினிமா... !தள்ளாடும் தமிழகம்




சமீபத்தில் வெளிவந்த சூது கவ்வும் படத்தில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கையில் ஒருவன் சொல்வான். மணி ஒன்பது அம்பதாச்சு. பத்து மணிக்கு கடை மூடிருவான்.

தியேட்டரில் ஒரே விசில் சத்தம், கைத்தட்டல். உயிரே போனாலும் பத்து மணிக்குள் டாஸ்மாக்கில் சரக்கு வாங்க வேண்டும் என்ற அவனின் சின்சியாரிட்டிக்கு ரசிகர்கள் செய்த மரியாதைதான் அந்த விசிலும், கைத்தட்டலும். 



அதிக ரசிகர்களை ஈர்க்க வேண்டும், கமர்ஷியலாக பல மடங்கு லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில்தான் இங்கு படங்கள் எடுக்கப்படுகின்றன. அதிக சிரமமில்லாமல் தங்களின் நோக்கத்தை நிறைவு செய்யவே ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள். அந்தவகையில் எளிதாக ரசிகர்களை பரவசப்படுத்த இயக்குனர்கள் இப்போது அதிகம் நம்புவது டாஸ்மாக் காட்சிகளைதான். பிராந்தி பாட்டிலை காண்பித்தாலே திரையரங்குகள் ஆர்ப்பரிக்கின்றன.

இருபது வருடங்களுக்கு முன் குடி ஒரு மோசமான செயலாக நமது சமூகத்தில் பார்க்கப்பட்டது. அன்று திரைப்படங்களில் குடி என்பது ஒருவரின் குணத்தை வெளிப்படுத்தும் விஷயமாக கையாளப்பட்டது. அதாவது வில்லன்கள் மட்டுமே எப்போதும் மதுக்கோப்பைகளுடன் இருந்தார்கள். கதாநாயகன் தவறு செய்வதாக காட்சி வந்தால் குடி போதையில் அந்தத் தவறை செய்வதாக காட்டினார்கள். அதாவது போதைதான் அவனை தவறு செய்ய வைத்தது என்பதாக. நடைமுறை வாழ்க்கையிலும் இன்று போல் குடி இயல்பான ஒன்றாக ஆகியிருக்கவில்லை. குற்றவுணர்வுடனே மதுவிடுதிகளை அன்று நாடினர்.

கடந்த இருபது ஆண்டுகளாக நம்மை ஆண்டவர்கள் மதுவை ஒரு அத்தியாவசிய பண்டமாக ஆக்கிவிட்டார்கள். ஒரு தலைமுறையை குடிகாரர்களாக மாற்றிய பெருமை இரு திராவிட காட்சிகளுக்குமே உண்டு. சமூக அளவில் மது குறித்து இருந்த மனத்தடைகளையும், குற்றவுணர்வுகளையும் தெருவுக்கு தெரு முளைத்திருக்கும் டாஸ்மாக் கடைகள் இல்லாமலாக்கிவிட்டன. குடி இன்று ஒரு தவிர்க்க முடியாத பழக்கமாகிவிட்டது.

1983ல் மது விற்பனை 180 கோடியாக இருந்தது. இருபது வருடங்களில் அதாவது 2003ல் அது 3,600 கோடியாக உயர்ந்தது. 2013ல் 22,000 கோடிகள். உலகில் எந்தவொரு வியாபாரமும் இப்படியொரு வளர்ச்சியை கண்டதில்லை. தமிழகத்தைவிட ஒன்றரை மடங்கு ஜனத்தொகை கொண்ட உத்திரப்பிரதேசத்தில் மதுவினால் கிடைக்கும் வருவாய் 11,500 கோடிகள். தமிழகத்தில் அதுவே 22,000 கோடிகள். தமிழ்நாட்டின் குடிவெறிக்கு இதுவொரு சின்ன உதாரணம். 


குடியே கூடாது என்று சொல்லும் ஒழுக்கவாதியோ, மதுவை அறவே தவிர்க்க வேண்டும் என்று சொல்லும் காந்தியின் லட்சியவாதியோ கிடையாது நாம். அதேநேரம் இந்தப் பழக்கத்தின் அசுர வளர்ச்சி அச்சப்படுத்துகிறது. 

குடி ஒரு பழக்கமாகிவிட்டது என்றோம். அதுதான் பிரச்சனையின் அடிப்படை. பழக்கம் என்பது நாம் சிந்தித்து நடைமுறைப்படுத்துவது இல்லை. அது நம்மையறியாமல் நம்மிடம் ஒட்டிக் கொள்வது. இருபது வருடங்களுக்கு முன் மெழுகுவர்த்தி ஊதி அணைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவது அரிது. ஆனால் இன்று அந்த சம்பிரதாயத்தை கடைபிடிக்காத குடும்பங்களே இல்லை. 

கேக், மெழுகுவர்த்தியுடன் தலையில் வைக்கும் குல்லா முதற்கொண்டு அதற்கான எக்ஸ்ட்ரா தளவாடங்கள் விற்பனை இன்று மிகப்பெரிய சந்தையாக உருவெடுத்திருக்கிறது. இன்று நாம் விரும்பாவிட்டாலும் அந்த சம்பிரதாயத்தை செய்ய வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கிறோம். பழக்கத்தினால் வரும் முக்கியப் பிரச்சனையே அதுதான். நாம் விரும்புகிறோமா இல்லையோ அதை நாம் செய்ய பழக்கப்படுத்தப்படுகிறோம்.



இன்று குடியை நாடும் பெரும்பாலான இளைஞர்கள் குடியை தேர்ந்தெடுத்தவர்கள் என்பதைவிட குடிக்கு பழக்கப்படுத்தப்பட்டவர்கள் என்பதுதான் சரி. சென்ற தலைமுறையை ஓரளவு குடிப்பழக்கத்திலிருந்து தடுத்தது, சமூகம் குடி குறித்து உருவாக்கி வைத்திருந்த, குடி மோசமான செயல் என்ற மதிப்பீடும், அந்த மதிப்பீடு உருவாக்கிய குற்றவுணர்வும்தான். அதனை இல்லாமல் செய்ததில் கடந்த இருபதாண்டுகளாக நம்மை ஆண்டவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 

சினிமாவுக்கும் அதில் கணிசமான பங்குண்டு. நிஜத்தைதானே சினிமாவில் காண்பிக்கிறார்கள் என்று சப்பைகட்டு கட்ட முடியாது. நிஜத்தை சினிமா பிரதிபலிக்கிறதா இல்லை சினிமாவைப் பார்த்து நிஜத்தை உருவாக்குகிறார்களா என்பது பதில் கிடைக்காத கேள்வி. ஆறு இரு கரைகளையும் இணைக்கிறதா இல்லை பிரிக்கிறதா என்பது போல. கரைகளை பிரிப்பதும் ஆறுதான், இணைப்பதும் ஆறுதான். குடி விஷயத்தில் யதார்த்தமும், சினிமாவும் ஒன்றையொன்று ஒத்திசைந்து தம்மை வலுப்படுத்திக் கொண்டன என்றுதான் சொல்ல வேண்டும்.

சென்ற தலைமுறை சினிமாவில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கிற, கொலை செய்கிற வில்லன்கள்தான் மது அருந்தினார்கள். மது கெட்ட மனிதனின் அடையாளமாக இருந்தது (குடிப்பவர்கள்தான் மோசமானவர்கள் அல்லது மோசமானவர்கள்தான் குடிப்பார்கள் என்ற அந்தக்கால சினிமா பார்வையிலும் நமக்கு உடன்பாடில்லை). பருந்து பார்வையில் சொல்வதானால் ஒருவன் கெட்டவன் என்பதை காண்பிக்க அவன் கையில் மதுக்கோப்பையை தந்தார்கள். ஆனால் இன்று காட்சிகள் மாறிவிட்டன. படத்தின் ஆரம்பத்தில் கதாநாயகன் அறிமுகமாவதே டாஸ்மாக் கானா பாடலில்தான்.

படத்தில் வரும் இளைஞன் ஏதாவது சாதித்தால் டாஸ்மாக்... காதலில் வெற்றி பெற்றால் டாஸ்மாக்... தோல்வி அடைந்தால் டாஸ்மாக்... காமெடி என்றால் டாஸ்மாக்... கானா பாடல் என்றால் டாஸ்மாக்... விழுந்தாலும் எழுந்தாலும் டாஸ்மாக். இன்றைய இளைஞனின் தவிர்க்க முடியாத உறுப்பாக டாஸ்மாக்கை மாற்றிவிட்டது தமிழ் சினிமா.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பிய நிகழ்ச்சியில் விளம்பரங்கள் எப்படி நம்மை கன்ஸ்யூமராக மாற்றுகிறது என்பது பற்றி அலசப்பட்டது. அதில் பேசிய ஒரு இளம்பெண், சாக்லெட்டை கண் மூடி சுவைப்பதை பெருமையாக குறிப்பிட்டார். விளம்பரத்தில் கண்களை மூடி சாக்லெட்டை சுவைக்கும் பெண்ணை அவர் இமிடேட் செய்கிறார் என்பதுகூட அவருக்கு தெரிந்திருக்கவில்லை. 

அந்த இளம்பெண்ணைப் போல இன்னதென்று அறியாமலே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிற இளைஞர்கள்தான் இன்று அதிகம். சிந்தித்துப் பார்க்காமல் எதையும் சுவீகரித்துக் கொள்ளும் சமூகத்தை குடியிலிருந்து ஓரளவு தடுத்து நிறுத்துவது குடி குறித்த குற்றவுணர்வுதான். அந்த குற்றவுணர்வை நமது சினிமா இல்லாமலாக்கிவிட்டது. அதற்கு முக்கிய காரணம் குடியை ஒரு கொண்டாட்டமாக மட்டுமே இதுவரை தமிழ் சினிமா காட்டியிருக்கிறது. அதன் இன்னொரு பக்கத்தை காட்டியதில்லை. குடி குறித்த குற்றவுணர்வை இல்லாமலாக்கியதற்கான பரிசுதான் திரையரங்குகளில் டாஸ்மாக் காட்சிகளுக்கு கிடைக்கும் விசிலும் கைத்தட்டல்களும்.



தமிழ் சினிமாவுடன் ஒப்பிட்டால் வேறு எந்த மொழி திரைப்படமும் இப்படி குடியில் விழுந்து கிடக்கவில்லை. பெரும் குடிகாரர்கள் நிறைந்த கேரளாவிலும்கூட குடி சம்பந்தமான காட்சிகள் கதையோட்டத்தின் தேவையை முன்னிறுத்தி மட்டுமே வைக்கப்படுகின்றன. குடிக்காக காட்சிகள் அமைப்பது தமிழ் சினிமாவில் மட்டும்தான். ஒரு பள்ளி மாணவன் எவ்வித உறுத்தலும் இன்றி டாஸ்மாக்கில் மது அருந்துவதற்கான மனப்பக்குவத்தை தந்ததில் தமிழ் சினிமாவுக்கு பெரும் பங்கு இருக்கிறது.


இருபத்தைந்தாயிரம் கோடி இலக்கு நிர்ணயித்து சாராயம் விற்கும் நாட்டில் குடி குறித்த குற்றவுணர்வை இனி எதிர்பார்ப்பதற்கில்லை. குடியை வைத்து கைத்தட்டல் வாங்குகிறோமே என்று ஏதாவது இயக்குனர்களுக்கு குற்றவுணர்வு ஏற்பட்டால்தான் உண்டு.