முத்தையா முரளிதரன் என்பவர் இலங்கையைச் சேர்ந்த ஒரு கிரிக்கெட் வீரர்..இதில் எங்கே மொழி வந்தது?
வீ ராமகிருஷ்ணன் என்பவர் வேதியலுக்காக நோபல் பரிசு வென்றார்...இவர் இங்கிலாந்து குடியுரிமைப் பெற்றவர்..தமிழ் அறவே தெரியாது..
ஆனால் பிறப்பால் தமிழராம்..கொண்டாடுகிறார்கள்..
இப்படி வீண் பெருமை அடிப்பதே தமிழன் பெருமை என்று கொண்டாடும் நமது தமிழ்நாட்டில் மனிதாபிமானம் இப்படித்தான் உள்ளது..
இந்தியாவில் குஜராத்தில் அநியாயமாக மக்கள் கொல்லப்பட்டால் கண்டுகொள்ளாமல் இருப்பது...
ஒரிஸ்ஸாவில் ஹிந்து வெறியர்களால் கிருஸ்துவ பாதிரியார் கொல்லப்படும்போதும்,
மும்பையில் சிவசேன வெறியர்களால் அப்பாவி மக்கள் கொல்லப்படும்போதும்,
தினம் தினம் காஸ்மீரில் குண்டுகள் வெடிக்கும்போதும்,
வட இந்தியாவில் மாவோயிஸ்டுகள் இரயிலையும், பஸ்களையும் குண்டுவைத்து தகர்க்கும்போதும்,
தமிழ்நாடு அமைதிப் பூங்கா என்று பெருமை அடித்துக் கொள்வது..
அதேசமயம், தமிழினப் பற்று எப்படி உள்ளது?
இந்தியாவில் பிறந்து, அங்கேயே எல்லா சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டு, சில அரசியல் களவாணிகள் இங்கேயே ஓட்டுப் பிச்சை எடுத்து, அதன் மூலம் பதவிகளையும் இலவசங்களையும் அனுபவித்துக் கொண்டு,
அந்நிய நாடான இலங்கையில் தீவிரவாதிகளுக்கும், அரசுக்கும் நடக்கும் போரில், தீவிரவாதிகளை ஆதரித்துக்கொண்டு இந்திய அரசியல்வாதிகளை கொன்ற விடுதலைப் புலிகளுக்காக, இந்தியாவை எதிர்க்கும் தேச துரோகிகளுக்கு பெயர் தமிழ் பற்றாளர்..
தமிழ்நாட்டில் பிழைத்துக்கொண்டு, இலங்கையில் உள்ள தீவிரவாதிகளுக்கு வக்காலத்து வாங்கி உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் சினிமாக்கூத்தாடிகள்..
சினிமாவில் விலை போகாமல் இந்தியாவில் இருந்துகொண்டே இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசும் தேச துரோகிகள்தான் இங்கே தமிழ் இனக்காவளர்கள்
ஒரு மலையாள நடிகை, படப்பிடிப்பு விசயமாக இலங்கை செல்லக்கூடாதாம்
ஆனால் ஒரு தமிழ் கிரிக்கெட்டு வீரர் சிங்களனுடன் சேர்ந்து கிரிக்கெட் விளயாடலாமாம்.
தமிழனை விரட்டுவதற்காக மும்பையில் வெறியன் பால்தாக்கரே என்பவனால் ஆரம்பிக்கப்பட்ட சிவசேனா என்னும் கட்சிக்கு இங்கே தமிழ்நாட்டில் கிளைகள் உண்டு..
ஆபாசமாக படம் எடுத்து, அதற்க்கு தமிழ்பெயரை சூட்டி அரசை ஏமாற்றும் அவலமும் இந்த தமிழ் பற்றாளர்களிடம் உண்டு..
தமிழன் என்பவன் மனிதனா தமிழனா?














