Pages

Wednesday, December 8, 2010

முன்னாள் அமைச்சர் ராசா வீட்டில் சி பி ஐ சோதனை !!



ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் சிக்கி ராஜினாமா செய்த தி மு க வின் அமைச்சர் ஆர் ராசாவின் சென்னை வீட்டில் இன்று காலையில் இருந்து சி பி ஐ சோதனை நடந்து வருகிறது..

நேரடி வருணனைகளுக்கு இந்த லிங்கை பார்க்கவும்   சி பி ஐ சோதனை


Tuesday, December 7, 2010

விக்கிலீக் நிறுவனர் கைது..!

அமெரிக்க ராணுவத்தின் அத்துமீறல்களை வெளிக்கொண்டுவந்த விக்கிலீக் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அஸ்ஸாஞ் இன்று (7/12/2010) லண்டனில் அந்நாட்டின் நேரம் காலை 9.30 க்கு ஸ்காட்லான்ட் போலிசால் கைது செய்யப்பட்டார்.

அவர்மீது சுவீடன் நாட்டில் உள்ள கற்பழிப்பு கேசுக்காக அவர் சரணடைந்தபோது ஸ்காட்லாண்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

அவரது உயிருக்கு ஆபத்து இருந்ததாலும் அவர் சரணடைய சென்றதாக கூறப்படுகிறது.

எது எப்படியோ..பத்திர்க்கை சுதந்திரத்திக்கு வாய் கிழிய பேசும் அமெரிக்கா, அந்நாட்டின் வண்டவாளங்களை வெளி கொண்டுவந்ததும் அவரது இணையதளத்தை முடக்கியதும், பத்திரிகை சுதந்திரத்தை மறந்ததும் கேலிக்குரியதே...!

1,76,000 கோடி ரூபாய் !

ஸ்பெக்ட்ரம் 2 ஜி அலைவரிசை இட ஒதுக்கீட்டில் ஏறக்குறைய ரூபாய் 1,76,௦௦௦ கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக உத்தேசமாக அறிவிக்கப்பட்டதும், அதைதொடர்ந்து, பாராளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டு வருவதும் அன்றாடம் நடைபெறும் ஒரு சாதாரண நிகழ்ச்சியாகி விட்டது.


மக்கள் எம் பி க்களை ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்திருப்பது, இப்படி பொறுக்கித்தனமாக பாராளுமன்றத்தை முடக்கி வைப்பதற்காக அல்ல. இப்படி பாராளுமன்றத்தில் ரவுடித்தனம் பண்ணுவதால் அன்றாடம் இந்த அரசுக்கு ஆகும் செலவு கோடிக்கணக்கில் ஆகும். இந்த ஊழலை விசாரிக்க கோரிக்கை வைக்கிறோம் என்ற பெயரில் இன்னும் அதிகமாக அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் வேலையை செய்துகொண்டிருக்கிறார்கள் எதிர்கட்சி எம் பி க்கள்..

இப்படி ஊளையிட்டுக் கொண்டிருக்கும் அனைவருமே ஊழலில் திளைத்தவர்கள்தாம்.

தெகல்கா ஊழல், கார்கில் ஊழல், போபர்ஸ் ஊழல் என்று வரிசையாக அடுக்கிகொண்டே போகலாம்...

மொத்தத்தில் இவர்கள் எதையுமே மக்கள் நலனுக்காக செய்யவில்லை...

ஓட்டுப் பிச்சை எடுத்துவிட்டு இன்று பாராளுமன்றம் நடக்கவிடாமல் செய்யும் இந்த பொறுக்கிகளையும், அதே சமயம் ஸ்பெக்ட்ரம் ஊழலில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியவர்களையும் மக்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்.


சமீபத்தில் கலைஞர் கருணாநிதி " ரூபாய் 1,76,000 கோடியை ஒருவரே கொள்ளை அடித்திருக்கமுடியாது" என்று கூறி தான் டூரிங் தியேட்டரில் படம்பார்த்த கதையை உதாரணமாக கூறி உள்ளார்..



அப்படியென்றால் கூட்டாக கொள்ளையடித்திருக்கிரார்களா?



அது சரி..!


Sunday, December 5, 2010

ஒபாமாவின் இளமைக்கால புகைப்படங்கள்
















Saturday, December 4, 2010

திருடன் கையில் சாவி...!

இன்று ஒரு செய்தியை படித்தபோது இந்த நாட்டில்  நீதி செத்துக் கொண்டு வருகிறது என்பதற்கு சாட்சியாக இருக்கிறது அந்த தகவல்..


2002 ஆம் ஆண்டு, குஜராத்தில் நடந்த கலவரம் உலகம் அறிந்தது..அப்பாவி முஸ்லிம்களை பீ.ஜே.பி, மற்றும் ஆர் எஸ் எஸ் வெறிநாய்கள் கொன்றதும் உலகம் அறிந்ததே..


அதற்கு தலைவன் அம்மாநிலத்தின்  முதல்வனாக இருக்கும் நரேந்திர மோடி என்ற வெறி பிடித்த மிருகம் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே..
                   (குஜராத் கலவரத்தின் தலைவன்)


அந்த கால கட்டத்தில் இந்தியாவின் பிரதமராக இருந்த, பீ ஜே பி என்ற மதவெறி கட்சியின் வாஜ்பாயி பிரதமராக இருந்தான். அத்வானி என்ற பயங்கரவாதி துணை பிரதமராக இருந்தான்.

வாஜ்பாய் மோடி என்ற பயங்கரவாதியை கண்டித்தான்..அனால் அவனை பதவியை விட்டு இறக்கமுடியாத கோழையாக இருந்தான். அத்வானி என்ற பயங்கர மிருகம் அதற்க்கு தடையாகவும் இருந்தது.

                          ( பயங்கரவாத மிருகங்களில் ஒன்று)

 
இன்னும் இந்த ஆர் எஸ் எஸ் மிருகங்களின் வண்டவாளத்தை, தெகல்கா இணையதளம் அப்பட்டமாக வெளிக்கொண்டு வந்தது. மோடி என்ற வெறிபிடித்த மிருகம்தான் இதற்கெல்லாம் காரணம் என்று உலகமே அறிந்தது. அதற்கு எந்த அரசும் இதுவரைக்கும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.. எல்லா நாய்களும் ஊழல் செய்வதிலும் நாட்டை சுரண்டுவதிலுமே கவனம் செலுத்தி பாராளுமன்றத்தை முடக்கி வருகின்றன.

                       (பாதிக்கப்பட்ட அப்பாவிகளில் ஒருவர்)


இன்று ஒரு செய்தியை படித்தபோது இந்த நாட்டி நீதி செத்துக் கொண்டு வருகிறது என்பதற்கு சாட்சியாக இருக்கிறது அந்த தகவல்..!

அதாவது குஜராத் கலவரத்தை அறைந்த ஒரு சிறப்பு விசாரணைக் குழு மோடி என்பவனுக்கும் கலவரத்துக்கும் சமந்தம் இல்லை என்று தெரிவித்திருக்கிறது..


இவர்கள் சிறப்பு விசாரணை குழுவா இல்லை மோடி என்ற நாயின் ஏவல் நாய்களா..?

தெகல்கா இணையதளத்தின் ஒரு வீடியோ ஆதாரமே மிகப் பெரிய சான்றாக இருக்கையில் மோடி என்ற தீவிரவாத நாய்க்கு சம்மந்தம் இல்லை என்று சொல்லும் இந்த நாய்களை உடனேயே கைது செய்து விசாரிக்கவேண்டும்...


இல்லையென்றால் மக்களுக்க் நீதியின் மீது இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் பொய்த்துவிடும்..

மோடி என்பவனுக்கு இந்த பயங்கர சம்பவத்தில் சம்ந்தமில்லை என்பது எவ்வளவு அப்பட்டமான பித்தலாட்டம் என்பதை உணர்த்த நேர்மை உள்ளம் உடையவர்கள் தங்களது கருத்தை பதிவு செய்யலாம்.


 

Monday, November 29, 2010

இது ஆபாச பதிவல்ல..(ஆபாசமாக இருந்தால் மன்னிக்கவும்)

இது http://velecham.blogspot.com/  (வெளிச்சம்)  என்ற வலைப்பதிவில் வெளியாகியது..



இது ஆபாச பதிவல்ல..(ஆபாசமாக இருந்தால் மன்னிக்கவும்)

ஆனாலும் சில வார்த்தைகளை அப்படியே எழுத வேண்டியிருப்பதால் இந்த தலைப்பு..



நம்ம ஊருல கேபரே கிளப் இருக்கும்லனே..அது போல அமெரிக்காவுல “பப்” ன்னு சொல்றாயிங்க. சாப்பிடுற பப்ஸ் இல்லண்ணே..புரியுற மாதிரி சொல்லனும்னா பெங்களூரில எம்.ஜி ரோடுல அப்பன் காசைக் கரைக்கிறதுக்கு குடிச்சுட்டு கும்மாளம் போடுவாயிங்களண்ணே..அதுமாதிரி இங்க நிறைய இடத்துல இருக்குண்ணே..இந்த ஊருக்கு வந்தவயிங்க எல்லாம் ஒரு தடவையாவது இங்க வந்துட்டு போயிருவாயிங்க..



அதெல்லாம் பேச்சிலர் பசங்களுக்குதான்..நம்மளுக்குதான் கால் கட்டு போட்டுருக்காயிங்களே….அது பத்தி நம்மளெல்லாம் யோசிக்குறதேயில்லைண்ணே..பக்கத்து வீட்டுல “கணேஷ்” ன்னு ஒருத்தர் நம்மளை மாதிரி கல்யாணம் ஆனவருண்ணே..மனைவி ஊருக்குப் போயிருக்காங்க..நம்ம பசங்களுக்குத்தான் மனைவி ஊருக்குப் போனா சுதந்திர தினம் கொண்டாடுவாயிங்களே..நம்ம ஆளுக்கு பொறுக்க முடியலே..இதை எப்படியாவது கொண்டாடியே ஆகனும்னு முடிவு பண்ணிட்டார்….



“ராசா..என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா(ஜனகராஜ் ஸ்டைலில் வாசிக்கவும்)….எனக்கு 1 மாசம்தான் டைம்..அதுக்குள்ள எல்லாத்தையும் அனுபவிச்சருனும்டா..டே..பப்புக்கு போகலாமா?..”



“டே கணேசு..என் பொண்டாட்டி ஊருக்கு போகலடா..செருப்பைக் கழட்டி அடிப்பா..”



“ராசா..இதை விட்டா சான்ஸ் கிடைக்காதுடா..நாம் ஒன்னும் தப்பு பண்ண போகலையே..சும்மா வேடிக்கைப் பார்த்துட்டு வந்துடுவோம்..”



எல்லாத்துக்கிட்டயும் ஒரு மிருகம் இருக்கும்..அது சமயம் பார்த்துதான் எட்டிப் பார்க்கும்னு சொல்லுவாயிங்களண்ணே..அன்னைக்கு எனக்கு அந்த மிருகம் கும்மி போட்டு விளையாட்டுண்டு இருந்துச்சு போல..



“டே..எனக்கு சரியாத் தோணல..எதுக்கும் நம்ம கோவாலுக்குகிட்ட ஒரு வார்த்தை கேட்டுடுவோம்..”



கோவாலு பத்தி ஏற்கனவெ உங்களுக்கு சொல்லியுருக்கேண்ணே..தெரியாதவங்க என்னோட “உயிர் பயமும் சூப்பர் பிகர்களும்” பதிவைப் பாருங்க….நம்ம ஊருக்கார பயபுள்ள..ரெண்டு பேரும் நேரா அவங்கிட்ட போனோம்..நல்ல பையன்னே..



“வாங்கடா..என்ன இந்த பக்கம்..”



“கோவாபெங்�E்ம கணேசு பொண்டாட்டி ஊருக்கு போயிருக்காங்கல..அதனால..”



“டே..ராசா..சூப்பர்டா..எல்லாரும் சேர்ந்து பப்புக்கு போகலாமாடா..”



அடப்பாவி..கொடுமை, கொடுமைன்னு கோவிலுக்குப் போனா..உன்னைப் போயி நல்ல பையன்னு ஒரு பாராவுக்கு முன்னாடிதானடா அறிமுகம் கொடுத்தேன்..



எல்லார் மனசுலயும் மிருகங்கள் அட் எ டையத்துல எட்டிப்பார்க்க சனிக்கிழமை போவதாக முடிவானது..என் வீட்டுக்காரம்மாகிட்ட சனிக்கிழமை ஆபிஸ்ஸில் வேலை இருப்பதாய் சொல்வதாக முடிவானது..கோவாலு படு எதிர்பார்ப்பில் இருப்பான் போல , ரெண்டு நாளா அவுத்துவிட்ட கோழி மாதிரியே திரிஞ்சான்..இதுல



“மச்சான்..பேர்னஸ் கிரீம்மை நல்லா அப்பிக்குவோம்டா.., அப்பத்தான் நம்மளை மதிப்பாயிங்க” ன்றான்..ஒரு நயா பைசா கூட செலவழிக்கமாட்டான் பயபுள்ள, அன்னைக்கு என்னான்னு பார்த்தா புது டிரஸ், புது கேப், புது கூலிங்கிளாஸ்..அப்படியே நம்ம தமிழ்நாடு பாலகிருஷ்ணா மாதிரியே இருந்தான்னே..



நான் இதுவரைக்கும் என்னோட பொண்டாட்டிக்கிட்ட பொய் சொன்னதே இல்லண்ணே..முதல் முறையா சொல்லப் போனேன்..வார்த்தை குழறவே கைகாலெல்லாம் நடுங்குச்சுண்ணே..



“இந்த..இன்னைக்கு ஆபிஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு..கொஞ்சம் லேட் ஆகும் எனக்காக வெயிட் பண்ணாதே..நீ, தூங்கு..”



“என்னாச்சுங்க..ஏதாவது அவசர வேலையா..பரவாயில்லைங்க..நீங்க போயிட்டு வாங்க..நான் வேணா பிளாஸ்க்ல டீ போட்டுத் தரவா..”



எனக்கு அப்பவே பாதி உசிரை எடுத்த மாதிரி இருந்துச்சுண்ணே..



“ஐயோ..வேண்டாம் பரவாயில்லை..நீ தூங்கு..” அப்படின்னு சொல்லிட்டு திரும்பி பார்க்காம கிளம்பிட்டேன்னே..வெளியே வர்றேன்..நம்ம கோவாலும் கணேசும் ரெடியா இருந்தாயிங்க..



எல்லோரும் கிளம்பி போனோம்…



அமெரிக்காவுல ரெண்டு உலகம்னே..முதல் உலகம் காலை முதல் சாயங்காலம் வரை, ஆபிஸில்..உசிரைக் குடுத்து வேலை பார்ப்பாயிங்கண்ணே..அடுத்த உலகம் இரவு உலகம்..உசிரை எடுக்குற உலகம்..கிளப்பு, பப்னு உசிரை எடுக்குற வரைக்கும் ஆடுவாயிங்க, ஏதோ நாளைக்கு உலகமே அழியப் போறது மாதிரி..நாங்க போன ஒரு இடமும் அப்படித்தான் இருந்தது..இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் 20-20 மேட்ச் போல ஒளிவிளக்குகள்..கையில் ட்ரிங்க்ஸை தட்டில் எடுத்துக் கொண்டு பரிமாறும், அரைகுறை ஆடை அணிந்த பெண்கள், காது கிழிஞ்சு போகும் அளவுக்கு இரைச்சலான இசை..எங்கு பார்த்தாலும் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் செக்யூரிட்டிகள்..பாதி போதையுடன் செருகிய கண்களுடன் இளவட்டங்கள்..சோமாலியாவில் பஞ்சத்துக்கு உடுத்தும் ஆடைகளை ஸ்டைலாக அணிந்து உலா வரும் யுவதிகள்..



அந்த பப் மூன்று பகுதி பகுதிகளாக இருந்தது..ஒரு புறம் பெரிய மேடையில் அரைகுறை ஆடையுடன் “இப்ப என்னாங்குற” தோரனையில் கேட்வாக் வரும் பெண்கள்..இன்னொரு பகுதி..நீ யாரோட புருசனாயிருந்தா எனக்கென்ன என்று யார் வந்தாலும் குத்தாட்டம் போடும் பெண்கள்..இன்னொரு பகுதி, ஏதாவது காரணம் சொல்லி நம்ம ஊருக்காரங்க போகும் “பார்”..நீங்க அங்கு உக்கார்ந்திருந்தால் சில யுவதிகள் வந்து உங்களை விசாரிக்கும்..நீங்கள் அவர்களுக்கு ஒரு ட்ரிங்க்ஸ் வாங்கி கொடுத்தால் உங்களுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்கும்..



இதெல்லாம் அந்த பொண்ணுக்கு உங்களை பிடித்திருந்தால்தான்..இல்லையெனில் “போடா வெளக்கெண்ணை” சொல்லிட்டு கிளம்பிக்கிட்டே இருக்கும்..நான் கவனித்த வரையில் எங்கும் தவறு நடக்கவில்லை..கோவாலு மாதிரி ஆர்வக்கோளாறுல ஏதாவது பண்ணிணா, அவனை சுண்டுவிரலுல தூக்கி வெளியே போடுறதுக்கு இம்மாந்தண்டி செக்யூரிட்டி அண்ணயிங்க(ஒரு சேப்டிக்காகத்தான் மரியாதை..தப்பித் தவறி இந்த பதிவை அவிங்க படிச்சிட்டா..ஹி.ஹி)



கோவாலு அலறிட்டான்..இதெல்லாம் இங்கிலிபீசு படத்துலதான் பார்த்திருக்கோமா..கோவாலு காலை தரையில் ஊன்ற முடியலை..சொர்க்கத்துல மிதக்குற மாதிரி கத்த ஆரம்பிச்சான்..



“ராசா..இதுதாண்டா உலகம்..வாடா, நம்மளும் போய் டான்ஸ் போடுவோம்..”



“டே..கோவாலு..ஆளை விடுடா..நம்ம எல்லாம் ஆடுனா கரகாட்டம் ஆடுற மாதிரி இருக்கும்..”



“போடாங்க..நீயெல்லாம் ஏண்டா பொறந்த..” எங்கப்பாவுக்கு அப்புறம் இப்பத்தாண்ணே இப்படித் திட்டு வாங்குறேன்..



கோவாலு அங்க போய் கைய காலை டான்ஸ்ங்கிற பேர்ல ஆட்டிக்கிட்டு இருந்தான்., எனக்கு கண்ணைக் கட்டிக்கிட்டு வரவே அங்கு உள்ள சோபாவில் அமர்ந்தேன்..ஒரு தேவதை என்னை நோக்கி வரவே எனக்கு பயமா போச்சுண்ணே..



“ஹாய்…நான் கிளாரா..நீங்க இண்டியாவா..?



“நான் ராசா..”



“நான் இந்த கிளப்லதான் வேலை பார்க்குறேன்..ஏன் இங்க வந்து உக்கார்ந்து இருக்கீங்க..டான்ஸ் ஆடலையா..”



“இல்லீங்க..பரவாயில்லை..ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே..இவ்வளவு தைரியமா வெக்கமில்லமா கேட் வாக் வர்றீங்களே..உங்களுக்கு தப்பா தோணலையா..”



இதுக்கு பேர்தாண்ணே ஆணாதிக்கம்..நம்ம ஊருல தான் இதெல்லாம்..இங்கெல்லாம் பளார்ன்னு ஒரு அறைதான்..திருப்பிக் கேட்டா பாருங்க..



“இதுல என்ன வெட்கம்..சரி நான் பண்றது தப்புனே எடுத்துகிட்டாலும், அதையும் வெக்கமில்லாம நீங்க பார்க்க வர்றீங்களே..உங்களுக்கு தப்பா தோணலை..”



இப்படி நாலு பேர் பளார்ன்னு அறைஞ்சாத்தான்னே நம்மளுக்கெல்லாம் புத்தி வரும்..அப்படியே வளர்ந்துட்டோம் பாருங்க..ஆடி முடிச்ச கணேசும், கோவாலும் திரும்பி வந்தார்கள்..களைப்பு முகத்தில் தெரிந்தாலும், நான் கிளாராவிடம் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தவுடன் கருகும் வாசனையும் வந்தது..வந்தவுடனே ஆரம்பிச்சாயிங்க..



“ஹாய்..நான் கணேஷ்..”



கிளாராவுக்கு கணேசை பிடிக்கவில்லை போலும்..எழுந்து போக எத்தனித்தாள்..கணேசுக்கு வந்ததே கடுப்பு..



“போடி பிராஸ்டியூட்..”



கணேஷ் அப்படி பேசியிருக்ககூடாதுண்ணே..கிளாராவுக்கு சரியான கோவம்..நேரா அவனிடம் வந்தாள்..



“நான் அவுத்துப் போடுறதைப் பார்த்து என்னை பிராஸ்டியூட் என்று சொல்கிறாயே..வீட்டில் உன் பொண்டாட்டி இருக்க என்னைப் பார்க்கிறதுக்கு கிளம்பி வந்துருக்கிறாயே..நீ பிராஸ்டியூட் இல்லையா..”



செருப்பைக் கழட்டி அடிச்ச மாதிரு இருந்துச்சுண்ணே..அவனுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை..நியாயம் பேசும்போது, அநியாயம் மௌனமாகத்தானே இருக்க வேண்டும்..சக்கையாய் காரில் ஏறில் உக்கார்ந்தோம்..யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை..ஏதோ உடம்புதான் காரில் பயணிப்பது போலவும், மனசு நசுக்கப்பட்டு சாகடிக்கப்பட்ட போலவும் ஒரு பிரமை..நேரா வீட்டிற்கு வந்தேன்..



என் மனைவி படுத்திருந்தாள்..பாவம்னே..எனக்கு சமையல் செய்து போடுறதை தவிர அவளுக்கென்று ஒரு உலகமும் இல்லைண்ணே..அவளுடைய கண்களை கவனித்தேன்..நாளெல்லாம் வீட்டு வேலை செய்து களைத்து தூங்கியிருந்தன..”என் புருசன் இருக்கான் எனக்காக..என் வாழ்நாள் முழுக்க கூட இருப்பான்”..என்ற நம்பிக்கையில் நிம்மதியான தூக்கம்..இன்னும் நல்லா ஞாபகம் இருக்குண்ணே..மதுரையில கல்யாணம் பண்ணி அடுத்த நாள் அமெரிக்கா கிளம்புறோம்..பல வருடங்களாய் பார்த்து பார்த்து செய்த அப்பா அம்மாவை விட்டுட்டு ஒரு நிமிசத்துல என்னோட கிளம்பி என்னை நம்பி வந்தாண்ணே..என்னை கல்யாணத்துக்கு முன்னாடி யாருண்ணே அவளுக்கு தெரியாதுண்ணே..எனக்காகத்தானே ஒவ்வொரு நிமிசமும் வாழுறா..நான் அழுதா அவ அழுவாண்ணே..நான் சிரிச்சா அவ சிரிப்பாண்ணே..அவளுக்குன்னு ஒரு ஆசை கூட இல்லைண்ணே..இப்படிப் பட்ட தங்கத்தை விட்டு பொய் சொல்லிட்டு போனேனே..என்ன மனுசன்னே நான்..



“சாரிங்க..நீங்க வர்ற வரைக்கும் முழுச்சுருக்கனும்தான் நினைச்சேன்..அலுப்புல தூக்கம் வந்திருச்சு..டயர்டா இருக்கா..காபி போட்டு தரட்டா..”



சே..இதுக்கு மேல என்னால அங்க இருக்க முடியலண்ணே..எழுந்து குளியலறைக்கு வந்து கண்ணாடி முன்னால் என் முகத்தைப் பார்த்தேன்..முதல் முறையா என்மேல எனக்கே வெறுப்பு வந்துச்சுண்ணே..மனுசனா நீ..”…..தூ……”



கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்து துப்பினேன்..நான் துப்பிய எச்சில் கூட கண்ணாடியில் என் முகத்தில் நிற்க கோவப்பட்டு கீழே வழிந்தது.. பொண்டாட்டிக்கு துரோகம் நினைக்க கூடாதுண்ணே..போஜனம் மட்டுமில்ல, நரகத்தில் கூட இடம் கிடைக்காதுண்ணே...

நன்றி..- வெளிச்சம். 

Thursday, November 25, 2010

ஆ. ராசா - நீரா ராடியா உரையாடல்



நீரா: ஹலோ?



ராசா: ராசா பேசுகிறேன்.



நீரா: ஹாய்! இப்போதுதான் பர்கா தத்திடமிருந்து எனக்கு செய்தி வந்தது.



ராசா: ஆ?



நீரா: பர்கா தத்



ராசா: அவர் என்ன சொல்கிறார்?



நீரா: இந்த விஷயம் குறித்து.... அவர் பிரதமரின் அலுவலகத்தோடு இன்றிரவு தொடர்பு கொண்டிருந்ததாக.... அவர் சொல்கிறார். சோனியா காந்தி அங்கு சென்றதாக அவர்தான் என்னிடம் கூறினார். அவருக்கு (மன்மோகன் சிங்) உங்களிடம் பிரச்னை இல்லை; ஆனால் டி.ஆர். பாலு என்றால் பிரச்னை உள்ளது என்று அவர்தான் (பர்கா தத்) சொன்னார்.



ராசா: ... ஆனால் தலைவருடன் இதுபற்றி விவாதிக்க வேண்டும்.



நீரா: ஆம், ஆம்... அவர் தலைவருடன் விவாதிக்க வேண்டும். அவர்தான் சொல்ல வேண்டும்.



ராசா: காலையில் இதுபற்றி விவாதிக்கப்படும்... ஏன் காங்கிரஸ் அநாவசியமாக.... ( ஒலிப்பதிவில் தெளிவில்லை). கூட்டணியில் குழப்பம் வருகிறது.



நீரா: இல்லை, கேள்வி இப்போது அழகிரி பற்றியல்லவா?



ராசா: ஆ?



நீரா: அழகிரி போன்ற சீனியர் தலைவர் இருக்கும் போது மாறனுக்கு ஏன் அமைச்சர் பதவி என்று அவருடைய ஆதரவாளர்கள் கேட்கிறார்கள்.



ராசா: அது வேறு விஷயம். ஆனால் இந்த விஷயங்களை எல்லாம் ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும்.



நீரா: இதுதான் சரி. அவரை (பர்கா தத்) காங்கிரஸிடம்...



ராசா: நேரே தலைவரைத் தனியாகப் பார்த்து இந்த விஷயங்களை வெளிப்படுத்த வேண்டும்.



நீரா: தனியாகவா?



ராசா: தனியாக, யாராவது தகவலைக் கொண்டு செல்ல வேண்டும். பாலுவுடன் எங்களுக்குப் பிரச்னை இருக்கிறது என்று ஒரு ரகசியக் கடிதமாவது கொண்டு செல்ல வேண்டும்.



நீரா: காங்கிரஸிடமிருந்து அல்லவா?



ராசா: ஆம்.



நீரா: ஓ.கே. நான் அவரிடம் (பர்கா) சொல்கிறேன். அவர் இப்போது அகமது படேலிடம் பேசிக் கொண்டிருக்கிறார். நான் படேலிடம் பேசுகிறேன்.



ராசா: அவர் போனிலாவது தொடர்பு கொள்ளட்டும். சார், இதுதான் பிரச்னை. எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. ராசாவுடன் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எங்கள் பிரச்னை பாலுவுடன்தான் என்று சொல்லுங்கள்...



22.5.2009



மதியம் 2 மணி 29 நிமிடம்



41 விநாடிகள்



நீரா: ராசா, எப்படி இருக்கிறீர்கள்?



ராசா: அவர் என்ன சொல்கிறார் - கனி என்ன சொல்கிறார்?



நீரா: அவருக்கு எல்லாம் ஓ.கே. என்கிறார். அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்கிறார்.



ராசா: ம்ம்...



நீரா: .... ஆனால் ஒரே விஷயம் அழகிரியுடன் யாராவது போய் பேச வேண்டும்...



நீங்கள்தான் இதைச் செய்ய வேண்டும்.



ராசா: ம்ம்.



நீரா: எப்படி மாறன் போய் எல்லாரிடமும் பேசி வைத்திருக்கிறார் என்று....



ராசா: ஆ.... நான் ஏற்கெனவே பேசிவிட்டேன், ஏற்கெனவே பேசிவிட்டன்...



நீரா: தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களிடம் அவர் என்ன சொல்லி வைத்திருக்கிறார் என்று நீங்கள் சொன்னீர்களா?



ராசா: எனக்குத் தெரியும். அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது என்ற விஷயத்தை காங்கிரஸ் தலைவர்கள் மனதில் விதைத்தவர்கள் யார்... எனக்குத் தெரியும்...



நீரா: இல்லை... அதுமட்டுமல்ல, அதுமட்டுமல்ல... பெரியவருக்கு ரொம்ப வயதாகிவிட்டது. அவருக்கு முதுமையால் தளர்ச்சி ஏற்பட்டு விட்டது. அவர் அதிக நாள் நீடித்திருக்கப் போவதில்லை. அதனால் நாளை மாறனும், ஸ்டாலினும்தான் கட்சியை நடத்துவார்கள் என்றும், காங்கிரஸ் தன்னுடன் தொடர்பு வைத்துக் கொள்வதில் மகிழ்ச்சியடையும் என்றும்... இறுதியில் மாறன்தான் ஸ்டாலினை ஆட்டுவிப்பார் என்றும் சொல்லியிருக்கிறார்.



ராசா: ம்ம்.



நீரா: இப்படித்தான் அவர் பேசியிருக்கிறார்.



ராசா: ஓஹோ! ஓஹோ!



நீரா: அழகிரியைக் கிரிமினல் என்றும்...



ராசா: ம்ம்.



நீரா: அவர் ஐந்தாம் வகுப்பு கூடத் தாண்டாதவர் என்றும்...



ராசா: ஓ...



நீரா: இப்படியெல்லாம்தான் அவர் சொல்லியிருக்கிறார்.



24.5.2009



காலை 11 மணி



5 நிமிடம் 11 விநாடிகள்



நீரா: மாறன் தன்னைப்பற்றி என்னெல்லாம் சொல்லியிருக்கிறார் என்று தெரியுமா?



ராசா: அழகிரிக்கு இதெல்லாம் தெரிந்ததுதான்.



நீரா: தெரியும் அல்லவா?



ராசா: அழகிரிக்குத் தெரியும். ஆனால் அவர் தந்தையுடன் பேச முடியாது. சரியான நேரத்தில் பேசுவார். ஒரே விஷயம், மாறன் எனக்கு எதிரான பிரசாரத்தை கிளப்பிவிடுவார்.



நீரா:ம்ம்..



ராசா: அதை கவனித்துக் கொள்ள வேண்டும்.



நீரா: நீங்கள் வேறுவிதமாக சண்டை போட வேண்டும்.



ராசா: ம்ம்.. பிரதமர் மீண்டும் வருகிறார். அப்படி அது இதுவென்று அவர் பத்திரிகைகளிடம் சொல்லுவார்.. ஸ்பெக்ட்ரம்...



நீரா: நோ நோ.. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். கவலைப்படாதீர்கள். உங்களிடமிருந்து நிறைய பெற வேண்டியிருக்கிறது. காங்கிரஸ் கூட அந்த அறிக்கைவிட நேர்ந்தது, அல்லவா?



நான் சுனில் மிட்டலிடம் பேசினேன்... சண்டோலியா உங்களிடம் சொன்னாரா?



ராசா: எனக்குத் தெரியாதே.



நீரா: அவரை விஷயத்தை விட்டுவிடுங்கள் என்று சொன்னேன். யாருக்கும் பிரயோஜனமில்லை.



ராசா: ம்ம்.. ராசாவுடன் இன்னும் ஐந்து வருடங்கள் நீங்கள் வேலை பார்த்தாக வேண்டுமென்று அவரிடம் சொல்லி வையுங்கள்... அதனால் எதுவும்...



நீரா: அவரிடம் சொன்னேன். அவரிடம் சொன்னேன். ஆனால் நீங்களும் சுனிலிடமிருந்து (சுனில் மிட்டல்) கொஞ்சம் தள்ளியே இருக்க வேண்டும். நீங்கள் நடுநிலையோடு இருக்க வேண்டும்.



ராசா: ஆ, இருக்கலாம்





- நன்றி: அவுட்லுக்





கனிமொழி - நீரா ராடியா உரையாடல்



22.5.2009 காலை 10 மணி 45 நிமிடம் 06 விநாடிகள்





கனிமொழி: ஹலோ



நீரா: கனி, நேற்று உங்கள் அப்பாவிடம் அவர்கள் தெரிவித்தார்கள் அல்லவா...



கனி: ம்ம்



நீரா: கட்டுமானத் துறையை பாலுவுக்கோ, மாறனுக்கோ கொடுப்பதில்லையென்று...



கனி: ஆம், ஆனால் யாரும்... யார் சொன்னது?



நீரா: இல்லையில்லை.. அவரிடம் மிகத் தெளிவாக சொல்லப்பட்டது...



கனி: இல்லை. அவரிடம் சொல்லப்படவில்லை.



அதுதான் பிரச்னை. யார் வந்து சொன்னது?



நீரா: வந்தவர்களா இல்லையா, சொன்னார்களா.. யாராவது அவருடன் பேசியிருக்க வேண்டும். பிரதமர் பேசியிருக்க வேண்டும்.



கனி: பிரதமர் பேசவில்லை. நான்தான் பிரதமருடன் பேசிக்கொண்டிருந்தேன். பிரதமர் சில வார்த்தைகள் பேசினார், அவ்வளவுதான். இதோ பாருங்கள், பிரதமர் போனில் அப்பாவுடன் பேசி விளங்க வைப்பது... உங்களுக்கே தெரியும்... பிரதமர் மெல்லப் பேசுபவர். அப்பாவுக்கு சரியாகக் காது கேட்காது.



நீரா: ம்ம்..



...சரி.. சரி.. உங்கள் அம்மாவை 12.30க்கு சந்திப்பேன் என்று நம்புகிறேன்.



கனி: ஓகே, நான் இங்கேதான் இருப்பேன்.



நீரா: ஓகே.



கனி: தயவுசெய்து இதையெல்லாம் அம்மாவிடம் சொல்லிவிடாதீர்கள். எல்லாவற்றையும் குழப்பி எதையாவது கண்டபடி பேசுவார்.



22.5.2009



மதியம் 2 மணி 46 நிமிடம்



15 விநாடிகள்



கனி: ஓகே.. இல்லை.. தயா பதவியேற்புக்குப் போகிறாரா இல்லையா?



நீரா: இல்லை, காங்கிரசிடமிருந்து அப்படித்தான் கேள்விப்படுகிறேன். அவர் பெயரைக் கொடுத்திருக்கிறார். அவர் பதவியேற்புக்கு போகிறார்.



கனி: எனக்குத் தெரியாது. அவர் என்னுடன் திரும்பிவிடுவதாக இருந்தது. எனவே... அவர் போய் சொல்லப்போகிறார். தலைவர் சொன்னதற்கு மாறாக, எனக்கு (ஒலிப்பதிவில் தெளிவில்லை) (0.01:32.4)



நீரா: ஆம், ஆனால் உங்கள் அப்பாவிடம் சொல்ல வேண்டும் அல்லவா?



கனி: அதுதான், அவர் (மாறன்) திரும்பிவந்து அப்பாவிடம் எதாவது கதை விடுவார். அகமது படேல் கூப்பிட்டதாகச் சொல்வார். "நீங்கள்தான் தி.மு.க.வின் முகம். நீங்கள்தான் அதன் பிரதிநிதி. நீங்கள் அங்கு இல்லையானால் நன்றாக இருக்காது'.



நீரா: நான் ராசாவைத்தான் போவதற்கு அதிகாரம் அளித்திருக்கிறேன் என்று மாறனிடம் சொன்னால் என்ன? நான் ராசாவைத்தான் போகச் சொல்லியிருக்கிறேன். - உன்னை - (மாறன்) அல்ல என்று உங்கள் அப்பா சொன்னால் என்ன?




கனி: இல்லை, அப்பா சொல்லமாட்டார். ஒருகாலும் இல்லை (ஒலிப்பதிவு தெளிவில்லை) (0:2:09.5) அப்பாவைக் கூப்பிட்டு சொல்ல வேண்டும். ஆனால் என்னால் முடியாது.



நீரா: உங்களுக்கு அலுத்துவிட்டது என்று எனக்குத் தெரியும். ஆனால் இது வெறும் ஆரம்பம்தான், அல்லவா?



கனி: ஆம், ஆம்.



நீரா: இதுதான் அரசியல், மை டியர்.



22.5.2009



இரவு 8 மணி 04 நிமிடம்



19 விநாடிகள்



நீரா: யாரும் எதுவும் சொல்லவில்லை. பிரதமர் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.



கனி: பிரதமர் அல்ல. அவர்கள் அப்பாவை சந்திக்க வரும்போது...



நீரா: ஒப்புக் கொள்கிறேன். ஆனால் கனி, ராசா, பாலுவிடம் தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லையென பிரதமர் இப்போதுதான் அறிவித்திருக்கிறார். அவர்கள் என் மதிப்புக்குரிய சகாக்கள். பிரதமர் இப்போதுதான் அவ்வாறு அறிவித்திருக்கிறார்.



கனி: அவர் அறிக்கை விடலாம். ஆனால் அப்பாவைப் பார்த்து பேசுபவர்கள் மாற்றி பேசக்கூடாது. ஏனென்றால், மக்கள் வெளியே சொல்வதும் அதன் உள்ளர்த்தமும் வெவ்வேறானவை, அரசியலில் இதெல்லாம் நமக்குத் தெரியும். ஒருவர் உங்கள் நண்பர் என்று சொல்லிக்கொண்டு வரலாம், பேச்சுவார்த்தை நடத்தலாம். அவர் வேண்டாம் என்று சொல்லலாம். இதெல்லாம் வெளித்தோற்றத்துக்கு-பலதும் செய்கிறோம்.. அதனால் யார் வருவதானாலும் அவர்கள் இவரைப் பற்றி எதிராகப் பேசக்கூடாது. ஏனென்றால் வேறொரு இடத்திலிருந்து நான் கேள்விப்பட்டேன், அவர்கள்...



நீரா: ஓ.கே., ஆமாம், நான் ராசாவுடன் பேசினேன்.



23.5.2009



காலை 9 மணி 59 நிமிடம்



2 விநாடிகள்



நீரா: நான் இதைச் செய்துவிட்டேன். ஆம். அவர் ஒருவர் மட்டும்தான் என்று எல்லாருக்கும் இன்று காலை செய்தி அனுப்பிவிட்டேன். மொத்த அழகிரி விஷயத்தையும் விளக்கி விட்டேன். அவர் ஒரு மக்கள் தலைவர் என்று அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். என்ன இருந்தாலும், எந்தக் கட்சியிலும் மக்களிடம் செல்வாக்குள்ள ஒரு தலைவருக்குத்தான் முக்கியத்துவம் தரப்படும்.



கனி: அது சரி.



நீரா: ஆம், இவர் (மாறன்) மக்கள் தலைவர் இல்லை. அதனால் அவருக்கு முக்கியத்துவம் கிடையாது. ஆனால் அவர் முயற்சி செய்து வருகிறார்.



கனி: மற்ற தேர்தல்கள் வருகின்றன. (ஒலிப்பதிவு தெளிவில்லை) (0:04:06:6) அவருடைய ஆதரவாளர்களைப் பகைத்துக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை.



நீரா: ஆம், சரிதான்.



கனி: ஆனால் ஒரு விஷயம், நீங்கள் அவர்களிடம் (காங்கிரஸ்) சொல்லலாம். லாலு பிரசாதுக்கு செய்தது போல, அவருக்கு (அழகிரி) கீழ் ஒரு நல்ல துணை அமைச்சரை நியமிக்கலாம். அவர் பதில் சொல்வார் (ஒலிப்பதிவு தெளிவில்லை) யாருடன் பேச வேண்டும், அவர் பதில் சொல்வார்.



நீரா: ரொம்ப சரி. ஆம், பார்க்கப்போனால் அவருடன் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அழகிரியுடன் அவர்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. காங்கிரஸýக்கு ஒரு பிரச்னையும் இல்லை.



கனி: இல்லையில்லை, அதுதான் பிரச்னை. இந்த ஆளுக்கு (மாறன்) தகவல் தொடர்பு வேண்டுமென்பதால் வதந்திகளைப் பரப்புகிறார். ஆனால் அவருக்கு தகவல் தொடர்பு தருவதில் தி.மு.க.வுக்கு கூட விருப்பமில்லை.





- நன்றி: அவுட் லுக்.





வீர் சங்வி (பத்திரிகையாளர்) - நீரா ராடியா உரையாடல் 20.6.2009 மதியம் 12 மணி 09நிமிடம் 59 விநாடிகள்





நீரா: டிரெட்மில்லிலிருந்து இப்போதுதான் இறங்கினேன். முகேஷ் அம்பானியை இந்த விஷயத்தில் பேச வைக்க வேண்டுமென்று முயற்சி செய்கிறேன்.



வீர்: அது சரி.



நீரா: ஆனால் விஷயம் இதுதான். நாம் முயற்சித்தாக வேண்டும். அவர் பேசினால் அதை அவர்கள் விழிப்புடன் கண்காணிப்பார்கள்.



வீர்: ஆம்.



நீரா: ஆனால் இது ஒரு போர். கடைசியில் பார்க்கப் போனால் இது யாருடைய போர் என்பது உங்களுக்குத் தெரியும். இதைப் பத்திரிகைகளுக்குக் கொண்டு போகிறோமா என்பது மற்றொன்று.



வீர்: சரி.



நீரா: அம்பானியால் பேட்டி எதுவும் தர முடியாது. காரணம் அவரிடம் அமர்சிங் பற்றிக் கேட்பார்கள். பலதும் இருக்கிறது. முகேஷ் அம்பானிக்கு இருக்கும் சாதகமான விஷயம் என்னவென்றால் அவரால் பேச முடியும், எதைப்பற்றியும் அவர் கூச்சப்படும் நிலையில் இல்லை. அனில் அம்பானியிடம் பல ஒளிவு மறைவுகள், அவரால் தெளிவுபடுத்த முடியாத விஷயங்கள். அமர்சிங் எனது நெருங்கிய நண்பர் என்று அனில் சொன்னால் அவர் கதை தீர்ந்தது. "எனக்கு அமர்சிங்குடன் எந்த உறவும் கிடையாது' என்றால் அமர்சிங் அவரைத் தீர்த்துவிடுவார். அதாவது நான் என்ன சொல்கிறேன் என்றால் பல சங்கடமான விஷயங்கள் இருக்கின்றன. அதனால் அனில் அம்பானி மீடியாவைத் தவிர்க்கத் தீர்மானித்துவிட்டார். முகேஷுக்கு இந்தப் பிரச்னை இல்லை. முகேஷ் நேரடியாகப் பேசலாம், பல விஷயங்களைச் சொல்லலாம். நீங்கள் ஒத்திகை பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு ஸ்கிரிப்டை முன் கூட்டியே தயார் செய்து கொள்ளுங்கள். அந்த ஸ்கிரிப்டை அப்படியே பின்பற்றுங்கள். அனில் இது எதையும் செய்ய முடியாது,இல்லையா?



நீரா: ஆம். ஆனால் நாம் இப்படிப் பண்ணலாம் அல்லவா?



வீர்: ஆம்?



நீரா: அப்படியா?



வீர்: ஆனால் முகேஷ் இதில் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும். அதை அவர் உணர வேண்டும். முழுதும் எழுதிப் பார்த்துவிடவேண்டும்.



நீரா: அதைத்தான் சொல்கிறேன். அவர் அதைத்தான் என்னிடம் கேட்கிறார் என்று நினைக்கிறேன்.



வீர்: ஆம், எல்லாவற்றையும் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.



நீரா: இதோ பார் நீரா, எதையும் தீர்மானித்துக் கொள்ளாமல் தோன்றியபடி பேசமுடியாது என்கிறார்.



வீர்: இல்லை, எல்லாவற்றையும் எழுதிப் பார்த்துக் கொள்ள வேண்டும். நான் அவருடன் முன்கூட்டியே வந்து ஒத்திகை பார்த்துக் கொள்ள வேண்டும்.



நீரா: ஆம், ஆம்.



வீர்: கேமரா முன் போவதற்குமுன் ஒத்திகை பார்க்க வேண்டும்.



நீரா: ஆம், ஆம்..



வீர்: எந்தவிதமான செய்தி உங்களுக்கு வேண்டும்? காரணம் "கவுன்டர் பாயிண்ட்' பகுதியில் இது வருவதால் இது மிகவும் அதிகபட்ச வாசகர்களை அடையும். ஆனால் இது யார் பக்கமும் சாய்வதாகவும் தெரியக்கூடாது. ஆனால் சொல்ல வேண்டிய எல்லா விஷயங்களையும் சொல்ல இது ஒரு சிறந்த வாய்ப்பு.



நீரா: ஆனால் அடிப்படையில் விஷயம் என்னவென்றால் உயர் நீதிமன்றத்தைப் பொறுத்தவரை நடந்து முடிந்த விஷயம் நாட்டின் நலனுக்கு எதிரானது, வேதனைக்குரியது.



வீர்: சரி.



நீரா: இதுதான் அடிப்படை செய்தியாக இருக்க வேண்டும்.



வீர்: சரி, அந்த செய்தி போதும். ஒரு ஏழை நாட்டின் தேசிய வளங்கள் சில பணக்காரர் மட்டுமே பலன் அடைவதற்காக வரைமுறையில்லாமல் வாரிக் கொடுக்கப்படக்கூடாது.



நீரா: சரி.



வீர்: எனவே, இதை தேர்தல் முடிவுகளோடு இணைத்துவிடுகிறேன். கிராமப்புற வேலை வாய்ப்புதிட்டம் உள்ளது, எல்லாத் தரப்பினரையும் உள்படுத்தும் வளர்ச்சியில் சோனியா உறுதியாக இருக்கிறார். இது தின்று கொழுத்த சிலருக்கு பலனளிக்கும்படி இருக்கக்கூடாது. நெருங்கியவர்களுக்கு மட்டும் கிடைப்பதாக இருக்கக்கூடாது. வரைமுறை இல்லாமல் இருக்கக்கூடாது. மன்மோகன் சிங்கின் ஐந்து வருட ஆட்சி பற்றிய செய்தி இப்படித்தான் இருக்க வேண்டும். நாட்டுக்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தும் விதமாக அரிய வளங்களை ஊழல் செய்து வரைமுறையில்லாமல் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால் இந்த நாடு உங்களை மன்னிக்காது.



நீரா: ஆம், ஆனால், வீர், அவர் இயற்கை எரிவாயு எடுக்கும் அனுமதியை அரசு வழங்கியிருக்கிறது. அவர் அதில் ஆயிரம் கோடி டாலர் செலவு செய்திருக்கிறார்.



வீர்: சரி.



நீரா: அனில் அம்பானி ஒரு பைசா செலவு செய்யாமல் அதன் பலனை அனுபவிக்கிறார்.



வீர்: அவற்றை நான் குறிப்பிட்டுவிடுகிறேன்...



நீரா: சரி.



வீர்: இவற்றை நான் குறிப்பிடுகிறேன். இந்தச் சூழல் மிகவும் ஊழல் மிகுந்ததாக இருப்பதாலும், யார் வேண்டுமானாலும் இதை வளைக்கலாம் என்பதாலும், எந்த விதக் கட்டணமும் இல்லாமல் இயற்கை வளங்களை கையகப்படுத்துகிறார்கள்...



23.5.2009



இரவு 10மணி 26நிமிடம்



42விநாடிகள்



நீரா: இதெல்லாம் அவருடைய (பிரதமர்) உந்துதலில் நடப்பதாக உணர்ந்தார்...



வீர்: மாறன்.



நீரா: ஆம்... (ஒலிப்பதிவு தெளிவில்லை 0.00:42)



ஆனால் விஷயம் என்னவென்றால் அவர் இன்னும் மாறனை எடுத்துக் கொள்ள நிர்பந்திக்கப்படுவதாகத் தெரிகிறது. எனவே...



வீர்: எங்கிருந்து இந்த உந்துதல் வருகிறது. இந்த நிர்பந்தம்?



நீரா: ஸ்டாலின், அவர் சகோதரி செல்வியிடமிருந்து...



வீர்: சரி.



நீரா: மாறன், ஸ்டாலினுடைய அம்மா தயாளு அம்மாளுக்கு
600 கோடி கொடுத்ததாக நம்புகிறேன்.



வீர்:
600 கோடி சரியா?



நீரா:
600 கோடி என்றுதான் எனக்குச் சொன்னார்கள்.



வீர்: அந்தவித நிர்பந்தங்களோடு யாரும் வாதம் பண்ணமுடியாது?



நீரா: இல்லையா?





- நன்றி: "ஓபன்' வார இதழ்.





பர்கா தத் (என்.டி.டி.வி.செய்திக் குழும ஆசிரியர்) - நீரா ராடியா உரையாடல் 22.5.2009 காலை 10 மணி 47நிமிடம் 33விநாடிகள்





பர்கா: ஆ, நீரா?



நீரா: பர்கா , திமுகவில் யாருடன் பேசுகிறார்கள் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.



பர்கா: ஆ, மாறனாகத்தான் இருக்க வேண்டும்.



நீரா: மாறனுக்கோ, டி.ஆர்.பாலுவுக்கோ அடித்தள கட்டமைப்புத்துறை அளிக்கப்படக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.



பர்கா: காரணம், அவர்களே அதை வைத்துக் கொள்ள வேண்டும்.



நீரா: இல்லை; முன்பு வேண்டியிருந்தது. பிரதமர் அத் துறை வேண்டாம் என்று சொன்னார். அதனால் தொழிலாளர் நலம், உரம், ரசாயனம், தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் தரலாம் என்றார். தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் ராசாவுக்கு. என்ன ஆயிற்று, இந்த விஷயம் கருணாநிதிக்கு தெரிவிக்கப்பட்டதா?



22.5.2009



காலை 9 மணி 48 நிமிடம் 51விநாடிகள்



நீரா: பாலுவிடம் பிரச்னை இருந்து வேறு யாருடனும் பிரச்னை இல்லையென்றால்- அதுதான் காங்கிரசின் சிக்கல். அவர்கள் கருணாநிதியுடன் பேச வேண்டும். கருணாநிதியுடன் அவர்களுக்கு நல்ல நேரடித்தொடர்பு இருக்கிறது.



பர்கா: ஆம்.



நீரா: பாலு, மாறன் முன்னிலையில் அவர்கள் பேச முடியாது.



பர்கா: ஆம்.



நீரா: அவரிடம் நேரடியாகச் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் நிறைய காங்கிரஸ் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நேராகப் போய் அவரிடம் பேச வேண்டும்-அழகிரியின் ஆதரவாளர்கள் சொல்வது என்னவென்றால் மாறனுக்கு கேபினட் பதவி தந்துவிட்டு அழகிரிக்கு துணை அமைச்சர் தருவதுதான் அவர்களுடைய மிகப்பெரிய பிரச்னை.



பர்கா: அது சரி. ஆனால் கருணா, டி.ஆர்.பாலுவைக் கழற்றிவிடுவாரா?



நீரா: இங்கே பாருங்கள், அவரிடம் பாலுதான் ஒரே பிரச்னை என்று சொன்னால் அவர் கழற்றிவிடுவார்.



பர்கா: ஆனால் யாருக்கு எந்த இலாகா என்பதில்தானே இப்போது சிக்கல்?



நீரா: இல்லை. அதுபற்றி எதுவும் அவர்கள் சொல்லவில்லை. இலாகாக்கள் பற்றி இன்னும் விவாதம் நடக்கவில்லை.



பர்கா: சாலைப் போக்குவரத்து, மின்சாரம், தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, ரயில்வே, சுகாதாரம் ஆகிய இலாகாக்களை தி.மு.க.கேட்பதாக காங்கிரஸ் சொல்கிறது.



நீரா: முதலிலேயே இந்தப் பட்டியல் போய்விட்டது.



பர்கா: இப்போது காங்கிரஸ் அளிக்க முன்வந்துள்ளது. தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, ரசாயனம், உரம், தொழிலாளர் நலம். இப்போது இந்த அளவில் உள்ளது. தி.மு.க.ஒப்புக்கொள்ளுமா?



நீரா: தி.மு.க. ஏற்காமல் போகலாம். இதை ஏற்றுக்கொண்டால் மாறனைக் கைவிட



வேண்டியிருக்கும். காரணம் மாறன் நிலக்கரி, சுரங்கத்துறை கேட்கிறார்.



பர்கா: மாறனிடம் அவர்கள் சொல்லிவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.



நீரா: ஆம், அவர்கள் செய்ய வேண்டியது கனியுடன் பேசி அவருடைய தந்தையுடன் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்ய வேண்டும். காரணம், பிரதமருடன் நடந்த உரையாடல் கூட மிகக்குறுகிய நேரமே நடந்தது-இரண்டு நிமிடங்கள்-கனிமொழிதான் மொழிபெயர்த்தார்.



பர்கா: சரி.



... அவர்கள் ரேஸ்கோர்ஸ் சாலையை (பிரதமர் இல்லம் உள்ள தெரு) விட்டு வந்தவுடன் நான் ஏற்பாடு செய்கிறேன்.



நீரா: அவர் (கனிமொழி) என்ன சொல்கிறார் என்றால் குலாம் நபி ஆசாத் போன்ற மூத்த தலைவர் - அவருக்குப் பேச அதிகாரம் இருக்கும்...



பர்கா: சரி, பிரச்னை ஒன்றும் இல்லை. அது பிரச்னையே இல்லை. நான் ஆசாதிடம் பேசுகிறேன். ரேஸ்கோர்ஸ் சாலையை விட்டதும் நான் ஆசாதுடன் பேசுகிறேன்.



நீரா: ஆனால் ஒன்று மட்டும் உங்களிடம் சொல்கிறேன். கருணாநிதி ரொம்பக் குழம்பிப் போயிருக்கிறார்.



பர்கா: கனியும் கூட இருந்து கலந்துகொண்டால் என்ன?



நீரா: அப்பா அவரைத் திரும்ப வரச் சொல்லிவிட்டார் என்பதால் அவரால் கலந்துகொள்ள முடியாது. அவர் சொல்வதைத்தான் இவர் கேட்க வேண்டும். குலாமைக் கூப்பிடுங்கள்.





- நன்றி: "ஓபன்' வார இதழ்