Pages

Monday, December 27, 2010

இந்த பதிவு பிடித்திருந்தால் சிரியுங்கள்...

அந்த கல்யாணம் திடீரென்றுதான் நடைபெற்றது...


எனக்கு தெரிந்த ஒருவரின் திருமணம்தான்....எனக்கு ஆச்சரியம்...திடீர் கல்யாணம் செய்வதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்...விசாரித்ததில் தான் தெரிந்தது அவனது தாயார் நோய் வாய்ப்ட்டிருக்கிறார்..மரணம் நெருங்கிவிட்டது என்று அஞ்சுகிறார்..எனவே தன மரணத்திற்கு முன்பு தன மகனை ஒரு சொந்தத்தில் மணமுடித்து வைக்க ஆசைப் படுகிறார் என்றும் தெரிந்தது..

எனவே அவசர அவசரமாக அவர் தாயார் விரும்பியபடியே திருமணம் முடிந்ததது..

இது முடிந்து ஏறக்குறைய ஒருமாதம் இருக்கும்.

இது பற்றிய பேச்சு நண்பர்களிடேயே வந்தபோது ஒருவன் சொன்னான்.."ஆமாண்டா..அவங்க அம்மா இறந்து போறத்துக்கு முன்னாடியே அவனுக்கு மேரேஜ் பண்ணிபாக்கனும்னு ஆசைப்பட்டாங்க. அதுதான் அவசர அவசரமா கல்யாணம் பண்ணிட்டாங்க..!"

அடுத்தது இன்னொருத்தன் கேட்டத்துதான் காமெடியா டிராஜடியா என்று தெரிய வில்லை...

"அதுதான் மேரேஜ் முடிஞ்சுடுச்சே ..அவங்க அம்மா ஏன் இன்னும் இறந்து போகலே? "


Wednesday, December 22, 2010

பெற்றோர் கவனத்திற்கு...

ஒரு வயதுக்கு மேல் குழந்தைகளின் உணவு முறையில் நிறைய மாற்றங்கள் தேவைப்படும். இதனால் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும். சிலர் குழந்தைகள் சாப்பிடுவதில்லை என்று கவலைப்படுவார்கள். முதலில் அதற்கு என்ன காரணம் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.



பொதுவாக குழந்தைகள் அழுது கொண்டிருக்கும் போதோ, கோபத்தில் இருக்கும் போதோ அவர்களுக்கு உணவு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பெரியவர்களாகிய நாமே கோபத்தில் உள்ளபோது உண்ண மாட்டோம். குழந்தைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. குழந்தை சாப்பிடவில்லையென்றால் உடனே குழந்தையை சில தாய்மார்கள் மிரட்டுவார்கள். சிலர் பயம் காட்டுவார்கள், சிலர் அடித்து சாப்பாடு ஊட்டுவார்கள்.


குழந்தைகளை மிரட்டும்போது அவர்கள் மன நெருக்கடியும், டென்சனையும் அனுபவிக்க நேரிடும். இதனால் குழந்தைகள் உணவை அறவே வெறுப்பார்கள். அந்த நேரத்தில் எந்த உணவை வாயில் வைத்தாலும் துப்பி விடுவார்கள். அதுபோல் குழந்தை களுக்கு அவசர அவசரமாக உணவு ஊட்டக்கூடாது.


தாயின் அவசரத்திற்கு தகுந்தபடி குழந்தையால் மின்னல் வேகத்தில் சாப்பிட முடியாது. சிறிதளவு உணவு கொடுத்தாலும், பொறுமை யாகவும், நிதானமாகவும் ஊட்ட வேண்டும். முன்பெல்லாம் குழந்தைகளுக்கு உணவு ஊட்டும்போது பாட்டி கதைகள் கூறுவார்கள். (அதற்காக பொய் சொல்லக்கூடாது) குழந்தைகளும், ஓடி, ஆடி விளையாடி உணவருந்தும். ஆனால் இன்று பாட்டியும் இல்லை, கதை சொல்ல யாரும் இல்லை.


தொலைக்காட்சியும், சி.டியும், வீடியோ கேம் தான் பாட்டியாக உள்ளது. பொருள் தேடுவது அவசியம்தான். ஆனால் குழந்தை வளர்ப்பு அதைவிட அவசியம். குழந்தைகளை இயந்திரமாக நினைக்காமல் அவர்களை ஜீவன்களாக நினைத்து உணவு முதல் எல்லாவற்றிலும் அக்கறை எடுத்துக்கொண்டால் தான் எதிர்கால குழந்தை ஆரோக்கிய மானதாகவும், அற்புத குணம் கொண்டதாகவும் வளரும்.


ஒரு வயது ஆரம்பம் முதல் ஒருநாளைக்கு 4 முதல் 5 முறை வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். 1 வயது முதல் குழந்தைகளுக்கு திட உணவுகளைக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பத்தில் அதன் சுவையை அறியாமல் குழந்தை சாப்பிடாமல் துப்பும் அல்லது வாந்தி எடுக்கும். இதனால் குழந்தைக்கு பிடிக்கவில்லை என்று எண்ணி பழக்கப்படுத்தாமல் விட்டுவிடக்கூடாது.

பொறுமையோடு மீண்டும் மீண்டும் கொடுத்துப் பார்க்கவேண்டும். அப்போதுதான் அதன் சுவை குழந்தைக்கு பிடித்து விருப்பத்தோடு சாப்பிட ஆரம்பிக்கும். உணவை சிறிது சிறிதாக கொடுக்க வேண்டும். இந்த திடமான உணவுகள் குழந்தைக்கு செரிமானம் ஆக 3 மணி நேரமாவது ஆகும். எனவே அடிக்கடி உணவைத் திணிக்கக் கூடாது. ஆவியில் வேகவைத்த மாவு உணவுகள், அதாவது இட்லி, இடியாப்பம், வேகவைத்து மசித்த உருளைக் கிழங்கு, நன்கு வேகவைத்த முட்டை, ஆவியில் வேகவைத்த நேந்திரம் பழம் போன்றவற்றைக் கொடுக்கலாம்.


மிளகு கலந்து குழைய வேகவைக்கப்பட்ட வெண்பொங்கல், குழைத்த சாதத்துடன், மோர், இரசம், பருப்பு, கடைந்த கீரை இவற்றில் ஏதாவது ஒன்று சேர்த்து கொடுக்க வேண்டும். வேகவைத்து மசித்த காய்கறிகள், வேகவைத்த காரட், வேகவைத்த ஆப்பிள் போன்றவற்றை கொடுக்கலாம். இரவில் காய்ச்சிய பால் கொடுக்க வேண்டும். ஒன்றரை வயதுக்கு மேல் நன்கு வேகவைத்த ஆட்டிறைச்சி, ஈரல், மீன் போன்ற மாமிச உணவுகளை சிறிதளவு கொடுக்கலாம்.


சப்பாத்தி, ரொட்டி, பிரட் போன்றவற்றை குறைந்த அளவு கொடுக்கலாம். குழந்தைக்கு பல் முளைத்து மென்று சாப்பிடும் அளவு வந்தவுடன் வேகவைத்த பருப்புகள், தானிய வகைகளைக் கொடுக்க வேண்டும். காரட், காலிபிளவர், பசலை கீரை, வேகவைத்த முட்டை தொடர்ந்து கொடுக்க வேண்டும். பழத்துண்டுகள் தோல் நீக்கி கொடுக்க வேண்டும். பப்பாளி, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை போன்றவற்றையும் கொடுக்கலாம். சாப்பிட மறுக்கிறார்கள் என்பதற்காக செயற்கையாக சுவைகூட்டிய துரித உணவுகளை தொடர்ந்து கொடுத்து வந்தால் குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுத்த பெற்றோர்களாக நாம் ஆகிவிடுவோம் என்பதையும் கவனத்தில் கொள்வோம்.

நன்றி :  "வெளிச்சம்"



Tuesday, December 21, 2010

பிரபல நடிகை சுற்றிவளைப்பு...!!!

இவர் யார் தெரிகிறதா?




இவர்தான் முஹம்மத் ஹனீப்..இந்தியரான  இவர் ஆஸ்திரேலியாவில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். 2007 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அரசாங்கத்தால் தீவிரவாதி என்று தவறுதலாகக் குற்றம் சுமத்தப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து இந்தியாவுக்கே திருப்பி அனுப்பபட்டார்..

இதோ இன்று எல்லாமே சரியாகி விட்டது..மீண்டும் முஹம்மது ஹனீப் ஆஸ்திரேலியா சென்றுவிட்டார்...ஏறக்குறைய ஒரு மில்லியன் டாலர் நஷ்ட ஈடு தருவதாக ஆஸ்திரேலியா அரசு ஒப்புக் கொண்டதை தொடர்ந்து இன்று ஆஸ்திரேலியாவிற்கு வேலைக்காக சென்றுவிட்டார்..

இது முடிந்து போன விஷயம்..

அடுத்த விசயத்துக்கு வருவோம்...



மாலைமலர் என்ற பத்திரிகையில் வந்த ஒரு செய்தி.


"விக்கி லீக் நிறுவனர் அசாங்கேயின் காதல் லீலை: 16 வயது பெண்ணை கர்ப்பம் ஆக்கினார்"

உலக நாடுகளுக்கெல்லாம் ரவுடியாக இருந்து, அணு ஆயுதங்களை விற்பனை செய்வதற்காக ஒவ்வொரு நாட்டிலும் அத்துமீறி அராஜகம் பண்ணிக்கிட்டு இருந்த அமெரிக்காவின் பொறுக்கித்தனங்களையும், தூதர்கள் என்ற பெயரில் ஒவ்வுறு நாட்டிலும் உளவு வேலை செய்து வந்ததையும் ஆதாரத்தோடு வெளியிட்ட அசாங்கேயை உலகமே ஆச்சரியாமாக பார்க்கும்போது, இங்குள்ள ஆபாசப் பத்திரிகைகளுக்கு கிடைத்த தலைப்பை பார்த்தீர்களா?



அமெரிக்காவின் அராஜகங்களையும் அத்துமீறல்களையும் ஒரு செய்தியாகக் கருதாமல், அசாங்கேயைப் பற்றிய செய்தி உண்மையா, இல்லை அமெரிக்க அரசாங்கத்தின் பழிவாங்கும் நடவடிக்கையா என்று கூட ஆராயாமல் அவனது கைக்கூலி போலவே செய்தி வெளியிடும் இந்த ஆபாச பத்திரிக்கைகளால் நாட்டுக்கு என்னதான் பிரயோஜனம்?

நாட்டில் விலைவாசி, ஊழல், ரவுடியிசம், , விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம், ஆர் எஸ் எஸ் மதவெறி பயங்கரவாதம் என்று எவ்வளவோ பிரச்சினைகள்  இருக்க..இப்படி அடுத்தவன் படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் கேவலத்தை இந்த பத்திர்க்கைகள் செய்கின்றன..

 

ஓகே இப்போ முக்கியமான தலைப்புக்கு வருவோம்...(???)



"பிரபல நடிகை முற்றுகை..!!! தர்கா முன் கார் சேதம்..! " இது நான் இன்று இதே மாலை மலர் பேப்பரில் முக்கிய செய்தியாகப் பார்த்தேன்...

சும்மா தலைப்புக்காகத்தான் இதையும் வைத்தேன்..(சீரியஸா தலைப்பு வெச்சா யாரும் பாக்குறது இல்லை..நடிகைன்னா நிச்சயமா வருவீங்கதானே) மற்றபடி இந்த நடிகைக்கும் அந்த தலைப்புக்கும் இந்த பதிவுக்கும் துளியும் சம்மந்தம் இல்லை..



 

Monday, December 20, 2010

நாளிதழில் இடம்பெற்ற பயனுள்ள செய்திகள்.

1. கர்ப்பமடைந்த பெண்கள் மொபைல்போன் பயன்படுத்தினால், அவர்களின் குழந்தைகள் முரட்டுத்தனம் கொண்டவர்களாக மாறும் வாய்ப்பு உள்ளது' என, அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.மொபைல்போனுக்கும், குழந்தைகள் நலனுக்கும் உள்ள தொடர்பு பற்றி அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.


இதுகுறித்து ஆய்வுக்குழுத் தலைவர் லீகா கெய்பட்ஸ் கூறியதாவது:மொபைல்போன் மற்றும் குழந்தைகள் நலன் பற்றிய இந்த ஆய்வில், 7 வயதான 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களும், அவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர். அதேபோல், 1996 முதல் 2002 வரை கர்ப்பமடைந்த பெண்கள் பற்றியும் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.ஒரு லட்சம் பேரிடையே நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், கர்ப்பமடைந்த பெண்கள் தொடர்ச்சியாக மொபைல்போன் பயன்படுத்தினால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் என தெரிய வந்துள்ளது.


ஆய்வில் பங்குபெற்ற 3 சதவீத குழந்தைகள் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்; சில சமயம் முரடர்கள் போல் நடந்து கொண்டனர்; உடல் பருமன், எளிதில் உணர்ச்சி வசப்படுதல் போன்ற பாதிப்புகளையும் கொண்டிருந்தனர்.இதற்கு சிறுவர்களின் தாய் கர்ப்பமாக இருந்த காலத்தில், தொடர்ச்சியாக மொபைல்போன் பயன்படுத்தியது தான் காரணம் என தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெற்றோரும் இதை ஒப்புக் கொண்டுள்ளனர். எனினும், இதுகுறித்து தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது.இவ்வாறு லீகா கூறினார்.

-------------------------------------------------------------------------------------------------------------
2. திருமணத்திற்கு பின், ஆண்களின் குணநலன்களில் பெறும் மாறுதல் ஏற்படுவதாக, அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.திருமணத்திற்கு பின், ஆண்களின் குணநலன்களில் ஏற்படும் மாற்றம் குறித்து, மெக்சிகன் மாகாண பல்கலைக்கழகத்தை சேர்ந்த அலெக்சாண்டிரா பட் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். 17 முதல் 29 வயது வரையிலான திருமணமான மற்றும் திருமணமாகாத, தலா 289 ஆண்களிடம் 12 ஆண்டுகளாக இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதில், 50 சதவீதத்திற்கும் அதிகமான ஆண்களின் குணநலன்களில் மாற்றம் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது.


திருமணத்திற்கு முன், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ஆண்கள், திருமணத்திற்கு பின், அந்த செயல்களை அறவே தவிர்க்கின்றனர். அவர்களிடம் உள்ள முரட்டுத்தனம் மாறி, மென்மையானவர்களாகவும், இனிமையாக பழக கூடியவர்களாகவும் மாறுகின்றனர். பொய் சொல்வதை தவிர்க்கின்றனர்.பிறர் தவறு செய்யும் போது, அதை மன்னிக்கும் பக்குவமும் அவர்களிடம் வந்து விடுகிறது. இந்த ஆய்வில் பங்கேற்ற திருமணமாகாத 29 வயது ஆண்களில் 1.3 சதவீதம் பேர் முரட்டுத்தனமாகவும், சமூக விரோத போக்கை கடைபிடிப்பவர்களாகவும் இருந்தனர். அதே வயதில் திருமணமான 0.8 சதவீதம் பேர் மட்டுமே இந்த குணங்களை கொண்டிருந்தனர்.பரம்பரை மற்றும் வளர்ப்பு சூழல் காரணமாகவும் குழந்தையிலிருந்தே முரட்டுதனமான குணங்களை கொண்டிருந்தவர்களும் திருமணத்திற்கு பிறகு மாறுகின்றனர் என்றும் இந்த ஆய்வில் தெரிய வந்தது. இதுகுறித்து, இந்த ஆய்வில் பங்கேற்காத அல்பேனி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ரெயான் கிங் கூறியதாவது:திருமணத்திற்கு பின், ஆண்கள் மாறுகின்றனர் என்பது உண்மை தான் என்றாலும், அதற்கான காரணம் தான் புரியவில்லை. திருமணத்திற்கு முன்பு ஆண்கள் தங்கள் நண்பர்களுடன் இணைந்து மது அருந்துவது, சிகரெட் புகைப்பது உள்ளிட்ட பழக்கங்களை கற்றுக் கொள்கின்றனர். முரட்டுத்தனமான மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதற்கும் இதுவே காரணம். அவர்கள் திருமணத்திற்குப் பின்னர் இந்த தொடர்புகளை அவர்கள் துண்டித்து கொள்கின்றனர். எனவே, அவர்களின் குண மாற்றத்திற்கு இதுகூட காரணமாக இருக்கலாம்.இவ்வாறு ரெயான் கிங் தெரிவித்தார்.

--------------------------------------------------------------------------------------------------


3, மாற்றுத் திறனாளியான மேடைப் பேச்சாளர் பெனோசெபின்: நான் பார்வை குறைபாடுடைய மாற்றுத் திறனாளி என்பதால், எனக்கான உலகம் எப்போதும் கறுப்பாகவே உள்ளது. பெற்றோர், அக்கா, மாமா, ஆசிரியர்கள், நண்பர்கள் இல்லையெனில், நான் வெளிச்சத்திற்கு வந்திருக்க முடியாது.லிட்டில் பிளவர் பள்ளியில் படித்தேன். பத்தாம் வகுப்பில், பார்வையற்றோர் பிரிவில் மாநிலத்திலேயே முதல் இடம் பிடித்தேன். ஆனால், அதற்கான அங்கீகாரம் எனக்குக் கிடைக்கவில்லை. மற்ற மாணவர்கள் படிக்கும் அதே பாடத்திட்டங்கள் தான் எங்களுக்கும். அவற்றைப் படித்து, மாநிலத்திலேயே முதல் இடம் பிடிப்பது என்பது பெரிய விஷயம்.இது குறித்த கோரிக்கையை அரசுக்கு முன்வைத்தேன்; நான் அங்கீகரிக்கப்பட்டேன். பின், அமெரிக்காவில் நடந்த இளம் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றேன். அந்த மாநாட்டில் பங்கேற்ற ஒரே மாற்றுத் திறனாளி நான் தான். பார்வையற்ற முதல் இளம் தலைவராகவும், என்னைத் தேர்ந்தெடுத்தனர்.அங்கு, சுற்றுச் சூழல், கல்வி, இந்தியக் கலாசாரம் ஆகியவற்றை குறித்த என் பேச்சிற்கு, நல்ல வரவேற்பும், மரியாதையும் கிடைத்தது. அது என்னை இன்னும் உத்வேகம் கொள்ள வைத்தது. கல்லூரியில் சேர்ந்த பின், தமிழ் மீதும், ஆங்கிலம் மீதும் ஆர்வம் ஏற்பட்டது. அதுவரை பொழுது போக்கிற்காக படித்தாலும், இலக்கிய வகுப்பில் சேர்ந்தபின், இரண்டு மொழி படைப்புகளையும் பொருத்திப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இரண்டிலும் நல்ல ஆளுமை பெற்றேன்.இதுவரை, 120 மேடைகளுக்கு மேல் உரை நிகழ்த்தி இருக்கிறேன். மாநில அளவில் தமிழ் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கிறேன். ஆங்கிலப் பேச்சுப் போட்டிகள் தேசிய அளவில் அவ்வளவாக நடத்தப்படுவது இல்லை என்றாலும், காத்திருக்கிறேன். நிறைய சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதால், தற்போது ஐ.ஏ.எஸ்., தேர்விற்கு தயாராகி வருகிறேன்.

------------------------------------------------------------------------------------------------------

4. ரயில்வே கண்காணிப்பு துறை வேண்டுகோள்: "கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி, ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகம் உள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்யாதவர்கள் அனுமதி இல்லாத ஏஜென்டுகளிடமும், இடைத்தரகர்களிடமும் டிக்கெட் வாங்கி பயணம் செய்தால், கண்காணிப்பு சோதனையில் மாட்டிக் கொண்டு, அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். அனுமதி இல்லாத ஏஜென்டுகள் மற்றும் இடைத்தரகர்களிடம் டிக்கெட் வாங்கி, ரயிலில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்' என்று தெரிவிக்கப்படுகிறது.

---------------------------------------------------------------------------------------------------------

5. தமிழக பள்ளிகளில் நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகளில் சினிமா "குத்து டான்ஸ்'களுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. மாணவர்களிடம் மாறுதலை ஏற்படுத்தும் இதற்கு, பள்ளிக்கல்வித்துறை தடை விதிக்க வேண்டும். தற்போதைய சினிமா பாடல்களில் இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பாடல்களே பள்ளிகளில் நடக்கும் கலைநிகழ்ச்சிகளில் அதிகம் இடம்பெறுகின்றன. பிஞ்சுகளிடம் நஞ்சை விதைக்கும் வகையில் உள்ள சினிமா பாடல்களுக்கு, பள்ளி மாணவர்களை நடனமாட வைக்கும் போக்கிற்கு தடை விதிக்க வேண்டும். அறிவுக்கு வழி வகுக்கும் நிகழ்ச்சிகளை பயன்படுத்த வேண்டும். இது தவிர பல திறமைகள் வெளிப்படுத்துதல் போன்றவற்றை வளர்க்க முன் வர வேண்டும்.


"இலவச" மோசடிகள்.. !!!

உலகில் எங்கேயும் இல்லாமால் இந்தியாவில்தான் அதிலும் குறிப்பாக தமிழகத்தில்தான் இலவசத்துக்கு அலையும் மக்கள் இருக்கிறார்கள் என்று உறுதியாக சொல்லலாம்..இங்கேதான் எல்லாவிதமான ஏமாற்று வேலைகளையும் செய்துவிட்டு, இலவசங்களைக் கொடுத்து ஆட்சியை பிடிக்க முடிகிறது..

இலவச டிவி, இலவச அடுப்பு, இலவச ரேசன் பொருட்கள், மற்றும் இலவச நிலம் என்று நமது பணத்தை நமக்கே கொடுத்து நம்மை ஏமாற்றி வரும் ஆட்சியாளர்கள் ஒரு புறம் என்றால்...

தமிழகத்தின் ஆபாசப் பத்திரிக்கைகளும் அதையேதான் செய்து வருகின்றன..

தினத்தந்தி வாங்கினால் காலண்டர் இலவசம் என்கிறான்,,,தினகரன் வாங்கினால் காலண்டர் இலவசம் என்கிறான்..சரிதான் என்று பேப்பர் வாங்கினால் மூன்று ருபாய்க்கு விற்கும் தினத்தந்தி அன்று மட்டும் ஏழு ரூபாயாம்,..இரண்டு ரூபாய்க்கு விற்கும் தினகரன் ஏழு ரூபாயாம்..ஏன் இந்த விலையேற்றம் என்றால் இலவசமாக காலண்டர் கொடுக்கிறானாம்..அப்போ என்ன மயிருக்கு இலவசம் என்று அறிவிக்கிறாய்..இல்லே உன் கிட்டே எவனாவது காலண்டர் கொடுடான்னு கேட்டாங்களா...

இப்படிதான் சினிமாக்காரிகளின் ஆபாசப் படங்களைப் போட்டு பிழைப்பு நடத்தும் ஆனந்த விகடன் குமுதம் போன்ற ஆபாச பத்தரிக்கைகள் தீபாவளி, பொங்கல் போன்ற சமயங்களில் அதிக பக்கம் அதே விலை என்று ஒரு ஏமாற்று விளம்பரம் கொடுத்து வியாபாரம் செய்வான்..


என்னடா அதிக பக்கங்களில் ஏதாவது நல்ல செய்தி இருக்குதா என்று பாரத்தால், அது அத்தனையும் விளம்பரம்தான்..இன்னும் சொல்லப்போனால்
மற்ற நாட்களில் வரும் செய்திகளை விட மிகவும் குறைவான பக்கங்களில்தான் செய்திகளும் இருக்கும்..மற்ற பக்கங்களில்
செய்திகள் எல்லாமே எவளாவது சினிமாக்காரி தொறந்து போட்டுக்கிட்டு, நான் சாதிச்சுட்டேன் (இது சாதனையா? ) என்று பேட்டி (பெட்டி?) கொடுப்பாள்...இதே மாதிரி நீங்களும் நாரிப்போங்க என்று இவன் சொல்லாமல் சொல்லி அவளுக்கு விளம்பரம் கொடுப்பான்..

இவைகள்தான் இன்றைய பத்திரிக்கைகளின் மக்கள் சேவை..


இலவசம் என்பதே ஒரு ஒட்டுமொத்தமான ஏமாற்று வேலைதான்..

Saturday, December 18, 2010

போலீஸ்காரராய்ப் பார்த்து திருந்தாவிட்டால்..

கு‌ற்ற‌ச் செய‌ல்க‌ளி‌ல் ஈடுபடுபவ‌ர்களை ‌திரு‌த்‌தி ந‌ல்வ‌ழி‌க்கு கொ‌ண்டு வருவதுதா‌ன் கா‌வ‌ல் துறை‌யின‌ரி‌ன் வேலை... ஆனா‌‌ல் அ‌ந்த‌க் காவல் துறையே இ‌ப்படி நட‌ந்து கொ‌ண்டா‌ல் எ‌‌ப்படி?




சே‌த்து‌‌ப்ப‌‌ட்டு ‌ஹாரிங்டன் ரோடு சி‌க்ன‌ல் அருகே ‌நி‌ன்று கொ‌ண்டிரு‌ந்தபோது ‌த‌ண்‌ணீ‌ர் கே‌ன்களை ஏ‌ற்‌றி‌க் கொ‌ண்டு ஒரு ‌மி‌னி டெ‌ம்போ வ‌ந்தது.அ‌ப்போது ஓ‌ய்வறை‌யி‌ல் ஓ‌ய்வு எ‌‌டு‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த போ‌க்குவர‌த்து காவல‌ர் ஒருவ‌ர்,அ‌ந்த ‌மி‌னி டெ‌ம்போவை பா‌ர்‌த்து‌வி‌ட்டா‌ர். ஓடோடிச் செ‌ன்று அ‌ந்த வாக‌ன‌த்தை ம‌றி‌த்து,மிர‌ட்டு‌ம் தொ‌னி‌யி‌ல் ஒரு த‌‌ண்‌‌ணீ‌ர் கேனை கொடு‌த்து‌வி‌ட்டு செ‌ல் (இலவசமாக) எ‌ன்று சொ‌ன்னது‌ம், வ‌ண்டி‌யி‌ல் இரு‌ந்த வா‌லிப‌‌ர் ஒருவ‌ர் ஒரு த‌ண்‌ணீ‌ர் கேனை தனது தோ‌ளி‌ல் சும‌ந்தபடி அ‌ந்த ஓ‌ய்வறை‌யி‌ல் வை‌‌த்து ‌வி‌ட்டு செ‌ல்‌கிறா‌ர். இது  நே‌ரி‌ல் க‌ண்ட ஒரு    கா‌ட்‌சி.

இது ஒரு சாம்பிள்தான்! இ‌ப்படி செ‌ன்னை‌யி‌ல் எ‌த்தனையோ இட‌ங்க‌ளி‌ல் இத்தகைய விதவிதமான மிரட்டல் பறிப்புகள் நட‌ந்து கொ‌ண்டுதா‌ன் இரு‌க்‌கிறது. ‌சில நா‌ட்களு‌க்கு மு‌ன்பு ஒரு ‌நிறுவன‌த்‌தி‌ல் இரு‌ந்து எ‌ண்ணெ‌‌ய் உ‌ள்பட அ‌த்‌தியாவ‌சிய பொரு‌ட்களை ஏ‌ற்‌றி‌க் கொ‌ண்டு செ‌ன்றது ஒரு ‌மி‌னி டெ‌ம்போ. அ‌ந்த வாகன‌‌த்தை ‌நிறு‌த்‌திய போ‌க்குவர‌‌த்து காவ‌ல‌ர் ஒருவ‌ர் 2 ‌லி‌ட்ட‌ர் எ‌ண்ணெ‌யை கொடு‌த்து‌வி‌ட்டு போ எ‌ன்ற ‌மி‌ர‌ட்ட, அதைத் தொட‌ர்‌ந்து அ‌ந்த ஓ‌ட்டுந‌ர் 2 ‌லி‌ட்ட‌ர் எ‌ண்ணெ‌ய் பா‌க்கெ‌‌ட்டை கொ‌டு‌த்து ‌வி‌ட்டு செ‌ன்று ‌வி‌ட்டா‌‌ர்.

ஓ‌சி‌யி‌ல் ‌தினமு‌ம் ‌பிழை‌ப்பு நட‌த்துவதுதா‌ன் பெரும்பாலான போ‌க்குவர‌த்து காவலர்க‌ளி‌‌ன் வேலை எ‌ன்று அ‌ந்த வாகன‌த்‌தி‌‌ன் ஓ‌ட்டுந‌ர் சொ‌ல்‌கிறா‌ர். பல மாத‌ங்களாக ‌இ‌ந்த ‌பிழை‌ப்பு நட‌த்‌‌தி வரு‌ம் அ‌ந்த போ‌க்குவர‌த்து காவல‌ரி‌ன் செயலை ‌நிறுவன‌த்‌திட‌ம் சொ‌ல்‌லி இரு‌க்‌கிறா‌ர் ஓ‌‌ட்டுந‌ர். ''இ‌னிமே‌ல் அ‌ந்த காவலரு‌க்கு எ‌ண்ணெ‌ய் கொடு‌க்க வே‌ண்டா‌‌ம்'' எ‌ன்று கூ‌றி அனு‌ப்‌பியது அ‌ந்த ‌நிறுவன‌ம்.

வழ‌க்க‌ம் போ‌ல் அ‌ந்த வாகன‌ம் கு‌றி‌‌ப்‌பி‌ட்ட‌இடத்‌தி‌ல் வரு‌ம் போது ‌நிறு‌த்திய அ‌ந்த போ‌க்குவர‌த்து காவல‌ர், அதே 2 ‌லி‌ட்‌ட‌ர் எ‌ண்ணெ‌ய் கொடு டயலாக்கை எடுத்த்விட்டுள்ளார். ஆனால் கொடு‌க்க மறு‌க்‌கிறா‌ர் அ‌ந்த ஓ‌ட்டுந‌ர். உடனே ஆ‌‌‌த்‌திர‌த்‌தி‌ன் உ‌‌ச்‌சி‌க்கே செ‌ன்ற அ‌‌ந்த காவல‌ர், வ‌‌ண்டி‌யி‌ன் ஆர்சி பு‌க்,லைசெ‌ன்‌ஸ், இ‌ன்சுர‌‌ன்‌ஸ் பு‌க் ஆ‌கியவ‌ற்றை கொடு எ‌ன்‌கிறா‌ர்.அனை‌த்து‌ம் ச‌ரியாக இரு‌க்‌கிறது. ஒரு நா‌ள் ‌சி‌க்காமலா போவா‌ய் எ‌ன்று ‌மிர‌ட்டி அ‌‌ந்த வாகன‌த்தை அனு‌ப்‌பி வை‌‌த்து‌‌ள்ளா‌ர் அ‌ந்த போ‌க்குவர‌த்து காவல‌ர்!

வசூ‌லி‌க்கவே ‌பிற‌ந்து‌ள்ளோ‌ம் எ‌ன்பதை போ‌ல் நட‌ந்து கொ‌ள்ளு‌ம் போ‌‌க்குவர‌த்து காவல‌ர்க‌ள், அவ‌ர்க‌ள் செ‌ய்யு‌ம் அடாவடிகளை யா‌ர் க‌ண்டு கொ‌ள்வது, த‌ட்டி கே‌ட்பது

சாலை ‌வி‌தி முறைகளை ‌மீ‌றியதாக கூ‌றி பண‌ம் வசூ‌ல் செ‌ய்யு‌ம் போ‌க்குவர‌‌த்து காவல‌‌ர்க‌‌ளி‌ன் தொ‌ல்லை சென்னை நகர‌த்‌தி‌ல் இரு‌ப்பதை ‌விட புறநக‌ர் பகு‌திக‌ளி‌ல் அ‌திகமாகவே உ‌ள்ளது. கொ‌ள‌த்தூ‌ர், அ‌ம்ப‌த்தூ‌ர், செ‌ங்கு‌ன்ற‌ம்,தா‌ம்பர‌ம், ‌‌திருவா‌ன்‌மியூ‌ர் உ‌ள்‌ளி‌ட்ட பகு‌திக‌ளி‌ல் அ‌திகாலை நேர‌ங்க‌ளி‌ல் லா‌‌ரி போ‌க்குவர‌த்து அ‌திகமாக இரு‌க்கு‌ம். அ‌ப்போது வசூ‌ல் வே‌ட்டையை ஆ‌ர‌ம்‌பி‌த்து‌‌விடுவா‌ர்க‌ள் இ‌ந்த போ‌க்குவர‌த்து காவல‌ர்க‌ள்.

கொடு‌க்க மறு‌க்கு‌ம் லா‌ரிக‌ள் ம‌ணி‌க் கண‌க்‌கி‌ல் சாலை‌யி‌ன் ஓர‌த்‌தி‌ல் ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம். இதனை நா‌ம் ‌தின‌ந்தோறு‌ம் பா‌ர்‌க்க முடி‌கிறது. அ‌ப்படி ம‌ணி‌க் கண‌க்‌கி‌ல் கா‌த்‌திரு‌ப்பதை ‌விட கே‌ட்டது‌ம் பண‌த்தை கொடு‌த்து ‌வி‌‌ட்டு செ‌ல்லு‌ம் லா‌ரி ஓ‌ட்டுந‌ர்களு‌ம் இரு‌க்க‌த்தா‌ன் செ‌ய்‌கிறா‌ர்க‌ள். போ‌க்குவர‌த்து காவல‌ர்க‌ளி‌ன் இ‌ந்த அடாவடி செய‌ல்கள் பற்றி லா‌ரி ஓ‌ட்டுந‌‌ர்க‌ளிட‌ம் கே‌ட்டா‌ல், க‌ண்டபடி வசைமாரி பொழிகிறார்கள்.


இதேபோ‌ல்தா‌ன் த‌ற்போது செ‌ன்னை‌யி‌ல் போ‌க்குவர‌த்து காவல‌ர்க‌ள் நட‌ந்து கொ‌ள்‌கிறா‌ர்க‌ள். இ‌ப்படி‌ப்ப‌ட்ட அடாவடி செய‌ல்க‌ளி‌ல் ஈடுபடு‌ம் போக்குவர‌த்து காவல‌ர்களு‌க்கு யா‌ர் கடிவாள‌ம் போடுவது. ‌திருடனா‌ய் பா‌ர்‌த்து ‌திரு‌ந்தா‌‌வி‌ட்டா‌ல் ‌திரு‌ட்டை ஒ‌ழி‌க்க முடியாது எ‌ன்ற பாட‌ல்தா‌ன் ‌நினைவு‌க்கு வரு‌கிறது.

போலீஸ்காரராய்ப் பார்த்து திருந்தாவிட்டால்..!!!

நன்றி "வெளிச்சம்"


Friday, December 17, 2010

ஷங்கரின் சரக்கு - எந்திரனின் தந்திரம்..!

சமீபத்தில்தான் இந்த லிங்கை பார்க்க முடிந்தது...உலகப் புகழ் (?) பெற்ற எந்திரன் என்ற திரைப்படம் எங்கிருந்து சுட்டார்கள் என்பதை இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளள்ளலாம்..

முதலில் கமலஹாசன் என்று ஆரம்பித்து, அப்புறம் அஜித், ஷாருக் கான் போன்றவர்கள் நிராகரித்த கதையைத்தான்..பாவம் ரஜினியை ஏமாற்றி நடிக்க வைத்திருகிறார்கள்..


முதல்வன் படத்துடன் ஷங்கரிடம் சரக்கு தீர்ந்து விட்டது...அந்நியன், சிவாஜி. எந்திரன் போன்ற படங்களை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம்..பிரம்மாண்டத்தை வைத்து ஏமாற்றும் வேலைதான் நடக்கிறது..

இப்போதோ கடைசியில் எல்லோரும் ஹிந்தியில் பார்த்து முடித்துவிட்ட த்ரீ இடியட்ஸ் படத்தை ரீமேக் செய்கிறார்..சரி விட்டுவிடுவோம்.


ஆனால் ரஜினியை முட்டாளக்கியது போல..தமிழ் மக்கள் அனைவரையும் சன் டிவி குரூப் முட்டாள்களாகளாக்கியதை எப்படி மன்னிக்க முடியும்..?

ஷங்கரின் ஏமாற்று வேலையை "இங்கே கிளிக்"  செய்து தெரிந்துகொள்ளலாம்..