Pages

Thursday, February 17, 2011

"கனிமொழி கைது" - நாடகம் நடக்கிறது..


இன்றைய அனைத்துப் பத்திரிக்கைகளிலும் தலைப்பு செய்தி, "கனிமொழி கைது" என்பதுதான்.

பார்கிறவன் எல்லாம் ஏதோ ஸ்பெக்ட்ரம் விசயத்தில் இவர் பெயர் அடிபட்டதே..அதனால்தான் கைது செய்து இருப்பார்களோ என்றுதான் நினைத்திருப்பான்..

ஆனால் கனிமொழி கைது செய்யப் பட்டது - இலங்கையில் கைதாகி இருக்கும் 109 மீனவர்களை விடுதலை செய்யக்கோரி தடையை மீறி நடைபெற்ற ஒரு சிறு ஆர்பாட்டத்திற்காக.

இந்த கைது செய்யபடுவதினால் எந்தவித பாதிப்பும் இல்லை..அவர்களை வேனில் ஏற்றி, ஒரு மண்டபத்தில் வைத்து சாயந்திரம் வீட்டுக்கு அனுப்பிடுவார்கள்..இதை இந்த பத்திரிக்கைகள் அனைத்தும் இவ்வளவு பெரிதுபடுத்துவானேன்..

நிச்சயமாக இதில் வியாபாரத்தந்திரம் மட்டும் இல்லை..

அரசியல் தந்திரமும் ஒளிந்திருக்கிறது..



தேர்தல் நெருங்குகிறது..

ஸ்பெக்ட்ரம் ஊழல் தமிழகத்தின் ஆளும் கட்சியான தி மு கவின் கழுத்துக்கு கத்தியாக மேலே தொங்கிக்கொண்டிருக்கிறது..

இப்போது இவர்களுக்கு தமிழக மீனவர்களின் மீது அனுதாபம் வராமல் என்ன செய்யும்...

இவர்களுக்கு  ஓட்டு வேண்டும்..பத்திரிக்கைகளுக்கு காசு வேண்டும்...

நடிகை நடிகன் என்று கூத்தாடிகளின் ஆபாசப் படத்தைப்போட்டு விற்பவனுக்கு, மக்கள் எக்கேடுகெட்டால் என்ன...?



தமிழனுக்கு தமிழனே எதிரி என்று வசனம் பேசும் சினிமாக்கூத்தடிகளும் இப்போது தமிழனை விடுதலை செய் என்று கூத்தடிக்கின்றன..



மும்பையில் தமிழனை விரட்டுவதர்கேன்றே ஆரம்பிக்கப்பட்ட - பயங்கரவாத கட்சியான சிவா சேனாவின் தாய் கட்சியான இன்னொரு பயகரவாத கட்சி - பார "தீய" ஜனதா குண்டன்களும் போராட்டம் என்கிறான்..

எல்லாம் ஓட்டுப் பிச்சைக்கான ஒத்திகைகள்தான் .


இலங்கை நமது அண்டைய நாடு..

அங்கே விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் எப்போதும் உண்டு..

எல்லை மீறுகிரவனை பிடிக்கத்தான் செய்வான்..

இந்த வேஷதாரிகள் இங்கே குதித்தவுடன் விடுதலை செய்து விடுவானா?

தவறு எங்கே என்று ஆராய வேண்டும்

நாம் எவ்வளவு கூச்சலிட்டும் இலங்கை அரசு தொடர்ந்து மீனவர்களை கைது செய்தும் கடலோர எல்லைகளில் தாக்கியும் வருவது ஏன்?

நாம் ஒருதலைப் பட்சமாக, மீனவர்கள் எல்லோரும் அப்பாவிகள் என்றும் , இலங்கை ராணுவம், தவறு செய்வதற்காக மட்டுமே இருக்கிறது என்பதுபோல் கூக்குரலிட்டுக் கொண்டிருக்காமல்,

நாமும் எல்லைக் கட்டுப்பாட்டை மதித்து நடந்தால் இதுபோன்ற துன்பங்கள் நிகழாமல் தற்காத்துக் கொள்ளலாம்.

இங்கே அரசியல்வாதிகளும், சினிமாக்கூத்தடிகளும் தங்கள் சுயநலத்துக்காக இங்கே குதித்துக்கொண்டும், கூச்சலிட்டுவிட்டும், பத்திரிக்கைகளுக்கு போஸ் கொடுத்துவிட்டு ஏ சி காரில் வீட்டுக்கு சென்று ஜாலியாக இருந்து விடுவான்.

அரசியல்வாதியின் வேலைகள் எல்லாம், அடுத்த தேர்தல் வரைக்கும், சிநிமாக்கூத்தாடியின் கூச்சல் எல்லாம் தங்கள் படம் வெளியாகும்போது மட்டும்தான்.



Wednesday, February 16, 2011

திரிஷாவுக்கு அஜீத் போட்ட பிரியாணி..


போர்த் எஸ்டேட்..அப்படீன்னா என்ன தெரியுமா? நான்காவது தூண்...அதாவது இந்தியாவின் ஜனநாயகத்தை காக்கும் நான்காவது தூணாக  பத்திரிக்கைகள் விளங்குகின்றன என்று சொல்வார்கள்..

இந்தக்கால பத்திரிக்கைகளின் லட்சணம் தான் மேலே சொன்ன தலைப்பு...திரிஷாவுக்கு அஜீத் போட்ட பிரியாணி..அப்படீன்னு குங்குமம் பத்திரிக்கைல ஒரு தலைப்பு..

ஊருல எவ்வளவோ பிரச்சினை இருக்கு, இந்த நாதாரிங்க அஜீத் திரிஷாவுக்கு பிரியாணி போட்டான், அது போட்டான் இது போட்டான்னு கேவலமான ஆபாச வியாபாரம் பண்ணிக்கிட்டு இருக்குதுங்க..

அடேய்..பிச்சைக்காரன்க்கு கூட பிரியாணி போடுராங்கடா..இது ஒரு விசயமாடா?



ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி தனக்கு எதுவும் தெரியாது... - பிரதமர்..



ராசாவை தி மு கவின் விருப்பப்டி தான் அமைச்சர் ஆக்கினோம். ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்த விஷயம் தனக்கு தெரியாது என்று பிரதமர் மன்மோகன் சிங் ஒரு பெட்டியில் கூறியுள்ளார்.

ஒரு பிரதமர்..எல்லா துறைகளையும் கண்காணிக்கும் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர் இப்படி சொல்லி இருப்பது மிகவும் கேவலமாக உள்ளது...

அப்படியென்றால் ஒரு அமைச்சர் ஏதாவது ஒரு துறையில் சாதனை செய்து இருந்தால்..உதாரணமாக சென்ற ஆட்சியில் லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்த பொது - ரயில்வே துறை மிகுந்த லாபம் ஈட்டியாதாக சொன்னார்கள்...அதை தமது அரசின் சாதனை என்று சொல்லாமல் அது எனக்கு தெரியாது என்று சொல்வாரா?

Tuesday, February 15, 2011

வெற்றிகரமான 365 வது நாள் !!!



நன்றி நன்றி நன்றி..

இது எந்த படத்திற்கான வெற்றிக்கான அறிவிப்பும் இல்லை

எந்த ஆட்சியின் சாதனைக்ககவும் இல்லை

ஸ்பெக்ட்ரம் ஊழலுக்காக எதிர்க் கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்கிய நாட்ட்களின் கணக்கும் அல்ல

வனிதா விஜயகுமார் குடும்ப சண்டையின் நாட்கள் கணக்கும் அல்ல

எதுக்கு இதனை பீடிகை?...

மர்மயோகி என்கிற இந்த வலைப்பதிவை ஆரம்பித்து இன்றோடு சரியாக ஒரு வருஷம் முடிந்து விட்டது..

ஆதரவளித்தோருக்கும், விமர்சித்தோருக்கும் பின்தொடர்வோர் அனைவருக்கும் மிக்க நன்றி நன்றி நன்றி..

ஏதோ விளையாட்டாக ஆரம்பித்து ஒரு வருஷம் ஆகிவிட்டதை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது..


தொடர்ந்து ஆதரவளித்துவரும் அனைவருக்கும் மீண்டும் எனது நன்றிகள் பல..

Monday, February 14, 2011

யுத்தம் செய் - இன்னுமொரு "அஞ்சாதே"



எவ்வளவு திறமையான இயக்குனர் என்று பெயர் பெற்றாலும், எந்த இயக்குனரும் மூன்று படங்களுக்குமேல் தமது திறமையை தொடரமுடிவதில்லை...

இயக்குனர் மிஷ்கினும் அந்த வகையிலேயே வருகிறார்...

ஒரு இன்வெஸ்டிகேஷன் கதைதான்...

ஆனால் ஏறக்குறைய எல்லாக் காட்சிகளும் - ஏன் கதை அமைப்புகூட அவரது முந்தைய படமான "அஞ்சாதே" யை நினைவூட்டுவதை தவிர்க்கமுடியவில்லை..


ஊரில் உள்ள இளம்பெண்கள் காணாமல் போவது அஞ்சாதே படத்தின் கருதான்

பெண்கள் காரில் கடத்தப் படும் காட்சியும் அந்த படத்தில் காட்டப்படும் அதே டெக்னிக்தான்..

மொட்டைபோட்ட கொலைகாரனும் அதே படத்தில் வந்ததுதான்

வெட்டப்பட்ட கைகள் ஊரின் மையப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட காவல்துறை எல்லைக்குள் கிடப்பது - ராஜேஷ்குமார் நாவல்களை நினைவூட்டுகிறது..


ஊரின் மையப்பகுதியில் அட்டைப் பெட்டியில் வெட்டப்பட்ட கைகள், - மற்றும் அடிக்கடி இளம் பெண்கள் காணாமல்போவது
இந்த இரு வழக்குகளும் - சி பி சி ஐ டி அதிகாரி ஜே கே என்கிற - சேரனிடம் வருகிறது..ஏற்கனவே தனது தங்கையை இதே போல காணாமல் போய் வாடிக்கொண்டிருக்கும் அவர், இந்த வழக்கை துப்பறிந்து யார் இதற்கெல்லாம் காரணம் என்று கண்டு பிடிக்கிறார்..

பெண்களை கடத்தி, வயதான பணக்காரர்களுக்கு - ஆபாசக் காட்சி வைப்பது காவல் துறையைச் சேர்ந்த சில அதிகாரிகளே என்றும்,

காணாமல் போன சில பொறுக்கிகளின் கைகளை வெட்டி அட்டைப் பெட்டியில் வைப்பது இன்னொரு கும்பல் என்றும் கண்டுபிடிக்கும்போது - ஆரம்பத்தில் குழப்பமாகத் தெரிந்த சில சம்பவங்கள் ஒன்றோடொன்று இணையும்போது நமக்கு மிகத்தெளிவாக புரியும்படி காட்டி இருப்பது - நல்ல இயக்கம்தான்.


படத்தில் சண்டைக் காட்சிகள்கூட - அஞ்சாதேயை நினைவூட்டுகின்றன.

அஞ்சாதே படத்தில், ஆஸ்பத்திரியில் போலிஸ் அதிகாரி நரேனை அடிக்கவரும் வில்லன்கள் ஒவ்வொருவராக வந்து அடிபடுவார்கள்..

அதே போலத்தான் இதிலும் போலிஸ் அதிகாரி சேரனை அடிக்கவரும் பொறுக்கிகள் ஒவ்வொருவராக வந்து அடி வாங்குகிறார்கள்..

கதாநாயகனுக்கு ஜோடி இல்லாமல் காட்டி இருப்பதும் - படம் தரைப்படைகளுக்கான படம் இல்லை என்றாலும்,

ஒரு ஆபாச நடனம் - அமீர் - மிஷ்கினின் முன்னாள் நண்பர் சாருநிவேதிதா - வரும் காட்சி யாருக்கென்று தெரியவில்ல..

"வாள மீனுக்கும்" , "கத்தாழக் கண்ணால" போன்ற பாடல்கள் போல இந்த ஒரு பாடலும் (கன்னித்தீவு கண்ணா - கட்டழகு பெண்ணா ) ஒரு செண்டிமெண்டாக இருக்கலாம். திறமையை நம்புபவர்கள் ஏன் செண்டிமெண்டை விடமாட்டேன் என்கிறார்கள் என்று தெரியவில்லை.



பெண்களைக் கடத்தி வந்து லைவ் செக்ஸ் ஷோ பார்பவர்களுக்கும், அதை செய்பவர்களுக்கும் நல்ல தண்டனையை சொல்லி இருக்கிறார்கள்..அந்த மாதிரி இந்த ஊரில் செய்தால் ஒரு பொறுக்கி நாய் கூட இருக்க மாட்டான்..ஆனால் அவனெல்லாம் அரசியல்வாதியாக இருக்கிறானே?



இந்த படத்திலும் சாராயம் முக்கிய பங்கு வகிக்கிறது...

ஒரு முக்கிய கதாபாத்திரமாக வரும் - போஸ்ட் மார்ட்டம் செய்யும் டாக்டர் வரும் காட்சி முழுவதும் குடித்துக் கொண்டே இருக்கிறார்..சுடப் பட்டு சாக இருக்கும்போது கூட குடித்துவிட்டு சாகிறார்....

இவங்களெல்லாம் திருந்தவேமாட்டான்கள் போல இருக்கிறது..



படம் முழுவதும் ஏதோ மஞ்சள் கலரிலேயே இருக்கிறது...மணிரத்னம் இருட்டில் எடுப்பதுபோல மிஷ்கின் மஞ்சளாக எடுப்பார் போல இருக்கிறது...என்னடா இது புது ட்ரெண்டா இருக்கு..?



சேரனும் மற்றும் படத்தில் வருபவர்களும் சரியாக பொருந்துகிறார்கள்..


ஒளிப்பதிவு, இசை, இயக்கத்தை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம் என்றாலும்  - யுத்தம் செய் - அஞ்சாதேயின் மறுபதிப்புதான் ..!



Saturday, February 12, 2011

தூங்காநகரம் - சாரயக்கடைகளுக்கான விளம்பரம்

படத்தின் ஆரம்பக் கட்ட காட்சிகளைப் பார்க்கும்போது, ஏதோ வித்தியாசமாக யோசித்திருக்கிறார்கள் என்று எண்ணவைத்து ஏமாற்றி விடுகிறார்கள்...


இருட்டுக்குள் கேமரா ஒவ்வொரு வீடாகப் புகுந்து ஒவ்வொரு வீட்டின் ரகசியங்களையும், பழக்க வழக்கங்களையும் போகிற போக்கில் சொல்லும்போது இது ஒரு மாறுபட்ட படம் என்றுதான் எண்ணத்தோன்றுகிறது..அடுத்துவரும் காட்சிகள் நம் எண்ணத்தில் மண்ணைப் போட்டு புலம்ப வைத்து விடுகிறது...

மதுரையை சுற்றியுள்ள வெவ்வேறு ஊர்களில் இருந்து மதுரைக்கு வரும் நான்கு பேர் சாராயக் கடையில் சந்தித்து உயிர் நண்பர்களாகும் அரதபழசான ஆயிரத்தி நூற்றி சொச்சமான கதை..

மதுரையில் நடக்கும் கதைக் களம் என்றால் இப்படித்தான் என்று சில கேணத்தனமான படங்களில் இதுவும் ஒன்று..

நான்கு நண்பர்கள்..(நண்பர்கள் என்றால் நான்கு பேர் என்று எவன் கண்டு பிடித்தான்?) இருக்கவேண்டும்

அந்த நான்கு பேரும் ஷேவிங் செய்யாத தோற்றத்துடன் கசங்கிய சட்டையுடனும் அழுக்கு பேன்ட் அல்லது லுங்கியுடனும் பொறுக்கி மாதிரி தோற்றத்துடனும் இருக்கவேண்டும்..

டெய்லி சாராயக்கடையில்  குடித்துக் கொண்டிருக்க வேண்டும்

சாராயக் கடையில் ஒரு தடவையாவது பிரச்சினை பண்ணவேண்டும்

அதில் ஒருவனுக்குதான் காதலி இருக்கவேண்டும்

ஒன்றுமே இல்லாத காரணங்களுக்காககூட உயிரைக் கொடுப்பேன் என்று உறுதியுடன் இருக்க வேண்டும்...

மதுரையில் யாராலும் அசைக்க முடியாத ஒரு பயங்கர ரவுடி கும்பல் இருக்க வேண்டும்

அவர்களை இந்த நண்பர்கள் மட்டுமே எதிர்க்க - அல்லது அழிக்க முடியும்..

இப்படி எல்லா இலக்கணங்களும் இந்த படத்தில் உண்டு..



மணல் கொள்ளையடிக்கும் கும்பலை பிடிக்கும் ஒரு அதிகாரியின் மகளை நடு ரோட்டில் ரவுடி காரை ஏற்றிக் கொல்கிறான்...ப்ரேக் பைலியர் என்று அவனை நீதிபதி விடுதலை செய்கிறார்...



ஜவுளிக் கடையில் டிரெஸ்ஸிங் ரூமில் உடை மாற்றும் பெண்களை பின்னாடி இருந்துகொண்டு (இந்த படத்தில் உடை மாற்றும் பெண்களை எப்படி மொபைல் போனில் படம் எடுக்கலாம் என்று கற்றுக் கொடுக்கிறான்) படம் பிடிக்கும் ரவுடிக்கூட்டம் அந்த பெண்களை ஆசைக்கு இணங்க வைக்கிறது..அப்படி மறுக்கும் ஒரு பெண் கொலை செய்யப் படுகிறாள்..



இவ்வளவு அநியாயம் நடக்கும் அந்த ஊரில் போலீசையே காணோம்..ஏன் லஞ்சம் வாங்குவதற்கு கூட வருவதில்லை...



எல்லாவற்றையும் வில்லன்களே பார்த்துக் கொள்கிறார்கள்..

அருமையான டைரக்சன்..ஹ்ம்ம்ம்



இதேபோல ஒரு குருக்களின் மகளை படம் எடுத்து மிரட்டும் வில்லனின்  மகனை, இந்த நான்கு நண்பர்களும் குடிபோதையில் அடித்து குருடனாக்கி விடுகிறார்கள்...

இவர்களை கண்டுபிடித்து, வில்லனின் மகனை அடித்த அந்த நண்பர்களில் ஒருவனை ஒழிக்க, அந்த நண்பர்களில் மூன்று பேரையும் தனித்தனியாக மிரட்டி அவனை கொல்வதற்கு அனுப்பிவைப்பது வித்தியாசமான கற்பனைதான் என்றாலும், அந்த நண்பர்கள் உடனேய ஒப்புக் கொண்டு அவனை கொல்ல சம்மதிப்பது எப்படி என்றே தெரியவில்லை..நண்பரளுக்கான இலக்கணம் மீறப் பட்டிருக்கிறது..?



கடைசியில் வில்லனின் குருட்டு மகனை சாக்கில் கட்டி கொன்று விட்டு, அது கதாநாயகன்தான் என்று நம்பவைப்பது அசல் நாடகத்தனம்..

அந்த கதாநாயகன் வில்லனின் வீட்டுக்கே சென்று வசனம் பேசி அந்த வில்லனை கொல்வது 1930 ஆம் வருஷ டெக்னிக்..



தனது மகளை கார் ஏற்றி கொன்ற வில்லனை அதே போன்றே அந்த அதிகாரி கொன்று விட்டு - காரில் ப்ரேக் இல்லை என்று சொல்வது உச்சக் கட்ட காமெடி..

வடிவேலு இல்லாத குறையை போக்கும் ஒரு காமெடி இது..(படத்தில் வடிவேலு நட்புக்காக என்று ஒரு பாடல் காட்சியில் காண்பிக்கிறார்கள்..)



பேரழகி அஞ்சலி துடுக்குத்தனமாக வந்து - இருட்டுக்குள்ளே இருக்கும் படத்தை கொஞ்ச நேரம் வெளிச்சமாக வைக்க உபயோகப்படுகிறாள்..



தூங்கா நகரம் எனபது மதுரையை பெருமைப் படுத்தும் வார்த்தையாக தெரியவில்லை..

ஏனெனில் இரவு முழுதும் பாரில் குடித்துக் கொண்டிருப்பவர்களையே காட்டுவதால் இது மதுரையை கேவலப்படுத்தும் தலைப்பாகவே தெரிகிறது..



மற்றபடி படம் முழுவதும் ஒரே கூட்டம் கூட்டமாக ஆடுகிறார்கள்...திருவிழாவில் கூட்டமாக இருக்கிறது..பொறுக்கிகளும் ரவுடிகளும் டாட்டா சுமோவில் அலைகிறார்கள்..

படத்தில் அனைவரும் குடிகாரர்களாக சாராயக் கடைகளில் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள்..

இது ரவுடிகளையும்., சாராயக் கடைகளையும் விளம்பரப்படுத்டுவதர்கான ஒரு படமே..




Thursday, February 3, 2011

ராசா - விண்ணிலிருந்து மண்ணுக்கு...!.



ராசா - இந்த பெயர் எது எதற்கோ பிரபலமாக இருந்தாலும், இன்று பெருமளவில் உச்சரிக்கப்படும் ஒரு பெயராகி விட்டது..

தி.மு.கவின் குடும்பத் தகராறு உச்சத்திற்கு வந்தபோது, தயாநிதி மாறனுக்கு பதிலாக தொலை தொடர்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர்தான் ராசா..

கருணாநிதியின் முழுமையான - உணமையான விசுவாசி..இன்னும் ராஜாத்தி அம்மாள், கனிமொழி ஆகியோரின் குடும்பத்திருக்கு மிகவும் வேண்டப்பட்டவராக கருதப்பட்டதால், 2 ஜி அலைவரிசை ஊழல் விஸ்வரூபம் எடுத்தபோது, கலைஞர் கருணாநிதியால் முழுதுமாக ஆதரிக்கப்பட்டவர்..

ஒரு தலித் சமுதாயத்திலிருந்து, மத்திய அமைச்சராகப் பதவியேற்ற ராசா, இன்று சி. பி. ஐ - யால் கைது செய்யப்பட்டு, குற்றவாளியாக நிற்கிறார்.

குற்றவாளி யார் யார் என்பது எல்லாருக்கும் தெரியும்..

ராசா ஒரு கருவிதான்...அவர் ஒரு பலியாடு...

இதோ, ராசாவின் கைது - திமுக, காங்கிரஸ் கூட்டணியை பாதிக்காது என்று அவசர அவசரமாக ஒரு அறிக்கை - எதற்கு?

கூட்டுக் களவாணிகள் பிரிந்தால் நாறிவிடுமே ...

எப்படியோ - எப்படி இருந்தாலும் ஒருவன், சேரக்கூடாத இடத்தில் சேர்ந்தால் இப்படித்தான் ஆகும் என்பதற்கு ராசாவே ஒரு உதாரணம்.



இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய காமெடி


உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும்  வழக்கமுடைய ஒரு துரோகி ஒருவன் வாழ்ந்து வந்தான்.

தான் வேலை செய்த கம்பெனி முதலாளியை கூலிப் படையினரை வைத்து கொலை செய்ய முயற்சி செய்து, அந்த கம்பெனியை அபகரிக்க முயற்சி செய்த துரோகத்திற்காக கம்பெனியை விட்டே விரட்டப்பட்டவன் அவன்.

அந்த நிறுவனத்தை விட்டு விரட்டப்பட்டாலும், தெருவோரமாக நின்றுகொண்டு, அதோ அந்த கம்பெனி என்னுடையது, இதோ இந்த சொத்து என்னுடையது, நான்தான் இதற்க்கு முதலாளி என்று பைத்தியக்காரனாக உளறிக்கொண்டிருந்தான் அவன்..

இந்த துரோகியையும் நம்பி சிலர் அவன்கூட சென்று தனியாக கம்பெனி ஒன்று ஆரம்பித்தனர்.

இந்த துரோகியின் முன்னாள் முதலாளியின் போட்டியாளரான இன்னொரு கம்பெனி முதலாளியான பெண் ஒருவர், கூலி படையின் பயங்கர எதிரி. ஆனாலும் தன் எதிரி கம்பெனியை வீழ்த்துவதற்காக இந்த துரோகியை தனது அடிமையாக வைத்துக் கொண்டார்.

இந்த துரோகி, இந்த பெண் முதலாளிக்கும் அடிமையாகவும், அதே சமயம், கூலிப்படையினர் கொள்ளையடித்து வரும் பணத்துக்காக இருவருக்கும் அடிமையாக வேலைப்பார்த்து வந்தான்..

யாரிடம் பிச்சை எடுத்தாலும் கூலிப் படையினருக்கு மட்டுமே ஆதரவாக பேசும் குணம் உள்ளவன் இந்த துரோகி..

இவனுடைய இந்த கேவலமான பிழைப்பை பார்த்து வெறுத்துப் போய் இவனை நம்பி இவனுடன் வந்தவர்கள் மீண்டும் தமது பழைய கம்பெனிக்கே திரும்பி சென்றனர்.

இப்போது தனியொரு அடிமையாக கம்பெனியை நடத்தி வரும் அவன், தன்னைத்தானே கம்பெனியின் முதலாளி என்று அறிவித்துக் கொண்டதோடு, தனக்கு யாரும் போட்டியில்லாததால் தானே மீண்டும் முதலாளியாக தேர்ந்தெடுக்கப் பட்டதாக சொல்லிக்கொள்கிறான்.

ஏற்கனவே இவன் பழைய கம்பெனியை தனது கம்பெனி என்று பைத்தியக் காரத்தனமாக உளறியது எல்லாருக்கும் தெரிந்ததால் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.


நேற்றைய சன் டிவியில் வந்த ஒரு கேலிக்கூத்தான செய்தி.

உதவி செய்யும் இந்தியாவிற்கே துரோகம் செய்து, தமிழகத்தில் பயங்கவாதம் செய்துவரும் பயங்கரவாதிகளான விடுதலைப் புலிகளின் அடிவருடியான கட்சியின் தலைவனாக தேச துரோகி வைகோ என்பவன் அக்கட்சியும் பொது செயலாளனாக மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டான் என்ற ஒரு உபயோகமற்ற ஒரு செய்தியை நிதயானந்தாவின் ஆபாசப் படப் புகழ் சன் டிவி மீண்டும் மீண்டும் ஒலிபரப்பி மகிழ்ந்தது..

இருப்பது நாலுபேர் இந்த கட்சிக்கு - இதில் எப்படி போட்டி வரும்.

இதை ஒரு செய்தியாக ஏன் இவன் ஒலி பரப்புகிறான்.?.ஒரு சமயம் காமெடிக்காக இருக்குமோ?




Tuesday, February 1, 2011

இவனெல்லாம் எப்படி முதலமைச்சர் ஆனான்?



சுத்த கர்நாடகமா இருப்பான் போல என்று யாரை சொல்வார்கள்...?அடி முட்டாளைத்தான்..அப்படி ஒரு முட்டாள்தான் கர்நாடக மாநில முதலமைச்சராக இருக்கிறான்..

பார - தீய - ஜனதா என்கிற பயங்கரவாதக் கட்சி தென்னகத்தில் முதல் முதலில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது..ஏதேதோ கிழிக்கப் போகிறது என்று ஆபாசப் பத்திரிக்கைகள் அலறின..ஒரு மயிரும் புடுங்கல அவன். அவன் வேலையே டெய்லி எப்படி தன் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வது..எப்படி கொள்ளையடிப்பது என்பதிலேயே கழிகிறது..


மக்களைப் பற்றி அவனுக்கு எந்த கவலையும் இல்லை..


இரண்டு தடவைகள் ஆட்சிக்கு ஆபத்து வந்து என்னனனவோ கோல்மால் பண்ணி காப்பாற்றிக் கொண்டான்..அப்புறமாவது நல்லது செய்தானா..? இல்லை கோயில் கோயிலாக அலைந்தான்...எதற்கு? ஆட்சியைக் காப்பாற்றி கொள்வதற்கும்  மேலும் கொள்ளையடிப்பதற்கும்.

ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஊர் ஊராக சென்று கோழைத்தனமாக அழுது டிராமா போட்டான்..



ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கவர்னர் அவன் மீது வழக்குத் தொடர அனுமதி அளித்தார்...பெங்களூருவில் பயங்கர கலவரத்தை ஏற்படுத்தினான்..இவனும் மனித மிருகம் நரேந்திர மோடி வழி வந்தவன்தானே...(ராஜ பக்ஷே மீது பாயும் இங்குள்ள தேச துரோகிகள், - இந்தியாவில் பயங்கரவாத செயல்கள் செய்த மோடி என்பவன் மீது ஒன்றும் சொல்வதில்லை).

கிருஸ்துவ பாதிரியாரை எரித்துக் கொன்றவர்கள் இந்துத்துவா சக்திகள் இல்லையாம்...இவன் ஆட்சி காலத்தில் இப்படி ஒரு அநீதியான தீர்ப்பு....

இன்றைக்கு இந்த எடியூரப்பா சொல்கிறான்..- தன்னை பில்லி சூனியம் வைத்து கொல்ல எதிர்க் கட்சிகள் முயற்சி செய்கிறார்களாம்..


இவனெல்லாம் எப்படி முதலமைச்சர் ஆனான்?

அப்படி என்றால் உன்னை எதிர்பவர்களை நீ பில்லி சூனியம் வைத்து வெல்ல வேண்டியதுதானே?

ஒரு காலத்தில் சாப்ட்வேர் துறையில் நம்பர் ஒன் மாநிலமாகத் திகழ்ந்த கர்நாடக மாநிலம் மூட நம்பிக்கையாளர்களின் பிடியில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது....

ஹ்ம்ம் என்ன சொல்ல?