Pages

Friday, March 11, 2011

ஜப்பானில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பேரழிவு.(படங்களுடன்)


பொருளாதார வலிமை மிக்க நாடுகளில் ஒன்றான ஜப்பான் இன்றையதினம் மிகப்பெரும் பேரழிவை சந்தித்திருக்கிறது.

11 மார்ச் 2011 இன்று..டோக்கியோ துறைமுகத்தில் ஏற்ப்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தாலும் (ஏறக்குறைய 8.4 ரிக்டர் அளவு) 25 அடி உயரத்திற்கு ஏற்பட்ட சுனாமி பேரலைகளாலும் அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.



பெரிய பெரிய கட்டிடங்களும், பாலங்களும் இடிந்துள்ளன. நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பூகம்பத்தால் ஏற்பட்ட அதிர்வால் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தீப்பிடித்து எரிகின்றன..

சுனாமி அலைகளால் சாலைகள் எங்கும் வெள்ளமாக காட்சியளிக்கிறது..

கார்களும், பஸ்களும், கப்பல்கள், போட்கள் என்று பாரபட்சமின்றி வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டுவிட்டன..

செண்டாய் விமான நிலையம் முழுதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது..


டோக்கியோ விமான நிலையம் மூடப்பட்டுள்ளது..


ஜப்பான் முழுவதும் மின் இணைப்பு, மற்றும் தொலை தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டு விட்டது.

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மெட்ரோ ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டு போக்குவரத்து செயலிழந்து விட்டது..



தொலை தொடர்பும் துண்டிக்கப்பட்டு விட்டதால் உயிரிழப்பு எண்ணிக்கை அறியமுடியவில்லை.

எனினும் பெரிய அளவில் உயிரிழப்பு எற்பற்றிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது..

ஜப்பானில் மீட்பு பணியில் பங்கேற்க அந்நாட்டு மக்களை வேண்டியுள்ளார் அந்நாட்டு பிரதமர்..


900 மீட்ட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன..

உடனடியாக அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது




இதற்க்கு முன் டோக்கியோ நகரில் 1923 ம் ஆண்டு ஏற்ப்பட்ட பூகம்பம்தான் மிகப்பெரிய பூகம்பமாக இருந்தது..அந்த பூகம்பத்தில் ஏறக்குறைய 140000. க்கும் மேற்பட்ட உயிரிழப்பு ஏற்ப்பட்டதாக கூறப்படுகிறது..

அதுபோல் இல்லாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் நம்மால் முடிந்த ஆதரவையும் வழங்க முயற்சிப்போம்..


Thursday, March 10, 2011

பிரியமானவளே...


சமீபத்தில் கே டிவியில் இரவு நேரத்தில் பார்த்த ஒரு படம்..

விஜய் - சிம்ரன் நடித்திருந்தார்கள்..விஜய்யின் ஜால்ராக்களாக விவேக், மற்றும் வையாபுரி..

கதை மிகவும் கேவலமான எண்ணமுடையவர்களது..

வெளிநாட்டில் வளர்ந்த டாக்குட்டர் விஜய்க்கு, திருமண உறவுகளைப் பற்றி தெரியாதாம்..மக்களையெல்லாம் முட்டாள்கள் என்று நினைத்திருக்கிறார்கள் இந்த சினிமாக்கூத்தாடிகள் ..எந்த நாட்டில் அவ்வாறு இருக்கிறதென்று தெரியவில்லை..

அவரிடம் வேலை செய்யும் சிம்ரனை ஒருவருட அக்ரீமெண்டில் திருமணம் செய்வானாம்..ஒருவருடம் நன்றாக அனுபவித்துவிட்டு, உன்னிடம் எந்த பீலிங்கும் இல்லை என்று அக்ரீமென்ட்டை காட்டி, அவளை வீட்டுக்கு அனுப்பிவிடுவானாம்..



அப்புறம் தமிழ் சினிமா வழக்கப்படி ரெண்டு பேரும் சேரணுமே..

அதுக்காக சிம்ரன் வேலை செய்யிற கம்பெனி நஷ்டத்துல போனாலும் அதை வேலைக்கு வாங்கி இவன் எம்டி ஆகிவிடுவானாம்..அவளுக்கு பிடித்ததை எல்லாம் செய்வானாம்..

இப்படியும் தொடர்ந்து வெறுக்கும் சிம்ரன், இவனுடன் ஒரு வருடகாலம் வாழ்ந்த வாழ்க்கையில் கர்ப்பமாகிறாள்..

இதை சாக்காக வைத்து வளைகாப்பு நடக்கும் நேரத்தில் பலர் முன்னிலையில் விஜயை அவமானப் படுத்துகிறாள்..

பதிலுக்கு, சிம்ரனை - நான் உன்னை வற்புறுத்தவில்லை உன் ஆசைப்படித்தான் உன்னோடு செக்ஸ் வெச்சுக்கிட்டேன் - என்று பலர் முன்னிலையில் அவளை கேவலப்படுத்திவிட்டு "இன்னும் உன்னை லவ் பண்ணுகிறேன்" என்று சால்ஜாப்பு சொல்கிறான்..

அப்புறம் - எனக்கு செக்ஸ் வேணும்னா அக்ரீமென்ட் போடத்தேவை இல்லை...ஒரு கண் அசைவு போதும்..எல்ல பெண்களும் வந்து விழுவார்கள்" என்று சொல்லி தமிழ்நாட்டு பெண்கள் எல்லாரையும் இன்னும் கேவலப் படுத்துகிறான்..

இவன்தான் நாளைக்கு அரசியலில் "குதித்து" தமிழ்நாட்டை காக்கபோகிறான்..

படம் பூரா ஒழுக்ககேடான காட்சிகள்தான் அதிகம்..

வித்தியாசமான கதைகள் என்று - டிவிக்கள் மூலம் சீரியல்கள் ஒருபக்கம் வீட்டுக்கே வந்து குடும்ப உறவுகளை கெடுத்துக்கொண்டிருக்கின்றன....இது போன்ற தரங்கெட்ட திரைப் படங்கள் ஒருபக்கம் இன்னும் நாசமாக்கி வருகின்றன....



ஹ்ம்ம் இதற்க்கெல்லாம் எப்போதுதான் ஒரு முடிவு வருமோ..



Wednesday, March 9, 2011

அந்த "மூன்று" நாட்கள்..

தினசரிகள் :


திமுக காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு இழுபறி..காங்கிரஸ் அதிக இடங்கள் கேட்கிறது..


கே.வி.தங்கபாலு :

காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது..தொகுதிப் பங்கீடு குறித்து பேசி வருகிறோம். விரைவில் நல்ல முடிவை அன்னை சோனியா அறிவிப்பார்...

இ.வி.கே.எஸ். இளங்கோவன்:

திமுக ஆட்சியில் ஊழல் மிகுந்து விட்டது..மக்கள் இந்த ஆட்சியை விரும்பவில்லை.. ஆட்சியில் பங்கு வேண்டும்..


கருணாநிதி :

கூட்டணி குறித்து மூன்றாம்கட்ட பேச்சுவார்த்தை நடை பெற்று வருகிறது.

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது..

ஜெயா டிவி.

தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி..

குமுதம் ரிப்போர்டர் - ஜூனியர் விகடன் - நக்கீரன் (ஆபாச பத்திரிக்கைகள்)

விஜய் ஆதரவு யாருக்கு..

அஜித் திரிஷா ஜோடி

ரஜினிக்கு ஜோடி யார்?



கருணாநிதி:

கேட்டதை கொடுத்தும் இன்னும் கேட்பது ஏன்?



கே.வி.தங்கபாலு :

காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது..தொகுதிப் பங்கீடு குறித்து பேசி வருகிறோம். விரைவில் நல்ல முடிவை அன்னை சோனியா அறிவிப்பார்...



இ.வி.கே.எஸ். இளங்கோவன்:

திமுக ஆட்சியில் ஊழல் மிகுந்து விட்டது..மக்கள் இந்த ஆட்சியை விரும்பவில்லை..ஆட்சியில் பங்கு வேண்டும்..



ஜெயா டிவி.

தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி..



கருணாநிதி:

முதலில் 51 தொகுதியில் ஆரம்பித்து, 60 தொகுதி வந்து பிறகும் 63 தொகுதிகள் வேண்டும் என்றும் அதுவும் அவர்கள் கேட்கும் தொகுதிகள்தான் வேண்டும் எனபது அவர்கள் நமது கூட்டணியை விரும்பவில்லை என்று தெரிகிறது..



ஜெயா டிவி.

தி மு க - காங்கிரஸ் கூட்டணி முறிந்தது..



பிரணாப் முகர்ஜி:

காங்கிரஸ் தி.மு.க கூட்டணி தொடர்கிறது..



கே.வி.தங்கபாலு :

காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது..தொகுதிப் பங்கீடு குறித்து பேசி வருகிறோம். விரைவில் நல்ல முடிவை அன்னை சோனியா அறிவிப்பார்...



இ.வி.கே.எஸ். இளங்கோவன்:

திமுக ஆட்சியில் ஊழல் மிகுந்து விட்டது..மக்கள் இந்த ஆட்சியை விரும்பவில்லை.. ஆட்சியில் பங்கு வேண்டும்..



கருணாநிதி:

மத்திய அரசுக்கு, பிரச்சினையின் அடிப்படையில் திமுக ஆதரவு அளிக்கும்



எம்.ஜி ஆர் படங்களில் ரிக்ஷாக்காரனாக சென்னை பாஷை பேசி நடிக்கும் எம் ஜி. ஆர் ஜால்ரா சோ..(அரசியல் நோக்கராம்...) :

கக்க்கும்....ஸ்பெக்ட்ரம் விசாரணையில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள கருணாநிதி மத்திய அரசை மிரட்டுகிறார்.



ஜெயலலிதா காலத்தில் தரைப்படைகளின் அந்தரங்க உறுப்புகளை தரிசித்தவரும், விளக்குமாறு அடி வாங்கியவருமான இன்னொரு அரிசியல் புரோக்கர் சுப்பிரமணிய சாமி..

அடுத்த வாரம் சி.பி.ஐ கனிமொழி கைது செய்யாப்போவுது. அதற்க்கு அடுத்த வாரம் ராசாத்தி அம்மாவை விசாரிக்க போவுது இது சம்மந்தமா ஒபாமா கூட பேசிட்டேன்..அதுக்குதான் கருணாநிதி சென்ட்ரல் கவேர்மெண்டை மெரட்டுது..



தினசரிகள்..:

தி மு க அமைச்சர்கள் ராஜினாமா..நாளை பிரதமரை சந்தித்து ராஜினாமா கடிதங்களை கொடுக்கிறார்கள்..


பிரணாப் முகர்ஜி

காங்கிரஸ் தி.மு.க கூட்டணி தொடர்கிறது..



கே.வி.தங்கபாலு :

காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது..தொகுதிப் பங்கீடு குறித்து பேசி வருகிறோம். விரைவில் நல்ல முடிவை அன்னை சோனியா அறிவிப்பார்...



இ.வி.கே.எஸ். இளங்கோவன்:

திமுக ஆட்சியில் ஊழல் மிகுந்து விட்டது..மக்கள் இந்த ஆட்சியை விரும்பவில்லை.. ஆட்சியில் பங்கு வேண்டும்



வைக்கோ(ல்) (மனதுக்குள்)

ஆஹா...காங்கிரஸ் அதிமுக வுக்கு வந்துடுமோ..அப்போ நமக்கு கிடைக்கப்போகிற ஒரு சீட்டுக்கும் ஆப்புதானா ...2007 ம வருஷம் அம்மா கிட்டே அப்பாயின்ட்மென்ட் வாங்கி இந்த வருசமாவது பாத்துடலாம்னு பாத்தா முடியாது போல இருக்கே..யாழ்பாணத்துக்கு போய்ட வேண்டியாதுதான்..நம்ம பருப்பு இனி வேகாது..



தா. பாண்டியன் (மனதினுள்..)

ஆஹா நமக்கும் அம்மா ஆப்பு வெச்சுட்டாங்க ...இனிமே கருனாநிதிய பாக்கவேண்டியதுதானா..?



விஜயகாந்த்.(மனசுக்குள்).:



41 சீட் தானா..இல்லே 14 சீட்டா..நம்ப முடியலே..நைட் நாம ஸ்டெடியா இருந்தோமா...அப்புறம் எலெக்சன் முடிஞ்சு இந்த அம்மா நாம குடிச்சுட்டுதான் மீட் பண்ணேன்னு அறிக்கை கொடுக்கப் போகுது..



தினசரிகள்..:



தி.மு.க அமைச்சர்கள் டெல்லி பயணம்..இன்னும் ஒருநாள் அவகாசம் காங்கிரஸ் தரப்பில் கேட்கப்பட்டுள்ளது..ஸ்டாலின் அறிவிப்பு..



பிரணாப் முகர்ஜி

காங்கிரஸ் தி.மு.க கூட்டணி தொடர்கிறது..



கே.வி.தங்கபாலு :

காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது..தொகுதிப் பங்கீடு குறித்து பேசி வருகிறோம். விரைவில் நல்ல முடிவை அன்னை சோனியா அறிவிப்பார்...



இ.வி.கே.எஸ். இளங்கோவன்:

திமுக ஆட்சியில் ஊழல் மிகுந்து விட்டது..மக்கள் இந்த ஆட்சியை விரும்பவில்லை.. ஆட்சியில் பங்கு வேண்டும்



கி.வீரமணி.

கருணாநிதி துணிச்சலான முடிவை எடுத்துள்ளார். உலகெங்கும் உள்ள தமிழர்களும் இன்னும் வெவ்வேறு கிரகங்களில் உள்ள தமிழர்களும் இதை வரவேற்றுள்ளனர்..தமிழனின் தன்மானம் வென்றுள்ளது...



டாக்டர் ராமதாஸ்.:

(பயத்துடன்) பா.ம.க சீட்டை குறைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.. குறிப்பிட்ட 31 இடங்களிலும் பாமக போட்டியிடும். திமுக கூட்டணி அமோக வெற்றி பெரும்..



சுப வீரபாண்டியன்.

கலைஞர் தன்மானத்துடன் காங்கிரஸ் உறவை முறித்துள்ளார்..திமுக கூட்டணி வெற்றிபெற பிரச்சாரம் செய்வேன்..



திருமாவளவன் :

திமுக கூட்டணி வலுவாக உள்ளது..அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம்..



ஜெயலலிதா : (மனதினுள்)

காங்கிரஸ் வந்தா இந்த வைக்கோலையும் கம்யூனிஸ்டுகளையும் கலட்டி விட்டுடலாம்..தேவை இல்லாம இந்த குடிகாரனுக்கு வேற 41 சீட்டு கொடுத்தாச்சே... என்ன பண்றது..?



கருணாநிதி :

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, கூட்டணி தர்மம் ஆகியவற்றை மனதில் கொண்டு காங்கிரசுக்கு 63 தொகுதிகள் கொடுக்கிறோம்..

பாமக ஒன்றும், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஒன்றும் விட்டுக் கொடுத்திருக்கின்றன..



மக்கள் :

ஐயா கலைஞரே..நீங்கள் தொகுதியை மட்டுமா விட்டுக் கொடுத்து இருக்கிறீர்கள்...தன்மானம் எங்கேயா போச்சு?






Tuesday, March 8, 2011

கருணைக் கொலை வேண்டும்!..தூக்குத்தண்டனை வேண்டாம்....!!!


மும்பை மருத்துவமனை ஒன்றில் நர்சாக பணியாற்றியவர் அருணா என்கிற பெண். ஏறக்குறைய 36 ஆண்டுகள் கோமா நிலையில் படுத்த படுக்கையாக இருக்கும் அவரை கருணைக் கொலை செய்ய அனுமதி கேட்டு வந்த வழக்கை தள்ளுபடி செய்து இருக்கிறது நீதிமன்றம்..

அதோடு, அவரை கருணைக் கொலை செய்யவேண்டாம், ஆனாலும், அவரை காப்பாற்றும் முயற்ச்சியில் மருத்துவ உபகரணங்களின் உபயோகத்தை குறைத்து இயற்கையாக மரணிக்க வைக்கவேண்டும் என்பதுபோல ஒரு தீர்ப்பு..இதுவும் ஒரு கொலை போன்றதுதான்..



அருணா என்ற அந்த நர்சை, அந்த மருத்துவனமையில் பணியாற்றிய ஒரு கொடூரன், கற்பழிக்க முயற்சி செய்கிறான்..ஆனால் அந்த பெண் மாதவிடாய் பருவத்தில் இருந்ததால், அவளைக் கொடூரமான முறையில் சங்கிலியால் கட்டிவைத்து, தவறான வழியில் புணர்ந்திருக்கிறான்.

இந்த சம்பவத்தால் உடலாலும், மனதாலும் பாதிக்கப் பட்ட அந்த பெண், இன்றுவரை படுத்த படுக்கையிலேயே கோமா நிலையில் மரணத்தை எதிர்நோக்கி இருக்கிறாள்..

இவளை கருணைக் கொலை செய்வதற்கு அனுமதி கேட்கும் அமைப்புகள், இது போன்ற குற்றங்களுக்காக தூக்குத்தண்டனை விதிக்க சொல்வார்களா?

மரணதண்டனையே கூடாது என்று சொல்லும் மனித உரிமை மேதாவிகள் என்ன சொல்கின்றன?




Friday, March 4, 2011

கொண்டாட்டங்களும் - தொந்தரவுகளும் - பிரச்சினைகளும்....


பஸ் டே என்ற பெயரில் பொறுக்கிகளின் கொண்டாட்டத்திற்கு ஒரு பிரிவினர் - வினவு - தளம் போன்றவர்கள் முறையற்ற ஆதரவளித்து, திசை திருப்பிவருகின்றனர்..

மாணவர்கள் என்றால் படிக்கத்தான் பள்ளிக்கோ கல்லூரிக்கோ செல்கின்றனர்.

பஸ் டே எதற்கு? அதனால் என்ன சாதித்து விட்டன இந்த பொறுக்கிகள்? இவர்களை எப்படி மாணவர்கள், வருங்கால இந்தியா என்று நாம் மதியற்று சொல்லமுடியும்?

போலீசிடம் அடிவாங்கி இவர்கள் கூக்குரலிடுகிறார்கள்?

வருடத்தில் இந்த ஒருநாள்தான் சந்தோசமாக இருக்கிறார்களாம்? அப்போ உனக்கு படிக்க பிடிக்கவில்லையா? பின்னே என்ன மயிருக்கு படிக்க வருகிறாய்?

ஏதோ ஒரு குட்டிசுவரில் சாய்ந்துகொண்டு, பான்பராக்கை மென்றுகொண்டும் சிகரெட்டை ஊதிக்கொண்டும் பெற்றோருக்கு பாரமாய் ஊர் சுற்றவேண்டியதுதானே?

வருடத்தின் பஸ் டே அன்றுதான் நீ சந்தோசமாக இருக்கிறாய் என்றால் மற்றனாளெல்லாம் துக்கம் அனுஷ்டிக்கிறாயா?

இவர்களுக்கும் ஒரு கேடுகெட்ட கூட்டம் ஆதரவளிக்கிறது..

ஆனால் மாணவன் என்றால் காலித்தனம் செய்யவேண்டும், ஆசிரியரையோ, பெற்றோரையோ மதிக்கக்கூடாது, என்று கேடுகெட்ட சினிமாக்கள் வரையறுத்து இன்று மக்களை குட்டிச்சுவராக்கி வைத்திருக்கின்றன..

சினிமாக்கூத்தடிகளைப் பற்றி அறிந்திருக்கவேண்டும், சாதனை என்றால் குத்துப் பாட்டுக்கு டிவி நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்டு, சினிமாகூத்தாடிகள் ஜட்ஜெஸ் என்ற பெயரில் போடும் மார்க்குகளை கண்ணீர் மல்க ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சின்னத்திரை கூத்தாடிகளும் வரையறுத்து வைத்துள்ளன.



எந்த ஒரு டிவி சேனலை திருப்பினாலும், ஜட்ஜ் என்ற பெயரில் சினிமாக்கூத்தாடிகள் மேஜையில் அமர்ந்து கொண்டு கன்னத்தில் கை வைத்துக்கொண்டும் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

இவர்கள் முன்னாடி, ஒரு ஆண்களும் பெண்களும் வெக்கமின்றி ஆபாச நடனம் ஆடிக்கொண்டு அவைகள் என்ன சொல்லப் போகின்றன என்று ஆவலோடு காத்துக் கொண்டிருக்கும் அருவருப்பான காட்சிகள்.

இந்த ஆபாச கூத்தாடிகளும் ஏதோ வானத்தில் இருந்து குதித்தன போல - உனக்கு கெமிஸ்ட்ரி - கொரியாகிராபி என்று பருப்புபோல ஏதேதோ சொல்லி மார்க் பிச்சை இடுகின்றன..

இப்படி சீரழியும் இந்த இளைஞர்களை பார்த்தல் நாளைக்கு தமிழ்நாடு பூராவும் பாட்டுப் பாடுவதற்கும் குத்தாட்டம் போடுவதர்க்கும்தான் ஆட்கள் இருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

சிறு குழந்தைகளைக் கூட ஆபாச நடனமிட அதன் பெற்றோர்களே பல்லிளித்துக் கொண்டு நிற்கும் காட்சிகள் மிகக் கேவலமாக உள்ளது..

இன்னும் - டீலா நோ டீலா நிகழ்ச்சியில் பங்கேற்க வருபவர்கள் மானம் மாரியாதை இழந்துதான் அந்த நிகழ்ச்சியில் பங்கேர்க்கவேண்டியுள்ளது.

இவன் குடும்பத்தில் பிரச்சினை, புருஷன் ஓடிவிட்டான், அம்மா பாசம் காட்டவில்லை, கடனாகி விட்டது இப்படி தன சொந்த சோகங்களை எல்லாம் லட்சக் கணக்கானோர் பார்க்கும் வண்ணம் அழுதுவிட்டு அந்த நிகழ்ச்சியில் அந்த கோமாளி கேட்கும் லூசுத்தனமான கேள்விகளுக்கும் பதிலளித்துக் கொண்டிருக்கிறார்கள்..

இது போக,

ஒவ்வொரு கொண்டாட்டங்களிலும் மக்களுக்கு எவ்வளவு தொல்லைகள் என்று பார்த்தல்..

பஸ் டே கொண்டாட்டங்களில் 60 பேர் செல்லும் பஸ்ஸில் நூற்றுக்கும் மேற்பட்ட பொறுக்கிகள் ஏறிக்கொண்டும் குடித்துக் கொண்டும், சாலையில் உள்ள கடைகளை அடைக்கசொல்லியும் பெண்களை கிண்டல் செய்தும் வருகின்றனர்..

அடுத்து இன்னொரு கொண்டாட்டாம் என்ற பெயரில் இறந்தவரை அடக்கம் செய்யவோ, தகனம் செய்யவோ இந்த குடிகார நாய்கள் செய்யும் கூத்துக்கள்..

ஒருத்தன் இறந்துவிட்டால் கவலை கொள்வதுபோல் தெரியவில்லை. பிணத்தின் முன் குடித்துவிட்டு டான்ஸ் ஆடிக்கொண்டும், சாலைகளில் போக்குவரத்துக்கு பெருமளவில் இடைஞ்சல் செய்துகொண்டும் இந்த குடிகாரர்கள் செய்யும் கூத்துக்களுக்கும் அளவே இல்லை..

இன்னும் ஆயுதபூஜை, வெள்ளிகிழமை போன்ற நாட்களில் சாலைகளில் மக்கள் நடந்து போகிறார்கள் என்ற உணர்வு சிறிதும் இன்றி..நாடு ரோட்டில் தேங்காய்களை உடைப்பதும், பூசணிக்காய்களை உடைப்பதும் மிக ஆபத்தில் முடிவதை இவர்கள் உணர்வதே இல்லை..


நியூ இயர் கொண்டாட்டம் என்ற பெயரில் சென்னை போன்ற பெரு நகரங்களில் குடிகாரர்கள் அடிக்கும் கூத்துக்களும் அதனால் ஏற்ப்படும் உயிர்ப் பலிகளும் ஒவ்வொரு வருடமும் முதல்நாள் தினசரிகளில் பார்த்துக் கொள்ளலாம்..



இதுபோன்ற தேவையற்ற கொண்டாட்டங்களால் பெரும் இழப்புகள் ஏற்படுவதை அரசு எப்படி பார்த்துக் கொண்டிருக்கிறது?

இதற்க்கு ஏன் சிலர் ஆதரவு அளிக்கிறார்கள்?

இதுபோன்ற கேள்விகளுக்கு யாராவது விளக்கமளிப்பார்களா?




 

Thursday, March 3, 2011

ஓநாய் அழுத கதை தெரியுமா?



2010 ம் வருடத்தைத் தொடர்ந்து, 2011 ம் வருடமும் ஊழல்கள் வரிசையாக வெளிவரும் நேரமாக இருக்கிறது. அல்லது இதெல்லாம் முன்பே தெரிந்த ஊடகங்களும் எதிர்கட்சிகளும், தேர்தல் நெருங்கி வரும் வேளையில் வெளியிடலாமா என்று காத்திருந்து, இப்போது ஆறு மாநிலங்களுக்கும் தேர்தல்கள் வரும் நேரம் இந்த ஊழல்களை வெளிச்சமிட்டு காட்டுகின்றனவோ என எண்ணவும் தோன்றுகிறது..

சட்டசபை தேர்தலை முன்னிட்டே இவ்வளவு பெரிய பெரிய ஊழல்கள் வெளிவரும்போது, பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இதைவிட பெரிய அளவில் செய்யப்பட்ட ஊழல்கள் வெளிவருமோ என்றும் அச்சமாக உள்ளது.

காமேன்வேல்த் விளையாட்டுப் போட்டி ஊழல்

கார்கில் வீரர்களுக்கான பிளாட் ஒதுக்கீட்டில் ஊழல்

ஸ்பெக்ட்ரம் ஊழல்

ஜி பாண்ட் ஊழல்களைத்தொடர்ந்து

பிரசார்பாரதி ஊழல் என்று இன்று புதிதாக இன்னுமொரு ஊழல்..

ஏறக்குறைய 138 கோடி ரூபாய் முறைகேடு நடந்த விஷயம் வெளியானதை தொடர்ந்து, பிரசார்பாரதி தலைவர் லல்லி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மாநில அரசும் மத்திய அரசும், போட்டி போட்டுக்கொண்டு செய்யும் இந்த கொள்ளைகளைப் பற்றி அலறும் எதிர்க் கட்சிகள் எதனால் அலறுகின்றன?

ஏதோ மக்களின் வரிப்பனமேல்லாம் இப்படி வீணாகிறதே என்றா?

ஹ்ம்ம் அப்படி நினைத்தால் நாம் இன்னும் ஏமாளிகள்தான்

நம்மால் சுருட்டமுடியாதே என்று தான் அவை அலறுகின்றன..

இதோ ஊழல் கட்சிகளான தி. மு.கவும், காங்கிரசும், சிறிதும் கூச்சமின்றி, கூட்டணிக்கு பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கின்றன..

இன்னும் கொஞ்ச நாட்களில், ஊழல் செய்வது எனபது கூட ஒரு கட்சியின் அங்கீகாரத்திற்கான சான்றாகிவிடும் போலிருக்கிறது..



Tuesday, March 1, 2011

மன் மதன் அம்பு.. - மிகத் தாமதமான அம்பு..



முன்பெல்லாம் கமலஹாசன் நடித்த படம் என்றால் சற்று ஆர்வமாக செல்பவர்களில் ஒருவனாக இருந்தேன்..
நாளடைவில் சினிமாவின் அசிங்கங்களும், நடிகர்கள் வெறும் கூத்தாடிகள் என்றும் உண்மை புலப்பட ஆரம்பித்த பிறகும், கமல் ஹாசன் படங்களில் ஏதாவது வித்தியாசமாக இருக்கும் என்று நாமாகவே கற்பனை செய்து செல்கின்ற படங்களும் உண்டு...

ஹேராம், உன்னைப் போல் ஒருவன் போன்ற படங்களுக்குப் பிறகு, கமலின் உள்மனதின் வக்கிரங்களும், அவரது ஜாதிய உணருவும் வெளிப்பட்டது.
இருந்தும், தசாவதாரம், போன்ற படங்கள் ஒரு பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்ட படமாக வந்திருந்தது..

அனாலும், அப்போதிருந்த ஆர்வம், மன் மதன் அம்பு படத்தின் மீது இல்லை..காரணமும் புரியவில்லை..
கே. எஸ் ரவிக்குமார் ஒரு ஜனரஞ்சக இயக்குனர்.
கமலஹாசன் வித்தியாசமாக (?) நடிக்கக்கூடியவர்...
புதிதாக பேரழகி திரிஷா இணை..
தயாரிப்பு கழகத்தின் வாரிசு..
இப்படி ஏராளமான எதிர்ப்பார்ப்புகள் இருந்தாலும்,
விளம்பரங்களில் படம் சம்மந்தப் பட்டவர்கள் ஆர்வம் செலுத்தாததினால் படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பு குறைந்து போனது உண்மைதான்.

தன நண்பரின் ஆபரேசன் செலவுக்காக - ஒரு நடிகையின் நடவடிக்கையை - உளவு பார்த்து அவளின் வருங்கால கணவனுக்கு சொல்லும், ஒரு மேஜராக கமல்.
நடிகையாக திரிஷா
திரிஷாவின் வருங்கால கணவனாக மாதவன்.

ஒரு ஷூட்டிங் முடிந்து மாதவனுடன் திரிஷா கார் ஒட்டி செல்கிறார்.
அப்போது இருவருக்கும் ஏற்படும் பேச்சுவார்த்தையில், கவனம் திசை மாறி எதிரில் வரும் காரை இடித்துவிட்டு ஒரு மலைப்பாங்கான இடத்தில் மோதி நிற்கிறது.
அதன் பிறகு ஏற்படும் சில குழப்பங்களில் திரிஷா மாதவனை விட்டு பிரிந்து ஓய்விற்காக வெளி நாட்டிற்கு சென்று ஓய்வெடுக்கிறார்.
அந்த சமயத்தில்தான் மாதவன் அவரை உளவு பார்பதற்காக கமல் ஹாசனை அனுப்பி வைக்கிறார்.
கமலுக்கு எந்த விதமான தவறும் திரிஷாமீது தென்படாததை, மாதவனிடம் சொல்ல, "அப்போ அவள் மீது தப்பு இல்லையே..அப்போ உனக்கு எதுக்கு நான் பேமென்ட் தரனும் " என்று பணம் கொடுக்க மறுத்து விடுகிறார்.
இதனால் கமல் - திரிஷா வேறொரு நண்பனை சந்திப்பதாக பொய் சொல்லி மாதவனிடம் பணம் வாங்க திட்டமிட்டு அதன் படியே பணம் பெறுகிறார்.

இதனிடையே - ஒரு சந்திப்பில் திரிஷா விபத்து ஏற்படுத்திய காரில் பயணம் செய்தவர்கள் கமலும் அவது கர்ப்பிணி மனைவியும் என்றும், அந்த விபத்தில் கமல் தனது மனைவியை பலி கொடுத்தார் என்றும் தெரிய வர திரிஷா அவர்மீது அனுதாபம் கொள்கிறார்.
ஆரம்ப கட்டங்களில் மிகவும் மெதுவாக செல்லும் அம்பு, கமல் திரிஷா வின் மீது தவறு இருப்பதாக சொல்ல ஆரம்பிக்கும்போது வேகமெடுக்கிறது.
அதன் பிறகு, கமல் - கிரேசி மோகன் கூட்டணி படங்களைப் போல் குழப்பமான பல காட்சிகளுக்கு பிறகு,
கமல் திரிஷா ஜோடி சேருகிறார்கள்..தமிழ்படங்களின் பார்முலாப்படி.

குடிக்கு முக்கியத்துவம் தரும் தமிழ் சினிமாக்களின் வகையில் இந்த படமும் சேருகிறது.
மாதவன் படம் முழுவதும் குடித்துக் கொண்டே இருக்கிறான்...

இது போன்ற கதைகள் உள்ள ஆயிரமாவது படங்களாக இருக்கலாம்
இதற்காக எதற்கு வெளிநாடு சென்றார்கள்?
அதே கதையில் ஒரு காட்சியில் வரும் வசனம் போல - தவறு செய்ய இருக்குமோ?

ஓவியா என்றொரு நடிகை சிறு வேடத்தில் வந்தாளாம்..அதை இங்குள்ள பெரிய பெரிய ஆபாச பத்திரிக்கைகளும், வலைப்பதிவர்களும், மிகவும் வருத்தப்பட்டு இருந்தன. ஏதோ ஓவியாதான் திரைப் படத்தையே கண்டுபிடித்தவள் போல..

நடிகை என்றால் எப்படி நடித்தாலும் நடிப்புதானே..


மற்றபடி மிகவும் சாதாரண படம்

இதை பெரிய நடிகர்கள், இயக்குனர்., தயாரிப்பாளர் போன்ற பிரம்மாண்டத்தில் ஏமாற்ற முயற்ச்சித்து ஏமாந்து போய் இருக்கிறார்கள்.

மன் மதன் அம்பு..கத்துக்குட்டி இயக்குனரின் படம்போல உள்ள ஒரு மிக மிக சாதாரண படம்..