Pages

Monday, April 26, 2010

ஐ பி எல், ஜென்டில்மேன்கள், அடிமைகள்.

"இனிமேலும் கிரிக்கெட்டை "ஜென்டில்மேன்களின் விளையாட்டு" என்று சொன்னால் இதை கண்டுபிடித்த வெள்ளைக்காரன் நம்மை உதைக்க வரமாட்டானா? "

ஆபாச வியாபாரம் செய்யும் ஆனந்த விகடன் ஐ பி எல்லை பற்றிய சமீத்திய தலையங்கம் இது .  இந்திய ஐ பி எல் விளையாட்டில் ஊழல் வெளிவந்து விட்டதாம்..இனிமேல் கிரிக்கெட்டை ஜென்டில்மேன்கள் விளையாட்டு
 என்று சொன்னால் வெள்ளைக்காரன் நம்ம அடிக்க வந்துவிடுவானாம்..அட பன்னாட...

இன்னுமா உன் அடிமை புத்தி போகல...சுதந்திரம் வாங்கி அறுபது வருடங்களுக்கும் மேல ஆயாச்சு,, வெள்ளக்காரன நாம் தொரத்தி அடிச்சாச்சி..ஆனா இந்த பார்ப்பன ஆனந்த விகடன், தன் பரம்பரை அடிமைத்தனத்தையும் விசுவாசத்தையும் இன்னும் விடாம, கிரிகெட்டை ஜென்டில்மேன் விளையாட்டுன்னு சொன்னா  வெள்ளைக்காரன் அடிக்க வந்துடுவான்னு சொல்றானே..

வெள்ளைக்காரன் சொல்லிட்டா அது ஜென்டில்மன் விளையாட்டா? வெள்ள டிரஸ் உடுத்திட்டா அது ஜென்டில்மேன் விளையாட்டா..யாருடா சொன்னது?
இரயில் பாதைகளை அமைத்தது வெள்ளைக்காரன்தான் என்று சொல்லுவார்கள் (ஒவ்வொரு காலகட்டத்திலும் யார் ஆட்சி செய்தாலும் அந்தக்கால தேவைகளை பூர்த்தி செய்தே ஆகவேண்டும்)...அப்படிஎன்ற ரயில் ஆக்சிடென்ட் ஆனால் வெள்ளைக்காரன் வந்து உதைக்கிரானா?



சில கட்டிடங்களை கட்டி வைத்து இருந்தான்..அதை இடித்திருக்கிறோம்..அப்போது வந்து என்னத்தை புடுங்கினான் ?

வெள்ளைக்காரன் காலத்தில் உள்ள விசயங்களில் இந்திய நிறைய மாறுதல்களைச் சந்தித்து வருகிறது...அவனுக்கு அடிமை என்கிற மனோபாவம் மட்டும் இன்னும் மாறவில்லை..அதற்கு ஆனந்த விகடன் போன்ற அடிமைகளும் அடிக்கடி இது போல தூபமிட்டு வருவதும் ஒரு காரணம்..


கிரிக்கெட் முட்டாள்களின் விளையாட்டுன்னு அவங்க வெள்ளைக்காரனே சொல்லிட்டானே அது தெரியாதா  இந்த ஆபாச வியாபாரிக்கு?

பந்தை சேதபடுத்தினார்கள், பிட்சை சேதப்படுத்தினார்கள், சூதாட்டம் விளையாண்டார்கள்..

கண்ட கண்ட நடிகைகளுடன் சுற்றினார்கள்..விளம்பரத்தில் அந்நிய பொருட்களை வாங்க சொன்னார்கள்..எல்லாம் செய்து விட்டு நாட்டுக்காக விளையாடுகிறேன் என்று சொன்னார்கள்..அப்போதெல்லாம் தெரியவில்லையா இது ஒரு ஏமாற்று வேலை என்று?

 ஐ பி எல் வந்தது..

ஆடம்பரம் செய்தார்கள்... நான்கு ரன்கள். ஆறு ரன்கள் எடுக்கும்போதும், மற்றும் அவுட் ஆகும்போது, அழகிகளை விட்டு ஆபாச நடனம் ஆடச் செய்தார்களே அப்போது தெரியவில்லையா இது ஒரு கேவலமான விளையாட்டு வியாபாரம் என்று?

பண்டைய காலங்களில் மன்னர்கள் அடிமைகளை ஏலம் எடுப்பதுபோல விளையாடுபவர்களை கோடி கணக்கில் ஏலத்தில் எடுத்தார்களே அப்போது தெரியவில்லையா இது ஒரு அடிமைகளின் விளையாட்டு என்று..?

அந்த அணிகளின் முதலாளிகள் யார்? சாராயம் விற்பவன், சினிமாவில் கூத்தடிப்பவன், ஆபாசமாக நடிக்கும் நடிகைகள்தானே...அப்போது தெரியவில்லையா இது ஒரு விபச்சாரிகளின் கூட்டம் என்று?

ஒரு பக்கம் சாருக்கான் நின்று கொண்டு ஆடுகிறான், ஒரு பக்கம் ப்ரீத்தி ஜிந்தா வர்றவன் போறவனை எல்லாம் கட்டி பிடித்துக்கொண்டு இருக்கிறாள்..இன்னொரு பக்கம் சில்பா செட்டி கண்டவனுடன் போஸ் கொடுத்துக்கொண்டு நிற்கிறாள், விஜய் மல்லையாவின் மகன் தீபிகா படுகோனே என்ற நடிகையுடன் அலைகிறான்.அம்பானியின் மகளை ஹர்பஜன் சிங் தூக்கிவைத்துக் கொண்டு ஆடுகிறான் (கொண்டாட்டமாம்)

.அப்போது தெரியாதா இது ஒரு அசிங்கமான விளையாட்டு என்று?


லலித் மோடி ஊழல் செய்தான், சசி தரூர் அதிகாரத்தை பயன் படுத்தினான், பெண்களும் நடிகைகளும் பகடைக்காய்களாக  இருக்கிறார்கள்...

இதுதான் காலம் காலமாக நடந்து வருகிறது...

இதே லலித் மோடியை வைத்து
 "எப்படி ஜெயித்தார்கள்"  என்று கட்டுரை எழுதி இளைஞர்களின் வழிகாட்டியாக, ஒரு மாபெரும் சாதனையாளனாக  இந்த ஆபாச பத்திரிக்கைகள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடவில்லையா?

பாரம்பரிய பத்திரிகை என்று பீற்றிகொள்ளும் இந்த மாங்கா மடையனுக்கு இதைப் பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லையா இது ஒரு ஏமாற்றுபவர்களின் சூதாட்டம் என்று?

இப்போது இந்த ஐ பி எல் விவகாரத்தை வைத்து இந்த பன்னாடைகள் என்னத்தை கிழிக்கப்போகின்றன...வியாபாரம் அவ்வளவுதான்..

பெங்களூரு ஸ்டேடியத்தில் குண்டு வைத்ததுகூட இந்த ஊழலை மறைக்க இந்த பண முதலைகளே நடத்தி இருக்கலாம்..


 
வழக்கம்போல டெஸ்டு கிரிகெட்டும், ஒன் டே கிரிக்கெட்டும், டி 20 கிரிக்கெட்டும் நடந்து கொண்டுதான் இருக்கும். பண முதலாளிகளும், கிரிக்கெட் பெருச்சாளிகளும், விளையாடும் அடிமைகளும், ஆட்டம் போடும் ஆபாச கூத்தாடி முதலாளிகளும், ஊடகங்களும், சம்பாதித்துக்கொண்டுதான் இருப்பார்கள்..பத்திரிக்கைகள் இதை வைத்து பிழைத்துக் கொண்டிருப்பார்கள்....

வெக்கம்கெட்ட விகடன் உணர்ந்துகொள்ளட்டும் வெள்ளைக்காரன் அடிக்க வந்தால் செருப்படி வாங்குவான் என்று..அவன் மட்டுமல்ல அவனுக்கு வால்பிடித்து இன்னும் அடிமையாக  வாழும் .அவன் அடிமைகளும்தான் !

Saturday, April 24, 2010

ஒட்டு வாங்கிக் குவிக்கும் மொக்கைகள்..!!!

ஒட்டு வாங்குவது ஒரு கலை, நான் கலைஞரைச் சொல்லவில்லை..அழகிரியைப் பற்றியும் சொல்லவில்லை...நமது பதிவர்கள் ஒட்டு வாங்க அலையும் போக்கைத்தான் சொல்கிறேன்..

இந்த பிளாக்கர்களுக்கு இணையத்தளம் ஒரு சரியான வடிகாலாக இருக்கிறது..நன்றாக எழுதுபவர்களாகட்டும், எழுத ஆசைப்படுபவர்களாகட்டும்...சுமாராக எழுதுபவர்களாகட்டும் எல்லாரது ஆசையும் தீர்த்துவைத்துவிடுகிறது இந்த ப்ளாகர்ஸ் பக்கம்..

தமிழ்மணத்திலும், தமிளிஷிலும் ஒட்டு வாங்க,, நிறைய நண்பர்களைப் பிடித்து வைத்திருந்தால் போதும்..அவர் எப்படி எழுதி இருந்தாலும், இறுதியில் ஓட்டுப்போடுங்க நண்பரே என்ற குறிப்பு மறக்காமல் எழுதிவிடுகிறார்கள்...நண்பர்பகளும் ஓட்டுப் போட்டுவிட்டு கடமை முடிந்துவிடுகிறது என்று சென்று விடுகிறார்கள்..இதனால் பல நல்ல பதிவுகள் படிக்கபடாமலேயே போய் விடுகின்றன.. இது ஒரு மோசமான வியாபாரமாகிவிடும் அபாயம் உள்ளது..

ஒட்டு வாங்குவது ஒரு "adiction " ஆகி விட்டது..எனக்கும் கூட தமிளிஷ்இல் இருந்து ஈமெயில் வந்தால் ஏதோ ஒரு உற்சாகம் மனதுக்குள் வந்து விடுகிறது..நான் பெரும்பாலும் அதிக ஒட்டு வாங்கிய பதிவுகள் இன்னும் எனக்கு திருப்தி அளிக்காதவைதான்..

நண்பர்களே, நல்ல, தரமான பதிவுகளை தேர்ந்தெடுங்கள்...ஒட்டு போடுவதைவிட பின்னூட்டம்தான் ஒரு பதிவரை மேலும் கவனம் செலுத்த வைக்கும்...எல்லாவற்றுக்கும் கண்ணை மூடிக்கொண்டு ஓட்டைப் போடுவதால் பல நல்ல பதிவுகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன..பதிவர்களும் உற்சாகம் இழந்துவிடுகிறார்கள்..மொக்கை போடுபவர்களும், இப்படித்தான் எழுதவேண்டும் போல என்று கண்டதையும் எழுதிவைக்கிரார்கள்..

இப்போது டி விக்களாலும், கம்ப்யூட்டர், போன்றவைகளாலும் எழுதும் மற்றும் படிக்கும் பழக்கும் ஒழிந்துவிடுமோ இன்று அஞ்சிக்கொண்டிருக்கையில், இந்த ப்ளாக்கர்ஸ் மூலம் மீண்டும் எழுதும் மற்றும் படிக்கும் பழக்கம் அதிகமாகி உள்ளது..அது மேலும் தொடர, நல்ல இடுகைகளுக்கு ஆதரவு அளியுங்கள்.. மொக்கைகளை விமர்சியுங்கள், அதிகமதிகம் பின்னூட்டமிடுங்கள். இதனால் மொக்கை போடுபவர்களும் தங்களது திறமையை வெளிக்கொண்டுவர வாய்ப்புண்டு, நன்றாக எழுதுபவர்களும் இன்னும் எழுத ஆர்வம் கொள்ளுவார்கள்..

நான் சற்று அதிகமாக சொல்லியிருந்தால்..பின்னூட்டமிடுங்களேன்.....என்னையும் நான் திருத்திக்கொள்வேன்...ஹி ஹி...

Thursday, April 1, 2010

உலகை அச்சுருத்திக் கொண்டிருக்கும் உயிர்கொல்லி எயிட்ஸ்

இன்று உலகை அச்சுருத்திக் கொண்டிருக்கும் கொடிய உயிர்கொல்லி எயிட்ஸ் எனும் தொற்று நோய் முதன் முதலில் 1981ல் அமெரிக்காவில் ஒருவரைத் தொற்றியது கண்டு பிடிக்கப்பட்டது.


அதற்கான மருந்தை கண்டு பிடிப்பதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டும் முடியாமல் போகவே உயிர் கொல்லி எயிட்ஸின் வைரஸ் கிருமிகள் அசுர வேகத்தில் அமெரிக்காவின் மூலை, முடுக்குகளில் பரவத் தொடங்கியது.

அது முதல் இதுவரை அதற்கான மருந்தை கண்டுப் பிடிப்பதற்காக அமெரிக்காவுடன் உலக மருத்துவக் குழு முயற்சித்தும் முடியாமல் விழிப்பிதுங்கி நிற்கின்றது.

இது முறையற்றப் பாலுறவின் பல வழிகளில் தொற்றுகிறது என்றும் இது தொற்று நோய் என்பதால் அதிகபட்சம் மேற்காணும் விலைமாதர்கள் மூலமே இதுப்பரவுகிறது என்றும், தொடர்ந்து விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களை விடாது துரத்தும் என்றும் மருத்துவ ஆய்வறிக்கைகள் அன்றிலிருந்து இன்றுவரை எச்சரித்துக் கொண்டிருக்கின்றன.

கொடிய உயிர் கொல்லி எயிட்ஸ் அமெரிக்காவில் பரவிக் கொண்டிருக்கும் தகவல் அறிந்து அமெரிக்காவிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த ஏராளமான வெளிநாட்டவர்கள் அங்கு கடைவிரிக்கப்பட்டிருக்கும் விபச்சாரத்தில் விழாமல் கவனத்துடன் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அமெரிக்காவிற்கு சென்று திரும்புபவர்கள் மிக கவனமாக திரும்பினாலும், அமெரிக்காவிலிருந்து பிற நாடுகளுக்கு செல்லும் அமெரிக்கர்கள் ஒன்றிரண்டுப் பேர் மூலமாக இக்கொடிய உயிர் கொல்லி எயிட்ஸ் நோய் அமெரிக்காவிற்கு வெளியிலும் பரவத் தொடங்கியது.

1981ல் அமெரிக்காவில் மட்டும் கண்டுபடிக்கப்பட்ட எயிட்ஸ் நோயாளி இன்று உலகின் ( விபச்சாரம் அனுமதிக்கப்படாத நாடுகளைத் தவிற ) பெரும்பாலான நாடுகளில் புற்றீசல்கள் போல் பெருகி விட்டனர்.

இக்கொடிய உயிர்கொல்லி நோய் தொற்று நோயாகவும் இருப்பதால் முறையற்றப் பாலுறவில் ஈடுபடும் சேடிஸ்டுகள் மட்டுமல்லாமல் இதில் அறவே சம்மந்தப் படாத எண்ணிலடங்கா அப்பாவிகளையும், குழந்தைகளையும் கூட காவு கொண்டிருக்கின்றது.

இக்கொடிய நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் கவலை அடைந்த உலக சுதாதார மையம் ( W H O ) (The World AIDS Campaign) தொடர்ந்து உலகம் முழுவதிலும் கீழ்காணும் தலைப்புகளில்

Ø எயிட்சும், இளைஞர்களும்,

Ø எயிட்சும், பெண்களும்,

Ø எயிட்சும், குடும்பமும்,

Ø எயிட்சும், குழந்தைகளும்,

Ø பெண்களும், எச்.ஜ.வி யும்,

Ø சவாலை எதிர் கொள்,

Ø சமூகத்தின் ஈடுபாடு.Ø உரிமைகளும், பொறுப்புகளும்,

Ø ஒரு உலகம், ஒரு நம்பிக்கை,

Ø மாற்றத்திற்கான சக்தி,

Ø செவி கொடு, கற்றுக் கொள்,

Ø எயிட்சை மாற்றும் சக்தி,

Ø நான் பாதுகாப்புடன் நீ ?

Ø எயிட்ஸை நிறுத்து சத்தியத்தைக் காப்பாற்று,

இது போன்ற இன்னும் பல தலைப்புகளில் 1988 லிருந்து 2010 வரையிலும் எயிட்ஸ் விழிப்புணர்வு முகாம்களை சடவடையாமல் நடத்திக் கொண்டிருக்கின்றது. http://www.worldaidscampaign.org/இவ்வேளையில் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் உலகம் முழுவதிலிமிருந்து குவியவிருக்கும் பணக்கார ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக 40 ஆயிரம் விலைமாதர்கள் அங்கு குவிக்கப்படவிருப்பதாக அமெரிக்காவின் நியூயார்க் டெய்லி நியூஸ்; கூறுவதாக தினகரன் 10-03-2010 கூறுகிறது. ஓருப்பக்கம் எயிட்ஸின் தீமைப் பற்றிய விழிப்புணர்வு முகாம்களை உலக சுகாதார மையங்களும், தண்ணார்வ அமைப்புகளும் நடத்திக் கொண்டிருக்கையில் ஏற்கனவே 16சதவிகிதம் எயிட்ஸ் நோயாளிகள் நிறைந்திருக்கும் தென்னாப்பிரிக்காவிற்கு 40ஆயிரம் விலை மாதர்களை அனுப்பவிருக்கும் விபரீத முடிவை நாட்டு மக்களின் ஆரோக்கியம் கருதி தென்னாப்பிரிக்க அரசு முணைப்புடன் தடுத்து நிருத்த முன்வர வேண்டும்.

விலை மாதர்கள் அனுப்புவது நிருத்தப்பட வில்லை என்றால் உலக கோப்பை கால்பந்து போட்டியை தடை செய்வோம் என்று அறிவிக்க வேண்டும்.

இந்த போட்டிகள் நடத்தப்படும் நாடுகளே அதிகபட்சம் கப்புகளை வாங்கிக் குவிக்கும் அதனால் ஒரு சில நாட்கள் அந்த நாட்டின் வீர, தீர விளையாட்டுக்களைப் பற்றி உலகம் பேசும்.

அது அந்த ஓண்றிரெண்டு நாட்கள் மட்டும் பேசப்பட்டு முடிந்துவிடும் ஆனால் அங்கு பரப்பப்பட்ட கொடிய உயிர் கொல்லி எயிட்ஸின் வைரஸ் கிருமிகள் ஒருவர் மற்றொருவர் மூலமாக பரப்பி அதனால் நாளொரு மேனிப் பொழுதொரு வண்ணம் சிறிது, சிறிதாக அப்பாவி மக்கள் செத்து மடிந்து கொண்டிருப்பார்கள்.

ஒன்றிரண்டு நாட்கள் மட்டும் ஆஹா, ஓஹோ வென்று உலகம் புகழுகின்ற வெறும் புகழை நாட்டுக்கு சேர்க்க தென்னாப்பிரிக்க அரசு விரும்புகின்றதா ?

அல்லது

கொடிய உயிர் கொல்லி எயிடஸ் தொற்று நோயினால் சிறிது சிறிதாக மண்ணின் மைந்தர்கள் செத்து மடிந்துக் கொண்டிருக்கும் சங்கிலித் தொடர் மரணத்தை விரும்புகின்றதா ?

உலக சுதாதார மையமோ, தண்ணார்வ அமைப்புகளோ இதில் தலையிட்டு தடுத்து நிருத்த முடியாது அவர்களால் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மட்டுமே மேற்கொள்ள முடியும். இதைத் தடுத்து நிருத்தும் சக்தி தென்னாப்பிரிக்க அரசிடம் உள்ளது.

உலகின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்துக் குவியும் ஓரிடத்திற்கு இப்படி ஒரு ஈனச்செயலை வருடந்தோறும் செய்து இன்னும் எயிட்ஸ் பரவாதப் பகுதிகளுக்கும் பரவச் செய்யும் நோக்கில் இந்த சேடிஸ்டுகள் செயல்படுவதால் உலகம் முழுவதிலும் உள்ள மக்களும் இதற்கு எதிராக களம் இறங்க வேண்டும்.
 
நல்லோர்களின் நடுநிலையாளர்களின் கவனத்திற்கு


Ø ஏற்கனவே இந்த விளையாட்டுக்களில் சூது கோலோச்சிக் கொண்டிருக்கின்றது, ஒவ்வொரு அணியினர் மீதும் கோடிக்கணக்கானத் தொகை பந்தயமாக கட்டப்படுகின்றது. Ø விளையாட்டு வீரரகளில் சிலர் இரகசியமாக ஊக்க மருந்துகளை உட்கொண்டு உற்சாகமாக ஓடி ஆடி விளையாடி இயற்கைக்குப் புறம்பான மோசடியில் ஈடுபட்டு தானும் கோடிக் கணக்கில் சுருட்டிக் கொண்டு, சூதாடிகளுக்கும் கோடிக் கணக்கில் ஈட்டிக் கொடுக்கின்றனர். Ø சில பிளேயர்கள் பணத்திற்காக, இன்னும் பல நோக்கத்திற்காக திறமை இருந்தும் வேண்டுமென்றே சொதப்பி நாட்டை தலைகுணியச் செய்யும் துரோகிகளாக மாறியும், மாறிக் கொண்டுமிருக்கின்றனர்.Ø இன்னும் இதில் மதம் புகுத்தப்பட்டு விளையாட்டு வீரர்கள் மதவெறியர்களின் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, அவர்கள் விளையாடும் ஆடுகளம் கொத்தி சிதைக்கப்பட்டிருக்கின்றது,

உலகம் கண்டு களிக்கும் இந்த விளையாட்டுக்களில் புகுந்துவிட்ட மேல்படி தீமைகளை களைவதுடன், பலநாடுகளிலிருந்தும் வந்து குவியும் மக்களின் ஆரோக்கியம் கெட்டு, தாய் நாட்டில் பிறருக்கும் பரவச் செய்யும் எயிட்ஸ் வைரஸ் கிருமிகளைப் பரப்பும் விபச்சாரம் தடுத்து நிருத்தப் பட்டால் தீமைக்கு அஞ்சும் மக்களும் அச்சம் தவிர்ந்து கண்டு களிக்கும் நிலை உருவாகலாம்.

இல்லையேல் தீமைக்கு அஞ்சும் நன்மக்கள் இதை வெறுத்து ஒதுங்கட்டும், பிறருக்கும் இதில் புகுந்து விட்டத் தீமைகளை விளக்கிக் கூறித் தடுக்கட்டும். நமக்கென்ன என்று விட்டு விட்டால் நமக்கும் இதுத் தொற்றும் அபாயம் உள்ளது.

அப்புறம் ஒரு சிறிய கேள்வி..


நீங்கள் ஆட்டோக்களின் பின்புறங்களிலும் மற்றும் எய்ட்ஸ் பற்றிய மற்ற விளம்பரங்களிலும் "ஒருவனுக்கு ஒருத்தி!" என்னும் விளம்பரங்களைக் காணலாம்..

ஒருவனுக்கு ஒருத்தி என்பதைவிட..

"ஒருத்திக்கு ஒருவன்!"

 என்பதே சரி என்பது எனது நிலைப்பாடு..

பிளீஸ் பதிவர்களே..இது பற்றிய உங்களது கருத்துக்களை பின்னூட்டமிடுங்களேன்...

ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

Wednesday, March 31, 2010

அழிந்து வரும் சிட்டுக் குருவி இனம்..

பறவை இனங்களில் எத்தனையோ வகைகள் இருந்தாலும், அதில் சிட்டுக்குருவி இனம் மட்டும் மனிதர்களை சார்ந்து வாழக்கூடியது. அதனால்தான், அதை அடைக்கல குருவி என்று அழைக்கிறார்கள். மனிதர்களின் அடைக்கலத்தில்தான் அவை வாழும்.

மற்ற பறவைகள் எல்லாம் காடுகளிலும், மரங்களிலும் கூடு கட்டி வாழும் தன்மை கொண்டவை. ஆனால், சிட்டுக் குருவி வீடுகளில் உள்ள பொந்துகளிலும், உத்திரத்தின் மேலும், போட்டோக்களுக்கு பின்புறமும் கூடுகளை அமைத்துக்கொண்டு, மனிதர்கள் உட்கொள்ளும் தானியங்களை உண்டு வாழும்.

அதனால் இந்த சின்னஞ்சிறிய சிட்டுக்குருவிகளுக்கு யாரும் தொந்தரவு கொடுக்க நினைக்க மாட்டார்கள். கிராமங்களில் உள்ள வீடுகளில் சிட்டுக்குருவிகள் கூடு கட்டி வாழ்ந்தால், கூட்டைக் கலைக்கக் கூடாது என்று கூறுவார்கள். ஏனென்றால், சிட்டுக் குருவியை வீட்டைவிட்டு விரட்டினால், தனது குடும்பமும் பிரிந்துவிடும் என்று இன்னமும் நம்புகிறார்கள்.

அதனால்தான், கிராமங்களில் எந்ததவித தொந்தரவும் இல்லாமல், "கீச்..கீச்.." என்ற மெல்லிய சத்தத்துடன் துருதுரு என்று சிட்டுக் குருவிகள் பறந்து திரியும். சுறுசுறுப்புக்கு கூட கிராமத்தில் சிட்டுக்குருவியைத்தான் இன்னும் உதாரணமாக சொல்வார்கள்.

சிட்டுக்குருவியை வைத்து சினிமாக்களில் கூட பாட்டுக்கள் எழுதுகிறார்கள்..."சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு...", சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து..", "சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது..", .. " ஏ குருவி..சிட்டுக் குருவி.." என்று எத்தனையோ பாடல்களை உதாரணமாகச் சொல்லலாம்..

ஆனால், இந்த சிட்டுக் குருவிக்கு செல்போன் கோபுரம் என்ற எமன் வடிவில் ஆபத்து வந்துள்ளது.

செல்போன் கோபுரங்களில் இருந்து வெளிவரும் கதிர் வீச்சு, சிட்டுக் குருவியின் இதயத்தை தாக்குகிறது. இதனால், சிட்டுக் குருவி சுருண்டு விழுந்து சாகிறது...செல்போன் கோபுரங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைகிறது.

ஒருகாலத்தில் கிராமம், நகரம் என்று எங்கு பார்த்தாலும் சிட்டுக் குருவியைப் பார்க்கலாம். ஆனால், தற்போது நகரங்களில் சிட்டுக்குருவிகளை பார்ப்பதே அரிதாகிவிட்டது. சென்னை நகரில் சிட்டுக்குருவிகள் வேகமாக அழிந்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் மைனா உட்பட ஒரு சில பறவைகளைத்தான் காண முடிகிறது.

மேலும், சிட்டுக்குருவிகளுக்கு கூடுகட்ட தேவையான இடங்கள் தற்போது இல்லை. ஏனென்றால், கூரை வீடுகள் எல்லாம் கான்க்ரீட் கட்டிடங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. விவசாய பயிர்களுக்கு நாம் தெளிக்கும் மருந்துகளும் சிட்டுக் குருவி அழிவுக்கு ஒரு காரணம் ஆகும்.

இதே நிலை தொடர்ந்தால், வருங்காலங்களில் குழந்தைகளுக்கு சிட்டுக் குருவிகளை படங்களில் மட்டும்தான் காட்டமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே, சிட்டுக்குருவி இனங்களை காப்பாற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பறவை ஆராய்ச்சியாளர்களும், ஆர்வலர்களும், கோரிக்கைவைத்துள்ளனர்.

தினத்தந்தியில் வந்த ஒரு கட்டுரை...நமது பதிவர்களின் பார்வைக்கு வைத்துள்ளேன்..

இந்த கட்டுரையால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை என்று தெரியும்..ஏனென்றால் இதன் காரணமாக நாம் செல்போன் பேசுவதை நிறுத்திவிடபோகிறோமா? அல்லது சிட்டுக்குருவிகளுக்கு கூடுதான் கட்டிதரப் போகிறோமா...

ஒரு ஏழைக்கு உணவு கொடுக்க மறுக்கும் பணகாரவர்கத்தினர் , தங்களது நாய் செத்துவிட்டால் "obituary" காலத்தில் விளம்பரம் கொடுத்து அழுவார்கள்..அவர்களுக்கு இந்த பரிதாபத்திற்குரிய  சின்னஞ்சிறிய பறவைகள் எல்லாம் ஒரு பொருட்டா?

Tuesday, March 30, 2010

பென்னாகரம் இடைத்தேர்தல் முடிவுகள்..!!!

பென்னாகரம் இடைத்தேர்தல் முடிவுகள் மெதுவாக அறிவிக்கப்பட்டு வருகிறது. 7 வது சுற்றின்படி தி.மு.க., வேட்பாளர் இன்பசேகரன் 32 ஆயிரத்து 250 ஓட்டுக்கள் பெற்று தற்போது பா.ம.க., வேட்பாளரை விட 19 ஆயிரத்து 595 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று முன்னிலை வகிக்கிறார். 7 வது சுற்றின் படி தி.முக., வேட்பாளர் இன்பசேகரன் 32 ஆயிரத்து 250 ஓட்டுக்களும், அடுத்தப்படியாக பா.ம.க., வேட்பாளர் தமிழ்க்குமரன் 12 ஆயிரத்து 655 ஓட்டுக்களும் , அ.தி.மு.,க வேட்பாளர் 11 ஆயிரத்து 441 ஓட்டுக்களும் , தே.மு..தி.க., வேட்பாளர் காவேரி வர்மன் 4 ஆயிரத்து 506 ஓட்டுக்களும் பெற்றுள்ளனர்.



அ.தி.மு.க., வை பின்னுக்கு தள்ளிய பா.ம.க., : எந்த தேர்தலிலும் முடிவுகள் அறிவிக்கப்பட்டு கொண்டிருக்கும் போது தி.மு.க, அல்லது அ.தி.மு.க., என முன்னிலையில் முன்னும், பின்னுமாக இடம் பிடிக்கும். இந்த பென்னாகரம் தேர்தலை பொறுத்த மட்டில் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனியாக போட்டியிட்ட பா.ம.க., 6 வது சுற்று வரை 2 வது இடத்தை பிடித்து வருகிறது. . அ.தி.மு.க, இது வரை அறிவிக்கப்பட்ட சுற்றில் பா.ம.க., வேட்பாளரை விட ஆயிரம் , 500 ஓட்டுக்கள் குறைவாக பெற்று பின்தங்கி வருகிறார். இத்தொகுதியில் பா.ம.க., வின் வன்னியர்கள் ஓட்டு பலம் சற்று கூடுதலாக உள்ளதே இதற்கு காரணம்.

தபால் ஓட்டில் தி.மு.க., முந்தியது : முதலில் எண்ணப்பட்ட தபால் ஓட்டில் தி.மு.க.,வுக்கு 32 ஓட்டுக்களும், அ.தி.மு.க.,வுக்கு 3 ஓட்டுக்களும், பா.ம.க.,வுக்கு 2 ஓட்டுக்களும் கிடைத்தன. 2 வது சுற்று அடிப்படையில் தி.மு.க., சுமார் 5 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது. தற்போது 4 வது சுற்று எண்ணப்பட்டு வருகிறது. ஆனால் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் சுற்று வாரியாக விவரங்களை அறிவிக்கவில்லை. சற்று காலதாமதம் செய்தனர். அவசரப்படாமல் தெளிவாக எண்ணப்பட்டு டேலி ஆனவுடன் அறிவிப்போம் என்றனர். இதனால் அங்கு இருக்கும் பத்திரிகையாளர்கள் வாக்குவாதம் செய்தனர்.

இந்த தேர்தலில் இன்பசேகரன், ( தி.மு.க.,), அன்பழகன் ( அ.தி.மு.க.,) , தமிழ்க்குமரன் (பா.ம.க.,) காவேரி வர்மன் ( தே.மு.தி.க., ) மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 31 பேர் போட்டியிட்டனர். அனைத்து கட்சியினரும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர். கட்சியின் தகுதிக்கு ஏற்றவாறு வாக்காளர்களுக்கு அன்பளிப்பு வழங்கப்பட்டது . கடந்த 27 ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. மேச்சேரியில் கார் உடைப்பு தவிர பெரிய அளவில் வன்முறை எதுவும் இல்லாமல் முடிந்தது.


மக்கள் சாரை, சாரையாக வந்து ஓட்டு போட்டனர் 84.95 சதவீதம் பதிவானது. ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 755 ஓட்டுகள் பதிவாகின.கடந்த 2006ம் ஆண்டு தேர்தலை விட, 13 சதவீதம் அதிகரித்துள்ளது. மின்னனு ஓட்டு பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் தர்மபுரி அரசு கல்லூரியில் வைக்கப்பட்டது. இங்கு இன்று காலை 8. 25 மணி அளவில் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. 14 டேபிள்கள் மூலம் 18 சுற்றுகள் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. ஒவ்வொரு சுற்று முடிவுகள் அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் என்பதால், பகல் 12 மணிக்குள் வெற்றி வேட்பாளர் யார் என்பது தெரிந்து விடும்.

அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தடுக்க அதிரடி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே நடந்து முடிந்த திருமங்கலம் . வந்தவாசி, கம்பம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் உள்ளிட்ட இடைத்தேர்தல்களில் தி.மு.க., தான் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் முன்னேற்றத்திற்கு தமிழக அரசே முட்டுக்கட்டை..

காலையில் அந்த செய்தியை, செய்திதாள்களில் பார்த்து நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்...ஒரு அரசாங்கம் இப்படியெல்லாம் பண்ணுமா? தமது மக்களின் வளத்திற்கும் முன்னேற்றத்திற்கும் இப்படியெல்லாம் ஒரு முட்டுக்கட்டை போட முடியுமா?

எந்த தைரியத்தில் ஹைகோர்ட்டில் அப்படி ஒரு மனுவைத் தாக்கல் செய்யலாம்?

நளினி என்பவள் யார்? எப்பேற்பட்ட தியாகி?

அவளை விடுதலை செய்ய முடியாது என்று சொல்கிற தைரியம் எப்படி இந்த அரசுக்கு வந்தது?

தமிழகம் ஒரு அமைதிப்பூங்காவாக இருந்தது...ராஜீவ் காந்தி வாக்கு சேகரிப்பதற்காக தமிழ்நாட்டிற்கு வந்தார்..

அவரை மனித வெடிகுண்டு வைத்து கொன்றுவிட்டு, அவ்வளவு பிரச்சினையிலும் கொலையாளி முருகனுடன் இன்பமாக இருந்து ஒரு குழந்தையும் பெற்று அவளை லண்டனில் வளர்த்து வரும் ஒரு மாபெரும் தியாகத்தை செய்து வரும் நளினியை இன்னுமா சிறையில் வைத்து கொடுமைப் படுத்துவது..

அவளை உடனேயே விடுதலை செய்து விட இங்குள்ள ஓநாய்கள் ஓலமிட்டுகொன்டிருந்தன..

இவள் விடுதலை ஆனால் உடனேயே தமிழகத்தில் மாபெரும் தொழில் புரட்சி ஏற்பட்டுவிடும், வறுமை நீங்கிவிடும், வேலை வாய்ப்பு பெருகிவிடும்...இன்னும் எல்லா வளங்களும் தமிழ்நாட்டை வந்தடைந்து இந்தியாவே சுபிட்சமாகி விடும் எனபது போலவும் அந்த கைக்கூலிகள் ஒப்பாரியிட்டுக்கொண்டிருந்தன..

சோனியா காந்தி புண்ணியத்தில் தூக்குத்தண்டனையில் இருந்து தப்பிய நளினி, தனது ஆயுள் தண்டனை முடிந்து விட்டதாகவும், தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்றும் மனு செய்திருந்தாள்..ஆனால் தமிழக அரசு சரியான ஒரு முடிவு எடுத்து அவள் விடுதலை செய்யப் பட வேண்டியவள் அல்ல என்று கூறி இருக்கிறது..

எத்தனையோ அப்பாவிகள், இன்னும் குற்றம் நிரூபிக்கப் படாமலேயே, ஏன் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலேயே சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும்போது, இங்குள்ள சில ஓநாய்கள் ஏன் நளினியை மட்டும் விடுதலை செய்ய ஆலாய்ப் பறக்கின்றன?

தமிழ்நாட்டிலேயே அவள் மட்டும்தான் சிறையில் அவதிப்படுகின்றாளா? இவள் விடுதலையாகிவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா? அவளுக்கு வக்காலத்து வாங்கும் தேச துரோகிகளுக்கு வேண்டுமானால் கல்லா நிறையலாம்...

இவளுக்காக ஓலமிடும் அந்த ஓநாய்கள் சிந்திக்கட்டும், ராஜீவ் காந்தி மட்டும் கொல்லப்படவில்லை..சுற்றி இருந்தவர்களும் அவருக்கு காவலிருந்த ஏராளமாக காவலர்கள், பொதுமக்களும் மாண்டார்கள். அவர்களுக்கும் குடும்பம் உண்டு, குழந்தைகள் உண்டு, ஆசைகள் உண்டு.. அவர்களும் மனிதர்கள்தான்..!

Monday, March 29, 2010

வாழ்க்கை இனிக்க !!!

காத‌ல் வ‌ங்‌கி‌த் துவ‌க்க வே‌ண்டிய அள‌வி‌ற்கு காதலு‌க்கு‌ப் ப‌ஞ்ச‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌விடுமோ எ‌ன்று அ‌ஞ்ச வே‌ண்டிய ‌நிலை வ‌ந்து‌வி‌ட்டது. த‌ற்போ‌திரு‌க்கு‌ம் கால‌க்க‌ட்ட‌த்‌தி‌ல் ‌திருமண‌த்‌தி‌ற்கு‌ப் ‌பி‌ன்பு ஏ‌ற்படு‌ம் ‌சில பல ‌பிர‌ச்‌சினைக‌ளினா‌ல் குடு‌ம்ப உறவுக‌ள் த‌விடுபொடியா‌கி‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறது.


இத‌ற்கெ‌ல்லா‌ம் அடி‌ப்படை‌‌க் காரண‌ம் தா‌ம்ப‌த்‌திய உற‌வி‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள ச‌ரிவு ‌நிலை எ‌ன்று மரு‌த்துவ‌ர்க‌ள் கூறு‌கி‌ன்றன‌ர்.

எ‌ந்த ‌பிர‌ச்‌சினையாக இரு‌ந்தாலு‌ம் மரு‌த்துவரை அணுகு‌‌ம் த‌ம்ப‌திக‌ள், தா‌ம்ப‌த்ய உற‌வி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைகளு‌க்கு மரு‌த்துவரை அணுக பெ‌ரிது‌ம் த‌ய‌ங்கு‌கி‌ன்றன‌ர். இ‌ந்த ‌நிலை‌யி‌ல்தா‌ன் மரு‌த்துவ‌ர்களே, இதுபோ‌‌ன்ற ‌பிர‌ச்‌சினைகளு‌க்கு ‌விள‌க்க‌ம் சொ‌ல்ல மு‌ன்வரு‌‌‌கி‌ன்றன‌ர்.

அதாவது ‌சில ‌விஷய‌ங்களை மா‌ற்‌றி‌ப் பாரு‌ங்க‌ள் எ‌ன்பதே அவ‌ர்களது முத‌ல் ஆலோசனை. ‌சில‌ த‌ம்ப‌திக‌ள் எ‌ப்போது‌ம் இர‌வி‌ல் ம‌ட்டுமே உறவு கொ‌ள்வா‌ர்க‌ள். தூ‌க்க களை‌‌ப்‌பிலு‌ம், உடலு‌க்கு உற‌க்க‌ம் தேவை‌ப்படு‌ம் நேர‌த்‌திலு‌ம் உறவு கொ‌ள்வதா‌ல் அ‌தி‌ல் ஒரு ச‌லி‌ப்பு ஏ‌ற்படலா‌ம். ‌சில நேர‌ங்க‌ளி‌ல் காலை‌யி‌ல் கு‌ளி‌த்து முடி‌த்து உடலு‌ம், மனமு‌ம் உ‌ற்சாகமாக இரு‌க்கு‌ம் போது உறவு கொ‌ள்வ‌தி‌ல் ‌நி‌ச்சய‌ம் புது‌விதமான மா‌ற்ற‌த்தை உணர முடியு‌ம்.


அது போலவே, இரு‌ட்டி‌ல் உட‌ல் உறவு கொ‌ள்ளு‌ம் த‌ம்ப‌திக‌ள், ‌சி‌றிது வெ‌ளி‌ச்ச‌த்‌திலு‌ம், வெ‌ளி‌ச்ச‌த்‌தி‌ல் உட‌ல் உறவு கொ‌ள்ளு‌ம் த‌ம்ப‌திக‌ள் லேசான இரு‌ட்டிலு‌ம் உட‌ல் உறவு கொ‌ள்ளலா‌ம்.

எ‌ப்போது‌ம் ஒரே முறை‌யிலான உட‌ல் உறவு கூட ச‌லி‌ப்பை ஏ‌ற்படு‌த்தலா‌ம். எனவே உட‌ல் உறவு கொ‌ள்ளு‌ம் முறைக‌ளிலு‌ம் மா‌ற்ற‌ங்களை ஏ‌ற்படு‌த்‌தி‌க் கொ‌ள்ளலா‌ம்.



அ‌ன்பை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் ‌விதமாக..
உட‌ல் உறவு எ‌ன்றது‌ம் ஒரு ‌சில ‌நி‌மிட‌ங்களே போது‌ம் எ‌ன்று ‌நினை‌க்காம‌ல், அத‌ற்காக அ‌திக நேர‌த்தை ஒது‌க்‌கி கணவ‌ன் - மனை‌வி இருவருமே த‌ங்களது அ‌ன்பை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் ‌விதமாக நட‌ந்து கொ‌ள்வது ந‌ல்லது. உட‌ல் உறவு கொ‌ள்ள இ‌ந்த நா‌ட்க‌ள் ம‌ட்டுமே எ‌ன்று ப‌ட்டிய‌ல் போ‌ட்டு‌க் கொ‌ள்ளாம‌ல் த‌ம்ப‌திக‌ளி‌ன் ஆசை‌‌க்கே‌ற்ப உட‌ல் உறவு வை‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்ல த‌ம்ப‌த்‌திய‌த்‌தி‌ற்கு வ‌ழிகோலு‌ம்.

ஒருவ‌ர் உட‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு இரு‌க்கு‌ம் போதோ, அ‌திக களை‌ப்படை‌ந்‌திரு‌ந்தாலோ அ‌ந்த சமய‌த்‌தி‌ல் உட‌ல் உற‌வி‌ற்கு அழை‌ப்பதை துணைவ‌ர் த‌வி‌ர்‌க்க வே‌ண்டு‌ம். அ‌ந்த சமய‌த்‌தி‌ல் உ‌ங்களது ஆதரவு‌ம், அ‌ன்பு‌ம் அவரு‌க்கு‌த் தேவை எ‌‌ன்பதை ‌நினை‌வி‌ல் கொ‌ள்ளவு‌ம்.

‌பி‌ரி‌ந்‌திரு‌ந்தாலு‌ம் பலன‌ளி‌க்கு‌ம்...

ஒரு ‌சில‌ த‌ம்ப‌திக‌ள் ஒரே அலுவலக‌த்‌தி‌ல் ப‌ணியா‌ற்‌றி‌க் கொ‌ண்டிரு‌ப்பா‌ர்க‌ள். இ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள் எ‌ப்போது‌ம் கூடவே இரு‌ப்பதா‌ல் ஒரு ச‌லி‌ப்பு ஏ‌ற்படுவது‌ம் உ‌ண்டு. இ‌ப்படியான‌வ‌ர்க‌ள் ‌சில நா‌ட்களு‌க்கு ‌பி‌ரி‌ந்‌திரு‌ப்பது‌ம் (ச‌ண்டை போ‌ட்டு அ‌ல்ல) பெ‌ண் தா‌ய் ‌வீ‌ட்டி‌லோ அ‌ல்லது தோ‌ழி‌யி‌ன் ‌வீ‌ட்டிலோ செ‌ன்று த‌ங்‌‌கி‌யிரு‌க்கலா‌ம்.‌ ‌சில நா‌ட்களு‌க்கு கணவ‌ன் - மனை‌விய‌ர் ‌பி‌ரி‌ந்‌திரு‌ப்பது அ‌ன்பை‌க் கூ‌ட்டவு‌ம் செ‌ய்யு‌ம்.

‌பி‌ரி‌ந்‌திரு‌க்கு‌ம் நா‌ட்க‌ளி‌ல் ம‌ணி‌க்கண‌க்‌கி‌ல் போ‌னி‌ல் பே‌சி‌க் கொ‌ண்டிரு‌க்காம‌ல் முழுவதுமாக ஒருவரை ஒருவ‌ர் சுத‌ந்‌திரமாக ‌வி‌ட்டு‌விடுவது‌ம் அவ‌ர்களு‌க்கு‌ள் இரு‌‌க்கு‌ம் அ‌ன்பை ஒருவரு‌க்கொருவ‌ர் பு‌ரிய வை‌க்க ஏதவாகு‌ம்.

கால‌ம் கட‌ந்தவ‌ர்க‌ள்..

தாம்ப‌த்ய‌த்‌தி‌ல் வெறு‌ப்படை‌ந்த ‌நிலை‌யி‌ல் இரு‌ப்பவ‌ர்க‌ள் த‌ம்ப‌திக‌ள் ஒருவரு‌க்கொருவ‌ர் பே‌சி, ஒரு ‌சில நா‌ட்க‌ள், வார‌ங்க‌ள், மாத‌ம் என ஒரு கால‌க் க‌ட்ட‌த்தை ‌நி‌ர்ண‌யி‌த்து‌க் கொ‌‌ண்டு அதுவரை தா‌ம்ப‌த்ய‌ம் வை‌த்து‌க் கொ‌ள்வ‌தி‌ல்லை எ‌ன்று முடிவெடு‌ங்க‌ள். ஆனா‌ல், இ‌ந்த சமய‌த்‌தி‌ல் எ‌ல்லா‌ம் த‌னி‌த்த‌னியாக இரு‌ந்து ‌விடாம‌ல் ஒருவரை ஒருவ‌ர் ‌சீ‌‌ண்டி‌க் கொ‌ண்டிரு‌‌க்கலா‌ம். இதனா‌ல் தா‌ம்ப‌த்ய‌த்‌தி‌ன் ‌மீது ஒரு ஏ‌க்‌க‌ம் ‌பிற‌க்கு‌ம். ஒரு வேளை இ‌ந்த முய‌ற்‌சி‌யினா‌ல், கால‌க் கெடு வரை கா‌த்‌திரு‌க்க முடியாம‌ல் கூட ‌சில த‌ம்ப‌திக‌ள் த‌ங்களது தா‌ம்ப‌த்ய‌த்தை அனுப‌வி‌க்கு‌ம் ‌நிலை ஏ‌ற்படலா‌ம்.

எனவே எதையு‌ம் முழு ரசனையோடு‌ம், அ‌ன்போடு‌ம் செய‌ல்படு‌ங்க‌ள். உ‌ங்க‌ள் துணை வா‌ழ்‌க்கை‌த் துணையாகு‌ம் எ‌ன்‌கி‌ன்றன‌ர் மரு‌த்துவ‌ர்க‌ள்.

இதனாலெல்லாம் சரியாகவில்லை என்றால்..கவுண்டமணி செந்தில் ஜோக்கை போல..ஒரு முழம் மல்லிகைப்பூவும், கால் கிலோ  அல்வாவும்...கொண்டு போங்க..உறவு வந்துச்சா இல்லை உதை விழுந்துச்சான்னு பின்னூட்டத்தில சொல்லுங்களேன்...

                                                                                                              -     நன்றி யாஹூ...