Pages

Thursday, May 5, 2011

தமிழன் என்றோர் இனமுண்டு..தனியே அவர்க்கோர் குணமுண்டு..!!!

சர்வதேச பயங்கவாதி என்றழைக்கப்பட்டு, அமெரிக்காவை அச்சுறுத்திக் கொண்டிருந்த ஒசாமா பின்லாடன் அழிக்கப்பட்டதில் அமெரிக்க பெரும் நிம்மதி அடைந்திருக்கலாம்..ஆனால், ஒசாமா பின்லாடனின் பயங்கரவாத செயல்களால், பயங்கவாதிகள் என்று குற்றம் சுமத்தப்பட்ட ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயமும் அந்த அவப்பெயர்களில் இருந்து விடுபடவும் .. அதன் காரணமாக விமான நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் எப்போதும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கப்படும் நிலை மாற இன்னும் எத்தனை நாளாகும் என்றும் தெரியவில்லை.



எங்கே, எந்த இடத்திலும் குண்டு வெடிப்பது போன்ற அசம்பாவித செயல்கள் நிகழ்ந்தாலும், மீடியாக்கள் , சிறிதும் சிந்திக்காமல் தமது மூளையை தனியே எடுத்து  வைத்துவிட்டு, இஸ்லாமிய தீவிரவாதம் என்று அலறுவதும், அதை செய்தவர்கள்   இஸ்லாமியர்கள் அல்ல என்று நிரூபிக்கப்பட்டாலும் அதை கண்டுகொள்ளாமல் விடும் அவலமும் என்று முடிவுக்கு வரும் என்றும் தெரியவில்லை..



இந்நிலையில், ஒசாமா கொல்லப்பட்டதற்கு சில அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருப்பது மிகவும் வருந்தத்தக்க செயல்கள் ஆகும்..வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதுதான் இயற்கை..ஆயுதமேந்தியவன் ஆயுதத்தாலேயே மடிந்திருக்கிறான்.

அதனால்தான் ஒசாமாவின் உடல் கூட அடக்கப்படாமால் மறைக்கப்பட்டுவிட்டது..நல்ல விசயம்தான்..



சந்தனக்கடத்தல் வீரப்பன் தமிழனல்லவா?

அதனால்தான் அவன் சுட்டுக்கொல்லப்பட்டவுடன் அவனுக்கு நினைவிடம் எழுப்பி கோயில் கட்டி கொண்டாடப்பட்டது.

அவன் மனைவியை தேர்தலில் நிற்கவைத்து சட்ட மன்ற உறுப்பினராக்கவும் முயற்ச்சி மேற்கொள்ளப்பட்டது.



பிரபாகரன் தமிழனல்லவா..

அதனால்தான் இந்தியாவில் பயங்கரவாத செயல்கள் செய்தும் இன்றும் அவனது போஸ்டர்கள் ஒட்டப்பட்டு கொண்டாடப்படுகிறது..

பிரபாகரன் பெயரில் மன்றங்கள் தைரியமாக நடத்தப்படுகின்றன.

கள்ளத்தோணியில் தீவிரவாதிகளை சந்தித்தவனேல்லாம் இன்று அரசியல் தலைவனாக மதிக்கப்படுகிறார்கள்..

அதை வைத்தே அரசியலும் செய்ய முடிகிறது..

சினிமாவில் குப்பை கொட்ட முடியாதவன் எல்லாம் பிரபாகரன் பெயரை வைத்து அரசியல் வியாபாரம் செய்ய முடிகிறது..

இலங்கை கிரிக்கெட் அணியில் ஜெயசூரிய விளையாட இந்திய வந்தால் போராட்டம் செய்வோம்..


அதே அணியில் விளையாடும் முத்தையா முரளிதரனை சாதனையாளர் என்போம்..

 
காரணம் அவர்கள் தமிழர்கள்.


தமிழன் என்ன செய்தாலும் அவன் தமிழனல்லவா .


தமிழன் என்றோர் இனமுண்டு..தனியே அவர்க்கோர் குணமுண்டு..!!!

வாழ்க தமிழ்..வெல்க தமிழ்..

Monday, May 2, 2011

கோ- விமர்சனம்..




தினஅஞ்சல் என்ற பத்திரிகையில் போட்டோகிராபராக கதாநாயகன்..படம் முழுவதும் போட்டோ மட்டுமே எடுத்துகொண்டிருக்கிறான்..இடையில் இரண்டு பெண்களுடன் காதல் வேறு..

கதாநாயகியின் வேலை கதாநாயகனை காதலிப்பது

இன்னொரு நாயகியின் வேலை தனக்கும் - மற்ற பெண்களுக்கும் ரேட் பேசுவது..இந்த படத்தில் இப்படி ஒரு கேடுகெட்ட கலாசாரத்தை தொடங்கி இருக்கிறார்கள்..


அந்த பெண்ணை பக்கத்து வீட்டு சிறுவன் ஆபாசமாக பார்ப்பது மட்டுமில்லாமல்..என்னை கல்யாணம் செய்துகொள் என்று கேட்கும் அருவருப்பான காட்சிகள்..

இன்னும் இந்த சினிமாக்கூத்தாடிகள் என்னதான் செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை..படம் சம்மந்தப்பட்டவர்கள் தமது குடும்ப பெண்களுக்கு ஏதும் விலை நிர்ணயித்து இருக்கிறார்களா?


சிறகுகள் என்ற அமைப்பை தொடங்கி தேர்தலில் படித்த இளைஞர்கள் போட்டி போடுகிறார்கள்.

அவர்களது தலைவன் தாக்கப்படுகிறான்.

கூட்டத்தில் பாம் வெடித்து பலபேர் சாகிறார்கள், காயமடைகிறார்கள்..

இதில் - தின அஞ்சல் நிருபர் பெண் ஒருத்தியும் கொல்லப்படுகிறாள்.

இதை பத்திரிகையில் வெளியிட்டு, அந்த கட்சி ஆட்சியமைக்க உதவுகிறான் அந்த சிறகுகள் அமைப்பை சேர்ந்த போடோகிராபர்.

இதுவரைக்கும் சரி..

அப்புறம் கிளைமாக்ஸ்? ஏதாவது திருப்பம் வைக்கவேண்டுமே..

வலுக்கட்டாயமாக சிறகுகள் அமைப்பின் தலைவனை வில்லனாக்குகிரார்கள்..

அவன் தாக்கப்படுவது செட் அப் என்று காட்டுகிறார்கள்.

தனக்குதானே பாம் வைத்துகொண்டான் என்று காட்டுகிறார்கள்..

தின அஞ்சல் நிருபரை அவனே அடித்துகொன்றான் என்று காட்டுகிறார்கள்..

ஹ்ம்ம் தாங்க முடியல..

இறுதியில் அவனே நக்சலைட் பயங்கரவாதி என்று காட்டி சாகடித்தும் விடுகிறார்கள்..

இனி இந்த மாதிரி படித்தவன் தேர்தலில் நின்றால் யாராவது நம்புவார்களா?

அப்புறம் - எல்லா கொடூரங்களையும் நிகழ்த்தியவன் அதன் தலைவன் மட்டுமே..மற்ற யாருக்கும் இந்த விஷயம் தெரியவே தெரியாது என்று மெகா சைஸ் பூ ஒன்றையும் காதில் சுற்றி அனுப்பிவிடுகிறார்கள்..



முதலமைச்சராக வரும் சிறகுகள் அமைப்பின் தலைவனை பழிவாங்க - கதாநாயகனை தூண்டுவது சமூக கோபம் அல்ல..அவனை ஜொள்ளுவிட்டு ரேட் பேசிய பெண் நிருபரை கொன்றுவிட்டானே என்றுதான் கோபமடைகிறான்.


முதலமைச்சராக வருவதற்கு - ஜோசியரின் கூற்றை நம்பி பதிமூன்று வயது பெண்ணை எழுபது வயது கிழதலைவன் திருமணம் செய்வது,

பெண் உதவியாளருக்கும் முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு என்று கேட்ட நிருபரை - முதலமைச்சர் நடுரோட்டில் வைத்து செருப்பால் அடிப்பது,

பொது மேடையில் - "அவன் ஆளவந்தானா இல்லை..."....ல வந்தானா?" என்று ஆபாச வசனம் பேசும் அரசியல்வாதி,

தேர்தலில் போட்டியிடும் ஆபாச நடிகை வாக்காளர்களை "மச்சான்ஸ்..எனக்கு...த்துவீன்களா? என்று ஆபாச வசனம் பேசுவது போன்ற அரசியலைச் சாடும் தைரியமான காட்சிகள் இருந்தாலும்,

வலுக்கட்டாயமான, திணிக்கப்பட்ட கிளைமாக்ஸ் காட்சிகளினால்..

"கோ" கோணலாகிவிட்டது..


Saturday, April 30, 2011

"வானம்" - அமிலமழை


குப்பத்தில் வசிக்கும் கேபிள் டிவி பணம் வசூலிக்கும் ஒரு இளைஞன் - தன தகுதிக்கு மீறிய ஒரு பணக்கார பெண்ணை காதலிக்கிறான். அவளிடம் நுனிநாக்கு ஆங்கிலம் பேசி, தான் ஒரு பணக்காரன் என்று நம்ப வைக்கிறான். அதற்காக, தான் வேலை செய்யும் முதலாளியிடம் பணம் ஏமாற்றுகிராரன், இன்னும் ஏராளமான தகிடுதத்தம் செய்கிறான். நியூ இயர் சாராய பார்ட்டிக்கு காதலி பாஸ் எடுக்க சொல்கிறாள். அதற்க்கு நாற்பது ஆயிரம் கட்டணம். அதற்காக சாலையில் பெண்களிடம் செயின் திருடும் அவன் போலீசிடம் சிக்குகிறான்.

கிராமம் ஒன்றில் கந்து வட்டி கடன்காரனிடம் அடிமையாக இருக்கும் தனது குழந்தையை மீட்க, கிட்னி விற்க வரும் ஏழை தாயும் அவரது மாமனாரும், கிட்னி ஆபெரசன் செய்யப்பட்டு ஒரு மருத்துவமனையில் இருக்கிறார்கள்.


இராணுவத்தில் உயிரை இழந்த ஒருவரின் மகன், வெறும் கிதார் வாசித்து சாதிப்பேன் - இராணுவத்தில் சேரமாட்டேன் என்று கச்சேரி செய்வதற்காக தனது பரிவாரங்களுடன் சென்னை வருகிறான். வரும் வழியில் அவன் மனிதாபிமானம் என்னவென்று உணர சில சம்பவங்கள். அதன் காரணமாக ஒரு விபத்து ஒன்றில் அடிபட்டு இருக்கும் கர்ப்பிணி பெண் ஒருத்தியை காப்பாற்றி மருத்துவமனை வருகிறான்.

தனது மனைவிக்கு இரட்டை குழந்தைகள் கருத்தரிப்பதை அறிந்து மகிழ்ச்சியுடன் வரும் முஸ்லிம் ஒருவர் - விநாயக சதுர்த்தி ஊர்வலத்தில் பொறுக்கிகளால் தாக்கப்படுகிறார் . அவருக்கு உடந்தையாக போலிஸ் அதிகாரி ஒருவரும் இவரை தீவிரவாதி என்று குற்றம் சாட்டுகிறார். இந்த சம்பவத்தால் அவரது மனைவியின் கர்ப்பம்  கலைகிறது. இதனால் பாதிக்கப்பட்டு அவரது தம்பி தலைமறைவாகிறான். தனது தம்பி சென்னையில் இருக்கிறான் என்பதை அறிந்து அவனை தேடி வருகையில் - ஏற்கனவே சந்தித்த அதே போலிஸ் அதிகாரி அவரை ஒரு தீவிரவாதி என்று பொய் கேஸ் போட்டு சிறையில் தள்ளுகிறார். இதில் தப்பிக்கு முயற்ச்சிக்கும் அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபடுகிறார்.

ஒரு விபச்சாரி, போலீசிடம் தப்பி தனியாக "கம்பெனி" தொடங்கலாம் என்று சென்னை வருகிறார். அங்கே அவளுக்கு தொடர் தொல்லைகள். இதிலிருந்து தப்பிக்கும்போது, தனக்கு துணையாக வரும் - திருநங்கைக்கு - கத்திகுத்து காயத்தால் அதே ஆஸ்பத்திருக்கு கொண்டுவரப்படுகிறாள்.


கேபிள் டிவி பணம் வசூலிப்பவன், தனது காதலியுடன் பார்ட்டிக்கு செல்ல பணம் புரட்ட முடியாமல் இறுதியில் - கிட்னி ஆபரேசன் செய்யப்பட்டு கிடக்கும் அந்த பெண்ணின் பணத்தை பறித்துக்கொண்டு ஓடுகிறான்..ஹோட்டலில் பணம் கட்டும்போது மனசாட்சி உறுத்த - திரும்பவும் அந்த மருத்தவமனைக்கே வந்து- அவர்களிடம் பணத்தை ஒப்படைக்கிறான்...

இப்படியாக ஐந்து கிளைக்கதைகளும் - இறுதியில் ஒரு மருத்துவமனையில் ஒன்று சேருகின்றன..

ஒரு காட்சியில் இரண்டு முஸ்லிம் இளைஞர்களை போலிஸ் விசாரிக்கும்போது , அந்த இளைஞர்கள், ஐதராபாத், அஜ்மீர், ராஜஸ்தான் , டெல்லி, மும்பை, போன்ற இடங்களில் வெடித்ததுபோல சென்னையிலும் குண்டு வெடிக்கும் என்று சொல்கிறார்கள்..

மேற்கண்ட இடங்களில் குண்டுவைத்தது இந்துத்துவா பயங்கரவாதிகள் என்று புலனாய்வு விசாரணையில் உண்மை வெளிவரும் வேளையில் மீண்டும் மீண்டும் முஸ்லிம்களையே தீவிரவாதிகள் எனக்காட்டும் இந்த - சினிமா பயங்கரவாதிகளைதான்  - முதலில் உள்ளே தள்ள வேண்டும்..

ஐந்து கதைகளை வைத்துக்கொண்டு, என்னசெய்வது என்று தெரியாமல் இறுதியில் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் அவர்கள் இரக்கமற்றவர்கள் என்று சொல்வதற்காகவே கதை எழுதி படம் எடுக்கும் இந்த கூத்தாடிகள்தான் நிஜ பயங்கரவாதிகள்..

காதலிக்காக திருடும் குப்பத்து இளைஞனும், - இந்திய ராணுவத்தால் என் தந்தையை இழந்தேன், அதனால் நான் இராணுவத்தில் சேரமாட்டேன், பாரிலும், பப்பிலும் கிதார் வைத்துகொண்டு டான்ஸ் ஆடுவேன்...என்னை உலகம் புகழும் என்று சொல்லும் பொறுப்பற்ற இளைஞர்கள் இறுதியில் அனைவரையும் தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றுவது போலவும், தீவிரவாதத்தை உண்மையாகவே வெறுக்கும் முஸ்லிம், - தன்னை தீவிரவாதி என்று சித்தரித்த போலிஸ் அதிகாரியை மட்டும் காப்பாற்றுவது போலவும் காட்டும் இந்த கூத்தாடிகள்தான் இந்த நாட்டை சுடுகாடாக்க முயலும் துரோகிகள்..

வானம் - முஸ்லிம்கள் மீது அமிலமழை பொழியும் துரோகம்..

Friday, April 29, 2011

ரஜினி படங்களின் வெற்றி - யார் காரணம்? ஒரு அலசல்..!

எந்திரன் என்ற "திணிக்கப்பட்ட" திரைப்படத்திற்கு பிறகு, ரானா என்றதொரு படத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்..

இனி பத்திரிகை விபச்சாரம் கொடிகட்டி பறக்கும்...தீபிகா படுகோனே என்றொரு நடிகை கஷ்டப்பட்டு கொண்டு வந்தாயிற்று..பத்தாதற்கு அவருக்கு இவள் மட்டும் ஜோடி அல்ல இன்னும் பல நடிகைகள் என்று அனைத்து நடிகைகளையும் கூட்டி கொடுக்க மாமா வேலை பார்க்கும் அனைத்து ஆபாச பத்திரிக்கைகளும் தயார்..வேறு வேலை?

மேலும், வலைப்பதிவிலும் அனைத்து விசயங்களும் பின்னுக்குத்தள்ளப்பட்டுவிட்டு, இனி ரஜினியின் அடுத்த படம் பற்றிய கற்பனைகளே முன்னிலை வகிக்கும்..விமர்சிப்பவருக்கும் சரி, ஜால்ராக்களுக்கும் சரி,  இதுதான் வேலையாக இருக்கும்

அதிர்ஷ்டம் மட்டுமே மூலதனமாகக்கொண்டு வெற்றிபெறுபவர்கள் சினிமாவில் மட்டுமே சாத்தியம்.

மக்களுக்கு ஆபாசத்தையும்  அருவருப்பான விசயங்களையும் திணிக்கும் இந்த கேவலமான பிழைப்புக்கு திறமை ஒரு சதவீதம் இருந்தால் போதும்..வெறும் கேளிக்கை ஆட்டங்களினால் மட்டுமே பெரும் பிரபலமாகிவிடலாம் என்பதற்கு இக்கால கேடுகெட்ட சினிமாக்களே சாட்சி.

ஆரம்ப காலங்களில் வில்லனாகவும்,  பிறகு, தாய் தந்தையரை கொன்ற வில்லனை முப்பது வருடங்கள் கழித்து பழிவாங்கும் எம்ஜிஆர் கதைகளிலும் நடித்து வந்த ரஜினி, பிறகு, இந்தியில் வந்த அமிதாப்பின் மொக்கை படங்களில் நடித்து பிரபலமானார்.

முன்பு தினமலர் வாரமலர் என்ற பத்திரிகையில், கோ. பி. சி. நிருபர் என்று சிலரை குறிப்பிடுவார்கள்..அதாவது கோழி பிரியாணி சினிமா நிருபர் என்று பெயர்..இவர்களுக்கு, கோழி பிரியாணியும் சாராயமும் வாங்கிகொடுத்துவிட்டால் எப்பெற்பட்டவனையும் புகழ்ந்து அவனை பெரிய ஆளாக காட்டி விடுவார்கள்..

ஆப்படி வளர்ந்தவர்தான் ரஜினி..அவரது எந்த படங்களும் தரமானவை அல்ல..சிகரெட் பிடிப்பதும், சாராயம் குடிப்பதும் மட்டுமே அவர் படங்களில் மக்கள் அறிந்த்தது..

ரஜினியின் ஆரம்பகால திரைப்படங்களிங் பெயர்கள்கூட, போக்கிரி ராஜா, பொல்லாதவன், குப்பத்துராஜா, காளி, பில்லா, ரங்கா என்று பொறுக்கித்தனமான பெயர்களே.

ஆட்டோ சங்கர், சந்தனக்கடத்தல் வீரப்பன், விடுதலைப்புலி பிரபாகரன்  போன்ற கொடிய குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்கிய ஆபாச பத்திரிக்கைகளான நக்கீரன், ஆபாச விகடன், குமதம் போன்றவைகள்தான் இதுபோன்ற சீர்கேட்டுகளுக்கும் விளம்பரம் அளித்து பிரபலப்படுத்தின..இதுபோன்ற அவலங்கள் பொறுக்கிகளுக்கு வேண்டுமானால்  உற்சாகம் அளிக்கலாம்..ஆனால் மக்களுக்கு?

சமீபகாலமாக இவரது வெற்றிபடங்களுக்கான காரணங்களும் இவரல்ல எனபது கோழி பிரியாணி மற்றும் சாராய நிருபர்களுக்கு தெரிந்ததுதான்..ஆனால் வாங்கிய காசுக்கு வஞ்சகமில்லாமல், இந்த கேவலமான பின்னனி உள்ளவரை தமிழகத்தின் முதல்வராக்கவும் துணிந்துவிட்டனர்.

இதற்க்கு  ஆபாச விகடன், நடிகைகளின் படுக்கையறை குமுதம், நக்கீரன் போன்ற ஆபாச பத்திர்க்கைகளும் உடந்தை.

அண்ணாமலை என்ற படத்தை அப்போது, வசந்த் என்ற இயக்குனர் இயக்க மறுத்துவிட்டதால், சுரேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்கினார்.

அந்த சமயத்தில் குஷ்பு என்ற ஆபாச நடிகையை அதில் நடிக்கவைத்து, ஆபாச கவிஞர் வைரமுத்து என்பவர் "கொண்டையில் தாழம்பு, நெஞ்சிலே வாழைப்பூ, கூடையில் என்ன பூ..குஷ்பூ" என்ற அருவருப்பான பாடலும் எழுதி படத்தை பரபரப்பாக்கி விற்றனர்.

ஏற்கனவே ரஜினி நடித்து வெளிவந்த "நல்லவனுக்கு  நல்லவன்" என்ற படத்தின் மறு பிரதிதான்  அந்த படம்.

அதன் பிறகும் ரஜினியை முன்னிறுத்தி வெளிவந்த "உழைப்பாளி"  வீரா போன்ற படங்கள் எடுபடவில்லை.

பிறகு வெளிவந்த பாட்சா என்றபடத்தில் அப்போது பரபரப்பான கவர்ச்சி நாயகியாக வலம்வந்த நக்மா என்ற நடிகையை நடிக்கவைத்து ஒட்டினர்.
இந்த படம் கூட அமிதாப் பச்சன், கோவிந்தா மற்றும் ரஜினி நடித்த "ஹம்" என்ற ஹிந்திப்படத்தின் தழுவல்தான்.

போயஸ் கார்டனில் அப்போது முதலமைச்சர் ஆக ஜெயலலிதா இருந்ததால் அதே போயஸ் கார்டனில் குடியிருந்த ரஜினிக்கும் சில கெடுபிடிகள் இருந்தன. அந்த கோபத்தை, பாட்சா படத்தின் 175  ஆவது நாள் விழாவில் ரஜினி காட்ட, அதை இந்த கோ.பி.சி.நிருபர்கள் பெரிது படுத்தி வருங்கால முதல்வர் என்ற ரேஞ்சுக்கு கொண்டு சென்றதால் பாட்சா படம் இன்னும் பிரபலமானது.

அதன் பிறகு அவரே கதை வசனம் எழுதி நடித்த  வள்ளி   என்ற படம் ஊற்றிக்கொண்டதும் ஊரறிந்த செய்தி..

எ.ஆர் . ரஹ்மானின் பிரபலத்தை வைத்து, மலையாளத்தில் வெளிவந்த ஒரு படத்தை முத்து என்ற பெயரில் வெளியிட்டு சுமாராக ஓடியது. அந்த படம் ஜப்பானில் பிரபலமானதர்க்குகூட அதி நடித்த மீனா என்ற நடிகையே காரணம் என்பதையும் இந்த கோ.பி. சி. நிருபர்கள்  வசதியாக மறைத்துவிட்டு, எல்லா வெற்றிக்கும் ரஜினியே காரணம் என்று குட்டிகரணம் அடித்து வந்தனர்..அதன் பிறகு ரஜினி நடித்த எந்த படமுமு ஜப்பானில் எடுபடவில்லையே ஏன்?

முத்துவிற்கு பிறகு வந்த அருணாச்சலம் ரஜினியை முன்னிறுத்தி எடுக்கப்பட்டதால் தோல்வியையே தழுவியது.

படையப்பா அப்போது ஜெயலலிதா எதிர்ப்பு அலையில் அவரது கதாபாத்திரத்தை  பிரதிபலித்த ரம்யா கிருஷ்ணன் என்ற நடிகையின் நடிப்பால் பிரபலமானது.

படையப்பா வுக்கு பிறகு ஜால்றாக்களினால் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட "பாபா" வின் பரிதாப நிலை எல்லாரும் அறிந்ததுதான்.

அதன் தோல்வியினால் துவண்டு கிடந்த ரஜினிக்கு, "சந்தரமுகி" என்றபடம் சற்று தெம்பளித்த்தது..இருந்தும் அப்படத்தின் வெற்றிக்கும் ரஜினிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை..காரணம் அந்த பாத்திரத்தில்  தோல்வி படங்களுக்காக  நடித்துகொண்டிருக்கும்   "அருண் பாண்டியன்" அல்லது அப்பாஸ், அல்லது சாம், போன்ற நடிகர்கள் நடித்திருந்தாலும் படம் ஓடி இருக்கும்..அதன் வெற்றிக்கு காரணம் வடிவேலுவின் காமெடியும், ஜோதிகாவின் நடிப்பும்தான் எனபது அனைவரும் ஒப்புக்கொண்ட உண்மை..

அதன் பிறகு பெரிதும் எதிர்பார்த்த மலையாள காப்பி படமான "குசேலன்" அல்வா கொடுத்ததும், "சிவாஜி"  சிரிப்பாய் சிரித்ததும், எந்திரன்  எதிர்பார்புகளை ஏமாற்றியதும் தமிழ்நாட்டு மக்களின் மழுங்கி போன
மூளைக்கு  சான்று..


Monday, April 25, 2011

ஓட்டுப்பிச்சை எடுக்கும் ஓநாய்கள்


தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்துவிட்டது..

தேர்தலுக்கு முன்பு இலங்கை பிரச்சினையை கிளப்பி ஒட்டு பிச்சை எடுக்க அரசியல் ஓநாய்கள் செய்த கூத்தெல்லாம் முடிந்து விட்டது..

தேர்தல் முடிவுகள் வர இன்னும் கால அவகாசம் இருப்பதால் இந்த அரசியல்"வியாதிகள்" வேறுமாதிரி கணக்கில் ஈடுபட ஆராம்பித்து விட்டன..


தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்ற சந்தேகத்தில், தமிழ் பற்று நாடகம் நடத்தி இந்த சாக்கடைகள் இப்போதே அறிக்கை அரசியலை தொடங்கிவிட்டன.

இலங்கை எனபது அந்நிய நாடு. அண்டை நாடு. அங்கு வசிக்கும் சில தீவிரவாத குழுக்கள் அந்நாட்டில் மட்டுமல்ல  , அண்டை நாடான இந்தியாவிலும் அராஜகம் செய்தன..அதை அந்த நாடு அடியோடு நசுக்கியது. அது இங்குள்ள - தேச துரோகிகளுக்கு பொறுக்கவில்லை..வருமானம் போய் விட்டது..எனவே அதை வைத்து இங்கு அரசியல் செய்ய குரைத்து குரைத்து ஓய்ந்துவிட்டாலும், ராஜ பக்சேயை தூக்கில் போடு, சர்வதேச கோர்ட்டில் நிறுத்து என்று அலறும் இந்த சாக்கடைகளுக்கு ஒரு கேள்வி..



குஜராத் இந்தியாவில்தானே இருக்கிறது..?

அங்கு நரபலி நாய் நரேந்திர மோடி என்ற மிருகம் அப்பாவி மக்களை கொன்று குவித்தானே, கொல்லப்பட்டவர்கள் மக்கள் இல்லையா?

நரேந்திர மோடி இன்னும் இந்தியாவில்தானே இருக்கிறான்.

அவனை அரசியல் புரோக்கர் சோ என்பவன் விழாவுக்கு வரவழைக்கிறான்

ஜெயலலிதா விருந்து கொடுத்து மகிழ்கிறார்...

கருணாநிதி கைகுடுத்து போஸ் கொடுக்கிறார்.

ஊழலை ஒழிக்க பிரிந்த அன்ன ஹசாறேவுக்கு பயங்கர வாதத்தை ஒழிக்க மனமில்லாமல் அவனை பாராட்டுகிறார்..

இங்கே ராஜ பக்சேயை மட்டும் குறிவைக்கும் வெறி நாய்களுக்கு நரேந்திர மோடியை தண்டிக்க சொல்ல ஏன் மனமில்லை..

அதற்க்கு ஏன் கூட்டம் போடவில்லை..

அவனை எதிர்த்து ஏன் போராட்டம் நடத்தவில்லை..

குஜராத் என்ன அந்நிய நாடா?

இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் மட்டும்தான் உனக்கு உலகத்தில் மனிதர்களாக தெரிகிரார்களோ?

குஜராத்தில் கொல்லப்பட்டவர்கள், சிதைக்கப்பட்டவர்கள், குழந்தைகள், கருவருக்கப்பட்டவர்கள், கற்பழிக்கபட்டவர்கள் உங்களுக்கு மனிதர்களாக தெரியவில்லையோ?

அந்நிய நாட்டில் நடவடிக்கை எடு என்று ஓலமிடும் முட்டாள்களே, குஜராத் இந்தியாவில்தான் இருக்கிறது, அதை ஆளும் அரக்கன் நரேந்திரன் அனைத்து நாடுகளாலும் விரட்டப்பட்ட ஒரு கொடிய மிருகம்,

மோடி நடத்திய கொலைவெறி தாண்டவத்திற்கு, தெஹல்கா இணையதளத்தின் ஆதாரம் உள்ளது..இன்னும் அடுக்ககடுக்கான சாட்சியங்கள் வந்து கொண்டே இருக்கின்றன..

தன் நாடு அமைதியாக இருக்கவேண்டும் என்று தீவிரவாதத்தை ஒடுக்கிய ராஜபக்சேயை தூக்கிலிட சொல்லும் தேசதுரோக நாய்களே,


குஜராத்தில் அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்படுவதை தடுக்காதீர்கள், அதை கண்டுகொள்ளாதீர்கள் என்று சொன்ன நரேந்திரன் என்ற மிருகத்தை என்ன செய்யலாம்?

 
அவனை எதிர்க்க திராணியற்று, நடக்கமுடியாத ஒரு விஷயத்தை செய்ய சொல்லி - விடுதலைப்புலிகளிடம் வாங்கிய காசுக்கு - இந்தியாவுக்கு தேச துரோகம் செய்யும் துரோகிகளே...

பயங்கரவாதி என்று விசா ரத்து செய்யப்பட்டு, விசா மறுக்கப்பட்ட ஒருவன் தூக்கிலிடப்பட வேண்டியவனா? இல்லையா?


இந்தியாவில் தேடப்பட்டுவந்த ஒரு பயங்கரவாதியை தனது தலைவன் என்று சொல்வது தேச துரோகமா? தமிழ்பற்றா?


கொஞ்சமாவது மனித நேயத்தோடு சிந்தியுங்கள்..


Saturday, April 23, 2011

எங்கேயும் காதல்!



ஒரு சின்சியரான தொழிலதிபர், விடுமுரைக்கொண்டாட்டத்திற்காக வெளிநாடுகளுக்கு செல்லும்போது, பல பல பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் ஆபாசக் கதைக்கு பெயர்தான் எங்கேயும் காதல்..

தலைப்பு மகா பொருத்தம்..காரணம், காதல் என்றாலே காமம்தான்.

அது என்ன சின்சியரான தொழிலதிபர்..? அவன் வேலையை அவன் பார்க்காமல் வேறு யார் பார்பார்கள்?

இங்கே சின்சியராக இருப்பானாம்,...வெளிநாட்டில் பெண்களை அனுபவிக்க நாயைப்போலஅலைவானாம்..இந்த கேடுகெட்ட விஷயத்தை ஒரு கதையாக சொல்வதில் இங்குள்ள ஆபாச வியாபாரிகளுக்குதான் எவ்வளவு பெருமை?

வெளிநாட்டுக்காரிகள் இந்த கூத்தாடிகளுக்காக மட்டும் அலைவதுபோல் காட்டியிருப்பது மகா கேவலம். விபச்சாரிகள் யாரிடமும் பணத்துக்காக படுக்கைகளை பகிர்ந்து கொள்வார்கள்..இதை காதல் என்று சொல்வதன் மூலம் காதல் என்றால் காமம் என்பதை நிரூபணம் செய்கிறார்கள்..

ஒரு சந்தர்ப்பத்தில் இந்திய பெண்ணை சந்தித்து அடுத்தடுத்த காட்சிகளில் அவளுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ளும் கதாநாயகன், பிறகு பிரிந்துகொள்வதற்கு பார்ட்டி வைத்து பிரிகிறார்கள்..

இதற்கிடையே இன்னுமொரு கதை..அதாவது கதாநாயகனுடைய தந்தையின் காதல் கதை..

அவரது காலத்தில் காதலியை பார்பதற்கே நாள் கணக்கிலும், அவளுடன் பேசுவதற்கு மாதக்கணக்கிலும் காத்திருக்கவேண்டியதையும் காட்டுகிறார்கள்..

இந்த காலம் போல் செல்போன் வசதியோ, மற்ற தொடர்பு வசதிகளோ கிடையாது..அவளை பார்க்கவேண்டுமென்றால் அவளது ஊருக்கு ரயில் பிடித்து சென்று நாள்கணக்கில் காத்திருந்து அவள் எப்போது வெளியே வருவாள் அவள் வரும்போது தன்னை கவனிக்க வைக்க என்ன செய்யவேண்டும் என்பதெல்லாம் விளக்கி,

இன்றைய காதல் "எல்லாவற்றையும் முடித்த பிறகுதான்" அந்த பெண்ணுடைய பேரையே கேட்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்..

அதே போல ஒரு பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு பிறகு அவளிடம் "உன் பெயர் என்ன?" என்று கேட்கும் ஒரு அருவருப்பான காட்சியும் உண்டு..


கடைசியில் பிரிந்த இருவரும் தங்கள் பழகிய நாட்களை எண்ணி வேதனை அடைகிறார்கள்..அந்த கதாநாயகிக்கு திருமணம் ஆனாலும் தன காதலனை (தன்னுடன் முதலில் (?) உடலுறவு கொண்டவனை) மறக்க முடியவில்லை..தனது கணவனிடம் சொல்லிவிட்டு இவனை தேடி வருகிறாள்..

அவனும் அதே போல இவளை தேடி வர, இருவரும் இணைகிறார்கள்..

இந்த கேவலமான கதை "லவ் ஆஜ் கல்" என்னும் ஹிந்திப் படத்தின் கதை.

எங்கேயும் காதல் என்ற தமிழ்படத்தின் டிரைலரைப் பார்க்கும்போது இந்த படத்தின் அப்பட்டமான காப்பி போல தெரிகிறது..

ஏதோ சொந்தமாக கதை எழுதி இயக்கியதுபோல "பிணத்துக்கு ஆடும்" கூட்டத்தை சேர்ந்த இயக்குனர் பிரபுதேவா சொல்லிவருகிறார்ர்ர்...

படம் வந்தால் இவங்களது சாயம் வெளுத்துவிடும்..

Friday, April 22, 2011

மக்கள் தொகைகளில் பெண்கள் அதிகமா?

சமீபத்தில் இந்தியாவுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பில் பெண்கள் ஆண்களை விட குறைவாக இருக்கிறார்கள் என்றதொரு செய்தி..

அதற்குகூட காஷ்மீரை சேர்ந்த ஒரு முட்டாள் அமைச்சர் ஒருவன், இதனால் ஹோமோ செக்ஸ் அதிகரிக்கும் என்று ஒரு கிறுக்குத்தனமாக பேசி இருக்கிறான்..


ஆனால் எனக்கு என்னவோ பெண்கள் தொகை அதிகரித்திருப்பதாகவே படுகிறது..



டிவியை திறந்தால் பெண்கள்தான் கொடகொட வென்று பேசிக்கொண்டிருகிரார்கள்..

அவர்கள்தான் எல்லா நிகழ்ச்சியிலும் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்..

டிவி சீரியல்களில் கதாநாயகியும் வில்லியும்தான் இருகிறார்கள்.. ஆண்கள் ஒப்புக்கு சப்பாணிதான்

சினிமாக்களில் தேவையில்லா விட்டால்கூட வலுக்கட்டாயமாக வருகிறார்கள்.

ஒரு காய்கறி மார்கெட் என்றால் கண்டிப்பாக அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் அங்கே குத்தாட்டம் போடவேண்டும்..

எந்த பத்திரிக்கை எடுத்தாலும், அட்டைப்படத்தை சினிமாக்காரிகள்தான் ஆக்கிரமிக்கிறார்கள்..

ஆனந்த விகடன் குமுதம் போன்ற ஆபாச பத்தரிக்கைகள் நடிகைகளின் படுக்கை அரை ரகசியங்களை வெளியிடுவதை ஒரு கடமையாகவே செய்து வருகின்றன.

சென்னையில் மழைபெய்தால் இளம் பெண்கள்தான் குடை பிடித்தபடி செல்வதாக பத்திரிக்கைகாரன் படம் போடுகிறான்

வெய்யில் அடித்தாலும் அவர்கதான் முகத்தை மூடிக்கொண்டு செல்கிறார்கள்.

மெரீனா பீச்சில் காலை நனைத்துகொண்டிருப்பதும் பெண்கள்தான்

பரீட்சை எழுதுவதும் அவர்கள்தான்

ரிசல்ட் வந்தால் பாசானதர்க்கு இனிப்பு கொடுப்பதும் பெண்கள்தான்

ஹோலிபண்டிகை அன்று முகங்களில் சாயம் பூசிக்கொண்டு போஸ் கொடுப்பதும் பெண்கள்தான்

சினிமா நடிகனை ச்சோ ச்வீட் என்று ஜொள்ளு பேட்டி கொடுப்பதும் பெண்கள்தான்

ஏதாவது ஒரு பொருள் விளம்பரத்துக்கு அரைகுறை ஆடையுடன் சிபாரிசு செய்வதும் பெண்கள்தான்

கிரிகெட் நடைபெறும் ஸ்டேடியங்களில் முகத்தில் தேசியக்கொடியை வரைந்துகொண்டு அக்குள் தெரிய கொடியை ஆட்டிகொண்டிருப்பதும் பெண்கள்தான்

தேர்தல் காலங்களில் ஒட்டுபோட்டுவிட்டு கைவிரலில் உள்ள மையை காட்டி போஸ் கொடுப்பதும் பெண்கள்தான்..

ஐந்து ரூபாய் குளோசப் பற்பசைக்காக ஆணிடம் மயங்குவதும் பெண்தான்

ஐம்பது காசு மின்ட் சாக்லேட்டுகாக ஆண் பின்னாடி போவதும் பெண்தான்

பாடி ஸ்ப்ரே அடித்துவரும் ஆணிடம் படுக்க அழைப்பதும் பெண்தான்

டச் ஸ்க்ரீன் மொபைல் போன் வைத்திருக்கும் ஒருவனுக்கு, சில்லறை இல்லை என்பதற்காக ஆணுறை கொடுத்து விபச்சாரத்திற்கு அழைப்பதும் பெண்தான்

தந்தையிடம் மொபைல் வாங்கி - சினிமாவிற்கு காதலனை கள்ளத்தனமாக அழைப்பதும் பெண்தான்.

மாதவிடாய்க்கான நாப்கினை அணிந்துகொண்டால் இந்த உலகையே மாற்றிக்காட்டுவேன் என்று சொல்வதும் பெண்கள்தான்.


இப்படி எல்லாவற்றிலும் பெண்கள் ஆக்ரமித்துகொண்டிருக்க - பெண்கள் குறைவு என்று இவர்கள் எப்படி சொல்கிறார்கள்?