Pages

Monday, November 28, 2011

வொய் திஸ் கொலைவெறி?



இந்த தலைப்பில் இதுவரைக்கும் நூற்றுக்கணக்கான பேர் எழுதி இருக்கலாம்.இதே தலைப்பில் நூறு விசயங்களையும் எழுதலாம்..இந்த தலைப்பில் நான் எழுதவில்லைஎன்றால் பதிவுலகில் ஒதுக்கிவைக்கப்படும் அபாயம் உள்ளது...

வொய் திஸ் கொலைவெறி?

சமீபத்தில் பிரபலமாகிய....பிரபலமாக்கப்பட்ட ஒரு பாடலின் (?) முதல் வரிதான்...வேலையற்றதுகள் பேசிக் "கொல்லும்" ஒரு சாதாரண வார்த்தையை , ஊடக வியாபாரிகளின் கைங்கரியத்தால் இன்றும் - யு டுயூப் வலைத்தளத்தில் லட்சகணக்கானோர் பார்த்து பிரபலமாக்கிவிட, இன்று, கள்ளத்தொடர்பு ஸ்பெசலிஸ்ட் தினத்தந்தி முதல், பிராமண ஹிந்து பத்திர்க்கை வரை முதல்பக்கம் செய்தியாக வர காரணம் என்ன?

சென்ற ஆட்சியில் - அதிகாரம் கையிலிருந்த மமதையில் "எந்திரன்" என்றொரு பாடாவதிப்படம் அனைத்து மக்களுக்கும் திணிக்கப்பட்டது..அதே வேலையை இன்று கார்பொரேட் முதலாளிகள் மீண்டும் ஏற்படுத்தி இருக்கிறார்கள்..

இரண்டு பெரிய சிநிமாக்கூத்தாடிகளின் வாரிசுகள் சம்மந்தப்பட்ட படம் என்பதால் இதற்க்கு இவ்வளவு விளம்பரம் தரும் ஆபாச ஊடகங்கள் இந்த பாட்டை மட்டும் வைத்து ஓட்டிவிடலாம் என்று அவர்களுக்கு விளம்பரம் தந்து கொண்டிருக்கின்றன.

ஒரு கதைக்கு பேர் வைக்க திறமையற்றவர்களால் (திரைப்படத்தின் பெயர் 3) எப்படி ஒரு இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஓடும் ஒரு திரைப்படத்தை இயக்க முடியும்?

இந்த பாடலை இவ்வளவு பிரபலமாக்கி இருக்கும்போதே தெரிகிறது 3 என்ற அந்த திரைப்படம் 3 நாட்கள் ஓடினாலே அதிகம் என்ற அளவில்தான் இருக்கும் என்று.

இதற்க்கு முன்பு பெண்கள் இயக்கிய எந்த திரைப்படமும் நல்ல திரைப்படமாக இருந்ததும் கிடையாது வரவேற்பு பெற்றதும் கிடையாது. -அந்த அளவுக்குத்தான் இந்த படமும் இருக்கும் எனபது தெரிகிறது...



இருக்கட்டும் விசயம் அது கிடையாது..



பிறகு வொய் திஸ் கொலைவெறி?



ஜெயலலிதா பால், பஸ் கட்டணம், மற்றும் மின் கட்டணம் போன்றவற்றின் விலைகளை இஷ்டத்திற்கு ஏற்றிவிட்டு, கடந்தகால கருணாநிதி ஆட்சியை குற்றம் சுமத்துவது அறிவற்ற செயலாகவா இருக்கிறது.

விலைவாசி போன்ற காரணங்களை சொல்லி ஆட்சிக்கு வந்த இவர்கள்..அந்த விலையை குறைப்பதற்கோ அல்லது கட்டுக்குள் வைப்பதற்கோ முயற்சிக்காமல், கருணாநிதி செய்த அதே தவறை செய்வதற்க்கா இவர்களுக்கு மக்கள் வாக்களித்தார்கள்?



அல்லது எப்படியும் ஐந்தாண்டுகளுக்கு பிறகு தான் மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை..அதனால் நாம் எதற்கு மக்களைப்பற்றி கவலைப்படவேண்டும் என்று இருந்து விட்டாரா?

தேர்தல் நேரத்தில் அலறிய - கூட்டணிக்கட்சிகள், பதிர்வர்கள் இப்போது எங்கே சென்று விட்டார்கள்?



அப்புறம் இன்னொரு "வொய் திஸ் கொலைவெறி" மேட்டர் :



பொருளாதார மேதை, இந்தியாவைத்தவிர எல்லா நாடுகளிலும் இருக்கும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பற்றியது..

இப்போது என்ன அவசியம் வந்தது பன்னாட்டு முதலீடுகளை இந்தியாவின் சில்லறை வியாபாரத்தில் கொண்டு வருவதற்கு?



ஏற்கனவே பெப்சி, கோக் போன்றவற்றை கொண்டுவந்து காளி மார்க் போன்ற இந்திய பானங்களை ஒழித்து விட்டாச்சு,,



ஏறக்குறைய 15,041,163,000,000 அமெரிக்க டாலர்கள் அந்நிய கடனில் இருக்கும் அமெரிக்காவின் டாலர் மதிப்பு இந்தியாவில் மட்டும் எறிக்கொண்டிருப்பத்தின் மர்மம் என்ன? நமது பணமதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்தும் அதிகாரம் நம் கையைவிட்டு சென்றுவிட்டதா?



அதுபோக, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு பற்றி கூக்கரளிடும் எதிர்கட்சிகள் பாராளுமன்ற செயல்பாடுகளை முடக்குவதன் மூலம் இன்னும் நாட்டிற்கு இழப்பைத்தான் ஏற்ப்படுத்திக் கொண்டிருக்கின்றன.. இதை மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு பிரச்சாரமாக்கும் எண்ணம் எவனுக்கும் illai என்றே தோன்றுகிறது . ஏதோ அன்றைக்கான விளம்பரம் இந்த அரசியல் நோய்களுக்கு போதும்..இத்தனை காலமாக பாராளுமன்றத்தை முடக்கி வரும் எதிர்கட்சிகளின் கோரிக்கைகள் என்றைக்காவது வெற்றி பெற்றுருக்கின்றனவா?

இரண்டாம் தலைமுறை அலைவரிசை ஊழல் கூட உச்ச நீதிமன்றத்தின் நேரடி தலைஈட்டினால்தான் இந்த அளவுக்கு நடவடிக்கைகள் இருக்கின்றனவே தவிர, அவைகளிலும் இந்த ஊழல் அரசியல் வியாதிகள் அனைவருக்கும்தானே தொடர்பு இருக்கிறது?




Friday, November 25, 2011

மது ஒழிப்பு போராட்டமா? மது குடிக்கும் போராட்டமா?


தினமலரில் வந்த செய்தி இது..விளக்கம் தேவை இல்லை என்று நினைக்கிறேன்..

Saturday, November 19, 2011

இலவசங்களால் இழந்தவை..



தமிழக முதலமைச்சர், பால்விலை, மின்கட்டணம்,  பேருந்து கட்டணம் போன்ற மக்களின் அத்தியாவாசிய பொருட்களின் விலைகளை இருமடங்காகக ஏற்றிவிட்டு, அதற்கான காரணங்களாக சென்ற திமுக ஆட்சி, மற்றும் மத்திய அரசின் பாரபட்சமான போக்கு ஆகியவைகளை காரணங்களாக சொல்லி இருக்கிறார்.

மேற்கண்ட காரணங்களை கூறிவிட்டு, இதற்க்கு போது மக்களின் ஒத்துழைப்பு வேண்டும் என்ற உருக்கமான (?) வேண்டுகோளும் வைத்திருக்கிறார். வழக்கம்போல, ஓட்டுபொறுக்கி அரசியல்வாதிகள், இந்த விலையேற்றத்தை உடனேயே வாபஸ் பெறவேண்டும் என்று கூக்குரலிடுகின்றன.. ஆர்பாட்டம் நடத்தபோகின்றனவாம்...இதிலும் பொதுமக்களுக்கு இடைஞ்சலை எற்பபடுத்துவதை தவிர வேறு என்ன செய்ய போகிறார்கள்..இவர்களது இந்த கூச்ச்சல்களினால் ஏறிய விலையேற்றம் இறங்கி விடுமா? 
அதற்காக எதிர்ப்புகளை    காட்டமால் இருக்கக்கூடாது என்று சொல்ல வரவில்லை..
இன்று கூக்குரலிட்டு அலறும் அனைத்துக்கட்சிகளும், ஆளும்கட்சி உட்பட, இந்த விலையேற்றத்துக்கு காரணமானவர்களே.
ஆட்சியை பிடித்துவிடவேண்டும் என்ற பதவி வெறியுடன், எந்த பின்விளைவுகளையும் பற்றியும் சிந்திக்காமல், வீண் இலவசங்களை அள்ளிக்கொடுத்ததின் விளைவை இன்று நாம் அனுபவிக்கிறோம்.

ஜன நாயகககடமையான வாக்களிப்பதற்கே இலஞ்சம் என்ற போக்கை ஆரம்பித்து வைத்த திராவிடக்கட்சிகள், அந்த வாக்கை அதிகரிக்க இலவச வாக்குறுதிகளை அள்ளி வழங்கின. 

தமிழ் தமிழன் என்று இனப்பெருமை பேசும் தமிழன் இந்த இலவசங்களினாலேயே வீழ்ந்தான். சினிமா மாயை ஒருபக்கம், சின்ன்னத்திரை தாக்குதலில் நாள்தோறும் மயங்கிக்கிடக்கும் ஏழை மற்றும் நடுத்தரவர்க்கம், இந்த இலவசங்களினால் தன இயல்பான உழைப்பை மறந்து, இலவசத்துக்கு அடிமையாகி, இன்று விழி பிதுங்கி நிற்கின்றன. 

அத்தியாவாசியப்போருட்களின் விலையை ஏற்றிவிட்டு, மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று சொல்லும் ஆட்சியாளருக்கு, மக்களை அடிமையாக்கி சம்பாதிக்கும், சினிமா, சாராயம் , சிகரெட் போன்ற நச்சுப்போருட்களின் விலையை ஏற்ற என்ன தயக்கம்?

கார்பொரேட்  முதலாளிகளின் கோபத்திற்கு ஆளாகிவிடுவோமா   என்ற அச்சமா?

இன்று இந்த விலை எற்றத்திர்க்காக கூக்குரலிடும் அத்தனை அரசியல் வியாதிகளும் நாளை - தேர்தல் அறிவிக்கப்பட்டால் இதே இலவசங்களை அறிவிக்கும்  கட்சிகளுடன் கூட்டணிக்காக வாசலில் காத்துக்கிடந்து, இடங்களை பெற்று, நம்மிடமே ஓட்டுப்பிச்சை கேட்டு வருவார்கள்..

விடுதலைப்புலிகளுக்காக நாள்தவறாமல் கூக்குரலிடும் இந்த ஓட்டுப்பொறுக்கிகள், தமிழக மக்களுக்கென்று ஒருநாள் போலி ஆர்பாட்ட்மிட்டுவிட்டு  ஒதுங்கி  நின்றுவிடுவார்கள்..

நாம் தான் விழிப்பாக இருக்கவேண்டும்...இலவசங்களை அறிவிக்கும் அனைத்து கட்சிகளையும் புறக்கணிக்கவேண்டும்,,புறக்கணித்து எந்த கட்சியை தேர்ந்தெடுக்கலாம் என்ற கேள்வி வரும்....

இப்படி நாம் புறக்கணித்தல் நிச்சயம் ஒரு மாற்றம் வரும்...அந்த மாற்றம் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும்.

உள்ளாட்சி தேர்தல்களில் எப்படி ஒரு வேட்பாளரின் கடந்தகால அரசியல் நடவடிக்கைகள், அவரது பண்பு  போன்றவற்றை ஆராய்ந்து தேர்ந்துக்கிரோமே அதே போன்ற சூழ்நிலை சட்டமன்ற பாராளுமன்ற தேர்தல்களிலும் தொடர்ந்தால் அப்போது வரும் ஆட்சி - சினிமா, சாராயம், ஓட்டுக்கு பணம் என்ற அரசியல் வியாதிகளை அழிக்கும் ஆட்சியாக கூட இருக்கலாம்..

Wednesday, November 16, 2011

ச்சே என்னங்கடா பத்திரிகை நடத்துறீங்க...?



காலையிலேயே அந்த செய்தியை இன்டர்நெட்டில் பார்த்து விட்டேன்...எப்பேர்ப்பட்ட அதி முக்கியத்துவம் வாய்ந்த செய்தி அது? 

இதற்காகத்தானே உலகமே காத்து கிடந்தது...?

இண்டர்நெட்டில் கம்ப்யூட்டர் உபயோகிக்கும் சிலர்தானே பார்த்து அறிந்து கொள்ள முடியும்.?..பத்திரிக்கைகளில் வந்தால்தானே இது போன்ற செய்திகள் பாமர மக்களுக்கும் தெரியும்..அவர்களும் இந்த செய்திக்குதானே காத்து கிடந்தார்கள்?.
அதனாலேயே மாலை பத்திரிக்கைகளில் தலைப்பு செய்தியாக வரும் என்று ரொம்பதான் ஆவலாக காத்து இருந்தேன்..
மாலை மலர், மாலை முரசு, தமிழ் முரசு போன்ற பத்த்ரிக்கை தலைப்பு செய்தியை ரொம்பவும் ஆவலாக எதிர்பார்த்திருந்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது..

ஏதோ ஒரு பஸ் விபத்தாம்..
திமுக எம்பி ரித்தீஷ் கைதாம்...
கலெக்டர்கள் மாநாடாம்,

அவன் அவன் இந்த செய்திக்காக பந்தயம் கட்டிக்கொண்டிருக்கிறான், என்டி டிவிக்காரனும் சி என் என்னும் வேறு வேலையே இல்லை எனபது போல இந்த செய்தியை பற்றியே பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கிறான்..

உலகப் பேரழகி ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்த (அப்பாடா..நாம இந்த செய்திய மக்களுக்கு தெரிவிச்சாச்சு) அந்த அற்புதமான, நாட்டுக்கும் உலகத்துக்கும் அதிமுக்கியமான இந்த செய்தியை எப்படிடா தலைப்பு செய்தியா போடாம விட்டீங்க? 

ச்சே என்னங்கடா பத்திரிகை நடத்துறீங்க...?


Thursday, November 10, 2011

நீதிபதி கட்ஜுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஊடகத்தாருக்கு கடுங்கண்டனம்..!


இது ஒரு நண்பர் இமெயிலில் அனுப்பியது. இந்த செய்தி பற்றி நானும் ஒரு பதிவு எழுதலாம் என்று நினைத்திருந்தபோது நண்பரின் இந்த  அவசியமான கட்டுரையும் என் என்னத்தை ஒத்துபோவதினால் காப்பி அண்ட் பேஸ்ட் பதிவாக...


TV editors slam Katju for irresponsible and negative comments

(பொறுப்பற்ற மற்றும் எதிர்மறையான கருத்துகள் சொன்னதற்காக தொலைக்காட்சி செய்தி ஆசிரியர்கள் கட்ஜுவை சாடினர்)
***************************

"The Editors Guild of India" has come out with a scathing condemnation of Press Council of India chairman Justice Markandey Katju

(இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜுவிற்கு "எடிட்டர்ஸ் கில்டு ஆஃப் இந்தியா" கண்டனம்)
***************************

BEA (Broadcast Editors' Association) condemns Justice Katju's demeaning remarks against media
(ஊடகங்களுக்கு எதிராக நீதிபதி கட்ஜுவின் தரம்தாழ்த்தும் கருத்துக்களை 'ஒலிபரப்புஎடிட்டர்கள் சங்கம்' கண்டிக்கிறது)
***************************

Press association - a body of Press Correspondents accredited with Government of India (PIB) condemns Katju's statement about scribes

(கட்ஜு அறிக்கைக்கு பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்)
***************************
 NBA (News Broadcasters Association) too defends media operations, condemns Katju's remarks
(செய்தி ஒலி/ஒளிபரப்பாளர்கள் சங்கம் கூட, ஊடக செயல்பாடுகளை பாதுகாக்கும் பொருட்டு கட்ஜு கருத்துக்கு கண்டனம்)
***************************
News bodies - Indian Newspaper Society (INS) condemn Katju’s comment
(செய்தி அமைப்பு மற்றும் தினசரி உரிமையாளர்களின் கூட்டமைப்பு ஆகியன கட்ஜுவின்கருத்துக்கு கண்டனம்)
***************************
இந்த ஊடகத்துறையினர் எல்லோரும் இப்படி ஒட்டுமொத்தமாக வாயிலும் வயிற்றிலும் 'லபோ திபோ' என்று அடித்து அலறிக்கொண்டு... எதற்கு இதுபோல காட்டமாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி திரு.மார்கண்டேய கட்ஜுவுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்..? ஊடகத்தினர்  பற்றி அவர் அப்படி என்னதான் சொன்னார்..?

காரணம் இருக்கின்றது ..! "ஊடகம்" என்ற இந்த காட்டுப்பூனைக்கு,  இதுவரை சரியான ஒரு மணியை கட்ட முக்கிய உயர்ந்த அரசுப்பணியில் இருந்தவர்கள் எவரும் ஒரு சிறு முயற்சி எடுத்ததாகக்கூட தெரியவில்லை  ஆனால், இவரோ... செய்தியாளர் திரு.கரன் தாப்பர்க்கு சென்ற வாரம் அளித்த CNN-IBN  தன் பேட்டியில், பொதுவாக ஊடகங்களை சவுக்கை எடுத்து அடித்து விளாசி தோலை உரித்து தொங்கப்போட்டு இருக்கிறார், தன்னுடைய காட்டமான உண்மை வார்த்தைகள் மூலம்..!



விடுவார்களா ஊடகத்தினர்..? அதன் விளைவுதான் மேற்படி கண்டனங்கள்..! ஆனா, உண்மையில் இந்த ஊடகத்தினரின் கண்டனங்கள்தான் கண்டிக்கப்பட வேண்டியன.நீதிபதி கட்ஜுவின் கருத்துக்கள் போற்றப்பட வேண்டியன. அப்படி என்னதான் காரசாரம் இருந்தது அவரின் அந்த பேட்டியில் என அறிய விருப்பமா ..?

இதோ... நமக்காக தினகரன் நாளிதழ் அந்த பேட்டியின் மொழியாக்கத்தை இவ்வாரம் நவம்பர்-2 அன்று வெளியிட்டுள்ளனர். நீங்களும் இதை படித்துப்பாருங்கள் ..! அப்படி அவர் என்ன தவறாக சொல்லிவிட்டார் கண்டனம் தெரிவிப்பதற்கு..? --என்று விளங்கும்..!

நன்றி :-
தினகரன் நாளிதழ் (2 நவம்பர் 2011-திருச்சி) & தினகரன் இணையதளம்
=========================================================
பத்திரிகைகளும் டெலிவிஷன் சேனல்களும் செயல்படும் விதம் குறித்து முன்னாள் நீதிபதியும் தற்போதைய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ள கருத்துக்கள் மீடியா வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சி.என்.என் & ஐபிஎன் சேனலில் கரன் தாப்பர் நடத்தும் டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கட்ஜு கூறிய விஷயங்கள் சர்வதேச அளவில் பத்திரிகையாளர்களின் கடும் விமர்சனத்துக்கு இலக்காகியுள்ளது.

அந்த கேள்வி & பதில் நிகழ்ச்சியின் முக்கியமான பகுதிகள் இங்கே:

செய்தியாளர் கரன் தாப்பர் :சமீபத்தில்   சில பத்திரிகை மற்றும் டீவிஆசிரியர்களை சந்தித்தபோது, ‘மீடியா  பொறுப்பில்லாமல் செயல்படுகிறது‘ என்று வருத்தப்பட்டீர்கள்.  மீடியாவின் செயல்பாடு உங்களுக்கு  ஏமாற்றம் தருகிறதா?

நீதிபதி மார்கண்டேய கட்ஜு : ரொம்ப ஏமாற்றம் அளிக்கிறது.

செய்தியாளர் கரன் தாப்பர் :உங்களுக்கு மீடியா பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லையா?

நீதிபதி மார்கண்டேய கட்ஜு : நிச்சயமாக இல்லை.

செய்தியாளர் கரன் தாப்பர் :உண்மையாகவா சொல்கிறீர்கள்?

நீதிபதி மார்கண்டேய கட்ஜு : உண்மையாகவே எனக்கு மீடியா பற்றி நல்ல  அபிப்பிராயம் இல்லை. மக்கள் நலனுக்காக மீடியா பணியாற்ற வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி இல்லை. சிலநேரங்களில் மக்கள்  நலனுக்கு எதிராக செயல்படுவதையும் பார்க்கிறேன்.

செய்தியாளர் கரன் தாப்பர் :உண்மையான தகவல்களை பாரபட்சம் இல்லாத முறையில் வழங்குவது மீடியாவின்  கடமை என்று அந்தசந்திப்பில் குறிப்பிட்டீர்கள். மீடியா நேர்மையாக செயல்படவில்லையா, அல்லது அது போதுமானதாக இல்லையா?

நீதிபதி மார்கண்டேய கட்ஜு : ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் வரலாற்றில் ஒரு மாற்றம் நேர்ந்து கொண்டிருக்கிறது. நில பிரபுத்துவ வேளாண் சமூகமாக இருந்த இந்தியா இன்றைக்கு நவீன தொழில்சார் சமுதாயமாக மாறும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். இது வலிகள் மிகுந்த காலகட்டம். முன்பு ஐரோப்பா இதே மாற்றத்தை சந்தித்த நேரத்தில், மக்களுக்கு அந்த வலியை  குறைக்கும் வகையில் அங்குள்ள மீடியா செயல்பட்டது.

செய்தியாளர் கரன் தாப்பர் :இந்தியாவில் அப்படி  நடக்கவில்லை என்கிறீர்களா?

நீதிபதி மார்கண்டேய கட்ஜு : இங்கே அதற்கு தலைகீழாக நடக்கிறது. ஐரோப்பாவில் ரூசோ, தாமஸ்  பய்ன், திதரோ மாதிரி எழுத்தாளர்கள் மக்களை மாற்றத்துக்கு தயார் செய்தார்கள். ‘இந்த நாட்டிலுள்ள கடைசி சாமியாரின் குடலை உருவி அதை கடைசி மன்னனின் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கவிடும் வரையில் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்காது‘ என்று முழங்கினான் பிரஞ்சு சிந்தனையாளன் திதரோ.

செய்தியாளர் கரன் தாப்பர் :அவர்களோடு ஒப்பிட்டால் இந்தியாவின் வரலாற்று  மாற்றத்துக்கு நமது மீடியாவின் பங்களிப்பு எப்படி?

நீதிபதி மார்கண்டேய கட்ஜு : இந்திய மீடியா பெரும்பாலான நேரங்களில் மக்களுக்கு எதிரான நிலை எடுப்பதை பார்க்கிறேன். மூன்று விஷயங்களை உதாரணம் காட்டலாம். முதலாவது, பற்றி எரியும் உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை மீடியா திசை திருப்புகிறது. இங்கே பிரச்னைகள் எல்லாமே பொருளாதார அடிப்படையிலானவை. நம் மக்களில் இன்னமும் 80 சதவீதம் பேர் வறுமை,வேலையின்மை, விலைவாசி, நோய்களால் பாதிக்கப்பட்டு வாழ்க்கை நடத்துகின்றனர். அந்த பிரச்னைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து தீர்வு காண தூண்டாமல்,பிரச்னைகளில் இருந்து திசை திருப்புகிறது மீடியா. சினிமா நட்சத்திரங்கள், அழகி போட்டி, கிரிக்கெட் மாதிரியான சமாசாரங்களை பெரிதுபடுத்தி நாட்டுக்கு அத்தியாவசியமானது அந்த விஷயங்கள்தான் என்பதுபோல் ஒரு பிரமையைஉண்டாக்குகிறது.

செய்தியாளர் கரன் தாப்பர் :ஃபேஷன், சினிமா, கிரிக்கெட் மேட்டரை மக்களுக்கு போதையேற்ற மீடியா பயன்படுத்துகிறது என்கிறீர்கள்?

நீதிபதி மார்கண்டேய கட்ஜு : ஆமாம். கிரிக்கெட் நமது ஜனங்களுக்கு ஒரு போதைப்பொருள் & ஓப்பியம் & மாதிரி. ரோமாபுரி பேரரசன்  சொல்வானாம், ‘மக்களுக்கு ரொட்டி கொடுக்கவழியில்லை  என்றால் சர்க்கஸ் பார்க்க ஏற்பாடு செய்‘ என்று. இந்தியாவில் மக்களுக்கு தேவையானதை கொடுக்க முடியாவிட்டால் அவர்களை கிரிக்கெட் பார்க்க வைக்கிறோம். நிறைய சேனல்களில் இரவு பகல் எந்த நேரமும் ஏதாவது கிரிக்கெட் மேட்ச் ஓடிக் கொண்டே இருக்கிறது & அதுதான் நாட்டின் ஒரே பிரச்னை மாதிரி.

செய்தியாளர் கரன் தாப்பர் :மக்கள் விரோதமாக மீடியா செயல்படுவதை காட்டும்  இன்னும் இரண்டு விஷயங்கள் என்னென்ன?

நீதிபதி மார்கண்டேய கட்ஜு : இரண்டாவது, அநேக நேரங்களில் மக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. இங்கே பலதரப்பட்ட மக்கள்வாழ்கிறார்கள். ஒருவரை ஒருவர் மதித்தால்தான் ஒற்றுமையாக நிம்மதியாக வாழ முடியும். ஆனால் என்ன நட க்கிறது? ஒரு ஊரில்  குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்  ‘குண்டு வைத்தது நாங்கள்தான் என்று இந்தியன்முஜாஹிதின்  கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல்  ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘ என்று ஏதோ ஒரு முஸ்லிம்  பெயரை சேனல்கள் சொல்கின்றன. அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்ததுஎன்று  காட்டுகிறார்கள். எஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும். யாரோ ஒரு  விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி  மறுநாள் பத்திரிகைகளிலும்  பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது?முஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள்என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா. எந்த மதமாக  இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான்  உண்மை.

செய்தியாளர் கரன் தாப்பர் :மீடியா இந்த விஷயத்தில் கேர்லசாக நடக்கிறது, தகவல் உண்மையா என்பதை செக் பண்ணாமல் செய்திவெளியிடுகிறது என்கிறீர்களா அல்லது வேண்டுமென்றே அப்படி செய்வதாக நினைக்கிறீர்களா?

நீதிபதி மார்கண்டேய கட்ஜு : மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன். நிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.

செய்தியாளர் கரன் தாப்பர் :மீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்?

நீதிபதி மார்கண்டேய கட்ஜு : குண்டு வெடித்த சிறிது  நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்தது என்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும் போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்?

செய்தியாளர் கரன் தாப்பர் :மீடியாவின் மக்கள் விரோத நிலைப்பாடுக்குமூன்றாவது  உதாரணமாக எதை சொல்ல போகிறீர்கள்?

நீதிபதி மார்கண்டேய கட்ஜு : ஒரு ஃபியூடல் சொசைட்டி மாடர்ன் சொசைட்டியாக  மாறுகிற கால கட்டத்தில் அந்த மக்களும் நாடும்முன்னேற்ற  பாதையில் செல்வதற்கு அறிவியல் சிந்தனை பரவ வேண்டும். அதற்கு மீடியா உதவ வேண்டும். ஐரோப்பாவில் நடந்ததை சொன்னேன். இங்கே என்ன நடக்கிறது? அறிவியல் சிந்தனையை தூண்டுவதற்கு பதில் ஜோசியம், மூடநம்பிக்கை போன்ற அறிவியலுக்கு எதிரான விஷயங்களை பரப்புகிறது மீடியா. ஏற்கனவே நமது நாட்டில் 80 சதவீத மக்கள் ஜாதி, மதம், மூடநம்பிக்கை போன்ற  விஷயங்களில் சிக்கி மனரீதியாக பின்தங்கி நிற்கிறார்கள்.

அவர்களை அந்த மாயைகளில் இருந்து விடுவித்து ஒரு மேம்பட்ட சிந்தனை வட்டத்துக்கு கொண்டுவர, முற்போக்கானஎண்ணங்கள் உருவாக மீடியா தூண்டுதலாக இருக்க வேண்டுமா, வேண்டாமா? ஆனால் மக்களை இன்னும் மடையர்களாக்கும் வேலையை நமது மீடியா செய்கிறது. பல சேனல்களில் பெரும்பாலான நேரம் ஜோசியம் ஓடுகிறது. இன்றைக்கு நீங்கள் இந்த கல் மோதிரம் போட வேண்டும், இன்ன கலர் சட்டை அணிந்தால் நீங்கள் இறங்கும் காரியம் வெற்றி என்றெல்லாம் அபத்தமாக சொல்லி மக்களின் மூளையை மழுங்கடிக்கிறார்கள். என்ன பேத்தல் இது!

செய்தியாளர் கரன் தாப்பர் :ஆக, மீடியா என்ன செய்ய வேண்டும் என சமுதாயம் எதிர்பார்க்கிறதோ அதை செய்யவில்லை என்கிறீர்கள்.தன்னை நம்பிய இந்தியாவை மீடியா கைவிட்டு விட்டதாக எடுத்துக் கொள்ளலாமா?

நீதிபதி மார்கண்டேய கட்ஜு : ஒரு பெரிய சமுதாய மாற்றத்தில் மீடியாவின் பங்களிப்பு அபாரமானதாக இருக்க வேண்டும். ஏனென்றால் மீடியா என்பது  ஏதோ சாமான் உற்பத்தி செய்து சந்தையில் விற்கும் ச £தாரணமான பிசினஸ் கிடையாது. அறிவு சம்பந்தப்பட்டது. சிந்தனை சம்பந்தப்பட்டது.  மக்களுக்கு அறிவியல் அடிப்படையிலான புதிய சிந்தனைகள் உருவாக தூண்டுகோலாக செயல்படும் புனிதமான பணி  மீடியாவுக்கு தரப்பட்டிருக்கிறது. அந்த பொறுப்பை அது செய்ய தவறினால் நாட்டை மக்களை கைவிட்டு விட்டதாகத்தானே அர்த்தம்?

செய்தியாளர் கரன் தாப்பர் :இந்தியாவை இன்னும் மோசமாக்குகிறது மீடியா என்றா சொல்கிறீர்கள்?

நீதிபதி மார்கண்டேய கட்ஜு :அதுதான் என் மதிப்பீடு. ஒரு ஜோசியர் உட்கார்ந்துகொண்டு ‘இது அந்த ராசி, அது அணிந்தால் உங்களுக்கு ராசி‘ என கதைஅளந்து கொண்டிருப்பதை எத்தனை சேனல்களில் பார்க்கிறோம்.

செய்தியாளர் கரன் தாப்பர் :‘செய்தியை சரியாக சொல்வதில்லை;உண்மைகளை இஷ்டத்துக்கு திரித்து கூறுகிறது; கருத்தையும்வார்த்தைகளையும் வெட்டி  ஒட்டி வேறு அர்த்தம் கொடுக்கிறது’என்பது மீடியா பற்றிய  மக்களின் எண்ணம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நீதிபதி மார்கண்டேய கட்ஜு : அதேதான் என் கருத்தும். 2009 தேர்தலில் பார்த்தோம். முன்னெல்லாம் செய்தியாளர்கள் வேட்பாளரைபார்த்து, ‘எனக்கு பத்தாயிரம் கொடு; உனக்கு சாதகமாக செய்தி போடுகிறோம்‘ என்று  பேரம் பேசினார்கள். அதை பார்த்து பத்திரிகை உரிமையாளர்களுக்கு வேறு ஐடியா உதித்தது.‘நாம்தான் சம்பளம் கொடுக்கிறோமே,  செய்தியாளர்கள் இப்படியும் சம்பாதிக்க ஏன் இடமளிக்க வேண்டும்? நாமே சம்பாதிக்கலாமே?‘என்று முடிவு செய்து, ‘ஒரு கோடி கொடுங்கள், நான் ஒரு பேக்கேஜ் தருகிறேன்‘ என்று டீல் போடுகிறார்கள். ஒரு பத்திரிகையில் ‘‘வேட்பாளர் ‘ஏ‘ அமோக வெற்றி பெறுவார்‘‘ என்ற செய்தி மேலே; ‘‘அவருக்கு டெபாசிட் போய்விடும், ‘பி‘தான் ஜெயிப்பார்‘‘ என்று கீழே முதல் பக்கத்திலேயே பிரசுரமான விசித்திரத்தை பார்த்தோம். கண்ணை விற்று சித்திரம் வாங்கும் வேலை.

செய்தியாளர் கரன் தாப்பர் :இந்த மாதிரி பிரச்னைகளுக்கு தீர்வு காண நீதிபதி வர்மா தலைமையில் நியூஸ் பிராட்காஸ்டர்ஸ் அசோசியேஷன் அமைத்து சுயமாக சில கட்டுப்பாடுகளை கொண்டுவர முயற்சிசெய்தார்கள்...?

நீதிபதி மார்கண்டேய கட்ஜு : அதில் எந்த பலனும் ஏற்பட்டதாக தெரியவில்லையே. நீங்கள் தொழில் நடத்துவது ஏழைகள் வாழும் நாட்டில்; அதனால் அவர்களுடைய பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்தாக வேண்டும்; அதை விடுத்து ‘லேடி காகா வந்துவிட்டார்.. கரீனா கபூர் தனது மெழுகு சிலையை மிகவும் சிலாகித்தார்..’ இதெல்லாமா முக்கிய செய்தி ஆவது?

செய்தியாளர் கரன் தாப்பர் :மீடியா ஏன் மாறவில்லை என நினைக்கிறீர்கள்?


நீதிபதி மார்கண்டேய கட்ஜு : அவர்களுக்கு எந்த பயமும் இல்லை. அது ஒரு காரணம். கொஞ்சமாவது பயம் இருக்க வேண்டும். தப்பு செய்தால் தண்டனை நிச்சயம் என்ற பயம்.

செய்தியாளர் கரன் தாப்பர் :அதற்கு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?

நீதிபதி மார்கண்டேய கட்ஜு : பத்திரிகைகளை மட்டும்தான் பிரஸ் கவுன்சில் இப்போது கேள்வி கேட்க முடியும். பிரஸ் கவுன்சில் பெயரை மீடியா கவுன்சில் என மாற்றி டீவி சேனல்களையும் அதன் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். சொல்லி திருந்தாதமீடியா நிறுவனத்துக்கு அரசு விளம்பரங்களை நிறுத்துவது;லைசென்ஸை குறிப்பிட்ட காலத்துக்கு முடக்கி வைப்பது போன்ற தண்டனை அளிக்க அந்த கவுன்சிலுக்கு அதிகாரம் வேண்டும். பிரதமருக்கு எழுதியிருக்கிறேன்.

செய்தியாளர் கரன் தாப்பர் :அது பத்திரிகை சுதந்திரத்தை பாதிக்கும் என்பார்களே?

நீதிபதி மார்கண்டேய கட்ஜு : ஜனநாயகத்தில் எல்லோரும் மக்களுக்கு பதில் சொல்ல கடமை பட்டவர்கள். எந்த சுதந்திரமும்எல்லையில்லாதது அல்ல. சில கட்டுப்பாடுகள் இருந்தாக வேண்டும். மீடியா இதை உணர்ந்து கொண்டால் நாட்டுக்கு நல்லது.

செய்தியாளர் கரன் தாப்பர் :மீடியாவை உங்களுக்கு சுத்தமாக பிடிக்காது போலிருக்கிறதே?

நீதிபதி மார்கண்டேய கட்ஜு : நான் ரொம்பவும் மதிக்கிற சில மீடியாகாரர்களும்  இருக்கிறார்கள். உதாரணமாக சாய்நாத்தைசொல்லலாம். அவர் மேல் எனக்கு ரொம்ப மரியாதை உண்டு. விவசாயிகள் தற்கொலை பற்றி நிறைய எழுதியிருக்கிறார். ஆனால் அப்படிப்பட்ட ஆட்கள் குறைவு. பெரும்பாலான செய்தியாளர்கள் அரைகுறையாகத்தான் இருக்கிறார்கள். எகனாமிக்தியரி, பொலிடிகல் சயின்ஸ், லிட்டரேச்சர், ஃபிலாசபி போன்ற விஷயங்களில் ஆழ்ந்த  அறிவு இல்லாதவர்கள்.


திரு.மார்கண்டேய கட்ஜுவின், ஊடகங்கள் மீதான இவ்வளவு  சிறப்பான சரியான கருத்துக்கள் கொண்ட ஆக்கபூர்வமான விமர்சனத்திற்கு வெட்கித்தலை குனிந்து தங்கள் தவறுணர்ந்து வருந்தி திருந்தி சரியான பாதையில் அல்லவா பயணிக்கவேண்டும் இனி..? ஆனால், அதைவிடுத்து... எதற்கு ஊடகத்தினர் கண்டனங்கள் தெரிவிக்கிறார்கள்..?

மீடியா என்றால் கொம்பு முளைத்தவர்களா..? மீடியாக்களுக்கு எந்த பயமும் கட்டுப்பாடும் பொறுப்புணர்ச்சியும் இல்லை. மக்களின் எதிர்கால வாழ்வு குறித்து மனசாட்சி உறுத்தல் இல்லை. தப்பு செய்தால் சட்டப்படி தண்டனை நிச்சயம் என்ற அச்சம் இல்லை.

வெறும் TRP Ratting-ம் பத்திரிக்கை விற்பனையும், இணைய வாசகர்கள் ஹிட்சும் அதனடிப்படையிலான விளம்பர வருவாயுமே இவர்களின் குறிக்கோளாகி விட்டது.

ஊடகங்கள் ஒன்றும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை அல்லவே..? ஒரு இந்திய குடிமகன்... அதுவும், உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து ஒய்வு பெற்றவர்... அதுவும், பிரஸ் கவுன்சில் தலைவர்...  ஊடகத்தை விமர்சித்ததால்... அவருக்கு கண்டனம் என்றால்..?!? அதுவும் எப்படி..? நாட்டுக்கும் மக்களுக்கும் சரியான நல்ல கருத்து சொன்னதுக்கு கண்டனம் என்றால்..?  என்னால் சும்மா இருக்க முடியவில்லை சகோ..!

இந்த பேட்டிக்காக நீதிபதி மார்கண்டேய கட்ஜுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஊடகத்தாருக்கு எனது வன்மையான கடும் கண்டனம் உரித்தாகட்டும்..!

சபாஷ் கட்ஜு சார்..! நேர்மையான துணிச்சலான அருமையான பேட்டி..! முன்னாள் நீதிபதி மற்றும் இந்நாள் பிரஸ் கவுன்சில் தலைவர் அவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றியும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.

Monday, October 31, 2011

ஏழாம் அறிவு - சிற்றறிவு.



பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய கதைகளை திரைப்படங்களாக எடுக்கும்போது - அதைப்பற்றிய ஒரு பிரம்மாண்டத்தை பரப்பிவிடுவது இங்குள்ள சினிமாக்காரர்களுக்கும், அதை நம்பியே வாழும் ஆபாச ஊடகங்களுக்கும், அதைப்பற்றியே பிரஸ்தாபிக்கும் - இலவச விளம்பரதாரர்களான பதிவர்களுக்கும் ஒரு கடமையாகிவிட்டது. 


பதினாறு நூற்றாண்டுகளுக்கு முன்பு  வாழ்ந்த ஒரு மன்னன் சீனாவிற்கு சென்று அங்கு வாழ்ந்த  மக்களை ஆபத்திலிருந்து  காப்பாற்றியது மட்டுமல்லாமல் சில கலைகளையும் கற்றுகொடுத்ததாகவும், இன்னும் அங்கு அவர் தெய்வமாக போற்றப்படுவதாகவும் அந்த மன்னன் தமிழன் என்றும் பீலா விட்டிருக்கும் கதைதான் ஏழாம் அறிவு.

 பதினாறு நூற்றாண்டுகளுக்கு முன்பு   காஞ்சிபுரம் புகுதியை ஆண்ட ஒரு மன்னன் தனது  மகன் போதி தர்மனை சீனாவிற்கு அனுப்பி வைக்கிறார். - மூன்றாண்டுகளுக்கு பிறகு சீனாவிற்கு கொடிய நோய் பரவப்போகிறது, எதிரிகள் தாக்கப்போகிரார்கள் என்று அறிந்த அந்த தந்தைக்கு, தனது மகன் அதே சீனர்களால் விஷம் வைத்து கொல்லப்படுவான்  என்று அறியாதது வேடிக்கையே..

இவர்களால் தமிழர் என்று போற்றப்படும் போதி தர்மர், சீனர்களுக்கு வித்தைகள் மற்றும் அறிய மருத்துவ கலைகளை கற்று கொடுத்ததாக சொல்லும் இவர்கள், அவர்களுக்கு எந்த மொழியில் இதையெல்லாம் பயிற்றுவித்தார் என்று காட்டவே இல்லை. காரணம் போதி தர்மர் சீனர்களிடம் ஒரு வார்த்தை கூட பேசியதாக காட்டப்படவே இல்லை..ஊமை பாஷை பேசுவது போல தான் இருக்கிறது..எப்படி இவர் அறிய குறிப்புகளை கொடுத்தார் என்றே தெரியவில்லை.

தங்களை உயர்த்திக்கொள்வதர்காக  , மற்றவர்களை கொடியவர்களாக சித்தரிக்கும் இந்த போக்கு எவ்வளவு பயங்கரமானது என்று இவர்கள் அறியவில்லையா? தம்மை எல்லாவிதத்திலும் காப்பாற்றிய போதிதர்மனை அந்த சீனர்களே விஷம் வைத்து கொன்றதாகக்காட்டுவது எவ்வளவு பெரிய நயவஞ்சகத்தன்மை? எப்பேர்ப்பட்ட வரலாற்று திரிபு?

தற்காலத்துக்கு வரும் கதையில், பதினாறாம் நூற்றாண்டில் சீனர்களுக்கு வந்த அதே பயங்கரமான வியாதியை, இந்தியாவுக்கு பரப்பி, அதன் மூலம் இந்தியர்களை தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது சீனர்களின் தந்திரம் என்றால்,   இந்த வியாதி சீனாவுக்கு பரவும் என்று முன்கூட்டியே யூகித்து தன மகன் போதி தர்மனை அனுப்பி அவர்களை  போதி தர்மனின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த தந்திரம் யாருடையது..?அப்படி பார்த்தால் அந்த வியாதியை சீனர்களுக்கு பரப்பி விட்டது போதி தர்மனின் தந்தையா ? என்ற எண்ணம் ஏற்படுவதற்கு காரணம் இவர்களது  கதையமைப்புதான்.

இந்தியாவில்  போதி தர்மனைப் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் மாணவியை கொள்வதற்காக வரும் டான்க்லீ என்ற வில்லன் எல்லாரையும் "நோக்கு வர்மம்" மூலம் தன கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருகிறான்..அப்படி நோக்கு வர்மத்தால் கட்டுப்பட்டவர்கள் எல்லாம், - ஒரு சந்தர்பத்தில் சகல கலைகளையும் கற்றவர்கள் போல சண்டை போடுவது மாபெரும் கேலி கூத்து..? நோக்கு வர்மத்தில் ஒருவனது மனதை கட்டுப்படுத்தலாம் என்றுதான் அவர்களே கூறுகிறார்கள் ..எனில்...சகல கலைகளையும் எப்படி நிமிடத்தில் கற்றுக்கொன்றார்கள் என்ற கேள்வி எழுகிறது..

அந்த வில்லனில் வேலையே படம் முழுவதும் எல்லாரையும் நோக்கு வர்மத்தால் கொல்வதே. அப்படி இருக்கும்போது கதாநாயகியைக் கொல்வதற்கு ஏன் அவ்வளவு சிரமப்பட வேண்டும்? அவனது கைக்கூலி புரபாசர்ரிடம் சொன்னால் அந்த மாணவி வரப்போகிறாள். நோக்கு வர்மம் மூலம் அவளை கட்டுக்குக்குள் கொண்டுவந்து கத்தியை வைத்தோ தூக்கு மாட்டிக்கொண்டோ தற்கொலை செய்துகொள்ள செய்திருக்கலாம் தானே?

டி ஏன் எவை தூண்டுவதன் மூலம் போதி தர்மனின் வம்சா வழியை சேர்ந்த ஒருவனுக்கு அந்த திறமையை கொண்டு வருகிறார்களாம்..சிரிப்பாக இருக்கிறது..அந்த திறமையை பெற்ற அவன், அதே நேரத்தில் சிக்ஸ் பேக் உடம்பையும் பெறுவது மெகா மெகா நகைச்சுவை..

விடுதலைப்புலிகளுக்கு வக்காலத்து வாங்குவதற்காக தமிழர்களை உசுப்பேற்றும் வசனங்களை அங்கங்கே தூவி இருக்கிறார்கள்..இந்த படத்தில் வரும் ஒரு வசனம் போல - தமிழ் தமிழர்கள் என்று பேசுவது இவர்களுக்கெல்லாம் பேஷனாகி விட்டது..

மலேஷியாவில் அடிக்கிறான், இலங்கையில் அடிக்கிறான் கடைசியில் இந்தியாவிலேயே வந்து அடிக்கிறான் என்ற வசனம் வெறுப்பாக இருக்கிறது..

மலேசியாவில் சட்டத்தை மீறினால் இவர்களை தடவி கொடுக்க வேண்டுமா?

இலங்கையில் நடந்தது துரோகமாம்.. இலங்கையில் போரிட வக்கில்லாமால், இந்தியாவை தலை  இட செய்தது மட்டுமின்றி, நமது நாட்டிலேயே குண்டு வைத்து வன்முறை செய்ததற்கு என்ன பெயராம்?

கதாநாயகனுக்கு இப்படத்தில் வேலை குறைவுதான்...அதிலும் நடிப்பே வரவில்லை எனபது மகா ஆச்சரியம்.

சீனாவுக்கு எல்லா கலைகளையும் கற்று கொடுத்தது தமிழன்தான் என்று கதை விட்டது போல, அமெரிக்காவுக்கு அணுகுண்டை கற்று கொடுத்தது, ரஷ்யாவுக்கு கம்யூனிசத்தை சொல்லி கொடுத்தது, அரபு நாடுகளுக்கு எண்ணைவளத்தை கண்டு பிடித்தது, இன்னும் அனைத்து நாடுகளின் வளர்ச்சிக்கும் காரணம் தமிழன்தான் என்று வரிசையாக ரீல் விட ஆரம்பித்து விடுவார்கள்..
காத்திருப்போம்..காதுகளில் பூச்சுற்றியபடி..
படம் எடுக்கிறானாம் படம்..

Tuesday, October 18, 2011

நடு நிலைமை என்னும் நயவஞ்சகம்



ஆறு மாதங்களுக்கு முன்புதான் தமிழக சட்ட மன்ற தேர்தல் நடைபெற்றது..அப்போது இவ்வளவு அலப்பறை இல்லை...ஒலிபெருக்கிகளின் - ஒட்டுப்பொருக்கிகளின் கூக்குரல்கள்  இல்லை...பணம் பட்டுவாடா பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது...
அப்போது தேர்தல் ஆணையத்தை வானாளவப் புகழ்ந்த ஊடகங்கள் - இந்த உள்ளாட்சி தேர்தலின்போது - பல்வேறு கட்சிகள் மீண்டும் காட்டுக்கத்தல்கள், ஒலிபெருக்கிகளின் அலறல்கள் சாலைகளை ஆக்கிரமித்து பொது மக்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கியபோது, இப்போது மெளனமாக இருக்கும் மர்மம் புரியவில்லை..

கருணாநிதி ஆட்சியில் அத்துமீறல்கள் நடைப்ற்று இருக்கலாம்...அதற்க்கு தேர்தல் ஆணையம் உண்டாக்கிய கட்டுப்பாடுகள் தேர்தல் நியாயமாக நடைபெற காரணமாக இருந்திருக்கலாம்..ஆனால் ஜெயலலிதா ஒன்றும் உத்தமரல்லவே..தில்லுமுல்லுகள் தெரியாத பண்பாளர் அல்லவே..? 

இப்போது மட்டும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை தளர்த்தியது ஏன்? 

அப்போது நடுநிலைமையோடு இருந்த தேர்தல் ஆணையம் இப்போது நடுநிலைமை தவறியது ஏன்?

இந்த வருடம் கட்டுப்பாடுகளை களைய காரணமாக இருந்தது எது? தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் கருணாநிதிக்கு மட்டும்தானா?

கருணாநிதியை காய்ச்சு காய்ச்ச்சிய மா மேதாவிகளான பதிவர்களும், ஆபாச பத்திரிக்கைகளும், கருணாதியை தாக்கும்போது முக்கியமான ஒன்றை சொல்வார்கள்..அது மின் வெட்டு..
ஜெயலலிதா வந்தவுடன் மின் வெட்டு நின்றுவிட்டதா?

விலை வாசி குறைந்து விட்டதா?
நாட்டில் அராஜகங்கள் ஒழிந்துவிட்டதா?

இப்போது பொதுமக்களுக்கு மின்சாரம் தேவை இல்லையா?
நாட்டில் பொறுக்கியிசம் ரவுடியிசம் ஒழிந்து விட்டதா?
விலைவாசி இறங்கி விட்டதா?
எல்லாவற்றிலும் தன்னிறைவு பெற்று விட்டார்களா?
விடுதலைப்புலிகளுக்கு தனி ஈழம்  கிடைத்து விட்டதா?
ராஜ பக்ஷே தண்டிக்கப்பட்டு விட்டாரா?
எங்கேடா உங்களது அலறல்கள்?
இப்போது என்ன பயம்?

நடுநிலைமை என்று ஏமாற்றும்  நயவஞ்சகவாதிகள்தானே நீங்கள்?
தேர்தல் வந்தால் கூக்குரலிடும் கோமாளிகள்தானே?