ஒவ்வொரு வருடம் ஜனவரி முதல்நாள் வருடப்பிறப்பாக பரவலாக கொண்டாடப்படுகிறது. இது கிறிஸ்தவர்களின் வருடப்பிறப்பாக இருந்தாலும் அனைத்து மதத்தினரும் கொண்டாடுகின்றனர். டிசம்பர் 31ஆம் நாள் இரவும் முழுவதும் முழித்திருந்து இரவு 12 மணியானவுடன் வெடி முழக்கத்துடன் கொண்டாட்டம் களைகட்டுகிறது. கிளப்,கலையரங்குகள் என்று பல இடங்களில் ஆண்களும் பெண்களும் இணைந்து நடத்தும் கூத்துக்களுக்கு அளவில்லை. இறக்குமதி செய்யப்பட்ட இக்கூத்துகள் மேலை நாட்டவர்களைவிட படுமோசமாக அரங்கேறுகிறது. நடனஅரங்குளில் மதுக்கள் பரிமாறப்படும் நிகழ்வுகள் சாலைகளில் அதிவேகமாக இருசக்கர வாகனங்களில் உறுமிக் கொண்டு அடுத்தவர் களின் தூக்கத்தை கெடுக்கும் இளைஞர்கள் என்று ஏராளமான சீரழிக்கும் நிகழ்வுகள். இதைத்தவிர வருடப்பிறப்பு கொண்டாடத்தின் மூலம் இவர்கள் சாதித்தது என்ன? டாஸ்மாக் கடைகளில் கொடிகட்டிகப்பறக்கும் வியாபாரமும் ஒழுக்க கேடான நடனங்களைத் தவிர வேறு என்னதான் இந்த கொண்டாட்டங்களில் கிடைத்தது?
அந்நிய அடிமைத்தனத்தின் வெளிப்பாடாக, நட்சத்திர ஹோட்டல்களிலும், ரேசார்ட்டுகளிலும், கால் சென்டர்களிலும் அதற்கான ஏற்ப்பாடுகளை மும்முரமாக செய்ய தயாராக இருக்கிறார்கள்..
ஸ்லீவ் லெஸ் அழகிகளும், குறுந்தாடி அழகன்களும் ஏதோ புதிய மாற்றத்தை உருவாக்குவதைப் போல அந்த நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்..
வருடக்கடைசியில் 31 ம்தேதி 12 மணிக்கு பீர் பாட்டில்களையும் சாராய பாட்டில்களையும் ஏந்திக்கொண்டு புத்தாண்டு வாழ்த்துக் கூறி கூச்சலிட்டுக்கொண்டு கூத்தடிப்பதை ஏதோ புதிய சாதனை செய்வதுபோல கொண்டாடுகிறார்கள்..
அடுத்தநாள் கோயில்களிலும் சர்சுகளிலும் கட்டுக்கடங்காத கூட்டம்..
புதிய உறுதிமொழிகள்...சிகரெட் பிடிக்கமாட்டேன், சாராயம் குடிக்கமாட்டேன் என்று , சிகரெட் பிடித்துக்கொண்டும், சாராயம் குடித்துக்கொண்டும் உறுதி மொழி எடுத்துக் கொள்கிறார்கள்...
பிறகு....?
வழக்கம்போல குவாட்டருக்கும் துண்டு சிகரெட்டுக்கும் அலையும் எந்த்தனையோ அடிமைகளில் ஒருவராகிவிடுகிரார்கள்...
வேறு புத்தாண்டே இல்லையா?
தமிழ் தமிழ் என்று பீற்றிகொண்டிருப்போரே...உங்களின் தமிழ் புத்தாண்டு தினத்தில் இதெல்லாம் செய்கிறீரோ?
சாராயம் குடிக்கிறீர்களா?
அழகிகளுடன் கும்மாளம் அடிக்கிறீர்களா?
ஆபாச நடிகைகளுக்கு லட்சக் கணக்கில் கொட்டிக் கொடுத்து ஆபாச வியாபாரம் செய்யும் நட்சத்திர ஹோட்டல்களில் குடித்துவிட்டு கும்மாளமிடுவீர்களா ?
மெரீனா பீச்சில் பைக் சர்கஸ் செய்கிறீர்களா?
போக்குவரத்து விதிகளை மீறுகிறீர்களா?
குடிக்க மாட்டேன் என்று உறுதிமொழி எடுக்கிறீர்களா?
நைட் பார்ட்டிக்கு சென்றவன் நல்லபடியாக வீட்டுக்கு வந்து சேருவானா என பெற்றவர்களை வீட்டில் தவிக்க வைக்கிறீர்களா?
அப்புறம் எப்படியடா நீங்களெல்லாம் தமிழர்கள்...
ஓஹோ..ஆங்கிலேயனுக்கு அடிமைப்படுவதுதான் தமிழ் பற்றோ?
அப்படி என்றால்...
" wish you a happy new year தமிழா! "
10 comments :
இப்போ உங்களுக்கு ஹாப்பி நியூ இயர் வாழ்த்துக்கள் சொல்லலாமா...:((( கொஞ்சம் குழப்பத்துடன்..ஆனந்தி :)))
இருந்தாலும்...சொல்றேன்...happy new year to you brother...!!
wish you a happy new year தமிழா! "
நன்றி திரு சன்முககுமார்
நன்றி சகோதரி ஆனந்தி அவர்களே...
நான் என் என்னத்தை எழுதி இருக்கிறேன். இதே போன்று தமிழ் புத்தாண்டுக் காலங்களிலும் வாழ்த்து செய்திகளை அனுப்புவீர்கள் என்று நம்புகிறேன்...
ஆமாம் தமிழ் புத்தாண்டு தை மாதம் முதல் நாளா, அல்லது சித்திரை மாதம் முதல் நாளா? (தமிழ் வருடங்களுக்கு ஏன் தமிழில் பெயரில்லை? )
நன்றி அய்யா muniswamy . சரி.. உங்கள் கருத்துத்தான் என்ன?
:)
அண்ணே!
மேட்டர் இதுதான் சொல்விங்கன்னு தெரியும், படம் பார்க்கவே தனியா வரனும் போல!
கருத்து சொல்றதுல உங்களை அடிச்சிக்க ஆளே இல்லைங்கண்ணே!
நன்றி ஷர்புதீன் நன்றி திரு வால்பையன்..
ஆமா... குடிச்சிட்டு கும்மாளம் போடராணுக.. அடுத்த நாளு வழக்கம் போல பொழப்ப பாக்கப் போய்டுராணுக..
இவனுகளுக்கு கூத்தடிக்கறதுக்கு எதாவது ஒரு காரணம் வேணும்.. அவ்ளோதான்...
வாழ்க..
2011 புத்தாண்டு சிந்தனைகள்
http://newstbm.blogspot.com/2011/01/2011_01.html
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?