Pages

Saturday, February 12, 2011

தூங்காநகரம் - சாரயக்கடைகளுக்கான விளம்பரம்

படத்தின் ஆரம்பக் கட்ட காட்சிகளைப் பார்க்கும்போது, ஏதோ வித்தியாசமாக யோசித்திருக்கிறார்கள் என்று எண்ணவைத்து ஏமாற்றி விடுகிறார்கள்...


இருட்டுக்குள் கேமரா ஒவ்வொரு வீடாகப் புகுந்து ஒவ்வொரு வீட்டின் ரகசியங்களையும், பழக்க வழக்கங்களையும் போகிற போக்கில் சொல்லும்போது இது ஒரு மாறுபட்ட படம் என்றுதான் எண்ணத்தோன்றுகிறது..அடுத்துவரும் காட்சிகள் நம் எண்ணத்தில் மண்ணைப் போட்டு புலம்ப வைத்து விடுகிறது...

மதுரையை சுற்றியுள்ள வெவ்வேறு ஊர்களில் இருந்து மதுரைக்கு வரும் நான்கு பேர் சாராயக் கடையில் சந்தித்து உயிர் நண்பர்களாகும் அரதபழசான ஆயிரத்தி நூற்றி சொச்சமான கதை..

மதுரையில் நடக்கும் கதைக் களம் என்றால் இப்படித்தான் என்று சில கேணத்தனமான படங்களில் இதுவும் ஒன்று..

நான்கு நண்பர்கள்..(நண்பர்கள் என்றால் நான்கு பேர் என்று எவன் கண்டு பிடித்தான்?) இருக்கவேண்டும்

அந்த நான்கு பேரும் ஷேவிங் செய்யாத தோற்றத்துடன் கசங்கிய சட்டையுடனும் அழுக்கு பேன்ட் அல்லது லுங்கியுடனும் பொறுக்கி மாதிரி தோற்றத்துடனும் இருக்கவேண்டும்..

டெய்லி சாராயக்கடையில்  குடித்துக் கொண்டிருக்க வேண்டும்

சாராயக் கடையில் ஒரு தடவையாவது பிரச்சினை பண்ணவேண்டும்

அதில் ஒருவனுக்குதான் காதலி இருக்கவேண்டும்

ஒன்றுமே இல்லாத காரணங்களுக்காககூட உயிரைக் கொடுப்பேன் என்று உறுதியுடன் இருக்க வேண்டும்...

மதுரையில் யாராலும் அசைக்க முடியாத ஒரு பயங்கர ரவுடி கும்பல் இருக்க வேண்டும்

அவர்களை இந்த நண்பர்கள் மட்டுமே எதிர்க்க - அல்லது அழிக்க முடியும்..

இப்படி எல்லா இலக்கணங்களும் இந்த படத்தில் உண்டு..



மணல் கொள்ளையடிக்கும் கும்பலை பிடிக்கும் ஒரு அதிகாரியின் மகளை நடு ரோட்டில் ரவுடி காரை ஏற்றிக் கொல்கிறான்...ப்ரேக் பைலியர் என்று அவனை நீதிபதி விடுதலை செய்கிறார்...



ஜவுளிக் கடையில் டிரெஸ்ஸிங் ரூமில் உடை மாற்றும் பெண்களை பின்னாடி இருந்துகொண்டு (இந்த படத்தில் உடை மாற்றும் பெண்களை எப்படி மொபைல் போனில் படம் எடுக்கலாம் என்று கற்றுக் கொடுக்கிறான்) படம் பிடிக்கும் ரவுடிக்கூட்டம் அந்த பெண்களை ஆசைக்கு இணங்க வைக்கிறது..அப்படி மறுக்கும் ஒரு பெண் கொலை செய்யப் படுகிறாள்..



இவ்வளவு அநியாயம் நடக்கும் அந்த ஊரில் போலீசையே காணோம்..ஏன் லஞ்சம் வாங்குவதற்கு கூட வருவதில்லை...



எல்லாவற்றையும் வில்லன்களே பார்த்துக் கொள்கிறார்கள்..

அருமையான டைரக்சன்..ஹ்ம்ம்ம்



இதேபோல ஒரு குருக்களின் மகளை படம் எடுத்து மிரட்டும் வில்லனின்  மகனை, இந்த நான்கு நண்பர்களும் குடிபோதையில் அடித்து குருடனாக்கி விடுகிறார்கள்...

இவர்களை கண்டுபிடித்து, வில்லனின் மகனை அடித்த அந்த நண்பர்களில் ஒருவனை ஒழிக்க, அந்த நண்பர்களில் மூன்று பேரையும் தனித்தனியாக மிரட்டி அவனை கொல்வதற்கு அனுப்பிவைப்பது வித்தியாசமான கற்பனைதான் என்றாலும், அந்த நண்பர்கள் உடனேய ஒப்புக் கொண்டு அவனை கொல்ல சம்மதிப்பது எப்படி என்றே தெரியவில்லை..நண்பரளுக்கான இலக்கணம் மீறப் பட்டிருக்கிறது..?



கடைசியில் வில்லனின் குருட்டு மகனை சாக்கில் கட்டி கொன்று விட்டு, அது கதாநாயகன்தான் என்று நம்பவைப்பது அசல் நாடகத்தனம்..

அந்த கதாநாயகன் வில்லனின் வீட்டுக்கே சென்று வசனம் பேசி அந்த வில்லனை கொல்வது 1930 ஆம் வருஷ டெக்னிக்..



தனது மகளை கார் ஏற்றி கொன்ற வில்லனை அதே போன்றே அந்த அதிகாரி கொன்று விட்டு - காரில் ப்ரேக் இல்லை என்று சொல்வது உச்சக் கட்ட காமெடி..

வடிவேலு இல்லாத குறையை போக்கும் ஒரு காமெடி இது..(படத்தில் வடிவேலு நட்புக்காக என்று ஒரு பாடல் காட்சியில் காண்பிக்கிறார்கள்..)



பேரழகி அஞ்சலி துடுக்குத்தனமாக வந்து - இருட்டுக்குள்ளே இருக்கும் படத்தை கொஞ்ச நேரம் வெளிச்சமாக வைக்க உபயோகப்படுகிறாள்..



தூங்கா நகரம் எனபது மதுரையை பெருமைப் படுத்தும் வார்த்தையாக தெரியவில்லை..

ஏனெனில் இரவு முழுதும் பாரில் குடித்துக் கொண்டிருப்பவர்களையே காட்டுவதால் இது மதுரையை கேவலப்படுத்தும் தலைப்பாகவே தெரிகிறது..



மற்றபடி படம் முழுவதும் ஒரே கூட்டம் கூட்டமாக ஆடுகிறார்கள்...திருவிழாவில் கூட்டமாக இருக்கிறது..பொறுக்கிகளும் ரவுடிகளும் டாட்டா சுமோவில் அலைகிறார்கள்..

படத்தில் அனைவரும் குடிகாரர்களாக சாராயக் கடைகளில் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள்..

இது ரவுடிகளையும்., சாராயக் கடைகளையும் விளம்பரப்படுத்டுவதர்கான ஒரு படமே..




6 comments :

Shankar said...

Boss,
Font is not readable

ஜீவன்சிவம் said...

அட அப்பட்டமான தமிழ் சினிமா

Senthil said...

//பேரழகி அஞ்சலி//

????????????

senthil, doha

Anonymous said...

//ஏனெனில் இரவு முழுதும் பாரில் குடித்துக் கொண்டிருப்பவர்களையே காட்டுவதால் இது மதுரையை கேவலப்படுத்தும் தலைப்பாகவே தெரிகிறது//

>>> மதுரைக்கு பெருமை சேர்த்த இதுபோன்ற எல்லா இயக்குனர்களுக்கும் ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டும் (கருமம்!). நேற்று கூட மதுரை நண்பரிடம் இது குறித்து பேசினேன். படத்தில் இருப்பது போல்தான் மதுரை உள்ளதா எனக்கேட்டேன். அவர் முற்றிலும் மறுத்தார். வேதனையுடன் பேசினார். மதுரை பாண்டிய மன்னன் நல்ல வேலை உயிருடன் இல்லை. போதுண்டா சாமி. நீங்க படம் எடுத்தது.

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...
மதுரையை பின்னணியாகக் கொண்ட அனைத்துப் படங்களுமே, சாராயம் குடிப்பதை ஒரு தேசிய கடமையாகக் காட்டுவது கேவலம்..ஹ்ம்ம் அரசே சாராயக்க் கடைகளைத் திறந்து வைத்துக் கொண்டு வியாபாரம் பார்க்கும்போது இந்த கேவலங்களும் இவர்களுக்கு சாதாரணம்தான்..நாளைக்கு இதில் நடித்தவர்களுக்கும் மற்றும் டெக்னிஷியன்களுக்கும் நமது தமிழினத்தலைவர் "கலைமாமணி" விருது கொடுத்து மகிழ்வார் - நமது பணத்தில்...

டக்கால்டி said...

இது தாங்க ஒலக சினிமா..

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?