எந்த ஒரு நிகழ்வுக்கும் உதாரணமாக, பூகம்பம், சுனாமி, கலவரம், போர் போன்ற பாதிப்பளுக்கு உள்ளான மக்களுக்கு - மற்றவர்கள் தங்கள் பணத்தையோ பொருளையோ உதவியாக வழங்குவார்கள்..
ஆனால் சினிமாக்காரர்கள் மட்டும், கோடி கோடியாக சம்பாதித்தாலும், கலை நிகழ்ச்சி என்ற பெயரிலே கூத்தடித்துவிட்டு, அதில் வரும் வருமானத்தை மட்டுமே அல்லது அதன் ஒரு பகுதியை மட்டுமே நிவாரண நிதி என்ற பெயரில் முதலமைச்சரிடமோ அல்லது வேறு யாரிடமோ கொடுத்து பல்லிளித்து போட்டோ எடுத்து விளம்பரம் செய்து கொள்வார்கள்..
நடிகர் சங்க கடனை அடைப்பதர்க்கே கூட தத்தமது பொருளாதாரத்தை வழங்காமல், மலேசியா போன்ற நாடுகளில் கூத்தடித்து பிச்சை பெற்ற பணத்தையே வழங்கினார்கள்..
சமீபத்தில் மும்பை பாந்த்ரா என்ற குடிசைப் பகுதியில் ஏற்பட்ட ஒரு தீவிபத்தில் பல குடிசைகள் நாசமாகின..அந்த பகுதியில் குடியிருந்தவர்களில் "ஸ்லம் டாக் மில்லியனர்" என்ற படத்தில் நடித்த ரூபினா அலி என்ற சிறுமியின் குடிசையும் தீப்பிடித்தது..
எல்லா விசயங்களையும் விட்டு விட்டு இங்குள்ள ஆபாச பத்திரிக்கைகள் அந்த சிறுமி ஒரு நடிகை என்பதாலேயே அதற்கு மட்டும் முக்கியத்துவம் தந்து வெளியிட்டன..
இன்றைய செய்தி ஒன்று சினிமாக்காரர்களின் கோணல் புத்தியை வெளிக்காட்டுகிறது..
தீவிபத்தில் வீட்டை இழந்த நடிகை ரூபினா அலிக்கு நிவாரண உதவியாக ரூபாய் 50000 த்தை, சன் பிக்சர்ஸ் அதிபர் கலாநிதி மாறன் சிலம்பரசன் மூலம் வழங்கியுள்ளார்..அவருக்கு வழங்கியதை குறை கூறவரவில்லை..
இவர்கள் நினைத்தால் அந்த குடிசைப் பகுதி மக்களுக்கு புதிய இருப்பிடமே கட்டித்தர முடியும்..
அதாவது அந்த பெண் மட்டும்தான் பாதிக்கப்பட்டவள் எனபது போல செயல்பட்டிருப்பதுதான் இவர்களது வியாபார யுத்தியை காட்டுகிறது..
ஆஸ்கார் விருது பெற்றவர்களை நாளை நம் படத்தில் நடிக்கவைத்து விளம்பரம் செய்யலாமே என்பதற்காக இருக்குமோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை..
..
7 comments :
சரியாகச் சொன்னீர்கள்!
// அதாவது அந்த பெண் மட்டும்தான் பாதிக்கப்பட்டவள் எனபது போல செயல்பட்டிருப்பதுதான் இவர்களது வியாபார யுத்தியை காட்டுகிறது..//
உண்மையும் அதுதான்.
மதுரை தினகரன் அலுவலகம் தீ வைத்து கொளுத்தப்பட்டபோதும் அதில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களிடமும் இதே கலாநிதி மாறன் என்னவெல்லாம் வார்த்தை மாய் மாலம் காட்டினார்,இறுதியியில் என்ன ஆனது என என்று நாடே அறியும்.
//கலாநிதி மாறன் மிகச்சிறந்த வியாபார நுணுக்கம் உள்ளவர்தான் அதில் என்ன தவறு ?//
என்று தான் கூப்பாடு போடுவார்கள்.
நியாயமான பதிவு, நன்றி.
பணம் சம்பாதிக்கிறவன் எல்லோருக்கும் அள்ளி கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமா?
சுக்கு மாநிக்கத்தில் பதிலுரை முட்டாள் தனமானது.
//கலாநிதி மாறன் மிகச்சிறந்த வியாபார நுணுக்கம் உள்ளவர்தான் அதில் என்ன தவறு ?//
ஆமா... வியாபாரம் தான் பண்றாங்க, மக்கள் சேவை பண்ண வில்லை
பணக்கார வர்க்கத்தை குறை சொல்லும் முன்பு நீங்க எத்தனை பேருக்கு முடிஞ்ச அளவு சிறு உதவி பண்ணி இருக்கீங்க? தன்னுடைய குண்டியில் இருக்கிற அழுக்கை சுத்தம் செய்வோம். அப்புறம் அடுத்தவனை குறை சொல்லுங்க மிளகு சாரி சுக்கு மாணிக்கம்
madhu solluvathu mayakathil soluvathupol irukirathu
பின்னூட்டமிட்ட நண்பர்கள்
திரு சென்னைபித்தன்
திரு கக்கு மாணிக்கம்
திரு வசந்தா நடேசன்
மற்றும் திரு madhu ஆகியோருக்கும் நன்றி..
நண்பர் madhu தன் பெயருக்கேற்றவாறு தன் நிலையில் இல்லை போலிருக்கிறது.. கவனிக்க அவரது பெயர் "சுக்கு மாணிக்கம்" அல்ல.."கக்கு மாணிக்கம்.".
எனது பதிவுக்குதான் திரு கக்கு மாணிக்கம் அவர்கள் பின்னூட்டமிட்டிருக்கிறார்..அவரை விமர்சிப்பது நாகரீகமற்றது..சினிமாக்காரர்கள் பாதிக்கப்பட்ட எத்தனையோ பேர் இருக்க, சினிமா தொழிலை சேர்ந்த பெண் என்பதற்காக மட்டுமே அந்த சிறுமிக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது வியாபார யுக்தியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது..
அதே சமயம், கக்கு மாணிக்கம் அவர் வழங்கும் தர்மங்களை உங்களிடம் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை..
உங்களது கோபங்களை பதிவு எழுதிய என்னிடம் காட்டலாமே..
அப்படி போடு!
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?