Pages

Friday, April 22, 2011

மக்கள் தொகைகளில் பெண்கள் அதிகமா?

சமீபத்தில் இந்தியாவுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பில் பெண்கள் ஆண்களை விட குறைவாக இருக்கிறார்கள் என்றதொரு செய்தி..

அதற்குகூட காஷ்மீரை சேர்ந்த ஒரு முட்டாள் அமைச்சர் ஒருவன், இதனால் ஹோமோ செக்ஸ் அதிகரிக்கும் என்று ஒரு கிறுக்குத்தனமாக பேசி இருக்கிறான்..


ஆனால் எனக்கு என்னவோ பெண்கள் தொகை அதிகரித்திருப்பதாகவே படுகிறது..



டிவியை திறந்தால் பெண்கள்தான் கொடகொட வென்று பேசிக்கொண்டிருகிரார்கள்..

அவர்கள்தான் எல்லா நிகழ்ச்சியிலும் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்..

டிவி சீரியல்களில் கதாநாயகியும் வில்லியும்தான் இருகிறார்கள்.. ஆண்கள் ஒப்புக்கு சப்பாணிதான்

சினிமாக்களில் தேவையில்லா விட்டால்கூட வலுக்கட்டாயமாக வருகிறார்கள்.

ஒரு காய்கறி மார்கெட் என்றால் கண்டிப்பாக அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் அங்கே குத்தாட்டம் போடவேண்டும்..

எந்த பத்திரிக்கை எடுத்தாலும், அட்டைப்படத்தை சினிமாக்காரிகள்தான் ஆக்கிரமிக்கிறார்கள்..

ஆனந்த விகடன் குமுதம் போன்ற ஆபாச பத்தரிக்கைகள் நடிகைகளின் படுக்கை அரை ரகசியங்களை வெளியிடுவதை ஒரு கடமையாகவே செய்து வருகின்றன.

சென்னையில் மழைபெய்தால் இளம் பெண்கள்தான் குடை பிடித்தபடி செல்வதாக பத்திரிக்கைகாரன் படம் போடுகிறான்

வெய்யில் அடித்தாலும் அவர்கதான் முகத்தை மூடிக்கொண்டு செல்கிறார்கள்.

மெரீனா பீச்சில் காலை நனைத்துகொண்டிருப்பதும் பெண்கள்தான்

பரீட்சை எழுதுவதும் அவர்கள்தான்

ரிசல்ட் வந்தால் பாசானதர்க்கு இனிப்பு கொடுப்பதும் பெண்கள்தான்

ஹோலிபண்டிகை அன்று முகங்களில் சாயம் பூசிக்கொண்டு போஸ் கொடுப்பதும் பெண்கள்தான்

சினிமா நடிகனை ச்சோ ச்வீட் என்று ஜொள்ளு பேட்டி கொடுப்பதும் பெண்கள்தான்

ஏதாவது ஒரு பொருள் விளம்பரத்துக்கு அரைகுறை ஆடையுடன் சிபாரிசு செய்வதும் பெண்கள்தான்

கிரிகெட் நடைபெறும் ஸ்டேடியங்களில் முகத்தில் தேசியக்கொடியை வரைந்துகொண்டு அக்குள் தெரிய கொடியை ஆட்டிகொண்டிருப்பதும் பெண்கள்தான்

தேர்தல் காலங்களில் ஒட்டுபோட்டுவிட்டு கைவிரலில் உள்ள மையை காட்டி போஸ் கொடுப்பதும் பெண்கள்தான்..

ஐந்து ரூபாய் குளோசப் பற்பசைக்காக ஆணிடம் மயங்குவதும் பெண்தான்

ஐம்பது காசு மின்ட் சாக்லேட்டுகாக ஆண் பின்னாடி போவதும் பெண்தான்

பாடி ஸ்ப்ரே அடித்துவரும் ஆணிடம் படுக்க அழைப்பதும் பெண்தான்

டச் ஸ்க்ரீன் மொபைல் போன் வைத்திருக்கும் ஒருவனுக்கு, சில்லறை இல்லை என்பதற்காக ஆணுறை கொடுத்து விபச்சாரத்திற்கு அழைப்பதும் பெண்தான்

தந்தையிடம் மொபைல் வாங்கி - சினிமாவிற்கு காதலனை கள்ளத்தனமாக அழைப்பதும் பெண்தான்.

மாதவிடாய்க்கான நாப்கினை அணிந்துகொண்டால் இந்த உலகையே மாற்றிக்காட்டுவேன் என்று சொல்வதும் பெண்கள்தான்.


இப்படி எல்லாவற்றிலும் பெண்கள் ஆக்ரமித்துகொண்டிருக்க - பெண்கள் குறைவு என்று இவர்கள் எப்படி சொல்கிறார்கள்?

7 comments :

ஷர்புதீன் said...

கொளுத்தி போட்டாச்சு ., இப்ப திருப்திதானே

இராஜராஜேஸ்வரி said...

மர்மயோகி அல்லவா?நல்லா அலசியிருக்கிறீர்கள்.

Mahan.Thamesh said...

நல்ல காரசாரமான அலசல் தான்
http://mahaa-mahan.blogspot.com/

பொன் மாலை பொழுது said...

///சினிமா நடிகனை ச்சோ ச்வீட் என்று ஜொள்ளு பேட்டி கொடுப்பதும் பெண்கள்தான்//


பயங்கர நக்கல். காப்பி வித்து அணுவும்,நம்ம சுகாசினி அக்காவும் இத படிச்சாங்கன்னா உங்கள ஒதைக்காம விடமாட்டாங்க:))))))

Anonymous said...

super

karthickeyan said...

ஆஹா!... ஆரம்பிச்சிட்டாங்கப்பா!...?....???...

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட அன்பர்கள்
ஷர்புதீன்
இராஜராஜேஸ்வரி
Mahan.Thamesh
கக்கு மாணிக்கம்
SPOT CINES
karthickeyan

ஆகியோருக்கு நன்றி..

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?