தினஅஞ்சல் என்ற பத்திரிகையில் போட்டோகிராபராக கதாநாயகன்..படம் முழுவதும் போட்டோ மட்டுமே எடுத்துகொண்டிருக்கிறான்..இடையில் இரண்டு பெண்களுடன் காதல் வேறு..
கதாநாயகியின் வேலை கதாநாயகனை காதலிப்பது
இன்னொரு நாயகியின் வேலை தனக்கும் - மற்ற பெண்களுக்கும் ரேட் பேசுவது..இந்த படத்தில் இப்படி ஒரு கேடுகெட்ட கலாசாரத்தை தொடங்கி இருக்கிறார்கள்..
இன்னும் இந்த சினிமாக்கூத்தாடிகள் என்னதான் செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை..படம் சம்மந்தப்பட்டவர்கள் தமது குடும்ப பெண்களுக்கு ஏதும் விலை நிர்ணயித்து இருக்கிறார்களா?
சிறகுகள் என்ற அமைப்பை தொடங்கி தேர்தலில் படித்த இளைஞர்கள் போட்டி போடுகிறார்கள்.
அவர்களது தலைவன் தாக்கப்படுகிறான்.
கூட்டத்தில் பாம் வெடித்து பலபேர் சாகிறார்கள், காயமடைகிறார்கள்..
இதில் - தின அஞ்சல் நிருபர் பெண் ஒருத்தியும் கொல்லப்படுகிறாள்.
இதை பத்திரிகையில் வெளியிட்டு, அந்த கட்சி ஆட்சியமைக்க உதவுகிறான் அந்த சிறகுகள் அமைப்பை சேர்ந்த போடோகிராபர்.
இதுவரைக்கும் சரி..
அப்புறம் கிளைமாக்ஸ்? ஏதாவது திருப்பம் வைக்கவேண்டுமே..
வலுக்கட்டாயமாக சிறகுகள் அமைப்பின் தலைவனை வில்லனாக்குகிரார்கள்..
அவன் தாக்கப்படுவது செட் அப் என்று காட்டுகிறார்கள்.
தனக்குதானே பாம் வைத்துகொண்டான் என்று காட்டுகிறார்கள்..
தின அஞ்சல் நிருபரை அவனே அடித்துகொன்றான் என்று காட்டுகிறார்கள்..
ஹ்ம்ம் தாங்க முடியல..
இறுதியில் அவனே நக்சலைட் பயங்கரவாதி என்று காட்டி சாகடித்தும் விடுகிறார்கள்..
இனி இந்த மாதிரி படித்தவன் தேர்தலில் நின்றால் யாராவது நம்புவார்களா?
அப்புறம் - எல்லா கொடூரங்களையும் நிகழ்த்தியவன் அதன் தலைவன் மட்டுமே..மற்ற யாருக்கும் இந்த விஷயம் தெரியவே தெரியாது என்று மெகா சைஸ் பூ ஒன்றையும் காதில் சுற்றி அனுப்பிவிடுகிறார்கள்..
முதலமைச்சராக வரும் சிறகுகள் அமைப்பின் தலைவனை பழிவாங்க - கதாநாயகனை தூண்டுவது சமூக கோபம் அல்ல..அவனை ஜொள்ளுவிட்டு ரேட் பேசிய பெண் நிருபரை கொன்றுவிட்டானே என்றுதான் கோபமடைகிறான்.
முதலமைச்சராக வருவதற்கு - ஜோசியரின் கூற்றை நம்பி பதிமூன்று வயது பெண்ணை எழுபது வயது கிழதலைவன் திருமணம் செய்வது,
பெண் உதவியாளருக்கும் முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு என்று கேட்ட நிருபரை - முதலமைச்சர் நடுரோட்டில் வைத்து செருப்பால் அடிப்பது,
பொது மேடையில் - "அவன் ஆளவந்தானா இல்லை..."....ல வந்தானா?" என்று ஆபாச வசனம் பேசும் அரசியல்வாதி,
தேர்தலில் போட்டியிடும் ஆபாச நடிகை வாக்காளர்களை "மச்சான்ஸ்..எனக்கு...த்துவீன்களா? என்று ஆபாச வசனம் பேசுவது போன்ற அரசியலைச் சாடும் தைரியமான காட்சிகள் இருந்தாலும்,
வலுக்கட்டாயமான, திணிக்கப்பட்ட கிளைமாக்ஸ் காட்சிகளினால்..
"கோ" கோணலாகிவிட்டது..
3 comments :
////அந்த பெண்ணை பக்கத்து வீட்டு சிறுவன் ஆபாசமாக பார்ப்பது மட்டுமில்லாமல்..என்னை கல்யாணம் செய்துகொள் என்று கேட்கும் அருவருப்பான காட்சிகள்../// உண்மை தான் முகம் சுழிக்க வச்ச காட்சி...
கோ" கோணலாகிவிட்டது..
paadam super
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?