Pages

Saturday, May 14, 2011

கருவின் குற்றம்.!


கருவின் குற்றம்.!

இது ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த நாஞ்சில் மனோகரன் அவர்களால் கருணாநிதியை -சற்றே சாடி எழுதப்பட்ட ஒரு கவிதையின் தலைப்பு..அப்போதைய காலகட்டத்தில் தி மு கவில் இருந்த ஒரு துரோகியை வெளியேற்ற கருணாநிதி முயற்சித்ததால் அப்படி எழுதி பரப்பாக பேசப்பட்டது..அன்றைக்கு அது பொருந்தியதோ இல்லையோ..இன்றைய தேர்தல் தோல்விக்கு இது முற்றும் பொருந்தும்..எப்படி தி மு கழகத்தின் இன்றைய வளர்ச்சிக்கும் அதன் புகழுக்கும் கருணாநிதியின் உழைப்பும் அர்பணிப்பும் காரணமோ..அதே கருணாநிதியின் குடும்ப ஆதிக்கமும், நிர்வாகத் திறமையின்மையும், ஊழலுக்கு துணைபோனதும்தான் இன்றைய திமுக வின் படுதோல்விக்கு காரணம்.

அதிமுக அடைந்த வெற்றி அக்கட்சியின் வெற்றி அல்ல...நிச்சயமாக திமுகவின் மீது மக்களுக்கு இருந்த வெறுப்பே காரணம்.

ஏனென்றால் கடந்த ஐந்து வருடங்களாக, அதிமுக தலைவி எந்த ஒரு பெரிய போராட்டத்தையோ, திமுகவின் இந்த பொறுப்பற்ற ஆட்சி பற்றியோ மக்கள் எழுச்சி பெரும் வண்ணம் ஏதும் செய்துவிடவில்லை..

வெறும் அறிக்கை அரசியல் மட்டுமே நடத்தி வந்தார்..

கருணாநிதியோ, சினிமாக்காரர்களின் பாராட்டு விழாவில் மயங்கி கிடக்க, ஒரு பக்கம் விலைவாசி, மக்களை மூச்சுத்திணற செய்தது, மின்வெட்டு வாட்டியது. ரவுடியிசம் பொறுக்கியிசம் அராஜகம் செய்தது..

வருடம் முழுவதும் படிக்காத மாணவன், தேர்வு அன்று இரவில் விழுந்து படித்துவிட்டு, பாசாகியதுபோல ஜெயலலிதா தேர்தல் காலத்தில் மட்டும் தனது அரசியலை நடத்தி ஆட்சியை பிடித்துவிட்டார்..

மற்றபடி இலவசங்களை வாங்கிக்கொண்டு மக்கள் திமுகவிற்கு நல்ல பாடம் புகட்டி உள்ளனர்.

இலவச அறிவிப்புகள் இனி ஓட்டை வாங்கிதாராது என்பதை அதிமுக வினரும் உணர்ந்தால் நல்லது.

திமுகவின் இந்த படுதோல்விக்கு, விலைவாசி, மின்வெட்டு, அவர் குடும்ப உறுப்பினர்களின் - அனைத்து துறை - ஆதிக்கம் போன்ற காரணங்கள் மட்டுமேதான் காரணம். மக்களுக்கு முதல்வர் பதவிக்கு வேறு ஒரு நல்ல தலைவன் இல்லை என்ற காரணங்களினாலேயே ஜெயலிதாவுக்கு ஒட்டு போட காரணமே தவிர வேறு எந்த காரணமும் இல்லை..

அரசியல் சாணக்கியர் என்று பத்திரிக்கைகளால் வருணிக்கப்பட்ட கருணாநிதி, - பாமக, விடுதலை சிறுத்தைகள், கொங்கு வேளாளர் போன்ற ஜாதிக்கட்சிகளையும், ரஜினிகாந்த், வாலி, வைரமுத்து, குஷ்பூ, வடிவேலு போன்ற சினிமாகூத்தாடிகளையும் நம்பி தான் ஒரு ஜீரோ என்று காட்டிவிட்டார்..



இடைத்தேர்தல் அரசர் என்று வருணிக்கப்பட்ட அழகிரியின் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் திமுக முற்றிலும் தோல்வியடைந்து மூக்குடைபட்டிருக்கிறது.


இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழக மக்களுக்கு துளிகூட ஆர்வமில்லை என்பதும் இந்த தேர்தல் காட்டிவிட்டது..

விடுதலைப்புலிகளின் தமிழகப் பிரிவான வைக்கோ என்பவனின் மதிமுகவை , ஜெயலலிதா தூக்கி எறிந்தும் அவர் இவ்வளவு பிரமாதமான வெற்றி அடைந்ததே இதற்கு உதாரணம். வைக்கோவை ஜெயலலிதா அடிமையாக வைத்திருந்த காலத்தில் அதிமுக தோல்வி அடைந்திருந்தது.

இன்னும் சொல்லப்போனால் போர்காலங்களில் சாதாரண மக்களும் பாதிப்புக்குள்ளாவது தவிர்க்க முடியாதது என்று விடுதலைப்புலிகள் அழிக்கப்படும்போது சொன்னவர்தான் ஜெயலலிதா..

இந்த தேர்தலில் மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயம் விடுதலிப்புலிகளின் தமிழக அமைப்பான வைக்கோலின் மதிமுக என்ற கட்சி அடியோடு ஒழிக்கப்பட்டதுதான்.

இன்னும் தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளின் பணத்தை வைத்து அரசியல் செய்யும் அனைத்து இந்திய தேச துரோகிகளும் ஜெயலலிலதா ஆட்சிகாலத்தில் ஒழிக்கப்பட்டு தமிழ்நாடு அமைதி பெரும் என்று நம்புவோம்.

இன்னும் பாமக, விடுதலை சிறுத்தைகள், கொங்கு வேளாளர் கட்சி போன்ற ஜாதிக்கட்சிகள் பிரதிநிதித்துவம் இழந்ததும் மகிழ்ச்சியான விசயமே..

இனி பொறுக்கிகளின் ஆட்டம் அடங்கும் என நம்பலாம்..சட்டம் ஒழுங்கு கருணாநிதி ஆட்சியைவிட பரவாயில்லை என்று சொல்லும்படி இருக்கும்.

மற்றபடி ஜெயலலிதா வந்தவுடன் நாட்டில் தேனும் பாலும் ஓடி, மாதம் மும்மாரி பொழிந்து ஆட்சி செம்மையாக இருக்கும் என்று சொல்ல வரவில்லை..

மேலும் ஒரு கவலையளிக்கும் ஒரு விஷயம் - எதிர்கட்சியாக விஜயகாந்தின் தேமுதிக என்ற ஒரு ஆபத்தான கட்சி வந்திருப்பதுதான்.

எந்த ஒரு தியாகம், அனுபவம், கஷ்டம் இல்லாமல், வெறும் சினிமா பின்னணியை வைத்து மட்டுமே வந்திருப்பது தமிழ்நாடு இன்னும் உருப்படாமல் போகும் என்றே தோன்றுகிறது..

குடும்ப ஆதிக்கத்தை ஒழிக்க திமுகவை தோற்கடித்த மக்கள்..கட்சியை தொடங்கும்போதே குடும்ப உறுப்பினர்களுக்கு பதவியை கொடுத்து ஆரம்பித்த ஒரு சினிமாகூத்தாடியை எதிர்கட்சியாக தேர்ந்தெடுத்திருப்பது தமிழ்நாட்டிற்கு மகா கேவலம்.

பழம்பெருமை மட்டுமே பேசிவரும் தமிழக மக்கள் எப்போது இந்த சினிமா மாயையில் இருந்து விடுபடப்போகிரார்கள் என்று தெரியவில்லை.


இந்த தேர்தல் முடிவுகள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தாலும், மக்கள் இன்னும் தெளிவான பார்வையில் ஒட்டுபோட்டதாக தெரியவில்லை..

அந்த மாற்றம்கூட, ஆளுங்கட்சிக்காரன் பணக்காரனாக இருக்கிறானே என்றதொரு பொறாமையின் வெளிப்பாடுதான்..

அடுத்த ஐந்து வருடங்கள் கழித்து ஜெயலலிதா கொள்ளையடித்து விட்டார் என்று திமுக என்ற கொள்ளைக்காரனை மீண்டும் ஆட்சியில் அமர்த்ததான் போகிறார்கள்..

ஒரு மெகா ஊழலை விரட்ட மக்கள் இன்னுமொரு மகா ஊழல் ராணிக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள் - அவ்வளவுதான்..



20 comments :

அலைகள் said...

ஒரு மெகா ஊழலை விரட்ட மக்கள் இன்னுமொரு மகா ஊழல் ராணிக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள்!

கூடல் பாலா said...

ஆண்டவா ..ஏன் இப்படி நாதாரிங்ககிட்ட மட்டும் .....நாட்டை கொடுத்து எங்களை சோதிக்கிற ...

பொன் மாலை பொழுது said...

இந்த இரண்டு கட்சிகளை விட்டால் வேறு ஒரு நாதியும் இல்லை தமிழர்களுக்கு. வேறு என்னதான் செய்வது. ஒரே கட்சியை தொடர்ந்து ஆட்சியில் நம்மவர்கள் வைக்கமாட்டார்கள். ஆட்சி செய்பவர்களும் தொடர்ந்து இருக்க இயலாது தாங்களே தங்களுக்கு ஆப்பு வைத்துக்கொள்வார்கள். அந்த விஷயத்தில் கருணா , ஜெயா இருவரும் சளைத்தவர்கள் அல்ல. வாலு போயி கத்தி வந்தது கதைதான்...
//அரசியல் சாணக்கியர் என்று பத்திரிக்கைகளால் வருணிக்கப்பட்ட கருணாநிதி, - பாமக, விடுதலை சிறுத்தைகள், கொங்கு வேளாளர் போன்ற ஜாதிக்கட்சிகளையும், ரஜினிகாந்த், வாலி, வைரமுத்து, குஷ்பூ, வடிவேலு போன்ற சினிமாகூத்தாடிகளையும் நம்பி தான் ஒரு ஜீரோ என்று காட்டிவிட்டார்..//

இதில் இன்னும் சில கட்சிகளை விட்டுவிட்டீர்களே?

நல்ல சாட்டை அடிதான்.

பாட்டு ரசிகன் said...

/////மர்மயோகி said...

கருணாநிதி ஒரு சினிமாக்காரன்
ஜெயலலிதா ஒரு சினிமாக்காரி
விஜயகாந்த் ஒரு சினிமாக்காரன்
நீ ஒரு சினிமாகூத்தாடிகளின் அடிவருடி..
உருப்பட்டுடுவீங்கடா
////////////

தாங்கள் என் தளத்திற்கு வந்து என்னை சினிமாவின் அடிவருடி என்று சொன்ததற்கு
மிக்க நன்றி...

பாட்டு ரசிகன் said...

உங்களுடைய பதில் உள்ள ஆதங்கம் எனக்கு புரிகிறது..
அதற்காக எல்லோரும் உங்களைப்போல் இருக்க வேண்டும் என்று நினைப்பது மிகவும் முட்டாள் தனமாக இருக்கிறது...

நீங்கள் ஒழிக என்று குரல் கொடுக்கும் பட்சத்தில்
எங்களுக்கு வாழ்க என்று குரல் கொடுக்க உரிமையில்லையா...

பாட்டு ரசிகன் said...

///
கருணாநிதி ஒரு சினிமாக்காரன்
ஜெயலலிதா ஒரு சினிமாக்காரி
விஜயகாந்த் ஒரு சினிமாக்காரன்////
இவர்களும் மட்டுமல்ல

அண்ணாதுரை
எம்ஜிஆர்
ஜானகி ராமச்சந்திரன்

இவர்களும் சினிமா காரர்கள் தான். இவர்கள் முதல்வராக இருப்பது இருந்தது குற்றம் எனறார் ஓட்டுபோட்ட 6 கோடி தமிழர்களையும் கேவலப்படுத்துவதாக இருக்கிறது தங்கள் கருத்து..

அதற்கா ஊழல் சரியென்று சொல்ல வில்லை.
ஊழல் அற்ற அரசிவாதிகளை அடையாளம் காட்டுங்கள் அவர்களுக்கு நான் துதி பாடுகிறேன்..

இவ்வளவு பேசும் தாங்கள் பதிவுலகம் விட்டுவிட்டு அரசியலுக்கு வரலாமே...

பாட்டு ரசிகன் said...

பதிவுகளம் கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்க்கு மட்டும்தான் தங்களைபபோல் கருத்தை திணிப்பதற்கு அல்ல...

அடுத்தவர் தளங்களுக்கு சொல்லும் போது கொஞ்சம் நாகரீகமாக பதில் சொல்ல கற்றுக் கொள்ளுங்கள்...

பின்பு நானும் தங்களுக்கு ரசிகனாவேன்..
நன்றி..

மர்மயோகி said...

நன்றி அலைகள்..

மர்மயோகி said...

நன்றி thiru coolbala

மர்மயோகி said...

நன்றி திரு கக்கு மாணிக்கம்

மர்மயோகி said...

நன்றி திரு பாட்டுக்காரன்..

நீங்கள் யாரையும் புகழ்ந்து விட்டுப்போங்கள்...அது உங்கள் உரிமை...அதே சமயம் சிநிமாக்காரகளுக்கு வக்காலத்து வாங்கும் யாரிடமும் yen கருத்தை சொல்லியே தீருவேன்..எந்த ஒரு நல்ல விசயங்களும் இல்லாத விஜயகாந்த் வெறும் சினிமா பின்னணியை மட்டுமே வைத்து தமிழ்நாட்டில் ஒரு எதிர்க்கட்சி என்ற அளவிற்கு வந்திருப்பது வெட்ககேடான விசயம்தான். வெற்றிபெற்று விட்டான் என்பதற்காக அவனை வாழ்த்துவது அதைவிட மானங்கெட்ட செயல்..

சிநிமாக்காரனை சினிமாக்காரனாக மட்டுமே பாருங்கள் அவன் வந்து கிழித்துவிடுவான் என்று கூறுவது நமது இயலாமை..சினிமா மோகத்தை விட்டு ஒழிப்பதுதான் தமிழ்நாட்டிற்கு நல்லது.. இல்லையென்றால் வீடுதோறும் வெறும் ஆட்டம் பாட்டம் கேலிக்கூத்து என்று (டிவி நிகழ்ச்சிகளை பார்க்கும்போது அப்படி ஒரு அவல நிலைதான் தமிழ்நாட்டின் எதிர்காலமோ என்று அச்ச்சமாககூட உள்ளது) கேவலமான ஒரு சந்ததியினரை வளர்த்துவிட்ட பாவம் நம்மை விடாது..

kumar said...

இலவசங்களை கொடுத்து ஆட்சியை தக்க வைத்து கொள்ளலாம் என்று மூனா கானா மனப்பால் குடித்தார்.
ஆனால் மக்கள் தெளிவாக கொடுத்தது கள்ளிப்பாலே.
கலியுகத்தில் ஒரு திருதராஷ்டிரன்(ர்)?

yeskha said...

// அடுத்த ஐந்து வருடங்கள் கழித்து ஜெயலலிதா கொள்ளையடித்து விட்டார் என்று திமுக என்ற கொள்ளைக்காரனை மீண்டும் ஆட்சியில் அமர்த்ததான் போகிறார்கள்.. //

சரிதான்.. என்றுமே திராவிட ஆட்சிதான் தமிழ்நாட்டில். திமுக அல்லது அதிமுக என்று யாரேனும் ஒரு கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கொடுத்தே பழக்கப்பட்டவர்கள் நம்மாட்கள்.. ஆனால் அடுத்த முறை திமுகவில் முதுமை காரணமாக கருணாநிதி கண்டிப்பாக ஆக்டிவ்வாக இருக்க மாட்டார்.. ஆகவே அதிமுகவுக்கு மாற்று????

Pons said...

வைக்கோ என்பவனின் ------- ஒருமையில் எழுதியதிலே தெரிகிறது உங்களின் தகுதி ---- விமர்சிக்க தகுதி இல்லாத ஒரு நபர் நீங்கள்

மர்மயோகி said...

நன்றி திரு baseer அவர்களே..
ஆனால் அதே இலவசங்களை தருவதாக சொல்லித்தான் இந்த கூட்டமும் வந்திருக்கிறது தெரியுமா?

மர்மயோகி said...

நன்றி திரு yeshka அவர்களே.

கருணாநிதியாவது ஓய்வெடுப்பதாவது..என்றாலும் திமுக என்ற கட்சி இருக்கத்தானே செய்யும்..என்ன துண்டு துண்டாக..அழகிரி, ஸ்டாலின், தயாநிதி என்று வேண்டுமானால ஆளுக்கொரு கட்சியாக இருக்கலாம்...பாப்போம்..

மர்மயோகி said...

நன்றி திரு pons அவர்களே..

இந்தியாவில் ஒட்டு பிச்சை எடுத்துக்கொண்டு, இன்றுவரை இந்திய அரசாங்கத்தின் அனைத்து சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டு, ராஜீவ் காந்தியை கொன்ற பயங்கரவாதி பிரபாகரனை தலைவன் என்று குறைத்துகொண்டிருக்கும் பயன்கரவாதிகளுக்கும் , தேசத்துரோகிகளுக்கும் மரியாதை கொடுக்கும் எவனும் இந்தியனாக இருக்கமுடியாது.. ௩

பின்லேடன் எப்படியோ..அப்படிதான் பிரபாகரனும்..பின்லாடனை தலைவன் என்று சொன்னால் நீங்கள் ஏற்றுகொள்வீர்களா? எங்கள் நாட்டின் தலைவனை கொன்ற பயங்கரவாதியை தலைவன் என்று சொல்லும் எவனும் தேச துரோகியே

சதீஷ் செல்லதுரை said...

appa narayana kosu thollai thanga mudiyalaida mr yogi naan militaryil irukkiren rajiv gandhi matrum p.c pranab manmohan singh ivarhaliin arasiyal ltte vaiko mattumallathu 1 lk makkal uyir kudithulladhu. ippo ltte illai. tamil makkaalukku urimai koduthutangala? illai neengathan kettu petru koduppirhala?

rameshzillion said...

"கருவின் குற்றம்" நாஞ்சிலார் மனோகரன் எழுதிய ஆண்ட கருவின் குற்றம் கவிதை "தினகரன்" இதழில் 1992 -வருடம் வெளியானது. அது தங்களிடம் உள்ளதா ? அதை எனக்கு அனுப்பி வைக்கவும்....rameshzillion@hotmail.com

தாய்மடி said...

முட்டாளே... ஓட்டுப்போடுவதும் முட்டாள்த்தனம் தானே..

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?