நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது பற்றி திராவிடக்கழக கண்மணி நடிகை குஷ்பு அளித்த ஒரு பேட்டியில் "மக்கள்தான் தோற்றுபோனார்கள்!" என்றதொரு அறிய கருத்தை சொல்லி இருக்கிறார்..
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்..
பதிவுலகிலும் இதுபற்றி பேசப்பட்டு குஷ்புவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..
எனக்கு தெரிந்து குஷ்பு சொன்னதில் தவறொன்றும் இல்லை என்றே தோன்றுகிறது..
ஏறக்குறைய நாற்பதாண்டுகாலமாக சினிமாக்காரர்களின் பிடியில் தமிழகம் இருக்கிறது..
அவர்களிடமிருந்து விடபடமுடியாமல் ஒவ்வொரு தேர்தலிலும் சினிமாக்கூத்தடிகளின் துதிபாடும் கூட்டமாக தமிழக மக்கள் தோற்றுத்தான் போயிருக்கிறார்கள்..
இலவசங்களுக்கு அடிமையாகி, உழைக்கமுடியாத சோம்பேறிகளாக தோற்றுத்தான் போயிருக்கிறார்கள்..
அப்படியே உழைத்து சம்பாதித்தாலும், சாராயக்கடைகளில் கூட்டம்கூட்டமாக சென்று குடித்து தோற்றுத்தான் போயிருக்கிறார்கள்..
சினிமாக் கூத்தாடிகளின் நடிப்பை நடிப்பாக பார்க்காமல் வாழ்க்கை வழிகாட்டியாகவும், தமிழகத்தின் தலைவனாகவும் துதிபாடியும் தம் வாழ்கையை தொலைத்தவர்களாய் தோற்றுத்தான் போயிருக்கிறார்கள்..
ஆபாச பத்திரிக்கைகளின் அடிமைகளாக தோற்றுத்தான் போயிருக்கிறார்கள்..
ஆபாச தொலைகாட்சி சீரியல்களிலும் - உபயோகமற்ற மற்ற நிகழ்ச்சிகளிலும் மதி மயங்கி சொந்தங்களை இழந்தும் பிரிந்தும் இன்று முட்டாள்களாக தோற்றுத்தான் போயிருக்கிறார்கள்..
ஒவ்வொரு தேர்தலிலும் எந்த நடிகன் யாருக்கு ஓட்டுபோட சொல்கிறான் என்ற உபயோகமற்ற விவாதத்திலும் தோற்றுத்தான் போயிருக்கிறார்கள்..
ஒரு ஆபாச நடிகைக்கு கோயில் கட்டிய தமிழக மக்கள் பகுத்தறிவில் தோற்றுத்தான் போனார்கள்..
நடிகனில் பெரிய பெரிய கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம், பீராபிஷேகம் செய்து மூளை மலுங்கியவ்ர்களாய் தோற்றுத்தான் போனார்கள்..
நடிகனை தலைவனாய் கொண்டாடி - படிப்பறிவில்லாதவன் மட்டுமல்ல , பதிவுலகினரும் தோற்றுத்தான் போனார்கள்..
குஷ்பு ஒரு நடிகை..நடிகைக்கு சொந்தமாக வசனம் பேச தெரியுமா? அவள் மற்றவர்களின் கதையிலும் வசனத்திலும் நடிக்கவே பழக்கப்படுத்தப்பட்டவள்..
2001 இல் திமுகழகம் தோற்றபோது, அப்போதையை தி.நகர் தொகுதி எம் எல் ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்ட - தற்போது சேப்பாக்கம் எம் எல் ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெ. அன்பழகனிடம் பத்திரிக்கையாளர்கள் திமுகழகத்தின் தோல்வி பற்றி கேட்டபோது "தோற்றது நாங்களல்ல..மக்கள்தான்!" என்று சொன்னார்..
அன்று ஒரு எம் எல் ஏ சொன்னதை கவனிக்காமால்..அதையே ஒரு நடிகை சொன்னபோது அவளது கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எதிரப்பதாக அவளை மேலும் பிரபலப்படுத்தும் மக்கள்..உண்மையிலேயே தோற்றுத்தான் போய்விட்டார்கள்..
20 comments :
EXCELLENT
நன்றி திரு saro
நன்றி திரு Sudhakar
pathivulakil mannaa thangalin pathivu mi arumaiyanathu aththanayum unmai emanthathu thangalathu iyalamaiyal ilavasaththukku aasaippattu tamil makkal ayoo pavam .
ஓரளவு படித்தவர்கள்,விபரம் தெரிந்தவர்கள்தான் பதிவர்கள் என்ற என் எண்ணத்தில் ஒரு லாரி
அல்ல ஒரு கண்டைனர் மண்ணையே அள்ளி போட்டிருக்கிறார்கள் சில பதிவர்கள்.கட் அவுட்டுக்கு
பீர் அபிசேகம் செய்யும் இந்த பன்னாடைகளை என்னதான் செய்வது? கேட்டால் எனக்கு பிடிக்குது
செய்றேன்னு வியாக்கியானம் வேறு.உலகத்திலேயே மிக கேவலமான,சொரணை கெட்ட இனம்
தமிழினம்தான்.மலையாள எம்ஜியார்,கன்னட கோமளவல்லி,இப்போது தெலுங்கை தாய்மொழியாக
கொண்ட கேப்டன்,போதாக்குறைக்கு உச்சந்தலையில் வைத்து கொண்டாட மராத்திய ரஜினி.
தமிழர்களின் சொரணையின் அளவுகோல் எல்லை தாண்டுகிறது.நாசமா போக.
இந்த நான்கில் ஏதேனும் ஒன்று கேரளா,கர்நாடக,ஆந்திரா,இல்லை மகாராஷ்டிரா
(இதை எழுதும்போதே பால்தாக்கேரேவும்,சிவசேனாவும் கண் முன்னால் வந்து
ருத்ர தாண்டவம் ஆடுகிறார்கள்.) தமிழனுக்கான (இந்தியனாச்சே) மரியாதையை
கொடுக்கட்டும்.(ஆட்சியை அல்ல) பின்னர் பேசலாம் கேடுகெட்ட இந்திய
ஒருமைப்பாட்டைப்பற்றி.
neengal kushboo rasikara... kushboo photo' super'a irukuthu boss
intha mathiri mokkai pathivu ellam podatheenga boss....
நன்றி திரு நண்பன்
நன்றி திரு silandhy
மிக நியாயமாக கோபப்பட்டிருக்கிறீர்கள்...
பதிவுலகில் சினிமாவை பற்றி விலாவாரியாக புகழ்ந்தும், பிரபல நடிகர்களை அடிவருடியும் எழுதும் பதிவுகளே அதிகம்..சினிமா தலைப்பிலான பதிவுகளே அதிமதிகம் பாரக்கப்படுகிறது..
இந்த ஊடகத்தை பதிவர்கள் சரியான முறையில் பயன்படுத்துவது இல்லை என்பதே என் கருத்து.
நன்றி திரு அருண் இராமசாமி
நான் குஷ்புவின் ரசிகனா இல்லையா என்பதை எனது முந்தைய பதிவுகளை படித்தால் புரியும்.
இது மொக்கை பதிவு என்கிற உங்கள் கருத்துக்கு நன்றி..
சினிமா நடிகர்களைப் புகழ்ந்தும் ஜால்ரா தட்டியும் நல்ல நல்ல பதிவுகளாக போட நிறையபேர் உண்டு..அது போன்ற நல்ல பதிவுகள போட என்னால் முடியாது நண்பரே..
ada yennanga marmayogi task mac kadaiya koottame illaatha kadaiyaa pottu ivlo kevalappaduththi irukkinga ............. innum thedippaarunga thakkaali que varisaila ninnu vaangura kadaiyum irukku
மற்றபடி அம்மா இன்னும் திருந்தவில்லை. தமிழன் தேடிப் போய் தனக்குத் தானே சூன்யம் வைத்துக் கொண்டிருக்கிறான். ஐந்து வருடம் அனுபவிக்கட்டும். வேறு என்னத்த சொல்ல….
மூக்கணாங்கயிறுகள் மாற்றுவதால் மாடுகள் மகிழ்ச்சி அடையுமா? – ஹோ சி மின்.
படித்ததில் பிடித்தது. படித்ததில் பிடித்தது
இந்த வெற்றியில் விஜய்க்கு பங்கு எந்த அளவு?”
அளவிடற்கறியது!
ஓட்டுப் போட்டுவிட்டு, ஜன நாயக கடமை செய்து, வெளியில் வரும்பொழுது அவரே மைக்கைத் தேடிப்போய் தன் திருவாய் மலர்ந்து, ஒரு பெரிய கருத்துரை நிகழ்த்தியது நினைவிருக்கிறதா?
“மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்கிறார்கள்!”
இப்போதும் அதையேதான் சொல்லிக்கொண்ண்டிருக்கிறார் :
“நாந்தான் அப்பவே சொன்னேனே, மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்று. நான் சொன்னபடியே நடத்திக் காட்டிவிட்டார்கள்”.
இவர் ரசிகர்களுக்கு போதனை சொன்னபடி, ஜெயலலிதா ஜெயித்துவிட்டார்.
ஒருகால் கருணானிதி ஜெயித்திருந்தாலும், அவருக்கும் இந்த பிளேட்டை அப்படியே திருப்பிப் போடலாம்.
தனக்கு ஆப்பு வந்துவிடாமல் தப்பிக்க ஆற்றிய விஜயின் பேருரை அளவிடற்கறியது.
அவரால்தான் ஜெயித்தார் ஜெயலலிதா.
நன்றி மங்குனி..
டாஸ்மாக் கடைய தேடிகிட்டு போறவன நானே திட்டிகிட்டு இருக்கேன்..என்னையே தேட சொல்றீங்களே..என்ன நியாயம் மங்கு?
நன்றி திரு SENTHILKUMARAN
தமிழன் ஐந்து வருடங்கள் அனுபவிக்கட்டும் என்று சொல்கிறீர்களே..அப்போ இத்தனை காலம் என்ன செய்துகொண்டிருந்தான்?
நன்றி திரு SENTHILKUMARAN
மூக்கணாங்கயிறு யாருக்கு..மக்களுக்கா? ஆட்சியாளர்களுக்கா?
நன்றி திரு SENTHILKUMARAN
நடிகர் விஜயின் தீவிர ரசிகர் போல ? ஹஹாஹா...
Ha Ha Ha!!!
சினிமா துறையில் இருந்து Vijayakanth, Nepolian,Sarathkumar, Ratharavi,Arun Pandiyan,SEEMAAN, VIJAY-SAC, Kushboo, Vadivelu, Singamuthu அடுத்த அரசியல் வாதியும்,Karunanithi, Jayalaitha முதல்வராகவும் வந்து கொள்ளையடிக்கப் போவதை தடுத்து நிறுத்துங்கள்!!!
நன்றி திரு sai Gokul - வேலைவாய்ப்பு தகவல்கள்
சினிமா மாயையில் இருந்து தமிழகம் விடுபட நீங்களும் உங்களது பங்களிப்பை தாருங்களேன்
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?