மரியம்பிச்சை..!
திருச்சியில் அமைச்சர் கே.என் நேருவை தோற்கடித்து ...வெற்றி பெற்றவர்..பணபலம், அதிகாரபலம், அமைச்சரின் செல்வாக்கு போன்றவைகளைக்கடந்து வெற்றிபெற்றவர்..சிறுபான்மை பிரிவு மற்றும் சுற்று சூழல் சுகாதாரத்துறை அமைச்சராக பதவியேற்றவர்.
பதவி ஏற்ற ஒரே வாரத்தில் அகால மரணமடைந்துள்ளார்.
அவர் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் மனிதர். அதுவும் ஒரு முக்கிய பொறுப்பிலிருந்தவர்..அகால மரணமடைந்துவிட்டார்..
நானும் இந்த இரண்டு நாட்களாக பார்த்துகொண்டிருக்கிறேன்..எந்த பதிவராவது அனுதாபம் தெரிவித்து பதிவிடுவாரோ என்று...ம்ஹூம்..அதை வெறும் செய்தியாகத்தான் ஓரிரண்டு பதிவர்கள் வெளியிட்டு இருக்கிறார்களே தவிர அதைப்பற்றி எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் வெறும் மொக்கை பதிவுகளும் சினிமா துதிகளுமே நிறைந்திருக்கிறது.
சினிமாவில் சம்பாதித்து தற்சமயம் நோய் வாய்ப்பட்டிருக்கும் ரஜினி என்னும் நடிகர் பற்றி - அவர் மீண்டு வந்து விடுவார்..அவருக்கு அந்த சிகிச்சை, அங்கே சிகிச்சை என்று மாய்ந்து மாய்ந்து எழுதியவர்களுக்கு - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்முறையாக அமைச்சராகி - அதை செயல்படத் தொடங்கும் முன்பே அகால மரணமடைந்த ஒரு மனிதருக்கு அனுதாபம் தெரிவிக்ககூடவா தோன்றவில்லை?
தமிழ் பதிவர்கள் அந்த அளவுக்கு மனிதாபிமானமற்றவர்களா?
பின் குறிப்பு :
அப்படி யாரேனும் பதிவிட்டிருந்தால் - அவர்களுக்கல்ல இந்த பதிவு..
அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்..
11 comments :
well said
நம்ம நாட்டில் சினிமா என்னும் கலைக்கூத்தாடிகளுக்கு இருக்கும் மதிப்பும்,மரியாதைகளும் வி ஐ பி அந்தஸ்த்களும்..ஒரு இந்திய சிதந்திர போராட்ட தியாகிகளுக்கு கிடைக்குமா..?சமூக அக்கறையுள்ள அரசியல் வாதிகளுக்கு கிடைக்குமா என்றால் அறவே இல்லவே இல்லை என்றுதான் பதில் வரும்.. இதற்கெல்லாம் யார் காரணம் ..?ரஜினியா.?இல்லை விஜயகாந்தா..?இவர்கள் எல்லாம் பிழைப்புக்காக சினிமாவில் கூத்தாடியானவர்கள் ..திரைக்குப்பின்னால் வரும் வசனங்கள் கூட இவர்களது சொந்த வசனங்கள் கிடையாது ..அப்புறம் எப்படி இவர்களுக்கு இத்தனை முக்கியத்துவம் என்று கேட்குறீங்களா ..? மீடியாக்கள் தான் அந்த தவறை திரும்ப திரும்ப செய்து வருகின்றன.அப்பாவி பொது ஜனங்களை ஏமாத்தற இந்த கலைக்கூத்தாடிகளை நிஜ ஹீரோக்களாக தங்கள் பிழைப்புக்காக காட்டி வருகின்றன ...இதற்க்கு முக்கிய பொறுப்பு வகிப்பவர் காலம்சென்ற எம் ஜி ஆர் ..இவரில் ஆரம்பித்து தான் இன்று விஜயகாந்திளிருந்து விஜய் வரைக்கும்..தமிழ் நாட்டை தவிர இந்தியாவில் எந்த நடிகர் முதல்வராக பதவி வகித்தார் ....?இதற்க்கு பதில் உண்டா ..? இந்த நிலை மாறவேண்டும்..கழைக்கூத்தாடிகள் அரசியலுக்கு வரக்கூடாது என்று இந்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும்.அப்படி ஒரு நடிகன் அரசியலுக்கு வர விரும்பினால் குறைந்தது ஐந்து வருடங்கள் நடிப்புத்தொழிலை விட்டவராக இருக்க வேண்டும்..ஏனனில் நடிப்பில் தங்களை நிஜ ஹீரோவாக காட்டி மக்களை மடையனாக ஆக்கக்கூடாது அல்லவா ..? .
யோவ் காமடி.... நீயும் ரெண்டுநாளா பொத்திகிட்டு பாத்துகிட்டுதான இருந்த... நீ மொதல்ல இரங்கள் தெரிவிச்சிட்டு பெறகு சொன்னீன்னா ஞாயம்.. மொதல்ல எல்லாத்துக்கும் மெயில் அனுப்பறத நிறுத்து...
பின்னூட்டமிட்ட யாழி பாபா, தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை, nzm ஆகிய நண்பர்களுக்கு நன்றி.
kanna kattuthu..............
Y blame media , if I have to ask in TR style Malathai thatil vaithal entha makkal sapiduvangala? Avanga ellam viyabaringa , appadi thaan erupaanga . 30,40 pakathai nirupanumna kalla kaathal, karpazhipu,Rajini,kamal news thaan poduvaanga. Makkal adimyagavey eruka virumbinaal ena seya mudiyum. MGR iruntha varai Rajini pathi oru thuli seithi vanthathu kidayathu, Nalaiku Rajini mandaya pota , entha Media enoruvanai uruvaakum athu Vijay allathu Ajith. Evargal kusu vital kuda siethi potu kaasu parkum.
தலைப்பு அருமை
பின்னூட்டமிட்ட அன்பர்கள் : திரு velumani1, திரு nirvana திரு katz ஆகியோருக்கு நன்றி
எனது மனிதாபிமான அனுதாபங்கள். மரியம்பிள்ளையை எனக்கு நீண்டகாலமாக தெரியும். அவரது மனைவியர்களில் ஒருவரது மகன் என்னுடன் படித்தான்.
அவர் நீண்டகாலமாக சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு பெரும் பணம் சம்பாதித்தார்.
அவர் கருணாவை (நேரு) தோற்கடித்தார் என்பதட்காகவோ அல்லது முஸ்லிம் என்பதட்காகவோ அவரை சரித்திர நாயகனாக காட்டுவது பொருத்தமான செயல் அல்ல.
மக்களின் நலனுக்காக பாடுபட்டவர் போல் காட்டப்படும் இந்த மரியம்பிச்சை இராமநாதபுரம் கமுதி பனையூர் கிராமத்திலிருந்து பிழைப்புத்தேடி சிறுவயதிலேயே திருச்சியில் குடியேறி தட்டு வண்டியில் காய்கறி விற்று மிக எளிமையாக வாழத்துவங்கியவர். ஆனால் நாளடைவில் கள்ளச்சாராயம் விற்பதில் துவங்கி காவல்துறையுடன் ஏற்பட்ட மாமுல் நெருக்கத்தில் அர்ச்சுனன் என்ற எஸ்.ஐ. க்கு பினாமியாக, ரவுடியாக இருந்து செல்வாக்கடைந்தார். நாளடைவில் அவருடைய மனைவியோடு மரியம்பிச்சைக்கு ஏற்பட்ட கள்ள உறவால் மனம் நொந்து அந்த காவல் துறை அதிகாரி தற்கொலை செய்து கொண்டதால் அந்த சொத்துக்களுக்கு சொந்தக்காரர் ஆனார். சக சாராய ரவுடி பிச்சமுத்தோடு ஏற்பட்ட சண்டையில், தன்னைக் கொல்ல முயன்று பதிலாக தன் தம்பியை கொடூரமாக கொன்றதற்கு பழிவாங்க பிச்சைமுத்து கும்பலோடு ஏற்பட்ட பல மோதல்கள், ஆள்கடத்தல் சம்பவங்கள். இறுதியாக காவல் துறையோடு தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி ரவுடி பிச்சைமுத்துவையும் முட்டை ரவியையும் என்கவுண்டரில் கொன்றொழித்து தன்னை பாதுகாத்துக் கொண்டவர். இதுதான் மரியம்பிச்சையின் வரலாறு.
இப்படி கள்ளச்சாராயம், கட்டபஞ்சாயத்து என திடீர் பணக்கார அரசியல் ரவுடியாக வளர்ந்து மரியம் திரையரங்கம், மரியம் திருமண மண்டபம், மரியம் நகர், ஜோதி ஆனந்த் திரையரங்கம், திருச்சி கலையரங்கம் திரையரங்கத்தை குத்தகைக்கு எடுத்தது என கோடிகளில் புரண்ட மரியம்பிச்சை அரசியல் பாதுகாப்புக்காக அ.தி.மு.க-வில் தஞ்சம் அடைந்து ஜெயா,சசியின் பினாமியாக செயல்பட்டு ஜெயாவின் தீவிர பக்தராகவும் விசுவாசியாகவும் மாறினார்.
இந்த காலகட்டத்தில் திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளை ஒழித்துகட்டுவோம், நக்சல் பாரிப் பாதையை முன்னெடுப்போம் என தமிழகம் முழுவதுமம் ம.க.இ.க. இயக்கம் எடுத்த நேரத்தில் இந்த மரியம்பிச்சையும் திடீர் பணக்கார அரசியல் ரவுடியாக அறிவிக்கப்பட்டார். அதற்கான பொதுக்கூட்டத்தில் தகராறு செய்ய வந்து மூக்குடைபட்டு அடங்கினார்.
சொந்த வாழ்க்கையில் நேர்மையில்லாமலும், அடுத்தவர் மனைவியோடு கள்ள உறவ, அத்துடன் கஸ்தூரி, லில்லி, பாத்திமாகனி என பலரை மனைவிகளாக்கி கொண்டது அனைத்தும் சங்கிலியாண்டபுரம் மக்கள் அறிந்த கதைதான்.
மேலும் தான் வார்டு உறுப்பினராக, கவுன்சிலராக, கோட்டத்தலைவராக இருந்த காலத்தில் குடிநீர் இணைப்புக்காக 8 ஆயிரம், 10 ஆயிரம் என பொதுமக்களிடம் பணம் பிடுங்கியதாலும் சாலைகள், கழிப்பிடங்கள் கட்டுவதில் நடந்த முறைகேடுகள் காரணமாகவும் பொதுமக்கள் காறி உமிழ்ந்தனர். செந்தணீர்புரத்தில் அரசு புறம்போக்கை வளைத்து அந்த இடத்தில் சிமெண்ட் தயாரிக்கப் பயன்படும் நச்சுக்கழிவுகளை கொட்டியதால் சுற்றுப்புறச்சுழலும், நிலத்தடிநீரும் நஞ்சானது இதை எதிர்த்து ம.க.இ.க, பு.மா.இ.மு தோழர்கள் போராடிய போது பொன்மலை ஆய்வாளர் காதர் பாட்ஷா மற்றும் காக்கிகள் பொன்மலை காவல் நிலையத்தின் கதவுகளை சாத்திக்கொண்டு 16 தோழர்களை மிருகத்தனமாக தாக்கியது. எனினும் அந்தப் போராட்டத்தில் மக்கள் வெற்றி பெற்றனர். இதிலும் மக்கள் விரோதியாக அம்பலமானவர்தான் இந்த மரியம்பிச்சை.
இப்படிப்பட்ட ஒரு சமூக விரோத நபராக இருந்த மரியம்பிச்சை கடந்த இரண்டு தேர்தல்களில் நின்று தோற்றுப் போனாலும் விலைவாசி உயர்வு, மின்வெட்டு கருணாநிதி கும்பலின் கொள்ளைக்கு எதிராக மக்கள் அளித்த வாக்கு தஞ்சத்தில் மந்திரியாக மாறிய கதை இதுதான்.
இந்த மர்மயோகி என்ற பீசுக்கு உண்மையில எந்த அடிப்படையும் தெரியாது..........சும்மா தனக்கு தெரிஞ்ச முஸ்லிம் ஆதரவு இந்து எதிர்ப்பு இரண்டையும் வைத்து உளறிக்கொண்டிருக்கிறான்.......இவனை போன்றவர்கள் பதிவுலக கழிவுகள்.......
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?