ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு சென்று ஏறக்குறைய அறுபது வருடங்களை தாண்டிவிட்டோம்..
ஆனாலும் அவர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த அந்த மனோபாவம் இன்னும் நம்மிடம் இருந்து மாறவில்லை..
அதனால்தான்..நாம் போராட்டத்தின் மூலம் ஆங்கிலேயனை விரட்டியும்கூட, அவர்களிடம் இருந்து விடுதலை பெற்றுவிட்டோம் என்றுதான் சொல்கிறோமே தவிர நாம் அவனை விரட்டியதாக சொல்வதில்லை..
தாய்மொழி பேசுவதை விட ஆங்கிலம் பேசுவதுதான் உயர்ந்தது என்று நினைத்துகொண்டு வாழ்கிறோம்.
தமிழ்நாட்டில்கூட திராவிட கட்சிகள் வளர்ந்தது, நமது தாய்நாடு இந்தியாவில் அதிக மக்கள் பேசும் ஹிந்தி மொழியை எதிர்த்துதானே தவிர ஆங்கில மொழியை எதிர்த்து அல்ல..
இன்னும் தமிழ்நாட்டில் ஆங்கில மொழியை வரவேற்று, ஹிந்தியை தார் பூசி அழிக்கிறோம்..
அதனால்தான் பெரும்பாலான தமிழர்கள் சென்னை சென்ட்ரலை தாண்டிவிட்டால் ஹிந்தி தெரியாமல் ஊமை பாஷை பேசவேண்டிய சூழல்..
வெள்ளைக்காரனைக் கண்டால் அவன் ஏதோ வானத்தில் இருந்து குதித்தவன் போல நம்மவர்கள் அவனுடன் பவ்யமாக பணிந்து பேசும் அவலம் வேறு எங்கும் இல்லை..
நம்மை நாம தாழ்த்திக்கொள்ளும் நகைச்சுவைகள் இந்தியாவில்தான் அதிலும் தமிழ்நாட்டில்தான் அதிகம் என்று நினைக்கிறேன்..
என்னதான் இந்தியா உலகின் வல்லரசுகளில் ஒன்றாகி வருகிறது, பொருளாதாரத்தில் வியக்கவைக்கும் அளவில் முன்னேற்றம் பெற்றிருக்கிறது என்றாலும், அமெரிக்காவிலிருந்து ஜார்ஜ் புஷ்ஷோ, பில் கிளிண்டனோ, ஒபாமாவோ வந்தால் அவர்கள் கையிலே இந்த நாட்டை ஒப்படைக்கும் கேவலமாக ஆட்சியாளர்களைதான் நாம் பெற்றுள்ளோம்..
ஆனால் நமது நாட்டு தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அங்கு சென்றால் - பாதுகாப்பு சோதனை என்று கருதி அவமானப்படுத்தப்பட்டாலும், கை கட்டி வாய்பொத்தி சின்னதாக கண்டனம் தெரிவித்து அமைதியாகி நாம் எப்போதும் ஆங்கிலேயர்களுக்கு அடிமைதான் என்று பறைசாற்றியே வருகிறோம்.
அதனால்தான், அமெரிக்காவின் இந்திய துணைததூதரின் மகள் கிருத்திகா பிஸ்வாஸ் என்ற ஒரு சிறுமியை அநியாயமாக - ஆபாச ஈமெயில் அனுப்பினார் என்று அமெரிக்க அரசாங்கத்தால் தண்டிக்கப்பட்டிருகிறார். ஒரு நாள் சிறைவாசம் அனுபவித்ததோடு, அளவுக்கதிகமான சித்திரவதையும் அனுபவித்திரிகிறார்.
அந்த பதினெட்டு வயது சிறுமிக்கு, குடிப்பதற்கு குடிநீர் கொடுக்காமலும், திறந்த வெளி கழிப்பிடத்தை பயன்படுத்த வைத்தும், எய்ட்ஸ் நோயாளிகள் அருகில் வைத்தும் சித்திரவதை செய்திருக்கிறார்கள் - இவ்வளவும் அவள் செய்திராத தவறுக்கு - ஒரு முறையான விசாரணை இல்லாமல்..
இறுதியில் தவறு செய்தது ஒரு சீன மாணவன் எனத்தெரிந்ததும் அப்பெண் விடுவிக்கப்பட்டாலும், அந்த மாணவன் தண்டிக்கப்படவில்லை..
காரணம் அவன் இந்தியன் அல்ல..சீனன்.
.இந்தியன்தான் அடிமை..இந்தியாவுக்கு அவர்கள் வந்தால் அவர்கள் கையில் நாம் ஆட்சியை ஒப்படைத்துவிடுவோம்.
அணு ஒப்பந்தத்தில் அமெரிக்கன் சொன்னதை மீறாமல் கையெழுத்திடுவோம்..பாகிஸ்தான் நம்மை தாக்கினால் - திருப்பித்தாக்க வக்கில்லாமல், அமெரிக்காவிடம் முறையிடுவோம்.. ஐ நா சபையில் உறுப்பினராக கூட அமெரிக்காவின் தயவையே எதிர்பார்க்க நேரிடுகிறது..
கிரிக்கெட் மைதானத்தில் மட்டும் தேசியக்கொடியை ஆட்டிவிட்டு, அணியும் ஆடைகளில் அமெரிக்க கொடி வரைந்த ஆடைகளை அணிவதே பெருமை என்று நினைக்கு அடிமைகளே இந்நாட்டில் அதிகமதிகம் உலா வருகிறார்கள்.
அமெரிக்கர்கள் சொல்லும் வேலையை இரவெல்லாம் விழித்திருந்து முடித்துவிட்டு, - தாம் கால் சென்டரில் வேலை செய்வதை கவுரமாக கருதும் அடிமைகளே அதிகம்..
பிறக்கும்போதே அமெரிக்காவில் வேலை செய்வதே லட்சியமாக கொண்டு பிறக்கும் "மேல்தட்டு" அடிமைகளும் அமெரிக்க தூதரக வாசலில் இரவு பகல் பாராமல் வெயில் மழை பாராமல் அவனுக்கு அடிமை சேவகம் செய்ய ஆவலாய் காத்திருக்கும் அடிமைகளும் இங்குதான் இருக்கிறார்கள்..
இன்னும் நாம் அடிமை மனோபாவத்திலேயே இருப்பதால்தான் இன்னும் குனிய குனிய குட்டிக்கொண்டே இருக்கிறார்கள்..
எப்போது எழுந்து திருப்பி குட்டப் போகிறோம்?
5 comments :
:)
ஆம் நண்பரே! அமெரிக்கன் என்றில்லை, வெள்ளைக்காரன் யாராக இருந்தாலும் நம்மவர்கள் பணிவதும் குனிவதும் நடந்து வருகிறது. இது வருத்தமான விஷயம்தான்.
இன்னும் வெளிநாட்டில் வேலை வேண்டும் என ஏங்கும் நண்பர்களும், அங்கு வேலை செய்வதே கெளரவம் என் நினைப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆம், ஒபாமா வந்தால், அவருக்கென பாதுகாப்பு ஆட்களும் எந்திரங்களும் கூடவே வரும் - ஏன் இந்தியாவில் பாதுகவலர்களே இல்லையா?
எது எப்படியோ, அடிமைத்தனத்தை ஒழிக்க நன் நிமிர்ந்தால் மட்டும் போதாது, இங்கே வாய்ப்புகளும் உருவாக்கப்பட வேண்டும் - அதை தேடி அவர்கள் என்று இங்கு வருகிறார்களோ அன்றுதான் நம்மவர் தலை நிமிர முடியும்.
மிகச்சரியான கருத்து…
I posted this article on Vinavu without ur permission. SOrry
ஆடுகளம் தேசிய விருது அம்பலமாகும் உண்மைகள்..
எம்.ஜி.ஆருக்கு அகில இந்திய சிறந்த நடிகர் பட்டம் கிடைத்தபோது அதை சிபாரிசு செய்தது தாமே என்று திமுக கூறியது. அதனால் கலையடைந்த எம்.ஜி.ஆர் அதன் பின்னர் அந்தப் பட்டத்தை பாவிக்காமலே விட்டார் என்பது அனைவரும் அறிந்த கதை. சன் பிக்சர்ஸ் ஆடுகளமும் அப்பட்டமான அரசியல் சிபாரிசு என்பதை மெல்ல மெல்ல போட்டுடைக்க ஆரம்பித்துள்ளது. இது குறித்த உண்மைகள் தொடர்ந்து வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் இன்று தமிழகத்தில் வெளியான தற்ஸ்தமிழ் செய்தி :
யாருமே எதிர்பார்க்கவில்லை ஆடுகளம் படத்திற்குப் போய் இத்தனை விருதுகள் குவியும் என்று. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த எடிட்டிங், சிறந்த நடனம் என கையில் கிடைத்த விருகளையெல்லாம் எடுத்துக் கொடுத்து தேசிய விருதுகளையே பெரும் கேலிக்கூத்தாக்கியுள்ளது 58வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான தேர்வுக் கமிட்டி.
சத்தியமாக இந்த விருதுகளை ஆடுகளம் குழுவினரே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். திரைக்கு வந்த வேகத்திலேயே தியேட்டர்களை விட்டு வெளியேறிய படம் ஆடுகளம். மக்களால் சுத்தமாக ரசிக்கப்படாத ஒரு படம். வெறும் விளம்பரத்தை மட்டுமே வைத்து ஓட்டிப் பார்க்க முயன்ற சன் பிக்சர்கஸ் தயாரித்த படம் இது.
படம் தரக்குறைவானது என்று கூற முடியாவிட்டாலும் கூட விருதுகளுக்குரிய தகுதிகள், அதுவும் இத்தனை விருதுகளை அள்ளும் அளவுக்கு இந்த படம் உள்ளதா என்பதுதான் அத்தனை பேரின் மனதிலும் ஓடும் கேள்விகள்.
காரணம், இந்த ஆண்டு பல நல்ல படங்களைக் கண்டது தமிழ்த் திரையுலகம். நந்தலாலா, அங்காடித் தெரு, மைனா, விண்ணைத் தாண்டி வருவாயா, மதசாரப்பட்டனம், களவாணி என இந்த வரிசை நீண்டது.
களவாணி படத்தில் நடித்த விமலின் நடிப்பை இயக்குநர் கே.பாலச்சந்தர் இப்படி விமர்சித்திருந்தார் – இயல்பான, எதார்த்தமான நடிப்பு, அருமையான நடிகர் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்துள்ளார்.
அங்காடித் தெரு படத்தைப் பார்த்து கலங்காத, பதறாத மனங்களே கிடையாது. பிரகாசமான வெளிச்சத்திற்கு மத்தியில் இருட்டு வாழ்க்கை வாழ்ந்து வரும் அப்பாவி இளைஞர்கள், இளம் பெண்களின் வாழ்க்கையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து போட்டு, மனங்களை உலுக்கியெடுத்த அருமையான படம்.
இப்படி ஒரு கதையை தமிழ் சினிமாக்காரர்கள் ஏன் இத்தனை காலமாக மக்களுக்குக் கொடுக்கவே இல்லை என்று அத்தனை பேரும் அதிசயித்துப் போன படம் அங்காடித் தெரு. அபாரமான நடிப்பு, அருமையான திரைக்கதை, இயல்பான இசை, இயற்கையான நடிப்பு என படம் முழுக்க சிறப்புகள்தான் அதிகம்.
அதேபோல இசைக்காக பேசப்பட்ட படம் நந்தலாலா. அதன் கதை, வேறு ஒரு இடத்திலிருந்து உருவி எடுக்கப்பட்டது என்றாலும் கூட படத்தின் பி்ன்னணி இசை மிகப் பிரமாதமாக இருந்ததாக அத்தனை பேராலும் பேசப்பட்ட படம் நந்தலாலா. இசைஞானி இளையராஜா என்ற ஒரே ஒரு மனிதரின் அபாரமான இசைதான் இந்தப் படத்தை தூக்கிப் பிடித்து நிறுத்தியது என்று கூறலாம். இந்த இசைக்கு விருது தரப்படவில்லை.
பிறகு மைனா. இந்தப் படத்தைப் பாராட்டாத வாய்களே இல்லை. கமல்ஹாசன் படத்தின் ரிலீஸுக்கு முன்பே கூறி விட்டார். தமிழ் சினிமா இனி நன்றாக இருக்கும், நான் நிம்மதியாக தூங்குவேன் என்று கூறி விட்டார். படம் வெளியான பின்னர் அதைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தோ, இந்தப் படத்தில் நான் நடிக்காமல் விட்டு விட்டேனே என்று ஆதங்கப்பட்டார். படத்தைப் பார்த்த அத்தனை பேரும் பாராட்டிய விஷயம், இயல்பான கதை, அருமையான திரைக்கதை, அபாரமான நடிப்பு, அழகான இசை ஆகியவற்றைத்தான்.
இதேபோல ஒரு சாதாரண கதையை மிக மிக அழகாக, கவிதை போல வடித்திருந்தார் இளம் இயக்குநர் விஜய் தனது மதராசபட்டணம் படத்தில். இப்படத்தின் கதையும் சரி, அதில் நடித்த எமி ஜாக்சனும் சரி, இசையும் சரி எல்லாமே பிரமாதம். இந்தப் படத்தைப் பற்றி பல பக்கங்கள் கொண்ட மிக நீண்ட விமர்சனத்தை எழுதி சிலாகித்திருந்தார் கே.பாலச்சந்தர். உலகின் மிகச் சிறந்த இயக்குநர் வரிசையில் விஜய் அமருவார் என்றும் புகழாரம் சூட்டியிருந்தார். விஜய்யின் இயக்கம் அவ்வளவு அபாரமானதாக இருந்தது.
இப்படி எத்தனையோ படங்கள், சிறப்பான படங்கள், அபாரமான படங்கள், சிறந்த நடிப்பு, இசை, இயக்கம், திரைக்கதை என வந்திருந்தும் இந்தப் படங்களுக்கு ஒரு விருது கூட தரப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருப்பது பெரும் வியப்பாக உள்ளது. சிறப்புக் குறிப்பில் கூட இந்தப் படங்களில் ஒன்று கூட இடம் பெறவில்லை. அதுதான் பெரிய ஆச்சரியமாக உள்ளது.
உட்கார்ந்து யோசித்தாலும், படுத்தபடி யோசித்தாலும் கூட ஆடுகளத்திற்கு இத்தனை விருதுகள் எப்படி கிடைத்தன என்பதற்கு சத்தியமாக விடை தெரியவில்லை. உங்களுக்கு ஏதாவது தெரியுதா
நன்றி திரு சரபுதீன்
நன்றி திரு Kavippillai
நன்றி திரு SENTHILKUMARAN
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?