கிறுக்குத்தனமாக பேரை வைத்துவிட்டு, வித்தியாசமாக படம் எடுப்பான் என்று மக்களை ஏமாற்றும் உக்தியை நிறைய முட்டாள் இயக்குனர்கள் பின்பற்றி படம் எடுத்து ஒழிந்து போகிறார்கள்.

பெரும்பாலும் - இந்தமாதிரி விளம்பரம் செய்து படம் வெளியிடுபவர்கள் முதல் படம் சற்று சுமாரகக்கூட இருக்கும்..முதல் படம் என்பதால் சற்று யோசித்தாவது எடுப்பார்கள்..இப்படி முதல் படத்திலேயே தனது முட்டாள்தனத்தை பறை சாற்றிய இயக்குனர் இந்த படத்தின் இயக்குநராகத்தான் இருப்பான். கொஞ்சம் கூட கதைக்காக சிரமப்படவில்லை..ஏற்கனவே வெளியான "இதயத்தை திருடாதே", " பூவே பூச்சூடவா", " கிங்" , போன்ற படங்களின் கதைகளை உருவி - ரொம்ப சீரியஸ் படம் மாதிரி கொடுத்து இருக்கிறான்.
அமெரிக்காவின் பிரபல டாக்டர் (அது என்னமோ தெரியலே இங்கேர்ந்து போறவனெல்லாம் அமெரிக்க போனா உலகத்திலேயே அதிசயமான டாக்டராகவோ, விஞ்ஞானியாகவோ ஆகிவிடுகிறான் - படத்தில்தான்) விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு வைத்தியம் பார்கிறான்..அடுத்த நிமிசமே - தமிழ்சினிமா வழக்கப்படி - ரெண்டுபேரும் காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்..
ஒருகட்டத்தில் ஒரு குழந்தைக்கு விபத்தொன்றில் விரல் துண்டாகி விடுகிறது..அதை இந்த டாக்டர்தான் ஆபரேஷன் மூலம் சரி செய்கிறான்..இந்த காட்சியை பார்த்தவுடன் வேறு எதோ கட்டத்தில் கதாநாயகியின் தலை துண்டாகிவிடும் அதை ஒன்று சேர்த்து பிழைக்கவைக்கும் காட்சி ஏதாவது வைத்துவிடுவார்கள் என்று நினைத்தேன்..நல்லவேளை அப்படி ஏதும் இல்லை..
சில கிறுக்குத்தனமான காட்சிகள் பாடல்களுக்கு அப்புறம் இரண்டு பேருக்கும் திருமணம் முடிந்து விடுகிறது..அப்புறம் தேவை இல்லாமல் கதாநாயகனுக்கு ஒரு வியாதியை கொண்டு வருகிறார்கள்..(pancreatic cancer) கணையத்தில் கேன்சர் என்று சொல்லி படத்தை ஓட்டப்பார்கிரார்கள்..தலை வலிக்கிறது..கதாநாயகன் ஆறுமாதம்தான் உயிருடன் இருப்பான் என்று பெரிய டாக்டர் சொல்லா தலைவலி ஆரம்பம்..அதைவிட அந்த பிரபல அதிசய டாக்டர் பைத்தியம் பிடித்தவன் போல ஊரை விட்டு, மனைவியை விட்டு ஓடி இந்தியா வருகிறான்..
அங்கே இவன் வந்து இறங்கியவுடன், கணவன் மனைவி இரண்டு பேர் இவனுக்காக ஒரு வீட்டை தயாராக வைத்திருக்கிறார்கள்..
இன்னொரு கதாநாயகி இவனை காதலிக்க தயாராக இருக்கிறாள்..
சில தரைப்படையை சேர்ந்த சிறுவன்கள் நண்பர்களாகின்றனர்..
இவன் கவலையெல்லாம் மறந்து தரைப்படை சிறுவர்களுடன் சுண்டல் விற்கிறான், பேப்பர் போடுகிறான், சாக்கடை அள்ளுபவர்களுக்கு டீ வாங்கிதருகிறான்..ஆனால் ஒரு வேலையும் செய்யவில்லை..
அப்புறம் இந்தியாவில் இவன் மேல் காமம் (?) கொள்ளும் கதாநாயகி..அவள் முதல் காட்சியில் ஏதோ போடோகிராபர் என்று காட்டுகிறார்கள்..அப்புறம் முழுநேர வேலை இந்த கேன்சர் டாக்டரை சுற்றுவதுதான்..
கதாநாயகனாக நடித்தவனுக்கு நடிப்பு சுத்தமாக வரவில்லை..அதை விட கொடுமை - படத்தை அனைவருமே கிண்டலும் நக்கலுமாக பார்த்துக்கொண்டிருக்கையில், வீட்டு ஓனர்களாக நடிக்கும் மௌலியும், கீதாவும், ரொம்ப சீரியசாக நடித்து காமெடி பண்ணுகிறார்கள்.
கதாநாயகி தன காதலை சொன்னவுடன் கதாநாயகன் ஊரை காலிபண்ணிவிட்டு ஓடுவதும், அவனை பின்தொடரும் கதாநாயகி ஒரு விபத்தில் படுகாயம் அடைவதும் அடுத்த காமெடி..அப்புறம் அடுத்தநாளே அவளை வைத்தியம் பார்பதற்கென்று அமெரிக்காவுக்கு கொண்டு செல்வது உச்சகட்ட காமெடி..இந்த மாதிரி விபத்திற்கெல்லாம் அமெரிக்கா கொண்டு செல்வது எனபது இந்திய மருத்துவத்துரையையே கேவலப்படுத்துவது மட்டுமின்றி - அமெரிக்காவின் கைக்கூலி போன்றும் இவர்கள் நடந்துகொண்டிருக்கிறார்கள்..
அது போக - அமெரிக்க விசா எடுக்க இங்கே நிறைய அடிமைகள் மாதக்கணக்கில் காத்திருக்க, இந்த பெண் அன்றிரவே அமெரிக்கா செல்வது படம் பார்ப்போரை மகா முட்டாளாக்கும் பைத்தியக்காரத்தனம்.
இறுதிக்காட்சியில் முதல் மனைவியை அமெரிக்காவில் தவிக்க விட்டதுபோல், இவளையும் ஏமாற்றி விமானத்தில் ஏற்றி அனுப்பிவிட்டு, பிரேசில் செல்கிறானாம்..அங்கே இன்னொருத்தியை இதுமாதிரி ரூட் விட்டு அவ வாழ்க்கையையும் கெடுப்பதற்காம்.. என்னங்கடா கதை எடுக்குறீங்க?..
அதுகிடக்கிறது..இவனுக்கு டாக்டர்கள் ஆறுமாதம் தான் உயிருடன் இருப்பான் என்று கெடு வைத்திருக்க, இவனோ ஆறுமாதங்களுக்கும் மேலாக ஒவ்வொரு நாடாக அலைந்துகொண்டு காதலித்துகொண்டிருக்கிறான் ..கொடுமைடா ....
16 comments :
எனக்கென்னவோ படம் எடுத்தவனைவிட உனக்குத்தான் லூசுமாதிரி கிடக்குது. போய் நீ முதலில் டாக்டரைப்பார்த்திட்டு வந்து பதிவெழுது வெங்காயம்
nice but anha alagana figarukkaka?????????//
நண்பா
எதிர்மறையாக விமர்சனம் என்பது உங்களுடைய ஒரு குணம் .....ஆனால் இது வேறு வகையான பிரச்சனைகளுக்கு வழி வகுத்து விடும் ....கவனம் தேவை
விமர்சனம் சரியில்லை நண்பரே ...
sariyana vimarsanam
unmaiyana vimarsanam
vaalthukkal marmayoki
intha padam nanraga irukkirathu enru sonna ore aal
SUGASINI..
ennna panrathu jaathi...
.கொடுமைடா ....
முட்டாள் அவனில்லடா நீ தான்....உன்னை அமெரிக்காவில சேர்த்துக்கமாட்டான் என்கிற பொறாமை.........சும்மா எல்லாத்தையும் எதிர்த்து எழுதினா நிறைய பேர் படிப்பாங்க என்று ஹிட்சுக்காக அலையுறாய்......உருப்படியா ஏதும் இருந்தா போய் பாரு
//YAANI
July 4, 2011 12:14 PM
எனக்கென்னவோ படம் எடுத்தவனைவிட உனக்குத்தான் லூசுமாதிரி கிடக்குது. போய் நீ முதலில் டாக்டரைப்பார்த்திட்டு வந்து பதிவெழுது வெங்காயம்//
அய்யா யோனி..சாரி யானி..
பதிவு எழுதுவதற்கு ஏன் டாக்டரை பார்க்கணும்?
//லிவிங்ஸ்டன்
July 4, 2011 12:51 PM
nice but anha alagana figarukkaka?????????//
அப்படீன்னா நீங்க போஸ்டரையோ இல்லை டிவி கிளிப்பிங்க்சிலோ பார்த்துக்கொள்ளலாம் நண்பரே..
//SUGAM
July 5, 2011 6:26 AM
நண்பா
எதிர்மறையாக விமர்சனம் என்பது உங்களுடைய ஒரு குணம் .....ஆனால் இது வேறு வகையான பிரச்சனைகளுக்கு வழி வகுத்து விடும் ....கவனம் தேவை//
நன்றி நண்பரே..ஆனால் இதற்கெல்லாம் பயந்தா நம்ம வேலைய பார்க்க முடியுமா..எதில்தான் ஆபத்து இல்லை சொல்லுங்க?
//கோவை நேரம்
July 5, 2011 7:08 AM
விமர்சனம் சரியில்லை நண்பரே ...//
சரியில்லாத படத்துக்கு சரியில்லாத விமர்சனம்தான் வரும் நண்பரே
//THAMILAN
July 5, 2011 10:13 AM
sariyana vimarsanam
unmaiyana vimarsanam
vaalthukkal marmayoki
intha padam nanraga irukkirathu enru sonna ore aal
SUGASINI..
ennna panrathu jaathi...//
சினிமாவை சினிமாக்காரிகளை வைத்து விமர்சனம் செய்வது வியாபார உத்தி..உருப்படுமா?
//RAJESH G
July 5, 2011 4:53 PM
.கொடுமைடா ....//
நீங்களும் பாத்துட்டீங்களா?
//CISCO
July 5, 2011 6:05 PM
முட்டாள் அவனில்லடா நீ தான்....உன்னை அமெரிக்காவில சேர்த்துக்கமாட்டான் என்கிற பொறாமை.........சும்மா எல்லாத்தையும் எதிர்த்து எழுதினா நிறைய பேர் படிப்பாங்க என்று ஹிட்சுக்காக அலையுறாய்......உருப்படியா ஏதும் இருந்தா போய் பாரு//
CISCO - ..இவனது வலைத்தளங்கள் எல்லாம் ஒரு மாதிரியாக இருக்கிறது..இவனது தொழில் நல்ல தொழில் இல்லை என்றே கருதுகிறேன்..இவனுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டி இருக்கிறது...ஹ்ம்ம்ம்...
சும்மா எல்லாத்தையும் எதிர்த்து எழுதினா நிறைய பேர் படிப்பாங்க என்று ஹிட்சுக்காக அலையுறாய். இன்னும் எண்ணி 1 மாசத்துல உன்னோட ப்ளொக்க தடைசெய்யிறேன் பாரு
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?