அடிமைப்படுவதிலும், உணர்ச்சிவசப்படுவதிலும் தமிழனை மிஞ்ச ஆளில்லை...
அமெரிக்க துணை தூதர் மவுரீன் சாவ், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசியது, பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. அதில், `நான் டெல்லியில் இருந்து ஒரிசாவுக்கு ரயிலில் சென்றேன்.
இந்த பயண நேரம் 24 மணி நேரம்தான். ஆனால், 72 மணி நேரம் ஆகியும், அந்த ரெயில் ஒரிசா போய்ச் சேரவில்லை. அதனால், எனது சருமம், தமிழர்களைப் போல அழுக்காகவும், கறுப்பாகவும் ஆகி விட்டது' என்று மவுரீன் சாவ் பேசியுள்ளார்.
நெல்சன் மண்டேலா கறுப்பின மக்களுக்காக போராடி வென்றபோது, அவருக்கு விருது கொடுத்து மகிந்ததோம்..
அமெரிக்கா ஒபாமா ஜனாதிபதியாக வென்றபோது விடுதலைப்புலி அடிமை வைகோ ஏதோ இந்தியாவின் ஜனாதிபதி போல - அவரைப்பற்றி ஒரு புத்தகம் காப்பி அடித்து எழுதி விளம்பரம் தேடினார்.
இங்குள்ள சினிமா கூத்தாடிகள் கருப்பாக இருப்பதை புகழ்ந்து "கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு" என்ற ஆபாச கவிதைகள் எழுதி மகிந்தனர்.
அதுமட்டுமல்ல இந்த அமெரிக்க துணை தூதர் மவுரீன் சாவ் அந்த விழாவில் பேசும்போது கூட இந்த அடிமைகள் கைதட்டி மகிழ்ந்திருக்கின்றன..
எவனோ ஒரு அரசியல் வியாதி தனது சுய விளம்பரத்திற்காக தமிழ்நாட்டினரை உசுப்பேத்திவிட, இதை இன்னும் பெரிதாக்கி, தமிழனை கருப்பு என்று "அவமானப்படுத்தி" இருப்பதாக இன்று லேட்டஸ்ட் தமிழ் வியாபாரிகள் குதிப்பது வேடிக்கையாக உள்ளது..
கருப்பாக இருப்பது கேவலமா?
கருப்பு இல்லையென்றால் வெள்ளையோ அல்லது மற்ற நிறங்களோ கிடையாது எனபது இந்த லேட்டஸ்ட் தமிழ்பற்று வியாபாரிகளுக்கு தெரியாதா?
வெள்ளைதான் உயர்ந்தது, கருப்பாக இருப்பது கேவலம் என்று தாழ்வு மனப்பான்மையுடன் நினைத்துக்கொண்டிருக்கும் வரை தமிழன் என்றும் அடிமையாகத்தான் இருப்பன்..
4 comments :
நல்ல பதிவு...என் சுதந்தர தின வாழ்த்துக்கள்...
தமிழர்களைப் போல அழுக்காகவும்??
What you say for this? I dont agree that tamilans are dirty, you may be but I am not, if someone say like this, I am going to oppose it.
there is nothing wrong in registering our oppose. If she said i became dark like tmailans it doesnt matter but she said dark & dirty, where i feel offended.
சில விஷயங்களை இனி எப்போதுமே மாற்றிவிட முடியாது. தமிழனை, தமிழனின் சொரனையை தட்டி எழுப்புவது என்பது இனி எக்காலத்திலும் நடக்கவே நடக்காது. அது அப்படிதான். இன்று நாம், நம் கலாச்சாரம் வீழும் காலத்தில் இருக்கிறோம். அதனால் ஆங்காங்கே சில கூக்குரல்கள் கேட்கின்றது. குரல் கூட உயர்தமுடியாத ஒரு அழிவு வெகு நிச்சயம் வரப்போகிறது.
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி..
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?