முதலில் நண்பர் ஜெய்லானிக்கு ஒரு விளக்கம், வெறும் டிரைலர் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதவில்லை...படம் பார்த்துவிட்டுத்தான் முதலில் விமர்சனம் எழுதலாம் என்றுதான் நினைத்து வந்தேன்..எல்லா படங்களைப்போல இதற்க்கு விமர்சனம் எழுத முடியவில்லை..காரணம் இதுவரை குப்பை படங்களையே பார்த்து வந்ததால் அவைகளின் குறைகளை சுலபமாக சொல்ல முடிந்தது.முதன் முறையாக ஒரு தரமான, ஆபாசமற்ற, யதார்த்தமான ஒரு படத்தை பார்த்த உணர்வு.
பிரம்மாண்டம் என்ற பெயரில் ஏமாற்று வித்தைகள் இல்லை, யதார்த்தம் என்ற பெயரில் போரடிக்கவும் இல்லை..கதையில் என்ன சொல்ல வந்தார்களோ அதை நேரடியாக நெத்தியடியாக சொல்லி இருக்கும் பாங்கும், கமர்ஷியல் என்ற பெயரில் எந்த விதமான சமரசமும் செய்துகொள்ளாமல் ஆபாசகலப்பில்லாமல் கதை சொல்லி இயக்கி இருக்கும் தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும்.
இதுவரை உலகத்தரம், இந்தியத்தரம், என்ற பெயரில் ஏமாற்றிக்கொண்டிருந்த அத்தனை ஆபாச பட இயக்குனர்களுக்கும், பெரிய இயக்குனர்கள் என்ற பெயரில் இருட்டிலும், பிரம்மாண்டம் என்ற பெயரில் வெளிநாடுகளையும் - செயற்கையான செட்டுகளையும் காட்டி எமாற்றிகொண்டிருந்த அனைத்து இயக்குனர்களும் இந்தப்படத்தைபார்த்து கற்றுக்கொள்ளவேண்டும்.
இத்தனை நாளாக மக்களை ஏமாற்றியதற்கு வெட்கி தலைகுனிய வேண்டும்..
இதற்குமுன்பு நண்பன் என்ற காப்பி அண்ட் பேஸ்ட் படத்தையே அதிலே அடிப்படையிலேயே பெரிய ஓட்டை இருந்தாலும், வானளாவப்புகழ்ந்த ஜால்ரா பதிவர்கள் இந்தப்படத்தை எப்படி மதிப்பிடுகிறார்கள் என்று பார்ப்போம்..
கிரிக்கெட் வீரானகவேண்டும், தோனியைப்போல பெரிய கிரிக்கெட் விளையாட்டு வீரனாக வரவேண்டும் என்று ஆசைப்படும் சிறுவன் ஒருவன், தன்னைப்போல தன மகன் கஷ்டப்படக்கூடாது என்ற எண்ணத்தில் மகன் நன்றாக படித்து எம் பி ஏ பட்டம் பெற்று, நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்படும் ஒரு நடுத்தரவர்க்க தந்தை, கொள்ளை கொள்ளையாக டொனேசன் வாங்கி, தாய் தந்தைக்கு டெஸ்ட் வைத்து, யூ கே ஜி குழந்தைக்கும் என்டரன்ஸ் வைத்து, ஒழுங்காக படித்துக்கொடுக்காமல், மாணவனை மக்கு என்றும் - தமது பள்ளிக்கூடம் நூறு சதவீதம் மார்க் எடுக்கவேண்டும் என்ற சாதனை வெறியில் வகுப்பறையை சிறைக்கூடமாய் மாற்றும் கல்வி வியாபாரிகள் இவர்களுக்கிடையே நடக்கும் போராட்டம்தான்...அதை மிகைப்படுத்தாமல் நேர்மையான கதையாக சொல்லி இருக்கிறார்கள்..
கோமாவில் கிடக்கும் சிறுவன், வெறும் சுற்றுப்புற சூழ்நிலையால் மட்டும் கோமாவில் இருந்து மீளுகிறான் என்று வழக்கமான சினிமாத்தனம் இல்லாமல், ஒரு அறுவை சிகிச்சைமூலமாக அவன் சுயநினைவுக்கு திரும்புவது என்று யதார்த்தமாகவும் சொல்லி இருக்கிறார்கள்.
இறுதிக்காட்சிகள் - முதலமைச்சரை கதாநாயகன் ஒரு போது நிகழ்ச்சியில் சந்தித்து, நியாயம் பெறுவது சற்று சினிமாத்தனமாக பட்டாலும், ஒரு குத்தில் ஒன்பதுபேரை ச்ச்சைக்கும் மடத்தனத்திர்க்கு இது எவ்வளவோ மேல்...
கதையில் ஒரே ஒரு பெண்தான் இருப்பதாக தெரிகிறது...அவர் ஒரு விலைமாது என்று காட்டுவது கூட மிகவும் நாகரீமாக காட்டி இருப்பது வரவேற்கலாம்...
தோனி டெண்டுல்கர் போன்றவர்களை நாடு கடத்தணும், அவங்களுக்கென்ன, முன்னாடி ஒரு விளம்பரம் பின்னாடி ஒரு விளம்பரம் என்று கோடிகோடியாக சம்பாதிக்கிறார்கள் என்று யதார்த்தத்தை சொல்லும் ஒரு தந்தையாக பிரகாஷ் ராஜ் பிரமாத ராஜ்.
படத்தில் வரும் நீயா நானா நிகழ்ச்சி கண்களை குளமாக்குகிறது..அதைத்தொடர்ந்து வரும் சம்பவங்களும் படு எதார்த்தம்..
நூற்றிப்பது கோடியில் பதினொன்று பேர் மட்டுமே விளையாட வாய்ப்புகிடைக்கும் கிரிக்கெட்டுக்காக - படிப்பை இழக்கும் மாணவன் என்ற உறுத்தலை தவிர,
எனக்கு தெரிந்து, முதல் முதலான ஒரு உருப்படியான சினிமா இதுதான் என்று சொல்லலாம்..
இதுவரை ஏமாற்றி வந்த தமிழ் இயக்குனர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டிருக்கிறது...
2 comments :
உண்மை. படம் அருமையாக உள்ளது.
அருமையான திரைப்படம் !
பிள்ளைகளின் போக்கிலேயும் விடமுடியாதே !
பள்ளிகளின் தற்கால நிலை பற்றி சொல்லிருப்பது அருமை !
எல்லாமே ஒரு அளவுக்குள் வரம்பு மீறாமல் சொல்லப்பட்டுள்ளது !
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?