Pages

Monday, October 14, 2013

நய்யாண்டி - விமர்சனம்...

எனக்கு சினிமா பார்ப்பதில் அவ்வளவாக ஆர்வமும் கிடையாது, நேரமும் கிடையாது.


ஆனாலும், ஒருவித எதிர்பார்ப்புடன் (நீங்களாகத் தொப்புளை நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பாகமுடியாது)..…..

நையாண்டி படத்தையும் நஸ்ரியாவையும் பார்த்துவிடுவது என்று முடிவெடுத்து- பார்த்துமாகிவிட்டது.

விளக்கைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் விழுந்த கதைதான்.

தனுஷுக்கு நஸ்ரியா மேல காதல். இவங்க ரெண்டு பேரும் சந்திச்சு, வழக்கம்போல நண்பர்கள் உதவியோட சினிமாத்தனம் பண்ணி…….. இவங்களுக்குள்ளே லவ் ஸ்டார்ட் ஆகிறதுக்குள்ள, நமக்குத் தூக்கம் ஸ்டார்ட் ஆகிடுது

ஒரு வழியாக் கல்யாணத்தை முடிச்சு வீட்டுக்கு வந்தா.... இன்னொரு பிராப்ளம். தனுஷுக்கு ரெண்டு அண்ணன்கள். நாற்பது வயசைத் தாண்டியும் கல்யாணம் ஆகாதவர்கள்.


அவங்களுக்கு மத்தியில….. நஸ்ரியாவைத் தன்னோட மனைவின்னு சொல்லாம வேறு பொய்யைச் சொல்லித் தங்கவச்சிட்டுப் பாத்தா……

மைதா மாவாட்டம் இருக்கிற நஸ்ரியாவைப் புரோட்டவாப் போட்டுச் சாப்பிட்டா எப்படி இருக்கும்கிற ஆசை அண்ணன்களுக்கு வத்துவிட….. தம்பி பதற….. கதை நத்தை மாதிரி நகறுது.

பாவம் நஸ்ரியா…. பாரம்பரியமிக்க, கட்டுக்கோப்பான ஒரு குடும்பத்திலிருந்து நடிக்க வந்த பெண் என்பதால்- தனுஷைக் கட்டிப்பிடிக்கிறார். முத்தம் கொடுக்கிறார். காமம் பொங்க ஒட்டி அணைக்கிறார். முழங்காலுக்கு மேலே புடவை பறக்க ஆடுகிறார். முன்னாலே பாடலுக்கு மட்டும் டூப் போடாத தொப்புளைக் காட்டுகிறார். மற்றபடி ஒன்றும் தப்பாக நடித்துவிடவில்லை.

படம் சரியான மொக்கை….. ஓடாது என்று உறுதியாகத் தெரிந்துகொண்டுதான்- தொப்புள் விளம்பரம் செய்திருப்பார்கள் போல.

படம் பார்க்க நினைப்பவர்கள்…..

பக்கத்துத் தியேட்டரில் ஓடும் ராஜா ராணிக்கோ அல்லது ஓநாயும் ஆட்டுக்குட்டிக்கோ போங்க….

தண்டணையிலிருந்து தப்பிச்சுக்கலாம்!.
 
(இது பேஸ்புக்கில் சுட்டது.....நான் படம் பார்க்கவில்லை...)

நன்றி - உதயசூரியன் (பேஸ்புக்)

1 comments :

Unknown said...

இவலுக்கு பாரம்பரியம் என்று சொல்லி தன் இமேஜ் வளர்க்க இவ்வாறு ஈபடும் நாய்கள்

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?