காவல் துறையை கேவலப்படுத்தும் இன்னொரு கேவலமான திரைப்படம்..
பொதுவாக ஒரு திரைப்படம பார்க்கக்போகும் முன்பு, விமர்சனங்களை, வலைத்தளங்களில் பார்த்துவிட்டுத்தான் போவேன்...
10 ஆம் தேதி ரிலீஸ் ஆன ஜில்லா மற்றும் வீரம் போன்ற திரைப்படங்களைப் பற்றிய விமர்சனங்கள், ஜில்லாவுக்கு வீரம் தேவலாம், ஆனால் இரண்டும் ஒரே கமெர்சியல் மசாலா எனபது போன்ற - பாசிடிவ் விமர்சனங்கலேதான் - மேதாவி விமர்சகர்கள் எழுதி இருக்கிறார்கள்...
இவர்கள் ஒரு நல்ல திரைப்படத்திற்கு என்ன அளவு கோள்களை வைத்திருக்கிறார்கள் என்பதுததான் நமக்கு விளங்கவில்லை....
இன்னமும் திரைப்படங்களை, அதுவும் தமிழ் திரைப்படங்களை ஒரு பொழுதுபோக்கு அம்சம், அதை அப்படித்தான் பார்க்கவேண்டும் என்று சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருக்க முடியாது...
இன்று தமிழ்நாட்டின் தலைஎழுத்தை சினிமாக்கள்தான் நிர்ணயித்துக்கொண்டிருக்கின்றன என்பதை அறிவுள்ள எவரும் ஒப்புக்கொள்வார்கள்...
ஆனால் பதிவுலகில் சில அதிமேதாவிகள், கூத்தாடிகளை, தலைவன் என்று ஏற்றுக்கொண்டிருக்கும் டாஸ்மாக் அடிமைகலான விசிலடிச்சான் கொஞ்சுகளின் மனநிலையை பிரதிபலிக்கும் விதமாகத்தான் விமர்சனங்கனில் கையாளுகிறார்களே தவிர தமது அறிவை சிறிதளவேனும் உபயோகப்படுத்துவதாக தெரியவில்லை...
விஜய் கலந்து கட்டியிருக்கிறார், அஜித் அமர்க்களப்படுத்தி இருக்கிறார், மோகன்லால் அற்புதமாக நடித்திருக்கிரார்ல் என்று உளறிக்கொட்டிக்கொண்டிருக்கிரார்களே தவிர, அவன் என்ன "எழவை" கதையாக சொல்லி இருக்கிறான் என்பதை இந்த டாஸ்மாக் அடிமைகள் கண்டு கொள்வதில்லை...
வில்லனான தந்தையை மகன் திருத்தும் ஆயிரத்து நூறாவது கதை இது வென்றாலும், அதுபோன்ற திரைப்படங்களில், தந்தை செய்வது தவறு என்றும், அதை இறுதிக்காட்சியில் அவன் உணர்ந்து தண்டனை அடைவது போன்றும் காட்டி இருப்பார்கள்....
ஆனால் இப்படத்தில், மோகன்லால் என்றொரு பிம்பம், அவன் தவறே செய்தாலும், நாமளும் அதை ஏற்றுக்கொள்ளும் விதமாக, அதை தவறு என்று உணரும் விதமாகக் கூட இல்லாமல், எல்லார் செய்வதும் சரிதான் என்று கேனத்தனமாக கதை யமைத்து, அதற்க்கு ஏகப்பட்ட பில்டப் கொடுத்தும், டாஸ்மாக் அடிமைகளை திருப்தி படுத்த மட்டுமே படம் எடுக்கும் இந்த சமுதாய துரோகிகளை என்ன செய்யலாம்?
கதாநாயகனும், அவனது தந்தையாக வருவோனும், மதுரையை ஆட்டிப்படைக்கும் பொறுக்கிகளாக - பெரிய மனிதராக காட்டி இருப்பது மட்டுமல்ல, பெரிய மனிதராக வரும் மோகன் லால், வீட்டில் அமர்ந்து "சுருட்டு" பிடிப்பதை தவிர வேறொன்றும் கிழித்ததாக தெரியவில்லை..
அவரது மகனாக வரும் விஜயும் - படம் முழுவதும் பொறுக்கிகளோடு சண்டை இடுவதும், கதானாகியில் பின் புறத்தை பிசைவதுமகத்தான் இருக்கிறான்..
படத்தில் வரும் அத்தனை போலீசாரும் மிகக்கேவலமாக சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்...
படத்தில் மோகன்லாலும், விஜயும் எல்லாரையும் அடிக்கிறார்கள், வெட்டுகிறார்கள், கொலை பண்ணுகிறார்கள், இவ்வளவையும் ஜாலியாக செய்துவிட்டு, ஒரு இடத்தில் கேஸ் வெடித்து விபத்து ஏற்பட்டதும், விஜய் மனம் திருந்துவதாக காட்டுவது - இயக்குனரின் மூளை வரட்சியையே காட்டுகிறது...
மினிஸ்டராக வரும் வில்லன், படம் முழுவதும், ஊர் பெரியமனிதர் வீட்டிலேயே உண்டுகொண்டு இருப்பதும் கேலித்தனமாக இருக்கிறது..
ஒருவனை குறுக்கு வழியில் போலீஸ்காரனாக்கும் மினிஸ்டரால், அவனை வேலையை விட்டு தூக்க முடியவில்லை எனபது, மூளையில்லாதவன் வேண்டுமானால் நம்பலாம்....
போலீஸ்காரன் ஆனதும், வீட்டை விட்டு வெளியேறும் கதாநாயகன் எங்கேதான் தங்கி இருக்கிறானோ தெரியவில்லை...
வில்லனை போட்டுத்தள்ளி விட்டு இறுதிக்காட்சியில் - மீண்டும், ஊர்பெரிய மனிதர் வீட்டுக்கே வந்து விடுகிறான்...
தமிழ்நாட்டுக்காரன் டாஸ்மாக் அடிமைதான் - இவனை சுலபமாக ஏமாற்றி கல்லா காட்டிவிடலாம் என்று பொறுக்கிகளை நாயகர்களாக ஆகும் அவலம் தமிழ் சினிமாவில் தொடர்ந்து கொண்டிருப்பது - கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய (?) டாஸ்மாக் தமிழ் அடிமைகளுக்குத்தான் அவமானம்....!!!
6 comments :
Sariyathan solli irukeenga
yes you are right ..... ayokkiyarkalai kathanayakarkalaka kaattuvathu intha cinima directarkale....
first cinema va tamilnadu la stop pananum apothan urupaduvanunga
பின்னூட்டமிட்டவர்களுக்கு நன்றி...
பின்னூட்டமிட்டவர்களுக்கு நன்றி...
entertainmentku.. evlo local la comments eazuthathinga.. ninga logic pakuringa.. engala mari meddil classku.. kashtam maraka.. nala entertainment.. rasana avanga avanga manasa poruthathu.. suthatamea nadanthalum cricket pakura vangaluku advice panunga...
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?