Pages

Friday, February 21, 2014

மனு நீதி சோழன் காலத்து மாடும் வைக்கோல் அரசியலும்..!!!

தீர்ப்பு எனபது நேர்மையாக இருக்கவேண்டும், நீதி எனபது பொதுவாக இருக்கவேண்டும்...அரசியல்  எனபது சேவையாக இருக்கவேண்டும் எனபது போய் கூட்டு மனசாட்சி, இனவெறி அரசியல் என்றாகி இன்று எல்லாமே சின்னாபின்னாமாகி கிடப்பது, அதைவைத்து விவாதம் என்ற பெயரில் ஊடகங்களும், அரசியல்வாதிகளும், தமிழ்பற்று வியாபாரிகளும் சம்பாதிக்கும் களமாகி விட்டதுதான் காலத்தின் அவலம்.

குற்றம் நிரூபிக்கப்படாத - கூட்டு மனசாட்சி அரசியல் காரணமாக அவசர அவசரமாக  தூக்கில் தொங்கவிடப்பட்ட அப்சல் குருவுக்கும், குற்றம் நிரூபிக்கப்பட்டு, கருணைமனுவும் நிராகரிக்கப்பட்ட அந்நிய பயங்கரவாத சக்திகளான விடுதலைப்புலிகளுக்கு மரணதண்டனை ரத்துசெய்யப்பட்டதற்கும் நியாயமான காரணம் என்ன? நீதியில் உறுதியாக இருப்பவர்கள் இருதரப்பு நியாயத்தையும் யோசிக்கவில்லை...தேவை தேர்தல் ஆதாயம்..காரணம் மொழி வெறி காரணமாகவும் மதவெறி காரணமாகவும் மக்கள் அவ்வாரு வார்தேடுக்கப்பட்டதை நீதிமன்றம்கூட தமக்கு சாதகமாக்கிகொள்ள, கொலைகாரர்களின் விடுதலையை தமிழர்களின் விடுதலையாக கொண்டாடுவதின்  அர்த்தம் நீதி வெற்றிபெற்றுவிட்டது என்பதை விட தமது மொழிவெறி அரசியல் வியாபாரம்  வெற்றிபெற்றுவிட்டது  எனபது தானே?

ராஜ்பக்ஷேவை தூக்கிலிட சொல்லும் இந்த வைகோல்கள், அதே குற்றத்தை - அல்ல அல்ல அதைவிட பயங்கரமான குற்றத்தை செய்த மோடியின் ஆசனவாயை நக்கிக்கொண்டிருப்பதும் அதே இனவெறி அரசியல் வியாபாரம்தான்....

மனுநீதி சோழனிடம் புகார் செய்த மாட்டுக்குகூட  ஆறறிவு  இருந்திருக்கலாம். ஆனால் கொலைகுற்றம் நிரூபிக்கப்பட்டவர்களை தியாகியாக்கத்துடிக்கும் இந்த கைக்கூலிகளுக்கு ஐந்தறிவு கூட  இருக்குமா எனபது சந்தேகம்தான்.....

கள்ளத்தோணியில் விடுதலைப்புலி பிரபாகரனை சந்தித்துவிட்டு வந்து - தான் சார்திருந்த திமுக ஆட்சி கவிழக் காரணமாக இருந்த வைக்கோல், பின்னாளில் ராஜீவ் காந்தி கொலைக்கும் காரணம் என்று சந்தேகிக்கப்பட்டவந்தான்...இன்று ராம்ஜெத் மலாநியுடன் லிப் டு லிப் உறவாடுகிறான்....செல்லாக்காசு தேசதுரோகிக்கு, இந்த விடுதலை ஒரு போதையாக போய் விட்டது....ராகுல்காந்திக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை என்று இந்த தேச துரோகி குரைக்கிறது..இவன் தந்தையையா இவனது விடுதலைப்புலிகளின்  தலைமை கொன்றது?


இப்போது குரைக்கும் இணையதள விடுதலைப்புலி கைகூலிகளும் ஒன்றை தெரிந்துகொள்ளவேண்டும்....

ராஜீவ் கொல்லப்பட்டதை நீங்கள் ஆதரித்து இருந்தால், அப்போதே தேர்தலில் உங்களது வாக்கு திமுகவிற்கு போயிருக்க வேண்டும்..அப்போது காங்கிரசை ஆதரித்துவிட்டு, இன்று திடீரென்று தமிழ்பற்று பொங்கி வழிவதின் காரணம்தான் என்ன? அடுக்கடுக்காய் ராஜீவ காந்திமீது குற்றம் சுமத்துவதன் நோக்கம்தான் என்ன?

ராஜீவ் காந்தியை கொன்றார்கள் என்பதை நிரூபித்த பின்னும், ராஜீவ் காந்தி இலங்கையில் அமைதிப்படையை வைத்து அநீதி இழைத்தார் என்பதைத்தான் இந்த தேச துரோகிகளின் குரைப்பாக இருக்கிறதே தவிர, - தமிழன் எந்த தவறும் செய்யாலாம், ஆனால் அவனை தண்டித்துவிடக்கூடாது என்பதிலும் இந்த தேச துரோகிகள் உறுதியாக இருக்கிறார்கள் என்றால் அதுவும் இல்லை...
இவர்கள் உண்மையாளர்கள் என்றால், இந்தியாவில் உள்ள அனைத்து தமிழ் கைதிகளையும் விடுவிக்க குரைத்திருக்கவேண்டும்....

அல்லது ஸ்ரீ சபாரத்தினம், அமிர்தலிங்கம், பத்மநாப உட்பட இன்னும் ஏராளமான தமிழர்கள் விடுதலைப்புலிகளால் கொலை செய்யப்பட்டார்களே அப்போதாவது தமிழனை கொன்றுவிட்டார்களே என்று குரைத்திருக்கவேண்டும்.... இதிலிருந்து தெரிகிறது  இவர்கள் உண்மையாக இல்லை...காசுக்கு மாரடிக்கும் தேச துரோகிகள்....

மோடியின் ஆசனவாயை இனிக்கிறது என்று குரைத்துக்கொண்டிருக்கும் வைக்கோலுக்கு ராஜபக்சேயின் குற்றம்தான் கண்ணுக்கு தெரிகிறது...


நீதி மன்றங்களும், கூட்டு மனசாட்சி, மதவெறி மற்றும் இனவெறி அரசியலுக்கு பலியாகி, அநீதி மன்றங்களாகி வருவதுதான் இந்தியாவின் சாபக்கேடு....



Saturday, February 8, 2014

கொலை வெறியனின் பிரச்சாரமும் ஊடக விபச்சாரமும்...

இதற்க்கு முன் ஒரு உதாரணத்தை சொல்லியே ஆக வேண்டியிருக்கிறது....

சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த "3"  என்ற திரைப்படத்தின் "ஒய் திஸ் கொலைவெறி" என்ற பாடல் மிகப்பிரபலமாக இருந்தது....

படம் வெளிவருவதற்கு  முன்பே அப்படத்தின் "ஒய் திஸ் கொலைவெறி" என்ற பாடல் யு டியூபில் கோடிக்கணக்கான மக்கள் பார்த்து விட்டார்கள் என்பதால் ஒவ்வொரு தமில்ழனும் அந்த பாடலை கேட்க வேண்டிய கட்டயத்திற்கு ஆளாக்கப்பட்டான்....

காப்பியடித்தே பழக்கப்பட்ட டாஸ்மாக் தமிழன் தனது பங்குக்கு அந்த பாடலை மீண்டும் பாடி படமெடுத்து யு டியூபின் வெளியிட்டு புலங்காகிதமடைந்தான்..இதற்காகவே காத்திருந்த ஆபாச பத்திரிக்கைகள் இந்த பாடலுக்கேன்றே தனி கட்டுரைகள் வெளியிட்டு ஊடக விபச்சாரத்தில் ஈடுபட்டன....அந்த பாடலுக்கு இசையமைத்தவன், பாடியவன், எழுதியவன் (?) கூட உட்கார்ந்து ஓசியில் டீ குடித்துக்கொண்டிருன்தவன் என்று ஒருத்தனை விடாமல் பேட்டி எடுத்து பக்கங்களை நிரப்பி டாஸ்மாக் தமிழனிடம் விற்று காசு பார்த்தன...

ஆனால், படம் வெளிவந்து கால் மணி நேரத்திலேயே - அந்த படம் ஊற்றிக்கொண்டது மட்டுமல்ல, இந்த பாடலையா இவ்வளவு கொண்டாடினோம் என்று ஒவ்வொருவனும் நொந்து போகும் அளவு இருந்தது....

அப்படித்தான் இருக்கிறது இந்த கொலைகார வெறியன், பயங்கரவாத பன்றி மோடிக்கு இங்குள்ள ஊடக விபச்சார பன்றிகள் கொடுக்கும் முக்கியத்துவம்...

இவன் இதுவரை என்ன கிழித்துவிட்டான் என்று அவனை இப்படி கொண்டாடுகின்றன இந்த ஊடக விபச்சார பன்றிகள்?

முஸ்லிம்களை கொன்றதை தவிர அவன் வேறு எந்த விதத்தில் பிரபலமாகி விட்டான்?

குஜராத் முன்னேறிவிட்டது என்று கதையளக்கும் சங் பரிவார பன்றிகளுடன் சேர்ந்து ஊளையிடும் விபச்சார ஊடக பன்றிகளே, அப்படியென்றால் மற்ற சில மாநிலங்களிலும் இதே பி ஜே பி பயங்கரவாதிகளின் ஆட்சி நடக்கிறது....? அங்கெல்லாம் இந்த ஜடங்களின் ஆட்சி கேவலமானதாக இருக்கிறதா?

இவனை  பிரதம வேட்பாளன் என்ற அறிவிக்கக்கூடிய அளவுக்கு கேவலமான கட்சியாக இருக்கும் பயங்கரவாத பிஜேபி க்கு வால் பிடிப்பதின் காரணம்தான்  என்ன?

 இந்த பயங்கரவாத பன்றி போகும் இடமெல்லாம் சொல்லி வைத்தார் போல குண்டுகளையும் வெடிக்க வைக்கிறானே..அதுகூட உங்களது பன்றி மூளைக்கு உரைக்க வில்லையா?

போலி என்கவுண்டர்,  இளம்பெண்ணை வேவு பார்த்தது, 2002  குஜராத் கலவரத்தை தூண்டி விட்டு " ஓவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு" என்று இறுமாப்பாக பேசியது, பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் அகதிகள் முகாமில் இனப்பெருக்கம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று திமிராக குரைத்தது, இறந்த முஸ்லிம்களை காரில் சிக்கிய நாய் என்று விமர்சித்தது, இதையெல்லாம்  உங்களுக்கு பயங்கரவாத பன்றி மோடி போட்ட பிச்சை கண்ணை மறைத்து விட்டதோ?

இந்த பயங்கரவாத பன்றியின் ஒரு பொதுக்கூட்டம் தொடங்கும் நாளுக்கும் முன்பே, இந்த ஊடக நாய்களாகவே கணக்கிட்டு லட்சக்கணக்கில் மக்கள் கூடுவதாக செய்தி போடுவதன் மர்மம் என்ன?

இதற்கும் முன்னே அரசியல் புரோக்கர் வேளை பார்க்கும்  கோமாளி சோ வீட்டுக்கும், ஜெயலலிதா வீட்டுக்கும் ஓசி சாப்பாடு சாப்பிட இந்த பன்றி வரவில்லையா?

அப்போது இவனை எவனாவது சீண்டினானா?

 பத்திரிக்கைகளுக்கு பயங்கரவாத  பன்றிகள் பிச்சை போட்டவுடன் இந்த பன்றி புராணமாகவே ஒவ்வொரு ஊடகமும் நாற்றமெடுக்கிறது..

அல்லது இந்த பயங்கரவாத பன்றி மோடி  முஸ்லிம்களை திட்டமிட்டு கொன்றான் என்பதற்காகத்தான் இவனது காலை நக்குகிறோம் என்று  அறிவித்து விடுங்கடா பத்திரிகை மாமா பன்றிகளா...

இவனை இவ்வளவு தூரம் தாங்கி பிடிக்கும் ஊடக விபச்சார நாய்களுக்கு, நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் "ஒய் திஸ் கொலைவெறி" க்கு கிடைத்த அவலத்தை உங்களுக்கும் தரும்..அப்போதும் நீங்கள் சிறிதும் வெட்கமின்றி வெற்றி பெற்ற வேறு ஒருவனை தாங்கி பிடித்து உங்களது  "ஊடக விபச்சாரத்தை" கூச்சமின்றி தொடர்வீர்கள்.....

வாழ்க ஊடக விபச்சார தர்மம்....

Monday, February 3, 2014

தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்கோர் குணமுண்டு...


கரகாட்டகாரன் படம் ஏன் ஓடுச்சு ?
கானா பாலா பாட்டு ஏன் ஹிட்டாகுது ? 
தெலுங்கு வருஷ பிறப்புக்கு தமிழ்நாட்ல ஏன் லீவு விடறாங்க? அப்போ ஏன் கன்னட வருஷ பிறப்புக்கு லீவு விடறதில்லை? 

பிரபுக்கு இந்த வயசுல எப்படி குழந்தை பொறந்துச்சு ?
மேட்டர், ஐட்டம் இதையெல்லாம் தமிழ்ல முழிபெயர்த்த அந்த புண்ணியவான் யாரு ?
லட்சகணக்கான பேரு வாங்குனா எர்வா மாட்டின்ல இருக்கறது எப்படி அரியவகை மூலிகை ஆகும்?
நாம எப்படி வானிலை அறிக்கை ரமணனையும், கலைஞரையும் இன்னமும் நம்பிட்டு இருக்கோம் ?
சூப்பர் சிங்கர் ஜட்ஜ்க அடிக்கடி சொல்ற அந்த சங்கதிக்கு அர்த்தம் என்ன?

பஸ்ஸ்டாண்டுல நாம பாக்குற பிகருக எல்லாம் எந்த ஆபீஸ்தான் போவாங்க? நம்ம ஆபீஸ்க்கு ஏன் வர்றதில்லை ?
ஹவுஸ்ஓனர் எல்லாருமே ஏன் சைக்கோவா இருக்காங்க ?

மூணேநாள் ஓடினதுமே ஜில்லாக்கு எப்படி கூச்சமே படாம வெற்றிவிழா கொண்டாடுனானுக?
கரன்ட்கட் பிரச்சினை எப்போ தீரும்?
சாருவுக்கு யாரு/ஏன்/எந்த நம்பிக்கைல அறிவு அழகன்னு பேரு வச்சாங்க?
டாஸ்மாக்ல பியர் எப்போ கூலிங்கா கிடைக்கும்?

-- இருக்குற இவ்ளோ குழப்பத்துக்கு நடுவிலும் சூப்பர் சிங்கர்ல யாருக்கு எப்படி ஓட்டு போடலாம்னு சிந்திச்சுட்டு பிஸியாவே வாழ்றவன்தான் (டாஸ்மாக்) தமிழன் ....

நன்றி : ரிலாக்ஸ் பிளீஸ் ...

Tuesday, January 14, 2014

தண்ணிகாட்டும் தண்ணிவண்டி...தவிக்கும் கட்டுமரம்..!


இப்படி ஒரு அவமானம் கருணாநிதிக்கு இதற்க்கு முன் ஏற்பட்டிருக்குமா எனபது சந்தேகம்தான்....

1984 அப்போதைய தமிழக முதல்வர் எம்ஜிஆர் - உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்....

தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட அந்த சமயத்தில், எம்ஜிஆர் உயிரோடு திரும்பி வருவாரா என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில்தான், கருணாநிதி, தனது பதவி ஆசையை பகிங்கரமாக தெரியப்படுத்தினார்...

இப்போது ஆட்சியை என்னிடம் கொடுங்கள்...எம்ஜிஆர் திரும்பி வந்ததும் அதை அவரிடம் ஒப்படைத்து விடுகிறேன் என்று, உலகத்தில் எந்த அரசியல்வாதியும் சொல்லாத வார்த்தைகளை உபயோகப்படுத்தி, மக்களிடம் கெஞ்சினார்....

"தமிழர்களே தமிழர்களே...என்னை நீங்கள் கடலில் தூக்கி எறிந்தாலும் அதில் நான் கட்டுமரமாக மிதப்பேன்...நீங்கள் அதில் ஏறி பயணம் செய்யலாம் " போன்ற வார்த்தை ஜாலங்கள் நிரம்பிய அவரது கெஞ்சல்கள் அந்த காலத்தில் மிகப்பிரபலம்...

இப்படி பதவி வெறி பிடித்து அப்போது கெஞ்சினாலும், அது அவரது  சக தோழர் - மற்றும் சம எதிரி (எம்ஜிஆர்) என்ற நிலையிலேயே - ஓரளவாவது ஏற்றுக்கொள்ளும்படி இருந்தது....

அனால் இன்றோ - அந்த கட்டுமரமாகிய கருணாநிதியின் நிலைமை படு கேவலமாக உள்ளது....பதவி வெறியும் குடும்ப அரசியலும் அந்த 90 வயது முதியவரை, எவ்வளவு கேவலமாக கொண்டு செல்ல முடியுமோ அவ்வளவு கேவலமாக கொண்டு  சென்று கொண்டிருக்கிறது....

முதலில் எம்ஜிஆருடன் போட்டிபோட்டு தோற்று கொண்டிருந்தவரின் நிலை பிறகு ஜெயலலிதா என்ற அளவிற்கு இறங்கி, இன்று விஜயகாந்தை கெஞ்சோ கெஞ்சு  என்று கெஞ்சுமளவிற்கு இறங்க வைத்துள்ளது அவரது பதவி வெறி....

தனது மகள் கனிமொழியை ராஜ்யசபா  எம்பி பதவிக்கு நிறுத்தும்போதே, - நிச்சயம் தோற்போம் என்று தெரிந்தே அவருக்கு எதிராக விஜயகாந்த் - தமது கட்சி வேட்பாளரை நிருத்தியபோதே மூக்குடைபட்ட போதும்,  -- ஏறத்தாழ (1996 -2013) பதினேழு ஆண்டுகள் மத்திய அரசில் அனுபவித்தபதவி  சுகம்,  பெற்ற மகனையே தூக்கி எறிய வைத்துள்ளது...

ஒருபக்கம் காங்கிரசுடன் கூட்டணி இல்லை - என்று சொல்லி விட்டு, குலாம் நபி ஆசாத்துடன் கூடிக்குலவுவது, - பயங்கரவாத பி.ஜே.பி யுடன் கூட்டணி இல்லை என்று - பயங்கரவாத பன்றி மோடியை புகழ்ந்து, ஜாடை காட்டுவது, - "விஜயகாந்த் கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி" என்று பட்ட அவமானத்தை துடைத்துவிட்டு  - தூது விடுவது போன்ற கேவலமான செயல்களால் மேலும் கேவலப்பட்டு நிறுக்கும் கருணாநிதி,  விஜயகாந்துடன், கூட்டணி வேண்டாம் என்ற காரணத்திற்காக தனது மகன் அழகிரிக்கே எச்சரிக்கை விடுகிறார் என்றால் இவரது பதவி வெறியை என்னவென்பது?

இவ்வளவு நடந்தும், விஜயகாந்த் - தமது முடிவை அறிவிக்காமல் இழுத்தடித்து கருணாநிதி என்ற கட்டுமரத்தை தவிக்கவிட , அதற்காக கருனாநிதி காத்திருக்க, இவ்வளவு அனுபவம் உள்ள அரசியல்வாதிக்கு இதைவிட ஒரு   கேவலம்  உண்டா?

வெறும் பசப்பு வார்த்தைகளாலும், பொருத்தமற்ற  ஜவ்வு போன்ற பதிலகளாலும், தமது அறுபது  ஆண்டுகால அரசியலை ஒட்டிவிட்ட கருணாநிதியால், - எதையும் துணிந்து சொல்லும் ஜெயலலிதாவின் அதிரடி அரசியலின் முன் தாக்குபிடிக்க முடியவில்லை என்பதே நிஜம்..

எல்லா எதிர்ப்புகளிலும் கம்பீரமாக நின்ற திமுகழகம் என்ற அந்த கட்டுமரம், இன்று - ஓட்டு வங்கி கணக்கில், தண்ணி காட்டும் விஜயகாந்தின் கண்ணசைவுக்காக காத்திருப்பது  - அரசியல் எனபது இன்னும் சாக்கடைதான் என்பதை மேலும் மேலும் பறை சாற்றிக்கொண்டிருக்கிறது....

ராஜதந்திரம் எனபது கெஞ்சிக்கொண்டிருப்பது அல்ல.....கருணாநிதி ராஜ தந்திரியும் அல்ல....



Monday, January 13, 2014

ஜில்லா - பொறுக்கிகளின் ராஜ்ஜியம் .




காவல் துறையை கேவலப்படுத்தும் இன்னொரு கேவலமான திரைப்படம்..

பொதுவாக ஒரு திரைப்படம பார்க்கக்போகும் முன்பு, விமர்சனங்களை, வலைத்தளங்களில் பார்த்துவிட்டுத்தான் போவேன்...

10 ஆம் தேதி ரிலீஸ் ஆன ஜில்லா மற்றும் வீரம் போன்ற திரைப்படங்களைப் பற்றிய விமர்சனங்கள், ஜில்லாவுக்கு வீரம் தேவலாம், ஆனால் இரண்டும் ஒரே கமெர்சியல் மசாலா எனபது போன்ற - பாசிடிவ் விமர்சனங்கலேதான் - மேதாவி விமர்சகர்கள் எழுதி இருக்கிறார்கள்...

இவர்கள் ஒரு நல்ல திரைப்படத்திற்கு என்ன அளவு கோள்களை வைத்திருக்கிறார்கள் என்பதுததான் நமக்கு விளங்கவில்லை....

இன்னமும் திரைப்படங்களை, அதுவும் தமிழ் திரைப்படங்களை ஒரு பொழுதுபோக்கு அம்சம், அதை அப்படித்தான் பார்க்கவேண்டும் என்று சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருக்க முடியாது...

இன்று தமிழ்நாட்டின் தலைஎழுத்தை சினிமாக்கள்தான் நிர்ணயித்துக்கொண்டிருக்கின்றன என்பதை அறிவுள்ள எவரும் ஒப்புக்கொள்வார்கள்...

ஆனால் பதிவுலகில் சில அதிமேதாவிகள், கூத்தாடிகளை, தலைவன் என்று ஏற்றுக்கொண்டிருக்கும் டாஸ்மாக் அடிமைகலான  விசிலடிச்சான் கொஞ்சுகளின் மனநிலையை பிரதிபலிக்கும் விதமாகத்தான் விமர்சனங்கனில் கையாளுகிறார்களே தவிர தமது அறிவை சிறிதளவேனும் உபயோகப்படுத்துவதாக தெரியவில்லை...

விஜய் கலந்து கட்டியிருக்கிறார், அஜித் அமர்க்களப்படுத்தி இருக்கிறார், மோகன்லால் அற்புதமாக நடித்திருக்கிரார்ல் என்று உளறிக்கொட்டிக்கொண்டிருக்கிரார்களே தவிர, அவன் என்ன "எழவை" கதையாக சொல்லி இருக்கிறான் என்பதை இந்த டாஸ்மாக் அடிமைகள் கண்டு கொள்வதில்லை...

வில்லனான தந்தையை மகன் திருத்தும் ஆயிரத்து நூறாவது கதை இது வென்றாலும், அதுபோன்ற திரைப்படங்களில், தந்தை செய்வது தவறு என்றும், அதை இறுதிக்காட்சியில் அவன் உணர்ந்து தண்டனை அடைவது போன்றும் காட்டி இருப்பார்கள்....

ஆனால் இப்படத்தில், மோகன்லால் என்றொரு பிம்பம், அவன் தவறே செய்தாலும், நாமளும் அதை ஏற்றுக்கொள்ளும் விதமாக, அதை தவறு என்று உணரும் விதமாகக் கூட இல்லாமல், எல்லார் செய்வதும் சரிதான் என்று கேனத்தனமாக கதை யமைத்து, அதற்க்கு ஏகப்பட்ட பில்டப் கொடுத்தும், டாஸ்மாக் அடிமைகளை திருப்தி படுத்த மட்டுமே படம் எடுக்கும் இந்த சமுதாய துரோகிகளை என்ன செய்யலாம்?

கதாநாயகனும், அவனது தந்தையாக வருவோனும், மதுரையை ஆட்டிப்படைக்கும் பொறுக்கிகளாக - பெரிய மனிதராக காட்டி இருப்பது மட்டுமல்ல, பெரிய மனிதராக வரும் மோகன் லால், வீட்டில் அமர்ந்து "சுருட்டு" பிடிப்பதை தவிர வேறொன்றும் கிழித்ததாக தெரியவில்லை..

அவரது மகனாக வரும் விஜயும் - படம் முழுவதும் பொறுக்கிகளோடு சண்டை இடுவதும், கதானாகியில் பின் புறத்தை பிசைவதுமகத்தான் இருக்கிறான்..

படத்தில் வரும் அத்தனை போலீசாரும் மிகக்கேவலமாக சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்...

படத்தில் மோகன்லாலும், விஜயும் எல்லாரையும் அடிக்கிறார்கள், வெட்டுகிறார்கள், கொலை பண்ணுகிறார்கள், இவ்வளவையும் ஜாலியாக செய்துவிட்டு, ஒரு இடத்தில் கேஸ் வெடித்து விபத்து ஏற்பட்டதும், விஜய் மனம் திருந்துவதாக காட்டுவது - இயக்குனரின் மூளை வரட்சியையே காட்டுகிறது...

மினிஸ்டராக வரும் வில்லன், படம் முழுவதும், ஊர் பெரியமனிதர் வீட்டிலேயே உண்டுகொண்டு இருப்பதும் கேலித்தனமாக இருக்கிறது..

ஒருவனை குறுக்கு வழியில் போலீஸ்காரனாக்கும் மினிஸ்டரால், அவனை வேலையை விட்டு தூக்க முடியவில்லை  எனபது, மூளையில்லாதவன் வேண்டுமானால் நம்பலாம்....

போலீஸ்காரன் ஆனதும், வீட்டை விட்டு வெளியேறும் கதாநாயகன் எங்கேதான் தங்கி இருக்கிறானோ தெரியவில்லை...

வில்லனை போட்டுத்தள்ளி விட்டு இறுதிக்காட்சியில் - மீண்டும், ஊர்பெரிய மனிதர் வீட்டுக்கே வந்து விடுகிறான்...


தமிழ்நாட்டுக்காரன் டாஸ்மாக் அடிமைதான் - இவனை சுலபமாக ஏமாற்றி கல்லா  காட்டிவிடலாம் என்று பொறுக்கிகளை நாயகர்களாக ஆகும் அவலம் தமிழ் சினிமாவில் தொடர்ந்து கொண்டிருப்பது - கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய (?) டாஸ்மாக் தமிழ் அடிமைகளுக்குத்தான் அவமானம்....!!!

Tuesday, December 31, 2013

மூடர் கூடம் - முட்டாள்களின் தேசம்



சன் லைப் தொலைக்காட்சியில் பழைய படங்களை பார்ப்பது அலாதியான சுகம்தான்....
அப்படித்தான் எம்ஜியார் நடித்த  "நீரும் நெருப்பும்"  என்ற படமும், சிவாஜி கணேசன் நடித்த "திரிசூலம்" என்ற படமும் பார்க்க நேர்ந்தது....

அந்தகாலத்தில் சீரியசாய் பார்க்கப்பட்ட படங்கள் இன்று  விழுந்து விழுந்து சிரிக்கும்  விதாமாக இருப்பதுதான் வேடிக்கை...
நீரும் நெருப்பும் படத்தில் - இரட்டையர்களாக பிறந்த இரண்டு எம்ஜியாரில் அண்ணனனுக்கு அடித்தால் தம்பிக்கு வலிக்குமாம்...
அதிலும் அசோகனின் நடிப்பு உச்சக்கட்ட காமெடி....."இங்கே வாடா " என்று சொல்வதற்கு கூட 70 mm  அளவுக்கு வாயை இளிப்பது மகா கொடுமை...

ஆனால் எம்ஜியார் படங்களில் ஒரு குறிப்பிட்ட பார்முலாவை கடைபிடித்தே வந்து இருக்கிறார்...எக்காரணத்தை கொண்டும் தனது கைகளால் வில்லனை  - அவன் எப்படிப்பட்ட நரேந்திர மோடி (பயங்கரவாதி)யாக  இருந்தாலும்கூட தன்  கைகளால் கொலை செய்ய மாட்டார் ....ஒன்று அவனாக விபத்தில் சிக்கிக்கொள்ளவேண்டும்...அல்லது போலிஸ் கைது செய்து சட்டத்தின்படி தண்டிக்க படவேண்டும்...

அப்படித்தான் அவரது பெரும்பாலான திரைப்படங்களில் - இறுதிக்கட்ட காட்சியில், ஏராளமான டிரம்கள் அடைக்கப்பட்ட கிடங்குகளில் - சர்கஸ் போல குட்டிகாரணம் அடித்து போலிஸ் வந்தவுடன் அவைகள் கையில் ஒப்படைக்கும் வண்ணமாகதான் இருக்கும்...

வில்லன் என்பவன் எல்லாவிதமான அநியாயங்களும் செய்பவனாகவும், கதாநாயகன் என்பவன் தன்னை கடிக்கும் எறும்புக்கும் துரோகம் செய்யாதவனாகவும் - படங்களில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கான்பவனாகவுமே உருவாக்கம் செய்யப்பட்டார்கள்....(இந்த பார்முலா மட்டும் இன்றுவரை கடை பிடிக்கப்படுகிறது ) அதாவது கதா நாயகிகோ, அல்லது வேறு எவருகோ  பிரச்சினை எனில், படம் பார்த்துக்கொண்டிருக்கும் நாம் கூட கதாநாயகன் வரமாட்டான என்று நினைக்க வைக்கப்பட்டுள்ளோம்....இது தமிழனின் அனிச்சை செயலாகவே மாறிவிட்டது...அதன் தொடர்ச்சிதான் திராவிட இயக்கங்களின் வளர்ச்சி, அண்ணா , கருணாநிதி  எம்ஜி ஆர், ஜெயலலிதா போண்டோரால் முதல்வராக ஆக முடிந்தது... இன்னும் சினிமா கூத்தாடிகள்தான் நாளைய முதல்வராக வரவேணும் என்று டாஸ்மாக் அடிமைகளின் லட்சியமாகவும் ஆனது.....

உலகத்திலேயே நல்லவன் மற்றும் மாவீரன் கதாநாயகன் மட்டும்தான்   என்ற பிம்பம்  சிறிதளவு சிதைக்கப்பட்டது சிவாஜி கணேசனின் படங்களில்.
கோழையாகவும், முட்டாளாகவும் , குடிகாரனகாவும், திருடனாகவும் கதாநாயகன் இருக்கலாம் என்று சிவாஜி கணேசன் படங்களில் காட்சிபடுத்தப்பட்டன..அதை சிவாஜி படங்களில் மட்டும் ஏற்றுக்கொண்ட - மறத் (துப்போன)தமிழன்  - அப்படி எம்ஜியார் நடித்ததாலோ நிராகரிக்க தயங்கவில்லை...

போறபோக்கில் திரிசூலத்தை மறந்து விட்டேன்.....

சிவாஜிகணேசன் மூன்று வேடங்களில் நடித்து பெரிய வெற்றி பெற்ற படம் "திரிசூலம்"- 1980 களில்  மிக பரபரப்பாக பேசப்பட்ட படமும்கூட...

அதிலும் நாங்களெல்லாம் சிறு பிள்ளைகளாக  இருக்கும்போது, - சிறிய குதிரை வண்டிகளில் திரிசூலம் படத்திற்கான விளம்பரம் மிக பரப்பாக இருக்கும்.  "சிவாஜி - K.R. விஜயா "- தொலைப்பேசி காட்சிகளை பார்க்க தவறாதீர்கள் என்று விளம்பரம் செய்வார்கள்....

உணர்ச்சி பிழம்பாக சித்தரிக்கப்பட்ட அந்த காட்சியை சமீபத்தில் பார்க்கும்போது வந்த சிரிப்பை அடக்கவே முடியவில்லை....
"சுமதீ " என்று நடிகர்திலகம் சொன்னவுடன், டெலிபோன் ரிசீவரை தூக்கி போட்டு விட்டு அதைபிடிக்க முடியாமல் "K.R. விஜயா" துடிப்பது  நம்பர் ஒன்  நகைச்சுவை....

மீதி உள்ள இரண்டு சிவாஜிகள் அண்ணன் தம்பிகள்..அதில் ஒரு சிவாஜி குரும்புக்காரராம்...குறும்பு என்றால் முகத்தை அஷ்டகோணலாக அடிக்கடி மாற்றிகொள்ளவேண்டுமாம்...சகிக்க முடியவில்லை...
தனது தொப்பையை தூக்க முடியாமல் - காதல் காட்சிகளில் நடிப்பதை அந்தக்கால தமிழன் எப்படித்தான் சகித்துகொண்டானோ தெரியவில்லை....(அப்போது இப்போது உள்ளமாதிரி டாஸ்மாக் கடைகளும் அவ்வளவாக இல்லை...கள்ளுக்கடைகள்தான்  )

அதிலும் அந்த இறுதிக்காட்சி ..இதுபோன்ற வயிறுகுலுங்க வைக்கும் நகைச்சுவை காட்சி வேறு எந்த படத்திலும் வந்திருக்குமா எனபது சந்தேகமே...

இரண்டு சிவாஜிகளின் தாய் தந்தை, மற்றும் ஒரு சிவாஜியின் காதலி ஆகியோரை வில்லன்கள் கடத்திக்கொண்டு வைத்துக்கொண்டு, .மிரட்டுவார்கள்...அவர்களை காப்பாற்ற செல்லும் இரண்டு சிவாஜிகளும், "இரண்டு கைகள் நான்கானால் - இருவருக்கேதான் எதிர்காலம்" என்று பயங்கர ஜால்லியாக பாட்டுப்படிக்கொண்டு செல்வார்கள்.. தாய் தந்தையை காப்பாற்ற செல்லும் லட்சணம்...

படத்தின் காட்சிகள் டெல்லி மற்றும் காஷ்மீர் என்று சொல்லப்பட்டாலும், வில்லன், கதாநாயகன்,  கதாநாயகி,போலிஸ் என்று அனைவரும் தமிழில்தான் பேசிக்கொண்டு இருகிறார்கள்... ஒருவேளை  - ராஜ ராஜ சோழன் கிமு 25000 த்திலேயே காஷ்மீரை ஆண்டு கொண்டு தமிழை ஆட்சி மொழியாக்கி வைத்திருந்தானோ என்னவோ..யார் கேட்பது ..உட்டு  அடிக்க வேண்டியதுதானே....

இப்படி சிவாஜி எம்ஜியார் சகாப்த காலங்களிலேயே தொடர்ந்து  கமல் , ரஜினி என்ற கூத்தாடிகளின் காலங்களில் காதலில் காமத்தை அதிகம் வெளிப்படுத்துவதால் கமலஹாசன் காதல் மன்னன் என்னவும், சாராயத்தையும் , சிகரெட்டையும் பிரபலப்படுத்தி தமிழ்நாட்டு குடிகார இளைஞர்களை மேலும் பொறுக்கிகளாக மாற்றியதால் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் எனவும், தமிழக குடிகாரர்களாலும், ஆபாச பத்திர்க்கை நாய்களாலும் கொண்டாடப்பட்டனர்...

கமல், ரஜினி வரிசையை தொடர்ந்து, வில்லனாகவும், குடிகாரர்களாகவும் அறியப்பட்ட  விஜயகாந்த்,சத்யராஜ் போன்றோர்கள் மக்களுக்கு நல்லது செய்யும் உத்தமர்களாக - அதாவது குடிகாரனாக இருந்தாலும், திருடனாக இருந்தாலும், கொலைகாரனாக இருந்தாலும்,  - கதாநாயகன் என்றால் அவன் செய்யும் அனைத்தும் மக்கள் நலனுக்காகவே என்று முட்டாள் தமிழன் மூளை சலவை செய்யப்பட்டான்....

அந்த ஊடக பயங்கரவாதத்தின் தொடர்ச்சிதான், இன்று டாஸ்மாக்கில்  மூழ்கி,அரிவாளை தூக்கிக்கொண்டு வீரவசனம் பேசும் பொறுக்கிகள்தான் படத்தை தாங்கும் கதாநாயகனாகவும், அவனை உருகி உருகி காதலிக்கும் கதாநாயகி பேரழகியாகவும், இருக்கிறார்கள்....

2013 ஆம் வருஷத்தின் டாப் 10 மனிதர்கள் என்றதலைப்பில் - நீதிபதி சந்துரு அவர்களை குறிப்பிடும் அதே ஆபாச விகடன்,  "சிவகார்த்திகேநயன் என்ற கூத்தாடியையும் அதே லிஸ்டில் கொண்டு வந்து தனது ஆபாச அரிப்பை தீர்த்து கொண்டிருக்கிறான்...

NDTV  எனும் மிகக்கேவலமான டிவி சேனல் - சிறந்த மனிதர் என்று குடிகார கூத்தாடிகள்  ரஜினி, ஷாருக்கான் போன்றவர்களுக்கு இந்தியாவின் ஜனாதிபதியை வைத்து விருது வழங்கி தனது விபச்சார புத்தியை வெளிச்சம் போட்டு காட்டுகிறான்.

ஒரு வருட இறுதி என்றாலே சினிமாதான் என்று தமிழனை மூளைச்சலவை செய்து அவனை மூடனாக்கி கொண்டிருக்கும் ஆபாசப்பத்திரிக்க்காகளும் இந்த முட்டாள் தேசத்தின் நான்காவது தூணாக ஆராதிக்கப்படும் அவலத்தை என்னவென்று சொல்லலாம்?

தாம் செய்வது தேச துரோகம் என்று கூட விளங்காமல், விடுதலைப்புலி பயங்கரவாதிகளுக்காக ஊளையிடும்  தன்மான(மிழந்த) தமிழன்,  சாலைகளில் சக தமிழனைப் பார்த்து முதலில் பேசும் வார்த்தையே "ங்கோ ...தா....தே .....யலே  " என்ற தமிழ் தேசிய வார்த்தைகள்தான் என்பதை  எத்தனை டாஸ்மாக் அடிமைகள் உணர்ந்திருக்கிறார்கள்?

இதோ தமிழ்பற்றை வளர்க்க, 2014 ஆங்கிலப்புத்தாண்டை வரவேற்க டாஸ்மாக் கடைகளை நோக்கி விரைந்து விட்டான் மரத்துப்போன தமிழன்.....

நாளைமுதல் குடிக்கமாட்டேன் என்று சபதமெடுக்க போகிறான்....
கோவில்களிலும் சர்ச்சுகளிலும் அதிகாலையிலேயே நின்று தனது பக்தியை வெளிப்படுத்திவிட்டு எப்போதடா மாலை வரும் டாஸ்மாக் கடைக்கு செல்லாமாமே என்ற எண்ணத்தில் புத்த்டாண்டை துவக்கும் அனைத்து டாஸ்மாக் தமிழனுக்கும் .....WISH YOU HAPPY NEW YEAR.. வாழ்க தமிழ்....


Tuesday, December 24, 2013

போதையில் கரையும் தமிழ் சினிமா... !தள்ளாடும் தமிழகம்




சமீபத்தில் வெளிவந்த சூது கவ்வும் படத்தில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கையில் ஒருவன் சொல்வான். மணி ஒன்பது அம்பதாச்சு. பத்து மணிக்கு கடை மூடிருவான்.

தியேட்டரில் ஒரே விசில் சத்தம், கைத்தட்டல். உயிரே போனாலும் பத்து மணிக்குள் டாஸ்மாக்கில் சரக்கு வாங்க வேண்டும் என்ற அவனின் சின்சியாரிட்டிக்கு ரசிகர்கள் செய்த மரியாதைதான் அந்த விசிலும், கைத்தட்டலும். 



அதிக ரசிகர்களை ஈர்க்க வேண்டும், கமர்ஷியலாக பல மடங்கு லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில்தான் இங்கு படங்கள் எடுக்கப்படுகின்றன. அதிக சிரமமில்லாமல் தங்களின் நோக்கத்தை நிறைவு செய்யவே ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள். அந்தவகையில் எளிதாக ரசிகர்களை பரவசப்படுத்த இயக்குனர்கள் இப்போது அதிகம் நம்புவது டாஸ்மாக் காட்சிகளைதான். பிராந்தி பாட்டிலை காண்பித்தாலே திரையரங்குகள் ஆர்ப்பரிக்கின்றன.

இருபது வருடங்களுக்கு முன் குடி ஒரு மோசமான செயலாக நமது சமூகத்தில் பார்க்கப்பட்டது. அன்று திரைப்படங்களில் குடி என்பது ஒருவரின் குணத்தை வெளிப்படுத்தும் விஷயமாக கையாளப்பட்டது. அதாவது வில்லன்கள் மட்டுமே எப்போதும் மதுக்கோப்பைகளுடன் இருந்தார்கள். கதாநாயகன் தவறு செய்வதாக காட்சி வந்தால் குடி போதையில் அந்தத் தவறை செய்வதாக காட்டினார்கள். அதாவது போதைதான் அவனை தவறு செய்ய வைத்தது என்பதாக. நடைமுறை வாழ்க்கையிலும் இன்று போல் குடி இயல்பான ஒன்றாக ஆகியிருக்கவில்லை. குற்றவுணர்வுடனே மதுவிடுதிகளை அன்று நாடினர்.

கடந்த இருபது ஆண்டுகளாக நம்மை ஆண்டவர்கள் மதுவை ஒரு அத்தியாவசிய பண்டமாக ஆக்கிவிட்டார்கள். ஒரு தலைமுறையை குடிகாரர்களாக மாற்றிய பெருமை இரு திராவிட காட்சிகளுக்குமே உண்டு. சமூக அளவில் மது குறித்து இருந்த மனத்தடைகளையும், குற்றவுணர்வுகளையும் தெருவுக்கு தெரு முளைத்திருக்கும் டாஸ்மாக் கடைகள் இல்லாமலாக்கிவிட்டன. குடி இன்று ஒரு தவிர்க்க முடியாத பழக்கமாகிவிட்டது.

1983ல் மது விற்பனை 180 கோடியாக இருந்தது. இருபது வருடங்களில் அதாவது 2003ல் அது 3,600 கோடியாக உயர்ந்தது. 2013ல் 22,000 கோடிகள். உலகில் எந்தவொரு வியாபாரமும் இப்படியொரு வளர்ச்சியை கண்டதில்லை. தமிழகத்தைவிட ஒன்றரை மடங்கு ஜனத்தொகை கொண்ட உத்திரப்பிரதேசத்தில் மதுவினால் கிடைக்கும் வருவாய் 11,500 கோடிகள். தமிழகத்தில் அதுவே 22,000 கோடிகள். தமிழ்நாட்டின் குடிவெறிக்கு இதுவொரு சின்ன உதாரணம். 


குடியே கூடாது என்று சொல்லும் ஒழுக்கவாதியோ, மதுவை அறவே தவிர்க்க வேண்டும் என்று சொல்லும் காந்தியின் லட்சியவாதியோ கிடையாது நாம். அதேநேரம் இந்தப் பழக்கத்தின் அசுர வளர்ச்சி அச்சப்படுத்துகிறது. 

குடி ஒரு பழக்கமாகிவிட்டது என்றோம். அதுதான் பிரச்சனையின் அடிப்படை. பழக்கம் என்பது நாம் சிந்தித்து நடைமுறைப்படுத்துவது இல்லை. அது நம்மையறியாமல் நம்மிடம் ஒட்டிக் கொள்வது. இருபது வருடங்களுக்கு முன் மெழுகுவர்த்தி ஊதி அணைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவது அரிது. ஆனால் இன்று அந்த சம்பிரதாயத்தை கடைபிடிக்காத குடும்பங்களே இல்லை. 

கேக், மெழுகுவர்த்தியுடன் தலையில் வைக்கும் குல்லா முதற்கொண்டு அதற்கான எக்ஸ்ட்ரா தளவாடங்கள் விற்பனை இன்று மிகப்பெரிய சந்தையாக உருவெடுத்திருக்கிறது. இன்று நாம் விரும்பாவிட்டாலும் அந்த சம்பிரதாயத்தை செய்ய வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கிறோம். பழக்கத்தினால் வரும் முக்கியப் பிரச்சனையே அதுதான். நாம் விரும்புகிறோமா இல்லையோ அதை நாம் செய்ய பழக்கப்படுத்தப்படுகிறோம்.



இன்று குடியை நாடும் பெரும்பாலான இளைஞர்கள் குடியை தேர்ந்தெடுத்தவர்கள் என்பதைவிட குடிக்கு பழக்கப்படுத்தப்பட்டவர்கள் என்பதுதான் சரி. சென்ற தலைமுறையை ஓரளவு குடிப்பழக்கத்திலிருந்து தடுத்தது, சமூகம் குடி குறித்து உருவாக்கி வைத்திருந்த, குடி மோசமான செயல் என்ற மதிப்பீடும், அந்த மதிப்பீடு உருவாக்கிய குற்றவுணர்வும்தான். அதனை இல்லாமல் செய்ததில் கடந்த இருபதாண்டுகளாக நம்மை ஆண்டவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 

சினிமாவுக்கும் அதில் கணிசமான பங்குண்டு. நிஜத்தைதானே சினிமாவில் காண்பிக்கிறார்கள் என்று சப்பைகட்டு கட்ட முடியாது. நிஜத்தை சினிமா பிரதிபலிக்கிறதா இல்லை சினிமாவைப் பார்த்து நிஜத்தை உருவாக்குகிறார்களா என்பது பதில் கிடைக்காத கேள்வி. ஆறு இரு கரைகளையும் இணைக்கிறதா இல்லை பிரிக்கிறதா என்பது போல. கரைகளை பிரிப்பதும் ஆறுதான், இணைப்பதும் ஆறுதான். குடி விஷயத்தில் யதார்த்தமும், சினிமாவும் ஒன்றையொன்று ஒத்திசைந்து தம்மை வலுப்படுத்திக் கொண்டன என்றுதான் சொல்ல வேண்டும்.

சென்ற தலைமுறை சினிமாவில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கிற, கொலை செய்கிற வில்லன்கள்தான் மது அருந்தினார்கள். மது கெட்ட மனிதனின் அடையாளமாக இருந்தது (குடிப்பவர்கள்தான் மோசமானவர்கள் அல்லது மோசமானவர்கள்தான் குடிப்பார்கள் என்ற அந்தக்கால சினிமா பார்வையிலும் நமக்கு உடன்பாடில்லை). பருந்து பார்வையில் சொல்வதானால் ஒருவன் கெட்டவன் என்பதை காண்பிக்க அவன் கையில் மதுக்கோப்பையை தந்தார்கள். ஆனால் இன்று காட்சிகள் மாறிவிட்டன. படத்தின் ஆரம்பத்தில் கதாநாயகன் அறிமுகமாவதே டாஸ்மாக் கானா பாடலில்தான்.

படத்தில் வரும் இளைஞன் ஏதாவது சாதித்தால் டாஸ்மாக்... காதலில் வெற்றி பெற்றால் டாஸ்மாக்... தோல்வி அடைந்தால் டாஸ்மாக்... காமெடி என்றால் டாஸ்மாக்... கானா பாடல் என்றால் டாஸ்மாக்... விழுந்தாலும் எழுந்தாலும் டாஸ்மாக். இன்றைய இளைஞனின் தவிர்க்க முடியாத உறுப்பாக டாஸ்மாக்கை மாற்றிவிட்டது தமிழ் சினிமா.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பிய நிகழ்ச்சியில் விளம்பரங்கள் எப்படி நம்மை கன்ஸ்யூமராக மாற்றுகிறது என்பது பற்றி அலசப்பட்டது. அதில் பேசிய ஒரு இளம்பெண், சாக்லெட்டை கண் மூடி சுவைப்பதை பெருமையாக குறிப்பிட்டார். விளம்பரத்தில் கண்களை மூடி சாக்லெட்டை சுவைக்கும் பெண்ணை அவர் இமிடேட் செய்கிறார் என்பதுகூட அவருக்கு தெரிந்திருக்கவில்லை. 

அந்த இளம்பெண்ணைப் போல இன்னதென்று அறியாமலே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிற இளைஞர்கள்தான் இன்று அதிகம். சிந்தித்துப் பார்க்காமல் எதையும் சுவீகரித்துக் கொள்ளும் சமூகத்தை குடியிலிருந்து ஓரளவு தடுத்து நிறுத்துவது குடி குறித்த குற்றவுணர்வுதான். அந்த குற்றவுணர்வை நமது சினிமா இல்லாமலாக்கிவிட்டது. அதற்கு முக்கிய காரணம் குடியை ஒரு கொண்டாட்டமாக மட்டுமே இதுவரை தமிழ் சினிமா காட்டியிருக்கிறது. அதன் இன்னொரு பக்கத்தை காட்டியதில்லை. குடி குறித்த குற்றவுணர்வை இல்லாமலாக்கியதற்கான பரிசுதான் திரையரங்குகளில் டாஸ்மாக் காட்சிகளுக்கு கிடைக்கும் விசிலும் கைத்தட்டல்களும்.



தமிழ் சினிமாவுடன் ஒப்பிட்டால் வேறு எந்த மொழி திரைப்படமும் இப்படி குடியில் விழுந்து கிடக்கவில்லை. பெரும் குடிகாரர்கள் நிறைந்த கேரளாவிலும்கூட குடி சம்பந்தமான காட்சிகள் கதையோட்டத்தின் தேவையை முன்னிறுத்தி மட்டுமே வைக்கப்படுகின்றன. குடிக்காக காட்சிகள் அமைப்பது தமிழ் சினிமாவில் மட்டும்தான். ஒரு பள்ளி மாணவன் எவ்வித உறுத்தலும் இன்றி டாஸ்மாக்கில் மது அருந்துவதற்கான மனப்பக்குவத்தை தந்ததில் தமிழ் சினிமாவுக்கு பெரும் பங்கு இருக்கிறது.


இருபத்தைந்தாயிரம் கோடி இலக்கு நிர்ணயித்து சாராயம் விற்கும் நாட்டில் குடி குறித்த குற்றவுணர்வை இனி எதிர்பார்ப்பதற்கில்லை. குடியை வைத்து கைத்தட்டல் வாங்குகிறோமே என்று ஏதாவது இயக்குனர்களுக்கு குற்றவுணர்வு ஏற்பட்டால்தான் உண்டு.