கரகாட்டகாரன் படம் ஏன் ஓடுச்சு ?
கானா பாலா பாட்டு ஏன் ஹிட்டாகுது ?
தெலுங்கு வருஷ பிறப்புக்கு தமிழ்நாட்ல ஏன் லீவு விடறாங்க? அப்போ ஏன் கன்னட வருஷ பிறப்புக்கு லீவு விடறதில்லை?
பிரபுக்கு இந்த வயசுல எப்படி குழந்தை பொறந்துச்சு ?
மேட்டர், ஐட்டம் இதையெல்லாம் தமிழ்ல முழிபெயர்த்த அந்த புண்ணியவான் யாரு ?
லட்சகணக்கான பேரு வாங்குனா எர்வா மாட்டின்ல இருக்கறது எப்படி அரியவகை மூலிகை ஆகும்?
நாம எப்படி வானிலை அறிக்கை ரமணனையும், கலைஞரையும் இன்னமும் நம்பிட்டு இருக்கோம் ?
சூப்பர் சிங்கர் ஜட்ஜ்க அடிக்கடி சொல்ற அந்த சங்கதிக்கு அர்த்தம் என்ன?
பஸ்ஸ்டாண்டுல நாம பாக்குற பிகருக எல்லாம் எந்த ஆபீஸ்தான் போவாங்க? நம்ம ஆபீஸ்க்கு ஏன் வர்றதில்லை ?
ஹவுஸ்ஓனர் எல்லாருமே ஏன் சைக்கோவா இருக்காங்க ?
மூணேநாள் ஓடினதுமே ஜில்லாக்கு எப்படி கூச்சமே படாம வெற்றிவிழா கொண்டாடுனானுக?
கரன்ட்கட் பிரச்சினை எப்போ தீரும்?
சாருவுக்கு யாரு/ஏன்/எந்த நம்பிக்கைல அறிவு அழகன்னு பேரு வச்சாங்க?
டாஸ்மாக்ல பியர் எப்போ கூலிங்கா கிடைக்கும்?
-- இருக்குற இவ்ளோ குழப்பத்துக்கு நடுவிலும் சூப்பர் சிங்கர்ல யாருக்கு எப்படி ஓட்டு போடலாம்னு சிந்திச்சுட்டு பிஸியாவே வாழ்றவன்தான் (டாஸ்மாக்) தமிழன் ....
நன்றி : ரிலாக்ஸ் பிளீஸ் ...
1 comments :
// நம்ம ஆபீஸ்க்கு ஏன் வர்றதில்லை//
"நான் வேலைக்கு போறேன்" ங்கறதை இப்படி கூட சொல்லலாமா
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?