Pages

Tuesday, January 4, 2011

வருங்காலச் சந்ததியினரைப் பற்றிய கவலையே நமக்கு வேண்டாமா?

 பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறையுங்கள் என்று எச்சரித்தால், மனித இனம் வசதியாக வாழ்வதைப் பார்க்கப் பிடிக்காத வயிற்றெரிச்சல் வாதிகள் என்பதுபோன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள், பல்லாயிரம் கோடி ரூபாய் லாபமீட்டும் எண்ணெய் நிறுவனங்கள்.

 இயற்கையுடன் விளையாடத் தொடங்கி இருக்கிறோம். ஒருசில தலைமுறைகள் மனித இனம், அதிலும் ஒரு சிறிய விழுக்காடு மட்டும், வசதியாக வாழ்வதற்காக வருங்கால உலகத்தையே பாலைவனமாக்கும் முயற்சி அரங்கேறி வருகிறது. இதன் விளைவுகள் தெள்ளத் தெளிவாகத் தெரியத் தொடங்கிய பின்னும்கூட மனிதன் சுதாரித்துக் கொண்டு, வசதிகளைச் சுருக்கிக் கொண்டு வருங்காலத் தலைமுறையினரைக் காப்பாற்ற முன்வராமல் போனால் அதை என்னென்று கூறுவது? இந்த ஆண்டு ரஷியா இதுவரை காணாத வெப்பத்தால் பாதிக்கப்பட்டது. கடந்த 130 ஆண்டுகளில் இல்லாத வறட்சியால் பாதிக்கப்பட்ட ரஷிய நாட்டு மக்கள், ஏரிகள், நதிகள் என்று பெரும் திரளாகப் படையெடுத்துக் கோடை வெயிலின் வெப்பத்தை எதிர்கொள்ள முற்பட்டனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 233 பேர் நீரில் மூழ்கி இறந்திருக்கிறார்கள். பூமி வெப்பமடைதல் பொய்யென்றால், ரஷியாவில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தாக்குவானேன்?


இந்தியாவுக்கு வருவோம். இமயமலையில் பனிப்பாறைகள் உருகி, பனிச் சிகரத்தின் உயரம் கணிசமாகக் குறைந்து வருகிறதே, அது ஏன்? டேவிட் ப்ரிஷியர்ஸ் என்கிற அமெரிக்கர் 1983-லிருந்து ஐந்து தடவை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிச் சாதனை படைத்தவர். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியபோதெல்லாம் இமயமலையையும், அதன் பனிப்பாறைகளையும், சிகரங்களையும் தனது கேமராவில் பதிவு செய்து வைத்திருப்பவர். பனிச்சிகரங்களின் உயரம் குறைந்து வருவது அவருக்கு அதிர்ச்சி அளித்ததால், முன்பு எந்த இடத்திலிருந்து ஒரு சிகரத்தைப் படம் பிடித்தாரோ அதே இடத்திலிருந்து மீண்டும் படமெடுத்துப் பதிவு செய்து பார்த்தவருக்கு ஒரே அதிர்ச்சி.

சுமார் நாற்பது மாடிக் கட்டடம் நான்கு மாடிக் கட்டடமாகச் சுருங்கினால் எப்படி இருக்கும், அதுபோல பல பனிச் சிகரங்கள் சுருங்கி இருப்பதை டேவிட் ப்ரிஷியர்ஸ் ஆவணங்களுடன் பதிவு செய்திருக்கிறார். ருங்பெக் பனிச் சிகரம் செங்குத்தாக சுமார் 330 அடி உயரம் குறைந்திருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறார்.

இமயமலையிலுள்ள பல பனிச் சிகரங்கள் அசுர வேகத்தில் சுருங்கத் தொடங்கி இருப்பதை சீன ஆய்வு மையம் உறுதிப்படுத்தி இருக்கிறது. எவரெஸ்ட், கஞ்சன்ஜங்கா போன்ற பனிச் சிகரங்கள் ஆண்டுக்கு 26 அடி உயரம் குறைந்து வருவதாகத் தெரிகிறது. இதற்கு மூல காரணம் அளவுக்கு அதிகமாகக் கட்டுப்பாடற்ற முறையில் வெளியேற்றப்படும் கரியமில வாயு. வளர்ச்சி என்கிற பெயரில் காடுகள் அழிக்கப்படுவதால், வெளியேற்றப்படும் கரியமில வாயுவை உள்வாங்க இயற்கையால் முடியாமல் போகிறது. காற்று மண்டலத்தில் வியாபித்துவிட்டிருக்கும் கரியமில வாயுவால் வானமண்டலமே வெப்பமடைந்திருக்கிறது. மேலும், காடுகள் அழிக்கப்படுவதால் மழையின் அளவு குறைந்து விட்டிருக்கிறது. பருவநிலையிலும் மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதன் விளைவாக, உருகும் பனியை ஈடுகட்டும் அளவுக்கு குளிர்காலத்தில் பனி உறைவது இல்லை. மேலும், பெட்ரோல், டீசல் புகையிலிருந்து வெளியேறும் கரியமில வாயு பனிச் சிகரங்களில் படர்வதால் வழக்கத்தைவிட அதிகமாக பனிச்சிகரம் உருகிவிடுகிறது; பனி உறைவதும் இல்லை.

புவி வெப்பமடைதல், பனிச் சிகரங்கள் உறைதல் போன்றவைகளின் தொடர்ச்சியாக நாம் சந்திக்கப் போகும் சவால் இன்னொன்றும் இருக்கிறது. விவசாயம் பெரிய அளவில் பாதிக்கப்பட இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. கடந்த மாதம் வெளியாகி இருக்கும் "சயன்ஸ்' இதழ், இதன் தொடர்விளைவுகள் சிந்து மற்றும் பிரம்மபுத்ரா நதிகளைப் பெரிய அளவிலும், கங்கை, சீனாவில் பாயும் மஞ்சள் நதி மற்றும் யாங்க்ட்ஸ் நதிகளை சிறிய அளவிலும் பாதிக்கக் கூடும் என்று எச்சரிக்கிறது.

சிந்து மற்றும் பிரம்மபுத்ரா சமவெளிப் பகுதிகளில் வாழும் ஏறத்தாழ 60 கோடி மக்களின் உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் தன்மையது இந்த பனிச் சிகரங்கள் உருகும் போக்கு என்பதை நாம் உணர்வதாகவே தெரியவில்லை. எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாடுகளையும், குறிக்கோளையும் நிர்ணயிப்பது பல பில்லியன் டாலர் லாபம் மட்டுமே. பெருவாரியான மத்தியதர, மேல் மத்தியதர, பணக்கார மக்களின் எண்ணப்போக்கை நிர்ணயிப்பது இன்று அனுபவிக்கும் கார், ஏ.சி., குளிர்பதனப் பெட்டி, விமானம் போன்ற வாழ்க்கை வசதிகள் மட்டுமே.

"எப்போதோ வரப்போகும் ஆபத்தைப் பற்றி இப்போதே சிந்தித்துக் கவலைப்படுவது போன்ற முட்டாள்தனம் இருக்க முடியுமா? புவி வெப்பமடைதல், கரியமில வாயு, பனிச் சிகரங்கள் உருகுதல் என்றெல்லாம் இந்த எதிர்மறைச் சிந்தனையாளர்கள் ஏன் பயமுறுத்த வேண்டும்? நாம் அப்போது உயிரோடு இருக்கப் போகிறோமா? இருப்பதுவரை சுகமாக வாழ்வதை அனுபவிப்பதை விட்டுவிட்டு ஏன் நாளையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்'' என்று கேட்பவர்களிடம் ஒருகேள்வி-உங்களுக்கெல்லாம் குழந்தைகள், பேரக் குழந்தைகள் கிடையாதா? வருங்காலச் சந்ததியினரைப் பற்றிய கவலையே நமக்கு வேண்டாமா?
 

Monday, January 3, 2011

எஸ் எம் எஸ் பயங்கரவாதம்..!

முதலில் ஒரு கதை (உண்மையான கதையாகக்கூட இருக்கலாம்..)



ஆங்கிலேயர் காலத்தில் அவர்கள் கம்பெனிகளில் வேலை செய்வோருக்கு முதலில் காபி, டீ போன்ற பானங்களை இலவசமாகவே கொடுத்து வந்திருக்கிறார்கள்...நாமும்தான் இலவசம் என்றால் போதுமே கணக்கு வழக்கு இல்லாமல் வாங்க தயங்கவே மாட்டோம்..


இப்போது கூட அரசு அலுவலகங்களில் பார்க்கலாம்,,டீ குடிப்பதற்கென்றே அரை மணி நேரம் எடுக்கும் பொறுப்பான அதிகாரிகள் நெறையபேர் இருக்கிறார்கள்..

இப்படி ரெகுலராக டீ, மற்றும் காபி கொடுத்து வந்தவர்கள் ஒரு நாள் திடீரென்று அவைகளுக்கு விலை நிர்ணயித்து விட்டார்கள்...

முதலில் அதற்கெல்லாம் காசு தரமுடியாது என்று மறுத்து குடிக்காமல் இருந்தவர்கள் கூட, அதை தவிர்க்க முடியாமல் காசு கொடுத்து டீ, காபி குடிக்கவேண்டிய சூழ்நிலையை ஆங்கிலேயன் ஏற்படுத்தி சென்று விட்டான்..


அதுபோலத்தான் எஸ் எம் எஸ் என்று இன்று மொபைல் போனில் ஏறுபடுத்தி மக்களை எஸ் எம் எஸ் அடிமையாகி வைத்து இருக்கிறான்...

இப்போதெல்லாம் பண்டிகைக் காலங்களுக்கு ஒரு நாள் முன்போ அல்லது அதற்க்கு அடுத்த நாளோதான் எஸ் எம் எஸ் வாழ்த்துக்கள் வருகின்றன...




காரணம், சாதாரணமாக ஒரு எஸ் எம் எஸ்ஸுக்கு பத்து பைசா என்று offer கொடுக்கும் நிறுவனங்கள் இந்தமாதிரி விசேஷ தினங்களுக்கு கூடுதல் கட்டணங்களை வசூலிக்க ஆரம்பித்து விடுகின்றன..


இவ்வாண்டு தொடக்கத்தில் டிசம்பர் 31, 2010 - ஜனவரி 01, 2011 ஆகிய நாட்களில் அனுப்பப்படும் அனைத்து எஸ் எம் எஸ் களுக்கும் ஒரு ரூபாய் அல்லது ஒரு ருபாய் ஐம்பது காசு கட்டணம் நிர்ணயித்தன.


மொபைல் போன்களில் எஸ் எம் எஸ் அறிமுகப் படுத்திய கால கட்டங்களில் (அப்போது அவுட் கோயிங் கால்களுக்கு ருபாய் இரண்டும், இன்கமிங் கால்களுக்கு ரூபாய் ஒன்றும் இருந்ததது) முற்றிலும் இலவசமாகத்தான் இருந்தது..


பேசும் வசதிகளுக்கு கட்டணம் குறைய குறைய எஸ் எம் எஸ் அனுப்பும் வசதிக்கு கட்டணம் நிர்ணயிக்க ஆரம்பித்து, மக்களை அதற்கு முழுமையான அடிமையாக்கி வைத்திருக்கிறார்கள்..
அதிகமதிகம் எஸ் எம் எஸ் வாழ்த்துக்கள் அனுப்பப்படும் பண்டிகைக் காலங்கள், புத்தாண்டு போன்ற காலங்களில் எஸ் எம் எஸ் ஒன்றுக்கு ஒரு ரூபாய் என்று கட்டணம் வசூலித்து கொள்ளை லாபம் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்...



குறுந்தகவல்கள் பெரும்பாலும் தேவையற்ற செய்திகளாக இருந்தாலும் அதன் மூலம் இந்நிறுவனங்கள் கோடிக்கணக்கில் இலாபம் பார்கின்றன. புத்தாண்டு தொடக்கம், மற்றும் பண்டிகைக் காலங்களில் அனுப்பப்படும் கோடிக்கணக்கான தகவல்களில் பெரும் லாபம் ஈட்டிய இந்நிறுவனங்கள், இன்னும் பேராசைப் பட்டு அதிக கட்டணம் நிர்ணயித்தன...


எனவேதான் இந்த ஆண்டு புத்தாண்டு வாழ்த்து தகவல்கள் மிகவும் குறைந்து காணப்பட்டது.



இது போக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்படும் மிக சாதாரணமான கேள்வி கேட்டு எஸ் எம் எஸ் அனுப்பவைத்து அதிலும் கொள்ளை லாபம் ஈட்டும் பயங்கரவாதத்தை செய்து வருகின்றன இந்த மொபைல் போன் சேவை நிறுவனங்கள்..

ஏதோ சலுகை வழங்குவதுபோல் இவர்கள் காட்டும் பந்தா எல்லாம் நிஜ ஏமாற்று வேலைதான்..

Saturday, January 1, 2011

இதயநோய் உள்ளவர்கள் இதைப் படிக்க வேண்டாம்..

காலையில் தினத்தந்தி தலைப்பை பார்த்தவுடன் அப்படிதான் தோன்றியது...

நடிகை ரஞ்சிதா திடுக்கிடும் பேட்டி..



அப்படி என்னடா திடுக்கிடும் பேட்டி? ஒருசமயம் படிச்சா ஹார்ட் அட்டாக் வந்து செத்துப் போயடுவோமோ என்று பயம் கூட வந்தது...

சரி அப்படி என்னதான் பயங்கரமான செய்தின்னு பார்த்தா....

நித்யானந்த சாமி உடன் உல்லாசமாக இருந்தது நடிகை ரஞ்சிதா இல்லையாம்...

வீடியோவும் பொய் இல்லையாம், அதில் உள்ள நடிகையும் ரஞ்சிதா இல்லையாம்..

நிஜமாகவே ஹார்ட் அட்டாக் வந்திடும்போலதான் இருக்கிறது..


எது எப்படியோ..இதை வைத்து சன் டிவி யும் நக்கீரனும் நன்றாக காசு பார்த்து விட்டார்கள்..

மக்களும் குடும்பத்துடன் ஒரு ஆபாசப் படத்தை பார்த்தாகி விட்டது..

Friday, December 31, 2010

நிர்வாணமாக போஸ் கொடுக்க ஒருகோடி..


பிரபல ஹிந்தி நடிகையும் மாடலுமான யானா குப்தா என்ற நடிகைக்கு, நிர்வாண போஸ் கொடுக்க ஒரு கோடி சம்பளம் கொடுக்க ஒரு பத்திரிகை முன்வந்துள்ளது.


இங்கிலாந்து நாட்டில் வெளியாகும் ஆண்களுக்கான ஒரு பாத்திரிக்கையின் முன் பக்கத்தில் நிர்வாண போஸ் கொடுக்க இந்த தொகை பேசப்பட்டதாக தெரிகிறது..


மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் .

மேலே உள்ள படங்களைப் பார்த்தால் ஏற்கனவே நிர்வாண போஸ் கொடுத்தாகிவிட்டது..இதற்க்கு மேல் என்ன இருக்கிறது ஒரு கோடிக்கு என்று தோன்றுகிறதல்லவா?

தமிழனுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து...!


இதோ ஆங்கில வருடம் 2010 முடிந்து 2011 வது வருடம் வருகிறது....

ஒவ்வொரு வருடம் ஜனவரி முதல்நாள் வருடப்பிறப்பாக பரவலாக கொண்டாடப்படுகிறது. இது கிறிஸ்தவர்களின் வருடப்பிறப்பாக இருந்தாலும் அனைத்து மதத்தினரும் கொண்டாடுகின்றனர். டிசம்பர் 31ஆம் நாள் இரவும் முழுவதும் முழித்திருந்து இரவு 12 மணியானவுடன் வெடி முழக்கத்துடன் கொண்டாட்டம் களைகட்டுகிறது. கிளப்,கலையரங்குகள் என்று பல இடங்களில் ஆண்களும் பெண்களும் இணைந்து நடத்தும் கூத்துக்களுக்கு அளவில்லை. இறக்குமதி செய்யப்பட்ட இக்கூத்துகள் மேலை நாட்டவர்களைவிட படுமோசமாக அரங்கேறுகிறது. நடனஅரங்குளில் மதுக்கள் பரிமாறப்படும் நிகழ்வுகள் சாலைகளில் அதிவேகமாக இருசக்கர வாகனங்களில் உறுமிக் கொண்டு அடுத்தவர் களின் தூக்கத்தை கெடுக்கும் இளைஞர்கள் என்று ஏராளமான சீரழிக்கும் நிகழ்வுகள். இதைத்தவிர வருடப்பிறப்பு கொண்டாடத்தின் மூலம் இவர்கள் சாதித்தது என்ன? டாஸ்மாக் கடைகளில் கொடிகட்டிகப்பறக்கும்  வியாபாரமும் ஒழுக்க கேடான நடனங்களைத் தவிர வேறு என்னதான் இந்த கொண்டாட்டங்களில் கிடைத்தது?
அந்நிய அடிமைத்தனத்தின் வெளிப்பாடாக, நட்சத்திர ஹோட்டல்களிலும், ரேசார்ட்டுகளிலும், கால் சென்டர்களிலும் அதற்கான ஏற்ப்பாடுகளை மும்முரமாக செய்ய தயாராக இருக்கிறார்கள்..

ஸ்லீவ் லெஸ் அழகிகளும், குறுந்தாடி அழகன்களும் ஏதோ புதிய மாற்றத்தை உருவாக்குவதைப் போல அந்த நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்..


வருடக்கடைசியில் 31 ம்தேதி 12 மணிக்கு பீர் பாட்டில்களையும் சாராய பாட்டில்களையும் ஏந்திக்கொண்டு புத்தாண்டு வாழ்த்துக் கூறி கூச்சலிட்டுக்கொண்டு கூத்தடிப்பதை ஏதோ புதிய சாதனை செய்வதுபோல கொண்டாடுகிறார்கள்..

அடுத்தநாள் கோயில்களிலும் சர்சுகளிலும் கட்டுக்கடங்காத கூட்டம்..

புதிய உறுதிமொழிகள்...சிகரெட் பிடிக்கமாட்டேன், சாராயம் குடிக்கமாட்டேன் என்று , சிகரெட் பிடித்துக்கொண்டும், சாராயம் குடித்துக்கொண்டும் உறுதி மொழி எடுத்துக் கொள்கிறார்கள்...

பிறகு....?

வழக்கம்போல குவாட்டருக்கும் துண்டு சிகரெட்டுக்கும் அலையும் எந்த்தனையோ அடிமைகளில் ஒருவராகிவிடுகிரார்கள்...

வேறு புத்தாண்டே இல்லையா?

தமிழ் தமிழ் என்று பீற்றிகொண்டிருப்போரே...உங்களின் தமிழ் புத்தாண்டு தினத்தில் இதெல்லாம் செய்கிறீரோ?

சாராயம் குடிக்கிறீர்களா?


அழகிகளுடன் கும்மாளம் அடிக்கிறீர்களா?

ஆபாச நடிகைகளுக்கு லட்சக் கணக்கில் கொட்டிக் கொடுத்து ஆபாச வியாபாரம் செய்யும் நட்சத்திர ஹோட்டல்களில் குடித்துவிட்டு கும்மாளமிடுவீர்களா ?


மெரீனா பீச்சில் பைக் சர்கஸ் செய்கிறீர்களா?


போக்குவரத்து விதிகளை மீறுகிறீர்களா?


குடிக்க மாட்டேன் என்று உறுதிமொழி எடுக்கிறீர்களா?


நைட் பார்ட்டிக்கு சென்றவன் நல்லபடியாக வீட்டுக்கு வந்து சேருவானா  என பெற்றவர்களை வீட்டில் தவிக்க வைக்கிறீர்களா?

அப்புறம் எப்படியடா நீங்களெல்லாம் தமிழர்கள்...

ஓஹோ..ஆங்கிலேயனுக்கு அடிமைப்படுவதுதான் தமிழ் பற்றோ?

அப்படி என்றால்...

" wish you a happy new year தமிழா! "





Thursday, December 30, 2010

தொலைக் காட்சிகளின் நம்பிக்கை வியாபாரம் !


மக்களின் நம்​பிக்​கையை வைத்து லாப​கர​மாக வியாபாரம் செய்வது எப்படி என்பதை நமது தொலைக்​காட்சி சானல்க​ளைப் பார்த்​துத்​தான் கற்​றுக்​கொள்ள வேண்​டும். காலை​யில் எழுந்தவுடன், அவசர அவசரமாகக் குழந்தைக​ளைப் பள்​ளிக்கோ கல்லூ​ரிக்கோ தயார் செய்து அனுப்பி​விட்​டுக் கணவரை அலுவலகத்​திற்​குப் புறப்படச் செய்வதற்​குள் குடும்பத்தலைவிக​ளுக்கு போதும் போது​மென்​றாகி விடுகிறது. இடையே மூச்சுவிடக் கூட நேரம் இருப்ப​தில்லை என்ப​தால், தொலைக்​காட்சி​யின் பக்கம் கவனம் செலுத்துவது என்​கிற பேச்​சுக்கே இட​மில்லை.​ அத​னால்​தான் பெரும்​பா​லான சானல்க​ளில் ஆன்மிகம், செய்திகள் போன்ற அனைவ​ருக்​கும் பொது​வான நிகழ்ச்சிகள் அந்த நேரத்​தைப் பங்கு​போட்​டுக் கொள்​கின்றன.




இந்தக் காலை​நேர அவசரங்கள் முடிந்த பிறகு, நிதானமாகத் தொலைக்​காட்சி​யைத் திருப்​பும் குடும்பத் தலைவிகள் மீது தங்கள் தாக்குத​லைத் தொடங்கு​கின்றன நமது சானல்கள். பொது​வாக, ஒவ்​வொரு குடும்பத்தி​லும் ஏதாவது ஒரு பிரச்னை குறித்த கவலை குடும்பத் தலைவிக​ளுக்கு இருப்ப​துண்டு. இந்தக் கவலை​யைத் தங்க​ளுக்​குச் சாதகமாகப் பயன்ப​டுத்தி, அவர்களது அறியாமையை​யும் நம்​பிக்கையை​யும் காசாக்க முயல்​கின்றன சில வர்த்தக நிறுவனங்கள். உங்கள் பிரச்னை தீர​வேண்​டுமா? இந்தக் கல்லை வாங்​குங்கள், அந்தக் கவசத்தை வாங்​குங்கள் என்று சானல்க​ளில் ஜோராகக் களை கட்டுகிறது இந்த நம்​பிக்கை வியாபாரம். காசு ஒன்றே குறி என்​கிற உன்னத​மான குறிக்கோ​ளோடு, கண்ணை மூடிக்​கொண்டு சானல்க​ளும் இதற்​குத் துணை போவது கொடுமையி​லும் கொடுமை!

விஜய் தொலைக்​காட்சி​யில், அதிர்ஷ்டக் கற்களை விற்பனை செய்வதற்​காக வரும் நகைக்க​டைக்காரர், போக​ரின் பாஷா​ணம், சித்தர் திருவள்ளுவர், காமா கதிர்கள், இரும்பு தங்க​மாக மாறுவது (தெரிந்​தால் இவரே தங்கம் தயா​ரிக்க வேண்டியது​தானே!) என்பது போன்ற ஒன்​றுக்​கொன்று சம்பந்த​மில்​லாத விஷயங்களை அதிர்ஷ்டக் கற்களுடன் தொடர்​புப்ப​டுத்​திப் பேசி​யும், ஜெம்மாலஜி, க்ராஃபாலஜி, அஸ்ட்ராலஜி, ஃப்​யூச்சராலஜி, நியூமராலஜி என்று ஏகப்பட்ட 'லஜி'களைக் கூறி​யும், ஏற்கெனவே குழப்பத்​தில் இருப்பவர்களை மேலும் குழப்பத்​தில் ஆழ்த்தி​னார்.



உங்கள் ஜாதகத்துடன் நகைக்க​டைக்​குள் செல்வது, மாஸ்டர் செக்கப்​பிற்​காக மருத்துவம​னைக்​குச் செல்வ​தைப் போன்றது என்று தனது வியாபாரத்​திற்கு வலு சேர்க்​கும் இவர் சொல்ல வருவது என்ன​வென்​றால், 'எங்கள் கடை​யில், நாங்கள் கூறும் ரத்தினக் கற்களை வாங்கி அணி​யுங்கள், உங்கள் பிரச்னைகள் அனைத்​தும் தீர்ந்துவி​டும்' என்பது​தான். கல் ஒன்று, மாங்​காய் இரண்டு என்பது பழ​மொழி. கல் ஒன்று, பலன்கள் பல என்பது இந்த நிகழ்ச்சி மூலம் நாம் தெரிந்து​கொண்ட புது​மொழி!

அதிர்ஷ்டக்கல் வியா​பாரி தனது வியாபாரத்தை முடித்து​விட்​டுச் சென்றவுடன் அந்த இடத்தை விரைந்து நிரப்புகி​றார் கட​வுள் பெய​ரில் கவச விற்பனை செய்​யும் சாமி​யார் வேட​மிட்ட ஒரு வியா​பாரி.​ செல்வச் செழிப்பு, புகழ், நோயற்ற ஆரோக்​கிய வாழ்வு ஆகியவற்​றோடு எதிரிகளை வீழ்த்துவது, விபத்திலி​ருந்து காப்பது, வழக்குக​ளில் வெற்றி பெற வைப்பது போன்ற உப பலன்களை​யும் நல்குகிற​தாம் இந்தக் கவசம் (ராணுவத்தினர், வாகன ஓட்டிகள், வழக்குறைஞர்கள் கவ​னிக்க)​. குழந்தைக​ளுக்​குப் பள்​ளிக் கட்டணம் கூடக் கட்ட முடி​யாத நிலை​யில் இருந்த ஒருவர், இந்தக் கவசத்தை வாங்​கிய பின்னர் (கவசம் வாங்க மட்​டும் காசு எங்கி​ருந்து வந்த​தென்று தெரிய​வில்லை!) செல்வச் செழிப்​பில் திளைப்பதாகப் பேட்டி​யும் உண்டு.இதைத் தொடர்ந்து - கண் திருஷ்​டியிலி​ருந்து காக்​கும் மெகா சுரக்ஷா கவர். கண் திருஷ்டி பற்றி பைபிளி​லும் குரானி​லும் கூடக் குறிப்பிடப்பட்டி​ருப்பதாகக் கூறித் தங்கள் வியாபாரத்​திற்கு வலு சேர்த்​தார்கள் இந்நிகழ்ச்சி​யில். கல்யாணமா​காத பெண்கள் இதை வாங்கி​னால் உடனே திருமணம் நிச்சயமாகு​மாம் (பலன​டைந்தவ​ரின் பேட்டி​யும் உண்டு). இத்த​னைக்​குப் பிற​கும் நீங்​கள் ஏமாளியாகாமல் இருந்​தால் ஆச்சரியம்​தான்!

மக்கள் தொலைக்​காட்​சிப் பக்கம் போனால், 'உங்க​ளைச் சொட்டை, வழுக்கை, கிரிக்​கெட் கிர​வுண்டு என்று கிண்டல் செய்கி​றார்களா? கவ​லைப்​பட வேண்​டாம், எங்க​ளுக்கு போன் செய்​யுங்கள்' என்று அழைத்​துக்​கொண்டி​ருந்​தார் ஒருவர். ஏதோ காவல்துறையின​ரின் அறி​விப்பு இது என்று நினைத்​தால், அது உங்கள் தவறு. குறிப்​பிட்ட தைலத்தை வாங்​கிப் பூசி​னால், இத்த​கைய கிண்டல் பேச்சுகளிலி​ருந்து தப்​பும் அள​விற்கு உங்கள் சொட்டை, வழுக்கை​யெல்​லாம் மறைந்து முடி கருகரு​வென்று வளரு​மாம். மக்க​ளின் பலவீனங்க​ளில் இது​வும் ஒன்றல்லவா? அதைக் காசாக்க முயல்பவர்க​ளுக்கு உத​விக்​கொண்டி​ருந்தது மக்கள் தொலைக்​காட்சி. நீங்க​ளுமா?

மெகா தொலைக்​காட்சி​யிலோ, கருப்பானவர்க​ளைச் சிவப்​பாக மாற்​றும் மந்திரக் களிம்பு விற்பனை... அந்தக்​கால முனிவர்க​ளின் கடுமை​யான உழைப்​பின் பல​னாம் இது (முனிவர்கள் இதற்காகத்​தான் கடுந்தவம் புரிந்​தார்கள் போலி​ருக்கிறது!). ஜெயா, ராஜ், பொதிகை எனப் பெரும்பா​லான சானல்களை ஆக்கிர​மித்​துள்ள இந்த வியா​பார வில்லங்கங்கள் எவ்வளவு விபரீதமானவை என்பது பற்றி யாருக்​கென்ன கவலை? Magical remedy பற்றி விளம்பரம் செய்யக் கூடாது என்று, ஏதோ விதி இருப்ப​தாக, எப்​போதோ, யாரோ சொல்லக் கேட்ட ஞாபகம்! அப்படி ஏதாவது இருக்​கும் பட்சத்​தில், அந்த விதி எங்கே தூங்​கிக்​கொண்டி​ருக்கிறது என்ப​தைக் கண்டுபி​டித்​துக் கொடுப்பவர்க​ளுக்​குப் பரிசு அறி​விக்க​லாம்!

கல், தகடு, அதிர்ஷ்டம் என்ற நம்​பிக்கைகள் ஒருபுறம் என்​றால், பங்​குச்சந்தை மீதான நம்​பிக்கை மறுபுறம். இந்த நம்​பிக்கை​யைப் பங்கு​போட்​டுக்​கொண்டு விற்பதி​லும் சளைத்தவையல்ல நமது சானல்கள். வணிகம் வசப்ப​டும் (கலைஞர்), வளாகம் (மக்கள்), வர்த்தக உலகம் (சன் நியூஸ்), மார்க்​கெட் டிப்ஸ் (ஜெயா பிளஸ்) என்று எல்​லாச் சானல்களி​லும் ஏதாவது ஒரு வடி​வில் நுழைந்து விடுகிறது பங்​குச்சந்தை.

எந்தப் பங்கை வாங்க​லாம்? என்ன விலைக்கு வாங்க​லாம்? சந்தை ஏறுமா, இறங்​குமா? என்பது போன்ற கேள்விக​ளுக்​குப் பதில​ளிக்கக் காத்தி​ருக்கி​றார்கள் பங்​குச் சந்தை வல்லுனர்கள். குடுகு​டுப்​பைக்காரன் குறி சொல்வது போல இவர்கள் கொடுக்​கும் பரிந்து​ரையை நம்பி, பங்​குச் சந்தை​யில் பணம் போடுபவர்க​ளைப் பார்த்​துப் பரிதாபப்படாமல் வேறென்ன செய்ய? பங்​குச்சந்தையை​யும் பரிந்துரைகளை​யும் நம்பு​வோர் இருக்​கும் வரை, இந்நிகழ்ச்சிகளை வழங்​கும் சானல்க​ளின் வியாபாரம் அமோகம்​தான்!

எல்லா நம்​பிக்கைக​ளும் ஏதோ ஒருவகை​யில் வியாபாரமா​கிக் கொண்டி​ருக்க, ஜனநாயகத்​தின் மீது மக்கள் கொண்டி​ருக்​கும் நம்​பிக்கை​யும் வியாபாரமா​கிக் கொண்டி​ருந்த​தைச் செய்திக​ளில் பார்க்க முடிந்தது. வாக்காளர்க​ளுக்கு மதுபானம், வேட்டி சட்டை வழங்கப்பட்டதை ஒரு சான​லில் பார்த்த அதிர்ச்சி அடங்​கும் முன்​னரே, வாக்காளர்க​ளுக்கு வழங்குவதற்​காக வைக்கப்பட்டி​ருந்த கட்​டுக்கட்​டான பணம் பறிமுதல் செய்யப்பட்டது மற்​றொரு சான​லில் ஒளிபரப்பானது. கட்சிகளுடன் சானல்க​ளும் சேர்ந்து செய்த தேர்தல் வியாபார​மும், நேயர்க​ளின் நம்​பிக்​கையை அடிப்படையாகக் கொண்டதே என்ப​தைச் சொல்லத் தேவை​யில்லை.

என்றே​னும் ஒரு​நாள், இவை​யெல்​லாம் மாறக்கூ​டும்... நம்​பிக்கை வியாபாரிகளிடம் சிக்​காத நாள் கூட வர​லாம்...​ நம்​புங்கள்...!




Wednesday, December 29, 2010

ஆப்பிள் சாப்பிட போறீங்களா ? (கவனமாக இருக்கவும்)

நீங்கள் பேருந்து நிலைய வழியாகச் செல்லும்போது அங்குள்ள தனியார் பார்சல் அலுவலகத்தில் கூடைகூடையாக ஆப்பிள் பழங்களும் ஆரஞ்சுப் பழங்களும் இறங்கும். பழங்களெல்லாம் பாதுகாப்பாய் வைக்கோலால் பொதியப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். மொத்த விற்பனையாளர் அந்தப் பழங்களை இறக்கி, சில்லறை விற்பனையாளர்களுக்கு வினியோகித்துக் கொண்டிருப்பார்.


முன்பு நாம் பார்த்த பழங்கள் மெருகு குலையாதவை. இன்றைய பழங்கள் மெழுகு குலையாதவை. அறிவியலும் தொழில்நுட்பமும் நன்மையோடு தீமையையும் செய்து கொண்டிருக்கின்றன.

இன்று பழம் விளைகிற ஊரில் பழத்தை வாங்க முடியாத அளவுக்கு விலை. விளைகிற ஊரிலிருந்து பழங்கள் வாகனங்கள், ரயில், விமானமென ஆயிரக்கணக்கான மைல் தூரங்களைக் கடந்து உலகின் எந்த மூலைக்கோ பயணப்படுகிறது.

வழக்கமாக அமெரிக்கா, தாய்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து ஆப்பிள், ஆரஞ்சு, டிராகன், கிவி போன்ற பழங்கள் இங்கே இறக்குமதி செய்யப்படுகின்றன.

அந்தப் பழம் கெட்டுப் போகாமல் அது பயணப்படும் காலத்தையும் கால நிலையையும் தாங்கிக் கொள்ளும் விதமாக அது பதப்படுத்தப்படுகிறது.

குறிப்பாக பார்க்கப் பளபளப்பாக இருக்கும் விலை உயர்ந்த ஆப்பிள் பழங்கள் ரசாயன மெழுகால் பூசப்பட்டு பொதியப்பட்டவை. கையால் அப்பழத்தைச் சுரண்டிப் பார்த்தாலே அந்தப் பழத்திலிருந்து மெழுகு உதிர்வதைக் காணலாம். பெரும்பாலானவர்கள் மெழுகு பூசப்பட்ட ஆப்பிள்களின் பளபளப்பில் அதுவே தரமான ஆப்பிளாகக் கருதி அதிக விலை கொடுத்து வாங்கிவிடுகின்றனர். அந்த ஆப்பிள் பழத்தில் பூசப்பட்டிருக்கும் மெழுகு இயற்கைத் தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட உண்ணத் தகுந்தவையா, ரசாயனப் பூச்சா என யாராலும் பகுத்தறிய இயல்வதில்லை.


ரசாயனப் பூச்சு மெழுகும் எந்த அளவுக்குப் பாதுகாப்பானது என்பது குறித்த முறையான ஆய்வும் இல்லை. மக்களுக்கும் அது குறித்த போதுமான விழிப்புணர்வும் இல்லை.

பழங்கள் சாதாரணமாக நான்கு வகைகளில் மெழுகு பூசப்படுகின்றன. முதலாவது முறையில் பழங்களை சூடான பாரஃபின் மெழுகில் முக்கி எடுப்பார்கள். இந்த முறையில் பழத்தில் மெழுகின் பூச்சு அதிக அளவில் காணப்படும்.

இரண்டாவது முறையில் விரைந்து சுழலும் தூரிகைகளின் மூலமாக பழத்தில் மெழுகு அழுத்திப் பூசப்படும்.

மூன்றாவது முறை தெளிப்பு முறையாகும். இதில் உருகிய மெழுகை பழத்தின் மேல் தெளித்து தூரிகையால் தடவி, தேவையான திடத்துக்கு கொண்டு வருவார்கள்.

நான்காவது முறையில் பழங்களை நன்றாகக் கழுவி உலர்வதற்கு முன் குறிப்பிட்ட அடர்த்தியுள்ள மெழுகு திரவக் கலவையில் முக்கி எடுப்பர். அவற்றைப் பெட்டிகளில் அடுக்கும் முன் காயவைப்பர்.

சுத்தப்படுத்தப்பட்ட மெழுகானது சுவையற்றது, மணமற்றது, விஷமற்றது. ஆனால், இந்தப் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களுக்கே உரிய மெழுகைத்தான் இந்த வணிக நிறுவனங்கள் பயன்படுத்துகின்றனவா என்றால் பெரும்பாலும் இல்லை.

பழங்களுக்கு மெழுகு பூச்சிடுவதால் வணிகர்களுக்குச் சாதகமான அம்சங்கள் நிறைய இருக்கின்றன. மெழுகிடுவதால் பழங்களின் எடைக்குறைவைத் தவிர்க்க இயலும்.

பளபளப்பான தோற்றம், பழத்தின் இளமையைக் கூட்டுதல், பழத்தின் நீர்மம் ஆவியாகாமலும் பழம் சுருங்கிவிடாமலும் தடுத்தல், பழத்தின் பருமனைப் பெருக்கிக் காட்டுதல், பூச்சிகளிலிருந்தும் மற்ற காரணங்களாலும் பழம் பழுதடையாமல் காத்தல் என பல அம்சங்கள் அவர்களை இந்த மெழுகிடும் வேலையைச் செய்விக்கின்றன.

உடலுக்குக் கெடுதல் விளைவிக்காத பூச்சிடத்தகுந்த சாதனங்கள் விலை அதிகமானவை. அதனால் தரங்குறைந்த மெழுகுகளால் மெழுகப்பட்ட பழங்கள் பல பெரிய நிறுவனங்களின் அலமாரிகளை பளபளப்புடன் அலங்கரிக்கின்றன. அந்தப் பழங்களுக்கு மெழுகோடு ஆஸ்திரேலிய, அமெரிக்கப் பெயர்களும் பெருமையுடன் சூட்டப்படுகின்றன.

மெழுகிடப்பட்ட இந்தப் பழங்களைச் சாப்பிடுவதால் வயிறு தொடர்புடைய நோய்களுக்கு வழிவகுப்பதோடு, புற்று நோய்க்குக்கூடக் காரணமாகிவிடும் என்ற மக்களின் அச்சத்துக்கு வலுவான காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

இன்னொரு பக்கம் கார்பைடு கற்களால் செயற்கை முறையில் பழங்கள் பழுக்க வைத்து விற்கப்படுகின்றன. பணமே முக்கியமாகிவிட்டது. நாட்டின் ஆரோக்கியத்தைப் பற்றி எவருக்கும் அக்கறை இல்லை.

அந்தந்த ஊரில் விளையும் கொய்யா, மாங்காய், பப்பாளி, வாழை, திராட்சை போன்றவற்றிலேயே நமது ஆரோக்கியத்துக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் உள்ளன. அதைப் பறித்த குறைந்த கால அளவுக்குள் அந்தந்த ஊர் மக்களும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்களும் உட்கொள்ளலாம்.

பழங்கள் குளிர்பதனப் பெட்டிகளில் பாதுகாக்கப்பட்டு விமானங்களில் பயணப்படுவதால் அதிக அளவில் கரியமிலவாயு காற்று மண்டலத்தில் வெளியேற்றப்படுகிறதாம்.

சாலை, ரயில், கப்பல் போக்குவரத்தைவிட பழங்களின் விமானப்பயணத்தால் காற்று அதிக அளவில் மாசுபட்டு சுற்றுச்சூழலும் சீர்கெட்டு வருகிறதாம்.

ஒரு கிலோ ஆப்பிள் 6,000 மைல்களைக் கடக்கிறபோது, விமானப் பயணத்தில் 10.6 கிலோ கரியமிலவாயுவும், கப்பல் வழியாக வரும்போது 1.2 கிலோவும், ரயில் வழியாக வரும்போது 0.2 கிலோவும், சாலை வழியாக வரும்போது 2.6 கிலோ கரியமிலவாயுவை காற்று மண்டலத்தில் கக்குகிறதாம்.

இப்படி ஆறாயிரம் மைல்கள் கடந்து வரும் ஒரு ஆப்பிளைச் சாப்பிடுவதால் காற்றிலும் விஷத்தைக் கலக்கிறோம் அதன் மேல் பொதிந்திருக்கும் ரசாயனப் பூச்சால் வயிற்றிலும் விஷத்தைக் கலக்கிறோம்.

இந்நிலையில் நாகரிக உலகத்தைப் பார்த்து ஆப்பிளும் மெழுகைப்பூசி தன் அழகை மெருகேற்றிக் கொண்டதோ?

நன்றி "வெளிச்சம்"