
நானும் எழுதப்போறேன்... நானும் எழுதப்போறேன்..
சிறுவயதில் பத்திரிக்கைகளுக்கு அனுப்பிவைத்து நெறைய திரும்பி வந்துடுச்சு...
அப்போ நீங்க எல்லாம் தப்பிச்சு இருக்கலாம்..ஆனா இப்போ முடியாது..
நீங்கல்லாம் படிச்சுதான் ஆகனும்ங்க...
சரி என்னதான் எழுதலாம்னு பாத்தா..பாவிங்க எல்லாத்தையும் எழுதி வெச்சு இருக்கீங்க . என்னதாம் பண்ணலாமுன்னு யோசிச்சேன்...
திட்ட வேண்டியதுதான்.....
எல்லாரையும் சகட்டுமேனிக்கு திட்டலாம்னு முடிவுபண்ணிட்டேன்....
எதுலேருந்து ஆரம்பிக்கிறது....?...யோசிச்சு பாத்தேன்..இப்போ மக்களை ரொம்ப கெடுத்துக்கிட்டு இருக்கிற விஷயம் என்னன்னு பாத்தா ..சினிமா, டிவி, அப்புறம்...ஏதோ நாலாவது தூணுன்னு பீத்திக்கிட்டு அலையிரானுன்களே ...அந்த பத்திரிக்கைங்கதாங்கோ...
பிடிச்சுடலமா ஒரு பிடி?
முதல்ல யாரு..எந்த பத்திரிக்கை? ....சரி நான் ஒரு லிஸ்ட் போடுறேன்..பாருங்க..
சந்தனக்கடத்தல் வீரப்பனை ஹீரோவாக்கிய நக்கீரன், ஆட்டோ சங்கரை நண்பனாக்கிய ஜூனியர் விகடன், அறுபது வயது ரஜினிக்கு சின்ன சின்ன நடிகைகளை ஜோடியாக்க ப்ரோக்கர் வேலை பாக்கும் குமுதமும் ஆனந்த விகடனும்.. அப்புறம்...கள்ளத்தொடர்பு ஸ்பெசலிஸ்ட் மற்றும் விபச்சாரிகளை அழகிகளாக்கும் தினத்தந்தி, .இப்படி நெறைய இருக்குங்க ...டெய்லி ஒவ்வொரு பக்கம் பற்றியும் எழுதினாக்கூட நெறைய கிழிக்கலாம்..இந்த பத்திரிக்கை விபச்சாரத்தை பத்தி..
அப்புறம் என்ன ஆரம்பிக்க வேண்டியதுதான்..
அடுத்த பதிவுல டீட்டைலா கிழிப்போம்ல ....
0 comments :
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?