
சன் டி வி வெளியிட்டிருக்கும் - இந்தியதொல்லைக்காட்சிகளில் திரைக்கு வரும் முன்னே டி வி இல் வெளிடப்படவேண்டிய - திரைப்படம் தீராத விளையாட்டுபிள்ளை என்ற திரைப்படம்...
இதற்கு கால் மணிக்கு ஒருதடவை விளம்பரம், பேட்டி என்று அவர்கள் சம்மந்தப்பட்ட அனைத்து டி விக்களிலும் விளம்பரம் தந்து மக்களை எவ்வளவு வெறுப்பேற்ற முடியுமோ அவ்வளவு வெறுப்பேற்றுகிறார்கள்..
சரி அப்படி என்னதான் அந்த படத்தில் இருக்குமோ என்று போய் பார்த்தால்...ஒரு ஹீரோ..(அவன பாக்கவே சகிக்கல)...அவனுக்கு ஜால்ரா போட என்றே மூணு அல்லக்கைகள்..லொட லொடன்னு பேசிக்கிட்டு....அந்த கதாநாயகன்..எத செலக்ட் பண்ணாலும் நல்லா டெஸ்ட் பண்ணி இருப்பதிலேயே பெஸ்ட் தான் செலக்ட் பண்ணுவானாம் ...(அவனோட அம்மா இவன பெத்து எடுக்கிறதுக்கு எத்தனை பேரை டெஸ்ட் பண்ணா என்கிற விவரம் திரைப்படத்தில் இல்லை)
இவன் லவ் பண்ணி கல்யாணம் பண்ன மூணு பொண்ணுங்கள செலக்ட் பண்ணி லவ் பண்றானாம்...அவனுக்கு கூட உள்ள அல்லக்கை நண்பர்கள் மாமா வேலை பார்கிறார்கள்... கடைசியில் அவனைப்பற்றி தெரிய வரும் அந்த மூணு பேரும் அவனை விட்டு பிரிந்த பிறகு இவன் காதலைப்பற்றி பீல் பண்ணி...வில்லன்களிடம் அடிவாங்கி (இப்படி அடிவாங்கி உயிர் பிழைக்கிறது இந்த தமிழ் சினிமா கதாநாயகர்கள் மட்டும்தான்) ஆஸ்பத்திரியில் கிடக்கும்போது மூணு பேரில் ஒரு பெண் வந்து அவனை ஏற்றுக்கொள்கிறாள்..
(அப்படியும் அந்த எருமை திருந்தின பாடில்லை..டாக்டராக வரும் இன்னொரு ஐட்டத்தை சைட் அடிப்பதாக படத்தை முடிக்கிறார்கள்)
இப்படிப்போகும் கருமாந்திரக்கதைகள் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் என்று புரியவில்லை...
படத்தில் வரும் கதாநாயகன் நான் எதை செலக்ட் பண்ணாலும் உள்ளதிலேயே பெஸ்ட் டைத்தான் செலக்ட் பண்ணுவேன் என்று அடிக்கடி சொல்றான்.. அப்படி உருப்படியான ஆளாக இருந்திருந்தால் நல்லா கதையை செலக்ட் பண்ணி இருப்பான்...
மக்களை இப்படி முட்டளாக்கிக்கொண்டு இருப்பதால்தான் இவனைப்போன்ற "பில்ட் அப்" பார்ட்டிகள் தொடர்ந்து தோல்விப்படங்களாக தந்துகொண்டு இருந்தாலும்...இன்னும் திருந்தினதாக தெரியவில்லை...
9 comments :
நீங்க ஏன் மன்னா அதைபோய் பார்க்குறீங்க "(இன்னும் உங்களுக்கு அந்த அளவுக்கு ஞானம் பற்றவில்லையோ??? எதற்கு மன்னா அதைபார்த்து டென்சன் ஆகறிங்க பேசாம வாருங்கள் மன்னா நாம் கரடி வேட்டைக்கு செல்லலாம் )
marmayogie good article keep it up
நச்சுனு சொன்னீங்க...
நன்றி பட்டா பட்டி.., & மங்குனி அமைச்சரே
சினிமா என்பது இங்கே கலை கிடையாது.. சில தேசத்தில் கலையாக இருக்கிறது.. அதுவும் வெளிநாட்டில்தான்...
இங்க சினிமா என்ற பெயரில் நடப்பது வியாபாரம் கழைத் கூத்தாட்டம், ரிக்கார்ட் டான்ஸ், சர்க்கஸ் என்று வேறு பெயர்கள் சூட்டிக் கொள்ளலாம்
பத்ரிநாத்
நன்றி பத்ரிநாத் அவர்களே
இங்கே எவனும் கலைஞனாக இல்லை...ஒரு ஆபாச வியாபாரியாகவே இருக்கின்றான். அதற்கு இங்குள்ள பத்திரிக்கைகளும் எந்த விதமான கூச்சமும் இன்றி துணைபோகின்றன..
நண்பர்களே..எனது மற்ற பதிவுகளையும் படித்து உங்களது பின்னூட்டங்களை எழுதுங்கள்..உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்..எந்த விதமான விமர்சனங்களையும் பின்னூட்டம் செய்யலாம்..மீண்டும் நன்றி..!
கொஞ்ச நாள் போன படம் பார்க்க வந்தே கூட்டிகிட்டு போய் மொட்டயடிபானுங்க போல இந்தளவுக்கு மூளைச்சலவை செய்யறாங்க ரகுவரன் சொன்ன மாதிரி "கையில ஒரு சட்டிலைட் நெட்வொர்க் இருந்தா என்ன வேணாலும் செய்வீங்களா "எல்லாம் தலைஎழுத்து ?
நாகராஜ்
nandri nagaraj avargale
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?