இந்த செம்மொழி மாநாட்டால் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் என்ன நன்மை ஏற்படப்போகுது என்பதுதான் இப்போதைய கேள்வி..தமிழக முதல்வருக்கு ஒரு சிறப்பாக அமையும்..ஐந்து நாட்கள் அவர் புகழ் பாடப்படும், எங்கும் தமிழ் என்ற முழக்கம் எழுப்பப்படும்..பிறகு? சரி அதை விடுவோம், தமிழர் பண்பாடு சிறப்புறுமா?
இத்தனைகாலங்களாக தமிழரின் பண்பாடு சிறப்பு என்று நாம் எதைக் கொண்டாடி வருகிறோம் தெரியுமா?
வள்ளுவரின் திருக்குறள்...இதுவரை அதை எழுதிய திருவள்ளுவர் யார் என்று தெரியாது..அவரை பற்றிய கதை ஒன்று..அவர் மனைவி வாசுகி கிணற்றில் நீர் வார்த்துக் கொண்டிருக்கும்போது இவர் தன் மனைவியை அழைத்தாராம்..அள்ளிக்கொண்டிருந்த வாளியைக் கயிறுடன் அப்படியே அவள் விட்டுவிட்டு கணவன் கூப்பிடுகிறாரே என்று ஓடினாளாம்...அந்த கயிறுடன் வாளி அப்படியே அந்தரத்தில் தொங்கிக்கொண்டே இருந்ததாம்..
என்னை பொறுத்தவரை திருக்குறள் என்பது ஒரு தனி மனிதன் மட்டும் எழுதிய குறள் கிடையாது..அந்த கால கட்டத்தில் வாழ்ந்த பல்வேறு அறிஞர்கள் அவ்வப்போது எழுதி வைத்தவையே ஆகும்..உதாரணமாக ஒரு மனிதர் அறத்துப்பால் பற்றிய குறள் எழுதினால் இன்னொருவர் அதைப்போலவே காமத்துப்பால் எழுதி இருக்கலாம்..(இப்போது வரும் தமிழ் திரைப் படங்கலேயே சொல்லலாம்..மதுரை பேச்சு வழக்கில் ஒரு படம் வெற்றி பெற்றால் அதைப் போலவே மற்றவர்களும் படம் எடுப்பது)
அப்புறம் கண்ணகி என்றோருவள் தன் கணவன் கோவலன் மாதவி என்ற விலை மாதுவுடன் உல்லாசம் அனுபவிக்க இவள் வழியனுப்பி வைப்பாளாம், அப்புறம் தன் கணவனை தவறான தீர்ப்பால் தண்டனை வழங்கிய பாண்டிய மன்னனை நீதி கேட்டால் அவன் தவறை உணர்ந்து மனைவியுடன் தற்கொலை செய்து கொள்வானாம்..இவளும் வெறி அடங்காமல் மதுரையை எரித்துவிடுவாளாம்..இவள் ஒரு உத்தமியாம்..
கணவரை பிற பெண்ணுடன் குலவ உதவி செய்பவளும், ஒருவன் செய்த தவறுக்கு ஊரையே எரிப்பவளும் எப்படி கற்புக்கரசியாவாள்? இந்த காலத்தில் அப்படி ஏதாவது ஒரு பெண் தன் கணவனை இன்னொரு பெண்ணிடம் இன்பம் அனுபவிக்க செய்பவளை நாம் எப்படி மதிப்போம்..?
இன்னொரு மன்னன்..பசுங்கன்று ஒன்றை தேர் ஏற்றிக் கொன்ற மகனை அந்த மன்னனே தேர் ஏற்றி கொன்று விடுவானாம்
இந்த மன்னனை போல ஒரு முட்டாள் இருப்பானா?
பாரி என்றொரு மன்னன்..இவன் முல்லைசெடி கீழே விழுந்து கிடக்கிறது என்று அதற்க்கு தனது தேரை வழங்கிடுவானாம்...
இவனை லூசு என்று சொல்லாமல் எப்படி அழைப்பது?
முருகன் என்றொரு தமிழ்க்கடவுள் முளைத்து மூணு இல்லை விடவில்லை அதற்குள் தாய் தந்தையுடன் பகைத்துக்கொண்டு தனி உலகம் படைக்கச் சென்று விடுவானாம்..
முதலில் கடவுளுக்கு குழந்தைகள் என்பதே ஏற்றுக்கொள்ளமுடியாத விஷயம்..அதிலும் கடவுளுக்குப் பிறந்தவன் இப்படி அறிவற்றவனாக இருப்பானா?
அவ்வை என்றொரு கிழவி ஒரு கனியை - அது அதிசயக் கனியாம், அதை தின்றால் மரணம் வராதாம்..அதை அதியமான் என்றொரு மன்னனிடம் கொடுத்தாளாம்..அதை அவன் தனது பணியைவிட அவ்வையின் கவியாற்றும் பணியே தமிழ் நாட்டிற்கு தேவை என்று அவளிடமே திருப்பிக் கொடுத்தானாம்..
அதைதின்ற அவ்வை இன்றுவரை உயிரோடு இருக்கணுமே? -
எங்கே அந்த அவ்வை?
இன்னும் இதுபோன்ற இப்படி ஏராளமான நம்பமுடியாத- அறிவுக்கு பொருந்தாத கட்டுக்கதைகளை வைத்தே நம் தமிழர் பண்பாடு தமிழர் பெருமை என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்..
வால்மீகி என்றொரு திருடன் எழுதிய கதையை அப்பட்டமாக காப்பியடித்து - அதில் வரும் கதாபாத்திரங்களை கடவுள்களாக மாற்றி எழுதிய கம்பன் என்றொருவன் எழுதிய கம்ப ராமாயணம் என்றொரு புருடாவை வைத்துகொண்டு கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும் என்றொரு பம்மாத்து வேறு..
கட்டுத்தறி எங்காவது கவி பாடுமா? அப்படி காப்பி அடித்து கதை கவிதை எழுதுபவனை நாம் மதிப்போமா?
சினிமாவில் ஆபாசக்கூத்தடிப்பவனை தலைவன் என்றும் - விபச்சார அழகிகளை நடிகைகளை தலைவி என்று வைத்து கொண்டாடுவது.
குஷ்பூ என்றொரு விபச்சார நடிகை திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்ளலாம் என்றொரு கேவலமான கருத்தை - சங்க கால இலக்கியங்களிலேயே இது போன்று சொல்லப்பட்டிருக்கிறது என்று வக்காலத்து வாங்கிய முதல்வர் அந்த நடிகையை தமிழை வளர்க்க தன் கட்சியிலேயே சேர்த்துகொண்டு தமிழ்த்தொண்டு புரிந்திருக்கிறார்..
இலங்கையில் மக்களுக்காக போராடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு சக தமிழர்களையும் தலைவர்களையும் கொன்று வருகிறவர்களை ஆதரிப்பதற்காக நமது தாய் நாடான இந்தியாவுக்கே துரோகம் செய்வதை தமிழ் பற்று என்று கூறிக்கொள்வது....
தேநீர் கடைகள் முழுவதும் கேரளத்துக்காரர்கள்..
தமிழ்நாட்டில் மார்வாடி ஆக்கிரமித்துக்கொண்டு வட்டி கொடுத்து பிழைத்துக் கொண்டிருக்கிறான்
தமிழகத்தை ஆண்ட சில முன்னாள் முதல்வர்கள் தமிழ் நாட்டைச் சார்ந்தவர்களே இல்லை (உதாரணம் எம்.ஜி . ஆர். , ஜெயலலிதா )
தமிழனை ஒழிப்பதற்காக மும்பையில் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் சிவா சேனா..அந்த கட்சிக்கு தமிழ்நாட்டிலேயே கிளைகள் வைத்து அதற்க்கு சில மிருகங்கள் உறுப்பினராக உள்ளன..
இப்படி வருகிறவனிடம் எல்லாம் முட்டாள்தனமாகவும், இளிச்ச வாய்த்தனமாகவும் ஏமாந்துவிட்டு "வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு" என்று சப்பைக்கட்டு..
ஏன் மற்ற மாநிலங்களிலோ, நாடுகளிலோ..மற்ற மாநிலங்களை சார்ந்த, மற்ற நாடுகளை சார்ந்த மக்கள் வசிக்கவில்லையா?
இந்தக்கால திரைப்படங்கள் அனைத்துமே விபச்சாரத்தை தூண்டுவதற்கும், நல்ல பண்பாட்டை சீரழிப்பதற்க்குமே உருவாக்கப்படுபவை..
இங்கே அந்த கேவலமான சினிமாவில் நடிக்க வரும் மானம்கெட்ட நடிகைகள் அனைவரும் பல்வேறு மாநிலங்களை சார்ந்தவர்களே..
இங்கே உள்ள ஆபாச பத்திரிக்கைகள் அனைத்தும் இந்த கேவலமான நடிகைகளை வைத்தே பிழைத்துக் கொண்டிருக்கின்றன.. அந்த ஆபாச நடிகைகளை வைத்துதான் தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் தங்களை வளர்த்துக்கொள்ள முனைகின்றன..
அதிமுக என்ற கட்சி முற்றிலுமாக திரைபடங்களில் நடித்தவர்களை வைத்தே வளர்ந்த கட்சி..ஏன் ஏறக்குறைய ஐந்து முறை ஆட்சியையே பிடித்தது..
இவைகளைபோன்று ஏராளமான கூத்துக்களை தமிழ் மொழிப் பற்று..
என்று பீற்றிகொண்டிருகிறோம்..
இந்த செம்மொழி மாநாட்டில் இந்த மூடத்தனங்கள் களையப்படுமா?
சரி எனக்கு வந்த ஒரு குறுந்தகவல்
அப்பா - முதல்வர்
மகன் - துணை முதல்வர்
இன்னொரு மகன் - மத்திய அமைச்சர்
மகள் - மாநிலங்களவை உறுப்பினர்
பேரன் - மத்திய அமைச்சர்
தமிழன் ? - இளிச்சவாயன்..!
வெல்க தமிழ்!! வாழ்க தமிழகம்..!!!
23 comments :
பிரிச்சு மேஞ்சிட்டிக ,
உண்மைதான் , ஏதாவது பன்னணனும்
//இந்த செம்மொழி மாநாட்டால் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் என்ன நன்மை ஏற்படப்போகுது என்பதுதான் இப்போதைய கேள்வி..//
ஒன்னுமில்லை ...
//பாரி என்றொரு மன்னன்..இவன் முல்லைசெடி கீழே விழுந்து கிடக்கிறது என்று அதற்க்கு தனது தேரை வழங்கிடுவானாம்...
இவனை லூசு என்று சொல்லாமல் எப்படி அழைப்பது?//
ஆமா ...இவனுக தான் திராவிட பகுத்திறிவு வாதிகள் ஆச்சே ....இந்த கட்டு கதைகள் தான் இவனுக கலாச்சாராமா .........
//இங்கே உள்ள ஆபாச பத்திரிக்கைகள் அனைத்தும் இந்த கேவலமான நடிகைகளை வைத்தே பிழைத்துக் கொண்டிருக்கின்றன..//
என்ன இருந்தாலும் நீங்க அனுஷ்கா படத்த போட்டு திட்டுனுத தான் எனக்கு கொஞ்சம் வருத்தமே தவிர மத்த எல்லாமே ஏற்கனவே தெரிஞ்ச விஷயம் என்றாலும் சிந்திக்க வேண்டிய விஷயம்...
//அப்பா - முதல்வர்
மகன் - துணை முதல்வர்
இன்னொரு மகன் - மத்திய அமைச்சர்
மகள் - மாநிலங்களவை உறுப்பினர்
பேரன் - மத்திய அமைச்சர்//
இவனுக தமிழ வளர்கரானுகளோ இல்லையோ குடும்பத்த நல்லாவே வளர்க்கரானுக ......
எழுதியது யார் என்பதை விட என்ன எழுதப்பட்டு இருக்கிறது என்பது முக்கியம் இல்லையா?
அந்த வகையில் திருக்குறளும், ஆத்திசூடியும் நல்ல விஷயங்கள் தானே சொல்கின்றன. இலக்கியங்களை அந்த அந்தக் காலக்கட்டத்தின் கண்ணாடியாகப் பார்க்க வேண்டும்.
story re -told வகை கம்பராமாயணம். இதை எல்லாம் கணக்கில் எடுக்காமல் ஒரு மொழியின் சிறப்பை எப்படிச் சொல்ல முடியும்.
ஆனால் வளரும் மற்றும் நாளைய தலைமுறைக்கு சரியாகப் போய் சேராத வரை இந்த செம்மொழிப் பெருமையெல்லாம் வெறும் வெத்து வேட்டு தான்.
(செம்மொழி வளரும் தலைமுறைக்கு வெத்து மொழி http://www.virutcham.com/?p=2371)
//தமிழகத்தை ஆண்ட சில முன்னாள் முதல்வர்கள் தமிழ் நாட்டைச் சார்ந்தவர்களே இல்லை (உதாரணம் எம்.ஜி . ஆர். , ஜெயலலிதா ) // வெட்கப்படவேண்டிய விடயம்.
//இந்தக்கால திரைப்படங்கள் அனைத்துமே விபச்சாரத்தை தூண்டுவதற்கும், நல்ல பண்பாட்டை சீரழிப்பதற்க்குமே உருவாக்கப்படுபவை.// உண்மை.
அட ஏலே ராசா... மர்மயோகி... தலையெல்லாம் சுத்துது ., எப்படி இதெல்லாம் உன்னாலே மட்டும் முடியிது,
மொத்து மொத்துன்னு மொத்திட்டியலே ...
ம்.... நடத்துங்க.... நடத்துங்க...
தமிழ் தமிழ் என்று கலைஞர் பொழைக்க தெருஞ்சவன்
தமிழன் எல்லாத்தையும் மறக்க தெரிஞ்சவன்
//மங்குனி அமைச்சர் said...
பிரிச்சு மேஞ்சிட்டிக ,
உண்மைதான் , ஏதாவது பன்னணனும்//
நம்மால இதுதான் பண்ண முடியும் மங்குனி அமைச்சரே..
//இவனுக தமிழ வளர்கரானுகளோ இல்லையோ குடும்பத்த நல்லாவே வளர்க்கரானுக ...... //
திரு தனிக்காட்டுராஜா..
பெயர்பலகைகளை தமிழில் வைப்பதாலோ..கேவலமான தமிழ் படங்களுக்கு தமிழில் பெயர் வைப்பதாலோ ஒன்றும் ஆகப்போவது இல்லை...
தமிழ்நாட்டை ஒரு முன்மாதிரியாகக் கொள்வதற்கு என்ன செய்யப் போகிறோம்?
//எழுதியது யார் என்பதை விட என்ன எழுதப்பட்டு இருக்கிறது என்பது முக்கியம் இல்லையா?//
நண்பர் திரு virutcham அவர்களே
விசயத்தை விட்டு விட்டு..இல்லாதவைகளுக்கு சிலைகளும், பொய்யும் புனையும் போக்கும்தான் தமிழ் பண்பாடு என்று ஏமாற்றி கொண்டிருக்கிறார்களே அதைப்பற்றி என்னால் சொல்கிறீர்கள்?
//தமிழகத்தை ஆண்ட சில முன்னாள் முதல்வர்கள் தமிழ் நாட்டைச் சார்ந்தவர்களே இல்லை (உதாரணம் எம்.ஜி . ஆர். , ஜெயலலிதா ) // வெட்கப்படவேண்டிய விடயம்.
//இந்தக்கால திரைப்படங்கள் அனைத்துமே விபச்சாரத்தை தூண்டுவதற்கும், நல்ல பண்பாட்டை சீரழிப்பதற்க்குமே உருவாக்கப்படுபவை.// உண்மை. //
நன்றி திரு robin அவர்களே !!!
//அட ஏலே ராசா... மர்மயோகி... தலையெல்லாம் சுத்துது ., எப்படி இதெல்லாம் உன்னாலே மட்டும் முடியிது,//
நன்றி திரு அட..கொய்யால அவர்களே.
என்னால் மட்டுமல்ல நம் எல்லாருலும் முடியும்..ஆனால் பெரும்பாலான பதிவர்கள் காமெடி பதிவுகளையே விரும்புவதாலும்...அதற்க்கு நிறைய ஆதரவு இருப்பதாலும் நாம் இதுபோன்ற பதிவுகளை தவிர்த்து விடுகிறோம்...
பதிவு நமது எண்ணங்களை கொட்டவேண்டிய ஒரு அற்புதமான சாதனம்
அதை முறையாக உபயோகப் படுத்தினால் என்ன?
திருவள்ளுவர் ஒருவரா இல்லையா என்பதில் உங்களுக்கு தான் சந்தேகம். நம் அறிஞர்கள் அவருக்கு முதலில் சமணராக செய்யப்பட baptism ஐ முழுமனதோடு ஏற்றார்கள். இப்போது அவரை கிறிஸ்தவராக baptism செய்யப்பட்டதுக்கும் முழு ஒத்துழைப்புக் கொடுத்து விட்டு, மேலும் தமிழனுக்கு என்று தனி சிந்தனையே இல்லை இந்த நாடே தொமாசியக் கிறிஸ்தவ நாடு என்று பறை சாற்றும் புத்தகத்துக்கு உரை எழுதி விட்டுத் தான் சிந்தனையே இல்லாத தமிழனுக்கு ஒரு மொழி மட்டும் இருந்தது ( இப்போ இருக்கா என்ன ) அப்படீன்னு மாநாடு நடத்த போய் இருக்காங்க.
இங்கே அவர் ஒருவரா, பலரா ? தமிழன் பாரம்பரியம் என்ன என்பதெல்லாம் முக்கியமில்லை. வள்ளுவரோ, தமிழனோ இந்துவாய் இல்லாது இருப்பது மட்டுமே முக்கியம்.
நல்ல கட்டுரை. இதயெல்லாம் நம்ம மக்கள் புரிஞ்சுக்கிட்டு திருந்திடுவாங்கன்னா நினைக்குறீங்க. இல்ல நம்ம அரசியல்வாதிங்கதான் திருந்த விட்டுவிடுவாங்களா.
சிறந்த ஒரு கட்டுரை தந்துள்ளீர்கள். நான் இதுவரை செம்மொழி மாநாடு பற்றி படித்த கட்டுரைகள் இலங்கையில் தமிழர்கள் வாழ்வை சீரழித்த பயங்கரவாத இயக்கம் அழிக்கப்பட்ட போது கருணாநிதி அதை தடுக்கவில்லை, அதனால் அவர் நடத்தும் செம்மொழி மாநாட்டை எதிர்க்க வேண்டும் என்ற வகையை சேர்ந்தனவாக இருந்தன.
நன்றி திரு ஜீவன் பென்னி
நன்றி திரு chandran
sorry for typing in english...
sir...
i inspire your thoughts.Your criticism is neutral.I like it.
i am become ur fan.....
If u have time,visit my blog also
www.pantheraleovicky.blogspot.com
நன்றி திரு ஜீவன் பென்னி அவர்களே..
மக்கள் இதை படித்து "புரிந்துகொண்டால்" சரி..என்ன?
நன்றி திரு chandran அவர்களே..
நாம் தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்த வேண்டாம் என்று சொல்லவில்லை..அதன் மூலம் இது போன்ற குறைகள் களையப்படவேண்டும், நம்ப முடியாத புராணக்கதைகள் ஒழிய வேண்டும் என்பதே நமது ஆவல்..
விடுதலைப்புலிகளை ஆதரிப்பதே தமிழ் பற்று என்று கூறிக்கொள்ளும் இந்திய தேச துரோகிகளும் ஒழிந்தால் இன்னும் நிம்மதி..
thanks mr. my world...
thank you for ur comments..i have visited your blogs..
its very good blogs..please continue..
இந்த இடுகை ஒரு சாட்டையடி.
ஹ்ம்ம்... ஐந்து வருடத்திற்கு ஒரு முறை வாக்களிக்கவும், இப்படி இடுகைகள் இடவும் தான் நம்மால் முடிகிறது தோழரே...
ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமா???
//வருகிறவனிடம் எல்லாம் முட்டாள்தனமாகவும், இளிச்ச வாய்த்தனமாகவும் ஏமாந்துவிட்டு "வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு" என்று சப்பைக்கட்டு..//
உண்மை...
நன்றி தோழி நவயுக தமிழச்சி அவர்களே..
இந்த கட்டுரையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழ் மன்னர்களைப் பற்றி ஏகத்துக்கும் தரக் குறைவாகப் பேசியுள்ளீர்கள்.
//இன்னொரு மன்னன்..பசுங்கன்று ஒன்றை தேர் ஏற்றிக் கொன்ற மகனை அந்த மன்னனே தேர் ஏற்றி கொன்று விடுவானாம். இந்த மன்னனை போல ஒரு முட்டாள் இருப்பானா?//
இந்த நிகழ்வு நடந்திருக்க முடியாது என்று நீங்கள் எதை வைத்து சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. ஒரு பசுவுக்கே அவ்வளவு முக்கியத் துவம் கொடுத்து நேர்மையாக இருந்த மன்னன் மக்களை எப்படி பாது காத்திருப்பான் என்று நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். கதையில் சிறுது மாற்றம் இருக்கலாம், ஆனால் நடந்த நிகழ்வுகள் நிஜமே. தனது சொந்தக் கையையே வெட்டிக் கொண்டவன் பொற்கைப் பாண்டியன். அது பொய்யா? இன்று, இருப்பவன் தன பிள்ளைகளுக்காக ஆறு கோடி தமிழர்களின் வாழ்வையும் அடகு வைத்து சூன்யமாக்கி கொண்டிருக்கிறான், எல்லா அயோக்கியத் தனங்கள், முடிச்சவிக்கித் தனங்கள், சில்லறைத் தன்கள் மொள்ளமாறித் தனங்கள் எல்லாம் செய்கிறான். அன்றைய மன்னர்கள் அப்படியல்ல. மக்களுக்காக வாழ்ந்து மடிந்தார்கள். பின்னர் காலம் மாறிய பின் அவர்களும் மாறியிருக்கலாம், ஆனால் இன்று போல் மோசம் என்றுமே இல்லை. இன்னொன்ரு, திருவள்ளுவர் ஒருத்தரா இல்லை பலரா என்பதை விடுத்து, திருக்குறளில் சொன்ன கருத்துக்களை எத்தனை தமிழர்கள் பின்பற்றுகிறார்கள் என்று பாத்தால் ஏமாற்றமே மிஞ்சும். [மது உண்ணாமை, பிறன் மனை நோக்காமை, பொய் சொல்லாமை, களவு செய்யாமை என்று பார்த்தால் இன்று தமிழகத்தை ஆள்பவனே அத்தனையும் முரிப்பவனாக இருப்பான். இவர்கள் வெங்காய மாநாடு நடத்தி என்ன பிரயோஜனம்? கோவையில் மூவாயிரம் மரங்கள காவு போனது தான் மிச்சம்.
நன்றி திரு Jayadeva அவர்களே....
பசுங்கன்றைக் கொன்றவனை தேர் ஏற்றிக் கொன்ற மனு நீதி சோழனும், தன கையே வெட்டிக் கொண்ட பொற்கை பாண்டியனும் , மதுரையை எரித்த கண்ணகியும், அட்சயப் பாத்திரமும் அனைத்தும் அளவுக்கு மீறிய கற்பனையே தோழரே..
மேற்க்கண்ட கதைகளில் சொல்லப்பட்ட சம்பவங்கள் ஒன்றை மட்டுமே குறிப்பிடப் படுகின்றன..
பசுங்கன்றை கொன்ற மனுநீதி சோழனின் மற்ற சம்பவங்களைப் பற்றி ஏதேனும் குறிப்பு உண்டா?
அதுபோல பொற்கைப் பாண்டியன் மற்ற செயல்கள் என்ன?
எந்த ஒரு காலத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பே இல்லை..
அப்படி உண்மையாக நடந்திருந்தால் இவைகள் உலகம் போற்றும் நிகழ்வுகளாக இருக்கும்....!!!
வெறும் பொய்யைச் சொல்லிக் கொண்டே இருந்தால் நம் மக்கள் திருந்துவது எப்போது?
தமிழர்களாகிய நாம் பெருமையுடன் கூறிக் கொள்ளக் கூடிய அளவுக்கு சமீபத்திய - ஏன் ஒரு நூற்றாண்டுக்குள் நடை பெற்ற உண்மைச் சம்பவங்கள் எதாவதை கூறுங்களேன்..
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?