நேற்றைய தினம் செய்தித்தாள்களில் பார்த்த ஒரு செய்தி இது..
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் சன்சார் சந்த். இவர், சிறுத்தை, புலி உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடி அவற்றின் தோல், பற்கள் போன்றவற்றை விற்றுள்ளார். இவருக்கு ராஜஸ்தான் நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. சன்சார் சந்த் இப்போது ராஜஸ்தான் சிறையில் உள்ளார். தன்னை பரோலில் விட உத்தரவிடும்படி உச்ச நீதிமன்றத்தில் சன்சார் சந்த் மனு தாக்கல் செய்தார். இம்மனு மீது விளக்கம் கேட்டு ராஜஸ்தான் அரசுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இவ்வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜூ, டி.எஸ். தாக்குர் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் வக்கீலை பார்த்து நீதிபதிகள் கூறுகையில், ‘எல்லாருக்கும் பணம்தான் முக்கியம் என்றாகி விட்டது. நாட்டில் எல்லாமே வியாபாரமாக போய் விட்டது. புலிகள், சிறுத்தைகளை வேட்டையாடுவதால் அவை முற்றிலும் அழிந்து விடும் அபாயம் உள்ளது. இப்போது, பணத்துக்காக புலி, சிறுத்தையின் தோல்களை விற்பனை செய்கிறார்கள். நாளை மனித தோல்களையும் விற்பனை செய்வார்கள். அந்த நிலையும் விரைவில் வந்து விடும்” என்று வேதனை தெரிவித்தனர்.
சினிமாக்களில் தற்போது நடந்து வரும் வியாபாரம் என்ன?
டி விக்களில் கலை நிகழ்ச்சிகள் என்ற பெயரில் தற்போது நடந்து வரும் வியாபாரம் என்ன?
விளம்பரங்களில் என்ன நடக்கிறது..?
ஒவ்வொரு நடிகையும் தமது ஆடைகளைக் களைந்து ஆபாசமாக தன்னை காட்டிக்கொண்டு "மனித தோல்" வியாபாரம்தான் நடந்து வருகிறது..
தற்போது நடந்து வரும் தோல் வியாபாரத்தை தடை செய்ய வழிகளை ஆராய்வது எப்போது?
13 comments :
இவங்க எல்லாம் தோல உரிச்சிட்டாங்கன்னா மதிப்பு இல்லங்க.
மர்மயோகி சார் , சினேகாவுக்கு நீங்க இன்னும் ரெண்டு மூணு ஸ்டில் போட்டு இருக்கலாம்
@ஜீவன்பென்னி
நடந்து கொண்டிருக்கும் தோல் வியாபாரத்தை, இனிமேல் நடக்கும் என்று நீதிபதிகள் சொல்வது வேடிக்கையாக உள்ளது..
@மங்குனி அமைசர்
நீர் மங்குனி அமைச்சர் என்பதி நொடிக்கொருதரம் நிரூபித்துக்கொண்டே இருக்கிறீர்
saataiydi
@SENTHIL
நன்றி திரு senthi அவர்களே.
Appo manidha thol viyaabaaram kuttramillaiya
சினேகா போட்டோ ஒரிஜினல் அல்ல, அதை பொது வெளியில் இடுவது தவறு!
செக்ஸ் கல்வி அளிக்கீறேன்னு, சீன் படம் எடுப்பாங்க, அந்த மாதிரி இருக்கு இந்த போஸ்ட்!
@முசமில் இத்ரூஸ்
இத்ரூஸ் அவர்களே..மனித தோல் விற்றால், குற்றம் எனபது மட்டுமல்ல..மாநில விருது, தேசிய விருது, போன்ற விருதுகள், பத்திரிக்கைகளின் மரியாதையும் கிடைக்கும்ங்க
@வால்பையன்
ஹி...ஹி...
மலீக்கா ஷராவத் மேடையிலேயே சொல்லி இருக்குதே ..எவ்வளவு பணம் அதிகம் குடுப்பீங்களோ அவ்வளவு துணியை குறைப்பேன்னு .அதையும் தானே டீவியில் நேரடி ஒளிபரப்பினார்கள் .. கர்ம்மடா சாமீ...!!! இனி வருங்கால சினிமா நிர்வானமாதான் இருக்கும் போல....!!
@ஜெய்லானி
நன்றி திரு ஜெய்லானி அவர்களே..
சந்திரி சாக்கில் நீரும் கடையை போட்டுவிட்டீர்கள் போல தோன்றுதே ?
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?