நினைத்து பாருங்கள்...90 களில்..அப்போதெல்லாம் செல் போன் நமது நாட்டில் புழக்கத்தில் இல்லை...அப்போதும் எல்லா வேலைகளும் நடந்து கொண்டுதானிருந்தன..நல்ல செய்திகளாகட்டும், துயரமான செய்திகளாகட்டும், நம்மை வந்தடைந்துகொண்டுதானிருந்தன.. ஒன்றும் ஆகிவிடவில்லை. பின் எப்படி செல் போனின் சேவை அதிகரித்தது? அதனால் என்ன பெரிதான உபயோகம் ஆகிவிட்டது...
சொல்லப்போனால் சண்டைகளுக்கும், வீண் பேச்சுக்களுக்கும், வதந்திகளுக்கும், கள்ள உறவுகளுக்கும்தான் அது பெரும்பாலும் உபயோகப்பட்டதே தவிர, வேறு பெரிய அளவிலான உபயோகம் ஏதும் இல்லை..அப்படி அதனால் மிகப்பெரிய பலன் அடைந்ததாக சொல்வோருக்கு, அது இல்லாமலும் அந்த பலன் கிட்டி இருக்கும்..இந்த செல் போன்களால் மிகப்பெரிய அளவில் பலன் அடைந்தவர்கள் அதன் உரிமையாளர்கள்தான்...
செல்போனுக்கு முன்னாள் பேஜர் என்றொரு சாதனம் வந்தது..அது ஜஸ்ட் ஒரு வருடம்தான் பரபரப்பாக இருந்தது....செல்போன் உபயோகம் பரவலான பிறகு அதுவும் குப்பைத்தொட்டிக்கு போகவேண்டிய ஒரு சாதனம் என்ற அளவுக்கு கேவலப்பட்டது..ஒரு மாபெரும் தொலை தொடர்பு சாதனங்கள், மிகச்சாதாரண நிலைக்கு ஆளாகியது நமது நாட்டில் மட்டும்தான்..நானும் பல நாடுகளில் பார்த்து இருக்கிறேன்..அப்படி யாரும் மணிக்கணக்கில் செல் போன் பேசுவது இல்லை..இன்னும் சொல்லப்போனால் அவைகள் அவர்ளுக்கு ஒரு போலுதொபோக்கு சாதனமாகவே அதாவது கேம்ஸ் விளையாடும் சாதனமாகவே உள்ளது...அவர்கள் பேச வேண்டும் என்றால்தான் மொபைல் போன் எடுத்து பேசுகிறார்கள்..இல்லையென்றால் அது அவர்களது ஹான்ட் பேக்கில் தூங்குகிறது...நம்மைப்போல நொடிக்கொருதரம் எடுத்து எடுத்து பார்த்துக் கொண்டிருப்பதில்லை..நாம்தான், யாரவது மிஸ் கால் கொடுத்து இருக்கிராகளா, ஏதாவது எஸ் எம் எஸ் வந்து இருக்கிறதா என்று..தூக்கத்தில் கூட எடுத்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்...வித விதாமான் ரிங் டோன், விதவிதமான காலர் டோன் என்று எல்லாவற்றிலும் காசு பார்கிறார்கள்..போதாதற்கு, கால் செண்டர் அழகிகளின் தொல்லைகள் வேறு.
பைக்கில் போகும்போதுதான் தொடர்ந்து கால் செய்து, லோன் வாங்குங்க , எங்க கிளப்ல மெம்பராகுங்க என்று கொல்கிறார்கள்..
செல்போனே அறிமுகமான காலகட்டத்தில், அவுட் கோயிங் காலுக்கு ` 16 ம் இன் கம்மிங் காலுக்கு ` 8 ம் இருந்தது..அப்போதாவது வீண் பேச்சுக்கள் இல்லை..ஆனால் இப்போது...?வீட்டிலிருந்து படிக்கட்டில் இறங்கும்போதே ஏதாவது வேலை சொல்கிறார்கள்.,,,நொடிக்கொருதரம் தேவையற்ற வேலைகள் சொல்கிறார்கள்..
வீண் டென்சன் மன உளைச்சல் தான் இந்த செல்பேசிகளால்
எனக்கு தெரிந்து செல்போன் அட்டன் பண்ணக்கூடாத நேரங்கள் :
சாப்பிடும் நேரம் - ஏனெனில் சாப்பாட்டின் சுவையே தெரிவதில்லை..
பாத்ரூம் செல்லும் நேரம் - போன பேசி முடித்தபிறகு எங்கே வைப்பது என்ற பிரச்சினை .
தூங்கும்போது போனை அணைத்து விடுவது நல்லது - ஒருதரம் முழிப்பு வந்துவிட்டால் மீண்டும் தூங்குவது எவ்வளவு கஷ்டம் எனபது அனுபவிததவருக்கு தெரியும்..
பைக்கிலும் காரிலும் நாம் ஒட்டிக்கொண்டு செல்லும்போது - இதற்கான காரணம் நம் அனைவருக்கும் தெரியும்..
முக்கியமான விஷயங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது
முக்கியமான விஷயங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது
இப்படி பல தருணங்கள்..
சாப்பிடும் முன்பும்
தூங்குவதற்கு முன்பும்
பாத் ரூம் போவதற்கு முன்பும்
குளிக்க போவதற்கு முன்பும்
பைக்கோ, காரோ ஓட்டுவதற்கு முன்பும்..
ஏனென்றால் நாம் இவைகளுக்கெல்லாம் முன்பு போன் செய்வோம், சம்மந்தப்பட்ட நபர் அப்போது போனை எடுத்திருக்க மாட்டார்..பிறகு நாம் இந்த வேலைகளை ஆரம்பிக்கும்போது அவர் போன பண்ணுவார்..மிகப்பெரிய தொல்லையாக இருக்கும்.
எனவே மிக அவசியமான தேவைகளுக்கு மட்டுமே செல்போன்களை உபயோகப் படுத்த நம்மை பழக்கி கொள்வது நன்மையாக இருக்கும் என நினைக்கிறேன்.
எனவே மிக அவசியமான தேவைகளுக்கு மட்டுமே செல்போன்களை உபயோகப் படுத்த நம்மை பழக்கி கொள்வது நன்மையாக இருக்கும் என நினைக்கிறேன்.
9 comments :
என்னா தல கேர்ள் பிரண்டு கூட சண்டையா ???
ஆனால் இதை ஒரு "ஸ்டேடஸ் " காட்டும் சாதனமாக மாற்றிகொண்டுவிட்டனர் என்பதே அவலம். அது ஒரு வசதிதான். அதற்குமேல் ஒன்றுமில்லை . ஆனால் இன்று மெத்த படித்த ஆண்களும் பெண்களும் கூட இந்த மாய வலையில் விழுந்து செல் போனே கதி என்று தன்னை மறந்து இயங்கும் நிலைதான் பரிதாபம். இதனால் எத்தனை அகால மரணங்கள்? நிறைய பெண்கள் ரோட்டில் செல்லும் போதும், ரயில்வே கிராசிங்கில் செல்லும் போதும் காதில் வைத்துக்கொண்டு தன்னை மறந்து நடக்கும் போது தங்களை மரணம் எதிர்கொள்கிறது என்றுகூட தெரிவதில்லை.
இது பற்றிய விழிப்புணர்வு அதிகம் வேண்டும்தான். நல்ல பதிவு.
’வரங்களே சாபங்களாகுமென்றால் இங்கே தவங்கள் எதற்காக’(அப்துல்ரஹ்மான் கவிதை)
செல்பேசியும் அப்படித்தான்.இயக்கும் நம் விரல் நுனிகளுக்கே கட்டுப்பாடு தேவை.
ஜெர்மனியில் உள்ளவர்கள் அலுவலகத்திற்குள் வந்ததும், தங்களது செல்போன்களை அணைத்து கைப்பைக்குள் வைத்து விட்டு, அலுவலகத்தில் அவர்களுக்கென்று கொடுக்கப்பட்டுள்ள செல்போன்களை எடுத்துக் கொள்கிறார்கள்(நமது ஊரில் இப்படிக் கொடுத்தால் அவ்வளவுதான்).அலுவலகத் தேவை தவிர பிறகு எதற்காகவும் அவர்கள் போனைத் தொடுவதில்லை..
ஒரு வாரத்திற்கு முன் போன் செய்து விட்டு வருகிறேன் என்று சொல்லி விட்டால், அவ்வளவுதான்.. பிறகு கால செய்யவே மாட்டார்கள்.. சரியாக வந்து விடுவார்கள்.. நம்மைப் போல "i am coming tomorrow, i started, i am in bus, wait for me in the bus stand, i am going to get down, i am seeing you now.. stand there..., i reached, mapla thirumbi paarraa..." என்று அடுக்கடுக்காக தகவல் அனுப்பும் பழக்கம் எல்லாம் அங்கு இல்லை.. நேரத்தை பொன் போல மதிக்கிறார்கள்...
நல்லதொரு பகிர்வு..
நன்றி நண்பரே..
சாமக்கோடங்கி..
நண்பர்கள் மங்குனி அமைச்சர், கக்கு மாணிக்கம், எம். ஏ. சுசீலா, பிரகாஷ் (ஏ) சாமக் கோடங்கி ஆகியோர்களுக்கு நன்றி..
புதுசா செல்ஃபோன் பயன்படுதுபவர்கள் எல்லோருக்கும் பிலிம் காட்ட இடுப்பில் சொருகிக்கொள்பவர்களை
கண்டால் ஒரே எரிச்சலாகவரும்., புது நடிகைகள் அனேகம்பேர் இரண்டு ஃபோன் கையில் எதுக்கு வசதியான
கஸ்டமர்களை பிடிக்க
ஆமா ஏங்க நீங்க ஜீன்ஷ் டீ சர்ட் அனிபவரோ? பில்லு எகிரி போச்சா ? டாய்லெட் வர போய் ஃபோன் பற்றி ஆராய்ச்சி செஞ்சி எழுதியிருக்கிங்கே keep it up
நன்றி திரு உன்னைப் போல் ஒருவன்..
நல்ல பதிவு...நன்றி!
நன்றி திரு சுந்தரா அவர்களே.
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?