Pages

Tuesday, October 30, 2012

டுவீட்டர்கள் என்றால் கூச்ச்சளிட்டுக்கொண்டிருப்பவர்களா?


1. அழகிய ஆபத்து - நடிகை அனுஷ்காவின் பேட்டி
2. அழகானவர்களின் சாய்ஸ் - ஹிந்தி நடிகை பிபாஷா பாசுவின் பேட்டி 
3. முகத்தின் முகவரி - நடிகை ஹன்ஷிகா மோத்வானி பேட்டி 
4. உதடுதான் அழகை கூட்டிக்காட்டும் - நடிகை தீபாஷா பேட்டி 
5. பாலிவுட் பியூட்டி - நடிகை தீபிகா படுகோனே பேட்டி
6. எண்ணெய் பசை உஷார் - நடிகை மல்லிகா ஷெராவத் பேட்டி 
7. கால் அழகு - நடிகை பிரியங்கா சோப்ரா பேட்டி 
8. மரு போயே போச்சு - நடிகை கரீனா கபூர் பேட்டி 
9. உடையழகு - நடிகை கஜோல் பேட்டி 
10. சிவாஜி எவ்வளவு வருத்தப்பட்டிருப்பார்? - நடிகர் பாண்டு பேட்டி 
11. கண்களில் நாட்டியம் ஆடுங்கள் - நடிகை ஜனனி அய்யர் பேட்டி 
12.  டாப் 10 பியூட்டி மாடல்கள் என்று ஆங்கில மாடல் அளழிகளின் ஆபாச படங்கள்.
13. புடவை கட்டினால் நீங்களும் தேவதைதான் - நடிகை நந்திதா பேட்டி 
14. ஆண்களுக்கு பிட்னெஸ்தான்  அழகு - நடிகர் கணேஷ்ராம் பேட்டி 
15. புன்னகைதான்  பெண்ணுக்கு அழகு - நடிகை சோனா பேட்டி 

இடையிடேயே நிறைய விளம்பரங்கள், ஒரு சாமியார் (சாய்பாபா)  பற்றி நல்லவிதமாகவும், இன்னொரு சாமியார் (நித்யானந்தா - மதுரை ஆதீனம் ) பற்றி விமர்சித்து ஒரு பக்கமும், மேலும் ஒன்றிரண்டு ஒருபக்க கதைகள் - மற்றும் ஜோக்குகள்..இதுதான் இந்த வார குமுதம் ..

1. பீட்சா - சினிமா விமர்சனம்
2. சிக்ஸ் பேக் சிங்கம் சைஸ் ஜீரோ ஹீரோ - நடிகர் மனோபாலா பேட்டி 
3. ஜெயலலிதாவின் ரசிகன் என்பதற்காக நான் வெட்கப்படவில்லை - நடிகர் சரத்குமார் பேட்டி 
4.  ஹீரோக்களிடம் இருக்கும் டெடிகேஷன் ஹீரோயின்களிடம் இல்லை - சினிமா இயக்குனர் முருகதாஸ் பேட்டி..
5. அடியே எங்கே கூட்டிப்போறே - நடிகை கார்த்திகாவின் இரண்டு பக்க படங்கள்..
6. இன்பாக்ஸ் - நடிகர் நடிகைகள் பற்றிய செய்திகள் 
7.  பிரியமானவர்களின் பிரியம் வேண்டும் - நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டி 
8. வாசகர் கேள்வி - பாக்யராஜ் பதில்கள் - நடிகர் இயக்குனர் பாக்யராஜ் பதில்கள் 
9.  முகம் - பேட்மிட்டன் விளையாட்டு வீராங்கனை சைனா நேஹ்வால் பேட்டி 
10. சின்மயி vs கீச்ச்சர்கள் - சினிமாபாடகி சின்மயி - டுவீட்டேர்கள் பற்றிய செய்தி...

இடையிடையே இலக்கியம் என்ற பெயரில் யாருக்கும் புரியாத கதைகள் கட்டுரைகள் , பொக்கிஷம் என்ற பெயரில் பழங்காலத்து சாமியார் ஒருவரைப்பற்றிய கட்டுரை..இது ஆனந்த விகடன்..

இன்றைக்கு தமிழ்பற்று எனபது - தேச துரோக செயல்களான விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு அளிப்பதும், கூடங்குளம் மின் நிலையத்தை செயல்படாமல் தடுப்பதும், அதுபோக பாடகி சின்மயி பற்றி விமர்சிப்பதும்தான் என்று டாஸ்மாக் புகழ் தமிழ்நாட்டு தமிழ்பற்று வியாபாரிகள் தத்தமது நேரத்தை செல்வழித்துக்கொண்டிருக்க, 

தமிழின் நம்பர்  ஒன என்று பீற்றிக்கொள்ளும் ஆபாச ஆனந்த விகடனும், தமிழர்களின் இதயத்துடிப்பு என்று ஓலமிடும் ஆபாச குமுதம் இதழ்களும் சிநிமாக்கூத்தாடிகளின் ஆலோசனைகளைத்தான் நீங்கள் படிக்கவேண்டும் என்று ஒவ்வொரு இல்லங்களிலும் ஆபாசைத்தை புகுத்தி தமிழனை சீரழித்துக்கொண்டிருக்கின்றன..

மேற்கண்ட குறிப்புகளெல்லாம் இந்த சிநிமாக்கூத்தாடிகள் சொன்னால்தான் மக்களிடம் போய் சேரும் என்றும் இந்த ஆபாச வியாபாரிகள் வியாக்கியானம் கூறுவார்கள்..தமிழ்பற்று வியாபாரிகளும், தமக்கு பொழுது போக டுவீட்டரிலும், பேஸ்புக்கிலும் தமக்கு பிடிக்காதவர்களை தமிழின விரோத முத்திரை குத்தி எழுதிவிட்டு, வீட்டுக்குள்ளேயே தமிழனின் மூளையை மழுங்கடிக்கும் இதுபோன்ற  ஆபாச  புத்தகங்களை ஆவலோடு வாங்கி படித்து புலன்காகிதமடைவார்கள்..

அதுவும் இந்த ஆபாச விகடனை பாருங்கள்..
சின்மயி  vs  கீச்ச்சர்கலாம்..அதாவது டுவீட்டேர்களை கீச்ச்சர்கள் என்று மொழிப்படுத்தி இவர்கள் எல்லாம் வீணாக கூச்ச்சளிட்டுக்கொண்டிருப்பவர்கள்தான் என்று நக்கலடிக்கிறான்..

சிக்ஸ் பேக் சிங்கம் சைஸ் ஜீரோ ஹீரோ,  ஹீரோக்களிடம் இருக்கும் டெடிகேஷன் ஹீரோயின்களிடம் இல்லை , இன்பாக்ஸ் என்றெல்லாம், ஆங்கிலத்தலைப்பில் வைத்துவிட்டு, டுவீட்டர்களை மட்டும் கீச்ச்சர்கள் என்று சொல்வதன் மூலம் இவன் தமிழை வளர்க்கிறானா  இல்லை தனது ஜாதி விசுவாசத்தை காட்டுகிறானா..?

டாஸ்மாக்கில் குவாட்டர் அடித்துவிட்டு, டுவீட்டரிலும், பேஸ்புக்கிலயும் தமிழ்பற்று வியாபாரம் செய்யும் தமிழ் வீரர்கள் பதில் சொல்லட்டுமே...


Saturday, October 27, 2012

"போடா நாயி..!"- பத்திரிக்கையாளர்களுக்கு விஜயகாந்த் கொடுத்த பட்டம்...



இன்று விமானநிலயத்திர்க்கு வந்த நடிகர் மற்றும் அரசியல்வாதி விஜயகாந்தை மறித்து - நேற்றும் இன்றும் அவர்கட்சி எம் எல் ஏக்கள் ஜெயலலிதாவை சந்தித்தது தொடர்பான கேள்விகளுக்கு ஆவேசமான விஜயகாந்த், நிதானமிழந்து - பத்திரிக்கையாளர்களைப்பார்த்து "போடா நாயே....உன் பத்திரிக்கையாட எனக்கு சம்பளம் தருது?" என்று ஆவேசமாக நிதானம் இழந்து  கூச்சல் போட்டார்..

வெறும் நடிகனாக வந்த விஜயகாந்தை, ஒருபடத்தில் "கேப்டன்" என்று அழைக்கப்பட்டதால் (கேப்டன் பிரபாகரன்) இன்றுவரை கேப்டன் என்ற அடைமொழியை வைத்துக்கூப்பிட்டு, சினிமா நடிப்பை நிஜ வாழ்க்கையில் நுழைத்தும் மக்களை மூளைச்சலவை செய்துவந்த பத்திரிக்கைகளுக்கு - கொடுத்த காசுக்கு -நாய் போல  நன்றியை காட்டிய பத்திரிக்கையாலர்களுக்க் இன்று விஜயகாந்த் "போடா நாயே" என்று விளித்ததின்  மூலம் உண்மையை மக்களுக்கு சொல்லிவிட்டார்,,,

இந்த விஜயகாந்த் என்னத்தை கிழித்தார் என்று இவருக்கு "கேப்டன்" பட்டம் கொடுத்தார்கள்? பத்திரிக்கையாளன் கவர் வாங்கிக்கொண்டு தன நன்றி விசுவாசத்தை காட்டியதால்தான் இன்று இந்த விஜயகாந்த் இந்த நிலைக்கு வரமுடிந்தது. அதே நேரம் காசுக்கு கூழைக்கும்பிடு போடுபவன் - ஒரு நேரத்தில் அதற்கான விலையை கொடுத்தே ஆகவேண்டும்.இன்று நாய் என்று அழைக்கப்பட்டது அதன் விளைவே..

இருந்தாலும் - ஆனந்த விகடனுக்கு - இன்னும் அதிக விசுவாசம் போல...விஜயகாந்த் ஜெயா  டிவி நிருபர்களை திட்டியதை  மட்டும் வெளியிட்டு - மற்ற செய்திகளை எடிட் செய்து தனது விசுவாசத்தை காட்டிக்கொண்டான். நாளைக்கு இதற்கும் வேறு ஏதோ விளக்கம் கொடுத்து தான் என்றும்  - எலும்புத்துண்டுக்கு வாலாட்டும் நாய்தான் என்றும் நிரூபிப்பான்.

அது கிடக்கிறது ...மக்கள் நலனில் அக்கரைகொண்டா அந்த எம் எல்  ஏக்கள் ஜெயாவை சந்தித்தார்கள்? ..விஜயகாந்த்தின், மூர்க்கமான ஜெயா எதிர்ப்பு நிலையால், மற்ற எம் எல்  ஏக்களை போல தாமும் சம்பாதிக்க முடியவில்லையே என்ற சுய விருப்பன்றி வேறு என்ன இருக்க முடியும்? 

விஜயகாந்த் தன்னால்தான் வெற்றிபெற்றார் என்று எண்ணிக்கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் பழிவாங்கும் முயற்சி இந்த அளவில் வெற்றி பெறுவதற்கு காரணமும் இந்த பணத்தாசை  - பேராசை பிடித்த அரசியல் வியாதிகளுக்கு இருக்கிறது. இதை இந்த பத்திரிக்கைகள் வெளிகொண்டுவருமா? 
ஆனால் அரசியல் வியாதிகள் விட்டெறிந்த எலும்புத்துண்டுக்கு - வாலாட்டியே பழக்கப்பட்டுப்போன இந்த ஆபாச ஊடகங்கள்- நாளை இவர்கள் நிலையையும் நியாயப்படுத்தியே செய்தி வெளியிட்டு - தமது விசுவாசத்தை காட்டி, விஜயகாந்த் கொடுத்த பட்டத்திற்கு தாம் ஏற்றவர்கள்தாம் என்று எப்போதும் நிரூபித்துகொண்டுதானிருக்கும் .



Thursday, October 25, 2012

மாமியார் உடைத்தால் மண்குடம்..சின்மயி உடைத்தால்...?


இந்த பழமொழி காலம்காலமாக சொல்லப்பட்டு வந்தாலும் அதைப் பற்றிய அனுபவம் ப்ளாக்ஸ் மற்றும் பேஸ்புக் போன்ற இணையதளங்களை பயன்படுத்தும்போது ஏற்பட்டது..

பேஸ் புக்கை பெரும்பாலும் ஆக்கிமித்திருப்போர் நாத்திகம் பேசுவோரும், தமிழ்பற்று வியாபாரிகளும்தான்..அவர்கள் இந்தியாவின் இறையாண்மைக்கு விரோதமாக என்னவேண்டுமென்றாலும் எழுதிக்கொள்ளலாம. காரணம் கேட்டால் தமிழ்பற்று...அது வியாபாரம் என்று தெரியாத மூடர்களும் அதற்க்கு ஒத்தூதி வருகிறார்கள். பாடகி சின்மயி  மீனவர் பிரச்சினை பற்றி எழுதியது இன்று காவல்துறை தலையிடும் அளவுக்கு வந்து விட்டது..


நான் கேட்கிறேன்...எப்போதும் இலங்கை கடற்படை சுட்டுக்கொண்டுதான் இருக்கிறான்...இது தெரிந்தும் ஏன் இந்த மீனவர்கள் கடல் எல்லையை தாண்டவேண்டும் ....இங்குள்ள ஊடகங்களும் , அரசியல் வியாபாரிகளும் தமிழ்பற்று என்ற பெயரில் அவர்களை - உசுப்பேற்றி பெரும் உயிரிழப்புகளுக்கு காரணமாகின்றனர் என்றே கருதுகிறேன் .

இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தினால் " இலங்கை கடற்படை அட்டூழியம்" என்றும் அதே சமயம் இலங்கை  மீனவர்கள் எல்லைமீறும்போது "இலங்கை மீனவர்கள் அத்துமீறல்" என்றும் தலைப்பிட்டு நமக்கு மட்டுமே சாதகமாக இந்த பத்திரிக்கைகள் எழுதுவதும் ஒரு காரணம்..

தமிழ் தமிழ் என்று அலறும் இந்த வியாபாரிகலேல்லாம் ஒரு விஷயத்தை மறந்து விட்டார்கள்..நமது மீனவர்கள் கடல் எல்லையை அத்துமீருவதால் பாதிக்கபடுவது சிங்கள மீனவர்கள் இல்லை - இலங்கையை சேர்ந்த, தமிழ் மீனவர்கள்தான் .பத்திரிகை முட்டாள்களும் அரசியல் முட்டாள்களும் இலங்கை எது செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு - கிறுக்குத்தனமாக அதை எதிர்த்து எழுதுவதென்றும் முடிவில் இருக்கிறார்கள் ..இது அப்பட்டமான வியாபாரம் என்று தெரிந்தும்  வலையுலக, மற்றும் சமூகவளைத்தள மேதாவிகளும் தமது அறிவு ஜீவித்தனத்தை வெளிக்காட்ட தமிழ்பற்று வியாபாரத்தை தொடர்கின்றனர்.

இதுகடக்கட்டும்  சமீபத்தில்  பேஸ்புக் வலைத்தளத்தில் ஒரு தோழி அறிமுகமானார்..தொலைபேசி எண்களை  பரிமாறும் அளவுக்கு நண்பர்களாகிவிட்ட நிலையில் திடீரென்று  அந்த தோழி என்னுடன் பேசுவதையும் நிறுத்திவிட்டார் எனது பெயரையும் நண்பர்கள் லிஸ்டில் இருந்து நீக்கிவிட்டார்..

காரணம் புரியாத நிலையில் தொடர்ந்து அவருக்கு எஸ் எம் எஸ் அனுப்பிய போதுதான் விஷயம் தெரிந்தது : நமது நாட்டில் நடைபெறும் மதம் என்ற பெயரில் மூடத்தனங்களும் சிலை வணக்கங்களையும் எதிர்க்கும்  இனைப்புகளை நான் தொடர்ந்து வெளியிட்டதுதான் காரணமாம்.

நாத்திகர்கள் , இலக்கியவாதிகள் என்று மக்களின் அறியாமையை கண்டித்தால் அதற்க்கு பெயர் பகுத்தறிவு..எம்மை போன்றவர்கள் கூறினால் நட்பு முறிவு 

இதைத்தான் மாமியார் உடைத்தால் மண்குடம் , மருமகள் உடைத்தால் பொன்குடம்  என்று கூறினார்களோ ? 



Monday, October 22, 2012

பேஸ் புக் கவலைகள்



சிலவருடங்களுக்கு முன்பு நம்மை ப்ளாக்ஸ்பாட் என்னும் வலைத்தளம் ஆக்ரமித்திருந்தது என்றால் தற்போதைய காலகட்டங்களில் பேஸ்புக் என்ற சமூக இணையத்தளம் பெருமளவு நமது நேரங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கி இருப்பது கண்கூடாக தெரிகிறது..இதற்குமுன் வலைத்தளங்களில் எழுதிக்கொண்டிருந்த பெரும்பாலான பதிவர்கள் தற்போது பேஸ்புக் சமூக வலைத்தளங்களில் தத்தமது கருத்துக்களை பதிவதிலிருந்து இதை தெரிந்துகொள்ளலாம்.

காரணம் வலைத்தளங்களில் ஒரு பதிவை பதிவிட எடுக்கும் நேரம் அதிகம்..அனால் பேஸ்புக் வலைத்தளத்திலோ ஓரிரண்டு வரிகளில் சுலபமாக பதிந்துவிட்டு சென்றுகொண்டிருக்கலாம்.

ஆனால் ஒரு விசயம்தான்  புலப்படமாட்டேன் என்கிறது..முன்பு வலைப்பதிவர்கள், ஒட்டுப்போடுங்கள் என்று கேஞ்சிக்கொண்டிருந்ததுபோல தற்போது பேஸ்புக் கில், லைக் போடுங்க ஷேர்  பண்ணுங்க என்று கேஞ்சிக்கொண்டிருக்கிரார்க்க...இரண்டிலும் தாம் வெகுவாக அறியப்படவேண்டும் என்ற ஆவலே மிஞ்சி இருக்கிறது . ஷேர்  செய்வதில் கூட செய்தி பலரை சென்றடையும் என்றாலும் லைக் போடுவதால் என்ன பயன் என்று அறியமுடியவில்லை. யாரும் அறிந்திருந்தால் தயவு செய்து விளக்கவும்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதிவிட்டு வருகின்றனர். காதல் கவிதைகள், காமகவிதைகள், சமூக கவலைகள், என்றாலும் பெரும்பாலும் தமிழ்பற்று - கூடங்குள அணுமின் நிலைய எதிர்ப்பு என்ற பெயரில் தேச துரோக ஆதரவாளர்களின் கூக்குரலை காணமுடிகிறது .. சந்தடி சாக்கில் சிலர் சாலையோர வாசிகளைப்பற்றிய அக்கறையையும் வெளியிட்டு தாங்கள் மனித உரிமைக்காவலர்கள் என்று பறை சாற்றுவதில் ஆர்வமாக இருக்கின்றனர்.

அறிவாளிகள் என்று தம்மைத்தாமே நினைத்துக்கொண்டிருக்கும் இதுபோன்ற மனித உரிமைக்காவளர்கள் (?) சாலையோர வாசிகளைப் பற்றி கவலைப்பட்டால் போதும் என்று நினைத்துக்கொண்டு , அதே சாலையோர வாசிகளால் அவதியுறும் பெரும்பான்மை மக்களை அலட்சியபடுத்தி வருவதோடு சாலையோர வாசிகளின் இந்த நிலைக்கு அரசை குற்றம் சாடும் அரியாமையும் செய்து தம்மை அடையாளப்படுத்த முயல்வதுதான் வேடிக்கை.

வேலை செய்து வாழ்பவன் அனைவரும் உழைப்பாளிதான் இதில் கம்ப்யூட்டர் வேலை என்ன, தள்ளு வண்டி இழுக்கும் வேலை என்ன?அவனவன் தத்தமது திறமைக்கேற்ப உழைத்து வேலை செய்து சம்பாதிக்கிறான்.இதில் அலுவலகத்தில் ஏசி யில் அமர்ந்து வேலை செய்வதால் இவர்களுக்கேன் எரிகிறது?
சாலையோரத்தில் வசித்து கடினமான வேலைகளை செய்யும் அந்த ஏயை(?)கள்  செய்யும் அநியாயம் இவர்கள் கண்ணை மறைக்கிறதா அல்லது அதை கண்டுகொண்டால் தாம் அறிவாளி அல்ல என்று உணரபடுவோம் என்ற பயமா ?
நடுத்தர வர்க்கத்தினரின் வீட்டு வெளியே ஆக்கிரமித்துக்கொண்டு அரசின் இலவசங்கள் அனைத்தையும் அனுபவித்துக்கொண்டு - விலைவாசிக்கும் காரணமாவது மட்டுமல்லாமல் - திருட்டு மின்சாரம் திருடி தமது இலவசங்களை - டிவி மிசி கிரைண்டர் என்று நமது வரிப்பணத்தில் வாழும் இவர்களைவிட நடுத்தர மக்கள்தான் உண்மையில் அவதியுறுகிறார்கள் என்று இந்த மடையர்கள் உணர்வது எப்போது?

மீன்பாடி வண்டிகளையும் ரிக்ஷா   வண்டிகளையும் வாகனங்களுக்கு   இடையே  புகுத்தி பெரும் டிரபிக்க் நெரிசல்களுக்கு காரணம் இந்த சாலையோர வாசிகளின்  முரட்டுத்தனமான பொறுக்கித்தனம்தான் என்று   இந்த மாமேதைகளுக்கு ஏன் உரைக்க  மாட்டேன் என்கிறது?

நெரிசலான பகுதிக்குள் அதிகபாரம் ஏற்றிக்கொண்டு மாட்டுவண்டிகளையும், மீன்பாடி  வண்டிகளையும் கொண்டுவருவதோடு மட்டுமல்லாமல், மக்களையும் வாகனங்களையும் - இடித்து காயப்படுத்தியும் , பெரும் நெரிசலையும்  உண்டுபண்ணிவிட்டு கொஞ்சம்கூட குற்ற உணர்வு இல்லாமால் திமிர்த்தனமாக செல்வதற்கு என்ன பெயர் ?

இந்த மழைக்காலத்தில் சாலைகளில் சாக்கடைகள் தேங்கி நிற்பதற்கு யார் காரணம்? சாலைகளில் வசித்துக்கொண்டு அங்கேயே குளித்தும் அசுத்தம் செய்தும் குடித்தும் கும்மாளமிட்டும் - கோவில் திருவிழா என்ற பெயரில் முழு சாலைகளையும் ஆக்கிமித்துக்கொண்டும் அநியாயம் செய்வது யார்.

ஆயுத பூஜை என்ற பெயரில் - சாலைகளில் பூசணிகாயை உடைப்பது தேங்காயை உடைப்பதும் யார்?
 இதானால் ஏற்படும் விபத்துக்களுக்கும் உயிரிழப்புக்களுகும் காரணம் யார்?
எல்லவற்றையும் மறந்து அவர்கள் ஏயைகள்  (தரைப்படைகள் ஏழையை அவ்வாறுதான் அழைக்கும் ) என்று வக்காளத்து வாங்குவதால் நீங்கள் அறிவாளியாகிவிடமாட்டீர்கள் அறிவாளிகளே...

Friday, October 19, 2012

தந்தையும் மகளும் காதல் ஜோடியாக நடிக்கும் திரைப்படம் - இதைவிட கேவலம் உண்டா?



எஸ் எ சந்திரசேகர் என்ற இயக்குனர் தனது மகனை நடிகனாக்க பல ஆபாச காட்சஈகளை புகுத்தி ஏறக்குறைய நீலப்படம் போன்றே பல தமிழ்படங்களை தந்தார்...


டி.ராஜேந்தர் தமது மகனை காதல் காட்சியில் நடிக்கவைத்து - தந்தைக்குரிய கடமையாற்றினார்...
பாக்யராஜ் தமது மகளையும், மற்றொரு நடிகனுடன் நடிக்கவைத்து புளங்காகிதமடைந்தார்..
ரஜினி என்ற வயதான ஒரு நடிகருடன் தனது மருமகள் கூத்தடித்ததை கைத்தட்டி மகிழ்ந்த சினிமா பாரம்பரிய பிக் பீ....அமிதாபட்சனை பார்த்தோம்..

அதுபோல தனது தோழியை தனது கணவனுடன் எவ்வளவு ஆபாசமாக நடிக்க வைக்க முடியுமோ அப்படி செய்த ரஜின்காந்தின் மகள் ஐஸ்வர்யாவை கண்டோம்..

சத்யராஜும் அவர் மகன் சிபியும் சேர்ந்து நமிதா என்ற நடிகையை ஜொள்ளுவிட்டு நடித்து கலைச்சேவை புரிந்து தமிழ் சேவையும் புரிந்து வருகிறார்கள்...

இதுபோன்ற கலை செவகர்களைஎல்லாம் விஞ்சிவிட்டார் ஒரு கன்னட படத்தயாரிப்பாளர்....

பி பி ஸ்ரீனிவாஸ் என்ற ஒரு கேவலமான ஒரு நடிகனே  "முஸ்சென்ஜெயா கெலாதி" என்ற கன்னடப்படத்தை தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடித்து தான் பெற்ற மகளையே தனக்கு ஜோடியாக்கிக்கொண்டு கட்டிபிடித்து ஆபாச காட்சிகளில் நடித்து தந்தை மகள் உறவையே கேவலப்படுத்தி உள்ளான்..இதற்க்கு இவன் மகளான ஷாலினி என்பவளும் சேர்ந்து கூத்தடிப்பதுதான் அவலத்திலும் அவலம்...

ச்சே..எப்படி இந்த கூத்தாடிகளுக்கு பெற்ற மகளையே காமக்கண்ணுடன் பார்க்கும் மனம் வந்திருக்கிறது..கலை என்ற பெயரில் கூத்தடிக்கும் இந்த சினிமாகூத்தாடிகளின்  அந்தரங்கம் இதைவிட இன்னும் கேவலமாக இருக்கும் என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்? 

சினிமா உலகம் கேவலமான உலகம் மட்டுமல்ல - கேடுகெட்ட உலகம் என்பதையும் இன்னும் புரிந்துகொள்ளாமல் இருப்பது தமிழ் மூடர்களின் தலைஎழுத்து...


Thursday, October 18, 2012

கமலஹாசனின் இயற்பெயர் பார்த்தசாரதியா?




நடிகர் கமலஹாசனின் இயற்பெயர் யாருக்காவது தெரியுமா ?

இத்தனை நாட்களாக அவர் பெயர் கமலஹாசன் என்றே நினைத்திருந்தேன்...

ஆனால் அவர் இயற்பெயர் "பார்த்தசாரதி"யாமே?

இந்த இணைப்பை பாருங்களேன்..

http://in.omg.yahoo.com/photos/celebs-and-their-eal-names-slideshow/kamal-haasan-photo-1335780084.html

Monday, October 8, 2012

அனுபவக்கவிதை....


அனுபவக்கவிதை....
-------------------------
"பிள்ளைகளை இரண்டு சக்கர வாகனத்தில்
அழைத்துச் செல்கையில்
அருகில், பின்னாடி, எதிரில் வரும்
அனைத்து வாகன ஓட்டிகளும்
ராட்சசர்களாகவே தெரிகிறார்கள்.!"


தப்பு செய்தால்....?
-----------------

கடந்த வாரத்தில்   அண்ணா மேம்பாலத்தை கடக்கையில் அமெரிக்க துணை தூதரகத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அண்ணா மேம்பாலத்திலும் வரிசையாக போலீஸ் பூத்த்கள் போடப்பட்டு காவல் துறையினர் பாத்துகாப்பில் ஈடுபட்டிருந்தனர் ..இன்னும் சிறிது காலத்தில் அண்ணா மேம்பாலம் அமேரிக்கா மேம்பாலம் என்றுகூட அழைக்கப்படலாம்..(தமிழர்களுக்கு அடிமையாவதில் அவ்வளவு மகிழ்ச்சி..)

அதைப்பார்க்கையில் - "என்னதான் உலக வல்லரசாக இருந்தாலும் தப்பு செய்தால் - தான் ஆடாவிட்டாலும் தன சதை ஆடும்" என்றுதான் தோன்றியது ..

கேடுகெட்ட கலாசாரம்.
-----------------------------


இது நமதூர் அழகிகள் டிவியிலும் சினிமாவிலும் டிச்கொத்தேக்களிலும் அவுத்துப்போட்டு ஆடுவது பற்றியல்ல.
சின்னத்திரைகளில், சூப்பர் சிங்கர், ஜூனியர் சூப்பர் சிங்கர் போன்ற கூத்தடிக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சிறுவர்களுக்கு ஓட்டுப்போட - எஸ் எம் எஸ் அனுப்பவும் இணையதளத்துக்கு சென்று வாக்களிக்கவும் என்றும் சமீபகாலமாக அவர்களின் பெற்றோர்கள் போஸ்டர் அடித்து ஒட்டி வருகிறார்கள்..இன்னும் இவர்களின் பேராசை எதில் போய்  முடியப்போகிறதோ... தெரியவில்லை...

Thursday, October 4, 2012

புகைப்படம் எடுப்பவன் தீவிரவாதி என்றால் திரைப்படம் எடுப்பவன்? .....

சமீபகாலமாக நமது நாட்டில் நடைபெற்று வரும் கைது சம்பவங்களைப்பார்த்தால் நடப்பது ஒரு காமெடி தர்பார் எனபது போலத்தான் புலப்படுகிறது..

சில வாரங்களுக்கு முன்பு இராணுவ ரகசியங்களை புகைப்படம் எடுத்ததாக அதிராம்பட்டினத்தை சார்ந்த அன்சாரி என்பவரை தீவிரவாதி என்று போலீசார் கைது செய்தனர். சினிமாவில் ஆர்வம் உள்ளவரான அவர் ஒரு வெங்காய வியாபாரி..அவர் எடுத்து வைத்திருக்கும் புகைப்படங்களை விட, கூகுள எர்த்தில் அதிக தகவல்கள் கிடைக்கும். அல்லது பாக்கிஸ்தான் எல்லையிலேயே குடி இருக்கும் - கேப்டன் படங்களில் இருக்கும்..அல்லது, சுப்ரீம் ஸ்டார் அல்லது ஆக்ஷன் கிங் படங்களில் இதை விட அதிக தகவல்கள் இருக்கும்..

இது போன்ற கூத்தாடிகளுக்கெல்லாம் விருதுகளும் வி ஐ பி (ஆபாச விகடன் கூத்தாடிகளுக்கு வழங்கும் பட்டம்) என்ற மரியாதையும் வழங்கிவிட்டு, இது போன்று புகைப்படம் எடுப்பவரை எல்லாம் தீவிரவாதி என்று காமெடி பண்ணுவது போலிஸ் இலாகாவின் அறியாமையைத்தான் காட்டுகிறது

அதே போல "ட்ரீம் லைனர்" என்ற விமானாத்தை புகைப்படம் எடுத்ததற்காக இருவரை தீவிரவாதிகள் என்று கைது செய்திருக்கின்றனர் நமது போலீசார்.

விமானம் கடத்துவது எப்படி? குண்டு வைப்பது எப்படி, ? அரசியல் தலைவர்களை கொள்வது எப்படி? குழந்தைகளை கடத்துவது எப்படி, அவர்களை வைத்து பெற்றோர்களை மிரட்டி பணம் சம்பாதிப்பது எப்படி,? கொலை செய்வது எப்படி ? திருடுவது கொள்ளை எடுப்பது எப்படி,? என்பதை சீரியசாகவும் காமெடி என்ற பெயரிலும் சினிமாப் படங்களை எடுத்து சம்பாதித்து பயங்கரவாத செயல்களை சினிமா மூலமும் டிவி மூலமும் இளைஞர்களுக்கு சொல்லி கொடுத்து வரும் சிநிமாக்கூத்தாடிகளுக்கு அரசு மரியாதை, விருது என்று வழங்கிவிட்டு - இது போன்ற புகைப்படம் எடுப்போரை கைது செய்து என்னத்தை  கிழிக்க போகிறார்கள் இந்த மத வெறியர்கள்?
அதுவும் இவைகளில் சம்மந்தப்பட்டவர்கள் முஸ்லிம்கள் எனும்போது இங்குள்ள ஆபாச ஊடகங்களின் கற்பனைகளை என்னவென்று சொல்வது?