1. அழகிய ஆபத்து - நடிகை அனுஷ்காவின் பேட்டி
2. அழகானவர்களின் சாய்ஸ் - ஹிந்தி நடிகை பிபாஷா பாசுவின் பேட்டி
3. முகத்தின் முகவரி - நடிகை ஹன்ஷிகா மோத்வானி பேட்டி
4. உதடுதான் அழகை கூட்டிக்காட்டும் - நடிகை தீபாஷா பேட்டி
5. பாலிவுட் பியூட்டி - நடிகை தீபிகா படுகோனே பேட்டி
6. எண்ணெய் பசை உஷார் - நடிகை மல்லிகா ஷெராவத் பேட்டி
7. கால் அழகு - நடிகை பிரியங்கா சோப்ரா பேட்டி
8. மரு போயே போச்சு - நடிகை கரீனா கபூர் பேட்டி
9. உடையழகு - நடிகை கஜோல் பேட்டி
10. சிவாஜி எவ்வளவு வருத்தப்பட்டிருப்பார்? - நடிகர் பாண்டு பேட்டி
11. கண்களில் நாட்டியம் ஆடுங்கள் - நடிகை ஜனனி அய்யர் பேட்டி
12. டாப் 10 பியூட்டி மாடல்கள் என்று ஆங்கில மாடல் அளழிகளின் ஆபாச படங்கள்.
13. புடவை கட்டினால் நீங்களும் தேவதைதான் - நடிகை நந்திதா பேட்டி
14. ஆண்களுக்கு பிட்னெஸ்தான் அழகு - நடிகர் கணேஷ்ராம் பேட்டி
15. புன்னகைதான் பெண்ணுக்கு அழகு - நடிகை சோனா பேட்டி
இடையிடேயே நிறைய விளம்பரங்கள், ஒரு சாமியார் (சாய்பாபா) பற்றி நல்லவிதமாகவும், இன்னொரு சாமியார் (நித்யானந்தா - மதுரை ஆதீனம் ) பற்றி விமர்சித்து ஒரு பக்கமும், மேலும் ஒன்றிரண்டு ஒருபக்க கதைகள் - மற்றும் ஜோக்குகள்..இதுதான் இந்த வார குமுதம் ..
1. பீட்சா - சினிமா விமர்சனம்
2. சிக்ஸ் பேக் சிங்கம் சைஸ் ஜீரோ ஹீரோ - நடிகர் மனோபாலா பேட்டி
3. ஜெயலலிதாவின் ரசிகன் என்பதற்காக நான் வெட்கப்படவில்லை - நடிகர் சரத்குமார் பேட்டி
4. ஹீரோக்களிடம் இருக்கும் டெடிகேஷன் ஹீரோயின்களிடம் இல்லை - சினிமா இயக்குனர் முருகதாஸ் பேட்டி..
5. அடியே எங்கே கூட்டிப்போறே - நடிகை கார்த்திகாவின் இரண்டு பக்க படங்கள்..
6. இன்பாக்ஸ் - நடிகர் நடிகைகள் பற்றிய செய்திகள்
7. பிரியமானவர்களின் பிரியம் வேண்டும் - நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டி
8. வாசகர் கேள்வி - பாக்யராஜ் பதில்கள் - நடிகர் இயக்குனர் பாக்யராஜ் பதில்கள்
9. முகம் - பேட்மிட்டன் விளையாட்டு வீராங்கனை சைனா நேஹ்வால் பேட்டி
10. சின்மயி vs கீச்ச்சர்கள் - சினிமாபாடகி சின்மயி - டுவீட்டேர்கள் பற்றிய செய்தி...
இடையிடையே இலக்கியம் என்ற பெயரில் யாருக்கும் புரியாத கதைகள் கட்டுரைகள் , பொக்கிஷம் என்ற பெயரில் பழங்காலத்து சாமியார் ஒருவரைப்பற்றிய கட்டுரை..இது ஆனந்த விகடன்..
இன்றைக்கு தமிழ்பற்று எனபது - தேச துரோக செயல்களான விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு அளிப்பதும், கூடங்குளம் மின் நிலையத்தை செயல்படாமல் தடுப்பதும், அதுபோக பாடகி சின்மயி பற்றி விமர்சிப்பதும்தான் என்று டாஸ்மாக் புகழ் தமிழ்நாட்டு தமிழ்பற்று வியாபாரிகள் தத்தமது நேரத்தை செல்வழித்துக்கொண்டிருக்க,
தமிழின் நம்பர் ஒன என்று பீற்றிக்கொள்ளும் ஆபாச ஆனந்த விகடனும், தமிழர்களின் இதயத்துடிப்பு என்று ஓலமிடும் ஆபாச குமுதம் இதழ்களும் சிநிமாக்கூத்தாடிகளின் ஆலோசனைகளைத்தான் நீங்கள் படிக்கவேண்டும் என்று ஒவ்வொரு இல்லங்களிலும் ஆபாசைத்தை புகுத்தி தமிழனை சீரழித்துக்கொண்டிருக்கின்றன..
மேற்கண்ட குறிப்புகளெல்லாம் இந்த சிநிமாக்கூத்தாடிகள் சொன்னால்தான் மக்களிடம் போய் சேரும் என்றும் இந்த ஆபாச வியாபாரிகள் வியாக்கியானம் கூறுவார்கள்..தமிழ்பற்று வியாபாரிகளும், தமக்கு பொழுது போக டுவீட்டரிலும், பேஸ்புக்கிலும் தமக்கு பிடிக்காதவர்களை தமிழின விரோத முத்திரை குத்தி எழுதிவிட்டு, வீட்டுக்குள்ளேயே தமிழனின் மூளையை மழுங்கடிக்கும் இதுபோன்ற ஆபாச புத்தகங்களை ஆவலோடு வாங்கி படித்து புலன்காகிதமடைவார்கள்..
அதுவும் இந்த ஆபாச விகடனை பாருங்கள்..
சின்மயி vs கீச்ச்சர்கலாம்..அதாவது டுவீட்டேர்களை கீச்ச்சர்கள் என்று மொழிப்படுத்தி இவர்கள் எல்லாம் வீணாக கூச்ச்சளிட்டுக்கொண்டிருப்பவர்கள்தான் என்று நக்கலடிக்கிறான்..
சிக்ஸ் பேக் சிங்கம் சைஸ் ஜீரோ ஹீரோ, ஹீரோக்களிடம் இருக்கும் டெடிகேஷன் ஹீரோயின்களிடம் இல்லை , இன்பாக்ஸ் என்றெல்லாம், ஆங்கிலத்தலைப்பில் வைத்துவிட்டு, டுவீட்டர்களை மட்டும் கீச்ச்சர்கள் என்று சொல்வதன் மூலம் இவன் தமிழை வளர்க்கிறானா இல்லை தனது ஜாதி விசுவாசத்தை காட்டுகிறானா..?
டாஸ்மாக்கில் குவாட்டர் அடித்துவிட்டு, டுவீட்டரிலும், பேஸ்புக்கிலயும் தமிழ்பற்று வியாபாரம் செய்யும் தமிழ் வீரர்கள் பதில் சொல்லட்டுமே...
5 comments :
இந்த புக்கு காரனுக்க கூட இவ்ளோ அனலைஸ் பண்ணிருக்க மாட்டானுக ..
நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல பதிவு உங்களிடம் இருந்து ... எனக்கும் நீங்கள் பதிவில் சொல்லியிருக்கும் இதே காரணங்களுக்காகவே குமுதம் ஆனந்த விகடன் இரண்டையும் பிடிக்காது ... இவர்களை விட சினிக்கூத்து போன்ற பத்திரிகைகள் எவ்வளவோ மேல் .. அவர்கள் நாங்கள் சினிமாவை மட்டுமே நம்பி வாழ்கிறோம் என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்கள் , ஆனால் இவர்கள் தங்களை ஒரு கலாச்சார காவலர்களாக ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்ச்சித்து கொண்டு உள்ளே வெறும் சினிமாவை மட்டுமே கொடுத்து கொண்டிருக்கிறார்கள் ... இவர்கள் எல்லாம் அரசியல்வாதிகளை விமர்ச்சித்து கட்டுரை எழுதும் போது சிரிப்புதான் வருகிறது ...
survival of the fittest!!
எல்லாம் பணம் செய்யும் மாயை.... நல்ல கேள்விகள்....
நீங்களே எல்லாத்தயும் சொல்லிடீங்களே !
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?