இந்த பழமொழி காலம்காலமாக சொல்லப்பட்டு வந்தாலும் அதைப் பற்றிய அனுபவம் ப்ளாக்ஸ் மற்றும் பேஸ்புக் போன்ற இணையதளங்களை பயன்படுத்தும்போது ஏற்பட்டது..
பேஸ் புக்கை பெரும்பாலும் ஆக்கிமித்திருப்போர் நாத்திகம் பேசுவோரும், தமிழ்பற்று வியாபாரிகளும்தான்..அவர்கள் இந்தியாவின் இறையாண்மைக்கு விரோதமாக என்னவேண்டுமென்றாலும் எழுதிக்கொள்ளலாம. காரணம் கேட்டால் தமிழ்பற்று...அது வியாபாரம் என்று தெரியாத மூடர்களும் அதற்க்கு ஒத்தூதி வருகிறார்கள். பாடகி சின்மயி மீனவர் பிரச்சினை பற்றி எழுதியது இன்று காவல்துறை தலையிடும் அளவுக்கு வந்து விட்டது..
நான் கேட்கிறேன்...எப்போதும் இலங்கை கடற்படை சுட்டுக்கொண்டுதான் இருக்கிறான்...இது தெரிந்தும் ஏன் இந்த மீனவர்கள் கடல் எல்லையை தாண்டவேண்டும் ....இங்குள்ள ஊடகங்களும் , அரசியல் வியாபாரிகளும் தமிழ்பற்று என்ற பெயரில் அவர்களை - உசுப்பேற்றி பெரும் உயிரிழப்புகளுக்கு காரணமாகின்றனர் என்றே கருதுகிறேன் .
இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தினால் " இலங்கை கடற்படை அட்டூழியம்" என்றும் அதே சமயம் இலங்கை மீனவர்கள் எல்லைமீறும்போது "இலங்கை மீனவர்கள் அத்துமீறல்" என்றும் தலைப்பிட்டு நமக்கு மட்டுமே சாதகமாக இந்த பத்திரிக்கைகள் எழுதுவதும் ஒரு காரணம்..
தமிழ் தமிழ் என்று அலறும் இந்த வியாபாரிகலேல்லாம் ஒரு விஷயத்தை மறந்து விட்டார்கள்..நமது மீனவர்கள் கடல் எல்லையை அத்துமீருவதால் பாதிக்கபடுவது சிங்கள மீனவர்கள் இல்லை - இலங்கையை சேர்ந்த, தமிழ் மீனவர்கள்தான் .பத்திரிகை முட்டாள்களும் அரசியல் முட்டாள்களும் இலங்கை எது செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு - கிறுக்குத்தனமாக அதை எதிர்த்து எழுதுவதென்றும் முடிவில் இருக்கிறார்கள் ..இது அப்பட்டமான வியாபாரம் என்று தெரிந்தும் வலையுலக, மற்றும் சமூகவளைத்தள மேதாவிகளும் தமது அறிவு ஜீவித்தனத்தை வெளிக்காட்ட தமிழ்பற்று வியாபாரத்தை தொடர்கின்றனர்.
இதுகடக்கட்டும் சமீபத்தில் பேஸ்புக் வலைத்தளத்தில் ஒரு தோழி அறிமுகமானார்..தொலைபேசி எண்களை பரிமாறும் அளவுக்கு நண்பர்களாகிவிட்ட நிலையில் திடீரென்று அந்த தோழி என்னுடன் பேசுவதையும் நிறுத்திவிட்டார் எனது பெயரையும் நண்பர்கள் லிஸ்டில் இருந்து நீக்கிவிட்டார்..
காரணம் புரியாத நிலையில் தொடர்ந்து அவருக்கு எஸ் எம் எஸ் அனுப்பிய போதுதான் விஷயம் தெரிந்தது : நமது நாட்டில் நடைபெறும் மதம் என்ற பெயரில் மூடத்தனங்களும் சிலை வணக்கங்களையும் எதிர்க்கும் இனைப்புகளை நான் தொடர்ந்து வெளியிட்டதுதான் காரணமாம்.
நாத்திகர்கள் , இலக்கியவாதிகள் என்று மக்களின் அறியாமையை கண்டித்தால் அதற்க்கு பெயர் பகுத்தறிவு..எம்மை போன்றவர்கள் கூறினால் நட்பு முறிவு
இதைத்தான் மாமியார் உடைத்தால் மண்குடம் , மருமகள் உடைத்தால் பொன்குடம் என்று கூறினார்களோ ?
3 comments :
you are right brother........I am accepting your thoughts!
//நமது நாட்டில் நடைபெறும் மதம் என்ற பெயரில் மூடத்தனங்களும் சிலை வணக்கங்களையும் எதிர்க்கும் இனைப்புகளை நான் தொடர்ந்து வெளியிட்டதுதான் காரணமாம்//
வெளியிடாவிட்டாலும் சிலபேர் விலகவே செய்வார்கள் . அப்போது உடைபடுவது பித்தளை குடம் ஹா..ஹா... :-)))
இந்த பிளாகை திறந்தால் சாவு மேளம் அடிக்கும் சவுண்ட் வருது . செக் ....!!!
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?