Pages

Friday, May 3, 2013

விடை தெரிந்த கேள்விகள்...





1.டாக்டர் ராமதாஸ் கைது சம்பவம் எதிரொலியாக அவர் கட்சியை சேர்ந்தவர்கள், பல்வேறு இடங்களில் ஏரளாமான பேருந்துகளை அடித்து நொறுக்கி சேதங்களை ஏற்படுத்தியுள்ளார்கள்...
இதற்க்கு பதிலாக, டாஸ்மாக் கடைகளை உடைத்து இருக்கலாம்....தமிழனுக்கு அப்போதாவது தன்னிலை திரும்பும்.. ஏன் செய்யவில்லை? 

2. பாகிஸ்தானில் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி சரப்ஜித் சிங் - அந்நாட்டு அந்நாட்டு சிறையில் தாக்கப்பட்டு மரணமடைந்து விட்டார்..இதற்காக அவருக்கு வீரத்தியாகி பட்டம் மற்றும் அரசு மரியாதையோடு உடல் அடக்கம் என்றால் ..அவரை அந்நாட்டில் பயங்கரவாதம் செய்ய இந்திய அரசுதான் அனுப்பியதா? 

3. 2002...இல் அன்புமணி ராமதாஸ் ஏதோ பேசியதாக இப்போது வழக்கு போட்டு கைது செய்து இருக்கிரார்கள்..பத்து வருடங்களாக என்ன புடுங்கிக்கொண்டிருந்தார்கள்? 

4. தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் மறைந்து ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் ஏதாவது ஒரு ஊரில் ஏதாவது ஒரு அமைப்பினர் அஞ்சலி செலுத்திக்கொண்டிருபதாக இன்றுவரை தினத்தந்தியில் செய்தி வந்துகொண்டிருக்கிறது...இந்த அமைப்பினருக்கு இவ்வளவு நாள் கழித்துதான் அவர் மறைந்தது தெரியுமா? 



2 comments :

raman said...

மர்ம யோகி அவர்களுக்கு ஐயா சிவந்தி ஆதித்தன் அவர்களுக்கு. அஞ்சலி செலுத்த பல ஆயிரம் நெஞ்சங்கள் நேரில் வந்தன. பல லட்சகனக்கான இதயங்கள் குறுகிய காலகட்டத்தால் நேரில் வர முடியவில்லை. அவர்களுக்கு இந்த வழி ஒரு வடிகாலாக இருக்கிறது. தமிழன் என்ற ஒரு இனம் இருக்கும் வரை இது தொடரும்

raman said...
This comment has been removed by the author.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?