Pages

Saturday, September 14, 2013

ஒரு நல்ல செய்தி..! ஒரு கெட்ட செய்தி.....!!!


நேற்றும் இன்றும் செய்தித்தாள்களில் பரபரப்பாக பேசப்படும் இரு வேறுபட்ட செய்திகளில் இந்திய மக்களின் செம்மறியாட்டு மன நிலையும்  கேடுகெட்ட ஊடக விபச்சாரிகளின் பயங்கரவாத முகமும் தெள்ள தெளிவாக காணக்கிடைக்கிறது ..

முதலில் நல்ல செய்தி எனபது நல்ல செய்தியா என்று பாப்போம்....

டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் நான்கு பேருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பு வந்திருக்கிறது...

இது போன்ற குற்றங்களுக்கு மரணதண்டனைதான் சரியான தீர்ப்பு என்றாலும் நமது நாட்டு சட்டத்தில் அதற்கான தீர்வு இல்லை..கற்பழிப்பு குற்றத்திருக்கு 7 வருடங்கள்தான் தண்டனை....அப்படியே அந்த பெண் இறந்ததால் இது கொலை வழக்காக மாற்றப்பட்டாலும், வரும் காலங்களில் இந்த குற்றவாளிகள் மேல் முறையீடு செய்யும்போது தாங்கள் கொலை செய்யும் நோக்கத்தில் இந்த குற்றத்தை செய்யவில்லை என்று வாதிட்டு தப்பித்துக்கொள்ளும் வாய்ப்புகள்தான் உண்டு..

இன்று ஊடகங்களும், மேதாவிகளும் நீதி  கிடைத்தது என்று எக்காளமிட்டாலும், வடநாட்டு பெண் உரிமை அமைப்புகள்  தங்களுக்குள் இனிப்புகள் வழங்கிக்கொன்டாலும் இது வெறும் கண்துடைப்பு  தீர்ப்புதான் என்று அனைவருமே விளங்கி இருந்தும் இப்படி கூறிக்கொண்டிருப்பது கேலிக்கூத்தாகி இருக்கிறது...

ஏனெனில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ராஜிவ்காந்தி கொலைகாரர்கள்  விடுதலைப்புலிகளே இன்று ஊடக விபச்சாரிகளாலும், இந்திய தேச துரோகிகளாலும் தியாகிகளாக்கப்பட்டு கொண்டாடப்படுகிறார்கள்...இதைவிட ஒரு அவலம் வேறு என்ன வேண்டும்? நாளை இந்த கற்பழிப்பு பயங்கரவாதிகளும் தியாகிகளாக சித்தரிக்கப்படும் அவலமும் ஏற்படும் என்பதை மறுக்கத்தான் முடியுமா/?

சரி கெட்ட செய்தி?

வேறு என்ன...

மகாத்மா காந்தியை கொன்ற இயக்கம்....நான்கு முறை இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பு.... இந்தியாவில் நடைபெற்ற, நடைபெற்று வரும் மதக்கலவரங்கள், குண்டுவெடிப்புகளுக்கு பின்னணியில் உள்ள ஒரு அமைப்பு சங்க்பரிவார ஆர் எஸ் எஸ் என்ற ஒரு பயங்கரவாத அமைப்பு....
அந்த அமைப்பு ஒரு பயங்கரவாத கட்சிக்கு, பயங்கரவாதி ஒருவனை பிரதமர் வேட்பாளாராக அறிவிக்கக் கூறி நிர்பந்திக்கிறது...

அந்த பயங்கரவாதி எப்பேர்ப்பட்டவன்?

தமது சொந்த மாநில மக்கள் 2000 க்கும் மேற்பட்டவர்களை அநியாயமாக கொன்றவன்....போலி என்கவுண்டர்கள்  மூலமும் பலரை கொன்று இன்று குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டு கேவலப்பட்டு நிற்பவன்...உலக பயங்கரவாதி அமெரிக்காவிநாளும் அவன் கூட்டாளி இங்கிலாந்தினாலும் விசா நிராகரிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டவன்...

தமது மாநிலம் வளர்ச்சி பெற்று வருகிறது என்றுநாள்தோறும்  பொய் மூட்டைகளை அள்ளிவீசி ..கேவலப்பட்டு நிற்ப்பவன்....

பாரதீய கட்சியின் தலைவர்களில் ஒருவரான - நாடெங்கும் மதக்கலவரங்களை தூண்டிவிட்ட இன்னொரு பயங்கரவாதி அத்வானியே அவனை வெறுக்கும்போது இவன் எவ்வளவு மாபாதகன் எனபது உள்ளங்கை நெல்லிக்கனி.....

அப்படிப்பட்ட ஒரு பயங்கரவாதியைத்தான்  - பார " தீய " ஜனதா கட்சி என்கிற தீய சக்திகள் பிரதம வேட்பாளருக்கு முன்மொழிந்துள்ளன.
இதை இங்குள்ள தமிழ் ஆபாச ஊடக விபச்சார நாய்கள் கொண்டாடி முன்னுரிமை செய்தியாக தருவது எவ்வளவு பெரிய கேவலம் எவ்வளவு பெரிய அவலம்?

ஆனாலும் எது எப்படியோ மேற்கண்ட எந்த விசயமும், நாம் நல்ல விஷயம் என்று கருதக்கூடிய மரணதண்டனையும் நிறைவேறப்போவதில்லை....

கெட்ட செய்தி என்று கருதும் பயங்கரவாதி மோடியும் பிரதமராக வரப்போவதில்லை...

எனினும் இதை பதிவு செய்து வைப்போமே..

0 comments :

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?