சென்ற பதிவில்....ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பு சிங்கம் 2 விமர்சனம் பதிவேன் என்று சொன்னாலும் - வழக்கம்போல வேலைப்பளு (?)...போன்ற காரணங்களால் அந்த விமர்சனம் பதிவிட முடியவில்லை...
மேலும் சிங்கம் 2 பற்றிய பல்வேறு விமர்சனங்கள் வந்துவிட்டதாலும், அதை மீண்டும் நாமும் விமர்சிப்பதால் அதனால் பயன் இல்லை என்பதாலும் அதை விட்டுவிடலாம்....
ஒரு நண்பர் பாலா என்பவர் மட்டும், - அப்படத்தில் ஒரு முஸ்லிம் வில்லன் வருவதால் உங்களிடம் இருந்து நிச்சயம் விமர்சனத்தை எதிர்பார்த்தேன் என்று பின்னூட்டமிட்டிருந்தார்....
இதுபோன்ற அப்படத்தில் வருவதுபோன்ற வில்லன்கள் நிச்சயம் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள்..அதை ஒரு பொருட்டாய் கருதுவதில்லை...இஸ்லாத்திற்கெதிரான - காரணமற்ற சுய வன்மங்களை சில கூத்தாடிகள் படமாய் எடுக்கும்போதுதான் நமக்கு கோபம் வருகிறதே தவிர, தனி மனிதன் எப்படியும் இருப்பான்....இதை அந்த நண்பர் புரிந்துகொண்டால் நல்லது...
சிங்கம் படத்தை பொருத்தவரை அதில் பிரதானமாய் இருப்பது - கதாநாயகன் சூர்யாவின் காட்டுக்கத்தல்கள்தான் ....காமெடி என்ற பெயரில் விவேக் கின் அறுவைகளும், சந்தானத்தின் காப்பியடித்த காமேடிகளும்தான்....
கதாநாயகன் பைனாகுலரிலேயே கடத்தல்காரர்களின் அனைத்து நடவடிக்கைகளையும் (அவர்களது உரையாடல் உட்பட) அறிந்து நடவடிக்கை எடுப்பதை காட்டுவது காமெடியிலும் காமெடி....
காதல் காட்சிகளில் - தன்னை ஒருதலையாய் காதலிக்கும் ஹன்சிகா மொத்வானிக்கு வண்டி வண்டியை அட்வைஸ் செய்வதும் இன்னும் ஒருவகை காமெடிதான்...
ஹன்சிகா மொத்வாணி பள்ளிக்கூட மாணவியை வருவது பள்ளிக்கூடக்காமேடி?
உள்துறை மந்திரியாய் வரும் - இயக்குனரின் மாமனார் - விஜயகுமார் - இவர் போலிசுக்கு உத்தரவிடுவதற்கு பதிலாய்..கதாநாயகனின் பேச்சை மட்டும் இவர் கேட்பதை காட்டுவதை காமெடியை விட வேறு ஏதாவது ஒன்று இருந்தால் அதற்க்கு ஒப்பிடலாம்...
மற்றபடி சிங்கம் - படத்தில் கதாநாயகியை வந்ததற்காக அனுஷ்காவை இதிலும் பாடல்களுக்கு மட்டும் உபயோகப்படுத்தி இருப்பதும், மற்ற நடிகர்கள் வந்து போவதுமாய் இருப்பதும்தான் விறுவிறுப்பு என்று மற்ற பதிவர்கள் கொண்டாடி இருப்பதும் - இணையதலக்காமேடியில் சேர்க்கலாம்....
சிங்கம் 2 - only sound....
விமர்சனத்தை விட்டுவிடலாம் என்று சொல்லிவிட்டு இந்த பதிவும் விமர்சனமாகிவிட்டது உச்சகட்ட வலைத்தள காமெடிதானே?
சொன்னதை செஞ்சுட்டோம்ல.....
0 comments :
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?