இப்படி ஒரு அவமானம் கருணாநிதிக்கு இதற்க்கு முன் ஏற்பட்டிருக்குமா எனபது சந்தேகம்தான்....
1984 அப்போதைய தமிழக முதல்வர் எம்ஜிஆர் - உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்....
தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட அந்த சமயத்தில், எம்ஜிஆர் உயிரோடு திரும்பி வருவாரா என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில்தான், கருணாநிதி, தனது பதவி ஆசையை பகிங்கரமாக தெரியப்படுத்தினார்...
இப்போது ஆட்சியை என்னிடம் கொடுங்கள்...எம்ஜிஆர் திரும்பி வந்ததும் அதை அவரிடம் ஒப்படைத்து விடுகிறேன் என்று, உலகத்தில் எந்த அரசியல்வாதியும் சொல்லாத வார்த்தைகளை உபயோகப்படுத்தி, மக்களிடம் கெஞ்சினார்....
"தமிழர்களே தமிழர்களே...என்னை நீங்கள் கடலில் தூக்கி எறிந்தாலும் அதில் நான் கட்டுமரமாக மிதப்பேன்...நீங்கள் அதில் ஏறி பயணம் செய்யலாம் " போன்ற வார்த்தை ஜாலங்கள் நிரம்பிய அவரது கெஞ்சல்கள் அந்த காலத்தில் மிகப்பிரபலம்...
இப்படி பதவி வெறி பிடித்து அப்போது கெஞ்சினாலும், அது அவரது சக தோழர் - மற்றும் சம எதிரி (எம்ஜிஆர்) என்ற நிலையிலேயே - ஓரளவாவது ஏற்றுக்கொள்ளும்படி இருந்தது....
அனால் இன்றோ - அந்த கட்டுமரமாகிய கருணாநிதியின் நிலைமை படு கேவலமாக உள்ளது....பதவி வெறியும் குடும்ப அரசியலும் அந்த 90 வயது முதியவரை, எவ்வளவு கேவலமாக கொண்டு செல்ல முடியுமோ அவ்வளவு கேவலமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறது....
முதலில் எம்ஜிஆருடன் போட்டிபோட்டு தோற்று கொண்டிருந்தவரின் நிலை பிறகு ஜெயலலிதா என்ற அளவிற்கு இறங்கி, இன்று விஜயகாந்தை கெஞ்சோ கெஞ்சு என்று கெஞ்சுமளவிற்கு இறங்க வைத்துள்ளது அவரது பதவி வெறி....
தனது மகள் கனிமொழியை ராஜ்யசபா எம்பி பதவிக்கு நிறுத்தும்போதே, - நிச்சயம் தோற்போம் என்று தெரிந்தே அவருக்கு எதிராக விஜயகாந்த் - தமது கட்சி வேட்பாளரை நிருத்தியபோதே மூக்குடைபட்ட போதும், -- ஏறத்தாழ (1996 -2013) பதினேழு ஆண்டுகள் மத்திய அரசில் அனுபவித்தபதவி சுகம், பெற்ற மகனையே தூக்கி எறிய வைத்துள்ளது...
ஒருபக்கம் காங்கிரசுடன் கூட்டணி இல்லை - என்று சொல்லி விட்டு, குலாம் நபி ஆசாத்துடன் கூடிக்குலவுவது, - பயங்கரவாத பி.ஜே.பி யுடன் கூட்டணி இல்லை என்று - பயங்கரவாத பன்றி மோடியை புகழ்ந்து, ஜாடை காட்டுவது, - "விஜயகாந்த் கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி" என்று பட்ட அவமானத்தை துடைத்துவிட்டு - தூது விடுவது போன்ற கேவலமான செயல்களால் மேலும் கேவலப்பட்டு நிறுக்கும் கருணாநிதி, விஜயகாந்துடன், கூட்டணி வேண்டாம் என்ற காரணத்திற்காக தனது மகன் அழகிரிக்கே எச்சரிக்கை விடுகிறார் என்றால் இவரது பதவி வெறியை என்னவென்பது?
இவ்வளவு நடந்தும், விஜயகாந்த் - தமது முடிவை அறிவிக்காமல் இழுத்தடித்து கருணாநிதி என்ற கட்டுமரத்தை தவிக்கவிட , அதற்காக கருனாநிதி காத்திருக்க, இவ்வளவு அனுபவம் உள்ள அரசியல்வாதிக்கு இதைவிட ஒரு கேவலம் உண்டா?
வெறும் பசப்பு வார்த்தைகளாலும், பொருத்தமற்ற ஜவ்வு போன்ற பதிலகளாலும், தமது அறுபது ஆண்டுகால அரசியலை ஒட்டிவிட்ட கருணாநிதியால், - எதையும் துணிந்து சொல்லும் ஜெயலலிதாவின் அதிரடி அரசியலின் முன் தாக்குபிடிக்க முடியவில்லை என்பதே நிஜம்..
எல்லா எதிர்ப்புகளிலும் கம்பீரமாக நின்ற திமுகழகம் என்ற அந்த கட்டுமரம், இன்று - ஓட்டு வங்கி கணக்கில், தண்ணி காட்டும் விஜயகாந்தின் கண்ணசைவுக்காக காத்திருப்பது - அரசியல் எனபது இன்னும் சாக்கடைதான் என்பதை மேலும் மேலும் பறை சாற்றிக்கொண்டிருக்கிறது....
ராஜதந்திரம் எனபது கெஞ்சிக்கொண்டிருப்பது அல்ல.....கருணாநிதி ராஜ தந்திரியும் அல்ல....
4 comments :
nee ammavukku jalra podura kostiya poda
அரசியலில் எவன் யோக்கியன் அரசியல் தெரியாமல் பதிவிடாதிர்
செந்தில்பாலாஜியாய் மாறா ஆசையா?
ஓ.பி.யை பின்னுக்கு தள்ளும் முயற்சியா?
எடுபிடி, அடிவருடி, ஜெயாவின் தீவிர ஜால்ரா.....இப்படி எதும் அரசு அவணங்களில் உங்கள் பெயரை பதிக்கும் முயற்சியா?
don't negative thoughts for Karunanidhi & Vijaykanth. NOW, JAYALALITHA BECOMES CM DUE TO ONE OF THE MAIN REASON "VIJAYKANTH'S VOTE BANK". AT present, karunanidhi tries to collect this vote bank. this is one of the polition's thought. ok, don't over support to jayalalitha.
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?