
இந்த செய்தி உங்களுக்கெல்லாம் நிச்சயம் ஆச்சர்யமாக இருக்கும்..ஆனால் இது நிஜம்ங்க..
சவுத் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி இந்திய சுற்றுபயணத்தின் பொது இரு அணிகளுக்கும் இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது..
இந்த போட்டியில் 30 பந்துக்கு அரை ரன் வீதம் எடுக்கும் வீரர் வி வி எஸ் லட்சுமணன் எப்படியோ தட்டுதடுமாறி 352 பந்துகளை சந்தித்து 143 ரன் எடுத்து விட்டார்...
கிரிக்கெட் வரலாற்றில் உலகிலேயே 16.2.2010 அன்று செவ்வாய் கிழமை, ஈடன் கார்டன் மைதானத்தில் இத்தனை ரன்கள் எடுத்து சாதனை புரிந்த ஒரே ஒருவர் இவர் மட்டும்தான்...இதற்கு முன் யாரும் இந்த நாளில் இந்த நேரத்தில் இத்தனை பந்துகளில் இத்தனை ரன்கள் எடுத்ததில்லை... பாவம் மனிதர் இவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்த ரன்களை தன் மனைவிக்கு அர்பணித்து விட்டார்... எவ்வளவு பெருந்தன்மை பாருங்கள்..
இப்போ எனக்கு என்ன குழப்பம்னா இந்த சதம் மனைவிக்கு அர்பணித்து விட்டால்..வி வி எஸ் லட்சுமணன் கணக்கில் வருமா...இல்லை அவரது மனைவி கணக்கில் வருமா? அவரது மனைவி கணக்கில் வந்தால் அவர் இந்திய அணியில் இல்லையே..அப்போ இந்த ரன் இந்திய அணி கணக்கில் வராதா?
அப்படி அவர் மனைவி கணக்கில் எடுத்துக்கொண்டால் விளையாடாமலேயே சதம் அடித்தது ஒரு மாபெரும் சாதனை தானே?
இப்படி சாதனை புரிந்த பெண்மணிக்கு அர்ஜுனா, பாரத ரத்னா, பத்மபூஷன், போன்ற விருதுகளை கொடுத்து (நம்ம ஜனாதிபதிக்கு வேற என்ன வேலை) கவுரவிக்க வேண்டியதுதானே...
என்ன கொடுமைடா இது..
6 comments :
தங்களின் பதிவுகளைப் படித்தேன். மிக அருமை. திரை விமர்சனம் அருமை. நன்றி.
நன்றி திரு பித்தன் அவர்களே ...தங்களைப்போன்ற பதிவர்களின் ஆதரவே எமக்கு உற்சாகம் அளிக்கின்றது..தொடர்ந்து ஆதரிக்க வேண்டுகிறேன்..
எது செய்தாலும் குத்தம்!
என்ன சொன்னாலும் குத்தம்!
இப்பொ அவர என்னத்தான் சொல்ல செய்ய சொல்லுறீங்க. இதெல்லாம் ஒரு விசயம்னு எழுதி ஏன் ஒரு பதிவ வீணடிக்குறீங்க.
ஜீவன் பென்னி அவர்களே..
நம் மனதில் உள்ள கேள்விகளுக்கு வடிகால்தான் இந்தப்பதிவுகள்..அவர் தன் மனைவிக்கு ஏதாவது ஒரு உயர்ந்த பரிசு வாங்கி கொடுத்து இருக்கலாம்..தான் அடித்த ரன்களை கொடுத்து என்ன பயன்? அந்த ரன்களை வைத்து அவரது மனைவி என்னதான் செய்ய முடியும்? அப்படியென்றால் இந்த ரன்களை அவர் தனது அணிக்காகவோ..பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி வேலைகளையெல்லாம் மறந்து நாள் கணக்காக விளையாட்டை பார்க்கும் ரசிகர்களுக்காகவோ இல்லையா? கலைஞர் கருணாநிதி தோழமைக்கட்சிகளுக்கு மனதில் இடம் கொடுப்பது போலத்தான் இது..கேலிக்கூத்தான விசயங்களை குற்றம் சொல்வது குற்றமா?
எது செய்தாலும் குத்தம்!
என்ன சொன்னாலும் குத்தம்!
இப்பொ அவர என்னத்தான் சொல்ல செய்ய சொல்லுறீங்க. இதெல்லாம் ஒரு விசயம்னு எழுதி ஏன் ஒரு பதிவ வீணடிக்குறீங்க.
/?/??
//??
?????????????/
அந்த ரன்களை வைத்து அவரது மனைவி என்னதான் செய்ய முடியும்?
///
அது அன்பு பரிசு அண்ணே
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?