சென்னையில் மர்மயோகி மண் சித்தர் என்னும் சாமியாரிடம், தன் காதலனை வசியம் பண்ணுவதற்காக ஒரு பெண் ருபாய் ஏழாயிரம் கொடுத்து தாயத்து வாங்கி இருக்கிறார்..அது வொர்க் அவுட் ஆகாததால் அந்த சாமியார் மீது போலிஸ் ஸ்டேசனில் கம்ப்ளைன்ட் பண்ணி இருக்கிறார்..
ஹ்ம்ம் ஒரு வாரத்திற்கு முன்புதான் ஒரு சாமியாரோட வீடியோ வந்து ஊரெல்லாம் நாறிகிடக்குது..அந்த சூடு இன்னும் ஆறல..அப்புறம் அகில உலக மகளிர் தினம் வேற கொண்டாடுறாங்க..பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்களல்ல என்று ஊர் முழுக்க பட்டி மன்றம் வேற..இன்னமும் இது போல மூட நம்பிக்கைகளில் ஊறிக்கொண்டுதானிருக்கிறார்கள்..இவர்களை திருத்த நினைக்கும் ஒவ்வொருவனும்தான் முட்டாளாகிறான் ...
அப்புறம் நமது மங்குனி அமைச்சர் அதே பேப்பரில் வந்த இன்னொரு விசயத்தையும் சிலாகித்து சொன்னார்..
கிரண் என்றொரு நடிகை ஒரு தெலுங்கு படத்தில் 30 வயது டீச்சராகவும் அதில் தன் வகுப்பில் படிக்கும் 13 வயது சிறுவனை காதலிப்பதாகவும் கதை இருப்பதால் யாரோ ஒருவர் கோர்டில் கேஸ் போட்டு இருக்காராம். இந்த கதை சிறுவர்களை வழிகெடுப்பதாக இருக்கிறதென்று. ஊரில் எவ்வளவோ வேலை இருக்கும்போது வேலயத்துப்போய் இதுமாதிரி சிலபேர் திரிகிறார்கள்..இதனாலெல்லாம் இந்த படம் வெளிவராமல் இருக்கப்போவதில்லை..எனக்கு தெரிந்து இதெல்லாம் இது போன்ற பாடாவதி திரைப்படங்களுக்கு ஒரு விளம்பரம்தான்..

அல்லது ரஜினிக்கு ஒரு நியாயம் கிரணுக்கு ஒரு நியாயமா..?
கேட்க சொன்னார் கேட்டுவிட்டேன்...
4 comments :
அதானே..ரஜினிக்கு ஒரு நியாயம்..கிரணுக்கு ஒரு நியாயமா?
நீங்க எழுதினத படிக்கவே இல்ல தல. கிரண் படத்தப் பாத்தே நேரம் சரியா போச்சு.
thanks
anbudan
ram
www.hayyram.blogspot.com
நன்றி டக்கால்டி மற்றும் heyyram ஆகிய நண்பர்களுக்கு....
ஸ்ரேயாவுக்கு இருவது வயதா? சொல்லவேயில்லை. எத்தனை வருசமா. கிரண் போட்டே அருமை ஹி, ஹி, ஹி.
கிரணுக்கு ஆதரவாக ஒரு போராட்டம் நடத்த வேண்டும்.
இப்படிக்கு
அகில உலக கிரண் இரசிகர் மண்றத் தலைவர்.
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?