
1600 ஆம் ஆண்டில் வணிக நோக்குடன் இந்தியாவுக்குள் நுழைந்த பிரிட்டானியா கிழக்கிந்தியக் கம்பனி சூரத்தில் அனுமதி பெற்ற வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியது. இதன் வணிகக் கப்பல்களையும், வாசனைப் பொருள் வணிகத்தில் அவர்களுடைய நலன்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக, மலாக்கா நீரிணைக்கு அண்மையில் துறைமுகம் ஒன்றின் தேவையைக் கம்பனியினர் உணர்ந்தனர். மேற்குக் கடற்கரைப் பகுதியில் மதராஸ்பட்டினம் அல்லது சென்னபட்டினம் என அழைக்கப்பட்ட ஒரு நிலப்பகுதியை அவர்கள் அப்பகுதித் தலைவர் ஒருவரிடமிருந்து விலைக்கு வாங்கி அதிலே ஒரு துறைமுகத்தையும், கோட்டை ஒன்றையும் கட்டத் தொடங்கினர். கோட்டை புனித ஜார்ஜ் நாளான 1940 ஏப்ரல் 23 ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டதால், இதற்கு புனித ஜார்ஜ் கோட்டை எனப் பெயரிடப்பட்டது. கடலையும், சில சிறிய மீனவர் ஊர்களையும் நோக்கிக் கொண்டிருந்த இக் கோட்டைப் பகுதி விரைவிலேயே வணிக நடவடிக்கைகளின் ஒரு மையமானது. இக் கோட்டை, இப் பகுதியிலே ஜார்ஜ் டவுன் என்னும் புதிய குடியேற்றப் பகுதி உருவாகக் காரணமாயிற்று. இது அங்கிருந்த ஊர்களையெல்லாம் தன்னுள் அடக்கி வளர்ந்து சென்னை நகரம் உருவாக வழி வகுத்தது. இது கர்நாடகப் பகுதியில் பிரித்தானியரின் செல்வாக்கை நிலை நிறுத்தவும், ஆர்க்காடு மற்றும் ஸ்ரீரங்கப்பட்டின அரசர்களையும், பாண்டிச்சேரியில் இருந்த பிரெஞ்சுக்காரரையும் கண்காணிப்பில் வைத்திருக்கவும் உதவியது.
6 மீட்டர் உயரமான சுவர்களைக் கொண்டிருந்த இக் கோட்டை, 18 ஆம் நூற்றாண்டில் இடம்பெற்ற பல தாக்குதல்களைச் சமாளித்தது.
சுதந்திரத்திற்கு பிறகு தமிழ் நாட்டின் தலைமைச் செயலகமாக மாறிய இக்கோட்டையில்தான், காமராஜர், அண்ணா துறை போன்றோர் முதல்வராக இருந்தனர்.
இன்று சட்ட மன்றம் இக்கோட்டையிலிருந்து அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்டத்தில் மிக பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள தலைமைச் செயலகத்திற்கு மாற்றப்படுகிறது.
இதன் காரணமாக சுற்றியுள்ள பகுதிகளில் கெடுபிடி அதிகமாக உள்ளது. பல காலமாக பேச்சுலர் பலர் தங்குவதற்கு வசதியாக இருந்த லாட்ஜுகளில் இனி கெடுபிடி அதிகமாகலாம்.
பிரதமர், மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி போன்றோர் வருகை தருகின்றனர். மொத்தம் அரைமணி நேரமே நடக்கவிருக்கும் இந்த திறப்புவிழா நிகழ்ச்சிக்காக, இதற்கு முன்தினமே பவர் கட் ஒரு நாள் முழுதும். தொடக்க நாளான இன்று மவுன்ட் ரோட் முழுதும் ஏறக்குறைய 4000 காவலர்கள் பாதுகாப்பு. சென்னை ஏர்போர்ட் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன..

செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் கடைசி முதலமைச்சராகவும், இந்த புதிய தளமைசெயலகத்தின் முதலாவது முதலமைச்ச்சராகவும் ஆசைப்பட்ட கருணாநிதியின் ஆசை, மக்களின் சிரமங்களுக்கிடையே தொடங்குகிறது...
பொதுஜனம் எதையும் தாங்கும் இதயம் கொண்டவராயிற்றே...!!!
0 comments :
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?