வேண்டாம் விட்டு விடுங்கள் !!!
இந்த மாத ஆரம்பமே பரபரப்பும் கிளு கிளுப்புமாக ஆரம்பித்து வைத்த புண்ணியம் சன் டிவிக்கும் நக்கீரனுக்குமே சேரும்.
ஒரு போலி சாமியாரை அடையாளம் காட்டுகிறோம் என்று ஆபாசப்படங்களை வீட்டுக்குள் கொண்டுவந்து சன் டிவியும், பக்கம் பக்கமாக அந்த படங்களை போட்டு (வர்த்தக விளம்பரம் கூட இல்லை - இதன் மூலமே சம்பாதித்து விடலாம் என்று) நக்கீரனும் ஒரு கேவலமான வியாபாரத்தை ஆரம்பித்து வைத்தன..!
மற்றவர்களும், பதிவர்களும் போட்டி போட்டுகொண்டு அந்த சாமியாரையும், மற்ற சாமியார்களையும் திட்டி தீர்த்தாயிற்று..
இப்போது என்ன ஆயிற்று, சாமியார் ஒரு பேட்டி கொடுக்கிறார் ..தான் சட்ட விரோதமாக எந்த தவறும் பண்ணவில்லை என்று..சாமியார் பணபலமும், பக்தர்கள் பலமும் உடையவர்...இந்த பிரச்சினைகளில் இருந்து அவர் சீக்கிரம் வெளிப்பட்டு விடுவார்.. பாவம் அந்த நடிகை..நடிகை என்றால் விபச்சாரம் செய்பவள்தான்..அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை..ஆனால் ஒரு பெண் என்று பாருங்கள்...
இப்போது மீண்டும் ஒரு வீடியோ மற்றும் புகைப்படங்களை நக்கீரன் வெளியிட்டுள்ளான்..அந்த சாமியாருக்கு அந்த நடிகை மசாஜ் செய்வதை...சென்றவாரம் அவருடன் கட்டிப்புரண்டதை காட்டியதே போதும்..மக்கள் அந்த சாமியாரைப் பற்றியும் அவரது ஏமாற்று வேலை பற்றியும் தெரிந்து கொண்டார்கள்...மீண்டும் மீண்டும் அதையே காட்டி என்னத்தை சாதிக்க நினைக்கிறார்கள்?
வாரம் ஒரு வீடியோ வெளியிடுவதன் மூலம் அந்த சாமியாரை பழி வாங்குகிறார்களா? அந்த நடிகையை பிரபலப்படுத்துகிறார்களா? அல்லது தனது வக்கிரங்களை தீர்த்துக் கொள்கிறார்களா?
அரசாங்கத்தால் தேடப்பட்டுக்கொண்டிருந்த ஒருகொள்ளைக்காரன் மற்றும் கொலைகாரனான வீரப்பனை பேட்டி எடுத்து அதன் மூலம் கல்லா கட்டிகொண்டிருந்த நக்கீரன், வீரப்பன் கொல்லப்பட்டவுடன் அவனது வியாபாரம் இறங்குமுகமாகி விட்டது. ஒரு குற்றவாளியை தியாகி ரேஞ்சுக்கு கொண்டு சென்றதில் இந்த நக்கீரனின் பங்கு அதிகம்..இன்று அவன் மனைவியை ஒரு அரசியல்வாதியாக்க கூட முயற்சி செய்கிறார்கள்..பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில் இவர்களின் வியாபாரத்தை பெருக்கிகொண்டார்களே தவிர வீரப்பனால் கொல்லப்பட்ட குடும்பத்தினருக்கு இவர்களால் என்ன செய்ய முடிந்தது..
வியாபாரத்திற்கு காத்திருந்தவனுக்கு, இதோ, இந்த சாமியாரின் வீடியோ வகையாக மாட்டிக் கொண்டது..வாரம் வாரம் ஒவ்வொரு பார்ட்டாக வெளியிடுகிறான்.. இப்படி கேவலமாக வியாபாரம் செய்து மக்களை திசை திருப்பும் இது போன்ற ஆபாச வியாபாரிகள் பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில் தப்பித்துகொள்கிறார்கள்.

அவள் ஒரு விபச்சாரிதான்..தவறு செய்கிரவள்தான்...ஆனால் அவளும் பெண்தானே...அவளுக்கும் குடும்பம் இருக்கிறது..நாளைக்கு அந்த பெண்ணே மன உளைச்சலில் விபரீதமான முடிவுக்கு சென்றுவிட்டால்..அதற்கு பொறுப்பாளி யார்..?
அந்த வீடியோக்களை மீண்டும் மீண்டும் பார்க்கும்போது கோபப்படுவதற்கு பதிலாக பரிதாபம்தான் ஏற்படுகிறது..
வியாபாரம் செய்வதற்கு ஏராளமான உத்திகள் உள்ளன..இப்படி ஒரு பெண்ணை இந்த பாடு படுத்திதான் சம்பாதிக்க வேண்டுமா?
உங்களது வியாபாரத்திற்காக, இப்படி ஒரு கேவலமான செயலை தொடர்ந்து ஏன் செய்து வருகிறீர்கள்?
ஒரு தவறை வெளிக்கொண்டு வந்தாயிற்று.. அந்த சாமியார் மீது வரிசையாக கேஸ் பதிவாகும்.. இனி அரசும் மக்களும் பார்த்துகொள்வார்கள். ஆனால் இதை வைத்தே ஒரு கேவலமான வியாபாரத்தை தொடர்ந்தால் மக்களின் வெறுப்புக்குதான் ஆளாக நேரிடும்.
போதும்..விட்டுவிடுங்கள்..!!!
5 comments :
//மீண்டும் மீண்டும் பார்க்கும்போது //
இது வேறவா!!!
///நடிகை என்றால் விபச்சாரம் செய்பவள்தான்..அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை..///
///அவள் ஒரு விபச்சாரிதான்..தவறு செய்கிரவள்தான்...///
கடைசில :)
///ஆனால் அவளும் பெண்தானே...///
:)
மர்மயோகி நீங்க இவ்வளவு நல்லவரா ? தெரியாம போச்சே!!!!!!!!!!
அம்மணி வந்து உங்க காலையும் அமுக்கி விட்டாங்களோ ?
EVENTHOUGH RANJITHA IS A SEMA FIGURE AND SEMA KATTAI HOW NAKEERAN PUBLISH HER PERSONAL PHOTOS IN THEIR MAGAZINE? NAKEERAN IS NUMBER 1 FRAUD AND HE IS A 420.
நக்கீரன் போன்ற வியாபாரப் பத்திரிகைகளை பற்றி பேசுவதே தேவை இல்லாத விஷயம். graphics மூலம் பிரபாகரன் இறந்ததை மறைத்து தமிழ் மக்களை ஏமாற்றி காசு பண்ணிய சாகசம் நக்கீரனுக்குத்தான் உண்டு.
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?