கருணாநிதியின் குடும்ப ஆட்சியையும், ஸ்பெக்ட்ரம் ஊழலும்தான் திமுகவின் பரிதாபமான தோல்விக்கு காரணம் என்று அறிவில்லாத பலர் உளறிகொட்டிக் கொண்டிருக்கின்றனர். பாவம் அவர்களுக்கு தமிழ்நாடு அரசியலைப்பற்றி என்ன தெரியும்?
என் டி டி வி, சி என் என் டிவி போன்ற முட்டாள்களுக்கு கோமாளி சோவை விட்டால் வேறு அரசியல்வாதி தெரியாது..ஜெயலலிதா வீட்டு பாத்ரூமில் தண்ணி வரலயின்னாகூட இந்த கோமாளி சோ தான் மேற்கண்ட டிவிக்களில் போய் பேட்டிகொடுத்துவிட்டு வருவார்.
எம்ஜியார் காலப்படங்களில் ரிக்ஷா ஒட்டிக்கொண்டிருந்த கோமாளி சோவிற்கு இன்றைக்கு தெரிந்த நல்ல அரசியல்வாதிகள் யார் என்றல் ஜெயலலிதாவும், குஜராத் கொலைகாரான் பயங்கரவாதி நரேந்திர மோடியும், பாபர் மசூதியை இடித்த பயங்கரவாதி அத்வானியும்தான்.
ஆனால் அந்த அரசியல் வியாதிகளெல்லாம் தமிழ்நாட்டில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தால் ஒன்றும் புடுங்க முடியாது என்று தெரிந்தே..ஜெயலலிதா, தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் கனவில் இருக்கும் டாக்குட்டர் (?) விஜய் போன்ற மாமனிதர்களை நம்பி களத்தில் இறங்கினார் என்று தோன்றுகிறது..
விஜயகாந்தை எதிர்த்து திமுக மேதாவிகள் வடிவேலு என்ற மாபெரும் அரசியல் சாணக்கியனை களத்தில் இறக்கியது..சாணக்கியன் என்றால் அவனுக்கு போட்டியாக இன்னொரு சாணக்கியன் வேண்டுமல்லவா? அதிமுக சார்பில் சிங்கமுத்து என்னும் இன்னொரு அரசியல் சாணக்கியன் களத்தில் இறங்கி அதிமுகவுக்கு ஆதரவாக ஓட்டுகேட்டார்..
இதற்கிடையே - மக்கள் சென்ற ஆட்சியல் அனுபவித்த கஷ்டங்களை எல்லாம் பார்த்துகொண்டிருந்தார் நமது டாக்குட்டரின் தந்தை எஸ் எ. சந்திரசேகர். ஒரு கட்டத்தில் திமுக டாக்குட்டர் விஜய் நடித்த, நடித்துக்கொண்டிருக்கும் படங்களுக்கு தொடர்ந்து தொல்லைகள் கொடுத்துகொண்டிருந்ததால் - இதற்கும் மேலும் மக்கள் துன்புறுவதை தாங்கமுடியாது என்ற உயர்ந்த நோக்கில் தமிழ்நாட்டின் தலைஎழுத்தை தீர்மானிக்க - டாக்குட்டர் விஜயின் கோடிக்கணக்கான ரசிகர்கள் அதிமுகவுக்கு ஆதரவளிப்பார்கள் என்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்தார்..
அதுவரையில் தோல்விப்பாதையில் சென்றுகொண்டிருந்த அதிமுக கூட்டணி - வீறுகொண்டு எழுந்து நம்பமுடியாத அளவில் மாபெரும் வெற்றி பெற்றுவிட்டது..
டாக்குட்டரின் ஆதரவு மட்டும் அதிமுகவிற்கு இல்லையென்றால்...தமிழகத்தின் நிலை இன்றைக்கு எப்படி இருக்கும்?
இது தெரியாமல் பலர் ஏதேதோ காரணங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்...
இதனால்தான் நமது டாக்குட்டர்கூட - இரு நாட்களுக்கு முன் தமது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்..
இதில் எங்கே நமது "பவர்ஸ்டார்" வந்தார் என்று பார்க்கிறீர்களா? பாவம்க அவர். இருக்கிற படங்களை முடிக்கவே அவருக்கு நேரம் இல்லை..சும்மா வம்புக்குத்தான் அவர் பெயரை உபயோகப்படுத்த வேண்டியிருக்கிறது.. நமக்கும் ஹிட்ஸ் வேணுமேங்க..
பின் குறிப்பு : இதை நகைச்சுவை பிரிவில் போட்டு இருக்கிறேன்..பைத்தியக்காரத்தனம் என்று ஒரு பிரிவு இருந்தால் அதில் போடலாம் .
மொத்தத்தில் தமிழ்நாட்டுக்காரனுக்கு சொந்த மூளை இல்லை.. சோ, ரஜினி, விஜயகாந்த், விஜய், வடிவேலு, சிங்கமுத்து, எஸ்.எ. சந்திரசேகர் போன்ற சினிமா கூத்தாடிகள் சொல்வதைத்தான் கேட்கிறார்கள் என்று இந்த ஆபாச பத்திரிக்கைகளும் அரசியல்வாதிகளும் முடிவே பண்ணிவிட்டார்கள்...ஹ்ம்ம்
6 comments :
மொத்தத்தில் தமிழ்நாட்டுக்காரனுக்கு சொந்த மூளை இல்லை.. ???????????????????????
At least feel happy that people who working (Acting) and earning are coming to politics, not like Karuna n family , ramados n family . if compare karuna and power star still I feel power is better.
சோ ஒரு கோமாளி என்கிறீர்களே, அவர் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர் மற்றும் நாடக நடிகர், எழுத்தாளர், சிறந்த வழக்கறிஞர், 40 ஆண்டுகளுக்கு மேல் அரசியல் அறிவில் சிறப்பாக விளங்குகிறார் என்பது நீங்கள் அறிவீர்களா?.
உங்கள் உலக அனுபவத்தை கொஞ்சம் எனக்கு சொல்லுங்கள்?
நன்றி திரு முனைவர். இரா குணசீலன் அவர்களே
நன்றி திரு jai
நன்றி திரு sivasubramanaian ganesh அவர்களே
சினிமா நடிகன், நாடக நடிகன் என்றால் அவன் ஒரு கோமாளிதான்.. அவர் ஒரு சிறந்த எழுத்தாளர், சிறந்த வழக்கறிஞர், சிறந்த அரசியல் அறிஞர் என்கிறீர்களே..அந்த அறிஞர்தான், எம்ஜியார் படங்களில் லூசுத்தனமாக ஜால்ரா அடித்துகொண்டிருப்பார்..அப்போ அவர் கோமாளிதானே? அவர் வழக்கறிஞராக என்ன கிழித்தார் என்று தெரியவில்லை அதை நீங்கள்தான் சொல்லவேண்டும்.
சிறந்த அரசியல் அறிஞர் என்கிறீர்கள்..1996 இல் இவர்தான் ரஜினியுடனும், மூப்பனாருடனும் அலைந்து அலைந்து கருணாநிதியை சந்தித்து கூட்டணிக்கு முயற்சி செய்வதை காட்டிக்கொண்டார்..பிறகு 2011 இல் இவரே மூப்பனாரை ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்த்து வைப்பதுபோல காட்டிக்கொண்டார்..தமிழகமக்கள் ஒவ்வொரு முறையும் ஆட்சி மாற்றத்தை விரும்புவார்கள் என்று எல்லாருக்கும் தெரிவதுபோல் இந்த நபருக்கும் தெரிந்திருகிறது..
சிறந்த அறிஞர் ஒரு நடிகரின் பேச்சால்தான் அரசியல் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று உளற மாட்டார்.
அப்புறம் இந்த கோமாளியை கோமாளி என்று சொல்வதற்காக என் உலக அனுபவத்தை எல்லாம் உங்களுக்கு விளக்கிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை..
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?