இது ஒரு நீதிக்கதை..
அந்த காட்டில் அந்த வயதான சிங்கம் ஆட்சி செய்து வந்தது..ஆட்சியில் மிருகங்கள் நலத்திட்டங்கள் பல செய்தாலும், தன குடும்ப விலங்குகளுக்கே அனைத்து தொழில்துறையையும் அதிகாரத்தையும் வழங்கி இருந்ததால் பொது விலங்குகளின் அதிருப்தியை அந்த மிருகம் பெருமளவில் சம்பாதித்திருந்தது.
அதுவும் கலை நிகழ்சிகளை நடத்து ம் முழு அதிகாரமும் அந்த சிங்கத்தின் உறவுகளுக்கே வழங்கப்பட்டிருந்தது.
மேலும் அந்த காட்டில் கூத்தாடி விலங்குகளுக்கே பெருமளவில் மரியாதை இருந்தது.
ஒரு கூத்தாடி விலங்கு ஆபாசமாக ஏதாவது நிகழ்ச்சி செய்திருந்தாலே போதும்..அந்த காட்டின் ராஜாவான கிழட்டு சிங்கத்தை சுலபமாக சந்தித்து விடலாம்.
பொது விலங்குகள் அந்த ராஜாவை சந்திக்கவே இயலாது.
ஏதாவது ஒரு ஆபாச கலை நிகழ்ச்சியில் குறுக்காக ஒரு தடவை நடந்து சென்றாலே போதும்..அந்த விலங்குக்கு
ஏறக்குறைய கூத்தடிக்கும் அனைத்து விலங்குகளுக்கும் "கலைமாமிருகம்" பட்டம் வழங்கப்பட்டுவிட்டது .
ஏதாவது ஒரு ஆபாச கலை நிகழ்ச்சியில் குறுக்காக ஒரு தடவை நடந்து சென்றாலே போதும்..அந்த விலங்குக்கு
"கலைமாமிருகம் " என்ற பட்டமும் பணமும் பெரிய விலங்குகளின் அறிமுகமும் சுலபமாக கிடைத்துவிடும்.
ஏறக்குறைய கூத்தடிக்கும் அனைத்து விலங்குகளுக்கும் "கலைமாமிருகம்" பட்டம் வழங்கப்பட்டுவிட்டது .
அந்த சிங்கம் நிறைய கூத்தாடி விலங்குகளை தனக்கு நட்பாக்கி கொண்டது.
அந்த கூத்தாடி விலங்குகளில் - மிகப்பிரபலமான ஓநாய் ஒன்று இருந்தது..
அது குடிப்பது, சிகரெட்டை தூக்கிப்போடுவது, பெரிய ரவுடியாக இருப்பது போன்று நடிப்பது, தந்தையை கொன்ற புலியை பெரியவனாக வளர்ந்து பழிவாங்குவது போன்ற மக்களை கெடுக்கும் காட்சிகளில் மட்டுமே நடித்து காட்டின் பிரபல ஸ்டாராக இருந்தது.
பெண் கூத்தாடி விலங்குகளின் படத்தை மட்டுமே பிரசுரித்து பத்திரிக்கை விபச்சாரம் பண்ணும் காட்டு பத்திரிக்கைகளும், பிரபல ஸ்டார் ஓநாயிடம் காசு வாங்கிக்கொண்டு அந்த ஓநாயை வருங்கால காட்டு ராஜா என்ற அளவுக்கு
செய்திகள் வெளியிட்டன. ஓநாய் ஒரு கலை நிகழ்ச்சி நடத்தினால் போதும், காட்டுக்குள் வேறு நிகழ்ச்சிகளே இல்லை எனபது போல அதை பற்றி மட்டுமே செய்திகள் வெளியிட்டு ஓநாயிடம் வாங்கிய பிச்சைக்கு நன்றி செலுத்தி வந்தன..நாளடைவில் ஓநாய் குசு விடுவது கூட செய்தியாயிற்று..
காட்டில் ஒதுக்கப்பட்ட பன்னிகளும் சொறி நாய்களும்தான் பெருமளவில் வசித்து வந்தன..அந்த கழிசடைகளுக்கு பிரபல ஸ்டார் ஓநாயின் பொறுக்கித்தனமான நடிப்பு பிடித்திருந்ததால் அந்த மிருகங்களும் ஓநாய்க்கு ரசிக விலங்குகளாக இருந்தன..
அந்த ஓநாய் போல முடி வளர்ப்பது...அந்த ஓநாய் போன்ற பொம்மை செய்து அதற்க்கு பால் ஊற்றுவது, சாராயம் ஊற்றுவது போன்ற பொருக்கித்தனங்களை மகிழ்ச்சியோடு செய்துகொண்டிருந்தன..
செய்திகள் வெளியிட்டன. ஓநாய் ஒரு கலை நிகழ்ச்சி நடத்தினால் போதும், காட்டுக்குள் வேறு நிகழ்ச்சிகளே இல்லை எனபது போல அதை பற்றி மட்டுமே செய்திகள் வெளியிட்டு ஓநாயிடம் வாங்கிய பிச்சைக்கு நன்றி செலுத்தி வந்தன..நாளடைவில் ஓநாய் குசு விடுவது கூட செய்தியாயிற்று..
காட்டில் ஒதுக்கப்பட்ட பன்னிகளும் சொறி நாய்களும்தான் பெருமளவில் வசித்து வந்தன..அந்த கழிசடைகளுக்கு பிரபல ஸ்டார் ஓநாயின் பொறுக்கித்தனமான நடிப்பு பிடித்திருந்ததால் அந்த மிருகங்களும் ஓநாய்க்கு ரசிக விலங்குகளாக இருந்தன..
அந்த ஓநாய் போல முடி வளர்ப்பது...அந்த ஓநாய் போன்ற பொம்மை செய்து அதற்க்கு பால் ஊற்றுவது, சாராயம் ஊற்றுவது போன்ற பொருக்கித்தனங்களை மகிழ்ச்சியோடு செய்துகொண்டிருந்தன..
தினமும் காட்டு பத்திரிக்கைகளை படிக்கும் பழக்கமுள்ள அந்த காட்டு ராஜாவான வயதான சிங்கம், ஓநாயின் அடிவருடிகளான ஆபாச பத்திரிக்கைகளின் செய்திகளை முட்டாள் தனமாக அப்படியே நம்பி அந்த பிரபல ஸ்டார் ஓநாய் குரல் கொடுத்தாலே போதும், தான் எல்லா காட்டு தேர்தலிலும் வென்று விடலாம் என்று முட்டாள்தனமாக எண்ணி அந்த பிரபல ஸ்டார் ஓநாய் அவமதித்தாலும் அந்த மிருகத்தையே தேடி தேடி சென்று நட்பாக இருப்பதாக காட்டிக்கொண்டது .
இந்த ஓநாயின் பிள்ளையாக பிறந்த ஒரே காரணத்திற்காக அந்த ஓநாயின் பெண் குழந்தைக்கும் "கலைமாமிருகம்" பட்டம் கொடுத்து மகிழ்ந்தது கிழட்டு சிங்கம்.
ஓநாய் நடித்திக்கொண்டிருந்த ஒரு பொம்மை மிருகம் என்ற ஒரு கலை நிகழ்ச்சி பொருளாதார பிரச்சினையால் கைவிடப்பட்டபோது ஓநாய் பெரும் அவமானத்திர்க்குள்ளானது
இந்த சமயத்தில் காட்டு ராஜாவின் குடும்பத்தினர்தான் அந்த ஓநாயின் "பொம்மை மிருகம்" கலை நிகழ்ச்சியை "மெஷின்" என்ற பெயரில் பெரும் பொருட்செலவில் தயாரித்து ஓநாயின் மானத்தை காப்பாற்றினர்.
குப்பை கலை நிகழ்ச்சியான "மெஷின்" காட்டு ராஜா குடும்பத்தினரின் பொய்யான விளம்பர யுக்தியினால் காட்டு விலங்குகள் அனைத்தையும் பார்க்கதூண்டி அளவுக்கதிகமாக கொள்ளையடித்து வருமானம் பார்த்ததோடு, வரும் தேர்தலிலும் ஓநாயை தம் கட்சி வெற்றிபெற உபயோகப்படுத்தலாம் என்று திட்டமிட்டனர்.
இந்த ராஜாவின் முட்டாள்தனமான நடவடிக்கையால் மற்ற காட்டு விலங்குகள் எல்லாம் கடும் கோபமாக இருந்தன. அந்த பிரபல ஸ்டார் ஓநாய் "வேறொரு காட்டிலிருந்து பிழைப்புத்தேடி வந்த ஓநாய்..இந்த ஓநாய் குரல் கொடுத்தால் இந்த காட்டு விலங்குகள் எல்லாம் வாக்களிக்க நாங்கள் என்ன தமிழ்நாட்டு மக்களைப் போல முட்டாள்களா..இல்லை மூளையற்ற ஜடங்களா ?என்ன பைத்தியக்காரத்தனம் என்று எண்ணி இருந்தன.. வரும் தேர்தலில் இந்த ராஜாவை தோற்கடித்துவிட திட்டமிட்டன. ஆனால் ராஜாவுக்கு மாற்றாக இன்னொரு சிங்கம் இல்லையே என்று குழம்பி இருந்தன.
ஆனால் அந்த சிங்கத்தை எதிர்துக்கொண்டிருந்த ஒரு பெண் புலி ஒன்று இருந்தது..அது இதற்க்கு முந்தைய காலங்களில் அந்த காட்டை ஆண்டிருந்தலும் அது ஒரு ஆணவம் பிடித்த புலி..காட்டுப்பக்கம் வந்து விலங்குகளின் பிரச்ஹினைகளுக்கு குரல் கொடுக்காமல் "கொடகாட்டு" பங்களாவில் தினமும் தூங்கிக்கொண்டிருக்கும். சென்ற தேர்தலில் தோற்றதால் வெளியே வராமல் இருந்தது..
எனவே மக்கள் அதை மறந்திருந்தனர்..
ஆனால் காடுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், அந்த பெண் புலி சிங்கத்தை எதிர்த்து களம் இறங்கியது..
தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக நடந்தது..பெண் புலி குடிகார மிருகங்களுடனும் போலி பொதுவுடைமை பேசும் அடிமை நரிகளுடனும் கூட்டணி கண்டது.
சிங்கமோ, வழக்கம் போல ஜாதி வெறி மிருகங்களுடன் கூட்டணி கண்டு தேர்தலை சந்தித்தது..
தேர்தல் சமயத்தில் வாக்களித்த ஓநாய் - பெண் புலிக்கு ஆதரவாக வாக்களித்தது கண்டு, கிழட்டு சிங்கம் அதிருப்தி அடைந்தாலும், ஓநாயின் நட்பை விட விரும்பவில்லை.
அன்று மாலையே ஒநாயுடன் "பொம்மர் சாம்பார்" என்ற கலை நிகழ்ச்சிக்கு காட்டு ராஜா சிங்கம் தோளில் கைபோட்டு சென்று பார்த்து மகிழ்ந்தது.
தேர்தல் முடிவுகளுக்கு முன்னர் திடீரென்று "பிரபல ஸ்டார் ஓநாய்" நோய் வாய்ப்பட்டு படுகையில் விழுந்தது.
சிகிச்சைக்காக வேறு காட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த சமயத்தில் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, கிழட்டு சிங்கம் படுதோல்வி அடைந்திருந்தது.
கிழட்டு சிங்கத்துக்கு மாற்றாக வேறு சிங்கம் இல்லாததால் காட்டு விலங்குகளும் வேறு வழியின்றி பெண் புலிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்திருந்தன.
ஆட்சி மாறியதும் காட்சிகளும் மாறியது...சிங்க ராஜாவை ஆஹா ஓஹோ என்று ஜால்ரா அடித்துக்கொண்டிருத கூத்தாடி ஓநாய்களும், நரிகளும், பெண் புலியை "மரியாதை" நிமித்தமாக சந்தித்தன..
ஆட்சி மாறியதும் காட்சிகளும் மாறியது...சிங்க ராஜாவை ஆஹா ஓஹோ என்று ஜால்ரா அடித்துக்கொண்டிருத கூத்தாடி ஓநாய்களும், நரிகளும், பெண் புலியை "மரியாதை" நிமித்தமாக சந்தித்தன..
சில நாட்களில் சிகிச்சைக்கு சென்ற ஓநாய் ஓரளவு குணமடைந்து இதையெல்லாம் அறிந்தது...தானும் பெண் சிங்கத்திடம் பேர் வாங்கவேண்டும்..தனது இருப்பை காட்டிக்கொள்ளவேண்டும் என்று நினைத்து கிழட்டு சிங்கத்திற்கு போனில் பேசியது ..
"முன்னாள் ராஜாவே..நீங்கள் பல தோல்வி கண்டவர்கள்..எனவே தோல்வி கண்டு வருந்த வேண்டாம்.. உங்களுக்கு வயதாகி விட்டது..உங்கள் உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்.." iஎன்று கிழ சிங்கத்தை நக்கலடித்தாலும், முட்டாள் கிழட்டு சிங்கம் இதை கூட பெருமையாக நினைத்தது உடனேயே காடெல்லாம் பரப்பி - "எனக்கு பிரபல ஸ்டார் ஓநாய் போன் பேசிடுச்சு போன் பேசிடுச்சு" என்று துள்ளி குதித்தது..
பிரபல ஸ்டார் ஓநாய் அடுத்ததாக பெண் புலிக்கு போன் செய்தது.
"பெண் புலி ..நீங்கள்தான் காட்டு விலங்குகளை காப்பாற்றி விட்டீர்கள்..உங்களுக்கு நன்றி . உங்களை சந்திக்க விரும்புகிறேன் " என்று அவரிடம் தன விசுவாசத்தை காட்டி நடித்தது..
பெண் புலி மனசுக்குள் சொல்லிக்கொண்டது.."முட்டாளே..நான் பாட்டுக்கு "கொடகாட்டு" பங்களாவில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன்..காட்டு விலங்குகள் வேறு வழி இல்லாமல் என்னை தேர்ந்து எடுத்திருக்கிரார்கள்....உன்னை எனக்கு தெரியாதா..நீதானே போன முறை நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த காட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று சொன்னவன்"
பிரபல ஸ்டார் ஓநாயின் வஞ்சகம் அறிந்த கிழட்டு சிங்கம் தனது ஜால்ராக்களிடம் " இந்த ஓநாய்க்காக நான் எவ்வளவு செய்தேன்..எவ்வளவு இறங்கி போனேன்" என்று புலம்பி வருகிறதாம்..
நீதி :
கூடா நட்பு கேடில் முடியும்..
8 comments :
தமிழ்நாட்டு நிகழ்வை அருமையாக பதிந்துள்ளீர்கள்.
பகிர்வுக்கு நன்றி.
http://anubhudhi.blogspot.com/
நன்றி திரு Sankar Gurusamy
கதை அருமை, மிகவும் ரசித்துபடித்தேன். கொஞ்சம் சுருக்கமாக இருந்திருந்திருந்தால் இன்னும் நிறையபேர் படிப்பார்கள்!
migavum arumayaga erunthathu. Endraya kalalkatathil nadapavayai migavam azhgaga prathipaleethathu.
செய்திதாள்களில், இணையதளங்களில், தொலைகாட்சிகளில் எங்கு திரும்பினாலும் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை அவர் நலம் அடைய பிராத்தனை, அவர் நலமாக இருக்கிறார் யாரும் கவலைபட வேண்டாம் இப்படி போகிறது செய்திகள். யார் இந்த ரஜினிகாந்த்? இவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உங்களுக்கு என்ன? ரஜினியின் மனைவி, குடும்பத்தார் படவேண்டிய கவலையை ஏன்? மொத்த தமிழகமும் பட வேண்டும். அவர் ஒரு சிறந்த நடிக்கிறார், அவர் தன் நடிப்பிற்க்காக கோடிகணக்கில் பணம் வாங்குகிறார். நீங்கள் பணம் கொடுத்து அவர் படத்தை பார்கிறீர்கள். இதுதானே அவருக்கும் உங்களுக்கு உள்ள உறவு. இதை தவிர வேறேதும் இருக்கிறதா? எனக்கு புரியவில்லை உங்களுக்கு புரிந்தால் எனக்கு விளக்கலாம்.
அப்படி என்ன? இவர் பெரும் சமூக போராளியா? ஒரு சமூகத்தின் விடுதலைக்காக பாடுபட்டவரா? நெல்சன் மாண்டலா போல் (கறுப்பின மக்களின் விடுதலைக்காக பாடுபட்டவர்) தன் வாழ்நாளின் பெரும் பகுதியை சிறையில் கழித்தவரா? செகுவார, பெடல் காஸ்ட்ரா போல் தங்கள் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவரா? பகத் சிங்கா அல்லது நேதாஜியா!! யார் இவர்? ஏன் இந்த ஆர்ப்பாட்டம்!! அவரும் ஒரு சாதாரண இந்திய குடிமகன். ஏன்? இவர் உடல் நலம் சரியில்லை என்பதை மொத்த இந்தியாவுக்கும் காய்ச்சல் வந்ததுபோல் கூப்பாடு போடுகிறீர்கள்.
ஈழத்தில் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது, குஜராத்தில் மோடியால் ஒரு இன அழிப்பு நடந்த போது, தமிழக மீனவர்கள் கொன்று குவிக்கப்படும் போது இல்லாத ஒரு ஆர்ப்பாட்டத்தை, பரபரப்பை, சோகத்தை, ஏன் உண்டாக்குகிறீர்கள். இவரை பற்றி எழுதுகிற, கவலைப்படுகிற, இவருக்காக பிராத்தனை செய்கிற ரசிகர்களையும், அப்பாவி பொதுமக்களையும், வியாபாரம் செய்யும் ஊடகங்களையும், மற்ற அத்தனை நல்ல உள்ளங்களை பார்த்து ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன். உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா?
உங்களின் குடும்பங்களில், உறவினர்களில், நண்பர்களில் எத்தனை, எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். உங்கள் அண்டை வீட்டார், உங்கள் தெருவாசி, உங்கள் ஊரை சேர்ந்தவர் எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள்.
உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்! இவர்களை போயி பார்த்தவர்கள் எத்தனை பேர்? இவர்களுக்காக பிராத்தனை செய்தவர்கள் எத்தனை பேர்? நலம் விசாரித்தவர்கள், உதவி செய்தவர்கள் எத்தனை பேர்? முதலில் அதை செய்யுங்கள். முதியவர்கள், அனாதைகள் இப்படி எவ்வளவு பேர் இந்த சமூகத்தில் இருகிறார்கள்.
அவர்கள் நலம் அடையவேண்டும், அவர்கள் நலம் பெற நம்மால் முடிந்த உதவிகளை செய்யவேண்டும், அவர்கள் குறித்த அவலங்களை, மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுங்கள்.
எழுதுங்கள் அதைவிட்டு விட்டு ரனினிக்கு உடல்நிலை சரியில்லை, அவர் குணமாகி வந்துவிடுவார் யாரும் கவலை படத்தேவையில்லை, அவரை நான் பார்த்தேன் பேசினேன், இப்படி அறிக்கைகள் பறக்கின்றது ஒரு புறம், மறுபுறம் கோவில் தோறும் சிறப்பு பூஜைகள் இப்படி போகிறது.
ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவரை அப்போலோ மருத்துவ மனையிலோ, அமெரிக்காவிலோ கொண்டு போயி பார்ப்பார்கள். அவரிடம் வருமானத்த்திற்கு அதிகமான அளவில் பணமும், சொத்துக்களும் குவிந்து கிடக்கின்றன. உங்கள் தெருவில் உள்ள குப்பனுக்கும், சுப்பனுக்கும் உடல் நிலை சரியில்லை என்றால் அவர்களை பார்க்க முறையான வசதியோடு கூடிய ஒரு அரசு மருத்துவமனை கூட ஒழுங்கா இல்லை.
இதை பற்றி எழுதுங்கள் கவலை படுங்கள். எங்கு பார்த்தாலும் ரஜினி, ரஜினி, என்று ஒரு வேற்று மாயையை தோற்று விக்காதீர்கள். உங்கள் மனோநிலை என்று மாறும். நீங்களாக உங்களை மாற்றிக் கொள்ளாதவரை மாறுதல்கள் ஒன்றும் தானாக வராது. இந்த ஊடகங்களுக்கு எழுதவும், பேசவும் மக்கள் பிரச்சனைகளே இல்லாத ஒரு நாட்டில் வாழ்வது போல் நடந்து கொள்வது மிகவும் வேதனையான விஷயம்.
from: சிந்திக்கவும் by PUTHIYATHENRAL
i agree
நன்றி Discovery Book Palace
நன்றி nirvana
நன்றி niroo
காம தாத்தாவை பற்றி ஒரு கட்டுரை
http://www.vinavu.com/2011/06/24/charu/
காம தாத்தாவை பற்றி ஒரு கட்டுரை
http://www.vinavu.com/2011/06/24/charu/
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?